Yarl Forum
தமிழீழம் தமிழகம் உட்பட உலகமெங்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழீழம் தமிழகம் உட்பட உலகமெங்கும் (/showthread.php?tid=4593)



தமிழீழம் தமிழகம் உட்பட உலகமெங்கும் - eelapirean - 04-02-2005

தமிழீழம் தமிழகம் உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் தாயக உறவுகளே!

ஈழநாதம் பத்திரிகையின் மட்டக்களப்பு பதிப்பின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.

அதிகாலை வேளை தாயகத்தில் வெளியாகும் பத்திரிகையினை அதன் மூலமாக தமிழீழத் தாயகத்தின் நிலைவரத்தினைத் தெரிந்து கொள்வதற்கு ஈழநாதத்தின் இந்த இணையப்பதிப்பு பெரிதும் உதவும் என நம்புகின்றோம்.

தேசியம்ää சுயநிர்ணய உரிமைää மரபு வழித்தாயகம் என்பவற்றை பற்றுறுதியாகக் கொண்டுää மாவீரர்களின் தியாகங்களின் வழி நடக்கும் எமது போராட்டத்தின் தலைமையினை மனங்கொண்டு நாளும் தமிழீழத் தாயகத்தில் இருந்து வெளியாகும் ஈழநாத்தின் சகோதரப் பதிப்பான மட்டக்களப்பு பதிப்பை வெளிக் கொண்டு வருவதில் எதிர்நோக்கும் நெருக்கடிகள் அதிகம். சிறிலங்கா இராணுவத்தின் மறைமுக யுத்தம் ஒன்றை எதிர்கொண்டபடி நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்லும் மக்களோடு ஒன்றித்திருக்கும் நாளிதழாக ஈழநாதம் வெளிவருகின்றது.

இதனை தொடர்ந்து வெளியிட உதவும் தமிழீழத் தாயகத்தின் அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது நன்றிகள். முதலாம் ஆண்டில் மட்டக்களப்பு பதிப்பு கால் வைக்கும் தருணத்தில் இணையத்திலும் பதி;ப்பிக்கப்படத் தொடங்குவது மகிழ்ச்சியளிக்கின்றது.

புலம்பெயர்ந்து வாழும் உறவுகள்ää படைப்பாளர்கள்ää ஆய்வாளர்கள் விமர்சகர்கள் போன்றோரிடம் இருந்து ஈழநாதத்துக்கான ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் கருத்துக்களையும் விமர்சனங்களையும்; எதிர்பார்த்து நிற்கின்றோம். தேச விடுதலை உணர்வில் நாம் கலந்து எமது அறிவுää ஆற்றல்ää மனம் என்பவற்றை வளர்க்கும் படியான எழுத்துக்கள் நமது பத்திரிகைக்கு வலுச்சேர்க்கும்.

நாளும் இணையம் வழியாகவும் உங்களோடு இணைவோம்.

நன்றி








இது ஒரு புதுச்செய்தி பாருங்கோ....! - eelapirean - 05-05-2005

இது ஒரு புதுச்செய்தி பாருங்கோ....!

விடுதலைப்புலிகள் புதிதாக ஒரு படையணியை ஆரம்பித்துள்ளார்களாம். அதுவும் நீர்மூழ்கிப் படையணியாம். கொழும்பு பேரினவாதப்பத்திரிகையின் புதிய கண்டுபிடிப்பு இதுவாகும். கொஞ்சநாட்களின் முன்னர் அரசாங்கமும் இந்த வகையிலான சிங்கள இனவாத ஊடகங்களும் தேசிய மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் கூட விடுதலைப்புலிகளின் வான்படையணி குறித்து பெருமளவில் மனதிற்கு வந்தபடி செய்திகளை உருவாக்கி

தொடர் பிரசுரப்புலம்பல் ஒன்றினை நடத்தி அதனால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாததால் ஓய்ந்து முடங்கிப்போன நிலையில்இ இப்போது இந்தக் கண்டுபிடிப்பை அந்தச் சிங்கள பத்திரிகை செய்தியாகக் கக்கியுள்ளது.

இத்தகைய செய்திகள் அந்த கதிர்காமருக்கு பெரும் உற்சாகத்தைக்கொடுத்திருக்கும்.. ஆஹா அடுத்த உலகப் பிரசாரச் சுற்றுலாவுக்கான கருப்பொருள் கிடைத்துவிட்டது எனத் துள்ளியிருப்பார். கச்சதீவுமுதல் ஹவாய்வரை பறந்து பறந்து புலிகளின் நீர்மூழ்கிப் படையணியால் 'சுனாமி" ஏற்பட்டது என்று தனது கண்டுபிடிப்பை வெளியிட்டு உலகை கிறுகிறுக்க வைக்கும் திட்டத்திலும் இறங்கியிருப்பார்.

முன்னர் வான்படையின் இலகுரக இரு சின்னஞ்சிறு விமானங்களால் புலிகள் கொழும்பின் அரைப்பகுதியை அழிந்துவிடுவார்கள் என்று அலறிக்கொண்டிருந்த பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் ரத்தனசிறிவிக்கிரமநாயக்க... ஜயையோ புலிகளின் சின்னஞ் சிறு நீர்மூழ்கிக் கப்பல்களால் கொழும்புத்துறைமுகமே நிர்மூலமாகப்போகிறது என்று அலறவும் கூடும்.

எதுவோ கொஞ்சக் காலத்திலற்கு உலகையும்ää தென்பகுதிச் சிங்கள மக்களையும் அச்சுறுத்தி புலிகள் பேரால் கிலியேற்படுத்த ஒரு புதிய செய்தியை பேரினவாதப் பத்திரிகையொன்று உருவாக்கிவிட்டது.

இனி இக்பால் அத்தாஸ் போன்றவர்கள் பழைய கதைகள் சிலவற்றைக் தேடி எடுத்து (தாய்லாந்து-புகெற் பகுதியில் முன்னர் கைப்பற்றப்பட்ட சிறியரக நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள் குறித்த செய்தி) புதுவடிவம் கொடுத்து கதை எழுதி காசு பண்ணிக்கொள்வார்கள்.

கொஞ்ச நாளில இதுவும் புஸ்வாணமாகிப் போய்விடும்! கற்பனை பண்ணி செய்திக்கதை எழுத சிங்களப் பத்திரிகைகளுக்கு ஆட்களோ இல்லை! விடயங்களுமா இல்லை!

விடுதலைப்புலிகளின் பறக்கும்தட்டு படையணியின் நடமாட்டம் என்ற ஒரு செய்தியை அவர்கள் உருவாக்கினாலும் ஆச்சரியமில்லை...

பொய் எழுத சிலரும்இ பரப்ப அரசியல் வாதிகளும் இருக்கும்போது கேட்பதற்கும் படிப்பதற்கும் நம்புவதற்கும் சில மடையர்களும் இல்லாமாலா போவார்கள்?

சூரியன்