| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 463 online users. » 0 Member(s) | 459 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,650
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| கோடையில் சாப்பிட வேண்டியவை |
|
Posted by: hari - 04-07-2005, 09:43 AM - Forum: மருத்துவம்
- Replies (7)
|
 |
கோடையில் சாப்பிட வேண்டியவை
<b>தர்பூசணி</b>
இது தாகத்தைத் தணிக்கும். பசியினையும் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவுகிறது. உடலில் புத்துணர்ச்சியைக் கூட்டுவதோடு, மனதிற்கும் எழுச்சி தருகிற பழம் இந்த தர்ப்பூசணி.
<b>ஆரஞ்சு</b>
பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படும் ஆரஞ்சை ஆயுர்வேத சிகிச்சை முறை பெரிதும் கைக்கொள்கிறது. வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்துகிறது.
சளி பிடித்துள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கும் முன்பு ஒன்றிரண்டு ஆரஞ்சுப் பழங்களைத் சாப்பிட்டு விட்டுப் படுக்கலாம். காலையிலும் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரிதும் பயன் அடையலாம். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்ச்சலின்போது, நோய்களுக்கு அருமருந்து ஆரஞ்சு, உடலுக்குத் தெம்பு கூட்டும், செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்ப காலப் பெண்மணிகளுக்கு ஏற்படும் குமட்டலுக்கு சிறந்தது ஆரஞ்சு. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்கவேண்டும். செரிமானச் சக்தியைக் கூட்டி, செரிமான உறுப்புகளை வலுவூட்டி வயிற்றுப் பிரச்னையைத் தீர்க்கும்.
<b>சாத்துக்குடி</b>
குளிர்ச்சியான இனிப்பான சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதிலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது.
சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது. காய்ச்சலின் போது, வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.
<b>வெள்ளரிக்காய்</b>
வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்திற்கு உதவுவது. தன்வந்திரி நிகண்டு காரா கூறுகிறது இப்படி. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியையூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது.
வெள்ளரியில் "கலோரி"கள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது.
தொகுப்பு : மா. பிரபா
நன்றி - குமுதம்-ரHealth
|
|
|
| சச்சின் |
|
Posted by: Mathan - 04-07-2005, 03:41 AM - Forum: சினிமா
- Replies (95)
|
 |
சச்சின்: பாடல் விமர்சனம்
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/harini-vijay-500.jpg' border='0' alt='user posted image'>
விஜய், ஜெனீலியா நடிப்பில், கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், ஆந்திர இளம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள சச்சின் இளமை ததும்பும் பாடல்களுடன், விஜய் ரசிகர்களுக்கான எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக உள்ளது.
வழக்கம்போல "தல"யையும் விடவில்லை இளைய தளபதி. ¬முதல் பாட்டிலேயே அஜீத்தைக் குறிவைத்து வரிகள் வருகின்றன. சரி பாட்டுக்களைக் கேப்போமா?
""வா வா என் தலைவா'' ரஜினி டைப் பாட்டு. பா. விஜய் எழுதியிருக்கிறார். விஜய்யின் கொள்கை பரப்பு பாடல்களை இவர்தான் சமீப காலமாக எழுதி வருகிறார். விஜய் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாகவும் இருப்பதால், பா.விஜய்யின் பாட்டு தவறாமல் இடம் பெற்று விடுகிறது.
அந்த வகையில், விஜய் ரசிகர்களுக்கு குஷியூட்ட வைக்கும் பூஸ்டர் பாட்டு, ""வா வா என் தலைவா''. ரசிகர்களுக்கான பாட்டு போலத் தெரிந்தாலும், அஜீத்தை குறி வைத்து எழுதியிருப்பது போல, அஜீத்துக்கு மட்டுமல்ல நமக்கும் நிச்சயம் புரியும்.
""ஒரு தடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது
தினசரி நீ ஜெயித்து விடு திசைகளெல்லாம் உன்னோடு!
கடவுளாகவும் வேண்டாம், மிருகமாகவும் வேண்டாம்
ரசிகர் ஒவ்வொருவரோடும் ரசனையோடு பழகு!''
இந்த வரிகள் நிச்சயம் அஜீத்துக்குக் கடுப்பை ஏத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
சங்கர் மகாதேவனின் குரல், விஜய்க்குப் பொருத்தமாக இருக்கும். இசையிலும் கலக்கியிருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத்.
நிறைய அட்வைஸ் வரிகள் பாட்டை ஆக்கிரமித்திருப்பதால், விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் பாட்டைக் கேட்டு "¬முன்னேற" ¬முயற்சிக்க வேண்டும்.
அடுத்து, ""கண் மூடித் திறக்கும்போது'' நா. ¬முத்துக்குமாரின் பாட்டுக்குக் குரல் கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். சோலோ பாட்டு.
காதலில் விழுந்த விஜய் பாடுவது போல பாட்டு வருகிறது.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/harini-vijay-380.jpg' border='0' alt='user posted image'>
""கண் மூடித் திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் ¬முன்னே அவளே வந்தாளே!''
என்று ஆரம்பித்து,
""உன் பேரும் தெரியாதே என் பேரும் தெரியாதே,
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா?''
என்று தொடர்ந்து,
""உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா
வீதியுலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண்ணடிக்கும்
நதியோரம் நீ குளித்தால்
நீருக்கும் காய்ச்சல் வரும்
பூகம்பம் வந்தால் கூட பதறாத நெஞ்சம் எனது
பூ ஒன்று மோதியதாலே பட்டென்று சரிந்தது இன்று''
என்று கவிதை போலப் போகிறது பாட்டு. ¬முத்துக்குமாரின் வரிகளில் பெரிய அளவில் விசேஷம் இல்லாவிட்டாலும், பாட்டு ரசிக்க வைக்கிறது.
""குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே'' கபிலனின் பாட்டு. ஜாலியான வரிகளைப் போட்டு ரசிக்க வைத்திருக்கிறார்.
"லஜ்ஜாவதியே' புகழ் ஜெஸ்ஸி கிஃப்ட்டும், "மன்மதராசா' புகழ் மாலதியும் பாடியிருக்கிறார்கள். இரண்டு குரல்களுக்கும் ஒட்டவே இல்லை என்பது இங்கே ¬முக்கியமாகச் சொல்ல வேண்டும்.
ஒருபக்கம் ஜெஸ்ஸி கிஃப்ட் கரகரவென பாடுகிறார், சைட்ல, மாலதி அவர் பாட்டுக்குக் கத்துகிறார். மென்மையாக இந்தப் பாட்டைப் பாட ¬முடியாதுதான். இருந்தாலும் "மொள்ளமா" பாடியிருக்கலாம்ல!.
எம்புட்டு நாளைக்கு இப்படிக் கத்திக்கிட்டிருக்கப் போறாரோ?
பாடல் வரிகளும் சொல்லும்படி இல்லை. ஏற்கனவே எத்தனையோ பாடல்களில் வந்த வரிகளை பொறுக்கி, எடுத்து கொடுத்தது போல இருக்கிறது.
""குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே
நண்டு போல வந்தாயே
யாருமில்லா நேரம் பார்த்து
கை புடிச்சாயே!
அந்த இடத்தில் விட்டுப்புட்ட, இப்ப கத்துறியே
¬முந்தானை சேலைக்குள்ளே உன்னை மூட்டைக் கட்டி வைக்கப் போறேன்''
என்று வரும் வரிகள் ஏற்கனவே பல பாடல்களில் கேட்டதுதான். விஜய்யை ரசிக்கும் பொடிசுகளுக்கு இந்தப் பாட்டு புடிக்கும்.
""டே டே கட்டிக்கோடா'' இப்பத்தாய்யா நம்ம பாட்டு வருது! ¬மும்பை குலாபி லிண்டா, விஜய்யுடன் ¬முண்டா தட்டிப் பாடியுள்ள பாட்டு.
மொத வரியிலிருந்து கடைசி வரைக்கும் "ஏஏஏஏஏ" அப்பா என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வரிகளில் வாலிபம் தெரிக்கிறது.
""டே டே கட்டிக்கோடா!
பசை போல என்ன ஒட்டிக்கோடா
வாடி என் பாம்பே பீடா
உடையாத கோலி சோடா''
என்று புல்லரிக்க வைக்கிறார்கள். அதென்ன உடையாத கோலி சோடான்னு கேக்கப் படாது! என்ன சொல்ல வர்றான்னு புரியுதோன்னோ?
""நான்தான்டா கம்பங் கூழு
நீதானடா மோர் மிளகாய்
நான்தானடி நாதஸ்வரம்
நீதானடி மிருதங்கம்
நான் ஒன்ன வாசிக்க
நீ என்ன வாசிக்க ...''
என்று மாறி மாறி வாசித்து நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கிறார்கள்.
""என்ன வச்சுக்கோ, வச்சுக்கோ என்னப் பிச்சுக்கோடா'' என்று ரொம்பத்தான் மருகுகிறார் லிண்டா.
சும்மா சொல்லக் கூடாது, இந்தப் பாட்டு, இளசுகளின் ரத்தத்தை சுண்டி இழுத்து சூடாக்கும் ஓய்!
குடும்பத்தோட மட்டும் மறந்தும் கேட்காதேள், பார்க்காதேள்!
"சச்சின்' பீட் பாட்டும் இருக்கு. வரிகள் இல்லை, வெறும் மீஜிக்தான். எதுக்குன்னு படம் பார்த்தாத்தான் தெரியும்.
""வாடி வாடி கை படாத சிடி!'' கட்டக் கடேசியா, விஜய் குரலில் ஒரு கானா. கானாவால் வளர்ந்தவர் ஆச்சே, அதனால படு ஸ்பீடில், படா உற்சாகத்துடன் பாடியிருக்கிறார்.
மென்மையான பாடல்களுக்கு விஜய் குரல் ஐஸ்க்ரீம் போல இருக்கும். ""தொட்டபெட்டா ரோட்டு மேல மு¬ட்டை பரோட்டா'' என்று ¬முன்னாடி பாடின கானாவிலும் கூட அவரது குரலில் ஒரு மென்மை தெரியும்.
ஆனால் இந்த ""வாடி வாடி கைபடாத சிடி''யில் அந்த மென்மை மிஸ்ஸிங். மாறாக, ஹை பிட்ச்சில் தம் கட்டிப் பாடியிருக்கிறார். ஆனாலும் நல்லாவே இருக்கு.
இது, ""சாலையோர தாபா,'' ரோட்டோர டீக்கடைகளுக்காக எழுதப்பட்ட ஸ்பெஷல் பாட்டு. அப்படியே நம்ம அஜீத்தையும் லேசு பாசா சீண்டியிருக்காரு விஜய்.
கானாதான் என்றாலும் கலக்கலாக வரிகளைப் போட்டிருக்கிறார் இளங்கோ என்ற புதுமு¬க கவிஞர்.
""வா வா வாடி கை படாத சிடி,
தௌசன்ட் வால்ட் பல்பு போல கண்ணு கூசுதேடி
நான் அவுத்து விடும் பாட்டுல
விசில் சத்தம் நாட்டுல
18 வயசுல பேசிக்கிட்டா தப்பில்லே
தொட்டபெட்டா மலைல மட்டும் ஏறாதே! (ஏனுங்க்னா?)
ஏ சோ¬ எதுக்கு பிலி¬
நீ நீயாக வாழ்ந்து பாரு மா¬,
பந்தா எதுக்குடா கொஞ்சம் அடங்குடா(நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்!)
நேத்து வெந்த நாயர் கடை பன்னுதானே! (ரசிக்க வைக்கும் வரி)
என்று ஆரம்பித்து ஹை பிட்ச்சில் போயிருக்கிறார் விஜய்.
பாட்டோட ஆரம்பத்துல, ரஜினி ஸ்டைலில், "அபி தேக்கோ, சூப்பிஸ்தானு' (அப்படீன்னா?) என்று கூறி ரஜினியை தான் தொடர்ந்து காப்பி அடித்து வருவதை மறக்காமல் நினைவூட்டுகிறார் விஜய்.
ஒரு வழியாப் பாட்டு கேட்டு ¬முடிச்ச பிறகு யோசிச்சா, பாடல் வரிகளை விட இசைதான் மனதில் நிற்பதை உணர ¬முடியும். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்!
தட்ஸ் தமிழ்
|
|
|
| குடிகாரப் பெருமக்களே |
|
Posted by: spyder12uk - 04-07-2005, 01:32 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (7)
|
 |
குடிகாரப் பெருமக்களே... உங்களுக்கு அற்ககோலைக் குடிக்கும் போது ருசியும் குசியும் வரவது போல் உள்ளதா..அதைத் தடுத்து அற்ககோல் மீது உள்ள காதலை வெறுக்கப்பண்ண ஒரு ஊசி மருந்தை அமெரிக்க உயிரியல் மருத்துவ நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்...!
Naltrexone எனும் மருந்தை ஊசி மூலம் செலுத்துவதன் மூலமும் அற்ககோல் பாதிப்பு பற்றி தொடர் ஆலோசனைகள் வழங்குவதன் மூலமும் உங்களுக்கு உள்ள இந்த அற்ககோல் மீதான காதல் வெறியில் இருந்து மீட்சி கிடைக்க வழிகாட்ட முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்...!
http://news.bbc.co.uk/1/hi/health/4412449.stm
Injection 'hope' for alcoholics
Alcoholics could be helped to stop drinking by monthly injections of naltrexone, say US scientists.
Trials of 627 people showed jabs could reduce heavy drinking when combined with counselling, the Journal of the American Medical Association said.
Naltrexone is thought to reduce the pleasurable effects associated with drinking by blocking receptors in the brain linked to euphoria.
The jab - the first of its kind - has been welcomed by some experts.
|
|
|
| உன் ஓரு பார்வையில் |
|
Posted by: sunthar - 04-07-2005, 01:29 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
உன் ஒரு பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன்,
என் ஆயிரம் பார்வைகளில்
ஒன்றையாவது உன்னால் உணரமுடியவில்லையே ஏன்?
உன்னை முதல் முதலாக சந்தித்தது
எனக்கு நினைவிøலை,
ஆனல் அப்போதும்
என்னை பார்க்காதவளாய்தான் இருந்திருப்பாய்?
என்னை நினைத்து என்றைக்காவது அழுவாய்
உன்னை நினைத்து அழும் என்னைப் போல,,,
எத்தனை கடிதம் எழுதியும்
என் காதலை நீ ஏற்கவிøலை
என்றிருக்கலாம்,
ஒன்றையாவது நான் உன்னிடம் கொடுத்திருந்தால்,,,
ஏதும் அறியா குழந்தையை போலத்தான் நானும் நீயும்,
நம் காதல் மட்டும்
அழகிய பெண்ணின் ஆணவம் போல்,,,
உன்னை சந்திக்காத நாட்கள்
என் நினைவில் இருப்பதில்லை
உன்னை சந்திக்கும் நாட்களில்
எனக்கு நினைவே இருப்பதில்லை
|
|
|
| இது யார் குற்றம்...?! |
|
Posted by: kuruvikal - 04-07-2005, 12:40 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (58)
|
 |
<img src='http://img193.exs.cx/img193/1271/birdhouseflowers5xq.gif' border='0' alt='user posted image'>
<b>மோகித்து
மோட்சம் ஏகவன்றி
அன்புக்காய் ஏங்கி
மலரே உனைத் தேடி வந்தேன்..!
நினைவெனும் நோய் கொடுத்து
தேம்ப வைத்தாய் இன்று...!
தோப்பாகும் என் வாழ்வென்று
மனதோடு மடி வாங்கி
காலமெல்லாம் கவி பாடி
சீராட்டிய மலரின் மெளனம்
சம்மதமல்ல சாமர்த்தியம்
புரிந்து கொண்டேன்...!
குருவி நான் பார்த்திருக்க
வம்பாகி வந்த வண்டுக்காய்
ஏங்கி நீ துரத்திட்டாய்
எனைத் தூரவே....!
கனவு கலைத்து
நிஜம் காட்டினாய் நன்றி..!
ஆனால்...
உன் நினைவு மட்டும்
என்னோடு நிலைக்க
ஏங்குகிறேன் தனிமையில்....!
உன் முடிவு கண்டு.....
வைக்க எனக்குத் தாடியும் இல்ல
கையில் மதுவும் இல்ல
கொள்ள எனக்கு தேவதாஸ் வேடமும் இல்ல
தொங்க ஒரு கயிறும் இல்ல
உண்ண ஒரு நஞ்சுமில்ல
இவை செய்ய ஆறறிவும் எனக்கில்ல...!
குருவி நான் சுதந்திரச் சிட்டு
நினைவுகள் பாரமாக
சிறகுகள் விரிய மறுக்க
கூண்டோடு அடைபட்டு
பரிதவிக்கிறேன்..!
நினைவுச் சிறை உடைத்துப்
பறக்க முயல்கிறேன் முடியவில்லை...!
பார் மலரே...
எந்தன் பரிதாபம்
உன் நினைவுகள்
என் சிங்காரச் சிறகுகள்
சிறை செய்ய
மீண்டும் உன்னிடமே சிறையாகிறேன்...!
இது யார் குற்றம்...??!
என் செய்வேன்...
தவிப்பே வாழ்வாகித்
தவிக்கிறேன்
கருணை காட்டாயோ....!
தாராயோ...
நீ கொண்ட பேரன்பை
குருவி என் சொத்தாக்க...!</b>
|
|
|
| À¡ôÀúâý Á¨È×ìÌ §¾º¢Âò¾¨ÄÅ÷ þÃí¸ø.. |
|
Posted by: selvanNL - 04-06-2005, 08:21 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (1)
|
 |
<b>ஒடுக்கப்பட்ட இனங்களினது விடிவுக்காக அரும்பணியாற்றிய பாப்பரசர்: இரங்கல் செய்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் </b>
<b>பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் மறைவுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவர் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:
மானுடத்தின் விடிவிற்காக அயராது உழைத்த ஒரு மகத்தான ஆன்மீகத்தலைவரை உலகம் இழந்துவிட்டது.
உலகசமாதானத்திற்கும் தேசங்கள் மத்தியிலான சகவாழ்விற்கும் சகல மதத்தவர்களதும் ஒத்திசைவான நல்லுறவுக்கும் புனித பாப்பரசர் ஆற்றிய பணி அற்புதமானது அனைவராலும் போற்றப்படுவது.
உலகத்தின் உன்னதமான ஆன்மீகத்தலைவர் என்ற ரீதியில் வறுமைப்பட்ட மக்களதும் ஒடுக்கப்பட்ட இனங்களினதும் விடிவுக்காக அவர் அரும்பணியாற்றினார். அன்பு காருண்ணியம் சகோதரத்துவப் பண்பு போன்ற சீலங்களை அவர் பரப்புரை செய்தார்.
சுதந்திரம் விடுதலை சமத்துவம் போன்ற உயரிய மனித விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அனைத்து மனிதப் பிறவிகளும் பாப்பரசரின் உன்னதமான வாழ்க்கையையும் அவரது உயரிய சிந்தனைகளையும் என்றும் தமது நெஞ்சில் நிறுத்தி அவரை கௌரவிப்பார்கள்.
தமிழ் மக்களின் சார்பாக எமது ஆழ்ந்த துயரையும் கவலையையும் தெரிவிக்கிறேன் என்றார் அவர்</b>.
¿ýÈ¢ Ò¾¢Éõ.
|
|
|
| துரோகி போட்டி |
|
Posted by: eelapirean - 04-06-2005, 08:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>சபாஷ் சரியான போட்டி...!</b>
என்ன போட்டி...? யாருக்குள் போட்டி....? எதற்காகப்போட்டி...? என்று கேட்கின்றீர்களா?
தமிழின் விரோதிகளில் யார் அதிமோசமான துரோகிகள் என்பதை நிரூபிப்பதற்கான போட்டியைத்தான் குறிப்பிடுகின்றேன்.
ஏற்கனவே இந்தியப்படைக்கு முன்னரான காலத்துத் துரோகிகள்இ பின்னரான காலத்துத் துரோகிகள் என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
எதிரிகளுக்கும்இ ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எடுபிடிகளாகி சலுகைகள் பெற்று கைக்கட்டிச்சேவகஞ் செய்து அவமானங்களை பட்டயங்களாக்கி அநாமதேயங்களாக்கி அழிந்தவர்களுமுண்டுஇ அடிமைகளா சுளமிழந்து வாழ்வோர்களுமுண்டு... அவர்களுக்குள்ளும் யார் எஜமான விசுவாசிகளில் சிறந்தவர்கள் என நிரூபிப்பதற்கான போட்டிகளும் இருந்ததுண்டு...
முகமிழந்து முகவரியற்றுப் போனவர்களை நினைவூட்டுதல் அசிங்கம்இ இப்போது இந்தப்போட்டியில் கடுமையாக களத்தில் இறங்கியுள்ளவர்கள் வேறு யாருமல்ல... கதிர்காமரும் சங்கரியாரும் தான்...
அண்மைக்காலமாக இருவரும் அடிக்கும் அறிக்கை லூட்டிகளில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் முத்திரை பதிப்பது முக்கியமான விடயம். கடந்த தேர்தலில் கட்டிய கோவணத்துடன் மக்களால் நிராகரிக்கப்பட்டு தமிழ்தேசிய அரசியலில் இருந்து ஓட ஓட விரட்டப்பட்ட ஆனந்த சங்கரியாருக்கு புகலிடம் பேரினவாதிகளின் திண்ணையாகிவிட்டது.
சங்கரியார் மீது அனுதாபம் காட்டி அவரின் தமிழ் தேசியத்திற்கு எதிரான பணியைக் கௌரவித்து அவருக்கு தேசியப்பட்டியலில் உறுப்பினர் பதவி வழங்கவேண்டுமென கூறியது ஹெலஉறுமய குழுவேயாகும். அதனால் மெய்சிலிர்த்துப்போன சங்கரியார் தலைமழிக்காத ஆனந்த சங்கர தேரராகவே தன்னை நினைத்து செயற்படத் தொடங்கிவிட்டார் என்றே கூற வேண்டும்.
சிங்களப் பேரினவாதிகளினதும் அயலக உளவு அமைப்புக்களிலும் கைக் கூலிகளாகிவிட்ட சங்கரியார் இப்போது கதிர்காமருக்குப் போட்டியாக அவரையே தூக்கிச் சாப்பிடும் வண்ணம் விடுதலைப்புலி எதிர்ப்பாளராக மட்டுமல்ல தமிழ் தேசிய எதிர்ப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டார்.
வாழ்க..!
பொதுக்கட்டமைப்பு தேவையில்லை. விடுதலைப்புலிகளின் கட்டப்பாட்டிலள்ள பகுதிகளுக்கு அரசு எந்த உதவியையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை... என்று சங்கரதேரர்(!?) அறிவித்ததன் மூலம் ஐயா எங்கேயோ போய்விட்டார்.
இதற்கு மேல் என்ன சொல்வது எனத் தெரியாமல் கதிர்காமர் கதிகலங்கிப்போய் விட்டார் போலிருக்கிறது...
எல்லாம் அடுத்த தேர்தலில் தேசியப்பட்டியலில் இடம்பிடிக்கத்தான் பாருங்கோ... பதவிப்பித்து தலைகப்கேறிவிட்டால் தன்மானமாவது.. இனமானமாவது...
சுட்டது சூரியன்
|
|
|
| விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன் |
|
Posted by: victorp - 04-06-2005, 08:11 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
என் கணனிக்கும் தமிழுக்கும்
இடையினிலே தகராறு சிலநாட்கள் - அதனால்
கவித்தொகுப்புகள் காலதாமதமாகியது - இனி
தொடர்ந்து வரும் என்று நம்புங்கள்
-அன்புடன் விக்ரர்
விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன்
அம்மி மிதிக்கவில்லை
அருந்ததி பார்க்கவில்லை
விம்மி வெடித்துத் தினம்
விழிநீர் வடிக்கின்றேன்
அம்மா என்று ஒரு சேய் - என்னை
அழைப்பதைக் கேட்டிடத்துடிக்கின்றேன்
சுண்ணாகச் சந்தையிலே
சுரக்காயைக் கேட்பதுபோல்
பெண்ணாகப் பிறந்த எம்மை
பேரம் பேசுகின்ற
சின்னத் தனத்தை எண்ணி
சிந்துகின்றேன் விழிநீர்
ஏனென்று கேட்பவர்க்;கு
இதோ என் பதில்
தாலி ஏறும் வயதை
தாண்டி வருடம் பலவாச்சு
வாலிபரும் பலபேர்
வந்து பார்த்துப் போயாச்சு
சோழியன் குடுமிதான்
சும்மா ஆடிடுமா?
காணி நிலம் எவ்வளவு?
வீடுவாசல் எத்தனை?
குடும்ப நகை எவ்வளவு? - என்று
கேள்விமேல் கேள்வியாக
கேட்டுவிட்டு போயாச்சு
பதில் கூற என் பெற்றோர்
பரம்பரையில் என்ன ஐமீன்தாரா?
பட்டகடன் வட்டியுடன்
படியேறி முகடுவரை
எட்டி நிற்கும் கொடுமையினை
எப்படி நாம் கூறிடுவோம்?
விளக்கேற்ற எண்ணெய் இன்றி
வீடு இருளில் மூழ்கும்போது
பெட் ரூமில் நைட் லாம்பும்
விதவிதமாய் பேர்னிச்சர்சும்
வீடியோ டெக் அதுவும்
வீ.எச்.எஸ் மொடல் வேண்டும்
ரீவியும் கலர் ருவன்ரிவன் இஞ்சஸ்
திறீ சிஸ்ரம் மினிமம்
மேசைக்கு ஒரு பான் - தலைக்கு
மேலேயும் ஒரு பான்
ஆசைக்கு சுற்றிவர
அற்லீஸ் ஒரு ஹொன்டா
ப10சைக்கு போகும்போது போட்டுக்கொள்ள
பொக்கணத்தை தொடுமளவு
பவுணினிலே செயின் வேண்டும்
என்றெல்லாம் அடுக்கடுக்காய்
ஏவுகணைப்போல் தொடுத்தால்
என்செய்வார் என் பெற்றோர்?
எப்படித்தான் பதிலுரைப்பார்?
வேலியோரம் போய் நின்று
வீதிவழி போகின்ற
வாலிபரைப் பார்த்தாலும்
விழிஜாலம் காட்டினாலும் - நானென்ன
பூப்படைந்த சின்னப்பெண்ணா?
பார்ப்பவர்கள் பின்னால் வர
மூப்படைந்து இன்று - வயது
முப்பதையும் தாண்டியவளாச்சே - அதனால்
விம்மி வெடிக்கின்றேன்
விழிநீர் வடிக்கின்றேன்
வேறேது செய்ய முடியும்?
வாய்த்தது பெண் பிற்ப்பல்லவா!
|
|
|
| இப்போது அவர்கள் என்ன செய்யவேண்டும்? |
|
Posted by: thamilvanan - 04-06-2005, 05:50 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (4)
|
 |
ஒரு ஊரில் ஒரு பெரியவர் தனது பேரனை தனது கழுதையில் ஏற்றிவிட்டு, தான் நடந்தவாறு அடுத்த ஊருக்கு போய்க்கொண்டிருந்தார். அப்போது தெருவழியாக போனவர்கள் " பாருங்கோ அந்த சின்னபெடியனை, வயது போன மனுசனை நடக்கவிட்டிட்டு அவர் கழுதையில் ஏறிப்போற அழகை பாருங்கோ" என கதைத்தவாறு சென்றனர். இதனால் கவலையடைந்த முதியவர், தான் கழுதையில் ஏறிக்கொண்டு, சிறுவனை நடந்துவரச்சொன்னார். அவ்வாறு போய்க்கொண்டிருக்கையியல், வேறு சிலர் " பாருங்கோ இந்த கிழவனை, சின்னப்பெடியனை நடந்துவரச் சொல்லிப்போட்டு கிழவன் ஹாயா கழுதையில் ஏறிப்போகுது" என கதைத்துக்கொண்டிருந்தனர்.
இதனால் மேலும் கவலையடைந்த முதியவர், இருவரும் நடந்து செல்ல முடிவெடுத்தனர். இவ்வாறு இருவரும் நடந்து செல்லும்போது, இன்னும் சிலர் அவர்கள் இருவரையும் பார்த்து, " கழுதையை வைச்சுக்கொண்டு ஏன் இப்படி நடந்து போகிறார்கள். " என பரிகாசம் செய்தனர். ஊரில் இப்படி கதைப்பதை அவமானமாக எண்ணிய முதியவர் தாங்கள் இருவரும் கழுதையில் ஏறிச்செல்வோம் என முடிவெடுத்தனர்.
அதன்படி அவர்கள் சென்றாலும் விட்டார்களா ஊரவர், "வயது போன கழுதையெண்டும் பார்க்காமல் இரண்டுபேரும் ஏறிப்போகினம்" என்று திட்டாத குறையாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
இறுதியாக கேள்விக்கு வருகின்றேன்.
இப்போது அவர்கள் என்ன செய்யவேண்டும்?
|
|
|
|