![]() |
|
விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன் (/showthread.php?tid=4542) |
விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன் - victorp - 04-06-2005 என் கணனிக்கும் தமிழுக்கும் இடையினிலே தகராறு சிலநாட்கள் - அதனால் கவித்தொகுப்புகள் காலதாமதமாகியது - இனி தொடர்ந்து வரும் என்று நம்புங்கள் -அன்புடன் விக்ரர் விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன் அம்மி மிதிக்கவில்லை அருந்ததி பார்க்கவில்லை விம்மி வெடித்துத் தினம் விழிநீர் வடிக்கின்றேன் அம்மா என்று ஒரு சேய் - என்னை அழைப்பதைக் கேட்டிடத்துடிக்கின்றேன் சுண்ணாகச் சந்தையிலே சுரக்காயைக் கேட்பதுபோல் பெண்ணாகப் பிறந்த எம்மை பேரம் பேசுகின்ற சின்னத் தனத்தை எண்ணி சிந்துகின்றேன் விழிநீர் ஏனென்று கேட்பவர்க்;கு இதோ என் பதில் தாலி ஏறும் வயதை தாண்டி வருடம் பலவாச்சு வாலிபரும் பலபேர் வந்து பார்த்துப் போயாச்சு சோழியன் குடுமிதான் சும்மா ஆடிடுமா? காணி நிலம் எவ்வளவு? வீடுவாசல் எத்தனை? குடும்ப நகை எவ்வளவு? - என்று கேள்விமேல் கேள்வியாக கேட்டுவிட்டு போயாச்சு பதில் கூற என் பெற்றோர் பரம்பரையில் என்ன ஐமீன்தாரா? பட்டகடன் வட்டியுடன் படியேறி முகடுவரை எட்டி நிற்கும் கொடுமையினை எப்படி நாம் கூறிடுவோம்? விளக்கேற்ற எண்ணெய் இன்றி வீடு இருளில் மூழ்கும்போது பெட் ரூமில் நைட் லாம்பும் விதவிதமாய் பேர்னிச்சர்சும் வீடியோ டெக் அதுவும் வீ.எச்.எஸ் மொடல் வேண்டும் ரீவியும் கலர் ருவன்ரிவன் இஞ்சஸ் திறீ சிஸ்ரம் மினிமம் மேசைக்கு ஒரு பான் - தலைக்கு மேலேயும் ஒரு பான் ஆசைக்கு சுற்றிவர அற்லீஸ் ஒரு ஹொன்டா ப10சைக்கு போகும்போது போட்டுக்கொள்ள பொக்கணத்தை தொடுமளவு பவுணினிலே செயின் வேண்டும் என்றெல்லாம் அடுக்கடுக்காய் ஏவுகணைப்போல் தொடுத்தால் என்செய்வார் என் பெற்றோர்? எப்படித்தான் பதிலுரைப்பார்? வேலியோரம் போய் நின்று வீதிவழி போகின்ற வாலிபரைப் பார்த்தாலும் விழிஜாலம் காட்டினாலும் - நானென்ன பூப்படைந்த சின்னப்பெண்ணா? பார்ப்பவர்கள் பின்னால் வர மூப்படைந்து இன்று - வயது முப்பதையும் தாண்டியவளாச்சே - அதனால் விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன் வேறேது செய்ய முடியும்? வாய்த்தது பெண் பிற்ப்பல்லவா! - thamilvanan - 04-06-2005 என் கணனிக்கும் தமிழுக்கும் இடையினிலே தகராறு சிலநாட்கள் - அதனால் கவித்தொகுப்புகள் காலதாமதமாகியது - இனி தொடர்ந்து வரும் என்று நம்புங்கள் -அன்புடன் விக்ரர் விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன் அம்மி மிதிக்கவில்லை அருந்ததி பார்க்கவில்லை விம்மி வெடித்துத் தினம் விழிநீர் வடிக்கின்றேன் அம்மா என்று ஒரு சேய் - என்னை அழைப்பதைக் கேட்டிடத்துடிக்கின்றேன் சுண்ணாகச் சந்தையிலே சுரக்காயைக் கேட்பதுபோல் பெண்ணாகப் பிறந்த எம்மை பேரம் பேசுகின்ற சின்னத் தனத்தை எண்ணி சிந்துகின்றேன் விழிநீர் ஏனென்று கேட்பவர்க்;கு இதோ என் பதில் தாலி ஏறும் வயதை தாண்டி வருடம் பலவாச்சு வாலிபரும் பலபேர் வந்து பார்த்துப் போயாச்சு சோழியன் குடுமிதான் சும்மா ஆடிடுமா? காணி நிலம் எவ்வளவு? வீடுவாசல் எத்தனை? குடும்ப நகை எவ்வளவு? - என்று கேள்விமேல் கேள்வியாக கேட்டுவிட்டு போயாச்சு பதில் கூற என் பெற்றோர் பரம்பரையில் என்ன ஐமீன்தாரா? பட்டகடன் வட்டியுடன் படியேறி முகடுவரை எட்டி நிற்கும் கொடுமையினை எப்படி நாம் கூறிடுவோம்? விளக்கேற்ற எண்ணெய் இன்றி வீடு இருளில் மூழ்கும்போது பெட் ரூமில் நைட் லாம்பும் விதவிதமாய் பேர்னிச்சர்சும் வீடியோ டெக் அதுவும் வீ.எச்.எஸ் மொடல் வேண்டும் ரீவியும் கலர் ருவன்ரிவன் இஞ்சஸ் திறீ சிஸ்ரம் மினிமம் மேசைக்கு ஒரு பான் - தலைக்கு மேலேயும் ஒரு பான் ஆசைக்கு சுற்றிவர அற்லீஸ் ஒரு ஹொன்டா ப10சைக்கு போகும்போது போட்டுக்கொள்ள பொக்கணத்தை தொடுமளவு பவுணினிலே செயின் வேண்டும் என்றெல்லாம் அடுக்கடுக்காய் ஏவுகணைப்போல் தொடுத்தால் என்செய்வார் என் பெற்றோர்? எப்படித்தான் பதிலுரைப்பார்? வேலியோரம் போய் நின்று வீதிவழி போகின்ற வாலிபரைப் பார்த்தாலும் விழிஜாலம் காட்டினாலும் - நானென்ன பூப்படைந்த சின்னப்பெண்ணா? பார்ப்பவர்கள் பின்னால் வர மூப்படைந்து இன்று - வயது முப்பதையும் தாண்டியவளாச்சே - அதனால் விம்மி வெடிக்கின்றேன் விழிநீர் வடிக்கின்றேன் வேறேது செய்ய முடியும்? வாய்த்தது பெண் பிறப்பல்லவா! - eelapirean - 04-06-2005 என்ன நடந்தது விக்ரர் - KULAKADDAN - 04-06-2005 <b>victorp</b>, <b>thamilvanan</b>, ஓண்டுமே புரியலை ரெண்டு பேரும் கவிதைய போட்டிருக்கு.......... இரண்டு பேருக்குமுரியவர் ஓருவரா அல்லது மேற்கோள் காட்டியிருக்கா - KULAKADDAN - 04-06-2005 கவிதைக்கு நன்றி....வாழ்த்துக்கள்.......... - Danklas - 04-06-2005 KULAKADDAN Wrote:<b>victorp</b>, <b>thamilvanan</b>, «Ð ÌÇKРӾĢø «ó¾ ¸Å¢¨¾¨Â Å¢ìÃ÷ ¾¡ý §À¡ðÊÕó¾¡÷ ¬É¡ø «Å÷ ±ØòÐըŠºÃ¢Â¡¸ ¸Åɢ측Áø À¢ÃÍâîÍÅ¢ð¼¡÷ «¨¾ ºÃ¢Â¡¸ Å¡º¢ì¸ÓÊÂÅ¢ø¨Ä «¨¾ ¾Á¢ú šɽ ºÃ¢ ¦ºöÐ ¾¢ÕôÀ À¢ÃÍâ÷. «¨¾ ¸ñ¼ Å¢ìÃ÷ ¾ÉÐ À¢¨Æ¨Â ºÃ¢ ¦ºöÐÅ¢ð¼¡÷..
- KULAKADDAN - 04-06-2005 Danklas Wrote:[ Å¢ìÃ÷ ¾ÉÐ À¢¨Æ¨Â ºÃ¢ ¦ºöÐÅ¢ð¼¡÷..ஓகோ.......அப்பச்சரி....... 8) இப்ப தான் வந்தமா புரியலை............... :? hock:நன்றி...டக் அங்கிள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- jeya - 04-07-2005 யார் எழுதினால் என்ன ....... கவிதைக்கு நன்றி.... :? - kavithan - 04-07-2005 கவிதை நன்றாக இருக்கிறது விக்ரர் நியத்தை நியமாக நிறைந்த கருத்தோடு கூறி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் கவிதைகள் யாழில் மலர வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- hari - 04-07-2005 எங்கள் சமுதாயத்தில் பாதி பெண்கள் இப்படித்தான் இருக்கின்றனர்! அந்த தோஷம் இந்த தோஷம், சனி, புதன், வியாழன் என்றும் பலர் இருக்கினம்! அருமையான கவிதை வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்! - kuruvikal - 04-07-2005 Quote:தாலி ஏறும் வயதை என்ன எங்க சோழியான் அண்ணாவப் பேசுறீங்க..அவருக்கு குடுமி எல்லாம் கிடையாது...சரியா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தமிழர் சமுதாயத்துள் நீச்சலடிக்க வெளிக்கிட்டு சமுதாயச் சகதிக்குள் சிக்கித் தவிக்கும் பெண்களுக்காய்...வந்த கவி நன்று...! :wink:
- Kurumpan - 04-07-2005 அழுதழுது மாண்ட காலம் மலை ஏறி போச்சு விழித்தெழுந்து வீறுகொண்டு போராடும் வேளை இது என்றாச்சு போராடாமல் எதுவும் கிடைக்காதுங்கோ! சமுதாய மாற்றமும் அப்படித்தான்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|