Yarl Forum
எப்படியுனையழைப்பேன்....!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எப்படியுனையழைப்பேன்....!!! (/showthread.php?tid=4487)



எப்படியுனையழைப்பேன்....!!! - Nitharsan - 04-13-2005

<span style='font-size:25pt;line-height:100%'>எப்பிடியுனையழைப்பேன்....!!!</span>
சித்திரையே வந்து விட்டாயா?-உனை
சிரித்து மகிழ்ந்து வரவேற்க என்னால் முடியாது
முயன்று பார்க்கிறேன் முடிந்தால் உனை அழைக்க
முப்பது வருடங்கள் முட்டி மோதுகின்றதே எம்மினம்
எமதுரிமைகளைப் பெறுவதற்க்காய்-இன்று
ஆயிரம் நாட்கள் கடந்து செல்கிறது
நம் நாட்டில் சமாதானக் குரலொலித்து
நல்லது நடக்குமெனும் நம்பிக்கை எமக்கில்லை
என் வீட்டில் நான் நான் இல்லை-இன்று
என் வீடோ எதிரியன் பாசறை
விதியிலோ பெரிய முடகம்பி வளையம்
வேதனையுடன் சென்றன் வீடுவரை
வீதிவரை விரட்டியது காக்கி சட்டை
எவருக்கும் எழுதிடுவேன் என் கதையை
எப்படி எடுத்துரைப்பேன் என் நிலையை
பெற்ற பிள்ளையைக் காணவில்லை
நட்ட தென்னம்பிள்ளைக்கோ தலையில்லை
நான் வளர்ந்த மண்ணில் நான் இல்லை
நாட்டில் சமாதானம் வந்நதென்றார்
நடுச் சந்தியிலோர் பதாதை-அதில்
நிலக் கண்ணி வெடிக்கவனம் எச்சரிகை
காலை வைத்து விட்டால் காலில்லை
கடவுளுமே எமக்கு சாட்சியில்லை - அதற்க்குள்
கடல் அலைவேறு
எரிமலையாய் குழுறுது தமிழனிதயம்
ஏளனம் புரிகிறது சிங்கள துவேசம்
எப்படி அழைத்திடுவேன் சித்திரையே உனை
என்னிதயம் குளிர வாவென்று
எமக் கென்றோர் தேசம் கிடைக்கட்டும்
தேடியுனையழைப்பேன்- அப்போது
வா சித்திரையே அகமகிழ்ந்து...
அழைத்திடுவேன்.....


- kuruvikal - 04-13-2005

"அன்னை தேசத்தின்
அடிமை விலங்குடைய
சித்திரையே உன்னைப்
பூரித்தழைப்பேன்....!"
இளைய உள்ளம்
பொங்கிப் படைத்த கவி
உள்ளங்களெங்கும்
பொங்கல் பொங்கட்டும்
பொங்கு தமிழ்
விளைவாகட்டும்...!


எனக்கும் நிதர்சனின் ஏக்கம்தான் - victorp - 04-13-2005

சித்திரையில் என்ன இப்போ புத்தாண்டு-ஈழத்
தேசம் அழிந்து கிடக்கையிலே
வெற்றிலை வைக்கும் நிலையுண்டா?
வீட்டினில் பாய்விரிக்க இடமுண்டா-தாலி
கட்டியவன் உயிருடன் உள்ளானா-அடுத்தவீட்டில்
கழுத்தை நீட்டியவள் உயிருடன் உள்ளாளா?
பின் ;வீட்டில் பிள்ளைகள் என்று சொல்ல
பேருக்கும் ஒரிரு ஆளில்லை
முன்வீட்டில் எல்லோரும் மொத்தமாய்
முடிஞ்சு போட்டினம்-பிறகு ஏன்
இப்போ சித்திரைக் கொண்டாட்டம்?
இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள்-ஈழ
மண்ணில் புத்தாண்டை-நாமெல்லாம்
மகிழ்வோடு கொண்டாடுவோம்


சித்திரைப்புத்தாண்டு வந்தென்ன..! போயென்ன - KULAKADDAN - 04-13-2005

சித்திரைப்புத்தாண்டு வந்தென்ன..! போயென்ன

நித்திரை விழித்துப் பட்சணங்கள் பலசெய்து
வெற்றிலை பாக்குடன் மங்கலச் சுடரேற்றி
முற்றிய நற் பழங்கள் புது மலர்களுடன் முகம் சிரித்துப்
பத்தரை மாற்றுத் தங்கமென அலங்கரித்து
பக்தியுடன் பரவசமாய் வரவேற்கும் நாளன்றோ
முன்னொருகால் நாம் கண்ட சித்திரைப் புத்தாண்டு.

சற்றொரு கால் நின்று இன்றைச் சாபநிலை சிந்தித்தால்.....
வைத்த கால் வைத்தபடி வாதம் விறைப்பெடுக்க
முற்று முழுதாகவே மூளையெலாம் பேதலிக்கும் -
நிலையல்லோ வந்திருக்கு!
உற்றவனை உற்றவளை பெற்றுப் பேறளித்தவளை
கற்றறிவு தந்தவனை கற்கையினைப் பெற்றவனை
பெற்றவனைப் பெற்றவளை என எல்லாம் இழந்தாச்சு.

மெத்தையிலே வளர்ந்தவர்கள் பற்றையிலே பதுங்குகின்றார்
புத்தம் புதுக் காரினிலே பள்ளிவழி சென்றவர்கள்
சித்தம் தெளிந்தின்று சீருடை தாம் தரித்து
மெத்தக் கவனமுடன் தேசம் காக்கின்றார்
மெத்தனமும் மெருகும் கொண்ட-இள மகளிரெல்லாம்
புத்தகமும் சத்தகமும் புறத்தேயெறிந்து விட்டுக்-களமாடுகின்றார்.

கம்பளிப் பேர்வையிலே இதமான சூட்டுடனே
நிம்மதியாய் நித்திரைக்குப் பத்திரமாய் மடிதேடும்,
சின்னக் குழந்தையெல்லாம் சேலைத் துண்டுகளின்
மூலைத் தலைப்பதனில் முடிச்சுண்டு முனகுகையில்-எம்
தானைத் தலைவனவன் தளராத உறுதியுடன்
சேனைப் படைநிறுத்திச் செயற்திறன் காட்டுகிறான்.

உணர்ந்து புரிந்தெழுந்து தேச இளைஞரெல்லாம்......,
உழன்று உழைத்து எங்கள் பாசப் பாட்டாளியெல்லாம்,
கறந்த மார் மறவாச் சின்னஞ் சிறார்களெல்லாம்,
வண்ணச் சிட்டுக்களாய் வலம் வரும் இளைஞியெல்லாம்,
வெள்ளைச் சீருடை தரித்த விடலைப் பருவமெல்லாம்
காளை முறுக்குடனே களமாட வருகின்றார்.

நாடு நலிகிறது நம் ஈழ மண்ணிதன் காடு அதிர்கிறது.
பாடு பாடாகப் பிஞ்சும் காயுமெனக் கொட்டிச் சரிகிறது.
வெட்டவெளிகளில் கொட்டு கொட்டென்று -
சனம் குந்திக் கிடக்கிறது.
எட்டக் கால் பதித்து எதிரி எம் எல்லைக்குள் -
முட்டக் கை வைக்கின்றது.
குட்டை குளங்களிலே குழந்தை குமருகளின் -
உடலம் சிதைகிறது.
சித்திரைப் புத்தாண்டு வந்தென்ன போயென்ன

அனுப்பும் கடிதங்கள் மல்லாவி கடக்கவில்லை!
ஆசுப்பத்திரியில் மருந்துமில்லை இடமுமில்லை,
தூசிப் படலத்தால் தெரு மூடிக் கிடக்கிறது.
மாசிப் பனியென்ன பங்குனி வெயிலென்ன-
மாற்றவோர் ஆடையில்லை
பாசப் பிணைப்புடன் பரிவுக்கரத்துடன்
தேற்றவேர் தேசமில்லை-இங்கே
சித்திரைப் புத்தாண்டு வந்தென்ன! போயென்ன!

ஆங்காங்கே ஈழமெங்கும் பட்டினிச் சாவு!
அரசாளும் அம்மணியோ ஆர்ப்பரிப்புக் கூத்து!
சிரசாலே சிங்களத்தைத் தொழுது சில குழுக்கள்!
மனசாலும் மண்-மானம் எண்ணாத புழுக்கள்! -நாம்
விசையோடு ஆர்த்தெழுந்து போராடும் வேளையிலே
சித்திரைப் புத்தாண்டு வந்தென்ன! போயென்ன!

கனவெல்லாம் நனவாகிக் காரியங்கள் ஆகும் வரை
நிலமெல்லாம் நமதாகி இருப்புகளிற்கு ஏகும்வரை
வயலெல்லாம் மீண்டும் எங்கள் கால்பட்டுச் சிலிர்க்கும்வரை
மனமார எம் மழலைகள் மகிழ்ந்து குதித்தாடும்வரை
கயவர் கூடாரமெல்லாம் நாடொழிந்து போகும் வரை
கரிகாலன் கொடியிங்கு வரிப்புலியாய் ஆடும்வரை
சித்திரைப் புத்தாண்டு வந்தென்ன! போயென்ன!

<span style='font-size:25pt;line-height:100%'>தீட்சண்யன்</span>

நன்றி..........

சந்திரவதனா அவர்களுக்கு


- kavithan - 04-14-2005

நன்றி குழைக்காட்டான்...


சந்திரவதானாக்காவின் கவிதை பல உண்மைகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது , உங்கள் கவிதைக்கு நன்றி அக்கா.


- hari - 04-14-2005

நன்றி