Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் எங்கிருந்து எங்க வந்தீங்க...??!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41026000/gif/_41026369_genographic_map416.gif' border='0' alt='user posted image'>

மனித ஆண்களில் காணப்படும் Y நிறமூர்த்த டி என் ஏ யின் அடிப்படையில் மனிதக் குடிபெயர்வைக் காட்டும் படம்...! (10,000 பூர்வக்குடி மக்களிடமிருந்து பெறப்பட்ட டி என் ஏ மாதிரிகளின் பிரகாரம்..! <span style='font-size:16pt;line-height:100%'>பூர்வீகத்தைத் தொலைப்போரே...கவனம்...கணக்கில் எடுக்கப்படமாட்டீங்க உலகத்தில....!</span>)

(Map shows first migratory routes taken by humans, based on surveys of different types of the male Y chromosome. "Adam" represents the common ancestor from which all Y chromosomes descended

Research based on DNA testing of 10,000 people from indigenous populations around the world)

உலகின் ஆதி மனிதன் யார்.... அவன் எங்கிருந்து எப்படியெல்லாம் குடிபெயர்ந்தான்...எங்கெங்கு எப்படியானவர்கள் வந்து சேர்ந்தார்கள்.. நவீன மனிதரில் பல வகைத் தோற்றத்துக்குமான காரணங்கள் காரியங்கள் என்ன...இவற்றை 5 வருடத் திட்டத்தின் கீழ் மரபணு ரீதியில் ஆய்வு செய்ய மனித வரலாற்றுத்துறை சார்ந்த ஆய்வாளர்கள் முடிவு செய்து பல இடங்களிலும் வாழும் பல்லின மனிதர்களிடத்திலும் இருந்து டி என் ஏ மாதிரிகளைப் பெறவுள்ளனராம்...! குறிப்பாக அமெரிக்கா அவுஸ்திரேலியாவில் வாழும் பூர்வக் குடிமக்களிடம் இருந்தும் டி என் ஏ மாதிரிகள் பெறத் திட்டமிடப்பட்டுள்ளன...!

(A project spanning five continents is aiming to map the history of human migration via DNA.)

இந்த ஆய்வுக்காக உலகம் பூராவும் வாழும் பூர்வக்குடி மற்றும் குடிபெயர்ந்து வாழும் கிட்டத்தட்ட 0.1 மில்லியன் மனிதர்களிடமிருந்து டி என் ஏ மாதிரிகள் பெறப்படவுள்ளன...!

இந்த ஆய்வின் போது ஆண்களில் தனித்துவமாகக் காணப்படும் Y நிறமூர்த்தம் மற்றும் இழைமணி என்று அழைக்கப்படும் கலப்புன்னங்கம் கொண்டுள்ள டி என் ஏ க்கள் பெரிதும் கருத்தில் கொள்ளப்படவுள்ளன...!

ஆய்வுகூடம் மூலமும் கணணிப் பகுப்பாய்வின் மூலமும் தொடரப்படவுள்ள இவ்வாய்வுக்கு ஆதரவு அளிப்போர் National Geographic, IBM மற்றும் Waitt Family Foundation charity

இவர்கள் அடைய நினைக்கும் முக்கிய குறிக்கோள்களை விரிவாக கீழே ஆங்கிலத்தில் பாருங்கள்...

Who are the oldest populations in Africa - and therefore the world?

Did Alexander the Great's armies leave a genetic trail?

Who were the first people to colonise India?

Is it possible to obtain intact DNA from the remains of Homo erectus and other extinct hominids?

How has colonialism affected genetic patterns in Africa?

Was there any admixture with Homo erectus as modern humans spread throughout South-East Asia?

Is there any relationship between Australian Aboriginal genetic patterns and their oral histories?

What are the origins of differences between human groups?

தமிழர்கள் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்...????! சிங்கத்தில் இருந்து வந்த சிங்களவர்கள் (உலகின் அதிசயப் பிறவிகள்) எங்கிருந்து வந்தார்கள் இவற்றிற்கும் விடை கிடைக்குமா...??! கிடைத்தால் பெரிய நிம்மதி கிடைக்கும் தெற்காசிய பிராந்தியத்துக்கு...!

தகவல் மூலம்... பிபிசி விஞ்ஞானம்.. மற்றும் தமிழில்... http://kuruvikal.blogspot.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
குருவி அண்ணா அருமையான தகவல் தந்திருக்கிறீரிகள்....
ஆராய்ச்சியாளர்கள் கூற்றின் படி உலகத்தில் இருக்கும் அனைவரும் ஆபிரிக்கக் கண்டத்தில் உருவாகிய மனித மூதாதையர் வேறு இடங்களுக்கு குடியேற (Migration) பரவத் தொடங்கிய காரணத்தால் தான் மற்ற இடங்களுக்கு சென்று பல வகையான உருவ அமைப்பை (Anatomical Features) அமையப் பெற்றனர் என்று.... இந்த விளக்கத்தின் படி தமிழர்கள் மட்டுமல்ல எல்லோரும் ஆபிரிக்க கண்டத்தில் இருந்து வந்தவர்கள் தான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#3
நல்ல தகவல் ஒன்று. நன்றி குருவி.
Reply
#4
நன்றி குருவிகளே
[b][size=18]
Reply
#5
நவீன மனிதர்கள் (Homo sapiens) ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது 200,000 வருடங்களுக்கு முன்புதானாம். அவர்கள் ஆபிரிக்காவில் இருந்து இடம்பெயர ஆரம்பித்தது 60,000 வருடங்களுக்கு முன்புதான்.

தமிழர்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பு உதித்த மூத்த பெரும்குடிகள் என்றல்லவா சொல்லுகிறார்கள். அப்படியென்றால் எங்கள் பூர்வீகம் நவீன மனிதர்களிலிருந்து வரவில்லையாக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பி.கு. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பு பக்ரீரியாக்கள்தான் இருந்திருக்கும்.
<b> . .</b>
Reply
#6
Quote:நவீன மனிதர்கள் (Homo sapiens) ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது 200,000 வருடங்களுக்கு முன்புதானாம். அவர்கள் ஆபிரிக்காவில் இருந்து இடம்பெயர ஆரம்பித்தது 60,000 வருடங்களுக்கு முன்புதான்.
நீங்கள் கூறும் வரைவிலக்கணம் வந்து Complete Replacement Model (Recent African Evolution). இதன் படிதான் நீங்கள் சொல்லது சரியாக இருக்கலாம்.....ஆனால் இதை எதிர்க்கும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி Regional Continuity Model (Multiregional Evolution) பரவலான மனித உருவாக்கம் இருந்து இருக்கிறது...அதனால் எங்கள் தமிழினம் மூத்த குடிகளாய் இருந்து இருக்கலாம்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#7
மழலைத் தங்கைக்கு anthropology சொல்லிக் கொடுத்திருக்கனுமே இன்னும் பல தகவல்கள்... நீங்க நிறையைச் சொல்லுவியள் என்றுதான் இந்தத் தலைப்பை இங்க போட்டிருந்தம்... archaeology அடிப்படையிலும் இதை விளக்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...! என்றாலும் டி என் ஏ தொழில்நுட்பம் பழைய தர்க்கங்கள் பலவற்றிற்கு எதிர்காலத்தில் முடிவு கட்டலாம்....?! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
மனித இனத்தின் வரலாறு
முதலில் தெஹல்காவிலும், பின்னர் என்.டி.டிவியிலும் பார்த்து, இணையத்தளத்தில் ஆராய்ந்த பின்னரே இதனை எழுதுகிறேன். போன புதன்கிழமை, என்.ஜி.சி ஒரு முக்கியமான உலகளாவிய திட்டத்தினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்வைத்திருக்கிறது.

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். என்னுடைய அறிவியல் அறிவு குறைவாக இருக்கும் பட்சத்தில் இதைப் பற்றி விரிவாக விளக்கமாக எழுத இயலாது என்று நினைக்கிறேன். இந்த தளத்தினைப் பார்த்து பத்மா அரவிந்த், தங்கமணி இன்னபிற வலைப்பதியும் ஆராய்ச்சியாளர்கள் விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

நான் படித்து புரிந்தவரையில், இந்த திட்டத்தினைப் பற்றி எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன். மனித உடல் ஜீன்களின் கட்டமைப்பாலானது. ஆதி மனிதனின் ஜீனிலும், உங்கள் பக்கத்து பெஞ்சுக்காரரின் ஜீனிலும் நிறைய ஒற்றுமை, வேற்றுமைகள் இருக்க வாய்ப்புண்டு. மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள், திறவுகோல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்கு நோய் வருதலும், எவ்வளவு வெயிலில் கிரிக்கெட் ஆடினாலும் தலைவலியே இல்லாமல் சிலபேர் இருப்பதும் ஜீன்களை சார்ந்ததே. இதற்கு மேல், ஜீன்கள், ஜீன்களின் கட்டமைப்பு, மனித உடலில் ஜீன்களின் பங்கு போன்றவற்றை ஆழமாக அறிய விரும்பினால், HGP என்றழைக்கப்படும் மனித ஜீன்களை கண்டறியும் ப்ரொஜெக்ட் (humane genome project) தளத்தில் பாருங்கள்.
http://www.ornl.gov/sci/techresources/Huma...ect/about.shtml

உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்கு சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது தான் இந்ததிட்டம். GP இணையத்தளத்தில் ஒரு அருமையான, அவசியமான, ஜீன் உலக வழித்தடத்தினை வைத்துள்ளார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் சில செய்திகள். இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். என்.ஜி.சியின் மொழியில் M என்பதற்கான அடையாளப் பொருள்

M is a macro-haplogroup that arose from the African lineage defined by L3. Haplogroups M and N trace the first human migrations out of Africa. M's various sub groups are found in Eastern Eurasia , East Asia (M7,M8) America (C,D) and the Indian subcontinent -though not in europe.
ஒவ்வொரு வழித்தடமும், ஆப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியா, இலங்கையினை குறுக்காக கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130. இது நடந்தது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர். 30,000 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலையின் கணவாய்களின் வழியாக வந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும் வழித்தடம் M20. M52 என்பது "இந்தியன் மார்க்கர்" என்றே அழைக்கப்படுகிறது. இது 20,000 -30,000 ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய ஆசியாவிலிருந்து, ஈரான், கிழக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஒருமுறை பாலாஜி-பாரியோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஜராவாஸ் என்கிற அந்தமானில் வசிக்கும் பழங்குடிகள், தொல் ஆப்ரிக்கக் குடிகளாக இருப்பார்கள் என்கிற சந்தேகத்தினை முன்வைத்திருந்தேன். அது இப்போது உறுதியாகிவிட்டது.

ஆக வரலாறு, மொழி ஒற்றுமை, பழங்குடிப் பாடல்கள், உருவ அமைப்புகள் இவற்றினைத் தாண்டி எல்லா இனத்தையும், அதன் ஆதி மூலங்களோடு பட்டியலிடும் காலம் வந்துவிட்டது. இனி நாங்கள் வந்தேறிகள் இல்லை என யாரும் ஜல்லியடிக்கமுடியாது. இதைத் தாண்டி, உலகளாவிய இனங்களின் ஆதி,அந்தங்கள் புலனாகும். எனவே, கொலம்பஸ் அமெரிக்க பழங்குடிகளை நசுக்கிக் அழித்தொழித்ததையும், பிரிட்டிஷ், ஸ்பானிய மாலுமிகள், ஆஸ்திரேலிய இனக்குடிகளை ஒரம் கட்டியதையும், கைபர்-போலன் கணவாய் வழியாக வந்து தமிழகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் இனத்தவர்கள் வரை எவரும் தப்பமுடியாது. இனிமேல் கண்ணாமூச்சி ஆடமுடியாது. ஆட்டம் ஒவர் என்று நினைக்கிறேன். அவரவர்கள் அவரவர்களின் சுயங்களையும், மூலங்களையும் ஒத்துக் கொண்டாகவேண்டிய கட்டாயம் வந்துவிடும்.

ஆதாம் கண்டிப்பாக கறுப்பினத்தவனாக தான் இருந்திருக்கவேண்டும், நீங்கள் ஆதாம்-ஏவாள் தியரியை நம்புவதாக இருந்தால். நாம் எல்லோரும் ஒரு வயிற்றிலிருந்து வந்தவர்கள் என்பதற்கான மிக முக்கியமான ஆய்விது. ஆனாலும், வாடிகன் ஒரு ஆப்ரிக்க இயேசுவினை ஒத்துக் கொள்ளுமா என்பது கேள்வி.

இது வெறும் ஆராய்ச்சிக் கூடத்தில் நடக்கும் ஆய்வல்ல. இதில் நீங்களும், நானும் கூட பங்கு பெறலாம். உலகெமெங்கும் நிறைய நபர்களின் ஜீன்கள் இந்த ஜீன் வரைப்படத்தினை சரி பார்க்க உதவும். பங்கேற்பார்கள் கிட் ஒன்று தருகிறார்கள். அதன் மூலம் உங்களின் ஜீன்களை நீங்களை மாதிரிகள் எடுத்து, இந்த GP இணையத்தளத்தில் கொடுத்துவிடலாம். ஒரு ரகசிய GP எண்ணினைக் கொண்டு உங்களது ஜீனின் முடிவுகளை, பாதுகாப்பான இணையத்தளத்தில் பார்வையிட இயலும். உங்களின் மூதாதையர்களின் பாரம்பரியம், அவர்களின் ஜீன்களின் பயணம், எங்கிருந்து வந்தார்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள் என்பது போன்ற கழுகுப்பார்வை தகவல்கள் கிடைக்கும். மனித இனத்தின் கதை உங்களுக்கு மொத்தமாய் $99.95 களில் தெரியவரும். இந்த பணம் இதைப் போன்ற பல்வேறு மனித இனத்தேடல்களுக்கு செலவிடப்படும்.

இந்தியாவில் மொத்தமாக கிடைக்க வழி செய்யுமானால், எல்லா பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் இதனை பல்வேறு இனத்தவரிடையே எடுத்து செல்லமுடியும். இதற்கான செலவும் குறையும். இதை இந்தியாவிலிருந்து படிக்கும் பல்கலைக்கழக, IIT, IISc போன்ற பெரு கல்விநிறுவனங்களில் உள்ளவர்கள் இதை முன்னெடுத்து செல்லலாம். ஆனாலும், இந்தியாவில் ஒரு சோதனைக்கு 4,500 ரூபாய்கள் கொடுத்து பரிசோதிப்பவர்கள் எவ்வளவு பேர் என்பது கேள்விக்குறி. இருந்தாலும், மனித இனத்தின் மிக முக்கியமான ஆய்வு இது. அமெரிக்கா, கனடாவில் இருப்பவர்கள் கொஞ்சம் காசு பார்க்காமல் இதை வாங்குங்கள். உங்களின் ஜீன்களின் மூலம் இந்திய/ஈழத் தமிழர்களின் பின்புலம் புலப்படும்.

There was a massive genetic influx into India from the steppes within the past 10,000 years. Taken with the archaeological data, we can say that the old hypothesis of an invasion of people - not merely their language - from the steppes appears to be true - Spencer Wall, Team leader of Genographic Project
பார்க்கவேண்டிய சுட்டிகள்

ஜெனோகிராபிக் ப்ரொஜெக்ட் http://www3.nationalgeographic.com/genogra...phic/index.html
ஜீன் வழித்தடங்கள் http://www3.nationalgeographic.com/genogra...phic/atlas.html
பங்கேற்பாளர் கிட் வாங்குதல்
http://www3.nationalgeographic.com/genogra...articipate.html

http://www.shoppbs.org/sm-pbs-journey-of-m...pi-1402989.html

[size=18]நன்றி நாராயணன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
நன்றி குளம் அண்ணா அருமையான தகவல்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#10
ஆகா... என்ன மைபோட்டு பாக்கிறமாதிரி மூதாதையர் பற்றி எல்லாம் சொல்ல போறாங்களாம்.. . சாத்திரியின் வேலையும் போச்சா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி குளம்
[b][size=18]
Reply
#11
ஆதி மனிதன் பிற கண்டங்களுக்கு பரவியது எப்போது?


ஆபிரிக்க பழங்குடியினர்
ஆதிமனிதன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றினான் என்பது அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் விடயம். ஆனால், அந்த ஆதிமனிதன் பிற கண்டங்களுக்கு முதன்முதலில் பரவியது எவ்வாறு, எப்போது என்பதில்தான் சர்ச்சை.

ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் முதலில் சென்றது நிலவழியிலா, கடல்வழியிலா என்ற கேள்விக்கு இந்திய விஞ்ஞானிகள் கடல்வழிதான் என்ற பதிலை முன்வைத்திருக்கிறார்கள்.

அதாவது, சுமார் 70,000 ஆண்டுகள் முன்பாக, மனித இனத்தவர், ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்டு, இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியாகச் சென்று, பிறகு வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தை இவர்கள் அடைந்தார்கள் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தற்போது அந்தமான் தீவுகளில் வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த முடிவை உறுதிசெய்திருப்பதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்த முடிவை எட்ட, இந்த அந்தமான் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள், அதாவது, இதே காலகட்டத்தில் ஆசியக்கண்டத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மரபணுக்கள் அடைந்த மாற்றங்களை விட, அந்தமான் தீவுக்கூட்டத்தில் தனித்தே வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்கள் குறைந்த அளவு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பது இங்கே முக்கியம்.

எனவேதான் இவர்களின் மரபணுக்கள் – அவற்றில் உள்ள எக்ஸ் மற்றும் ஒய் குரோமசோம் பகுதிகள், பிறகு மிட்டோகோண்ட்ரியா என்று அழைக்கப்படும் மரபணுத் தொடர் மைய மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்திருக்கிறார்கள், இந்திய விஞ்ஞானிகள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவை ஒரு யூகமாக
எட்டியவர்கள், ஹைதராபாதில் இயங்கிவரும் இந்திய மூலக்கூற்று உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள்.

அப்போதே, இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவராக இயங்கிவருகிற தங்கராஜ் அவர்களைத் தமிழோசை செவ்வி கண்டிருந்தது.

இப்போது மேலதிக ஆராய்ச்சியின் மூலம் இந்த முடிவு உறுதியாகியிருக்கிறது, அது மட்டுமல்ல, இங்கே ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வின்சன்ட் மக்காலே என்ற விஞ்ஞானியும் தம்முடைய ஆராய்ச்சியின் மூலம் இதைப்போன்ற ஒரு முடிவை எட்டியிருக்கிறார்.

அவர் ஆய்வு செய்தது, ஆஸ்திரேலியா, மலேசியாவில் உள்ள பழங்குடியினர் பற்றி.

இந்த இரண்டு ஆராய்ச்சி முடிவுகளும் ஸயன்ஸ் என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகி இருக்கின்றன.

இவைபற்றி ஹைதாரபாத் மரபணு விஞ்ஞானி தங்கராஜ் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் விளக்கியுள்ளார்.

From BBC tamil
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#12
நன்றி குளக்காட்டான் இத்தகவலைத் தந்து உதவியதற்கு...! ஆங்கிலத்தில் படித்தோம்..மொழிபெயர்க்க நேரமின்மையால் இங்கு இடவில்லை...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
நன்றி குளம் அண்ணா..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் நினைக்கிறன் இதற்கு என்று ஒரு விடை மட்டும் இருக்காது என்று...ஏனென்றால் பல தரப்பட்ட ஆராய்சியாளர்களும் பல விதமான கொள்கைகளை வைத்து அதற்கேற்ற மாதிரி தானே தடயங்களை தேடுகிறார்கள் அவர்களது கொள்கையை நிருபிப்பதற்கு......இது ஒரு தரப்பு வாதம் என நினைக்கிறன்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)