![]() |
|
இன்பத் தமிழ் வந்து பாயுது கணினியிலே..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: இன்பத் தமிழ் வந்து பாயுது கணினியிலே..! (/showthread.php?tid=4486) Pages:
1
2
|
இன்பத் தமிழ் வந்து பாயுது கணினியிலே..! - vasisutha - 04-13-2005 <b>இன்பத் தமிழ் வந்து பாயுது கணினியிலே..!</b> <i>புத்தாண்டில் புது சாதனை!</i> செம்மொழி தமிழுக்கு கணினி உலகிலும் வைரக் கிரீடம் சூட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. இன்றைக்கு உலகம் எங்கும் இருக்கும் தமிழர்களை ஒரே வழியில் தொடர்பு கொள்வதற்கு கணினி மொழி கொஞ்சம் தடையாகத்தான் இருக்கிறது. அந்தத் தடையை உடைத்து நொறுக்கும் முயற்சியில் குதித்த மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை நெருங்கிவிட்டது. தமிழ் மொழியிலேயே செய்தியை அனுப்பவும் பெற்றுக் கொள்ளவும் தனித்துவம் வாய்ந்த ஒரு மென்பொருளை உருவாக்கி இருக்கிறது, இந்தத் துறை. வருகிற 15\ம் தேதி அந்த மென்பொருள் அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. <img src='http://img138.echo.cx/img138/7585/p98ny.jpg' border='0' alt='user posted image'> <span style='color:orange'>தயாநிதி மாறன் இந்தியாவில் உள்ள எல்லா ஆட்சி மொழிகளுக்கும் இதுபோன்ற மென்பொருள் தயாரிக்கப்பட்டாலும், முதலில் அறிமுகமாவது தமிழ்தான். காரணம், தொலைத் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்தான்! டெல்லியில் சி.ஜி.ஓ. காம்ப்ளெக்ஸில் எலெக்ட்ரானிக் நிகேதன் அலுவலகத்தில் தயாநிதி மாறனை சந்தித்தோம். விரல் நுனியில் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு, சரளமாகப் பேசினார். முதலில் கம்ப்யூட்டரில் தமிழ் திட்டம் பற்றி பேசிவிடுவோம். பிறகு அரசியல் கேள்விகளுக்குப் போகலாம் என்று அவரே அட்டவணை போட்டுக் கொண்டவர், கம்ப்யூட்டரை தமிழனுக்கு மிக அருகில் கொண்டு வந்திருக்கும் அந்தப் புதிய மென்பொருள் பற்றி ஆரம்பித்தார். <img src='http://img138.echo.cx/img138/1092/p89xy.jpg' border='0' alt='user posted image'> ஒரு கம்ப்யூட்டரை வாங்கும்போது ஆங்கிலம், ஜப்பான், ஃபிரெஞ்ச், சீனா, ரஷ்யா, கொரியா போன்ற மொழிகளில் அதைப் பயன்படுத்த தனியாக எழுத்து வடிவங்களை (Font) அதில் அமைக்கத் தேவையில்லை. அவையெல்லாம் கம்ப்யூட்டரோடு சேர்ந்தே வருகின்றன. ஆனால், இந்தியாவில் ஒரு கம்ப்யூட்டரை வாங்கும் போது நம்முடைய நாட்டின் மொழிகளை நாம் தனியாக விலை கொடுத்து வாங்கி கம்ப்யூட்டரோடு சேர்க்க வேண்டும். அதுகூட, ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ற மாதிரி விதவிதமான எழுத்து வடிவங்களை வாங்கிச் சேர்த்துக் கொள்வதால், எல்லோரும் ஒரே மாதிரி வேலை செய்ய முடியாது. உதாரணமாக, என் கம்ப்யூட்டரில் ஒரு வடிவம் வைத்திருக்கிறேன். நீங்கள் வேறொரு வடிவம் வைத்திருப்பீர்கள். இருவருமே தமிழ்தான் வைத்திருப்போம். ஆனால், நான் அனுப்பும் செய்தியை நீங்கள் வாசிக்க முடியாது. உங்கள் செய்தி எனக்கு வாசிக்க முடியாது. இந்த சிக்கல்தான் தமிழர்களை ஏன், இந்தியர்களையே கம்ப்யூட்டரைவிட்டு கொஞ்சம் தள்ளி நிற்க வைக்கிறது. மென்பொருள் தொடர்பான விஷயங்களில் நாம்தான் முன்னால் நிற்கிறோம். அப்படியிருக்கும்போது கம்ப்யூட்டர் விஷயத்தில் மொழி ஒரு தடைக்கல்லாக ஏன் இருக்க வேண்டும்? இதை யோசித்தபோதுதான் இந்த முயற்சி தொடங்கியது. சி டாக் [C Dac] என்ற நிறுவனத்திடம் இதற்கான பொறுப்பைக் கொடுத்தோம். இவர்கள் எழுத்து வடிவங்களை உருவாக்குபவர்கள். ஏற்கெனவே பல ஆய்வுகளை நடத்தி ஏராளமான வடிவங்களை உருவாக்கி வைத்திருந்தனர். இவற்றை ஒழுங்குபடுத்தி 100 முதல் 150 வடிவங்கள் கொண்ட ஒரு பேக்கேஜ்ஜாக தயாரித்துள்ளோம். இதை வருகிற ஏப்ரல் 15\ம் தேதி நாட்டுக்கு இலவசமாக அர்ப்பணிக்கப் போகிறோம். இது மட்டுமல்ல, மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஆங்கிலத்தில் எம்.எஸ்.ஆபீஸ் என்றொரு மென்பொருளைக் கொடுத்திருப்பதை போன்று இப்போது தமிழுக்கு பாரதியா என்ற பெயரில் ஒரு தமிழ் ஓபன் ஆபீஸ் என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளோம். எழுத்து வடிவங்கள் அறிமுக விழாவிலேயே இதையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் போகிறோம். இந்த <i>பாரதியா</i> மென்பொருளில் ஆங்கிலத்தில் இருப்பதைப் போன்றே ஸ்பெல்லிங் செக்கர், டிக்ஷ்னரி எல்லாமும் இடம்பெறும். எல்லாமே இலவசமாக கிடைக்கும். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் எங்களோடு இணைந்து இதை உருவாக்கியுள்ளது. எங்கள் துறை தயாரித்துள்ள தமிழ் மென்பொருளை தமிழக மக்களுக்கு முதல்கட்டமாக முப்பது லட்சம் சி.டிக்களில் இலவசமாக கொடுக்கப் போகிறோம். பத்திரிகைகள், நூலகங்கள், பள்ளிகள் மற்றும் புதிதாக கம்ப்யூட்டர்களை விற்கும் நிறுவனங்கள் போன்றவை மூலம் இந்த சி.டிக்களை கொடுக்க இருக்கிறோம் என்றவர், கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு தொடர்ந்தார். அடுத்து வேறு சில மென்பொருட்களையும் தயாரித்துள்ளோம். இவற்றை கணினி மொழிப்புரட்சிÕ என்று கூட சொல்லலாம். ‘Optical Character Recognition software (OCR)’ என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளோம். பொதுவாக ஸ்கேன் செய்யப்படும் ஒரு தாளில் இருக்கும் வார்த்தைகளை நாம் கம்ப்யூட்டரில் திருத்தம் செய்ய முடியாது. ஸ்கேன் செய்யப்பட்டால், அது அப்படியேதான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், நான் மேலே சொன்ன ஓ.சி.ஆர். மென்பொருள் மூலம் டைப் அடித்து வைக்கப்பட்டுள்ள ஒரு மேட்டரை ஸ்கேன் செய்தால், அதன்பிறகு கம்ப்யூட்டரில் அந்த செய்தியை நாம் திருத்தம் செய்ய முடியும். அதற்கேற்ற வடிவத்தில் அந்த செய்தி பதிவாகும். ஆங்கிலத்தில் இந்த வசதி இருக்கிறது. என்றாலும் அது இன்னமும் பரவலாக வரவில்லை. தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் இது ரொம்பவே புதுமையான முயற்சி. அதேபோல இன்டெலிஜென்சி சாஃப்ட்வேர் [Intelligency Optical Character Recognition software] ஒன்றையும் உருவாக்கி வருகிறோம். ஒருவருக்கு டைப் அடிக்கத் தெரியாது என்றால் அவர் கையால் எழுதி ஸ்கேன் செய்து, நம் வசதிக்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யலாம். வார்த்தைகளை கூடுதலாக சேர்க்கலாம், குறைக்கலாம். இந்த மென்பொருளும் ஆறு மாதத்துக்குள் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, 22 இந்திய மொழிகளிலும் வரவுள்ளது. முதல்கட்டமாக தமிழில் இதை அறிமுகப்படுத்தப் போகிறோம். அடுத்து, பேசுவதை அப்படியே கம்ப்யூட்டரில் வார்த்தைகளாக மாற்றும் மென்பொருள் ஒன்று இன்னும் ஆறு மாதத்தில் வரவுள்ளது. இதேமாதிரி மொழி பெயர்ப்புக்கான மென்பொருள் ஒன்றையும் தயாரிக்கவுள்ளோம். ஒரு மொழியில் பேசுவதை அப்படியே ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலும் மாற்றக்கூடிய மென்பொருள் அது. <b>எல்லாவற்றையும்விட மற்றொரு சுவாரஸ்யமான மென்பொருளைத் தயாரித்துள்ளோம். நாம் இன்டர்நெட்டில் பார்க்கும் பல்வேறு இணையதளங்கள் ஆங்கில மொழியில்தான் உள்ளன. இப்போது நாங்கள் உருவாக்கி வரும் மென்பொருளை உபயோகித்தால், அவையெல்லாம் தமிழ் மொழியில் தாமாகவே மொழிபெயர்க்கப்பட்டு விடும் [Tamil Web-browse]. இப்படி பல்வேறு வசதிகளை உருவாக்கப் போகிறோம்.</b> கம்ப்யூட்டரை உபயோகிக்க ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் தேவை. மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் கடைசியாக Xp Edition பல்வேறு மொழிகளில் வெளியிட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தமிழில் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்டு வரவுள்ளது. Xp windowவில் ஸ்டாட்டிங் எடிஷன் என்ற பெயரில் தமிழில் வருகிறது. இதன்மூலம் பாமர மக்கள்கூட எளிதாக கம்ப்யூட்டரைக் கையாள முடியும். யாருக்குமே எதற்குமே மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. எல்லா வசதிகளுமே தாய்மொழியில் கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்த மென்பொருள் மூலம் யார் எந்த மொழியில் தொடர்பு கொண்டாலும், நம் தாய்மொழிக்கு அதை மாற்றி எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஒருவருக்கு தாய்மொழி தவிர இன்னொரு மொழி தெரியாமல் இருப்பது தவறு இல்லை. எனக்கு கூட இந்தி தெரியாது. இதை இப்போது உடனடியாக கற்றுக் கொள்ளவும் முடியாது. இப்போது ஒரு கம்ப்யூட்டரைக் கையில் வைத்திருந்தால் யாரேனும் இந்தியில் பேசினால் கம்ப்யூட்டர் வாயிலாக என் தாய்மொழியில் அறிந்து கொள்ளவும் முடியும். இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் நடக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இலக்கை எட்டி விடுவோம். </span> விகடன்.com - kavithan - 04-14-2005 நன்றி வசி அருமையான கட்டுரை .. மிக நல்ல சேவைகளை தயாநிதி மாறன் தமிழுக்கு செய்தால் அவருக்கும் என் நன்றிகள். - anpagam - 04-14-2005 வாசிக்க நல்லாத்தான் ஈக்கு... செயல்வடிவமானால்... 8) நடக்குமா... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> பாத்துகொண்டிருக்கவேண்டியதுதான்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :| அதற்க்குள் எத்தனை தொழில்நுட்பங்கள் பூந்துகொள்ளுதோ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
- thamilvanan - 04-14-2005 நன்றி வசிசுதா - Sriramanan - 04-14-2005 திட்டங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெற வேண்டுகிறேன். - hari - 04-14-2005 நன்றி வசி அருமையான கட்டுரை .. மிக நல்ல சேவைகளை தயாநிதி மாறன் தமிழுக்கு செய்தால் அவருக்கும் என் நன்றிகள். Quote:எல்லாவற்றையும்விட மற்றொரு சுவாரஸ்யமான மென்பொருளைத் தயாரித்துள்ளோம். நாம் இன்டர்நெட்டில் பார்க்கும் பல்வேறு இணையதளங்கள் ஆங்கில மொழியில்தான் உள்ளன. இப்போது நாங்கள் உருவாக்கி வரும் மென்பொருளை உபயோகித்தால், அவையெல்லாம் தமிழ் மொழியில் தாமாகவே மொழிபெயர்க்கப்பட்டு விடும் [Tamil Web-browse]. இப்படி பல்வேறு வசதிகளை உருவாக்கப் போகிறோம். - pepsi - 04-14-2005 எனக்கு நான் பார்க்கும் இணையத்தளம் எல்லாம் தமிழிழ் தானே தெரியுது :roll: :roll: :roll: - Danklas - 04-14-2005 pepsi Wrote:எனக்கு நான் பார்க்கும் இணையத்தளம் எல்லாம் தமிழிழ் தானே தெரியுது :roll: :roll: :roll: ¦Àôº¢ «ôÀ ¯í¸û ¸Éɢ¢ø ´§Ã ´Õ ¾Á¢ú ¯Õ¨Åò¾¡ý À¡Å¢ì¸¢È£í¸Ç¡?? ¯¾¡Ã½òÐìÌ À¡Á¢É¢¨Â ÁðÎõ¾¡ý À¡Å¢ì¸¢È£í¸Ç¡??(«ôÀÊ¡¢ý ¯í¸Ç¢¼õ 2ìÌ §ÁüÀð¼ ¾Á¢ú FONTS þÕìÌ «¾É¡§Ä§Â ¯í¸Ç¡ø ±øÄ¡ò¾¢Ôõ Å¡º¢ì¸ Óʸ¢ÈÐ :roll: ) «ôÀÊ À¡Å¢îº£í¸ ±ñ¼¡ø Å¢¸¼É¢Ä ¯ûǨ¾ ¯í¸Ç¡ø ź¢ì¸ÓÊ¡Ð, ÌÓ¾õ ¦ÅôÒĸõ «ôÀÊ º¢Ä þ¨ÉÂò¾Çí¸¨Ç À¡÷ì¸ÓÊ¡Ð.. ¸¡Ã½õ «Å÷¸û §ÅÈ §ÅÈ ¾Á¢ú ¯Õ¨Å À¡Å¢ì¸¢ýÈ¡÷¸û.. :? - Kurumpan - 04-14-2005 Danklas Wrote:pepsi Wrote:எனக்கு நான் பார்க்கும் இணையத்தளம் எல்லாம் தமிழிழ் தானே தெரியுது :roll: :roll: :roll: அட... டங்குக்கு அரசியல் மட்டும்தான் தெரியும் எண்டு நினைச்சேன்.... இந்த விஷயங்களும் தெரியுமா?..... உழல் பணங்களை Net bank மூலம் Transit பண்ணி.. பண்ணி... ஒரு தெளிவு வந்துட்டு போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- jeya - 04-14-2005 நன்றி வசிசுதா அருமையான பிரயோசனமான கட்டுறையை தந்துள்ளீர்கள் தமிழுக்கு நன்மை செய்பவர் யாராயினம் அவருக்கு நன்றிகள் பல..... - ரோபட் - 04-14-2005 நன்றி வசிசுதா புத்தாண்டு அன்று மிக அருமையான தகவல் நட்புடன் றொபேட் - Nada - 04-14-2005 அப்படியானால் இண்டைக்கு அது வெளியாகுது.ஏதோ இவர்களாவது தமிழுக்கு ஏதாவது செய்ய விரும்பகிறார்களே. தகவலை தந்த வசிசுதாவிற்கு நன்றிகள் - AJeevan - 04-14-2005 நன்றி வசிசுதா - Danklas - 04-16-2005 §¾¡Æ÷¸§Ç ¾Á¢ú Å¢ñ§¼Š ¯í¸û ¸Éɢ¢Öõ ¿¢ÚŢ즸¡ûÇÄ¡õ. :roll: þÄźÁôÀ¡!! :| þí§¸ «ØòÐí¸û"þó¾ ¦Áý¦À¡ÕÇ¢ý ÀÃôÀÇ× +-63MB À¢.Ì: þ¨¾ ¯í¸Ç¢ý ¸½½¢Â¢ø ¿¢ÚŢ즸¡ûÙžüìÌ ¯í¸û ¸Éɢ¢ø ¬¸ ̨Èó¾Ð 2GB ÀÃôÀǨŦ¸¡ñ¼ †¡ðÊŠì §¾¨Å «¨¾Å¢¼ «¨¾ ¿¢ÚŢ즸¡ûÙžüìÌ ÁðÎ 300MB ÀÃôÀÇ× §¾¨Å. (º¢Ä §ÀÕìÌ ¸Š¼õ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ÒâóÐ ¦¸¡ñ¼¡ø ºÃ¢) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ¿õÁ¼ ¸½É¢Â¢Ä 200GB þÕì¸ôÀ¡... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->õõõ þýÀò¾Á¢ú ÅóÐÀ¡ÂðÎõ Äñ¼É¢§Ä..
- tamilini - 04-16-2005 Quote:(º¢Ä §ÀÕìÌ ¸Š¼õ.. ÒâóÐ ¦¸¡ñ¼¡ø ºÃ¢)<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - KULAKADDAN - 04-16-2005 நல்ல தகவல் வசி செயல் வடிவம் பெற்றால் மிக நல்லது. - Mathan - 04-16-2005 இந்த இணைப்பில் சிடாக் தமிழ் மென்பொருட்களை தரவிறக்கம் செய்யலாம். http://soundar.blogsome.com/2005/04/15/01-2/ - kavithan - 04-16-2005 நன்றி மதன் அண்ணா - hari - 04-17-2005 http://www.ildc.in/ என்ற இணையத்தளத்தில் தபால் மூலம் மென்பொருளின் இருவெட்டை பெற பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றதா? நான் முயற்சி செய்துபார்த்தேன். சரிவரவில்லை. நீங்கள் யாராவது செய்தால் அறியத்தரவும்! - kavithan - 04-17-2005 வேலை செய்யவில்லை மன்னா |