![]() |
|
குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு மற்றும் பித்தளை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு மற்றும் பித்தளை (/showthread.php?tid=4485) |
குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு மற்றும் பித்தளை - KULAKADDAN - 04-13-2005 குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு மற்றும் பித்தளை செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். from BBC tamil - kavithan - 04-14-2005 நன்றி குளம் .. அப்ப எங்கடை சனம் விஞ்ஞானிகள் தான் [ இப்ப இல்லை முந்தி ] <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 04-14-2005 நம்ம சனம் பல நல்ல விசயங்களை வைத்திருந்தது. இப்ப விட்டிட்டுதுகள் அது திரும்ப அமெரிக்காவிலை அல்லது ஐரோப்பாவிலை புதுசா ஆராய்ச்சி செய்து வந்தால் ஆகா ஓகோ எண்டு புகழுங்கள் உதாரணத்துக்கு சேதன பண்ணையாக்கம் - kuruvikal - 04-14-2005 KULAKADDAN Wrote:நம்ம சனம் பல நல்ல விசயங்களை வைத்திருந்தது. இப்ப விட்டிட்டுதுகள் அது திரும்ப அமெரிக்காவிலை அல்லது ஐரோப்பாவிலை புதுசா ஆராய்ச்சி செய்து வந்தால் ஆகா ஓகோ எண்டு புகழுங்கள் எல்லாம் புரட்சிகர சிந்தனையாளர்களின் மூடநம்பிக்கைகளை ஒதுக்கலால வந்த விளைவுகள்...! ஆராயாமல் இப்படித்தான் பலதும் நடக்குது மூடநம்பிக்கை என்று...அதை ஆராயச் சொன்னா பழமைவாதி...நம்மாக்கள் எப்ப மூளையப் பாவிக்கினமோ...அப்பதான் விடிவு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|