| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 777 online users. » 0 Member(s) | 775 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,660
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,268
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,764
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| டூப் ரிவி |
|
Posted by: vasisutha - 04-16-2005, 04:04 AM - Forum: நகைச்சுவை
- Replies (8)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>கவுண்(டர்)டென்</span>
அடங் கொக்கமக்கா... வணக்கமுங்க! நேரடியா நிகழ்ச்சிக்குப் போலாண்டா டேய்! கேமரா தலையா! <i>என கவுண்டமணி சவுண்டுவிட, அதிரடி கவுண்ட் டவுன் ஆரம்பமாகிறது. </i>
<img src='http://img92.echo.cx/img92/7929/p1541bl.jpg' border='0' alt='user posted image'>
இந்த வாரம் பத்தாவது இடத்துல இருக்கறது <span style='color:orange'>மன்மதன்!
படத்தோட ஹீரோ இருக்கானே, சரியான பம்பைத் தலையன் பிரேமானந்தா. பள்ளிக்கூட வயசுல வாய்லேருந்து பல்பம் எடுத்துத் தர்றேன்னு சொல்லி ஹீரோவை ஏமாத்திடறா ஒரு பொண்ணு. அந்தக் கடுப்புல வளர்ற ஹீரோ பின்னால பெரிய சாமியாராகி, வாய்லேருந்து லிங்கம் எடுக்கறேன்னு டமாஷ் பண்ணி, பல பொண்ணுங்களை உஷார் பண்றான். ஒரு நாளு, இந்த லிங்க வாயனை பொசுக்குனு போலீஸ் அமுக்கிருது. கடைசியா கோர்ட்டு கொடுக்கற ஷாக்கிங் தீர்ப்போட முடியுது படம். முடி வளர்த்தேன், முடி வளர்த்தேன்... உன்னால் புள்ள வாயிக்குள்ள லிங்கம் எடுத்தேன்!ங்கற பாட்டுல பிரேம்ஸ் அழுது பொரண்டு புழுதி கிளப்புறாரு. அடிக்கடி லிங்கம் எடுக்கும்போது மூக்குல ரத்தம் வர்றதும், அப்பப்போ பேக்கிரவுண்ட்ல ஹேய்... ஹேய்... மன்மதானந்தா! மாட்டப் போறானந்தா!னு வர்ற மியூஸிக்கும் கலக்குதுடா டேய்! ஹீரோயின் திவ்யா மாதாஜிக்கு இதில் பெரிய வாய்ப்பு இல்லேன்னாலும், பிரேம்ஸை டாவடிச்சு, இடையில ஏமாத்திட்டுப் போயிடுது மர்ம ரோசா. மொத்தத்துல மன்மதன்... மண்ணக் கவ்வுன மதன்! <i>என்று அஷ்டகோணலாக முகம் காட்டுகிறார். </i>
<b>கவுண்டமணி:</b> ஆங்... இப்ப அடுத்ததா ஒன்பதாவது இடத்துல இருக்கிற படம் காதல்!
இங்கிலாந்து இளவரசரு வெள்ளெலித் தலையன் சார்லஸ்தான் ஹீரோங்கண்ணா! கமீலாங்கற கவுனு போட்ட கெழவிதான் ஹீரோயினாம். என்னா பெரிய பொல்லாத கதை? பொடலங்கா கதை! ஹீரோ தன்னைவிட வயசுல முத்திப்போன முள்ளங்கி மண்ட கமீலாவ லவ்வுறாரு. ஆனா, அவரோட அரச குடும்பத் துல அதை எதிர்க்கறானுங்க. அதனால கடுப்பாகி, ஹீரோவும் ஹீரோயினும் நாட்டை விட்டு அயர்லாந்து, சுவிட்சர்லாந்துனு நட்டு கழண்டு ஓடிப்போயி ஜாலி பண்றாங்க. டென்ஷனாகி அவங்களைப் பிரிக்குது அரச குடும்பம். அதுல டார்ச்சராகி ஙேஙேஙேஙேஙே னு வளராத தாடியச் சொறிஞ்சிக்கிட்டு அலையறாரு சார்லஸ. அதப் பார்த்து பயந்துபோயி, சார்லஸ மகனுங்களே சேர்ந்து டேய் டாடி நல்லாருடா!னு காதலைச் சேர்த்து வைக்கிறானுங்க. இப்ப ஒரு பாட்டு ஸீன். பாத்தா பாருங்க... பாக்கலைன்னா போங்கடா டேய் <i>என்றதும், கமீலாவை உப்பு மூட்டை தூக்கியபடி சார்லஸ் பாடுகிற பாடல் வருகிறது. </i>
<i>உனக்கென வாழ்கிறேன்,
அரச பதவியும் தருகிறேன்
ரெண்டு மகனுங்க இருக்கையில்
நான் டாவு அடிக்கிறேன்
கமீலாவே.... கமீலாவே...
பண்ணிப்புட்டேன் கண்ணாலமே!</i>
<b>கவுண்டமணி:</b> கெழவன் ரவுசப் பாத்தீங்களா! காதல்... முதியோர் காதல்! அடுத்ததா எட்டாவது இடத்துல இருக்கறது ஜி! நம்ம கேப்டன் விஜயகாந்து நடிகர் விஜயகாந்தாவே வந்து கலக்கியிருக்காருங்கோ. ஒரு நடிகன் அரசியலுக்கு வந்தா என்னாகும்ங்கறதுதான் கதை. நடிகர் சங்க எலெக்ஷன்ல நிக்கிற விஜயகாந்துக்கு கலைத் துறை மந்திரிகிட்டே இருந்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டல் வருது. கடுப்பாகிற விஜயகாந்த், சங்க தேர்தல்ல மட்டுமில்லை, உங்க தேர்தல்லயும் நிப்பேன்னு சொல்லி, பொசுக்குனு அரசியல்ல குதிக்கிற கதை. வழக்கமா காலால அடிக்கிறவரு, இதுல அத்தனை பேரையும் வாயால வசனம் பேசியே கொல்றாரு. கள்ளக்குறிச்சி, மதுரை, தூத்துக்குடினு ஊர் ஊரா மீட்டிங்லயே ஷட்டிங் நடத்தின படம். ஜி... ஓவர் பேச்சு!
அந்தக் கண்றாவியை நீங்களும் கொஞ்சம் பாருங்க சாமியோவ்!
<i>சுற்றி கரை வேட்டிகள் இருக்க நடுவே கன்னச் சதையாட, கண்கள் சிவக்கப் பேசுகிறார் விஜயகாந்த்</i>, என் கையில பட்ட ஒரு திருட்டு வி.சி.டி, நான் பக்கத்துல பார்த்த சி.எம். ஸீட்டு நான் எடுத்துக்கறேன். ஏய்... எனக்கு அரசியல்ல தளும்பு வாங்கவும் தெரியும், அழும்பு பண்ணவும் தெரியும். இப்ப சொல்றேன் கேட்டுக்க... தமிழ் நாட்டுல மொத்தம் முப்பத் தோராயிரம் ஊராட்சி... <i>சட்டென்று கட் ஆகிறது ஸீன். </i>
<b>கவுண்டமணி:</b> அடங்குங்க புள்ளிவிவரத் தலையரே. ச்சீ... தலைவரே! ஓகே., இப்ப ஏழாவது இடத்துல ஒரு திகில் படம் ராம்
<i>சிறை காம்பவுண்ட் சுவரின் மேல் காவி வேட்டி வெற்று உடம்போடு ஒற்றைக்காலில் நின்றபடி மந்திரம் சொல்கிறார் ஹீரோ... வானாகி மண்ணாகி, சங்கர்ராமன் மர்டராகி, ஜெயிலாகி பெயிலாகி, காஞ்சி கலவையாகி... என்ப தோடு காட்சி கட் ஆகிறது.</i>
<b>கவுண்டமணி:</b> சூப்பர்ல! அடுத்து ஆறாவது இடத்துல ஒரு கிளுகிளு படமுங்கோ. காக்கிவாடன் பட்டி மயிலு, எம்.எல்.எம். குயிலு ஜெகஜ்ஜால ஜெயலட்சுமி ஹீரோயினா கலக்குற தேவதையைக் கண்டேன். பொதுவா போலீஸ்கிட்டே கேஸ் கொடுப்போம். அந்த போலீஸ் மேலயே ஒரு பொம்பள சரமாரியா கேஸ் போடறாள்னு ரொம்ப வித்தியாசமா திங்க் பண்ணியிருக் கானுங்க. படத்தோட ஓபனிங்லயே பல தொப்பைத் தலையனுங்க சேர்ந்து, துண்டக் காணோம் துணியக் காணோம், தூங்கும்போது துப்பாக்கியக் காணோம்... என்னடி செஞ்சே நீதான் என்னடி செஞ்சே, தொடாமலே தூக்குறியே, சி.பி.ஐ|யில தாக்குறியே என்னடி செஞ்சே நீதான் என்னடி செஞ்சே?னு பாடற சோகக் குத்து சூப்பர். இன்டர்வெல் வரைக்கும் ஜெயலட்சுமி கூட நிக்குற அழகர்சாமி, திடுதிப்புனு அம்மணிக்கு எதிரா கோல் அடிக்கறது செம ட்விஸ்ட்.
<i>தேவதையைக் கண்டேன்...
தெருவில் நின்றேன்!</i>
<b>கவுண்டமணி:</b> இப்ப நாம அடுத்ததா பார்க்கப் போறது அஞ்சாவது இடத்தைப் பிடிச்ச படம்... அல்டிமேட் அழுகை ஸ்டார் ஃபீலிங் தலையர் வைகோவோட ஆட்டோகிராஃப்
<i>குலுங்கிக் குலுங்கி அழுகிறார் வைகோ. அதைப் பார்த்துப் பாடுகிறார் கலைஞர், ஒவ்வொரு துளிகளுமே சொல்கிறதே, என் மேல் தம்பி வைத்த பாசத்தை. அழுகைக்கு அர்த்தம் தெரிகிறதே, தம்பி ஸ்டாலின் மேல் நீ வைத்த நேசத்தை. அதைக்கேட்டு உணர்ச்சிவசப் பட்டுக் குமுறிக் குமுறி அழு கிறார் வைகோ.</i>
<b>கவுண்டமணி:</b> ஆவூன்னா அழுவாச்சிதான்! ஆட்டோகிராஃப் அழுகை கிராஃப்! ஓகே. நாலாவது இடத்தில் மாயாவி!
மர்மத் தலையன் ஜோஷ்வா ஸ்ரீதர்தான் ஹீரோ. நடாஷானு ஒரு அப்பாவிப் பொண்ணு ஹீரோயினு. கதை ஒரு மண்ணும் புரியலீங்கோ. திடீர்னு ஹீரோ வும் ஹீரோயினும் காணாமப் போறாங்க. கடத்தல்னு இவனுங்க சொல்றானுங்க, இல்லைனு அவனுங்க சொல் றானுங்க, கல்யாணம் பண்ணிட்டாங்கனு இவனுங்க சொல்றானுங்க, இல்லைனு அவனுங்க சொல்றானுங்க, காதல்னு இவனுங்க சொல்றானுங்க, நட்புனு அவனுங்க சொல்றானுங்க... என்னங்கடா டேய்! விளையாடறீங்களா... ஆனா, ஜோஷ்வா பாடற மீடியா ஏண்டா என்ன சுத்துது? கீ போர்டுக்குள்ள ஆந்த கத்துது!ங்கற பாட்டு சூப்பர். இப்ப அந்த ஜோஷ்வா நம்ம ஸ்டுடியோவுக்கு வந்திருக்காரு <i>என்கிறபோதே ஜோஷ்வா உள்ளே நுழைகிறார். </i>
<b>கவுண்டமணி:</b> வா மியூஸிக் வாயா! மாயாவி படம் ஒண்ணும் புரியலியே?
<b>ஜோஷ்வா:</b> நாங்க நல்ல நண்பர்கள்தான்.
<b>கவுண்டமணி:</b> அத நான் உன்கிட்ட கேட்டனா... ஏற்கெனவே இருக்கற இம்சையில ஏண்டா இப்படி எக்ஸ்ட்ரா டார்ச்சர் பண்றீங்க! ஒழுங்கா படத்தோட கதையைச் சொல்லு. படுவா பிச்சுப்புடுவேன் பிச்சு!
<b>ஜோஷ்வா (பயந்து போய்):</b> கடத்தல் இல்லை. நாங்க விரும்பிதான் டூர் போனோம். கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். ஆனா, சேர்ந்து இருப்போம். அதாவது...
<b>கவுண்டமணி (டென்ஷனாகி):</b> டேய்! கன்ஃபியூஸ் மண்டையா... ஓடிப்போயிரு. இனிமே இந்த ஏரியா பக்கம் உன்னைப் பார்த்தேன், மவனே கடிச்சி வெச்சிருவேன்... ஆமா <i>எனப் பாய, அலறி ஓடுகிறார் ஜோஷ்வா.</i>
<b>கவுண்டமணி:</b> அப்பிடியே பாகிஸ்தான் பார்டர் பக்கம் ஓடிரு. மாயாவி... எஸ்கேப்! <i>(ஸ்க்ரீனைப் பார்த்து)</i> மகா ஜனங்களே! இதுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை. அடுத்ததா மூணாவது இடத்தில், கலைஞர் கதை வசனத்துல புன்னகை மன்னன் துரை முருகன் கலக்கும் கண்ணம்மா. படத்துல கதையெல்லாம் கேட்கக் கூடாது. ஸீனுக்கு ஸீன் ஒரு வில்லி அம்மாகிட்டே ஹீரோ ஆவேசமா வசனம் பேசிட்டு வெளிநடப்பு பண்றதுதான் கதை. சரியில்லை நாட்டு நடப்பு, அதனால் செய்கிறேன் வெளிநடப்பு!ங்கற பஞ்ச் டயலாக் வரும்போதெல்லாம் உடன்பிறப்புக்களின் விசிலு காது கிழிக்குது சாமீயோவ்.
படம் முழுக்க துரைமுருகன் இந்தா இந்தானு ஏகப்பட்ட குத்து டான்ஸை போடறாரு. சபையில என்ன நடந்ததுனு துரைமுருகன் தன் தலைவர்கிட்டே விவரிக்கிற காட்சிகள் சுவாரஸ்யம். அதை நீங்களே பாருங்க <i>என்றதும் ஸீன் வருகிறது.</i> தலைவரே! அந்தம்மா வரும்போது அமைச்சர் களெல்லாம் இந்தா இப்படி ஆடறாங்க. ந்தா... ந்தா... ந்தா! <i>என்றபடி வளைந்து நெளிந்து ஆடுகிறார். வேட்டியை மடித்துக்கட்டி உருள்கிறார்.</i> அப்புறம் அந்தம்மா பேசும்போது இப்படி கையத் தட்டி பல்டி அடிக்கிறாங்க! <i>என்றபடி</i>, ஆஹா! மோனோ ஆக்டிங் செஞ்சே முதுகு பழுத்துரும் போலயிருக்கேடா <i>என முனகுவதோடு காட்சி முடிகிறது.</i> கண்ணம்மா... அம்மம்மா!
<b>கவுண்டமணி:</b> அடுத்ததா இரண்டாவது இடத்தில் வங்கப் புளி கங்குலியோட ஆக்ஷன் ரீப்ளே ஸ்டோரி திருப்பாச்சி.
பேட்ட நேராப் புடிச்சி போல்ட் ஆனாத் தான் அவுட்டு. பேட்ட திருப்பிப் புடிச்சி அவுட்டானா அது டவுட்டு!னு பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டே பேட்ட தலைகீழா பிடிச்சி ஆடி சரமாரியா டக் அவுட் ஆகறாரு ஹீரோ புளி மூட்டை மண்டையன், வாத்துத் தலையன் கங்குலி. பட்டாசு பாலுவா வர்ற சச்சின் டெண்டுல்கரோட லோக்கல் சண்டை, சகட சனியனா வர்ற இன்ஸமாமோட இன்டர்நேஷனல் சண்டைனு வெத்து வாய்லயே மொழம் போட்டுக்கிட்டிருக்காரு ஹீரோ. கடைசியா நாடே கூடி நடத்துற போராட்டத்துல அவரை டீம்லயிருந்து தூக்கறாங்களா... இல்லையாங்கிறதுதான் கதை. திருப்பாச்சி... வெறுப்பாச்சி! <i>என்றபடி, நாக்கைத் துருத்து கிறார்.</i>
<b>கவுண்டமணி:</b> முதல் இடத்தைப் பிடிச்சிருக்கிறது... ஆய்த எழுத்து!
சந்திரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ்னு மூணு ஹீரோக்கள் ஒரே நேரத்தில் சந்திச்சு சவால் விடற கதை. இந்தப் படம் இந்த வாரம்தான் ரிலீஸாகுது. ஆனா, அதுக்குள்ளே பரபரப் பாகிருச்சு. ஒருத்தருக்கு தன்னோட சூப்பர் ஸ்டார் பட்டம் போயிருமோனு பயம். இன்னொருத்தருக்கு அந்த சூப்பர் ஸ்டார் பேரைத் தட்ட முடியுமானு நப்பாசை. மூணா வது ஆளுக்கு, படப் பேரே அடிக்கடி பிரச்னையாகுதேனு கவலை. இப்படி மூணு பேரு தங்களோட வாழ்க்கையில் ஒண்ணா சேர்ந்து நிக்கிறதுதான் ஆய்த எழுத்து... இவங்க தலையெழுத்து! <i>என்கிற கவுண்டமணி,</i> அட! நெத்திலி மீனு நேயர் தலையனுங்களா, புரோகிராம் முடிஞ்சு போச்சுங் கடா! <i>என்று ஸ்கிரீனிலேயே உதைவிடுகிறார்</i>. </span>
thanks
vikatan.com
|
|
|
| சினிமா மாயை |
|
Posted by: vasisutha - 04-15-2005, 10:34 AM - Forum: சினிமா
- Replies (11)
|
 |
<b>கட்டுரையின் நோக்கம் பற்றி...
<img src='http://www.vikatan.com/cinema/2005/mar/chinnarasu_p.jpg' border='0' alt='user posted image'>
சின்னராசு
திரை உலகத்தால் கவரப்படாத மனிதரே இல்லை என்கிற அளவுக்கு ஈர்ப்பு சக்தி கொண்டு விளங்குகிறது சினிமா... இப்போது சினிமாவுக்கு மவுசில்லை! சின்னத்திரைக்கே மவுசு என்று சிலர் சொல்லிக் கொண்டாலும் சினிமாவை வைத்துத்தான் சின்னத்திரை காலத்தை ஒட்டுகிறதே தவிர, சினிமா தொடர்புடைய எதையும் ஒளிபரப்பாமல் அதனால் செயல்பட முடியாது.
மனிதன் மேலெழுந்தவாரியாக வாழ்க்கையின் மகிழ்ச்சிகளாகக் கருதுகிற ஆட்டம், பாட்டம், பெண்கள், பொழுது போக்கும் இன்பங்கள் எனக் கருதுபவை எல்லாம் திரைப்படத் துறையின் தொழிலோடு விரவிக் கலந்துள்ளவையாக இருக்கின்றன.
மற்ற துறைகளில் ஒருவன் புகழையும், செல்வத்தையும், தேட வெகுகாலம் ஆகும் என்கிற நிலையில் திரைத்துறையால் ஒருவன் நடிகனாக அறிமுகமானதுமே நாடு முழுவதும் அறியப்பட்டவனாகப் புகழ் அடைந்து விடுகிறான். மிகக் குறுகிய காலத்திலேயே கார், பங்களா என பளபளப்பான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாகி விடுகிறான்.
எனவே இந்த புகழும், செல்வமும், பளபளப்பும் மட்டுமே வெளியே இருந்து திரையுலகைப் பார்ப்பவர்களுக்குத் தெரிய வருவதால் சுலபமாக அந்தத் துறை மீது மோகம் கொண்டு விடுகிறார்கள், அதே சமயம் இந்தத் திரையுலகில் ஓகோவென வாழ்ந்த அனைவருமே ஒரு நாள் தான் பெற்ற புகழ், செல்வம் என அனைத்தையும் இழந்து விட்டுப் போகவே நேர்ந்திருக்கிறார்கள்.
இதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை என்றாலும் இதுதான் உண்மை. இந்த உண்மையைப் பகிரங்கப்படுத்துவதே Ôசினிமா மாயைÕ என்ற இந்த கட்டுரை தொடரின் நோக்கமாகும்.
கட்டுரையாளர் பற்றி...
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பிறந்த சின்னராசு நீண்ட கால பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வருபவர்.
காவியங்கள், கவிதைகள், கவிதை நடை கதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், நாடகங்கள், அரசியல், சமூகம், கலை பற்றிய கட்டுரைகள் முதலியன இவர் எழுத்துப் பணியில் அடங்கும். தற்சமயம் திருக்குறளுக்கு குறுங்கதைகள் எழுதும் பணியை மேற்கொண்டுள்ளார். ஜூனியர் விகடனில் அரசியல் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பொதுவாக இவருடைய அரசியல், சமூகம், கலைகள் பற்றிய கட்டுரைகளில் கூற வந்த சேதிகளுக்கு தொடர்புடைய அரிய சம்பவங்களையும், மாமனிதர் வாழ்வு நிகழ்ச்சிகளையும் அணி அணியாகச் கோர்த்து கட்டுரையை சுவையுடையதாகவும், பயன் தருபவையாகவும் வழங்குவதில் திறன் வாய்ந்தவர்.</b>
<b>பாகவதருக்கு நேர்ந்த பரிதாபம் </b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/mar/pagavadar_21.jpg' border='0' alt='user posted image'>
[b]சின்னராசு
சினிமா உலகமும், நாம் வாழும் உலகத்தைப் போல் ஒரு மாயைதான்! எத்தனைதான் வாழ்ந்தாலும் முடிவில் ஒன்றுமே இல்லையென உலக வாழ்க்கையைப் பற்றி கூறுவதுபோல், சினிமா உலகத்தில் எத்தனைப் புகழ்பெற்றாலும், எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் ஒருநாள் அவை எதுவுமே நிலைக்கவில்லை என்ற முடிவையே காண நேரிடுகிறது.
நமது தமிழ் சினிமா உலகையே எடுத்துக்கொண்டால், இன்றிலிருந்து ஒரு அறுபது ஆண்டுகால நிகழ்ச்சிகளை பார்ப்போமேயானால், ஓகோவென வாழ்ந்த சினிமா உலக நட்சத்திரங்களும், கலைஞர்களும் பெரும்பாலும் சம்பாதித்தப் புகழையும், பொருளையும் ஒருநாள் இழந்துவிட்டேப் போயிருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் சொந்தப் படங்களை தயாரித்ததனாலேயே அந்த சோக முடிவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சொந்தப்படம் எடுக்காமல் சம்பாதித்ததை சிக்கனமாக வைத்துக்கொள்ள முயன்றவர்களும் தேடிய செல்வத்தை எப்படியோ இழந்துதான் போயிருக்கிறார்கள். சினிமா உலக மொத்த வரலாற்றில் எண்ணிச் சிலர் மட்டுமே தப்பித்திருப்பார்கள் போலும்.
தமிழ் சினிமா உலகத்தில் அறுபது ஆண்டுகால வரலாற்றில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர், சகலகலா வல்லவன் பி.யு.சின்னப்பா, ஆகிய மூவரும் புகழின் உச்சியில் வாழ்ந்த நடிகர்கள். பேரும், புகழும், செல்வமும் ஈட்டிய இந்த மூன்று மகத்தான கலைஞர்களின் முடிவு என்ன?
கலைவாணரும், பாகவதரும் தாங்கள் சம்பாதித்ததை எல்லாம் இழந்ததற்கு காரணம் அவர்கள் மீது அபாண்டமான கொலைப்பழி விழுந்து சுமார் இரண்டு ஆண்டு காலம் சிறைபட நேர்ந்ததே ஆகுமென சிலர் கூறுவார்கள்.
ஆனால் அது காரணமல்ல:
கலைவாணருக்கும் பாகவதருக்கும் சிறைப்பட்ட காலத்தில் திரைப்பட உலகத்தினர் பலர் பற்றி கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. தங்களை வைத்து பெரிய லாபம் அடைந்தவர்களே தங்களுக்கு சோதனை வந்த காலத்தில் நழுவிக்கொள்ள ஒதுங்கிக் கொள்ள முயன்றதைக் கண்டார்கள்.
இந்த அனுபவத்தினால் கலைவாணர் தான் விடுதலை ஆனதும் தன்னைத் தேடிவந்த ஏராளமான பட வாய்ப்புகளை புறக்கணித்தார். தங்களிடம் மிக அனுதாபமாய் இருந்த சிலர் படங்களில் மட்டும் ஒப்புக் கொண்டார்.
நமது சினிமா உலகத்தில் புகழோடு இருக்கிற காலத்தில் வெளியார் படங்களிலும் நடித்துக்கொண்டு இடையே சொந்தபடமும் தயாரித்துக்கொண்டால், தன் சொந்தப்படத்தை ஓரளவு லாபத்துடன் விற்பது சுலபமாக இருக்கும். அப்படியல்லாமல் சொந்தப்படத் தயாரிப்புக்காக வெளிப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது படத்தை எடுக்க மட்டும் செலவழித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?
சொந்தப்படம் வெளிவந்து வெற்றியடையாமல் போனால் அதனால் ஏற்பட்ட பண இழப்பும், கடன் பிரச்னைகளும் அடுத்து எழுந்திருக்கவே விடாது. அன்றிலிருந்து இன்றுவரை திரைப்படக் கலைஞர்கள் அத்தனை பேரின் நிலையும் இதுதான்.
கலைவாணர் வழக்கில் சிக்குவதற்கு முன் திரையுலகில் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் சொந்தப்படங்களை தயாரித்ததுண்டு. அப்போதெல்லாம் அதன் லாபநட்டம் அவரை சிறுதும் பாதித்ததில்லை. ஆனால் விடுதலை ஆகி வெளிவந்த பின்னால், பெரும்பாலான வெளியார் படங்களை தவிர்த்து சொந்தப் படத் தயாரிப்பிலேயே ஈடுபட்டதால் ஏற்பட்ட பெரும் கடன் பிரச்னை அவரை எழவே விடவில்லை.
கலைவாணர் விரைவில் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கையில் கலைவாணர் நிறுவனம் சார்பில் அவர் துணைவியார் டி.ஏ.மதுரம் தங்கள் சொந்தப் படமாக Ôபைத்தியக்காரன்Õ என்ற படத்தைத் துவக்கினார்.
பட வேலைகள் நடக்க ஆரம்பித்தன. கலைவாணர் விடுதலை தாமதமாகும் என்ற சூழ்நிலையில் அவர் இல்லாமலேயே படம் நிறைவு அடைகிற மாதிரி கதை அமைத்தார்கள்.
<img src='http://www.vikatan.com/cinema/2005/mar/ns_krishnan_21.jpg' border='0' alt='user posted image'>
வழக்கமாக கலைவாணரின் ஜோடியாக மட்டுமே நடித்துவந்த டி.ஏ.மதுரம் இந்த படத்தில் ஒரு புதுமைப் பெண்ணாக, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் காதலியாக நடித்தார். எம்.ஜி.ஆர். அந்தக் கதைப்படி ஒரு திருட்டு வழக்கில் பழி சுமத்தப்பட்டு சிறைக்குப் போய்விட, டி.ஏ.மதுரத்தை ஒரு பணக்கார முதியவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அந்த முதியவரோடு டி.ஏ.மதுரம் வாழாத நிலையில் ஒருநாள் முதியவர் மரணமடைந்துவிடுவார். இந்நிலையில் எம்.ஜி.ஆர். தண்டனை முடிந்து விடுதலை ஆகிவிட, அவரையே டி.ஏ.மதுரம் மறுமணம் செய்து கொள்வார்.
இந்தப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கலைவாணர் விடுதலை ஆனார். எனவே கலைவாணரை வைத்து சில காட்சிகள் எடுத்து படத்தில் சேர்க்க விரும்பினார்கள்.
எனவே கலைவாணருக்கு ஜோடியாக இன்னொரு பாத்திரத்தை உருவாக்கி அதிலும், டி.ஏ.மதுரத்தை நடிக்க வைத்தார்கள். ஆக Ôபைத்தியக்காரன்Õ படத்தில் டி.ஏ. மதுரத்திற்கு இரட்டை வேடம்.
இந்த படத்தில் கலைவாணருக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு காட்சி இருந்ததென்றால், அது கலைவாணர் சிறைக்குப் போய்வந்த அனுபவத்தை டி.ஏ.மதுரத்திடம் ஒரு பாடலைப் பாடிக் காட்டுகிற காட்சியேயாகும்.
Ôஜெயிலுக்குப் போய்வந்த சிரேஷ்டர் மக்களை சீர்திருத்துவாங்கோÕ என்ற பாடலே அது. அந்த பாடலில் சில வரிகள் கலைவாணரின் தன்னிலை விளக்கமாகும்
Ôபய கெட்டப் பேர்வழிங்க, அடிதடி
பண்ணிக்கிட்டுப் போனவங்க, திருடியும்
பொண்ணைத் தொட்டு வம்பு பண்ணியும்
போனவங்க, சோம்பேறிங்க
புத்திகெட்டு சக்திகெட்டு
போலீசாரால் அடிபட்டு பிடிபட்டுப்
போனவங்க உண்டுங்க
அதுவெல்லாம் தப்புங்க
ஆனா நான் அப்படி இல்லீங்க
பொறவு எப்படின்னு கேப்பீங்க
பொறாமை சிலர் கொண்டதாலே
பொய்யே உண்மையாகிப்
போச்சுதுங்க.. உருட்டும்
பொறட்டும் வரவர உலகத்தில
ஓரேயடியா பெருகிப் போச்சுதுங்க
ஒற்றுமை இல்லீங்க நமக்குள்ளே
ஒற்றுமை இல்லீங்கÕ
என்று கலைவாணரின் அந்தப் பாடல் தொடரும்.
ஆக Ôபைத்தியக்காரன்Õ படம் திரையிடப்பட்டு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனை அடுத்து கலைவாணர் Ôநல்லதம்பிÕ என்ற படத்தைத் துவக்கினார். இந்தப் படத்துக்கு அறிஞர் அண்ணா முதன்முதலாக திரைக்கதை, வசனம் எழுதினார்.
படம் உயர்ந்த நோக்கங்களோடு தயாரிக்கப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக விமர்சனம் எழுதினார். Ôநல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும்; கருத்து நிறைந்த ஒரு படத்தைக் காணவேண்டும் என்றால், Ôநல்லதம்பிÕ படத்தைப் போய் பாருங்கள்...Õ என்ற பொருள்பட அவர் விமர்சனம் அமைந்தது.
இருப்பினும் நல்லதம்பியும் வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை.
அடுத்து கலைவாணர் Ôமணமகள்Õ என்ற படத்தைத் துவக்கினார். இந்தப் படத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். நாட்டிய பேரொளி பத்மினி முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். கிருஷ்ணன் பஞ்சு படத்தை இயக்க ஆரம்பித்து இடையில் விலகிவிட கலைவாணரே பாக்கிப் படத்தை இயக்கி முடித்தார்.
Ôமணமகள்Õ படம் வெற்றிப்படமாக அமைந்தது.
இதனை அடுத்து கலைவாணர், Ôபணம்Õ என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். பராசக்தி படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதும் அதைத் தொடர்ந்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டதால், இந்த படத்திற்கும் கருணாநிதியே வசனம் எழுதலானார். பரபரப்பான புகழில் வரவேற்கப்பட்ட சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்கலானார்.
பராசக்தி தாக்கம் ரசிகர்களுக்கு இருந்ததினால், அதே மாதிரி படத்தை எதிர்பார்த்ததினால், நன்றாக எடுக்கப்பட்டும் Ôபணம்Õ திரைப்படம் பெரிய தோல்வியை அடைந்தது. பராசக்தியில் சிவாஜி, வழக்கு மன்றத்தில் நீண்ட வசனம் பேசி ரசிகர்களை ஆரவாரம் செய்யவைத்தார். பணம் படத்திலும் கடைசியில் ஒரு நீதிமன்ற காட்சி. ஆனால் அதில் சிவாஜி கூண்டில் பேசாமடந்தையாக நின்று கொண்டிருப்பார். இதுவெல்லாம் படத் தோல்விக்கு ஒரு காரணம்.
Ôபணம்Õ படத்தின் தோல்விதான் கலைவாணரை மீளா முடியாத கடனில் தள்ளியது.
இந்நிலையில் அடுத்து Ôபடித்த முட்டாள்Õ என்று ஒரு படத்தைத் தயாரிக்க துவக்கவிழாவெல்லாம் நடத்தினார். கவிஞர் கண்ணதாசன்தான் வசனம் எழுதுவதாக இருந்தது. ஆனால் கலைவாணரின் பணப்பிரச்னை அந்த படத்தை தயாரிக்க விடாமலே செய்தது.
பணம் படத்தின் நட்டத்தினால் ஏற்பட்ட பெரும் கடன் வட்டிக்கு மேல் வட்டியாக வளர்ந்தது. அதன்பின் வெளியார் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தும் ஏற்கனவே உள்ள கடனின் வட்டியை கட்டுவதே பெரும்பாடாகி கலைவாணர் பிரச்னையில் சிக்கி தவிக்கலானார்.
எனவே கலைவாணர் சிரமத்திற்கு சிறைவாசம் காரணமல்ல; சொந்தப்பட தயாரிப்புகளே காரணம்.
கலைவாரணரை அடுத்து பாகவதரும் சிறை மீண்டதும் தேடிவந்த பட வாய்ப்புகளை ஏற்கவில்லை.
பாகவதரும், கலைவாணரும் பொறாமை கொண்டவர்களின் சதியில் மாட்டி சிறையில் புகுந்தார்கள் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததால், அறிஞர் அண்ணா அவர்கள் இருவரையும் அவ்வப்போது சிறையில் சந்தித்து வந்தார்.
பாகவதர் விடுதலையானதும் அவருக்கு ஒரு திரைப்படம் உடனடியாக வேண்டும் என்பதற்காகவே, Ôசொர்க்கவாசல்Õ திரைக்கதை வசனத்தை எழுதி, அந்தப் படத்தைத் தயாரிக்க ஜுபிடர் சோமுவையும் தயார்படுத்தி வைத்திருந்தார் அறிஞர் அண்ணார்.
பாகவதரை சந்தித்து அண்ணா இந்தப் படம் பற்றி பேசியபோது, இன்னொரு காரணத்தாலும் படத்தை ஒப்புக்கொள்ள தயங்கினார் பாகவதர்.
அவர் அண்ணாவிடம், Ôஉங்களுக்கு என்மீது பெரிய பற்றுதல் உண்டு என்பதினால் எனக்கும் உங்களிடம் பெரிய மரியாதை உண்டு. ஆனால் நீங்கள் கடவுள் மறுப்பு இயக்கத்தை சார்ந்து இருக்கிறீர்கள். நானோ பக்தி படங்களில் மட்டுமே நடித்து வந்திருப்பவன். நான் தங்கள் வசனத்தில் நடிக்கும்போது ஏதாவது பிரச்னை ஏற்படலாம். மன்னித்துவிடுங்கள்Õ எனச் சொல்லி அந்தப் பட வாய்ப்பை ஏற்கவில்லை.
பாகவதர் சொந்தப் படம் தயாரிக்கவே முனைந்தார். Ôராஜமுக்திÕ என்ற படத்தை எடுக்க முடிவு செய்து தன்னுடன் எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, பி.பானுமதி, வி.என்.ஜானகி போன்றோரையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார். வசனம் எழுதியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன்.
தமிழ்நாட்டுத் தயாரிப்பாளர்கள் வேண்டாம் என்ற முடிவோடு தமிழ்நாட்டிலும் படத்தை தயாரிக்க விருப்பமின்றி பம்பாயில் போய் அந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தார்.
அது 1948 ஆம் வருடம். பம்பாயில் ஒரு பங்களாவைப் பிடித்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைவரையும் பாகவதர் தங்க வைத்து, பம்பாய் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்தார்.
அப்போது ஒருநாள் எதிர்பாராமல் ஒஎரு பெரிய அதிர்ச்சியான செய்தி வெளியாகி பம்பாய் நகரமே குலுங்கியது.
ஆம்; அண்ணல் காந்தியடிகள் டில்லியில் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோது சுடப்பட்டார் என்ற செய்தியே அது.
அவ்வளவுதான் பம்பாயே வெட்டுக் குத்து என பெரிய ரணகளமாயிற்று.
பாகவதர், எம்.ஜி.ஆர். என ராஜமுக்தி படக் குழுவினர் அனைவரும் தங்கள் தங்கியிருந்த பங்களாவை விட்டுப் பத்து நாட்கள் வரை வெளியே வரமுடியாமல் சிறைப்பட்டனர்.
அந்த பெரிய அமளியில் இருந்து மீண்ட நேரத்தில் வசனம் எழுதிவந்த புதுமைப்பித்தன் பெரும் நோய்க்கு இலக்காகி படத்தின் பிற்பகுதி வசனங்களை எழுதித்தர முடியாமல் போனார். பிறகு இன்னொருவர் பாக்கி காட்சிகளை எழுதி முடித்தார்.
எப்படியோ, பல சிரமங்களை தாங்கி முடிவடைந்த Ôராஜமுக்திÕ திரைப்படம் வெளிவந்தபோது எதிர்பாராத நிலையில் பெரிய தோல்வியை அடைந்தது.
இந்தப் படத்தின் மூலம் பாகவதருக்கு ஏற்பட்ட ஏராளமான கடன் அவர் அதிலிருந்து மீளமுடியாமல் செய்தது.
ஆக கலைவாணருக்கும் பாகவதருக்கும் சிறைவாசத்தால் ஏற்பட்ட சிக்கலைவிட, சொந்தப்பட தயாரிப்பு மூலம் ஏற்பட்ட மீளா பிரச்னைதான் இறுதிவரை தொடர்ந்தது.
-- தொடரும்
நன்றி vikatan.com
|
|
|
| நீங்கள் எங்கிருந்து எங்க வந்தீங்க...??! |
|
Posted by: kuruvikal - 04-15-2005, 10:18 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (12)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41026000/gif/_41026369_genographic_map416.gif' border='0' alt='user posted image'>
மனித ஆண்களில் காணப்படும் Y நிறமூர்த்த டி என் ஏ யின் அடிப்படையில் மனிதக் குடிபெயர்வைக் காட்டும் படம்...! (10,000 பூர்வக்குடி மக்களிடமிருந்து பெறப்பட்ட டி என் ஏ மாதிரிகளின் பிரகாரம்..! <span style='font-size:16pt;line-height:100%'>பூர்வீகத்தைத் தொலைப்போரே...கவனம்...கணக்கில் எடுக்கப்படமாட்டீங்க உலகத்தில....!</span>)
(Map shows first migratory routes taken by humans, based on surveys of different types of the male Y chromosome. "Adam" represents the common ancestor from which all Y chromosomes descended
Research based on DNA testing of 10,000 people from indigenous populations around the world)
உலகின் ஆதி மனிதன் யார்.... அவன் எங்கிருந்து எப்படியெல்லாம் குடிபெயர்ந்தான்...எங்கெங்கு எப்படியானவர்கள் வந்து சேர்ந்தார்கள்.. நவீன மனிதரில் பல வகைத் தோற்றத்துக்குமான காரணங்கள் காரியங்கள் என்ன...இவற்றை 5 வருடத் திட்டத்தின் கீழ் மரபணு ரீதியில் ஆய்வு செய்ய மனித வரலாற்றுத்துறை சார்ந்த ஆய்வாளர்கள் முடிவு செய்து பல இடங்களிலும் வாழும் பல்லின மனிதர்களிடத்திலும் இருந்து டி என் ஏ மாதிரிகளைப் பெறவுள்ளனராம்...! குறிப்பாக அமெரிக்கா அவுஸ்திரேலியாவில் வாழும் பூர்வக் குடிமக்களிடம் இருந்தும் டி என் ஏ மாதிரிகள் பெறத் திட்டமிடப்பட்டுள்ளன...!
(A project spanning five continents is aiming to map the history of human migration via DNA.)
இந்த ஆய்வுக்காக உலகம் பூராவும் வாழும் பூர்வக்குடி மற்றும் குடிபெயர்ந்து வாழும் கிட்டத்தட்ட 0.1 மில்லியன் மனிதர்களிடமிருந்து டி என் ஏ மாதிரிகள் பெறப்படவுள்ளன...!
இந்த ஆய்வின் போது ஆண்களில் தனித்துவமாகக் காணப்படும் Y நிறமூர்த்தம் மற்றும் இழைமணி என்று அழைக்கப்படும் கலப்புன்னங்கம் கொண்டுள்ள டி என் ஏ க்கள் பெரிதும் கருத்தில் கொள்ளப்படவுள்ளன...!
ஆய்வுகூடம் மூலமும் கணணிப் பகுப்பாய்வின் மூலமும் தொடரப்படவுள்ள இவ்வாய்வுக்கு ஆதரவு அளிப்போர் National Geographic, IBM மற்றும் Waitt Family Foundation charity
இவர்கள் அடைய நினைக்கும் முக்கிய குறிக்கோள்களை விரிவாக கீழே ஆங்கிலத்தில் பாருங்கள்...
Who are the oldest populations in Africa - and therefore the world?
Did Alexander the Great's armies leave a genetic trail?
Who were the first people to colonise India?
Is it possible to obtain intact DNA from the remains of Homo erectus and other extinct hominids?
How has colonialism affected genetic patterns in Africa?
Was there any admixture with Homo erectus as modern humans spread throughout South-East Asia?
Is there any relationship between Australian Aboriginal genetic patterns and their oral histories?
What are the origins of differences between human groups?
தமிழர்கள் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்...????! சிங்கத்தில் இருந்து வந்த சிங்களவர்கள் (உலகின் அதிசயப் பிறவிகள்) எங்கிருந்து வந்தார்கள் இவற்றிற்கும் விடை கிடைக்குமா...??! கிடைத்தால் பெரிய நிம்மதி கிடைக்கும் தெற்காசிய பிராந்தியத்துக்கு...!
தகவல் மூலம்... பிபிசி விஞ்ஞானம்.. மற்றும் தமிழில்... http://kuruvikal.blogspot.com/
|
|
|
| "மும்பை எக்ஸ்பிரஸ்" படத்துக்கு எதிர்ப்பு:திரை கிழிப்பு |
|
Posted by: vasisutha - 04-15-2005, 10:14 AM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
சென்னை ஏப்ரல் 15: நடிகர் கமலஹாசன் நடித்து வெளிவந்திருக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சில திரையரங்குகளில் திரை கிழிப்பும் நடந்தது.
கமலஹாசன் தனது புதிய படமான மும்பை எக்ஸ்பிரஸை திரையிடுவதற்கு, தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தி வரும் டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், அப்படம் இதே பெயருடன் திரைக்கு வந்தால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றம் செய்யப்படாமல், நேற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் எழும்பூர் பகுதியில் உள்ள மும்பை எக்ஸ்பிரஸ் திரையிடப்பட்டிருந்த ஒரு திரையரங்கில், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த 150 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், படம் பார்க்க வந்திருந்த கமல் ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஏராளமாக குவிக்கப்பட்ட போலீசார், ஆர்ப்பாட்டம் செய்த 150 பேரையும் கைது செய்தனர்.
அதே போல் சென்னை நங்கநல்லூரிலும் திரையரங்குமுன் ஆர்ப்பாட்டம் செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். நீலாங்கரைப் பகுதியில் கோஷம் போட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மும்பை எக்ஸ்பிரஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்குன்றத்தில் உள்ள ஒரு திரையரங்கில் மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரை கிழிக்கப்பட்டது. நள்ளிரவில் அந்த திரையரங்குக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், பிளேடால் திரையை கிழித்தெறிந்தனர். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஈரோட்டில் உள்ள ஒரு திரையரங்கிலும் திரை மீது சோடா பாட்டில் வீசப்பட்டதால் திரை கிழிந்தது.
தஞ்சையில் படம் திரையிடப்பட்ட திரையரங்கு முன் வைக்கப்பட்டிருந்த படத்தின் டிஜிட்டல் பேனரை ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் ஒருவர் கிழித்தெறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்களுக்கும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது போலீசார் தலையிட்டு, பேனரை கிழித்தவரையும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும் கைது செய்தனர்.
விழுப்புரம், திருக்கோவிலூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் மிரட்டல் காரணமாக, மும்பை எக்ஸ்பிரஸ் படம் திரையிடப்படவில்லை. இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால் தமிழகமெங்கும் பரபரப்பு சூழல் நிலவுவதால், படம் திரையிடப்பட்டுள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
vikatan.com
|
|
|
| புலிகள் தாக்குதல் நடத்தவில்லை. |
|
Posted by: thamilvanan - 04-15-2005, 08:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
விடுதலைப் புலிகள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்தவில்லை-இராணுப் பேச்சாளர்
திருமலையில் விடுதலைப் புலிகள் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல் நாடதினர் என்ற குற்றச்சாட்டை படையினர் முன்வைத்து போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தனர். இக்குற்றச்சாட்டை நேற்று மாலை படையினர் மீளப்பெற்றுள்ளனர்.விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது சீறீலங்கா இராணுவப் பேச்சாளர் தயாரட்ணநாயக்கா அறிவித்துள்ளார்.திருமலை மாவட்டத்தில் மகிந்தபுரம் பகுதியில் சிறீலங்கா இராணுவம் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோம் நடத்தினார்கள் என்ற குற்றசாட்டை முன்வைத்தே படையினர் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது துப்பாக்கி வேட்டுகளின் சத்தத்தைக் கேட்ட படையினர் தம்மீது தாக்குதல் நடத்துவதாக தவறுதலாகப் புரிந்து கொண்டே முறைப்பாட்டைச் செய்திருந்தனர்.
நன்றி சங்கதி
|
|
|
| சாஹி சிக்கன் குருமா |
|
Posted by: sinnappu - 04-15-2005, 08:08 AM - Forum: சமையல்
- Replies (34)
|
 |
கோழிக்கறி ஒரு கிலோ
பெரிய வெங்காயம் 3
மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா அரைத் தேக்கரண்டி
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
பூண்டு 8 பல்
தயிர் ஒரு கோப்பை
நெய் 3 மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு 5
முந்திரிப்பருப்பு 10
எலுமிச்சை சாறு தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு தேவைக்கேற்ப
தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் மஞ்சள்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கோழிக்கறியுடன் நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலி அல்லது பானில் நெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாய் வரும் அளவிற்கு வதக்கவும்.
அத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வேக விடவும்.
பிறகு கோழித்துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும். அதன்பின் இரண்டு டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
கறி நன்கு, மென்மையாகம் அளவிற்கு வெந்தவுடன் கரம் மசாலா, உப்பு மற்றும் பாதாம், முந்திரித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி சிறிது நேரத்தில் இறக்கி விடவும்.
பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித் தழையினைத் தூவிப் பரிமாறவும்.
<b>பிள்ளையள் இது எங்கையும் சுடவில்லை அப்புவும் ஆச்சியும் கண்டு பிடிச்சது</b>
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
|
|
|
| 9 பேர் சுட்டுக் கொலை... ! |
|
Posted by: anpagam - 04-15-2005, 03:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (23)
|
 |
ஆயுதக்குழுவொன்றைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக் கொலை?
மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப்புறத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் 9 இளைஞர்களி;ன் சடலங்கள் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவலொன்று தெரிவிக்கின்றது.
பொலன்னறுவை மாவட்டம் அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொருவில கிராமத்திலிருந்து தெற்கே 1 கிலோ மீற்றர் தொலைவில் இச்சடலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் உதவியுடன் இயங்கும் ஆயுதக்குழுவொன்றை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள ஊடகங்கள் இச்சம்பவத்தை அறிந்து இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்புடன் தொடர்பு கொண்டுள்ள போதிலும் தமக்கு இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நன்றி: புதினம்
|
|
|
| புத்தாண்டு படங்கள்: முதல் நாள் ரிப்போர்ட் |
|
Posted by: vasisutha - 04-15-2005, 01:05 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
புத்தாண்டு படங்கள்: முதல் நாள் ரிப்போர்ட்
ஊரெங்கும் இப்போது ஒரே பேச்சு. தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளிவந்த படங்கள் எப்படி இருக்கு? எந்தப் படம் ஓடும்? என்று.
ரஜினி, கமல், விஜய் மூவரும் போட்டிக் களத்தில் உள்ளனர். இதோ முதல் நாள் (ஏப்.14) தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்தவர்களின் விமர்சனம்.
சந்திரமுகி
இடம் : சென்னை சாந்தி தியேட்டர்.
நேரம் : பகல் 12 மணி (சிறப்புக் காட்சி).
சென்னை சாந்தி தியேட்டரில் ரசிகர்கள்
ஜனார்த்தனன்: படம் நல்லா இருக்கு. முண்ணூறு ரூபாய் போட்டு பார்த்தேன். கடைசி சீன் சூப்பரா இருக்கு. அதுதான் எனக்கு ரொம்பவும் புடிச்சு இருந்தது.
ஜெய்சங்கர்: பாட்டு எல்லாமே நல்லா இருக்கு. ரஜினியும் வடிவேலுவும் ஒரு பங்களாவுக்குள் போவாங்க அங்கு பேய் இருக்கும் என பயப்படுவாங்க. அந்த காமெடி காட்சி சூப்பரா இருக்கு.
சரவணன்: படத்தில் ரஜினி மனோதத்துவ டாக்டர். ஜோதிகாவின் உடலில் ஆவி புகுந்துவிடுகிறது. அதைக் குணப்படுத்த வருகிறார் ரஜினி. நயன்தாராவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறாரு. படம் பார்க்கலாம்.
சேகர்: ரஜினிக்கு பன்ச் டயலாக் "சரவணன் இருக்க பயமேன்' என்பதுதான். ஆனால் அதிகமாக பன்ச் டயலாக் கிடையாது. அவரது வழக்கமான ஸ்டைலும் படத்தில் இல்லை.
ஜகதீஷ்வரராவ்: அவரது ஸ்டைலை மாற்றி நடித்திருக்கிறார். அரசியல் கிடையாது. பன்ச் டயலாக் அதிகம் கிடையாது. "போர்' அடிக்காமல் போகிறது. ஜோதிகாதான் படத்தில் கலக்கியிருக்கிறார்.
சீனிவாசன்: படத்தில் வில்லன்கள் யாரும் கிடையாது. பிரபுவின் ஆட்களை அடிக்க ரெüடிகள் வருவார்கள். அப்போது ரஜினி அறிமுகமாவார். ரஜினி வரும் அந்த அறிமுக ஃபைட் சீன் சூப்பர். நயன்தாராவுக்கு அவ்வளவா ரோல் இல்லை. ஜோதிகா நல்லா பண்ணியிருக்காங்க.
பாபு: ஜோதிகாவுக்காக படம் பார்க்கலாம். ரஜினியுடைய ஸ்டைல் ஒன்றும் இதில் இல்லை.
மும்பை எக்ஸ்பிரஸ்
இடம் : சத்யம் தியேட்டர்
நேரம் : பிற்பகல் 2.50 மணி.
சென்னை அபிராமி தியேட்டரில் கமல் படத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
கோதண்டராமன்: கமல் நல்லா பண்ணியிருக்காரு. காமெடி காட்சியெல்லாம் ரசிக்கும்படி இருக்கு.
குமார்: கடைசி காட்சியில் பைக்கில் சென்றுகொண்டே ரயிலில் ஏறுவார். அந்த காட்சி ரொம்பவும் நல்லா இருக்கு. படம் ஓடும்.
கார்த்திக்: குழந்தையை கடத்திட்டு போயிடுறாங்க. பசுபதி, வையாபுரி வில்லன்கள். ஆனால் வழக்கமான வில்லன்கள் மாதிரி கிடையாது.
ரமேஷ்: இடைவேளைக்குப் பிறகு படம் ரொம்ப நல்லா இருக்கு. காமெடி சூப்பரா இருக்கு. பாட்டு குறைவுதான். மனிஷாவுக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் ஓரளவுக்கு நல்லா பண்ணியிருக்காரு. க்ளைமாக்ஸ் காட்சி ரசிக்கும்படி இருக்கு.
ஆனந்த்: வழக்கமான சினிமா மாதிரி இல்லை. கமல் எப்போதும் புதுமையாக செய்வார். இதிலும் நல்லா பண்ணியிருக்காரு. படம் கண்டிப்பாக ஓடும்.
தனன்: ஓகே மூவி.
வெங்கடேஷ்: அடிதடி வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் ஃபேமிலியோடு பார்க்கிற மாதிரி இருக்கு இந்தப் படம்.
சச்சின்
இடம் : உட்லண்ட்ஸ் தியேட்டர்.
நேரம்: பிற்பகல் 2.40 மணி
சென்னை ஆல்பட் தியேட்டரில் விஜய் படத்துக்கு பால் அபிஷேகம்
சென்னை சாந்தி தியேட்டரில் ரசிகர்கள்
சபரீஷ்: பாடல்கள், சண்டைக்காட்சிகளும் நல்லா இருக்கு. கிளைமாக்ஸில் விஜயும், கதாநாயகி ஜெனிலியாவும் விமானநிலையத்தில் சந்திக்கும் காட்சி நல்லா இருக்கு. மொத்தத்தில் படம் சூப்பர்.
சித்ரா: குஷி படம் அளவுக்கு "சச்சின்' இல்லை. என்றாலும், காட்சிகள் வேகமாக நகர்கின்றன. "போர்' அடிக்கவில்லை. கிளைமாக்ஸ் நன்றாக உள்ளது.
காயத்ரி: கடந்த மேட்சில் சச்சின் டெண்டுல்கர் "செஞ்சுரி' அடித்தார். இந்த சச்சின் நிச்சயமாய் "டபுள் செஞ்சுரி' (200 நாள்கள்) அடிப்பார். படம் நச்சுன்னு இருக்குது.
மோகன்: படம் நன்றாக உள்ளது. காமடி ஓ.கே. "தலைவா, தலைவா', "சச்சின்' உள்பட மூன்று பாடல்கள் நன்றாக உள்ளன. கிளைமாக்ஸ் காட்சி நன்றாக உள்ளது.
சந்தோஷ்: படம் எதிர்பார்த்தபடி இல்லை. சுமார்தான். பாட்டுக்காக படம் பார்க்கலாம்.
துர்கா: படம் சுமார். விஜய்யின் காஸ்டியூம் மட்டும் நன்றாக உள்ளது.
பாபு: பாட்டு எல்லாம் நல்லா இருக்கு. ஒருமுறை பார்க்கலாம்.
dinamani.com
|
|
|
| நல்ல தமிழ் பேச |
|
Posted by: Mathan - 04-14-2005, 11:09 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (7)
|
 |
நல்ல தமிழ் பேச.. பார்த்திபன் சொல்லும் எளிய வழி!
நண்டு சிண்டுகள் தொடங்கி பெருசுகள் வரை ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஆஃப் பாட்டிலை உள்ளே தள்ளிவிட்டு ஹேப்பி நியூ இயர் சொல்வது ஃபாஷனாகிவிட்டது.
கொண்டாட வேண்டிய தமிழ் புத்தாண்டைப் பற்றியோ.. தமிழ் மொழியைப் பற்றியோ கவலைப்படுவதில்லை!
தமிழை ஒழுங்கா பேசறயோ இல்லையோ தமிழில் பேர்வை என்று சிலர் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க.. தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஓசைப்படாமல் ஒரு தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பியிருக்கிறார் பார்த்திபன்.
அந்த வாழ்த்து அட்டையில்,
<b>யாகாவாராயினும்</b>
<img src='http://www.webulagam.com/cinema/cinenews/0504/13/images/img1050413020_1_1.gif' border='0' alt='user posted image'>
"தமில் வாள்க"வென ஒலி வாங்கியில் தமிழின் உயிரை வாங்கிவிட்டு, தமிழர்களின் வாக்கையும் வாங்கப் போராடும் அரசியல்வியாதிகள் மட்டுமல்லாமல்,
தன் நாவைத் திருத்திக் கொள்ள முடியாதவர்கள், தமிழ் நாட்டையே திருத்த முற்படுகிறார்களே என்ற கெட்ட சிந்தனை இல்லாத நல்ல பொதுசனம் வரை யாராக இருந்தாலும் ல, ள, ழகரத்தை ஒழுங்காக ஒலித்துப் பேச முடியாதவர்களுக்கு இதோ ஓர் எளிய நுட்பப் பயிற்சி!
இப்பயிற்சியை மேற்கொண்டு ஓரிரு நாளில் நம்மை நாமே திருத்திக் கொண்டு பொருள் குற்றமின்றிப் பேசி, மற்றவர்களும் பேச பயிற்சி தருவோம் என்பதை இத்தமிழ் வருடத்தின் ஆரம்ப நாளில் செய்யும் நற்காரியமாகக் கொள்வோம்.
<b>... நா காக்கா</b>
<img src='http://www.webulagam.com/cinema/cinenews/images/2005/04/parthibhan_speak.jpg' border='0' alt='user posted image'>
1. நாவை முன்மேற் பல்லில் மென்மையாகப் படும்படி வைத்து "ல" என ஒலித்துக் கீழே கொணரின் லகரமும்
2. நாவை நடுமேல் அண்ணத்தில் அழுத்தமாகப் படும்படி வளைத்து "ள" என ஒலித்துக் கீழே கொணரின் ளகரமும்
3. நாவை நன்றாக உள்பக்கம் வளைத்து மேல் அண்ணத்தைத் தொடாதவாறு மென்மையாக "ழ" ன ஒலித்துக் கீழே இயல்பாகக் கொணரின் ழகரமும் வரும்.
(நன்றி: தமிழ் ழகரப் பணி மன்றம்)
சித்ரபானு ஆண்டு
சுபானு ஆண்டு
தாரண ஆண்டு
இனி,
பார்த்திப ஆண்டு...!
என்று சொல்லி தமிழை முதலில் சரியாகப் பேச பயிற்சி கொடுத்திருக்கிறார்.
பக்கத்திலுள்ள படத்தைப் பார்த்து நீங்களும் பயிற்சி செய்து பாருங்கள் பலன் நிச்சயம்!
இந்த சித்திரை அன்று பார்த்திப ஆண்டு தொடங்குகிறது. தமிழுக்காக இவர் எடுத்திருக்கும் முயற்சி எனினும் பார்த்திபன் ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்.
வெப் உலகம்
|
|
|
|