Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 666 online users.
» 0 Member(s) | 662 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,660
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,763
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  விமர்சகர் தில்லைக்கூத்தனுக்கு நாட்டுப்பற்றாளர் விருது...!
Posted by: kuruvikal - 04-11-2005, 01:36 AM - Forum: தமிழீழம் - Replies (2)

அரசியல் விமர்சகர் தில்லைக்கூத்தனுக்கு நாட்டுப்பற்றாளர் விருது

மேல் மாகாண மக்கள் முன்னணியின் அரசியல் ஆலோசகரும், தமிழ்த் தேசியப் பணிக்குழுவின் தலைவரும், பிரபல அரசியல் விமர்சகரும், முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் சவூதி அரேபியா, சிங்கப்பூர், தொற்காசியாவிற்கான துறைமுக தரவியல் விஞ்ஞான துறையியல் ஆலோசகருமான மறைந்த தில்லைக்கூத்தன் (இளையதம்பி நடராஜா) அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை நேற்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழீழ தாயகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் தமிழீழ தேசியத் தலைவரையும் பற்றோடு மதித்து வாழ்ந்த ஒரு நாட்டுப்பற்றாளரை இழந்துவிட்டோம்.

தமிழினம் விடுதலை பெறவேண்டும் என்ற உயரிய உணர்வோடு எப்போதும் இயங்கிவந்தவர் நாட்டுப்பற்றாளர் இளையதம்பி நடராஜா (தில்லைக்கூத்தன்) அவர்கள்.

எத்தகைய இடையூறுகள், அச்சுறுத்தல்கள் எல்லாம் வந்தபோதும் தனது நிலைப்பாட்டில் எந்தத் தளர்வும் இன்றி உறுதியாக நின்று தமிழ்த் தேசியத்தின் பக்கம் குரல் கொடுத்தவர் தில்லைக்கூத்தன்.

தனது வாழ்களத்தைப் பொருட்படுத்தாமல் தமிழின விடுதலையை விரும்பி அதனை மதித்து, அதற்காக தனது எழுத்தையும் பேச்சையும் செயற்பாடுகளையும் ஒழுங்கமைத்து இயங்கி வந்தார் இவர்.

தமிழர் தாயகத்தை திட்டமிட்டு சிங்கள ஆட்சியாளர்கள் சிதைக்க முற்பட்டபோதேல்லாம் தில்லைக்கூத்தன் அவர்களின் எழுத்துக்கள் அதனை வன்மையாகக் கண்டித்தன. அதேவேளையில் தமிழினத்தை விழிப்பூட்டி எதிரிமீதான எச்சரிக்கையையும் கவனத்தையும் ஏற்படுத்தியது இவருடைய பேனா. இதற்கு இவருடைய கட்டுரைகளும் நூல்களும் சாட்சியாக இருக்கின்றன.

சிறந்த கல்வியாளராக இருந்த தில்லைக்கூத்தன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மீது பற்றும் மதிப்பும் கொண்டு அவருடைய தலைமையில் தனது விடுதலைப் பணியை மகிழ்வோடும் பெருமையோடும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மக்களின் பிரச்சினையையும் தமிழீழ போராட்டத்தையும் உலக அரங்கில் எடுத்துச் செல்லுவதிலும் தில்லைக்கூத்தன் தீவிரமாக உழைத்தார்.

தனது முதுமைக்காலத்திலும் கூட அவர் எந்தச்சோர்வுமின்றி தனது தமிழ்த்;தேசிய நிலைப்பாட்டில் நின்று ஒருதந்தைக்குரிய அரவணைப்போடும் உரிமையோடும் தனது பங்கையும் பலத்தையும் வழங்கினார்.

எல்லோரையும் தமிழீழ விடுதலைப் போராட்த்தில் இணைத்து போராட்டத்தைப் பலப்படுத்துவதில் அக்கறை கொண்டிருந்த தில்லைக்கூத்தன் அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் நாட்டுப்பற்றாளராக கௌரவித்துள்ளோம்.

இத்தகைய பெருமைகளுக்கும் மதிப்புக்குரிய பற்றாளர் தில்லைக்கூத்தன் அவர்களுக்கு எமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாட்டுப்பற்றாளர் தில்லைக்கூத்தன் அவர்களின் குடும்பத்தாருடைய துயரில் தமிழீழ மக்களுடன் நாமும் பங்குகொள்கிறோம்.

இவ்வாறு அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - புதினம்..!

சமீபகாலமாக இவர் தினக்குரல் வீரகேசரிப் பத்திரிகைகளில் தரமான அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...!- our view

Print this item

  சானியாவை குறி வைக்கும் சிம்பு!
Posted by: Mathan - 04-10-2005, 11:15 PM - Forum: சினிமா - No Replies

சானியாவை குறி வைக்கும் சிம்பு!

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sania-375.jpg' border='0' alt='user posted image'>

அப்பாவைப் போலவே ரொம்ப வம்பு புடுச்ச ஆளா வருவார் போலிருக்கும் சிம்பு.

தனக்கு ஜோடியாக டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவை போட என்று முயற்சித்து வருகிறார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவின் மீது சிம்புவுக்கு மட்டுமல்ல தெலுங்கு சினிமா உலகிலும் பயங்கர மோகம். கோடிக்கணக்கில் சம்பளம் பேசி அவருக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கு சினிமாக்காரர்கள் சானியாவை முயற்சி செய்வதைக் கேள்விப்பட்டு இந்தித் திரையுலக ஜாம்பவான்களும் பெட்டிகளுடன் ஹைதராபாத்துக்கு வந்து சானியா குடும்பத்தினரிடம் பேசிவிட்டுப் போய்விட்டார்கள்.

ஹைதரபாத் பெண்ணான தபு இந்தியில் ஒரு ரவுண்ட் வந்ததை விட மிக வெற்றிகரமாகவே உங்கள் மகளும் வருவார் என்று பேசியுள்ளனர். ஆனால், இப்போது முழுக் கவனத்தையும் டென்னிசில் காட்டி வரும் சானியா இப்போதைக்கு சினிமாவுக்கு வர மாட்டார் என்று கூறி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள், அவரது வீட்டில்.

ஆனாலும் சானியாவைத் தேடிப் போகும் சினிமாக்காரர்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியே தான் இருக்கிறது.

சானியாவுக்கும் அவரது வீட்டினருக்கும் கூட சினிமா மீது ஒரு கண் இருப்பதாகவே சொல்கிறார்கள்.

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/sania-380.jpg' border='0' alt='user posted image'>

டென்னிஸோடு நிறுத்திக் கொள்ளாமல் மும்பையில் பேஷன் ஷோக்களில் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார் சானியா. சும்மா ஷோவுக்கு போனோமா என்றில்லாமல் ரேம்ப்களிலும் ஏறி மாடலாக, ஒய்யாரமாக நடக்கவும் ஆரம்பித்துள்ளார்.

கூடவே முக்கியமான சில பிராண்ட்களுக்கு விளம்பர மாடலாகவும் ஒப்பந்தமாயிருக்கிறார். எல்லாமே சானியாவுக்கு பல கோடிகளை ஈட்டித் தந்துள்ளனவாம்.

டென்னிசில் தன்னால் முடிந்தவரை சாதித்துவிட்டு நிச்சயமாக அவர் சினிமாவுக்கு வருவார் என்றே தெரிகிறது.

இப்படி அவருக்கு இந்தி, தெலுங்கு திரையுலகில் வலை வீசப்பட்டு வரும் நிலையில் மன்மதன் சிம்புவுக்கும் சானியாவின் மீது கிரேஸ் வந்துவிட்டது.

மன்மதன் கொடுத்த வெற்றியால் கொஞ்சம் போல ஹெட் வெயிட் கூடியுள்ள சிம்பு இப்பெல்லாம் ரொம்பவே பெரிய லெவலில் தான் பேசுகிறார், முயற்சிக்கிறார்.

தொட்டி ஜெயாவுக்கு அடுத்தபடியாக, வல்லவன் என்ற படத்தில் 3 ரோல்களில் நடிக்கிறார். இதில் சிம்புவுக்கு காதல் சந்தியா, ரீமா சென், நயனதாரா ஆகிய ஜோடிகள்.

இதையடுத்து 'பி.எப்' சூர்யாவின் இயக்கத்தில் ஏசி என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இதில் சிம்புவுக்கு ஜோடி ஆஷின்.

இந்தப் படங்களைத் தொடர்ந்துஅடுத்த படத்தில் சானியாவுடன் ஜோடி சேர சிம்புவுக்கு ஆசையாம். இந்த 3 படங்களும் முடியவே ஒன்றரை வருடம் வரை ஆகிவிடும் என்பதால், அதற்குள் சானியாவையும் பேசி சரிக்கட்டலாம் என நினைக்கிறாராம்.

பேச்சோடு நிறுத்தாமல் அதற்கான வேலைகளிலும் சீரியஸாகவே இறங்கியிருக்கிறாராம் சிம்பு.

சானியாவை மையமாக வைத்தே ஒரு கதையைக் கூட தயார் செய்துவிட்டார் சிம்பு என்கிறார்கள்.

கொசுறு: மன்மதன் மிகப் பெரிய வசூலை குவித்ததால் வருமான வரித்துறையினரின் கண்காணிப்பில் இருக்கிறாராம் அதன் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்.

Thats Tamil

Print this item

  À¼¨ÄìÌ À¼¨Ä 100ÅÐ Å¡ÃÁ¡õ..
Posted by: Danklas - 04-10-2005, 11:07 PM - Forum: தமிழ்த் தொலைக்காட்சி இணையம் - Replies (9)

§¾¡Æ÷¸§Ç þñ¨¼ìÌ Ã£Ã£±ý ¦¾¡ø¨Ä¸¡ðº¢Â¢§Ä ´ù¦Å¡ÕÅ¡ÃÓõ ´Ç¢ÀÃôÀ¡¸¢È "À¼¨ÄìÌ À¼¨Ä" ±ñ¼ ¿¢¸ú 100Å¡ÃÁ¡õ.. «Ð ¦¾¡¼÷óÐ ¿¨¼¨Â ¸ð¼ ¯í¸¼ ¦À¡ñ Å¡ö¸Ç¡ø ƒ¡Ä¢Â¡ Å¡úòÐ ¦º¡øÄ¢Å¢Îí¸ÇÉôÀ¡... ¯í¸ (ÒÄò¾¢Ä)¿¼ì¸¢È «ì¸¢ÃÁí¸¨Ç, ¦Ä¡ûÙ¸¨Ç ÒðÎ ÒðÎ ¨Å츢ȡí¸û ±ø§Ä «Ð측¸Å¡ÅÐ «¨¾Â¡ÅÐ ¦ºöÂò¾¡É §ÅÏõ.. :wink:

¼ýÒÖÉ¡ö×ÌØ º¡÷À¢ø Å¡úòÐì¸Ùí§¸¡µµµµ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  சின்னாச்சியின் யாழ் பனங்குரங்கு அட சீ பனங்கிழங்கு !!!!!!!!!
Posted by: sinnappu - 04-10-2005, 06:22 PM - Forum: சமையல் - Replies (26)

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பனங்கிழங்கு சாப்பிடும் முறை

எப்படி என்று தெரியவில்லை சொல்லங்கோ பாப்பம்

தம்பி டே எங்கயப்பு நிக்கிறாய் கொக்காள் தேடுறாள் காலமை புல்லா பனங்கிழங்கை அவிச்சு வைச்சிட்டு எப்பிடி சாப்பிடுறது எண்டு தெரியாமல் அலையிறாள் வந்து சொல்லிக்குடப்பு

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  அமைதியின் புறா!
Posted by: hari - 04-10-2005, 05:31 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

<span style='color:red'>அமைதியின் புறா!</span>
<img src='http://www.cartage.org.lb/en/themes/Biographies/MainBiographies/E/Erpelding/canvaspope916small.jpg' border='0' alt='user posted image'>



அமைதியின் புறா ஒன்று,
அமரத்துவம் பெற்றுவிட்டது.

அனைத்தும் வல்லவன் உருவாக்கித் தந்த
அரியணை மீதமர்ந்து கோலோச்சிய திருமறை,
விடைபெற்றுக் கொண்டது.

"வெற்றியின் மணிமகுடம் சூடிட வா!" என்று
விண்ணக வேந்தன் விடுத்த அழைப்பினை ஏற்று,
நிகரற்றதோர் கொள்கைச் சிங்கம், இவ்வுலகை விட்டு
நிரந்தர ஓய்வில் சென்றுவிட்டது.

நித்திய இளைப்பாற்றியுடன்
நீடுதுயில் கொண்டிருக்கும் அந்த மாபெரும் ஜீவன்,
வேறு யாருமல்லர்:

எண்ணிய எண்ணியாங்கு எய்திய புண்ணியன் -
திண்ணிய நெஞ்சுடன் திருச்சபை நடாத்திய நாயகன் -
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்!

கண்ணியம் செறிந்த கத்தோலிக்கப் பெருங்குலத்தைக்
கால் நூற்றாண்டுக் காலமாய்க் கட்டிக் காத்த
களங்கமற்ற ஞான மேய்ப்பன் -
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்!

திருச்சுதன் சேசுவின் சிந்தைக்கினிய சேவகன் -
திருமங்கை மரியாளின் தீவிர பக்தன் -
ஜெபமும் தபமுமே தன் ஜீவநாடிகளாகத் தரித்த செம்மல் -
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்!

வேற்றாரும் போற்றிய விழுமிய பண்பாளன் -
மாற்றார்தம் கண்களிலும் நீர்கசிய வைத்த மாமனிதன் -
மாண்புமிகு பாப்பரசர் இரண்டாம் ஜான் பால்!

மதங்களையும் மொழிகளையும் கடந்த மாமேதை -
மண்ணகம் எங்கெணும் அமைதிப் பூங்காவாய் மாற்றிட
மருளாது உழைத்த மாமலை!
மனிதநேயம் பரிசளித்த மாமழை!
மாண்புமிகு பாப்பரசர் இரண்டாம் ஜான் பால்!

வத்திக்கான் திருத்தலத்தின் வரலாற்றில் மட்டுமல்ல -
மனித இனத்தின் வரலாற்றிலேயே இந்த
மகான் பதிவு செய்துள்ள மறக்கொணாச் சாதனைகளை,
உலகம் உன்னிப்போடு எண்ணிப் பார்க்கிறது...

போர்முனைகளை எதிர்த்துப் போர்புரிந்த புயல் அவர்!
புனிதம் ததும்பிடும் புன்னகையோடு
போர்மேகங்களிடையே வலம்வந்த புதையல் அவர்!

வாடிய பயிர்கண்டு வாடிடும் உயிர்கொண்ட
வான்புகழ் தமிழ்ப்பண்பின் வழுவாத சாயல் அவர்!

அமைதியின் வாளும் ஆன்மீகக் கேடயமும் கொண்டு
அயராது உஞற்றிய அறப்படை நாயகன் அவர்!

சுற்றுப் பயணங்களால் இந்த பூமிப் பந்து முழுவதையும்
சுற்றி வளைத்துக் கட்டிப்போட்ட காந்தம் அவர்!

உலகத் தலைவர்களையெல்லாம்
தன் உறைவிடத்திற்கு அழைத்து உபசரித்து,
உரிமையோடு உறவாடி,
உறுதியோடு உரையாடி,
உள்ளம் கவர்ந்துகொண்ட உத்தமன் அவர்!

இத்துணைச் சிறப்புடைய மகா சகாப்தம்,
இம் மண்ணை விட்டு மறைந்த போது...

கலங்கியது மானிடப் பெருங்குலம்!
"கலங்கரை விளக்கம் தன் கண்களை மூடிக்கொண்டதோ" எனக்
கலங்களே கலங்கிடத் தொடங்கின!
"செல்லும் பயணம் திசைமாறாது இருக்குமோ" என
ஆயர் குலங்கள் அல்லும் பகலும் ஆற்றாது அழுதன!

என்ன செய்வது! இயற்கை தன் பணியைச் செய்தது!
எனவே அழாமல் இருப்பது ஒன்றுதான் ஆறுதல் தருவது!

அப்படியொரு அபூர்வ ஆறுதலை நெஞ்சிலிருத்தி,
ஆண்டவனிடம் யாம்புரியும் வேண்டுதல் இதுதான்:

இறைவா!
இவர்போல் இன்னும் இடையர்கள் எமக்கு வேண்டும்!
இவ்வுலகுக்கு இடையறாத அமைதி வேண்டும்!!

தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

Print this item

  மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Posted by: eelapirean - 04-10-2005, 03:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. - 6.7 றிக்ரர் அளவில் எழுந்ததாக நம்பப்படும் நிலநடுக்கத்தையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 10 ஏப்பிரல் 2005 ஸ ஜ நிமல்ராஜன் ஸ
சுமாத்ரா கடற்பரப்பில் எழுந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தையடுத்துää இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சிறீலங்கா கடற்பரப்பில் மீண்டும் பாரிய கடல் அலைத்தாக்கம் ஏற்படலாம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 6.7 றிக்ரர் அளவில் எழுந்ததாக நம்பப்படும் நிலநடுக்கத்தையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துää இந்தியா கடற்பரப்புகளில் தற்போது கடற்கொந்தளிப்பு எழுந்துள்ளதாகவும்ää இன்னும் ஓரிரு மணிகளில் இலங்கை கடற்பரப்பை இந்த ஆழிப்பேரலைகள் தாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனினும் இது பாரிய தாக்கமாக இருக்காது எனவும் தெரியவருகிறது.


சுட்டது நிதர்சனம்

Print this item

  சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு..
Posted by: selvanNL - 04-10-2005, 02:15 PM - Forum: தமிழீழம் - Replies (7)

<b><span style='font-size:25pt;line-height:100%'>செல்லும் களம் எங்கும் வெல்லும் படையணி.....

*சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இன்று 14 வருட நிறைவு.
*தாயகத்து விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதலாவது மரபு வழிப் படையணி.</span>

வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியுமன்று அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திர பொரு ளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கின்றான் என்ற இந்த வரலாற்று வரிகள் தமிழீழ தேசியத் தலைவரால் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியால் வெளியிடப்பட்ட சுதந்திர விடுதலைப்போரின் கள வரலாறு ஆன நெருப்பாற்று நீச்சலில் 10ஆண்டுகள் என்ற நூலுக்கான ஆசிச் செய்தியில் உள்ளடக்கப்பட்ட முதல் வரிகளாகும் இந்த முதன்மையான வரிகளிலே ஒரு வரலாற்றின் உயிரோட்டத்தை நிதர்சனமாக எடுத்துக்கூறி வரலாற்றில் மனித செயற்பாட்டு சக்தியினை எடுத்துக்காட்டுகிறார் இதன்அடிப்படையிலே பார்த்தால் வரலாற்றை கருக்கொள் ளவைக்கும் அந்த மனித செயற்பாட்டாளர்கள் யார் என்பதற்கு விடை காண வேண்டி இருக்கின்றது.
சாதாரண ஒரு மனித வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட மனித செயற்பாடுகளை விஞ்சுகின்ற ஒரு வனாலேயே வரலாறு படைக்கப்படுகிறது. அப்படி செய்யப்படுகின்ற வரலாற்று வடிவம் வீரம் விவேகம் தியாகம் அர்ப்பணிப்பு என பலவாறாக விரிந்து செல்கிறது. இவை ஒவ்வொன்றிலுமாக ஒரு சிலமனிதர்கள் வரலாறு படைக்கிறார்கள் ஆனால் இவை அனைத்தையும் ஒன்று திரட்டி எல்லாவற்றிலுமாக ஒருவன் வரலாறு படைக்கிறான் என்று அதற்கான சொல் உலக அகராதியில் இல்லாவிட்டாலும் தமிழீழ அகராதியில் அதற்கான உயரிய சொல் மாவீரர் என உச்சரிக்கப்படுகின்றது. இந்த மாவீரர்களே வரலாற்றை படைக்கவும் வரலாற்றை மாற்றியமைக்கவும் உலகில் புதுப் பிறவிகளாக பிறந்துள்ளார்கள் என்பதை மறுக்கமுடியாது.

இந்த மாவீரர்கள் என்னும் மகத்தான வரலாற்றாளர்களின் வரிசையில் உச்சகட்ட வீரத்தோடும் தியாகத்தோடும் தமிழீழ தாயக விடுதலைக்காய் போராடி உயரிய உயிர்கொடை தந்தவன் லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி ஆவான் இந்த மாவீரனின் பெயரால் தமிழீழ தாயக விடுதலைப்போரின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப்படையணியே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆகும். தியாகத்தின் உச்சக்கட்ட வடிவிலானா விடுதலைப்போர் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த அந்த மாவீரனின் பெயரை தாங்கி உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விழுதூன்றி விரு ட்சமாகி விட்டதன் இரகசிய வரலாறு வீரமும் தியாகமும் அர்ப்பணிப்பும் உயரிய கொடையுமாகும். தாயக விடுதலைப்போரை முன்னெடுத்து செல்லவென கரந்தடிப்போரினை நடத் திவந்த எமது விடுதலை இயக்கம் மரபுவழிப்போரினை செய்யவேண்டிய தேவையினை அடிப்படையாக கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மரபுவழிப்போர் முறையினை அறிமுகம் செய்ய நினைத்தது.

ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு 1991ஆம்ஆண்டு பங்குனித் திங்கள் 25ஆம்நாள் (ஏப்ரல் 10ஆம்நாள்) சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிவரலாற்றில் தடம்பதிக்கத்தொடங்கியது. உலகில் உள்ள பல்லாயிரக் கணக்கான படையணிகளையும்விட வித் தியாசமாகவே இந்தப்படையணியின் அடித்தளம் மிகவலுவாக போடப்பட்டது. உலகிலுள்ள படைத்துறைசார் படையணிகளைவிட தாயக விடுதலைக்காக போராடி தமிழ் தேசியத்தின் சுதந்திரத்தை பெற்று எடுப்பதே தனது இலட்சியம் என்ற அடிப்படை உண்மையுடன் கட்டி எழுப்பப்பட்டது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆகும்.

பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற அடிப்படை கோட்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இவற்றையும் கடந்து அளப்பரிய தியாகங்களையும் மயிர்க்கூச்செறியும் வீரசாதனைகளையும் சொற்களால் சொல்லிவிடமுடியாத அர்ப்பணிப்புக்களையும் எழுத்தில் எழுதிடமுடியாத கொடைகளையும் செய் துமுடித்தது படையணியின் வீரம்செறிந்த வரலாறு சாதனைகளிலே படைக்கப்பட்டது சாதனையின் ஒத்தசொல் சாள்ஸ் அன்ரனி எனும் அளவிற்கு படையணியின் வீரம் மேலோங்கி விட்டது.

படையணியின் இந்தளவு வெற்றிக்கும் புகழுக்கும் சாதனைக்கும் காரணம் படையணியின் நாமத்தை சுமந்திருக்கும் லெப். சீலன் என்னும் மாவீரனின் உயிர்த்துடிப்புள்ள உயரிய வீரம் ஆகும். இவனது நாமத்தின் இரகசியமே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வெற்றிகளாகும்

<img src='http://img222.exs.cx/img222/67/a18fj.jpg' border='0' alt='user posted image'>

1991ஆம்ஆண்டு தொடக்கம் 2005ஆம்ஆண்டாகிய இன்றளவும் ஈழத்தின் சுதந்திர நாள்வரை சாள்ஸ் அன்ரனி சிறப்பு ப்படையணிப் போராளிகளுக்கு வீரத்தையும் விவேகத்தையும் தியாகத்தையும் தற்கொடை யையும் உயிரோட்டத்தில் உணர்வாக ஏற்றிவிட்டவை. லெப்.சீலன் எனும் அந்த மகத்தான வீரனின் வரலாற்று வரிகளாகும் என்னைச் சுட்டுவிட்டு என் துப்பாக்கியை அண்ணையிடம் கொண்டுபோய் கொடு இந்த வரிகளில் எத்தனையோ புனிதம் மிகுந்த கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. வீரம் அர்ப்பணிப்பு தற்கொடை தாயகப்பற்று தலைவரிடத்தில் உள்ள மேலானபாசம் என்ப வற்றையும்விட சிறிதளவேனும் மாறிடா இலட்சியப்பிடிப்பு என்பனவற்றின் அடிப்படையை ஒத்ததாக லெப்.சீலனின் நாமம் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு வழிகாட்டியாக அமை ந்துவிட்டது எனவேதான் தமிழீழதாயகத்தை மீட்டெடுக்க நடந்த அனைத்து களங்களிலும் உறுதியோடு இறுதிவரை அக்கினி ப்பிழ ம்புகளுக்குள் நின்று நீராடி வெற்றிகளைப் பெற் று தாயக விடுதலையை இலகுவாக்கியது. எனவேதான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு இயலாத ஒன்று இருக்காமல் போய்வி ட்டது

தேசியத்தலைவரின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து 1991ஆம்ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ தாயகத்தின் சுதந்திரத்திற்காக நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளை பெற்றது. ஒவ்வொரு களத்திற்குள்ளும் உள்நுழையும்போதும் வெற்றியுடன் திரும்புவோம் என்ற உறுதியுடனேயே களம் சென்று வெற்றியுடனேயே திரும்பிவந்த வரலாறே ஏராளம் உண்டு.

05.05.1991 அன்று சிங்கள தேசத்தின் ஆக்கிர மிப்பாளர்கள் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் என்ற இடங்களில் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்தை வன்னி விக்கிரம 2 பெயர் நடவடிக் கை மூலம் பெரும் எடுப் பிலான இராணுவ முன்னெடுப்பினூடாக ஆரம்பித்தனர் தான் நினைத்ததே நடக்கும் என்ற பேராசை யுடன் ஆக்கிரமிப்பை ஆரம்பித்த எதிரிக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமலே இருந்தது.

பல்லாயிரம் படைகளுடன் விமானங்கள் உலங்குவானூர்திகள் கவசவாகனங்கள் என தொடர்ந்து ஆட்லறி ஏவுகருவிகள் உந்துகை ணகள் என பல இராணுவ முன் னெடுப் பை எதிரி ஆரம்பிக்க சிறிலங்காவின் வடபிராந்திய இராணுவ த்த ளபதியாக இருந்த டென்சில் கொப்பேக்கடுவ தலை மையில் சிங்களப்படை களின் கெமுனு கஜபா படையணிகளின் 2டி விசன்களுக்கு மேலான படைகள் நக ர்வுகளை ஆரம்பித்தது விண்ணை முட்டிய வெடியோசையும் எறிகணை வெடிப்புக்களும் விமானக்குண்டுகளும் எதிரியின் மூர்க்கமான ஆக்கிரமிப்பை பறைசாற்றின எதிரியின் ஆள் ஆயுதப் பலத்தைவிட போராளிகளின் பலம் குறைந்து இருந்தது. என்றாலும் மனப்பலம் போராளிகளுக்கு உச்சத்தே இருந்தது அதைவிட தலைவரின் வழி நடத்தல் தந்திரோபாயம் மேலாக இருந்தது.

எதிரிமுற்றிலும் எதிர்பாராதளவு மின்னல் வேகத்தாக்குதலை ஆரம்பித்துவிட்டது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி எதிரி என்ன நடக்கிறது என்று சிந்திக்கமுன்னே அடிபட்ட நாயாய் ஓடத்தொடங்கிவிட்டான். வாய்ப்பேச்சில் வீராக இருந்த சிங்களத்தலைமைகள் வாய்பேசாது மௌனித்து நின்றன எதிரிக்கு பாரிய ஆள் ஆயுத சேதம் ஏற்பட எதிரி பின்வாங்கி ஓடிவிட்டான். சாள்ஸ் அன்ரனியின் முதலாவது தாக்குதலில் ஓடத்தொடங்கிய சிங்களப்படைகள் தொடர் ஓட்டத்திலே பங்கேற்கத் தொடங்கியது வன்னிவிக்கிரம -02இல் தோல்வியடையத் தொடங்கிய சிங்களம் இன்று வரை தோல்வியையே சந்திக்கிறது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் <span style='font-size:25pt;line-height:100%'>முதலாவது தாக்குதலில் அடிவாங்கிய சிங்களப்படைகள் இற்றைவரை சுமார் 82 தாக்குதலுக்குமேல் அடிவாங்கியே ஓய்ந்து போய் இருக்கின்றன. </span>

ஆனால் அன்றைய முதல் சமரில் தனது தந்திரோபாய யுக்தியினாலும் திறமையான பயிற்சியினாலும் எதையும் வென்றிடும் வீரத்தினாலும் மின்னல் வேகத்தாக்குதலால் வெற்றி கொண்டதுபோல் இன்றுவரை அதாவது வன்னிவிக்கிரம -02 தொடக்கம் பன்னிரெண்டாயிரம் எதிரிப்படைகளோடு 72 மணிநேரம் ஓயாது போரிட்டு வெற்றிகொண்ட தீச்சுவாலை சமர் வரை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வெற்றிமேல் வெற்றிபெற்று சாதனையின் உச்சத்திற்கு சென்று எதையுமே எதிர்கொள்ளும் சிறப்பு ஆற்றலை பெற்றது.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கே யுரிய வேகமும் வீரமுமே அதன் வெற்றிக்கு உதவிக்கரம் நீட்டியது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைந்து கொண்ட ஒவ்வொரு போராளியும் தனக்கென சாதனை ஒன்றினை தேர்ந்து எடுத்துக்கொண்டான் ஒவ்வொரு விடுதலைப் போராளியும் ஈழதேசத்தின் விடு தலை உணர்வின் உச்சத்தே சென்று விட்டமையினால் தாயக சுதந்திரத்திற்காய் தாம் ஒவ்வொருவரும் உயரிய தியாகம் செய்ய வேண்டுமென தன்னகத்தே சபதம் செய்து கொண்டனர் இவர்களின் இந்த உணர்வோடு படையணியில் ஏற்கனவே வீரகாவியமான மாவீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் உயிரோட்டமாக ஒவ் வொரு களத்திற்குள்ளும் உள்நுழையும் போராளிகள் வீராவேசத்துடன் போர்புரிந்து மயிர்க்கூச்செறியும் வீரசாதனை களை செய்து ஈற்றில் தம் முயிரையே கொடை யாக தந்து சாதனை படைத்தனர்.

<span style='color:blue'>* கொடிய இராணுவ முற்கம்பி வேலியில் படுத்து எனக்கு மேலால் ஏறி ஓடுங்கோ என்றான் ஒரு வீரன்

* என்னைப்பார்க்காமல் ஷெல்லை எனக்கு மேலால் அடியுங்கோ என்றான் ஒருவீரன்

* நான் போறன் பொறி வெடித்ததும் அதற்குப்பின்னால் வாருங்கள் என்றான் ஒரு வீரன்

* எதிரியின் இயந்திரத்துப்பாக்கி சடசடக்க நான் நேரே செல்கிறேன் நீங்கள் பக்கவாட்டாக நகருங்கள் என்றான் ஒருவீரன்

* எதிரியின் துப்பாக்கி சுட்டுக்கொண்டிருக்க தணல்போல் பழுத்திருந்த அவனது துப்பாக்கி குழலைப்பிடித்து இழுத்து சூட்டை நிறுத்தி ஓடுங்கடா உள்ளே என்றான் ஒருவீரன் </span>

இப்படியாக இன்னும் எத்தனையோ வீர சாதனைகளும் தியாகங்களும் அர்ப்பணிப் புக்களும் படையணியின் உயிரோட்டத்தில் கல ந்திருந்தமையினாலேயே எந்தக் களம்சென்றாலும் வெற்றி அல்லது வீரமரணம் என்ற கோட்பாட்டில் எதையும் வென்று இயலாது ஒன்று இருக்காது எமக்கு என்ற தாரக மந்திரத்திற்கு அமைய வெற்றியோடு நிமிர்ந்து நிற்கிறது.

சிங்கள எதிரியோடு வலிந்த தாக்குதல்களிலும் பாதுகாப்பு சமர்களிலும் சளையாது நின்று போராடியமையினாலேயே கடந்த வருடத்தில் இடம்பெற்ற தேசத்துரோகி கருணாவின் பச்சத்துரோகத்தனத்திற்கான சமரில் சொற்பநேரத்திற்குள் சாவு மணி அடிக்கமுடிந்தது எம் தேசத்தின் தலைவன் என்ன சொல்கிறானோ அதற்கு வேகமுடனும் விவேகமுடனும் செயல் வடிவம் கொடுத்து எதிர்கொள் ளப்போவது எரிமலை என்றாலும் சிறிதும் கலங் கிடாத மனவுறுதியுடன்களம் விரைந்து பகல் பாராது களமாடி பசி தாகம் நித்திரையை மறந்து மழை பனி வெய்யிலில் தோய்ந்து தனது கடமையை செய்துமுடித்து வெற்றிபெறும் அபாரசக்தி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்பு அம்சம் ஆகும்.

தமிழீழ தாயகத்தில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கேற்று குருதிதோய்ந்த களத்தில் செங்களம் ஆடி வீரமுடன் போர்புரிந்து 1058 மாவீரர்களின் சாதனைகளும் வீரம்செறிந்த சண் டைகளினதும் தியாகங்களினதும் கொடைக ளினதும் இவை அனைதினதும் பெறுமதியும் சொற்களால் சொல்ல முடியாதவை இவைகளை அறிந்து கொள்ளவேண்டுமாயின் சிங்கள எதிரியிடமே கேட்டுப்பார்ப்பது நல்லது சிங்கள எதிரிக்கே இந்த வீரர்களின் செயல் நன்றாக தெரிந்திருக்க வாய்ப்பு ஒன்று ஏனெனில் இந்த மகத் தான மாவீரர்களின் செயலை நேரே நின்று அனுபவித்தவன் எதிரியே ஆவான்

கரந்தடிப்படையாக இருந்த எமது விடுதலைப்போராட்டம் மரபுவழிப்படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கிய நாள் முதல் தாயக விடுதலைப் போராட்டம் தளர்வி ல்லா உறுதிகொண்ட புதிய மூச்சாய் எழுந்து நிற்கின்றது என்றால் மிகையா காது சொன்னதை சொன்னபடியே சொல்லிய இடத்தில் சொல்லி யநேரத்தில் செய்து முடிக்கும் திறன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் இருந்தமையினாலேயே செல்லும் களம் எங்கும் வெல்லும் படையணி ஆகி ஈழப்போராட்டத்திற்கு மிகை யானதோர் உந்துசக்தியாக திகழ்கிறது.</b>

¿ýÈ¢ ¾¢ÉìÌÃø.. :!:

-----------------------------------------------------------------------

[b]º¡ûŠ «ýÃÉ¢ À¨¼À¢Ã¢×ìÌ ±ÉÐ ÁÉÁ¡÷ó¾ Å¡úòÐì¸û..
¦¾¡¼÷óÐ Å£Ú ¿¨¼ §À¡¼ ÒÄò¾¢§Ä þÕìÌõ þ¨Ç»÷¸Ç¡¸¢Â ¿¡í¸û ¯í¸éìÌÀ¢ýÉ¡ø Ð¨É ¿¢üô§À¡õ. :!:

Print this item

  வெளிச்சக் குப்பை
Posted by: இளைஞன் - 04-10-2005, 02:00 AM - Forum: கவிதை/பாடல் - Replies (21)

<b>வெளிச்சக் குப்பை</b>

<img src='http://www.yarl.com/forum/files/velichcha.jpg' border='0' alt='user posted image'>

இரவுகள் அழகாய்ச் சிரிக்கின்றன
வா வா தோழி
சென்று பார்ப்போம்

எடிசனின் அழகிய கண்டுபிடிப்பு
வீதியில் இருக்கு
நின்று பார்ப்போம்


என் கைகள் பற்றி வெளியே வா
இரவுகள் கழியச்
சுற்றி வருவோம்

வேகமாய் விரைந்து தோழியே வா
மறைவுகள் வெளிக்க
வலம் வருவோம்


தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?

போலி வாழ்க்கை வாழ்தல் முடித்து
பொய்யில் சேர்தல்
பழமை துடைப்போம்


வெளிச்சக் குப்பை கிளறிக் கிளறி
எங்கள் தீனி
கண்டு பிடிப்போம்

நெருப்பில் மூழ்கி நீரில் காய்ந்து
காற்றில் எரிந்து
உலகம் தின்போம்


நன்றி: அப்பால் தமிழ்

Print this item

  போப்பாண்டவருக்கு அஞ்சலி செலுத்திய பிடல் காஸ்ட்ரோ
Posted by: spyder12uk - 04-09-2005, 10:58 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

மறைந்த போப்பாண்டவருக்கு நினைவஞ்சலி செலுத்த கம்யூனிச நாடான க்யூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ தலைநகர் ஹவானாவில் நடந்த ஒரு பிரார்த்தனைக்கூட்டத்துக்கு சென்றது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

1992 வரை அதிகாரபூர்வமாகவே கடவுள் நம்பிக்கையற்ற நாடாக இருந்து வந்த கம்யூனிச நாடான க்யூபாவிற்கு , சில ஆண்டுகளுக்கு முன்னர் போப்பாண்டவர் ஜோன் போல் விஜயம் செய்து , அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளைப்பற்றி விமர்சனம் செய்தார்.


மதத்தலைவர் மார்க்சியவாதியுடன்
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப்பிறகு க்யூபாவிற்கு பொருளாதார உதவிகள் செய்ய பெரிய நாடுகள் இல்லாதிருப்பது, க்யூபாவே ஒரு க்த்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாக இருப்பது போன்றவை காஸ்ட்ரோ, ரோமன் கத்தோலிக்க திருச்சபையுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக இவ்வாறு நடந்து கொள்ளச்செய்திருக்குமா?

இவ்வாறாயின், கம்யூனிஸ்ட் அரசுகளை, கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் விமர்சித்து வந்த , ரோமன் கத்தொலிக்கத் திருச்சபையின் அணுகுமுறையில் மாற்றம் வருமா?

இத்தகைய கேள்விகளை மார்க்ஸிய சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை மற்றும் தமிழ் நாடு கத்தொலிக்க டையொசீசன் குருமார்கள் கவுன்சிலின் தலைவர் வணக்குத்திற்குரிய அந்தொணி மாணிக்கம் ஆகியோரின் முன் வைத்தோம் .
http://www.bbc.co.uk/tamil/highlights/stor...astropope.shtml

Print this item

  உறவுப்பிச்சை தாருங்கள்.....
Posted by: KULAKADDAN - 04-09-2005, 10:55 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

உறவுப்பிச்சை தாருங்கள்.....


<b>கனவொன்று கண்டேன்
அது கவியொன்றைக் கக்கியது
கனவின் சொர்க்கங்கள்
காட்டிய முகவரிக்குரியவ(ர்)ள்
நீயானால்
என் இதயம் சுரப்பதெல்லாம்
உனக்காகத்தான்...

தேசத்தெருக்களில் வீசும்
சோகக்காற்றின் கொடுரத்தால்
பஞ்சாய்ப் பறந்து
நான் தனிமையாய் விழுந்த இடம்
ஜேர்மனி....

நேசம்...உறவு...பாசம்...பந்தம்....
எனும் வார்த்தைகளின்
அர்த்தங்களையே மறந்தவனாய்.....

தனிமை எனும்
இரும்புக்கரங்களால் நசுக்கப்பட்டவனாய்.....
என் இதய அணுக்களுடன் சங்கமிக்க
எனக்காய்ப் பிறந்தவளைத் தேடியவனாய்....

பிறந்த மண்ணின் வாசனையை
நுகரத்துடிக்கும் மானுடனாய் நான்.....

ஐரோப்பிய மக்களின் சல்லாப வாழ்க்கை - எனக்கு
நரிகளின் ஊளையிடுதல்களாகவும்
ஆந்தைகளின் அலறல்களாகவும்.....
தொடைக்குமேல் துண்டுகட்டும் தேசமிது....
வெம்பிப் பழுத்த கூட்டம்
உதடுகள் உரசுவதே
இன்பமெனும் தேசமிது....

அன்பும் பாசமும் அன்னியப்பட்டு
உடலின் உறவுகள் மட்டுமே
மேலோங்கும் தேசமிது...
நேற்று....இன்று....நாளை....
மரம் விட்டு மரம் தாவும் மந்திகளாய்....
இதயம் விட்டு இதயம் தாவும் இளசுகளின் தேசமிது.....

ஐரோப்பா ....
பெயரளவில் பெரியதுதான்
காரும் , வீடும் , கம்பியூட்டர் வாழ்க்கையும்தான் - ஆனால்
மனசு மட்டும் தெருவோரச்சாக்கடையினுள்
தத்தளிக்கிறது

பகலில் குருடனாய்.... இருட்டில்
பார்வையுடையவனாய்....
விரக்தி எனும் ஊர்வலத்தில் நகரும் சோகத்தேராய்....
நேசத்திற்காய்த் தவிக்கும் மானுடனாய் நான் ....

தனிமைச் சிறையில் சிக்கி
இருபத்து இரண்டு வயதில்
உயிரறுந்து போகும் எனக்கு
யாராயினும் உறவுப்பிச்சை தாருங்கள்.....!
அணணனாய்....தம்பியாய்.....நண்பனாய்.....
நேசத்திற்குரியவனாய்....
என்னை எதுவாயினும்
நினைத்துக் கொள்ளுங்கள்

எனக்குத் தேவையெல்லாம்
"உறவு"
எனும் உயிர்ப்பொருள்தான்

கிடைக்குமா இல்லையா...?
என் சுவாச அணுக்கள் துடிக்க
செயற்பட வேண்டுமாயின்
உங்கள் பதில்களில் தான்....

(நன்றி: இளைஞன் 1994)</b>
நன்றி

ரமேஸ் வவுனியன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->முதலே இணைத்திருந்தாரோ தெரியலை புது உறவுகளுக்காக..........

Print this item