Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெளிச்சக் குப்பை
#1
<b>வெளிச்சக் குப்பை</b>

<img src='http://www.yarl.com/forum/files/velichcha.jpg' border='0' alt='user posted image'>

இரவுகள் அழகாய்ச் சிரிக்கின்றன
வா வா தோழி
சென்று பார்ப்போம்

எடிசனின் அழகிய கண்டுபிடிப்பு
வீதியில் இருக்கு
நின்று பார்ப்போம்


என் கைகள் பற்றி வெளியே வா
இரவுகள் கழியச்
சுற்றி வருவோம்

வேகமாய் விரைந்து தோழியே வா
மறைவுகள் வெளிக்க
வலம் வருவோம்


தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?

போலி வாழ்க்கை வாழ்தல் முடித்து
பொய்யில் சேர்தல்
பழமை துடைப்போம்


வெளிச்சக் குப்பை கிளறிக் கிளறி
எங்கள் தீனி
கண்டு பிடிப்போம்

நெருப்பில் மூழ்கி நீரில் காய்ந்து
காற்றில் எரிந்து
உலகம் தின்போம்


நன்றி: அப்பால் தமிழ்


Reply
#2
வித்தியாசமா இருக்கு........... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
Quote:வெளிச்சக் குப்பை கிளறிக் கிளறி
எங்கள் தீனி
கண்டு பிடிப்போம்

நெருப்பில் மூழ்கி நீரில் காய்ந்து
காற்றில் எரிந்து
உலகம் தின்போம்

வரிகள் காற்றில் இறங்க
தோழியின் கரம் தோள் கழன்று...
தனி வழி காத்திருக்குத் தோழனே
சென்றுவா... புதிய உலகம் கண்டுவா...!
எதிர் முனையில் என் பயணம்
தோழி தெளிவாய்...
தனக்கொரு தனி வழி...
அதே வெளிச்சக் குப்பைகுள்
தேடிய படி...!
முடிவில்....
பயணங்கள் தனி வழி
இலக்குகள்...???! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
அருமை குருவி. இது தான் உண்மை
.
.!!
Reply
#5
Quote:தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?
:mrgreen: :mrgreen: :mrgreen: ஆகா இது தான் புதிய உலகமா..??? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
தங்கை தமிழ் புதியதோர் உலகம் செய்யும் இளைஞனின் வார்த்தையில் என்னதாயே தவறு கண்டீர் ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#7
aswini2005 Wrote:தங்கை தமிழ் புதியதோர் உலகம் செய்யும் இளைஞனின் வார்த்தையில் என்னதாயே தவறு கண்டீர் ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நீங்க பொதுவா கருத்தெழுதிறனீங்களா இல்ல... சில கருத்துக்களுக்கு உங்க ஆதரவைச் சொல்ல வாறனீங்களா...இல்ல...அப்படித்தான் தெரியுது...உங்க நடவடிக்கைகள்... அதுதான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
குருவியாரே இங்கு கருத்துக்கள் தங்களுக்கு சார்பானவர்களுக்கு தக்க மாதிரி வைக்கப்படுகிறது

<b>தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?</b>
ஒரு பெண்மணி இந்தக் கருத்துக்களை ஆதரிக்கின்றார் என்றால் எப்படி எங்கள் இனம் முன்னேறுகின்றது ஆகா வேதனைப்படவேண்டியதுதான்.. குருவியாருடைய பதில் எங்கள் பெண்மணிகளை தலை நிமிர வைத்திருக்கிறது நன்றிகள்.
<b>தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?</b>

***************************************************
<b>தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?</b> நான் இப்படி கேட்பதற்காக நீர் தப்பாக நினைக்கமாட்டீர் ஏனென்றால் நீர்தான் புதுமைப்பண் எதற்கும் தயார். இந்த சடங்குகள் எல்லாம் எதற்கு காத்திருப்பேன் உனக்காக உன் உடன்பாட்டுக்காய் காத்திருக்கிறேன்.

********************
நீக்கப்பட்டுள்ளது. வியாசன் இப்படியான கருத்துக்களை களத்தில் தவிர்ப்பது நல்லது தேவையில்லாத கருத்து மோதல்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும். --யாழினி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
வியாசன் அண்ணா இது நல்லாய் இல்லை.. :evil: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
நன்றி யாழினி
தமிழினி உங்களுக்கு கோபம் வருகுது. ஆனால் பெண்ணுக்கு வக்காலத்து வாங்;குகிறதுக்கு பிறவி எடுத்தது போல கருத்துக்களை எழுதுகிறவர்கள் இப்படியான கருத்துக்களுக்கு வக்காலத்து வாங்குகிற குரத்துக்களை வைக்கின்றபோது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஒரு பெண் அடக்கமாக இருந்தால்தான் கையெடுத்து கும்பிடத்தோன்றும்.. அதை விடுத்து அரைகுறையாக திரிந்தால் கைதட்டிக் கூப்படத்தான் தோன்றும். சம்மந்தப்பட்டவர் எவ்வளவு முரண்பாடான கருத்துடையவர் என்பதை கீழேயுள்ள இணைப்பில் சென்று பாருங்கள் அங்கு எழுதியதற்கும் இங்கு எழுதுவதற்கும் எவ்வளவு முரண்பாடுஎன்பதை. என் கருத்துக்கள் யாழினியையும் தமிழனியையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்..
நான் இதுவரை களத்தில் அப்படியான கருத்துக்களை வைக்கவில்லை..இவ்வளவு முன்னேற்றகரமாக பெண்கள் தயாராக இருக்கின்றபோது. நாங்களும் மாறித்தானே ஆகவேண்டும்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#11
வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றிகள்.


Reply
#12
Quote:வெளிச்சக் குப்பை கிளறிக் கிளறி
எங்கள் தீனி
கண்டு பிடிப்போம்

நெருப்பில் மூழ்கி நீரில் காய்ந்து
காற்றில் எரிந்து
உலகம் தின்போம்


எங்கும் குப்பைகள்
எதிலும் குப்பைகள்
புதியதோர் உலகிலும் குப்பைகளா.?
ஆம்.., வெளிச்சக்குப்பைகள்
படைத்தது இளைஞன்
வாழ்துவது நாம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் தொடருங்கள் இளைஞன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#13
Quote:தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?

போலி வாழ்க்கை வாழ்தல் முடித்து
பொய்யில் சேர்தல்
பழமை துடைப்போம்


இப்ப என்ன சொல்றீங்கள் இளஞன் அண்ணா? தாலி கட்டகூடாது எண்டுறீங்களா? பதிவுத் திருமணமும் வேண்டாமெண்டுறீங்களா? அல்லாட்டி ஒண்டுசேரவே வேண்டாம் எண்டுறீங்களா? ஒண்டுமே புரியேல. புரியாத மாதிரி எழுதினாத்தான் கவிதையோ :roll:
Reply
#14
மறைமுகமாக.... நவீன யுக தலைமுறையினரின் தலையில் குட்டு வைப்பதாகவே படுகிறது இக் கவிதை! :wink: :wink:
:: ::

-
!
Reply
#15
poonai_kuddy Wrote:
Quote:தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?

போலி வாழ்க்கை வாழ்தல் முடித்து
பொய்யில் சேர்தல்
பழமை துடைப்போம்


இப்ப என்ன சொல்றீங்கள் இளஞன் அண்ணா? தாலி கட்டகூடாது எண்டுறீங்களா? பதிவுத் திருமணமும் வேண்டாமெண்டுறீங்களா? அல்லாட்டி ஒண்டுசேரவே வேண்டாம் எண்டுறீங்களா? ஒண்டுமே புரியேல. புரியாத மாதிரி எழுதினாத்தான் கவிதையோ :roll:

அதனை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் பூனைக்குட்டி. நானல்ல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Reply
#16
Kurumpan Wrote:மறைமுகமாக.... நவீன யுக தலைமுறையினரின் தலையில் குட்டு வைப்பதாகவே படுகிறது இக் கவிதை! :wink: :wink:

விளங்கவில்லை. எதனை வைத்து சொல்கிறீர்கள்?


Reply
#17
இளைஞன் Wrote:<b>வெளிச்சக் குப்பை</b>

<img src='http://www.yarl.com/forum/files/velichcha.jpg' border='0' alt='user posted image'>

இரவுகள் அழகாய்ச் சிரிக்கின்றன
வா வா தோழி
சென்று பார்ப்போம்

எடிசனின் அழகிய கண்டுபிடிப்பு
வீதியில் இருக்கு
நின்று பார்ப்போம்


என் கைகள் பற்றி வெளியே வா
இரவுகள் கழியச்
சுற்றி வருவோம்
வேகமாய் விரைந்து தோழியே வா
மறைவுகள் வெளிக்க
வலம் வருவோம்


தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?
போலி வாழ்க்கை வாழ்தல் முடித்து
பொய்யில் சேர்தல்
பழமை துடைப்போம்


வெளிச்சக் குப்பை கிளறிக் கிளறி
எங்கள் தீனி
கண்டு பிடிப்போம்

நெருப்பில் மூழ்கி நீரில் காய்ந்து
காற்றில் எரிந்து
உலகம் தின்போம்


நன்றி: அப்பால் தமிழ்

நவநாகரிகம் என்ற போர்வையில் எமது கலாச்சார பண்பாடுகள் பகலிலேயே திருட்டுப்போகிறது. இதற்கு வழி சமைத்துää சிவப்பு கம்பளமும் விரிக்க தயாரக இருக்கிறது இளைய யுகத்தின் ஒரு பிரிவு. அவர்களுக்கு குட்டு வைத்த கவிதையாகவே கருதுகிறேன் இக்கவிதையை!
:: ::

-
!
Reply
#18
ஓகோ


Reply
#19
இளைஞன் Wrote:ஓகோ
இந்த ஓகோ என்ன சொல்லுது. வெளிச்சக்குப்பையின் நேரடியான பொருள் கொள்ளல் சரியெண்டுதா.............அல்லது எதிர் மறை பொருள் கொள்ளல் சரியெண்டுதா..................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#20
அதெப்பிடி எனக்குத் தெரியும். கவிஞனிடம் தான் கேட்க வேண்டும். :roll:


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)