Yarl Forum
காரட் சம்பல்/சலட் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: காரட் சம்பல்/சலட் (/showthread.php?tid=4592)

Pages: 1 2


காரட் சம்பல்/சலட் - தூயா - 04-02-2005

வணக்கம்,

மீண்டும் ஒரு "யாழ் சமையல் கள நிகழ்ச்சியில்" உங்களை சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி.

அதிகம் பேசாமல், அதிகம் சாப்பிடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை கவனிப்போம்.

இன்றைய சமையல் "காரட் சம்பல்/சலட்"

தேவையானவை:

கரட் - 1
தக்காளி - 1 [சின்னது,தேசிக்கய் அளவு]
மிளகாய் - 1
வெங்காயம் 1/3
உப்பு
மிளகு தூள்
பால் - 1 தே.க

1. காரட்டின் தோலை சீவி, துறுவவும்.
2. தக்காளிநை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3. வெங்காயம், மிளகாயையும் சிறிதாக அரியவும்.
4. அனைத்தையும் ஒன்றாக போட்டு, உப்பு, மிளகு தூள் சேர்த்து ஒரு அகப்பையால் நன்றாக ஒன்றுடன் ஒன்று சேருமாறு பிரட்டவும்.

இதோ உங்கள் காரட் சம்பல் ரெடி !!!!!

போன நிகழ்ச்சியை உண்மையில் பயன்படுத்தியமையால் எங்கள் அபிமான நேயர் கவிதனுக்கு இந்த சம்பலை அனுப்புகிறோம்.

விமர்சனங்களை அனுப்ப வேன்டிய முகவரி :Click HERE!!

இன்னுமோர் நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கும் வரை "பபா" தூயா.

நன்றி.
வணக்கம்.


- MUGATHTHAR - 04-02-2005

பிள்ளை எல்லாம் சரியடி..ஆன என்ரை வீட்டிலை பொண்ணம்மாக்கா எல்லாத்தையும் போட்டு கையாலைதான் பினைஞ்சு தருவாள் சூப்பரா இருக்கும்...உந்த கரண்டி விளையாட்டு சரிவராது ஹோட்டலுக்குத்தான் சரிபிள்ளை..


- தூயா - 04-02-2005

கையால் பிரட்டவும் என்றால், என்னுடைய நிகழ்ச்சி என்ன ஆவது!!! சில விடயங்கள் நீங்களாகவே புரிந்து கொள்ளா வேண்டும்.சரியா??!! :mrgreen:


- MUGATHTHAR - 04-02-2005

சரி....சரி இப்ப விளங்கிட்டுது பிள்ளை நீ வந்து அரைவாசி தான் சொல்லித்தருவாய் மிச்ச சொச்சத்தை நாங்கதான் யோசிச்சு செய்யவேண்டும் அப்பிடித்தானே...........நல்ல விளக்கம் கிழிஞ்சுது கிஸ்ணகிரி


- தூயா - 04-02-2005

கிழிஞ்யது கிஸ்ணகிரி தானே, யாழ் இல்லை தானே !!! கவலைபட வேண்டாம் முகம்!!!


- MUGATHTHAR - 04-02-2005

இந்தா..என்னேடை நல்லா கிட்ட வந்திட்டாய் போல கிடக்கு... அப்பிடியே பொண்ணம்மாக்கா கூப்பிடுமாப் போலவே கிடக்கு....


- kuruvikal - 04-02-2005

தூயாத் தங்கையே.... கொஞ்சம் தயிர் (நச்சுரள் யோக்கட் இல்லாது போனால் மைநேஸ்) கலந்து அடிச்சுப் பாருங்க சூப்பரா இருக்கும்..! நன்றி உங்கள் கரட் சம்பலுக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 04-02-2005

அலோ என்ன என்ன??!!! "இந்தா"???? எப்படி சுகம்? அரட்டை பகுதிக்கு வர முடியுமா?? :twisted:

குருவி - நீங்கள் சொல்வது சரி. பால் அல்லது தயிர். நன்றி. குருவிக்கு ஒரு சொக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 05-24-2005

இதில நாங்கள் தயிருக்கு பதில் திக் கிரீம் போட்டால் எப்படி இருக்கும் குருவி?


- kuruvikal - 05-24-2005

தூயா Wrote:இதில நாங்கள் தயிருக்கு பதில் திக் கிரீம் போட்டால் எப்படி இருக்கும் குருவி?

அதுதான் இங்க கிடைக்கிறதே அதிகம்...! அதுவும் நல்லதுதான் தூயா பாப்பா..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- poonai_kuddy - 05-24-2005

நன்றி தூயாக்கா நான் செய்து பாத்தனான் நல்லாருந்தது குருவியண்ணா சொன்னமாதிரி தயிர் போட்டனான்


- Malalai - 05-24-2005

Quote:போன நிகழ்ச்சியை உண்மையில் பயன்படுத்தியமையால் எங்கள் அபிமான நேயர் கவிதனுக்கு இந்த சம்பலை அனுப்புகிறோம்.
அப்ப எனக்கு...? Cry Cry Cry


- vasisutha - 05-24-2005

நன்றி தூய்ஸ், :mrgreen:
நாங்கள் குருவிகள் சொல்வது போல தயிர் கலந்து தான் செய்வது.
குருவி கனக்க மைநேஸ் சாப்பிடாதீங்கள். குண்டாகி பறக்க முடியாமல்
போய்விடும், 8)


- KULAKADDAN - 05-24-2005

vasisutha Wrote:நன்றி தூய்ஸ், :mrgreen:
நாங்கள் குருவிகள் சொல்வது போல தயிர் கலந்து தான் செய்வதுகனக்க மைநேஸ் சாப்பிடாதீங்கள். <b>குண்டாகி</b> )

சொந்த அனுபவமோ????? :mrgreen:


- vasisutha - 05-24-2005

சொந்த அனுபவம் இல்லை கண்ட அனுபவம் :wink: .


- KULAKADDAN - 05-25-2005

vasisutha Wrote:சொந்த அனுபவம் இல்லை கண்ட அனுபவம் :wink: .
ஆள பாக்க சொந்த அனுபவம் போல தான் கிடந்துது. :wink:


- kavithan - 05-25-2005

Quote:போன நிகழ்ச்சியை உண்மையில் பயன்படுத்தியமையால் எங்கள் அபிமான நேயர் கவிதனுக்கு இந்த சம்பலை அனுப்புகிறோம்
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:


என்ன தூயா தங்கை.. போன நிகழ்சி எப்ப நடந்தது... :?: சரி எதோ வந்தவரைக்கும் இலாபம்... இன்னும் கரட் சம்பல் வரேல்லை.. Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 05-25-2005

KULAKADDAN Wrote:
vasisutha Wrote:சொந்த அனுபவம் இல்லை கண்ட அனுபவம் :wink: .
ஆள பாக்க சொந்த அனுபவம் போல தான் கிடந்துது. :wink:

என்ன குளகஸ் அண்ணா சொந்த அனுபவம் மட்டுந்தான் சொல்லலாம் எண்டா எல்லாரும் கனக்க கதைக்கேலாதே :wink: அதுதான் வசி அண்ணா பார்த்தது எல்லாம் எழுதுறார் இப்படி பப்ளிககாக காலை வாராதீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 05-28-2005

ம்ம் யாராவது வல்லாரைச்சம்பல் செய்யிற முறையை போடுங்கோவனப்பா

:wink: :wink: :wink: :wink: :wink:


- MUGATHTHAR - 05-29-2005

sinnappu Wrote:ம்ம் யாராவது வல்லாரைச்சம்பல் செய்யிற முறையை போடுங்கோவனப்பா
:wink: :wink: :wink: :wink: :wink:

என்ன வல்லாரை நல்ல மலிவிலை கிடைச்சிருக்குது போல இதுக்கென்ன முறை வேண்டிக்கிடக்கு ஆடு மாடு சப்பிற மாதிரி தின்னவேண்டியதுதானே