| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 463 online users. » 0 Member(s) | 459 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,650
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| கவியல்ல இது ஒரு காவியம் |
|
Posted by: kuruvikal - 04-09-2005, 02:07 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (80)
|
 |
<img src='http://img116.exs.cx/img116/4868/nicebluebird5vg.jpg' border='0' alt='user posted image'>
<b>கவியல்ல இது ஒரு காவியம்
தேடியும் கிடைத்திடா
தேவதையாய் எண்ணியது
தேய்ந்து கட்டெறும்பான
கதை சொல்லும் ஜீவகாவியம்...!
ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு
தோப்பிலே குருவியொன்று
சிங்காரச் சிறகு விரிக்க
சுதந்திர வானம்....!
சுதந்திரமாய்க் குடியிருக்க
சின்னக் கூடு
சுமை தாங்கியாய்
சின்ன மாமரம்...!
சுந்தரக் கானமிசைக்க
தென்றல் போடும்
தக திமி தாளம்..!
இவை சேர
தப்பாமல் தன்பாட்டில்
வாழ்ந்தது மனதோடு
மகிழ்ச்சி பொங்க....!
அன்றொரு வேளை
அந்திசாயும் மாலை நெருங்க
அருமையாய் வசந்தம் பூத்திருக்க
பூமி மகள் அழகு காட்டியிருக்க
கண்ணினைக் காட்சிகள்
காந்தமாய்க் கவர
களம் ஏகியது குருவி....!
கண்கொள்ளாக் காட்சிகள்
விருந்துகள் படைக்க
வாயோடு வந்த கீதம் இசைத்துப்
பறக்குது சிட்டு
குதூகலித்துமே...!
இங்ஙனமாய்
இயற்கையின் நாயகன்
இன்புற்றிருக்க
குறுக்கே வந்த கருவண்டு
கவனம் இழுத்துச் செல்லுது..!
அதன் வழி
செல்லச் சொல்லுது மனம்
பாவம்...விதி வழி அறியாச் சிட்டும்
கூடிப் பறக்குது கருவண்டின் பின்னே...!
காட்சிகள் சிலது கடந்ததும்
வந்தது ஒரு வாசம்
வசந்தத்தின் பரிசாய்
தந்தது ஒரு மலர்...!
பார்வைகள் பரிமாற
மலரின் மாயமறியாது
சிட்டும் மயங்கியது
வந்த பாதை மறந்து
போதையில் வீழ்ந்தது..!
பருவத்து அழகு காட்டி
நயமாய் அழைத்து
வசமாக்கிக் கொண்டது மலர்..!
சிக்காரச் சிட்டும்
சிறைபட்டுப் போனது
தூய மனசும்
பாழ்பட்டுப் போனது....!
காலங்கள் கழிந்தது
மலரின் வேசம் கலையும்
காலமும் வந்தது...
பருவத்துச் சுருதி கூட்டி
பாடாய்ப்படுத்திய மலர்
அரை நொடிப் பொழுதில்
பாரா முகமாய்
அறியா உறவாய்
பத்தினிகள் வேசம் போட்டது...!
பதறிப்போனது சிட்டு
இது என்ன கோலம்...
கலிகாலத்து மங்கைக்கு ஒப்ப
மலரும் மாறிப்போனதோ
இல்ல...
புதிய உலகம் படைக்க
புறப்பட்டுவிட்டதோ மலர்...??!
சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை
"Good Bye.....!"</b>
(யாவும் கற்பனை)
|
|
|
| நீர் அரும்பு |
|
Posted by: KULAKADDAN - 04-09-2005, 01:08 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (4)
|
 |
இதை எவ்வாறு தமிழ் படுத்துவது......நீர் அரும்பு என்றா?
முகிலின் ஈர்ப்பு காரணமாக கடல் நீர் முகிலை நோக்கி ஈர்க்கப்பட்ட தோற்றப்பாடு. இவ்வாறு நடைபெற்றதை வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது .இப்படத்தை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்
<img src='http://img229.exs.cx/img229/4741/water5nv.gif' border='0' alt='user posted image'>
Water sprout in sea off Bambalapitiya
A water sprout over the sea near Bambalapitiya was seen on Sunday evening although no damage to life and property on land was reported. Meteorological Department sources said that ocean water sprouts were rare around the Sri Lankan coasts and confirmed the occurrence of the water sprout. American Photographer Tom Tidball captured this rare moment from his sixth floor apartment in Bambalapitiya around six pm on Sunday.
|
|
|
| காம்னா - இன்னொரு சினிமாத் தேவதை...! |
|
Posted by: kuruvikal - 04-09-2005, 01:04 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/kamna-350.jpg' border='0' alt='user posted image'>
இந்தியாவின் முன்னணி கிரிமினல் லாயர் ராம் ஜேத்மலானியின் பேத்தி நடிக்க வருகிறார். அதுவும் தமிழில்.
ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடி சேருகிறார்.
தொடர்ந்து தனது தந்தை எடிட்டர் மோகனின் படக் கம்பெனியிலேயே நடித்து வந்த ரவியை தனது மழை படம் மூலம் வெளியே கொண்டு வந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதையடுத்து மளமளவென வெளிப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ரவி.
ரவி நடிக்கும் தாஸ் படத்தை லட்சுமி மூவிமேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்து கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் ரவி.
தாஸ் படத்தை பாபு யோகேஸ்வரன் டைரக்ட் செய்கிறார். நெல்லை, மதுரை ஆகிய 2 மாவட்டங்களை மையமாக வைத்து ஒரு காதல் கதையை ஆக்ஷன் கலந்து எடுக்கிறார்களாம்.
ஒரு முஸ்லிம் குடும்பத்தில் காதல் ஏற்படுத்தும் அதிர்வு அலைகள் தான் கதையின் கருவாம்.
இந்தப் படத்தில் ரவிக்கு ஜோடியாக நடிப்பது மலையாள குஜிலியான ரேணுகா மேனன். கோபிகாவைப் போலவே இவருக்கும் திருச்சூர் தாந் சொந்த ஊர்.
வழக்கம்போல கேரளா எக்ஸ்பிரசில் புறப்பட்டு கன்னடம், தெலுங்கு என ஒரு ரவுண்டு அடித்து விட்டு கோடம்பாக்கத்தில் லேண்டாகி விட்டார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ரவி நடிக்கப் போகும் படம் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் "இதயத் திருடன்' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கப் போவது த கிரேட் சரண்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காம்னா என்ற பிரபல மும்பை மாடல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். இப்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் காம்னா, ராம் ஜேத்மலானியின் பேத்தி.
நான் வடக்கத்திப் பெண் என்றாலும் என்னைப் பார்த்தால் பலரும் தென்னிந்தியப் பெண்ணா என்று தான் கேட்கிறார்கள். இதனால் நான் தமிழ் படங்களில் அன்னியமாகத் தெரிய மாட்டேன் என்று தனக்குத் தானே மார்க் போட்டுக் கொள்கிறார் காம்னா.
வேகமாக தமிழும் கற்க ஆரம்பித்திருக்கும் காம்னாவுக்கு தெலுங்கை விட தமிழ் பிடிக்குமாம். காரணம், தமிழில் சொல்லப்படும் வித்தியாசமான கதைகள். தெலுங்கிலும் நிறைய ஆபர்கள் வர ஆரம்பித்துள்ள நிலையில் தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை கப் என பிடித்துக் கொண்டிருக்கிறார்.
மிஸ் மும்பை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இவர், மாடலிங்கில் சிறிது காலம் கழித்துவிட்டே சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
மியூசிக் சேனல்களில் கொஞ்ச காலம் கம்பியருங் செய்த அனுபவமும் உள்ள காம்னா மியூசிக் ஆல்பங்களிலும் ஆடிப் பாடி நடித்திருக்கிறார் காம்னா.
நடிப்பதோடு தேவைப்படும் அளவுக்கு கிளாமர் ரோல்கள் செய்யவும் தயாராம்.
சரண் இயக்கும் இந்தப் படத்தில் ரவியை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒரு குதூகலப் பெண் கேரக்டரில் நடிக்கிறார் காம்னா.
இந்த இதயத் திருடன் படத்தின் பாடல்களை வைரமுத்து செதுக்கியிருக்கிறார். இசை பரத்வாஜ். பாடல் பதிவை ஹங்கேரியில் போய் செய்யப் போகிறார்களாம். படத்தின் பெரும்பாலான சூட்டிங் நடக்கப் போவது பெங்களூரில்.
தற்ஸ்தமிழ்.கொம்...!
|
|
|
| நீங்கள் முன்னேறச் சில யோசனைகள் |
|
Posted by: KULAKADDAN - 04-08-2005, 09:43 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (5)
|
 |
நீங்கள் முன்னேறச் சில யோசனைகள் - Dr. R. பரமேஸ்வரன்
வீர வரலாறு படைத்த சாதனையாளர்கள், வாகை சூடியவர்கள், சான்றோர்கள் ஆகியோரின் வாழ்க்கை முறையை உளவியலாளர்கள் ஆய்ந்து, சிலவகையான பண்பு நலன்கள் அத்தகையோரிடம் பரிமளித்ததைக்க கண்டனர். இத்தகைய ஆற்றல்களைப் பற்றியும், குணவியல்புகளைப் பற்றியும் திருவள்ளுவர் அழகுடன் எடுத்தியம்பியிருக்கிறார். உளவியலில் உள்ள கோட்பாடுகளில் ஒன்று சமூகக்கற்றல் கோட்பாடு. ஒருவன் சமூகத்தில் இடைவினை புரிவதால் அவனுடைய நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது இதன் அடிப்படைக் கருத்தாகும். சிலர் தலைவிதி, கர்மம், நேரம், ஆள்பலம் எனப் புறக்காரணிகளைத் தங்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணங்களாகக் கூறுவர். மாறாகச் சிலர், தங்களுடைய முயற்சி இன்மை, ஊக்கமின்மை, சோம்பேறித் தனம் ஆகியவற்றை நொந்து கொண்டு அவற்றைச் செம்மைப் படுத்திட முனைவர். அத்தகைய மனப்பாங்கு தான் வெற்றிப் பாதை அமைத்துத் தரும்.
நம்மிடம் பொதிந்துள்ள திறமைகளை நான்கு வகையாக்குவர். நமக்குக் தெரிந்தவை. நாம் அறியாமல் பிறர் அறிந்தவை: இவருவரும் அறிந்தவை: இருவரும் அறியாதவை என்பன அவை. முதுகலை வகுப்பு மாணவர் ஒருவரிடம் 'உங்களிடம் உள்ள திறமைகளை வரிசைப்படுத்திக் கூறுங்கள்" என்றேன்? 'திறமைகளா? என்னிடமா?" எனவினவினார். 'ஆம் உங்களிடம் உள்ள திறமைகளைத் தான் கேட்கிறேன்" என்றேன். இப்போதும் பதில் இல்லை. ஏனெனில் அவர் அவரைப் பற்றியே சிந்திக்கவில்லை. நான் கூறினேன். 'நீங்கள் ஒரு பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், தெரியும். தெலுங்கில் பேச மட்டும் தெரியம், அறிவுடையவர், எளிமையானவர், பிறருடன் எளிதில் பழகும் பண்பாளர்" என்று: பக்கத்து மாணவர் எழுந்து 'இவன் அருமையாகப் பாடுவான், கவிதை எழுதுவான் என்று மேலே தொடர்ந்தார். 'உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்" என்பது உண்மை. 'நீயார்? நான்யார்? என்கிற கேள்விக்கு விடை காண முடியாமையால் தான் நாம் பல பிரச்சினைக்கு ஆளாகிறோம்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் மாணவர்களை மதிப்பீடு செய்யும் போது கீழ்க்கண்ட பண்புநலன்கள் உள்ளனவா எனக் கணக்கிடுகின்றன.
தன்னம்பிக்கையும், சுயசார்பும் மிக முக்கியமான குணங்களாகும். தன் கையே தனக்குதவி என்பது போல, பிறரைச் சார்ந்திராமல் சுதந்திரமாகச் செயல்படும் ஆளுமை வேண்டும்.
சூழ்நிலைக்கும், காலத்திற்கும் ஏற்ப நெகிழ்வுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 'தூங்குக தூங்கிச் செயற்பால, தூங்கற்க தூங்காது செய்யும் வினை" என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பகைமாட்சியும், பகைத்திறன் தெரிதலும் பயன்தரத்தக்க குணங்களாகும்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என ஆய்ந்து அவனிடத்தில் அச்செயலை ஒப்படைத்து- அதனைச் செய்து முடிக்கவும், வினை வலியும், தன் வலியும் மாற்றான் வலியும், துனை வலியும் அறிந்திருக்கவும் கூடிய ஆற்றலைப் பெற வேண்டும்.
நேரம் தவறாது, பொறுப்புணர்ந்து கடமையை ஆற்றும் பாங்கு வேண்டும். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செயலைச் செவ்வனே செய்ய முழு மனத்துடன் அதில் ஈடுபட வேண்டும்.
இடுக்கண் பலவரினும், சிந்தனை மயங்காது நுண்மாண் நுழை புலமறிந்து, புதிய முறைகளில் சிந்தித்துத் (Lateral thinking) தீர்வு காணுகின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மெய்யுணர்ந்து, தான் எடுத்த முடிவிலிருந்து மாறாத நெஞ்சத்தைப் பெற்றிருக்க வேண்டும். எண்ணி ஆராய்ந்து முடிவு எடுத்த பின்பு, பின் வாங்காது தனது செயலை நியாயப் படுத்துகின்ற ஆற்றல் வேண்டும்.
குற்றம் நம்மிடம் இருக்குமாயின், அக்குற்றத்தைப் போக்குவதற்கான வழிமுறைகளைப் பெற, அறநெறி கூறும் தக்கவரைப் பயன்படுத்திக் கொள்ளும் குணம் வேண்டும்.
நம்முடைய செயலில் முன்னேறுவதற்கான வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். செயல் பற்றிய நுணக்கங்களையும், விரிவான அறிவையும் பெற முயற்சியும் வேண்டும்.
தோல்விகள் அடுக்கிவரினும், உள்ளம் சோர்ந்து விடாமல், முயற்சியில் குறைவில்லாமல், மனநல மாண்பினைப் பெற்றிட வேண்டும்.
நெறிமுறைகளுக்கு ஏற்ப, அவையறிந்து திறன் அறிந்து கேண்மையைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உரிய மதிப்பையும், பெருமையையும் கொடுத்த, பண்பு பாராட்டும் குணநலன் வேண்டும்.
தலைமைப் பண்புகளைப் பெற்றிருப்பது மிக முக்கியமான ஆற்றலாகும். சொல் வன்மை என்னும் பண்பு பெற்றவனை எளிதில் வென்று விட முடியாது. ஆக்கமும், கேடும் அதனால் வருவதால் நாகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். கேட்டார் பிணிக்கும் வகையில், ஏற்படுத்தும் குரல் வளம் மிக்க பயனாக இருக்கும்.
ஊக்கமும் புத்துணர்வும் உடையவர்களை ஆக்கம் வந்தையும். எனவே, மகிழ்ச்சியோடு என்பதை உணருங்கள். உலகத்தோடு ஒட்ட ஒழுகவும், பெரியாரைத் துணையாகக் கொள்ளவும், ஆற்றுவார் ஆற்றலை இகழாத்தன்மையைப் பெறவும் முயற்சி செய்யுங்கள்.
இக்குணநலன்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வழித்துணைகளாகும். அவற்றைப் பெற்றிடவும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
ஹெல்த் சஞ்சிகை
நன்றி சூரியன்.கொம்
|
|
|
| இப்படியும் ஒரு திருட்டு...! |
|
Posted by: kuruvikal - 04-08-2005, 09:11 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
<b>அமெரிக்கா: பல்கலையில் டிஎன்ஏ திருடிய இந்திய ஆராய்ச்சியாளர் கைது</b>
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து டி.பி. ஏற்படுத்தும் வைரசின் டிஎன்ஏ வை திருடிய இந்திய ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள பிரபல உயிரித் தொழில்நுட்பவியல் மையத்தில் பயின்ற சிங் லட்சுமண் மீனா (33), அமெரிக்காவின் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் புரபஸர் மற்றும் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் இந்த ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டிருந்தார். கடந்த மார்ச் 24ம் தேதியுடன் இவரது ஆராய்ச்சிப் படிப்பு முடிந்து இந்தியா திரும்ப இருந்தார்.
இந் நிலையில் 22ம் தேதி பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பிடிபட்டார். டிபியை (tuberculosis organism) ஏற்படுத்தும் வைரசின் டி.என்.ஏக்கள் அடங்கிய குடுவைகள் (vials) மற்றும் அதன் விவரங்கள் அடங்கிய சிடிக்களுடன் இவர் சிக்கினார்.
அவர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுள்ளது.
3,500 டாலர்கள் கட்டி ஜாமீனில் அவர் விடுதலையாகலாம் என அந்த மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் அவர் ஆரஞ்ச் கவுண்டி பகுதியிலேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த டிபி வைரஸ் டிஎன்ஏவைக் கொண்டு மருந்து மட்டுமல்லாமல் உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கவும் முடியும் என பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
நன்றி - தற்ஸ்தமிழ்.கொம்
------------------------
அட இப்படியும் திருடிப் பிழைக்க முடியும் என்று தெரிஞ்சிருந்தா...குருவிகளும் திருடியிருக்குங்களே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு" -அ.இரவி |
|
Posted by: Thaya Jibbrahn - 04-08-2005, 12:32 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (1)
|
 |
'தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு"
என்று நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் கவிதை எழுதிவிட்டுப் போய்விட்டார். என்ன அர்த்தத்தில் இப்படி எழுதினார்? கிண்டலா கோபமா புகழும் வார்த்தைகளா?
'அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்"
என்று மீதி இரண்டு வரிகளை எழுதிவிடுகிறார். ஓகோ அப்படியெனில் தமிழர்களை அவர் புகழ்கிறார் என்றுதான் அர்த்தம். புகழுகின்றாரா? புளுகுகின்றாரா?
கோபக்கார மீசை கொண்ட நமது மகாகவி பாரதியார் வேறுமாதிரிச் சொல்லி விடுகின்றார். அவருக்கு தமிழ் இனத்தின் கோபம்-கடும் கோபம். நாமக்கல்லார்போல் இனம் என்று சொல்லக்கூட அவர் ஆத்திரம் விடவில்லை. பல்லை நெருமி சாதி என்கின்றார்.
தமிழ்ச்சாதி!
'விதியே விதியே தமிழ்ச்சாதியை
என் செயக் கருதியிருக்கிறாயெடா"
பாரதியாருக்கு விதியின் மீது கோபமா? தமிழ்ச்சாதி மீது கோபமா? தமிழ்ச்சாதி மீது என்பது வரியிலேயே தெரிந்துவிடுகிறது.
தமிழ்மொழி மீது பாரதியாருக்கு மிகுந்த பற்றுள்ளதை நாம் பலமுறை பார்த்துவிடுகின்றோம்.
'யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடுவதிலும்
'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே"
என்று வாழ்த்துவதிலும் பாரதியாரின் தமிழ்ப் பற்றைப் பார்க்கின்றோம். கோபம் அவருக்கு தமிழர்கள் மீதுதான்.
'மழை பெய்கிறது
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள் எருமைகளைப்போல் எப்போதும்
ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே
உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள்.
ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல்.
ஈரத்திலேயே உணவு
உலர்ந்த தமிழன் மருந்துக்கும் கூட அகப்படமாட்டான்."
இந்த வசன கவிதையிலேயே 'எருமைத் தமிழர்" என்று தமிழரை வைது விடுகிறார் பாரதியார்.
சரி தமிழ்ச்சாதி அப்படி என்ன தவறு செய்துவிட்டது. மீசை துடிதுடிக்க கண்களில் கோபம் கொப்புளிக்க பாரதியார் இந்தத்திட்டு திட்டுகிறாரே ஏன்?
பாரதிதாசனுக்கோ 'தமிழ்ச் சாதியைக்" கண்டாலே தோள்கலெல்லாம் பரிக்கிறது. சிந்தை குளிர்கிறது. பாரதியாருக்கோ அப்படியே மாறுபாடாக இருக்கிறது. என்ன காரணம்?
'தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்ற குரல்களையும் நாம் எப்போதுமே கேட்டுக்கொண்டுதானிருக்கிறோம். தலை நிமிர்ந்து நிற்கும் தகுதி நமக்கு இருக்கின்றதுதானா?
பண்பாடு மிக்க மொழி தமிழ். பண்பாடு மிக்க இனம் தமிழ். இதை நாம் காண்பதற்கு ப10தக்கண்ணாடி தேவையில்லை. காலக்கண்ணாடி போதும். நம் மொழியின் முன்னைய இலக்கியங்களைப் பார்த்தோமானால் இந்த உண்மையை அறியலாம். அவ்வாறு நாம் அறிய முயல்கின்றபோது-நம் உடலெங்கும் ஒரு கூதல் ஓடும். சட்டெனவே மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கும். இதனை நாம் அனைவரும் உணர்வோம்.
இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களின் முன்னர் நமது தமிழ்க் கவிஞர் கணியன் ப10ங்குன்றனார் ஒரு கவிதை பாத்தார். இந்தக் கவிதை கற்பனையில் கால்கொண்டு உள்ளத்தில் ஊற்றெடுத்து உணர்ச்சிக் கழிப்பில் பெருக்கெடுத்தது அல்ல. பாரம்பரியம் மிக்க நமது மொழியிலிருந்து பண்பாட்டிலிருந்து ஊற்றெடுத்து சுரந்து உடைப்பெடுத்துப் பெருகிறது. கணியன் ப10ங்குன்றனாரின் சங்ககாலக் கவிதையைச் சொல்கின்றேன்-கேளுங்கள்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிஷன்
இன்னாதென்றாலும் இலமே...
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்ததும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே"
இதன் பொருளும் சொல்லவேண்டும் எனில் இதோ:
எல்லா ஊர்களும் நமது ஊர்களே. எல்லோரும் நமது உறவுகளே. தீமையும் நன்மையும் தாமே கொள்வது அல்லாது பிறர் தர வாராது. அவ்வாறே நோவும் அதன் தீர்வும் தாமே வருவன. சாவும் புதியதல்ல. வாழ்வு இனிமை என்று மகிழ்வதும் இல்லை. விரக்தி வந்துற்றபோது கொடுமை என்று வெறுப்பது இல்லை. நம்மை நாமே தெளிவாக உணர்ந்துகொண்டோ ஆதலினால் மாட்சிமை தங்கிய பெரியோரை வியந்து போற்றப் புகழமாட்டோம். அதேசமயம் சிறியோரை இகழ்தல் என்பன ஒருபோதும் செய்யோம்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு கவி தமிழ் மகனிடமிருந்து வருகின்றதென்றால் அது தமிழ்ச் சமூகத்துப் பண்பாட்டுடன் விழுமியத்தின் வெளிப்பாடு அல்லாது வேறு என்ன?
பெரியோரை வியத்தல் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
என்று சொல்ல வேறு எந்த சமூகத்தால் முடிந்திருந்தது? நமது பண்பாட்டு விழுமியப் பெருக்கின் பெறுபேறு அல்லவா இது! இதனால் பெருமிதம் அடையவேண்டும் அல்லவா நாம்! ஊற்று அடைபட்டிருந்தால் இங்ஙனம் சுரந்திருக்க முடியுமா?
இப்போதும் கூட இப்படிப் பாடுகின்றோம்தானே- நம் தேசத்துக்கவி-தேசியக்கவி புதுவை இரத்தினதுரையின் கவிதை வரி. இப்படியாகிறது.
'நமக்கு மேலும் ஒருவரிலர்
நமக்குக் கீழும் எவருமிலர்"
புதுவை இரத்தினதுரை போருக்கு முகம் கொடுத்தபடியே வாழும் கவிஞர். ஒரு ஆயுதப் போராளி அடையக்கூடிய அத்தனை இடர்களையும் இன்னல்களையும் இந்த எழுத்துப் போராளியும் ஏற்றுக்கொண்டவர். நம்மெல்லோரையும் போலவே தேசியத் தலைவரையும் தலைவனாக வரித்துக்கொண்டவர். அப்படிப்பட்ட நம் கவிஞனால்தான் இப்படியும் கவி சொல்ல முடிகிறது.
'நமக்கு மேலும் ஒருவரிலர்"
இப்படிக் கவிதை பாடிய புதுவை இரத்தினதுரையை எம்மால் புரிய முடிகின்றது. வீரச்செயலுக்கு இலட்சிய உறுதி விட்டுக்கொடுக்காத்துணிவு விலைபோகா உணர்வு என்னும் இன்னோரன்ன தகுதிகள் கண்டதனால் தலைவனாக ஏற்றுக்கொள்ளத் தயங்கியதில்லை. அதே சமயம் தகுதிகாண் தலைவன் ஆயினும் தோழமை ப10ண்டு தோழனாய்க் கொள்ளும் பண்பும் இருக்கின்றது. அது தமிழ்ப் பண்பாடு சொல்லிக் கொடுத்த ஒன்று. யாரினது காலிலும் விழோம். அதே சமயம் யாரையும் தலையில் தூக்கிவைத்துக்கொள்ளோம்.
தமிழ்நாட்டுத் தமிழரில் அப்படி நடக்கின்றதே என்று கேட்கின்றீர்களா? வேதனைதான். வெட்கம் வரத்தான் செய்கின்றது. ஆனால் தயவுசெய்து எது தமிழ்ப்பண்பாடு அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். ஆரியர் நம்மை அடிமையாக்கி ஆண்டு புகட்டிவிட்ட ஆரியப்பண்பாடு அது. மனிதரை மனிதர் கையெடுத்துக் கும்பிடுவதுகூட தமிழ்ப்பண்பாடு அல்ல. கைலாகு கொடுத்தலும் அல்ல. கட்டித்தழுவுதல்! எதிர்ப்பாலார் எனில் கைகளைப் பற்றுதல். இவைதாம் தமிழ்ப் பண்பாடு எழில் இவற்றில் ஒளிர்ந்திருப்பது சகமனிதர் மீது கொண்ட நேயம் அன்பு தோழமை உரிமை.
இஃது இவ்வாறு இருக்க பாரதியார் தமிழ்ச்சாதியின் மீது கோபம் கொள்ளுதல் சரிதானா? நம்மூர்க்கவிஞர் சிவசேகரம் கூட இவ்வாறு கோபம் கொண்டார். அதைக் கோபம் என்று சொல்லலாமா? கவிதை வரியைச் சொல்கின்றேன். நீங்களே முடிவெடுங்கள்.
கணியன் ப10ங்குன்றனாரின் 'யாதும் ஊரே" கவிதையைத்தான் இப்படி மாற்றிப் பாடுகின்றார்:
'நமக்கு நாமே பகை என ஆனோம்
ஆதலினால்
எம்மூர் தவிர்ந்த யாதும் ஊரே
எம்மவர் தவிர்ந்த யாவரும் கேளிர்"
விரக்தியின் விளிம்பில் நின்று சிவசேகரம் பாடியது புரிகின்றது. இந்த விரக்தி நம்மெல்லோருக்கும் அடிக்கடி நேர்வதுதான்.
நாமும் அதே சனக்கூட்டத்தில் ஒருவராக இருந்துகொண்டு தகிடுதத்தங்கள் வஞ்சகங்கள் செய்துகொண்டு பொறாமையில் புழுங்கி அவிந்து வெந்துகொண்டு 'எங்கன்ரை சனம் திருந்தாது" என்று சொல்வோம். 'உது நாய்ச்சாதி" என்போம். 'தமிழன் எங்கை இருக்கிறானோ அங்கை பொறாமையும் இருக்கும். குழப்பமும் இருக்கும்" என்றெல்லாம் தமிழ்ச்சாதனையை வாய் ஓயாமல் தூற்றுவோம். 'நான்" என்னும் என்பதை தவிர மற்றைய 'எங்கன்ரை சனம் 'அதாவது" தமிழ்ச்சாதி. எதுவும் திருந்தாது என்று சுலபமாக ஏனையோர் மீது பழி சுமத்தி விடுவோம்.
நம்மை நாமே தூற்றுவதும்ää பழிப்பதும்ää நமது தாழ்வுச் சிக்கலேயன்றி வேறு காரணம் எதுவும் இல. கொஞ்சம் கூர்ந்து கவனிப்போமெனில் எம்மிடம் என்ன குறைபாடுகள் பலவீனங்கள் உளவோ அவை ஏனைய சமூகங்களிலும் உளதை அவதானிக்கலாம்.
அவரவர்களுக்குரிய பண்பாட்டின் வழி அவரவர்கள் அதனை வெளிப்படுத்துகிறார்கள். கைலாகு கொடுத்து முகத்தில் கடுமை குறைத்து இயலுமெனில் சிரித்து வெளிப்பாட்டை மறைக்கிறார்கள் செயலில் புரிகிறார்கள். நாங்கள் வேலி பிரித்து அல்லது வேலிக்குள் பொட்டுவைத்து விடுப்புப் பார்த்த பரம்பரையில் வந்ததன்படி வெளிப்படுத்துகின்றோம். ஆனால் ஒன்றை உறுதியாக உணர்வோம். வேலி பிரித்தது விடுப்பு பார்க்க மாத்திரமல்ல அயல்வீட்டில் அவலக்குரல் எழுந்தபோது ஓடோடிச் சென்று ஓரத்தில் வந்து உதவி புரிவதற்காகவும்தான். அதுதான் தமிழ்ச்சாதி.
ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது மகனை மகளை வேறும் நெருங்கிய உறவுகளை பிறர் அறிய நாம் பெருமையாகப் பேச வேண்டும். தவறுகள் களைய விமர்சனம் தேவைதான். அது எமக்குள். அது ஒருபுறம் இருக்க
நாம் அஞ்சத் தேவையில்லை. நம்மை நான் குறைத்து மதிப்பிடவும் தேவை இல்லை. நம் இனம் தலை நிமிர்ந்து வாழ ஆயிரக்கணக்கில் தம்மைக் கொடையாய் கொடுத்தவர்களின் சமூகம் நமது சமூகம். ஓர் உன்னத சமூகத்தின் வயிற்று மைந்தர் நாம். அதனால் பெருமிதப்படுவோம். நெஞ்சு நிமிர்த்தி வீறுநடை போடுவோம்.
பதினாறு நூற்றாண்டுகளின் முன் 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று சொன்ன சிலப்பதிகாரம் எழுந்த தமிழ்ச்சாதி நமது.
'தன்னிலையில் தாழாமை தாழ்ந்த பின் உயிர் வாழாமை" என்று பதினைந்து நூற்றாண்டுகளின் முன் பாடிய வள்ளுவன் வாழ்ந்த தமிழ்ச்சாதி நமது.
'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பாடியே பன்னிரண்டு நூற்றாண்டுகள் அழிந்து விட்டன. அதுதான் நமது தமிழ்ச்சாதி.
'மானுடம் வென்றதம்மா" என்று மானுடத்தை வியர்ந்து போற்றிய காலம் கழிந்து பத்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்ச்சாதிதான் அதைச் சாதித்தது.
மனிதனுக்கு மேலொரு தெய்வமுமில்லை
மானுடம் போலொரு மெய்மையுமில்லை
என்று மனிதரைப் போற்றி ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் பாடிய சாதி நம் தமிழ்ச்சாதி
சொல்லுங்கள்-தமிழ்ச்சாதி என்பது தரக்குறைவா?
விதியை தமிழர் நாம் வெல்வோம். தமிழ்ச்சாதி என்று தலை நிமிர்த்தி தோள் உயர்த்தி நெஞ்சு விரித்து நிமிர்வோம்
வானம் அளந்த அனைத்தும் அளப்போம்.
-அ.இரவி-
நன்றி ஈழநாதம் தமிழ்நாதம்.கொம்
|
|
|
| நல்ல தமிழ்எழுத்துரு எது? |
|
Posted by: thamilvanan - 04-08-2005, 05:18 AM - Forum: இணையம்
- Replies (7)
|
 |
<b>கீழே Arial Unicode Ms எழுத்துருவில் தகவல் படமாக இணைக்கப்பட்டுள்ளது.</b>
<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/whichfont.JPG' border='0' alt='user posted image'>
|
|
|
| யாழ்களத்தில் வள்ளலின் உதவிக்கரம் |
|
Posted by: வள்ளல் - 04-07-2005, 11:46 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (29)
|
 |
அனைவருக்கும் வணக்கம்
நான் கருத்து சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் இலங்கையில் தமிழர்களில் படிப்பதற்கு மனம் இருந்தும் பணவசதி இல்லாமல் இருப்பவர்களில் மாதம் இருவருக்கு பணஉதவி செய்ய ஆசைபடுகிறேன்
நிபந்தனைகள் :
1, இலங்கை தமிழராக இருக்க வேண்டும்
2, 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
3, யாழ்களத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்
இவைகள் பொருந்தினால் உதவிக்கரம் என்ற தலைப்பில் உங்கள் கோரிக்கைகளை வையுங்கள்
உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கபட்டபின் நீங்கள் உதவி டபெற தகுதி உடையவர்கள் என்னும் செய்தி உங்களுக்கு தனிமடல் மூலம் வந்து சேரும் ,அதன் பின் நீங்கள் வங்கி இலக்கம் ,முகவரி போன்றவற்றை அனுப்பலாம்
நிச்சயமாக மாதம் இருவருக்கு உதவி கிடைக்கும்
தொகை வரம்பு 1000 இலங்கை ரூபாயிலிருந்து 7000 இலங்கைரூபாய்கள் வரை
உதவிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளும் திகதி 06-20
உறுப்பினர்கள் மற்றும் விருந்தாளிகள் உங்கள் நண்பர்களுக்கும் தகவலை தெரிவியுங்கள்
குறிப்பு:
இது எந்த நிறுவனமோ குழுவினர் சார்ந்த உதவி அல்ல
இது வள்ளலால் தனிப்பட்் முறையில் செய்யப் படும்உதவி
இந்த முயற்சியிலுள்ள குறைகள் நிறைகளை தயவு செய்து கருத்துக்கள் மூலம் தெரிவியுங்கள் உங்கள் ஆலோசனைகள் வரவேற்க படுகின்றன,
|
|
|
| கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமா? |
|
Posted by: spyder12uk - 04-07-2005, 11:02 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
ஆரோகணிக்கும் அமளிதுமளியும் அவரோகணிக்கும் அமைதிமுயற்சியும் - தெய்வீகன்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு இரண்டுவருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர்நீமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து இலங்கையில் அரசியலில் சூறாவளி வீச ஆரம்பித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வசைபாடும் ஐக்கிய தேசியக்கட்சி, நீதியரசர் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மேன்முறையீடு செய்யமுடியாத சட்டச் சிக்கலால் திணறுண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு நகர முடியாமல் திண்டாடுகிறது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அணியிலிருந்து ஒருகாலத்தில் ஐ.தே.க.வை வசைபாடிக் கொண்டிருந்த எஸ்.பி.திஸநாயக்க, கொழும்பு நகரமண்டபக்
குண்டுவெடிப்பில் ஜனாதிபதி சந்திரிகா கண்ணில் காயம்பட்ட வேளையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குற்றி 'எனது தலைவிக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டதே" என்று வாய்விட்டு அழுதார்.
அவ்வளவு தூரம் ஜனாதிபதியின் விசுவாசியாக இருந்த எஸ்.பி.திஸநாயக்க ஜி.எல்.பீரிஸ், மஹிந்த
விஜயசேகர ஆகியோருடன் 1999 ஆம் ஆண்டு ஐ.தே.க. வுக்குத் தாவிய நாள்முதல் தனது நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றியிருந்தார். ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிரான பேச்சு கேட்பதானால் எஸ்.பி.திஸநாயக்க பங்குபற்றும் கூட்டத்துக்குத்தான் போகவேண்டும் என்ற ஒருநிலை நிலவியது.
இவரது இதே பாணியை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண கடைப்பிடித்து வந்தபோதும் அவ்வப்போது அவர் ஜனாதிபதியுடன் சமரசமாவது வழக்கம்.
இதனால் எஸ்.பி.திஸநாயக்கவின் மீதுமட்டும் ஜனாதிபதிக்கு தீராத காழ்ப்புணர்ச்சி என்றுமே இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க வென்று அமைச்சரவை பொறுப்பேற்றபோது சமுர்த்தி விவகார அமைச்சை எஸ்.பி.திஸநாயக்கவுக்குக் கொடுக்காமல் அவர் ஒரு 'ஊழல்பேர்வழி" என்று
ஜனாதிபதி குற்றச்சாட்டியமையும் கடைசியில் விசாரணைகளில் வென்று எஸ்.பி. மீண்டும் சமுரத்தி விவகார அமைச்சைப் பெற்றுக் கொண்டமையும் அமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்து அமைச்சரவைத் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதியிடம் பதவிப் பிரமாணப் பத்திரத்தை வாங்கும்போது ஜனாதிபதி அவரை நிமிர்ந்தும் பார்க்காத நிகழ்வும் இருவருக்கும் இடையில் நிலவிய தீராத அரசியல் பகையை எடுத்துக்காட்டும் சில உதாரணங்கள்.
அப்படிப்பட்ட வைரியான எஸ்.பி.திஸநாயக்கவைக் காத்திருந்து கழுத்தறுத்து விட்டார்; நீதித்துறைக்குள்ளும் புகுந்து விளையாடிவிட்டார் என்று ஜனாதிபதி மீது சேற்றை அள்ளிவீசியுள்ளனர் ஐ.தே.கவினர். எஸ்.பி.திஸநாயக்க
கைது செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றில் கொதித்தெழுந்த ஐ.தே.க.வினர் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளனர். அங்கு முன்னாள் அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ண பேசுகையில்-
'நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் எஸ்.பி.திஸநாயக்க கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் நீதித்துறையின் நிர்வாகத்திற்கு பயங்கரமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒருவர்
நடந்துகொண்டால் மாத்திரமே அதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கொள்ளலாம் என்பதை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் கடந்த காலங்களில் பல நாடுகளில் இந்த சட்டம் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கடந்த வாரம் யுனெஸ்கோ ஏற்பாட்டில் ஹரியானாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது"- என்று தொடங்கி ஸ்ரீலங்காவின் நீதித்துறையை தாறுமாறாக விமர்சித்திருக்கிறார். அவரது பேச்சின் பெரும்பாலான பகுதியை நாடாளுமனற உரைப்பதிவேடான ஹன்ஸாட்டிலிருந்து நீக்கும்படி சபாநாயகர்
உத்தரவிடுமளவுக்கு ராஜிதவின் உரை மிகக் கடுமையாக நீதித்துறையைச் சாடியிருந்நது. மகேஸ்வரன் உட்பட ஐ.தே.கவின் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றில் ஸ்ரீலங்கா நீதித்துறையை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேப்பிட்டிய படுகொலை
செய்யப்பட்டதிலிருந்தே புயல் வீச ஆரம்பித்த ஸ்ரீலங்கா நீதித்துறையில் ஓட்டைகள் உள்ளதாகவும் அதில் அரசியல் புகுந்து விளையாடுவதாகவும் ஜனாதிபதி தனது அரசியல் வைரிகளைப் பழிவாங்க நீதித்துறையைப் பயன்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டி ஐ.தே.க.வினர் அதன் கட்டமைப்பின் அத்திவாரத்தையே அசைக்க முற்பட்டுள்ளார்கள்.
தாம் மேற்கொள்ளும் அமைதி முயற்சிகளுக்குத் தெற்கில் எழுந்துள்ள இனவாத எதிர்ப்பைச் சமாளிக்க அரசியல் செல்வாக்குச் செலுத்தும் ஸ்ரீலங்காவின் நீதித்துறையைப் பயன்படுத்தி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 வருட
சிறைத் தண்டனை விதித்தது ஐ.தே.கவின் திரைமறைவுத் திட்டம்தான் என்று முன்னர் குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகையில், அதை மறுத்த ஐ.தே.க. 'சட்டமும் நீதியும் தமது கடமையைச் செய்கின்றன. நாமொன்றும் அதில் தலையிடவில்லை.தலையிடவும் முடியாது." என்று நியாயம் பேசியது. இன்று தமது தரப்பு அதே நீதித்துறையால் பாதிக்கப்படுகையில் நீதித்துறையை தாறுமாறாக
விமர்சிப்பதுடன் அதன் தீர்ப்புகளில் கறைபடிந்துள்ளது என்றும் விரல் நீட்டுகின்றது.
தென்னிலங்கையில் உள்ள இந்த அரசியல் சித்து விiளாட்டுக்கள் ஒருபுறமிருக்க, ஐ.தே.க. குற்றம் சாட்டுவதுபோல் உண்மையிலேயே நீதித்துறையில் அரசியல் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருக்கிறதென்றால் தற்போதைய சூழ்நிலையில் அதன் தேவை ஏன் எழுந்தது என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதாவது இன்று அமைதி முயற்சிகளினை ஆரம்பிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலையில் ஜனாதிபதி உள்ளார். பேச்சுக்களை ஆரம்பிக்கா விட்டால் மீண்டும் போரை ஆரம்பிக்கப் போவதாக புலிகள் எச்சரிக்கை விடுக்க, பேச்சை ஆரம்பித்தால்
தெற்கில் ஆயுதக்கிளர்ச்சி வெடிக்கும் என்று ஜே.வி.பி மறுபுறம் எச்சரிக்க, பேச்சுக்களை ஆரம்பிக்காவிட்டால் தற்போதைய அமைதிக்கு ஆதாரமான புரிந்துணர்வு ஒப்பந்தம் புஸ்வாணமாகிவிடும் என்று உலக நாடுகளுக்கு
ஸ்ரீலங்காவின் சீத்துவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டி அனுசரணைத் தரப்பும் அமைதி நிலையைக் கண்காணிக்கும் பணியாளர்களும் நெருக்கடியைக் கொடுக்க, அடுப்பிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாக ஆட்சியிலிருந்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் மிரண்டு போயுள்ளார் ஜனாதிபதி.
இந்நிலையில் தென்னிலங்கையில் சிங்கள மக்களும் சர்வதேச சமூகமும் அமைதி முயற்சியின் அடுத்தகட்டம் என்ன என்று எதிர்பார்த்துக் காத்திருக்க எஸ்.பி.திஸநாயக்க கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் நிலைமை தலைகீழாக
மாறியுள்ளது.
'அமைதி முயற்சிகள் என்று கூறிக்கொண்டு நாம் செய்ததைவிட என்ன புதிதாக சாதித்துவிட்டார்?" என்று கூறிக்கொண்டு ஜனாதிபதியின் நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டிருந்த ஐ.தே.க. தற்போதைக்கு அமைதி முயற்சி பற்றிச்
சிந்திக்கத் தலைப்படுமா என்பது சந்தேகமே. அது போலவே நாட்டின் சட்டமியற்றும் பிரதான அவையான நாடாளுமன்றம் இன்று எஸ்.பியின் கைதை மையமாகக்கொண்டு போர்க்களமாக மாறியுள்ளது. நாடெங்கும் ஐ.தே.க. ஆதரவாளர்கள் தமது எம்.பி. ஒருவர் சிறைப்படுத்தப்பட்டதைக் கேட்டு கொதித்துப்
போயுள்ளார்கள். மொத்தத்தில், அமைதி முயற்சியின் பாலிருந்த எதிர்பார்ப்பு தெற்கில் திசை திருப்பப்பட்டுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாளன்று ஆற்றிய உரையை அடுத்து நோர்வேயின் விசேட தூதுவர் சொல்ஹெய்மைத் தொடர்புகொண்ட ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க 'பிரபாகரனின் உரையால் மீண்டும் சண்டை வரப்போகிறதோ என்று எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலையைத் தணிக்க உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒன்றும் செய்யமுடியாதா?" என்று விநயமாகக் கேட்டிருந்தார்.
ஆகவே பிரபாவின் உரையால் எழுந்த பதற்றத்தை - பேச்சுக்களை ஆரம்பிக்காமலேயே - தணிப்பதற்கு தீவிரமாக இருந்த ஜனாதிபதி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைதான்; எஸ்.பி.திஸநாயக்க கைது சம்பவமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஐ.தே.க.
முன்வைக்கும் நீதித்துறை தொடர்பான குற்றச்சாட்டை எடுகோளாகக் கொண்டால் இத்தகைய சந்தேகத்தை இலகுவில் புறக்கணிக்க முடியாதுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதிக்கு இன்னொரு அவசர தேவையும் எஸ்.பி.யின் கைதுக்கு பிரதான காரணமாகியுள்ளது. அதாவது புலிகள் எச்சரித்துள்ளது போல் யுத்தம் ஆரம்பமானால் தென்னிலங்கை இளைஞர்களை வடக்கு கிழக்கில் பலிக்கடாக்கள்
ஆக்கும் தனக்கு இனிமேல் மக்கள் செல்வாக்கு கிட்டப்போவதில்லை என்பதும் அதனால் தேர்தல், அதில் வெற்றி ஆகிய விடயங்களும் இனிமேல் எட்டாக் கனிகளே
என்பதும் ஜனாதிபதிக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது. அத்துடன் ஜனாதிபதி பதவிக்காலமும் நிறைவுபெறும் தறுவாய் வந்துவிட்டது. இந்த வேளையில் தனது அரசியல் வைரிகளை அரசியல் லாபம் பெற்றுத்தரக் கூடியவாறு சங்காரம் செய்து பார்த்தால் என்ன? என்ற திட்டத்துடன் களத்தில்
இறங்கியுள்ளார் போலும்.
அவரது பட்டியலில் உள்ள இன்னொருவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க. ஜனாதிபதி சந்திரிகா அரசியல் விஞ்ஞானம் படித்து முடிக்காதவர் என்றும் அமைச்சரவைக்கு வரும்போது கைப்பையில் கமராவுடன் கைக்குண்டும் கொண்டுவந்தார் என்றும் பல குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதிக்கு எதிராக முன்வைத்தார். ஆட்சிக்கு வந்தபின்னர் ஜனாதிபதி அவரை 'அரிசி கொள்முதல்
செய்யும்போது ஊழல் புரிந்தார்" என்ற குற்றச்சாட்டில் கைது செய்ய முனைந்தார். ஆனால் அந்த முயற்சி ஜனாதிபதிக்கு வெற்றியைத்தரவில்லை.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைப் போலவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது அரசியல் வைரிகள் மீது பழிவாங்கும் படலத்தை கொஞ்சக்காலமாகத் தொடர்ந்துவந்தார். கருணாநிதி, வைகோ, நெடுமாறன், இந்து பத்திரிகை என்றெல்லாம் அவர் நடத்திய பழிவாங்கும் நடவடிக்கைகள் இன்று அரசியல் படுதோல்வி மற்றும் மத்திய அரசு சட்டத்தால் கொடுத்த சாட்டையடி என பலகாரணங்களால் ஒடுங்கியுள்ளன.
அவரைப்போலவே ஜனாதிபதி சந்திரிகாவும் மாறியுள்ளார்.
அப்படியானால் தென்னிலங்கையின் இந்த அரசியல் குத்துக்கரணங்கள், சித்து விளையாட்டுக்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு தமிழ் மக்கள் பொறுமை காக்க
வேண்டுமா? இனப் பிரச்சினைத்தீர்வு விடயத்தில் இன்னொரு தடவையும் காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியில் சிங்களதேசம் இறங்கிவிட்டதா?
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமா?
நன்றி:http://sooriyan.com/
|
|
|
|