![]() |
|
"மும்பை எக்ஸ்பிரஸ்" படத்துக்கு எதிர்ப்பு:திரை கிழிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: "மும்பை எக்ஸ்பிரஸ்" படத்துக்கு எதிர்ப்பு:திரை கிழிப்பு (/showthread.php?tid=4474) |
"மும்பை எக்ஸ்பிரஸ்" படத்துக்கு எதிர்ப்பு:திரை கிழிப்பு - vasisutha - 04-15-2005 சென்னை ஏப்ரல் 15: நடிகர் கமலஹாசன் நடித்து வெளிவந்திருக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சில திரையரங்குகளில் திரை கிழிப்பும் நடந்தது. கமலஹாசன் தனது புதிய படமான மும்பை எக்ஸ்பிரஸை திரையிடுவதற்கு, தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தி வரும் டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், அப்படம் இதே பெயருடன் திரைக்கு வந்தால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றம் செய்யப்படாமல், நேற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் எழும்பூர் பகுதியில் உள்ள மும்பை எக்ஸ்பிரஸ் திரையிடப்பட்டிருந்த ஒரு திரையரங்கில், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த 150 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், படம் பார்க்க வந்திருந்த கமல் ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஏராளமாக குவிக்கப்பட்ட போலீசார், ஆர்ப்பாட்டம் செய்த 150 பேரையும் கைது செய்தனர். அதே போல் சென்னை நங்கநல்லூரிலும் திரையரங்குமுன் ஆர்ப்பாட்டம் செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். நீலாங்கரைப் பகுதியில் கோஷம் போட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மும்பை எக்ஸ்பிரஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்குன்றத்தில் உள்ள ஒரு திரையரங்கில் மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரை கிழிக்கப்பட்டது. நள்ளிரவில் அந்த திரையரங்குக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், பிளேடால் திரையை கிழித்தெறிந்தனர். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஈரோட்டில் உள்ள ஒரு திரையரங்கிலும் திரை மீது சோடா பாட்டில் வீசப்பட்டதால் திரை கிழிந்தது. தஞ்சையில் படம் திரையிடப்பட்ட திரையரங்கு முன் வைக்கப்பட்டிருந்த படத்தின் டிஜிட்டல் பேனரை ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் ஒருவர் கிழித்தெறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்களுக்கும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது போலீசார் தலையிட்டு, பேனரை கிழித்தவரையும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும் கைது செய்தனர். விழுப்புரம், திருக்கோவிலூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் மிரட்டல் காரணமாக, மும்பை எக்ஸ்பிரஸ் படம் திரையிடப்படவில்லை. இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால் தமிழகமெங்கும் பரபரப்பு சூழல் நிலவுவதால், படம் திரையிடப்பட்டுள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. vikatan.com - Eswar - 04-16-2005 :roll: hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: :x :x :oops:
|