Yarl Forum
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள (/showthread.php?tid=4562)



விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள - eelapirean - 04-04-2005

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவில் ஒரு பஸ் சாரதி தனது வாகனத்தில் ஏறுவதற்கு முன் ஒருவரிடம் சென்று வாயால் ஊதினார். அவர் தலையை அசைத்து "நீங்கள் பஸ்ஸை செலுத்தலாம்." என்று அனுமதி கொடுத்தார்.

பயணிகள் பஸ்ஸை செலுத்தும் சாரதி மதுபோதையில் இருக்கிறாரா என்று அங்கு பரிசோதிக்கிறார்கள். மது அருந்தியிருந்தால்இ சாரதிய லைசென்ஸை பறித்துக் கொண்டு அவர் பஸ்ஸை செலுத்தத் தடை விதித்து விடுகிறார்கள்.

முல்லைத்தீவிற்குச் சென்று திரும்பிய ஒருவர் தான் நேரில் கண்ட இந்தக் காட்சியை விவரித்து வெகுவாகப் பாராட்டினார்.

இந்த நடைமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுமாயின்இ எத்தனையோ வாகன விபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்கள் காதில் இது ஏறுமா
சுட்டது தினகுரல்


- Danklas - 04-04-2005

²ÚžüìÌ Óý ¾¡§É °¾¢ÉÅ÷... ÀЍ… ¿¢ñ¼×¼ý °¾Å¢øÄ§Â?? ¡Õì̦¾Ã¢Ôõ «ó¾ º¡Ã¾¢Â¢ý º£üÚì¸Ê¢ø þÕìÌõ âÔôÀ¢ø ±ýÉ þÕ즸ñÎ.. :roll: :wink:


- sinnappu - 04-04-2005

ம் ம் தெரியுது நீ என்னைத் தானே சாடை மாடையா சொல்லுறாய் ம் ம் காணும் குடும்ப மானம் போகுது
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- MUGATHTHAR - 04-07-2005

இனி சின்னப்பு உப்பிடி பஸ்லை ஏறுற ஆட்களையும் ரெஸ்பண்னினா நம்மன்ரை பாடு கோவிந்தா....தான்


- Sriramanan - 04-08-2005

Quote:²ÚžüìÌ Óý ¾¡§É °¾¢ÉÅ÷... ÀЍ… ¿¢ñ¼×¼ý °¾Å¢øÄ§Â?? ¡Õì̦¾Ã¢Ôõ «ó¾ º¡Ã¾¢Â¢ý º£üÚì¸Ê¢ø þÕìÌõ âÔôÀ¢ø ±ýÉ þÕ즸ñÎ..
இடைவழியிலும் சில ஊர்தி ஓட்டுனர்களிடம் அவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்பதற்கான சோதனை நடைபெறுகிறது. வன்னியில்...
இதேவேளை வேகக்கட்டுப்பாட்டை மீறுவோர் கண்காணிக்கப்பட்டு குற்றப்பணம் அறவிடப்படுகிறது.


- மகேசன் - 04-09-2005

Quote:இதேவேளை வேகக்கட்டுப்பாட்டை மீறுவோர் கண்காணிக்கப்பட்டு குற்றப்பணம் அறவிடப்படுகிறது

உண்மைதான் இங்கு ஐரோப்பாவில் உள்ளது போல் சிறியரக ராடர்களை பயன் படுத்தி வேகத்தை கணிப்பிட்டு குற்றப்பணம் உடன் அறவிடப்படுகின்றது. சென்ற வருடம் நான் கூட புளியங்குளத்தில் வேகத்தை மீறி குற்றப்பணம் கட்டியுள்ளேன்.