Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 774 online users.
» 0 Member(s) | 772 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,660
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,268
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,764
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  அறிவியலும் ஓவியமும்
Posted by: kuruvikal - 04-14-2005, 04:37 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (6)

<img src='http://img41.echo.cx/img41/2629/inv18ay.jpg' border='0' alt='user posted image'><img src='http://img41.echo.cx/img41/5466/inv39ib.jpg' border='0' alt='user posted image'>

சில X கதிர்ப்படங்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  பிரபா- எம்.ஜி.ஆர் உறவு
Posted by: vasisutha - 04-14-2005, 04:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<b>மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். அவர் வழங்கிய பேருதவிகள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியிலும் விரிவாக்கத் திலும் என்றுமில்லாத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தின. தமிழீழ விடுதலைக்கு வித்திட்ட மாமனிதராம் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எந்த வழிகளில் எப்படியாக உதவினார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் நமக்காக இங்கே தருகின்றார்.(ஆ-ர்) </b>
<img src='http://semparuthi.com/x/images/dec04/mgr.gif' border='0' alt='user posted image'>

பகுதி 12
முதலமைச்சருடன் முடிந்து விடப் பார்க்கிறார் என்பது தெளி வாகியது. எம்.ஜி.ஆர் எதுவுமே பேச வில்லை. என்னைப் பரிதாபமாகப் பார்த்து கொண்டிருந்தார்.

"எண்பத்து மூன்று இறுதிப் பகுதியிலிருந்து பல வருடங்களை பிரபாகரன் இந்தியாவில் கழித்து விட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. இராணுவப் பயிற்சித் திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் தான் அவர் இங்கு வந்தார். இங்கு தங்கியிருந்த காலத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்ட களத்திற்கு செல்ல வேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டு விட்டது. தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்ல வேண்டி நேர்ந்தது. சென்னை யிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்ல வேண்டும். பிரபாகரனுக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாக பல சக்திகள் செயற் படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழி தீர்ப்பதற்காக வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்புக் கருதியே அவரது பயணத்தை இரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடி வெடுத்தது.ஔ இப்படியாக ஒரு விளக்கம் கொடுத்தேன்.

அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. "சரி, பிரபாகரன் தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, இரகசியமாக யாழ்ப்பாணம் போய் விட்டார். நீங்களாவது முதலமைச் சருக்கு அத்தகவலை தெரி வித்திருக்கலாம் அல்லவா?ஔ என்று கூறி என்னை மடக்க முயன்றார். முதலமைச்சரும் என்னைக் கேள்விக் குறியுடன் நோக்கினார். உண்மையைச் சொல்வது தான் ஒரே வழியாகத் தென்பட்டது.

முதலமைச்சரைப் பார்த்துச் சொன்னேன். "சார், பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும் கூட தெரியப்படுத்த வில்லை. மிகவும் இரகசியமான காரியங்களை இரகசியமாக செய்து முடிப்பது தான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுத்தான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார் பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னராக நீங்கள் என்னை இங்கு அழைத்து விட்டீர்கள்ஔ. என்றேன். சகுனியார் வாயடைத்துப் போய் இருந்தார்.

முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. தலைவர் பிரபாகரன் தாயகம் திரும்பிய தன் அவசியத்தை அவர் உணர்ந்து கொண்டார். அந்தப் பயணம் குறித்து இரகசியம் பேணப்பட்ட தையும் அவர் புரிந்து கொண்டார். மத்திய அமைச்சர் சிதம்பரம் முடிந்து விட முனைகிறார் என்பதையும் விளங்கிக் கொண்டார்.

"பிரபாகரன் செளக்கியமாக இருக்கிறாரா?" என்று கேட்டார் எம்.ஜி.ஆர். "ஆமா சார்" என்றேன்.

"அவரைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள்" என்றார். நான் விசாரித்ததாகவும் சொல்லுங் கள் என்றார். சந்திப்பு சுமூகமாக முடிந்தது. முகத்தை தொங்கப் போட்டபடி இருந்தார் சிதம்பரம்.



1987ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத் திடப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக நானும் பிரபாகரனும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை புதுடில்லியில் சந்தித்தோம். அதுவே எமது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்ந்த இறுதிச் சந்திப்பிலும் எம்.ஜி.ஆர் அவர்கள் எமக்கு அனு சரணையாக நின்று எமது நிலைப் பாட்டை ஆதரித்தார். புதுடில்லியில் நிகழ்ந்த அந்த சந்திப்பின் பின்னணியே ஒரு விசித்திரமான கதை.

1987 ஜூலை மாதம் 24ஆம் திகதி. தலைவர் பிரபாகரன், யோகரத்தினம் யோகி, திலீபன் ஆகியோருடன் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் முதற் செயலர் ஹர்தீப் பூரியையும் ஏற்றிக் கொண்டு இந்திய விமானப் படையின் உலங்குவானூர்தி ஒன்று சுதுமலை அம்மன் கோவில் மைதானத்திலிருந்து சென்னை புறப்பட்டது. பிரபாகரனும் அரசியல் துறையைச் சேர்ந்த போராளிகளும் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படு கிறார்கள் என்றும், அங்கு சென்று அவர்களைச் சந்திக்குமாறும் எனக்கு தகவல் தரப்பட்டது. மீனம்பாக்கம் சென்றபொழுது அவர்கள் எனக்காக காத்து நின்றார்கள். நாம் அவசரமாக புதுடில்லி செல்ல வேண்டும் என்றும், ஒரு முக்கிய விடயமாக பிரதமர் ராஜீவ் காந்தி எம்மைச் சந்திக்க விரும்புவதாகக் கூறிய இந்தியத் தூதரக அதிகார திரு.பூரி தம்மைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்த தாகவும் பிரபாகரன் சொன்னார். இதில் ஏதோ தில்லு முல்லு இருப்ப தாக எனக்குத் தோன்றியது. எனினும் இந்தியப் பிரதமர் விடுத்த அழைப்பை நிராகரிப்பது நாகரீகம் அல்ல. எதற்கும் புதுடில்லி சென்று பார்ப்போமே என நினைத்தேன். ஒரு இந்திய விமானப்படை விமானத்தில் புதுடில்லி சென்றோம். அங்கு அசோக்கா விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டோ ம்.

அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி. புதுடில்லியில் மிகவும் பிரபல் யமானது. விமான நிலையத்திலிருந்து ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்று கொண்டி ருந்த எமது வண்டி விடுதியின் முன்வாயிலை அடைந்தபோது அங்கு பல நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ அதிரடிப் படையினர் (கறுப்புச் சீருடை அணிந்த கரும் பூனைகள்) விடுதிக் கட்டடத்தைச் சூழ நிற்பதைக் கண்டோம். நாம் சந்தேகத்துடன் ஒருவரை ஒருவர் பார்ப்பதைக் கண்டதும், 'உங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப் பட்டிருக்கிறது' என்றார் பூரி.

கரும்பூனைகள் சூழ விடுதியின் அதியுயர் மாடிக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். ஆளுக்கு ஒரு அறையும், கலந்துரையாடு வதற்கு ஒரு கூடமுமாக அந்த மாடியின் ஒரு பகுதி எமக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. எமது அறைகளுக்கு முன்பாகவும் மாடிபூராகவும் ஆயுதம் தரித்த கரும்பூனைகள் பாதுகாப்பாக நிலையெடுத்து நின்றனர். சிறிது நேரத்தில் இந்திய புலனாய்வு உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்தார். எமது பாதுகாப்புக் குறித்து நாம் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருப் பதாகவும் விடுதியை விட்டு வெளியேற எமக்கு அனுமதியில்லை என்றும் தொலைபேசி மூலம் வெளியுலகத் துடன் தொடர்பு கொள்ள முடியாதென்றும் எமது நிலைமையை தெளிவுபடுத்தினார். சற்று நேரத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திரு.டிக்சிட் எம்மை சந்திப்பார் என்றும் நாம் புதுடில்லிக்கு அழைக் கப்பட்டதன் அரசியல் காரணத்தை அவர் விளக்கிக் கூறுவார் என்றும் சொன்னார். இந்திய அரசின் பொறிக்குள் சிக்கி விட்டோம் என்பது புலனாகியது. எதுவுமே செய்ய முடியாத நிர்க்கதியான நிலை. இந்தியத் தூதுவருக்காகக் காத்திருந்தோம்.

ஒரு மணிநேரம் கழித்து, திரு.டிக்சிட் அங்கு வந்தார். முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு, தனது சுங்கானைப்பற்ற வைத்து பின்னர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார். ஓஇந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் மத்தியில் ஒரு ஒப்பந்தம் ஏற் பட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி வெகு விரைவில் கொழும்பு சென்று அந்த ஒப் பந்தத்தில் கைச்சாத்திட இருக்கிறார். இந்த ஒப்பந்தம் தமிழரின் இனப் பிரச்சினைக்கு ஒரு நல்ல, நியாயமான தீர்வை வழங்குகிறது. இவ்வொப்பந்தத்தை நீங்கள் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஔ என்று அடித்துக் கூறினார். பின்பு தனது பைக்குள்ளிருந்து ஒப்பந்தத்தின் பிரதி ஒன்றை எடுத்து என்னிடம் கையளித்து விட்டு, அதனை மொழி பெயர்த்து பிரபாகரனுக்கு விளங்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இரண்டு மணிநேரத்தின் பின்பு தான் திரும்பி வருவதாகவும் அப்பொழுது ஒரு முடிவுடன் இருக்குமாறும் கூறியவர் எமது பதிலுக்காகக் காத்திராது அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக மொழி பெயர்த்து பிரபாகரனுக்கு விளங்கப் படுத்தினேன். உப்புச்சப்பற்ற மாகாண சபைத்திட்டம் ஒன்று இனப்பிரச்சினைக்கு தீர்வாக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் அதிகாரங்கள் மத்திய அரசியடம் குவிக்கப்பட்டிருந்தது. வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படுமென விதிக்கப் பட்டிருந்தது. மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரமும் ஜனாதபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட 72 மணி நேரத்திற்குள் எமது ஆயுதத் தளபாடங்கள் இந்திய அமைதிப் படைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டிருந்தது. எமக்குத் தரப்பட்ட இரண்டு மணிநேர கால அவகாசத்தில் ஒரு தீர்க்கமான முடிவைப் பிரபாகரன் எடுத்தார். அதாவது, எந்தக் காரணத் திற்காகவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என உறுதியான தீர்மானம் மேற்கொண்டார்.

<img src='http://semparuthi.com/x/images/jan05/mgr.jpg' border='0' alt='user posted image'>

சரியாக இரு மணிநேரத்தின் பின் திரு.டிக்சிட் திரும்பி வந் தார். வந்ததும் எமது முடிவைக் கேட்டார். இந்த ஒப்பந்தத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது என்றோம். ஏன் ஏற்க முடியாது என்று கேட்டார்.காரணங் களை விளக்கிக் கூறினோம். ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைத் திட்டத்திலுள்ள குறை பாடுகளை சுட்டிக் காட்டி இத்திட்டம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யத் தவறிவிட்டது என்றோம். எமது முடிவை மாற்றுமாறு மன்றாட்டமாகக் கேட்டார். பின்பு வற்புறுத்திக் கேட்டார். இறுதியாக மிரட்டத் தொடங்கினார்.

"நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இரு நாடுகள் செய்து கொள்ளும் உடன்பாடு இது. இதனை நீங்கள் எதிர்த்தால் பாரதூரமான விளைவுகளை எதிர் நோக்க நேரிடும்" என்று மிரட்டினார். எப்படியான விளைவுகளை எதிர் நோக்க நேரிடும் என்று கேட்ட பொழுது, "இங்கே தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருக்க வேண்டி நேரிடும். ஒப்பந்தத்தை ஏற்கும் வரை இந்தியாவில் உங்களை தடுத்து வைத்திருக்க எம்மால் முடியும்." என்றார்.

"எத்தனை காலமோ, எத்தனை ஆண்டுகளோ எம்மைத் தடுப்புக் காவலில் வைத்தாலும் நாம் இந்த ஒப்பந்தத்தை ஏற்கப் போவதுமில்லை. ஆயுதங்களை ஒப்படைக்கப் போவது மில்லை.ஔ என்று உரத்த குரலில் சொன்னார் பிரபாகரன். ஆத்திரத்தில் அவரது விழிகள் பிதுங்கின. திரு.டிக்சிட் கேரளத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தமிழ்மொழி நன்கு தெரியும். நான் மொழிபெயர்ப்பதற்கு முன்னரே பிரபாகரன் அடித்துச் சொன்னது அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது.

"ஆயுதங்களை நீங்கள் ஒப்படைக்க மறுத்தால், இந்திய இராணுவத்தைக் கொண்டு உங்களது ஆயுதங்களைப் பறித்தெடுப்போம். இந்திய இராணுவத் திற்கு முன்பாக உங்களது போராளிகள் வெறும் தூசு."என்று ஆவேசத்தில் கூச்சலிட்டவர் தனது சுங்கானை எடுத்து பிரபாகரனிடம் காண்பித்து, இதனை நான் பற்றவைத்து புகைத்து முடிக்கும் நேரத்திற்குள் இந்திய இராணுவம் உங்களது போராளிகள் அனைவரையும் துவம்சம் செய்துவிடும் என்று கூறிவிட்டு ஏளனமாக ஒரு எக்காளச் சிரிப்புச் சிரித்தார். எங்கள் எல்லோரது முகங்களும் கோபத்தினால் சிவந்தது. மிகவும் சிரமப்பட்டு ஆத்திரத்தை அடக்கிய பிரபாகரன், "உங்களால் முடிந்ததைச் செய்து பாருங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை" என்று உறுதிபடக் கூறினார்.

டிக்சிட்டுக்கு கோபத்தால் உதடு கள் நடுங்கின. "மிஸ்டர் பிரபாகரன், நீங்கள் இந்திய அரசாங்கத்தை இத் துடன் நான்கு தடவைகள் ஏமாற்றி விட்டீர்கள்" என்றார். "அப்படியானால், நான்கு தடவைகள் எமது மக்களை இந்திய அரசிடமிருந்து காப்பாற்றயிருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்." என்றார் பிரபாகரன். திடீரென எழுந்த டிக்சிட் அங் கிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இந்தியத் தூதர் டிக்சிட்டின் "மிரட்டல் இராஜதந்திரம்" தோல்வி அடைந்தபோதும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் மீது திணித்துவிடும் முயற்சி தொடர்ந்து. ராஜீவ் நிர்வாகத்தின் உயர் அதிகாரி கள், மாறி மாறி, ஒவ்வொருவராக எம்மைச் சந்தித்து ஒப்பந்தத்தின் முக்கி யத்து வத்தை எடுத்து விளக்கினார்கள். இந்திய உள்ளக புலனாய்வுத் துறையின் (I.<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo--> அதிபர் திரு.எம்.கே நாராயணன், வெளி விவகார அமைச் சரின் கூட்டுச் செயலர் திரு.சகாதேவ், வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த திரு.நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாக மாறி மாறி சந்திப்புகளை நிகழ்த்தினர். புதுடில்லியில் அசோகா விடுதியில் இந்தத் திரைமறைவு நாடகம் பல நாட் களாகத் தொடர்ந்தது. திரு.பிரபாகரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உருக்குப் போல உறுதியாக நின்றார். புலிகள் மிகவும் பிடிவாதமாக நிற்கின்றார்கள் என பிரதமர் ராஜீவ்காந்திக்கு அறிவிக் கப்பட்டது. அவர் தனது அதிகாரிகளை அழைத்து மந்திராலோசனை நடத்தினார். இறுதி முயற்சியாக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை புதுடில்லிக்கு அழைப்பதென முடிவாகிறது. ஜூலை 26 ஆம் திகதி பிரதமரின் விசேட விமானத்தில் எம்.ஜி.ஆர் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

அன்றிரவே, இந்திய தலை நகரிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவர் பிரபாகரனும் நானும் யோகரத்தினம் யோகியும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப் பட்டோ ம். முதலமைச்சருடன் திரு.டிக்சிட்டும் இருந்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம்மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவு செய்யப் பட்டுள்ளது என்றும் ஒரு நீண்ட புராணம் பாடிக் கொண்டிருந்தார் டிக்சிட். நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஓதமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப் பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க் கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்கமாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒரு பொழுதும் அனுமதிக்கப் போவ தில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால் பாரதூரமான விளைவு களை சந்திக்க நேரிடும் என்று சீறினார் இந்தியத் தூதுவர்.ஔ

இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாசையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க இத் திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் யோக ரத்தினம் யோகி. இதைத் தொடர்ந்து யோகிக்கும் டிக்சிட்டுக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. ஓசென்ற வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த திரு.பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விபரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்ஔ என்று டிக்சிட் கதற, அதனை மறுத்துரைத்தார் யோகி. ஓயாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லைஔ என்றார் யோகி. "அப்பொழுது என்னை ஒரு பொய்யன் என்ற சொல் கின்றீர்களா?" என்று கேட்டார் டிக்சிட். "நீங்கள் உண்மை பேச வில்லை"என்றார் யோகி. வாக்குவாதம் சூடு பிடித்தது. கோபா வேசம் கொண்டவராக முதலமைச்சரைப் பார்த்து, "பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்" எனக் கதறினார் டிக்சிட். ஒரு ஏளனப் புன்ன கையுடன் மெளனம் சாதித்தார் பிரபாகரன். இந்த விவாதத்தில் நானும் குறுக்கிடவில்லை. இந்தியத் தூதுவர் டிக்சிட் நிதானம் இழந்து உணர்ச்சி வசப்படுகிறார் என்பதை உணர்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர். "நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்" என டிக் சிட்டை பண்பாக வேண்டிக் கொண்டார் முதலமைச்சர். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளி யேறினார் இந்தியத் தூதுவர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத் திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக் கொள்ள நாம் மறுப் பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர் எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கனோம். ஈழத்து அரசியற் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்கு வாரத்திற்கும் மிரட்டலுக்கும் பணிந்து விட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத் தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம். தமிழரின் இனப் பிரச் சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிர மித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.

எமது விளக்கங்களை முதலமைச் சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடு களையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர-புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப் பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய-இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபா கரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத் தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை. முதலமைச் சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே திரு.டிக்சிட்டும் ஒரு இந்திய புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், "ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத் தினார் அல்லவா?" என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மெளன மாக நின்றோம். "முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்" என்றார். "அப்படியே செய்வோம்" என்று கூறிவிட்டுச் சென்றோம். முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுடனான கடைசிச் சந்திப்பு அதுதான். இந்திய-புலிகள் போர் தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கடும் சுகவீன முற்றிருந்தார். அப்பொழுது ஒரு நாள் சென்னையில் தங்கியிருந்த கேணல் கிட்டுவைத் தனது வீட்டுக்கு அழைத்து பண உதவி செய்ததுடன், இந்திய இராணுவத்துடன் போர் நிறுத்தம் செய்யுமாறும், இந்திய அரசுடன் பேச்சு வார்ததை நடத்து மாறும் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு தகவல் அனுப்பயிருந்தார்.

1987ஆம் ஆண்ட நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலமானார். மறுநாள் 24ஆம் திகதி இந்திய தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. அன்றைய நாளில் தமிழீழத்தை ஆக்கிரமித்து நின்ற இந்தியப் படைகள் போர் நிறுத்தம் அறிவித்தனர். வீதிகளில் ரோந்து சென்ற இந்தியத் துருப்புகள் முகாம்களில் முடக்கப் பட்டன. அவ்வேளை யாழ்ப்பாணம் வடமராட்சியில் இந்தியப் படைகளின் கடும் வேட்டைக்கு இலக்காகி பல்வேறு அவலங்களை அனுபவித்து வந்த நானும் எனது மனைவி அடேலும் அன்றைய நாள், எம்.ஜி.ஆரின் நினைவாக அமைதி பேணப்பட்ட அந்த சமூக சூழலைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து தப்பிச் செல்ல முடிந்தது.

தமிழ்நாட்டில் நாம் வசித்தபோது எமது அமைப்பின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்த அந்தப் பெரிய மனிதர் தனது மறைவில் கூட எமக்கு உயிர் அளிப்பதில் பெரும் பங்கு வகித்தார் என அடேல் பாலசிங்கம் "சுதந்திர வேட்கை" என்ற தமது நூலில் எம்.ஜி.ஆர் அவர் களுக்கு நினைவஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

- முற்றும் -
<img src='http://semparuthi.com/x/images/jan05/mgr1.jpg' border='0' alt='user posted image'>
நன்றி செம்பருத்தி.com

Print this item

  ஒளியோவியம்
Posted by: இளைஞன் - 04-14-2005, 11:24 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (45)

வணக்கம் நண்பர்களே...

ஒளியோவியம் என்னும் தலைப்பில் எனது ஒயியோவியக் கலைப் பயிற்சிக்காய் எடுத்த சில நிழற்படங்களை இங்கே இணைக்கிறேன். பாருங்கள். பார்த்து உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். இது தலைப்புகளின் படி இணைக்கப்படவுள்ளன. முதலில் வெளிச்சம் என்கிற தலைப்பில் சில நிழற்படங்களை இணைக்கிறேன். எனவே இதே தலைப்பில் இதற்கு பொருந்தக்கூடியதாக உள்ள நீங்கள் எடுத்த நிழற்படங்கள் இருந்தால் அவற்றையும் தாராளமாக இணையுங்கள். இதேமாதிரி இருக்கவேண்டுமென்றில்லை. வெளிச்சம் என்பதை ஓளியோவியத்்தினூடே நீங்கள் காண்பிக்கவேண்டும். சரி தொடருவோம்...


<b>வெளிச்சம்</b>

<img src='http://www.yarl.com/forum/files/1_706.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/2_163.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/11.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/12.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/13.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/111.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/112.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/113.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  மலர்ந்திடு, தமிழ்ப் புத்தாண்டே!
Posted by: hari - 04-14-2005, 05:22 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

<img src='http://img13.echo.cx/img13/7219/untitled12yi.gif' border='0' alt='user posted image'><b>மலர்ந்திடு, தமிழ்ப் புத்தாண்டே!</b><img src='http://img13.echo.cx/img13/7219/untitled12yi.gif' border='0' alt='user posted image'>


பொதியமா வரையின் தென்றல்
பூட்டிய தினவு பொங்க
மதியது மங்காச் சொல்லேர்
மணித்தமிழ் மாந்தர் வாழ,
புதியதோர் உலகை எங்கள்
புதல்வர்கள் மகிழ்ந்து காண,
உதித்திடும் தமிழ்ப்புத் தாண்டே,
உன்னெழில் வரவு வாழ்க!!

ஊர்த்திரு நாளும், போற்றும்
உயிர்த்திரு நாளும், வெற்றித்
தேர்த்திரு நாளும், தம்மைச்
சீக்கிரம் சேரும் என்று
பார்த்திருக் கின்ற ஈழப்
பைந்தமிழ் வம்சம் வாழ,
"பார்த்திப" ஆண்டே! உன்றன்
பரிவுகொள் வரவு வாழ்க!

நெருநலின் நிகழ்வு எல்லாம்
நினைவினில் பதிவு கொள்ள,
இருநிலம் பிளந்த வேராய்
எம்மவர் நெஞ்சில் ஈழப்
பெருநிலத்(து) ஏக்கம் சற்றும்
பிரிவறா(து) ஊன்றிக் கொள்ள,
வருகநீ புத்தாண்டே, யாம்
வான்மட்டும் உயர்ந்து கொள்ள!

ஈழமே! எம்மை யீன்ற
ஞாலமே! உன்னை யெண்ணிக்
காலமேல் கால மாகக்
காத்திருக் கின்ற நின்றன்
சீலமார் மைந்தர் காதில்
தேனெனும் செய்தி ஒன்றைச்
சாலவோர் பரிசு என்று
தந்தி(டு)இத் தமிழ்ப்புத் தாண்டில்!

மெய்யகம் இப் புத்தாண்டில்
மேல்நிலை வகிக்க வேண்டும்!
பொய்அகன்(று) உண்மை வெல்லப்
புதுவழி வகுக்க வேண்டும்!
வையகம் தன்னை நல்லார்
வாஞ்சையும் தெளிந்த நெஞ்சும்
கையகப் படுத்தும் என்ற
கனவுமெய்ப் படுதல் வேண்டும்!!

"ஆண்டுதான் வந்த(து) இன்று:
அமைதியோ வருவ(து) என்(று)?" என்(று)
யாண்டுமோர் ஏக்கம் எங்கள்
யாழ்நிலம் எங்கும் தோன்ற-
மீண்டுமோர் ஆண்டாய் வந்தும்
மெத்தநீ ஆண்டாய் என்னும்
மாண்டபேர் எய்தும் வண்ணம்
மலர்ந்திடு, தமிழ்ப்புத் தாண்டே!

தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

Print this item

  குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு மற்றும் பித்தளை
Posted by: KULAKADDAN - 04-13-2005, 11:49 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (3)

குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு மற்றும் பித்தளை

செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

from
BBC tamil

Print this item

  இன்பத் தமிழ் வந்து பாயுது கணினியிலே..!
Posted by: vasisutha - 04-13-2005, 11:26 PM - Forum: கணினி - Replies (27)

<b>இன்பத் தமிழ் வந்து பாயுது கணினியிலே..!</b>


<i>புத்தாண்டில் புது சாதனை!</i>

செம்மொழி தமிழுக்கு கணினி உலகிலும் வைரக் கிரீடம் சூட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. இன்றைக்கு உலகம் எங்கும் இருக்கும் தமிழர்களை ஒரே வழியில் தொடர்பு கொள்வதற்கு கணினி மொழி கொஞ்சம் தடையாகத்தான் இருக்கிறது. அந்தத் தடையை உடைத்து நொறுக்கும் முயற்சியில் குதித்த மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை நெருங்கிவிட்டது. தமிழ் மொழியிலேயே செய்தியை அனுப்பவும் பெற்றுக் கொள்ளவும் தனித்துவம் வாய்ந்த ஒரு மென்பொருளை உருவாக்கி இருக்கிறது, இந்தத் துறை. வருகிற 15\ம் தேதி அந்த மென்பொருள் அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது.

<img src='http://img138.echo.cx/img138/7585/p98ny.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:orange'>தயாநிதி மாறன்


இந்தியாவில் உள்ள எல்லா ஆட்சி மொழிகளுக்கும் இதுபோன்ற மென்பொருள் தயாரிக்கப்பட்டாலும், முதலில் அறிமுகமாவது தமிழ்தான். காரணம், தொலைத் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்தான்! டெல்லியில் சி.ஜி.ஓ. காம்ப்ளெக்ஸில் எலெக்ட்ரானிக் நிகேதன் அலுவலகத்தில் தயாநிதி மாறனை சந்தித்தோம். விரல் நுனியில் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு, சரளமாகப் பேசினார். முதலில் கம்ப்யூட்டரில் தமிழ் திட்டம் பற்றி பேசிவிடுவோம். பிறகு அரசியல் கேள்விகளுக்குப் போகலாம் என்று அவரே அட்டவணை போட்டுக் கொண்டவர், கம்ப்யூட்டரை தமிழனுக்கு மிக அருகில் கொண்டு வந்திருக்கும் அந்தப் புதிய மென்பொருள் பற்றி ஆரம்பித்தார்.

<img src='http://img138.echo.cx/img138/1092/p89xy.jpg' border='0' alt='user posted image'>

ஒரு கம்ப்யூட்டரை வாங்கும்போது ஆங்கிலம், ஜப்பான், ஃபிரெஞ்ச், சீனா, ரஷ்யா, கொரியா போன்ற மொழிகளில் அதைப் பயன்படுத்த தனியாக எழுத்து வடிவங்களை (Font) அதில் அமைக்கத் தேவையில்லை. அவையெல்லாம் கம்ப்யூட்டரோடு சேர்ந்தே வருகின்றன. ஆனால், இந்தியாவில் ஒரு கம்ப்யூட்டரை வாங்கும் போது நம்முடைய நாட்டின் மொழிகளை நாம் தனியாக விலை கொடுத்து வாங்கி கம்ப்யூட்டரோடு சேர்க்க வேண்டும். அதுகூட, ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ற மாதிரி விதவிதமான எழுத்து வடிவங்களை வாங்கிச் சேர்த்துக் கொள்வதால், எல்லோரும் ஒரே மாதிரி வேலை செய்ய முடியாது.


உதாரணமாக, என் கம்ப்யூட்டரில் ஒரு வடிவம் வைத்திருக்கிறேன். நீங்கள் வேறொரு வடிவம் வைத்திருப்பீர்கள். இருவருமே தமிழ்தான் வைத்திருப்போம். ஆனால், நான் அனுப்பும் செய்தியை நீங்கள் வாசிக்க முடியாது. உங்கள் செய்தி எனக்கு வாசிக்க முடியாது. இந்த சிக்கல்தான் தமிழர்களை ஏன், இந்தியர்களையே கம்ப்யூட்டரைவிட்டு கொஞ்சம் தள்ளி நிற்க வைக்கிறது. மென்பொருள் தொடர்பான விஷயங்களில் நாம்தான் முன்னால் நிற்கிறோம். அப்படியிருக்கும்போது கம்ப்யூட்டர் விஷயத்தில் மொழி ஒரு தடைக்கல்லாக ஏன் இருக்க வேண்டும்? இதை யோசித்தபோதுதான் இந்த முயற்சி தொடங்கியது.


சி டாக் [C Dac] என்ற நிறுவனத்திடம் இதற்கான பொறுப்பைக் கொடுத்தோம். இவர்கள் எழுத்து வடிவங்களை உருவாக்குபவர்கள். ஏற்கெனவே பல ஆய்வுகளை நடத்தி ஏராளமான வடிவங்களை உருவாக்கி வைத்திருந்தனர். இவற்றை ஒழுங்குபடுத்தி 100 முதல் 150 வடிவங்கள் கொண்ட ஒரு பேக்கேஜ்ஜாக தயாரித்துள்ளோம். இதை வருகிற ஏப்ரல் 15\ம் தேதி நாட்டுக்கு இலவசமாக அர்ப்பணிக்கப் போகிறோம்.


இது மட்டுமல்ல, மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஆங்கிலத்தில் எம்.எஸ்.ஆபீஸ் என்றொரு மென்பொருளைக் கொடுத்திருப்பதை போன்று இப்போது தமிழுக்கு பாரதியா என்ற பெயரில் ஒரு தமிழ் ஓபன் ஆபீஸ் என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளோம். எழுத்து வடிவங்கள் அறிமுக விழாவிலேயே இதையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் போகிறோம். இந்த <i>பாரதியா</i> மென்பொருளில் ஆங்கிலத்தில் இருப்பதைப் போன்றே ஸ்பெல்லிங் செக்கர், டிக்ஷ்னரி எல்லாமும் இடம்பெறும். எல்லாமே இலவசமாக கிடைக்கும். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் எங்களோடு இணைந்து இதை உருவாக்கியுள்ளது.


எங்கள் துறை தயாரித்துள்ள தமிழ் மென்பொருளை தமிழக மக்களுக்கு முதல்கட்டமாக முப்பது லட்சம் சி.டிக்களில் இலவசமாக கொடுக்கப் போகிறோம். பத்திரிகைகள், நூலகங்கள், பள்ளிகள் மற்றும் புதிதாக கம்ப்யூட்டர்களை விற்கும் நிறுவனங்கள் போன்றவை மூலம் இந்த சி.டிக்களை கொடுக்க இருக்கிறோம் என்றவர், கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு தொடர்ந்தார்.

அடுத்து வேறு சில மென்பொருட்களையும் தயாரித்துள்ளோம். இவற்றை கணினி மொழிப்புரட்சிÕ என்று கூட சொல்லலாம். ‘Optical Character Recognition software (OCR)’ என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளோம். பொதுவாக ஸ்கேன் செய்யப்படும் ஒரு தாளில் இருக்கும் வார்த்தைகளை நாம் கம்ப்யூட்டரில் திருத்தம் செய்ய முடியாது. ஸ்கேன் செய்யப்பட்டால், அது அப்படியேதான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், நான் மேலே சொன்ன ஓ.சி.ஆர். மென்பொருள் மூலம் டைப் அடித்து வைக்கப்பட்டுள்ள ஒரு மேட்டரை ஸ்கேன் செய்தால், அதன்பிறகு கம்ப்யூட்டரில் அந்த செய்தியை நாம் திருத்தம் செய்ய முடியும். அதற்கேற்ற வடிவத்தில் அந்த செய்தி பதிவாகும். ஆங்கிலத்தில் இந்த வசதி இருக்கிறது. என்றாலும் அது இன்னமும் பரவலாக வரவில்லை. தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் இது ரொம்பவே புதுமையான முயற்சி.


அதேபோல இன்டெலிஜென்சி சாஃப்ட்வேர் [Intelligency Optical Character Recognition software] ஒன்றையும் உருவாக்கி வருகிறோம். ஒருவருக்கு டைப் அடிக்கத் தெரியாது என்றால் அவர் கையால் எழுதி ஸ்கேன் செய்து, நம் வசதிக்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யலாம். வார்த்தைகளை கூடுதலாக சேர்க்கலாம், குறைக்கலாம். இந்த மென்பொருளும் ஆறு மாதத்துக்குள் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, 22 இந்திய மொழிகளிலும் வரவுள்ளது. முதல்கட்டமாக தமிழில் இதை அறிமுகப்படுத்தப் போகிறோம்.

அடுத்து, பேசுவதை அப்படியே கம்ப்யூட்டரில் வார்த்தைகளாக மாற்றும் மென்பொருள் ஒன்று இன்னும் ஆறு மாதத்தில் வரவுள்ளது. இதேமாதிரி மொழி பெயர்ப்புக்கான மென்பொருள் ஒன்றையும் தயாரிக்கவுள்ளோம். ஒரு மொழியில் பேசுவதை அப்படியே ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலும் மாற்றக்கூடிய மென்பொருள் அது.

<b>எல்லாவற்றையும்விட மற்றொரு சுவாரஸ்யமான மென்பொருளைத் தயாரித்துள்ளோம். நாம் இன்டர்நெட்டில் பார்க்கும் பல்வேறு இணையதளங்கள் ஆங்கில மொழியில்தான் உள்ளன. இப்போது நாங்கள் உருவாக்கி வரும் மென்பொருளை உபயோகித்தால், அவையெல்லாம் தமிழ் மொழியில் தாமாகவே மொழிபெயர்க்கப்பட்டு விடும் [Tamil Web-browse]. இப்படி பல்வேறு வசதிகளை உருவாக்கப் போகிறோம்.</b>

கம்ப்யூட்டரை உபயோகிக்க ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் தேவை. மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் கடைசியாக Xp Edition பல்வேறு மொழிகளில் வெளியிட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தமிழில் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு வரவுள்ளது. Xp windowவில் ஸ்டாட்டிங் எடிஷன் என்ற பெயரில் தமிழில் வருகிறது. இதன்மூலம் பாமர மக்கள்கூட எளிதாக கம்ப்யூட்டரைக் கையாள முடியும். யாருக்குமே எதற்குமே மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. எல்லா வசதிகளுமே தாய்மொழியில் கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்த மென்பொருள் மூலம் யார் எந்த மொழியில் தொடர்பு கொண்டாலும், நம் தாய்மொழிக்கு அதை மாற்றி எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.


ஒருவருக்கு தாய்மொழி தவிர இன்னொரு மொழி தெரியாமல் இருப்பது தவறு இல்லை. எனக்கு கூட இந்தி தெரியாது. இதை இப்போது உடனடியாக கற்றுக் கொள்ளவும் முடியாது. இப்போது ஒரு கம்ப்யூட்டரைக் கையில் வைத்திருந்தால் யாரேனும் இந்தியில் பேசினால் கம்ப்யூட்டர் வாயிலாக என் தாய்மொழியில் அறிந்து கொள்ளவும் முடியும். இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் நடக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இலக்கை எட்டி விடுவோம்.
</span>

விகடன்.com

Print this item

  எப்படியுனையழைப்பேன்....!!!
Posted by: Nitharsan - 04-13-2005, 06:18 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<span style='font-size:25pt;line-height:100%'>எப்பிடியுனையழைப்பேன்....!!!</span>
சித்திரையே வந்து விட்டாயா?-உனை
சிரித்து மகிழ்ந்து வரவேற்க என்னால் முடியாது
முயன்று பார்க்கிறேன் முடிந்தால் உனை அழைக்க
முப்பது வருடங்கள் முட்டி மோதுகின்றதே எம்மினம்
எமதுரிமைகளைப் பெறுவதற்க்காய்-இன்று
ஆயிரம் நாட்கள் கடந்து செல்கிறது
நம் நாட்டில் சமாதானக் குரலொலித்து
நல்லது நடக்குமெனும் நம்பிக்கை எமக்கில்லை
என் வீட்டில் நான் நான் இல்லை-இன்று
என் வீடோ எதிரியன் பாசறை
விதியிலோ பெரிய முடகம்பி வளையம்
வேதனையுடன் சென்றன் வீடுவரை
வீதிவரை விரட்டியது காக்கி சட்டை
எவருக்கும் எழுதிடுவேன் என் கதையை
எப்படி எடுத்துரைப்பேன் என் நிலையை
பெற்ற பிள்ளையைக் காணவில்லை
நட்ட தென்னம்பிள்ளைக்கோ தலையில்லை
நான் வளர்ந்த மண்ணில் நான் இல்லை
நாட்டில் சமாதானம் வந்நதென்றார்
நடுச் சந்தியிலோர் பதாதை-அதில்
நிலக் கண்ணி வெடிக்கவனம் எச்சரிகை
காலை வைத்து விட்டால் காலில்லை
கடவுளுமே எமக்கு சாட்சியில்லை - அதற்க்குள்
கடல் அலைவேறு
எரிமலையாய் குழுறுது தமிழனிதயம்
ஏளனம் புரிகிறது சிங்கள துவேசம்
எப்படி அழைத்திடுவேன் சித்திரையே உனை
என்னிதயம் குளிர வாவென்று
எமக் கென்றோர் தேசம் கிடைக்கட்டும்
தேடியுனையழைப்பேன்- அப்போது
வா சித்திரையே அகமகிழ்ந்து...
அழைத்திடுவேன்.....

Print this item

  சங்கதி - புதிய இணையம்
Posted by: Sriramanan - 04-13-2005, 04:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

சங்கதி என்ற பெயரில் மற்றுமொரு 24 மணிநேர தமிழ் இணையச் செய்திச் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முகவரி http://www.sankathi.com

Print this item

  தமிழ் சொல்லா ?
Posted by: shanmuhi - 04-13-2005, 01:52 PM - Forum: தமிழும் நயமும் - Replies (16)

தமிழ் சித்திரை புத்தாண்டு பார்த்திப வருடம் என்ற பெயருடன் பிறக்கின்றது.
இந்த பார்த்திப என்ற சொல் தமிழ் சொல்லா...?
தெரிந்தவர்கள் இது பற்றி ஒரு வார்த்தை சொல்வார்களா...?

Print this item

  :: பாரசீக ரோஜா ::
Posted by: Kurumpan - 04-13-2005, 03:04 AM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

வண்க்கம்!
புது வருடத்தில் புதுசா ஒரு கவிதை கேப்போமா???? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பாரசீக ரோஜா - பகுதி1
http://www.yarl.com/forum/music_page.php?song_id=41

பாரசீக ரோஜா - பகுதி2
http://www.yarl.com/forum/music_page.php?song_id=42

பாரசீக ரோஜா - பகுதி3
http://www.yarl.com/forum/music_page.php?song_id=43

Print this item