![]() |
|
சினிமா மாயை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமா மாயை (/showthread.php?tid=4472) |
சினிமா மாயை - vasisutha - 04-15-2005 <b>கட்டுரையின் நோக்கம் பற்றி... <img src='http://www.vikatan.com/cinema/2005/mar/chinnarasu_p.jpg' border='0' alt='user posted image'> சின்னராசு திரை உலகத்தால் கவரப்படாத மனிதரே இல்லை என்கிற அளவுக்கு ஈர்ப்பு சக்தி கொண்டு விளங்குகிறது சினிமா... இப்போது சினிமாவுக்கு மவுசில்லை! சின்னத்திரைக்கே மவுசு என்று சிலர் சொல்லிக் கொண்டாலும் சினிமாவை வைத்துத்தான் சின்னத்திரை காலத்தை ஒட்டுகிறதே தவிர, சினிமா தொடர்புடைய எதையும் ஒளிபரப்பாமல் அதனால் செயல்பட முடியாது. மனிதன் மேலெழுந்தவாரியாக வாழ்க்கையின் மகிழ்ச்சிகளாகக் கருதுகிற ஆட்டம், பாட்டம், பெண்கள், பொழுது போக்கும் இன்பங்கள் எனக் கருதுபவை எல்லாம் திரைப்படத் துறையின் தொழிலோடு விரவிக் கலந்துள்ளவையாக இருக்கின்றன. மற்ற துறைகளில் ஒருவன் புகழையும், செல்வத்தையும், தேட வெகுகாலம் ஆகும் என்கிற நிலையில் திரைத்துறையால் ஒருவன் நடிகனாக அறிமுகமானதுமே நாடு முழுவதும் அறியப்பட்டவனாகப் புகழ் அடைந்து விடுகிறான். மிகக் குறுகிய காலத்திலேயே கார், பங்களா என பளபளப்பான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாகி விடுகிறான். எனவே இந்த புகழும், செல்வமும், பளபளப்பும் மட்டுமே வெளியே இருந்து திரையுலகைப் பார்ப்பவர்களுக்குத் தெரிய வருவதால் சுலபமாக அந்தத் துறை மீது மோகம் கொண்டு விடுகிறார்கள், அதே சமயம் இந்தத் திரையுலகில் ஓகோவென வாழ்ந்த அனைவருமே ஒரு நாள் தான் பெற்ற புகழ், செல்வம் என அனைத்தையும் இழந்து விட்டுப் போகவே நேர்ந்திருக்கிறார்கள். இதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை என்றாலும் இதுதான் உண்மை. இந்த உண்மையைப் பகிரங்கப்படுத்துவதே Ôசினிமா மாயைÕ என்ற இந்த கட்டுரை தொடரின் நோக்கமாகும். கட்டுரையாளர் பற்றி... திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பிறந்த சின்னராசு நீண்ட கால பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வருபவர். காவியங்கள், கவிதைகள், கவிதை நடை கதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், நாடகங்கள், அரசியல், சமூகம், கலை பற்றிய கட்டுரைகள் முதலியன இவர் எழுத்துப் பணியில் அடங்கும். தற்சமயம் திருக்குறளுக்கு குறுங்கதைகள் எழுதும் பணியை மேற்கொண்டுள்ளார். ஜூனியர் விகடனில் அரசியல் கட்டுரைகள் எழுதி உள்ளார். பொதுவாக இவருடைய அரசியல், சமூகம், கலைகள் பற்றிய கட்டுரைகளில் கூற வந்த சேதிகளுக்கு தொடர்புடைய அரிய சம்பவங்களையும், மாமனிதர் வாழ்வு நிகழ்ச்சிகளையும் அணி அணியாகச் கோர்த்து கட்டுரையை சுவையுடையதாகவும், பயன் தருபவையாகவும் வழங்குவதில் திறன் வாய்ந்தவர்.</b> <b>பாகவதருக்கு நேர்ந்த பரிதாபம் </b> <img src='http://www.vikatan.com/cinema/2005/mar/pagavadar_21.jpg' border='0' alt='user posted image'> [b]சின்னராசு சினிமா உலகமும், நாம் வாழும் உலகத்தைப் போல் ஒரு மாயைதான்! எத்தனைதான் வாழ்ந்தாலும் முடிவில் ஒன்றுமே இல்லையென உலக வாழ்க்கையைப் பற்றி கூறுவதுபோல், சினிமா உலகத்தில் எத்தனைப் புகழ்பெற்றாலும், எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் ஒருநாள் அவை எதுவுமே நிலைக்கவில்லை என்ற முடிவையே காண நேரிடுகிறது. நமது தமிழ் சினிமா உலகையே எடுத்துக்கொண்டால், இன்றிலிருந்து ஒரு அறுபது ஆண்டுகால நிகழ்ச்சிகளை பார்ப்போமேயானால், ஓகோவென வாழ்ந்த சினிமா உலக நட்சத்திரங்களும், கலைஞர்களும் பெரும்பாலும் சம்பாதித்தப் புகழையும், பொருளையும் ஒருநாள் இழந்துவிட்டேப் போயிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் சொந்தப் படங்களை தயாரித்ததனாலேயே அந்த சோக முடிவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சொந்தப்படம் எடுக்காமல் சம்பாதித்ததை சிக்கனமாக வைத்துக்கொள்ள முயன்றவர்களும் தேடிய செல்வத்தை எப்படியோ இழந்துதான் போயிருக்கிறார்கள். சினிமா உலக மொத்த வரலாற்றில் எண்ணிச் சிலர் மட்டுமே தப்பித்திருப்பார்கள் போலும். தமிழ் சினிமா உலகத்தில் அறுபது ஆண்டுகால வரலாற்றில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர், சகலகலா வல்லவன் பி.யு.சின்னப்பா, ஆகிய மூவரும் புகழின் உச்சியில் வாழ்ந்த நடிகர்கள். பேரும், புகழும், செல்வமும் ஈட்டிய இந்த மூன்று மகத்தான கலைஞர்களின் முடிவு என்ன? கலைவாணரும், பாகவதரும் தாங்கள் சம்பாதித்ததை எல்லாம் இழந்ததற்கு காரணம் அவர்கள் மீது அபாண்டமான கொலைப்பழி விழுந்து சுமார் இரண்டு ஆண்டு காலம் சிறைபட நேர்ந்ததே ஆகுமென சிலர் கூறுவார்கள். ஆனால் அது காரணமல்ல: கலைவாணருக்கும் பாகவதருக்கும் சிறைப்பட்ட காலத்தில் திரைப்பட உலகத்தினர் பலர் பற்றி கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. தங்களை வைத்து பெரிய லாபம் அடைந்தவர்களே தங்களுக்கு சோதனை வந்த காலத்தில் நழுவிக்கொள்ள ஒதுங்கிக் கொள்ள முயன்றதைக் கண்டார்கள். இந்த அனுபவத்தினால் கலைவாணர் தான் விடுதலை ஆனதும் தன்னைத் தேடிவந்த ஏராளமான பட வாய்ப்புகளை புறக்கணித்தார். தங்களிடம் மிக அனுதாபமாய் இருந்த சிலர் படங்களில் மட்டும் ஒப்புக் கொண்டார். நமது சினிமா உலகத்தில் புகழோடு இருக்கிற காலத்தில் வெளியார் படங்களிலும் நடித்துக்கொண்டு இடையே சொந்தபடமும் தயாரித்துக்கொண்டால், தன் சொந்தப்படத்தை ஓரளவு லாபத்துடன் விற்பது சுலபமாக இருக்கும். அப்படியல்லாமல் சொந்தப்படத் தயாரிப்புக்காக வெளிப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது படத்தை எடுக்க மட்டும் செலவழித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? சொந்தப்படம் வெளிவந்து வெற்றியடையாமல் போனால் அதனால் ஏற்பட்ட பண இழப்பும், கடன் பிரச்னைகளும் அடுத்து எழுந்திருக்கவே விடாது. அன்றிலிருந்து இன்றுவரை திரைப்படக் கலைஞர்கள் அத்தனை பேரின் நிலையும் இதுதான். கலைவாணர் வழக்கில் சிக்குவதற்கு முன் திரையுலகில் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் சொந்தப்படங்களை தயாரித்ததுண்டு. அப்போதெல்லாம் அதன் லாபநட்டம் அவரை சிறுதும் பாதித்ததில்லை. ஆனால் விடுதலை ஆகி வெளிவந்த பின்னால், பெரும்பாலான வெளியார் படங்களை தவிர்த்து சொந்தப் படத் தயாரிப்பிலேயே ஈடுபட்டதால் ஏற்பட்ட பெரும் கடன் பிரச்னை அவரை எழவே விடவில்லை. கலைவாணர் விரைவில் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கையில் கலைவாணர் நிறுவனம் சார்பில் அவர் துணைவியார் டி.ஏ.மதுரம் தங்கள் சொந்தப் படமாக Ôபைத்தியக்காரன்Õ என்ற படத்தைத் துவக்கினார். பட வேலைகள் நடக்க ஆரம்பித்தன. கலைவாணர் விடுதலை தாமதமாகும் என்ற சூழ்நிலையில் அவர் இல்லாமலேயே படம் நிறைவு அடைகிற மாதிரி கதை அமைத்தார்கள். <img src='http://www.vikatan.com/cinema/2005/mar/ns_krishnan_21.jpg' border='0' alt='user posted image'> வழக்கமாக கலைவாணரின் ஜோடியாக மட்டுமே நடித்துவந்த டி.ஏ.மதுரம் இந்த படத்தில் ஒரு புதுமைப் பெண்ணாக, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் காதலியாக நடித்தார். எம்.ஜி.ஆர். அந்தக் கதைப்படி ஒரு திருட்டு வழக்கில் பழி சுமத்தப்பட்டு சிறைக்குப் போய்விட, டி.ஏ.மதுரத்தை ஒரு பணக்கார முதியவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அந்த முதியவரோடு டி.ஏ.மதுரம் வாழாத நிலையில் ஒருநாள் முதியவர் மரணமடைந்துவிடுவார். இந்நிலையில் எம்.ஜி.ஆர். தண்டனை முடிந்து விடுதலை ஆகிவிட, அவரையே டி.ஏ.மதுரம் மறுமணம் செய்து கொள்வார். இந்தப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கலைவாணர் விடுதலை ஆனார். எனவே கலைவாணரை வைத்து சில காட்சிகள் எடுத்து படத்தில் சேர்க்க விரும்பினார்கள். எனவே கலைவாணருக்கு ஜோடியாக இன்னொரு பாத்திரத்தை உருவாக்கி அதிலும், டி.ஏ.மதுரத்தை நடிக்க வைத்தார்கள். ஆக Ôபைத்தியக்காரன்Õ படத்தில் டி.ஏ. மதுரத்திற்கு இரட்டை வேடம். இந்த படத்தில் கலைவாணருக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு காட்சி இருந்ததென்றால், அது கலைவாணர் சிறைக்குப் போய்வந்த அனுபவத்தை டி.ஏ.மதுரத்திடம் ஒரு பாடலைப் பாடிக் காட்டுகிற காட்சியேயாகும். Ôஜெயிலுக்குப் போய்வந்த சிரேஷ்டர் மக்களை சீர்திருத்துவாங்கோÕ என்ற பாடலே அது. அந்த பாடலில் சில வரிகள் கலைவாணரின் தன்னிலை விளக்கமாகும் Ôபய கெட்டப் பேர்வழிங்க, அடிதடி பண்ணிக்கிட்டுப் போனவங்க, திருடியும் பொண்ணைத் தொட்டு வம்பு பண்ணியும் போனவங்க, சோம்பேறிங்க புத்திகெட்டு சக்திகெட்டு போலீசாரால் அடிபட்டு பிடிபட்டுப் போனவங்க உண்டுங்க அதுவெல்லாம் தப்புங்க ஆனா நான் அப்படி இல்லீங்க பொறவு எப்படின்னு கேப்பீங்க பொறாமை சிலர் கொண்டதாலே பொய்யே உண்மையாகிப் போச்சுதுங்க.. உருட்டும் பொறட்டும் வரவர உலகத்தில ஓரேயடியா பெருகிப் போச்சுதுங்க ஒற்றுமை இல்லீங்க நமக்குள்ளே ஒற்றுமை இல்லீங்கÕ என்று கலைவாணரின் அந்தப் பாடல் தொடரும். ஆக Ôபைத்தியக்காரன்Õ படம் திரையிடப்பட்டு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனை அடுத்து கலைவாணர் Ôநல்லதம்பிÕ என்ற படத்தைத் துவக்கினார். இந்தப் படத்துக்கு அறிஞர் அண்ணா முதன்முதலாக திரைக்கதை, வசனம் எழுதினார். படம் உயர்ந்த நோக்கங்களோடு தயாரிக்கப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக விமர்சனம் எழுதினார். Ôநல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும்; கருத்து நிறைந்த ஒரு படத்தைக் காணவேண்டும் என்றால், Ôநல்லதம்பிÕ படத்தைப் போய் பாருங்கள்...Õ என்ற பொருள்பட அவர் விமர்சனம் அமைந்தது. இருப்பினும் நல்லதம்பியும் வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை. அடுத்து கலைவாணர் Ôமணமகள்Õ என்ற படத்தைத் துவக்கினார். இந்தப் படத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். நாட்டிய பேரொளி பத்மினி முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். கிருஷ்ணன் பஞ்சு படத்தை இயக்க ஆரம்பித்து இடையில் விலகிவிட கலைவாணரே பாக்கிப் படத்தை இயக்கி முடித்தார். Ôமணமகள்Õ படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதனை அடுத்து கலைவாணர், Ôபணம்Õ என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். பராசக்தி படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதும் அதைத் தொடர்ந்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டதால், இந்த படத்திற்கும் கருணாநிதியே வசனம் எழுதலானார். பரபரப்பான புகழில் வரவேற்கப்பட்ட சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்கலானார். பராசக்தி தாக்கம் ரசிகர்களுக்கு இருந்ததினால், அதே மாதிரி படத்தை எதிர்பார்த்ததினால், நன்றாக எடுக்கப்பட்டும் Ôபணம்Õ திரைப்படம் பெரிய தோல்வியை அடைந்தது. பராசக்தியில் சிவாஜி, வழக்கு மன்றத்தில் நீண்ட வசனம் பேசி ரசிகர்களை ஆரவாரம் செய்யவைத்தார். பணம் படத்திலும் கடைசியில் ஒரு நீதிமன்ற காட்சி. ஆனால் அதில் சிவாஜி கூண்டில் பேசாமடந்தையாக நின்று கொண்டிருப்பார். இதுவெல்லாம் படத் தோல்விக்கு ஒரு காரணம். Ôபணம்Õ படத்தின் தோல்விதான் கலைவாணரை மீளா முடியாத கடனில் தள்ளியது. இந்நிலையில் அடுத்து Ôபடித்த முட்டாள்Õ என்று ஒரு படத்தைத் தயாரிக்க துவக்கவிழாவெல்லாம் நடத்தினார். கவிஞர் கண்ணதாசன்தான் வசனம் எழுதுவதாக இருந்தது. ஆனால் கலைவாணரின் பணப்பிரச்னை அந்த படத்தை தயாரிக்க விடாமலே செய்தது. பணம் படத்தின் நட்டத்தினால் ஏற்பட்ட பெரும் கடன் வட்டிக்கு மேல் வட்டியாக வளர்ந்தது. அதன்பின் வெளியார் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தும் ஏற்கனவே உள்ள கடனின் வட்டியை கட்டுவதே பெரும்பாடாகி கலைவாணர் பிரச்னையில் சிக்கி தவிக்கலானார். எனவே கலைவாணர் சிரமத்திற்கு சிறைவாசம் காரணமல்ல; சொந்தப்பட தயாரிப்புகளே காரணம். கலைவாரணரை அடுத்து பாகவதரும் சிறை மீண்டதும் தேடிவந்த பட வாய்ப்புகளை ஏற்கவில்லை. பாகவதரும், கலைவாணரும் பொறாமை கொண்டவர்களின் சதியில் மாட்டி சிறையில் புகுந்தார்கள் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததால், அறிஞர் அண்ணா அவர்கள் இருவரையும் அவ்வப்போது சிறையில் சந்தித்து வந்தார். பாகவதர் விடுதலையானதும் அவருக்கு ஒரு திரைப்படம் உடனடியாக வேண்டும் என்பதற்காகவே, Ôசொர்க்கவாசல்Õ திரைக்கதை வசனத்தை எழுதி, அந்தப் படத்தைத் தயாரிக்க ஜுபிடர் சோமுவையும் தயார்படுத்தி வைத்திருந்தார் அறிஞர் அண்ணார். பாகவதரை சந்தித்து அண்ணா இந்தப் படம் பற்றி பேசியபோது, இன்னொரு காரணத்தாலும் படத்தை ஒப்புக்கொள்ள தயங்கினார் பாகவதர். அவர் அண்ணாவிடம், Ôஉங்களுக்கு என்மீது பெரிய பற்றுதல் உண்டு என்பதினால் எனக்கும் உங்களிடம் பெரிய மரியாதை உண்டு. ஆனால் நீங்கள் கடவுள் மறுப்பு இயக்கத்தை சார்ந்து இருக்கிறீர்கள். நானோ பக்தி படங்களில் மட்டுமே நடித்து வந்திருப்பவன். நான் தங்கள் வசனத்தில் நடிக்கும்போது ஏதாவது பிரச்னை ஏற்படலாம். மன்னித்துவிடுங்கள்Õ எனச் சொல்லி அந்தப் பட வாய்ப்பை ஏற்கவில்லை. பாகவதர் சொந்தப் படம் தயாரிக்கவே முனைந்தார். Ôராஜமுக்திÕ என்ற படத்தை எடுக்க முடிவு செய்து தன்னுடன் எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, பி.பானுமதி, வி.என்.ஜானகி போன்றோரையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார். வசனம் எழுதியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். தமிழ்நாட்டுத் தயாரிப்பாளர்கள் வேண்டாம் என்ற முடிவோடு தமிழ்நாட்டிலும் படத்தை தயாரிக்க விருப்பமின்றி பம்பாயில் போய் அந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தார். அது 1948 ஆம் வருடம். பம்பாயில் ஒரு பங்களாவைப் பிடித்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைவரையும் பாகவதர் தங்க வைத்து, பம்பாய் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்தார். அப்போது ஒருநாள் எதிர்பாராமல் ஒஎரு பெரிய அதிர்ச்சியான செய்தி வெளியாகி பம்பாய் நகரமே குலுங்கியது. ஆம்; அண்ணல் காந்தியடிகள் டில்லியில் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோது சுடப்பட்டார் என்ற செய்தியே அது. அவ்வளவுதான் பம்பாயே வெட்டுக் குத்து என பெரிய ரணகளமாயிற்று. பாகவதர், எம்.ஜி.ஆர். என ராஜமுக்தி படக் குழுவினர் அனைவரும் தங்கள் தங்கியிருந்த பங்களாவை விட்டுப் பத்து நாட்கள் வரை வெளியே வரமுடியாமல் சிறைப்பட்டனர். அந்த பெரிய அமளியில் இருந்து மீண்ட நேரத்தில் வசனம் எழுதிவந்த புதுமைப்பித்தன் பெரும் நோய்க்கு இலக்காகி படத்தின் பிற்பகுதி வசனங்களை எழுதித்தர முடியாமல் போனார். பிறகு இன்னொருவர் பாக்கி காட்சிகளை எழுதி முடித்தார். எப்படியோ, பல சிரமங்களை தாங்கி முடிவடைந்த Ôராஜமுக்திÕ திரைப்படம் வெளிவந்தபோது எதிர்பாராத நிலையில் பெரிய தோல்வியை அடைந்தது. இந்தப் படத்தின் மூலம் பாகவதருக்கு ஏற்பட்ட ஏராளமான கடன் அவர் அதிலிருந்து மீளமுடியாமல் செய்தது. ஆக கலைவாணருக்கும் பாகவதருக்கும் சிறைவாசத்தால் ஏற்பட்ட சிக்கலைவிட, சொந்தப்பட தயாரிப்பு மூலம் ஏற்பட்ட மீளா பிரச்னைதான் இறுதிவரை தொடர்ந்தது. -- தொடரும் நன்றி vikatan.com சினிமா மாயை (பாகம்2) - vasisutha - 04-15-2005 <b>கண்ணதாசனின் வியப்பும் திகைப்பும்! </b> <img src='http://www.vikatan.com/cinema/2005/mar/kannadasan_p23.jpg' border='0' alt='user posted image'> சின்னராசு கலைவாணரையும், பாகவதரையும் போல் பெரிய புகழோடு இருந்த இன்னொரு நடிகர் பி.யு.சின்னப்பா. இவர் திரையுலகில் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்துவந்த காலத்தில் வெகுகாலம் திருமணம் செய்யாமலே இருந்துவந்தார். அவருடன் அவரது சகோதரியும், சகோதரியின் கணவரும் மட்டுமே உடன் இருந்து வந்தார்கள். இந்நிலையில் பி.யு.சின்னப்பா ஏராளமாக சம்பாதித்தப் பணத்தைக் கொண்டு தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் சொத்துக்களாக வாங்கிக் குவித்தார். ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை தடை விதித்தததாகக் கூறுவார்கள். காரணம் அவர் சொத்துக்கள் வாங்கிக் குவித்த வேகத்தைப் பார்த்து, புதுக்கோட்டையையே ஒருநாள் வாங்கிவிடுவாரோ எனப் பயந்தார்களாம். பி.யு.சின்னப்பா அதன்பிறகு சென்னையில் சொத்துக்கள் வாங்கிக் குவித்தார். சென்னையில் மொத்தம் 64 வீடுகளை வாங்கிக் போட்டிருந்தார் பி.யு.சின்னப்பா. திருவல்லிக்கேணியில் மட்டும் 13 வீடுகள் அவருக்கு இருந்தன. புதுக்கோட்டை மன்னரும் பி.யு.சின்னப்பாவும் நண்பர்களாக இருந்துவந்தனர். ஒரு சமயம் சென்னையில் சந்தித்துக்கொண்ட இருவரும் விருந்தில் கலந்து கொண்டார்கள். தாங்கள் இருவரும் சேர்ந்து சென்னையில் ஒரு பிரமாண்டமான திரையரங்கை கட்டவேண்டும் என திட்டமிட்டிருந்த அவர்கள் அது குறித்து அந்த விருந்தில் பேச ஆரம்பித்து, நேரம் ஆக ஆக நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற சண்டையாவிட்டதாம். பி.யு.சின்னப்பா, சொன்னாராம், நீங்க புதுக்கோட்டையில் மன்னர் என்றால், நான் இந்த சென்னையில் Ôமன்னன்Õ என்பதாக! ஆக ஒருநாள் சண்டையில் அவர்கள் திரையரங்கு கட்டுகிற திட்டமும் முடிந்துபோனது. ஆக வீடு போன்ற சொத்துக்களை வாங்கிக் வாங்கிக் குவித்துவந்த சின்னப்பா, பிருத்திவிராஜனாக ஒரு படத்தில் நடத்தபோது அதில் நடித்த சகுந்தலா என்ற நடிகையை காதலித்து மணந்து கொண்டார். இதுவரை நான் வாங்கிக் குவித்துவந்த சொத்துக்களை தன் தங்கைக்கும், மனைவிக்கும் பிரித்து எவ்வளவு எவ்வளவு எழுத வேண்டும் என்பதில் தாமதம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருநாள் பி.யு.சின்னப்பா காலமானார். பி.யு.சின்னப்பா காலமானதும் அவர் மனைவி சகுந்தலா தன் கணவரின் தங்கையையும் கணவரையும் சென்னை வீட்டிலிருந்து வெளியேற்றினார். அவர்களுக்குப் புதுக்கோட்டையில் உள்ள பெரும் சொத்துக்களிலும் சட்டப்படி உரிமை இல்லாது போகவே. அவ்விருவரும் பரிதாபமாக தங்கள் கடைசி காலம்வரை புதுக்கோடாயில் உள்ள பி.யு.சின்னப்பா சமாதியிலேயே வாழ்ந்தார்கள். அதே சமயம் பி.யு.சின்னப்பாவின் மனைவி சகுந்தலாவும் தன் கணவர் விட்டுச் சென்ற சொத்துக்களை எல்லாம் குறுகிய காலத்தில் இழந்து கடைசியில் தன் ஒரே மகன் ராஜபாகதூருடன் குடிசைப் பக்கப்போய் வாழ நேரிட்டதாக கூறுவார்கள். பி.யு.சின்னப்பா ஒரு மன்னன் மாதிரி சொத்துக்களை வாங்கிக் குவித்தும் அவையெல்லாம் அவர் மறைந்த சிறிது காலத்திலேயே அந்தக் குடும்பத்தின் கைவிட்டுப் போய்விட்டன. சொந்தப்படம் எடுத்து பி.யு.சின்னப்பா சொத்துக்களை அழிக்காவிட்டாலும், புதிய சொந்தத்தைத்தேடி சொத்துக்களை இழந்தார் எனக்கூறலாம். பாகவதர், சின்னப்பா கதாநாயகர்களாக கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் டி.ஆர்.மகாலிங்கமும் பாடக்கூடிய கதாநாயகனாகப் புகழோடு விளங்கினார். டி.ஆர்.மகாலிங்கம் மிகச் சிறிய வயதிலேயே திரையுலகத்திற்கு வந்துவிட்டார். அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட Ôபக்த பிரகலாதாÕ படத்தில் பிரகலாதனாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். இந்திரனாக சிறுவேடத்தில் வருவார். அதேபோல் Ôநந்தகுமார்Õ என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பால கண்ணனாக நடித்தார். பிற்காலம், ஸ்ரீவள்ளி, நாம் இருவர், ஞானசௌந்தரி போன்ற பெரிய வெற்றிப் படங்களில் எல்லாம் அவர் நடித்தார். பாகவதருக்கும் சின்னப்பாவுக்கும் இல்லாத ஒரு வாய்ப்பாக டி.ஆர்.மகாலிங்கத்திற்கு, பக்தி படம், ராஜா ராணி படம் தவிர சமூகப்படங்களிலும் நடிக்கிற வாய்ப்பு இருந்தது. இதன் காரணமாக ஏராளமான படங்களில் டி.ஆர்.மகாலிங்கம் நடித்து அந்த காலத்திலெயே எண்பது லட்ச ரூபாய் சம்பாதித்தார். இந்த கால மதிப்பு எண்பது கோடி ரூபாயை தாண்டிய மதிப்புடைய பணம் அது. அவ்வளவு செல்வாக்கில் இருந்த டி.ஆர்.மகாலிங்கம் சொந்தப் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். திரையுலகில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கிய பி.ஆர்.பந்தலுவுக்கும் சாரங்கபாணிக்கும் தான் வாழ்ந்த மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை பக்கமுள்ள தன் பங்களாவின் அருகேயே அவர்களுக்கும் வீடுகள் அமைய செய்தார். சொந்தமாகப் படங்கள் தயாரிக்கத் துவங்கிய டி.ஆர்.மகாலிங்கம் தன்பட நிறுவனத்திற்கு தனது புதல்வன் பெயரையே Ôசுகுமார் பிக்சர்ஸ்Õ என வைத்தார். ;மோகன சுந்தரம்Õ ÔÔவிளையாட்டுப் பொம்மைÕ என்ற இரு சமூகப்படங்கள் அவர் சம்பாதித்த செல்வத்தை கரைத்ததோடு கடனாளியாகவும் ஆக்கியது. Ôதெருப்பாடகன்Õ என்ற படத்தை எடுக்கத் துவங்கி தொடர முடியாமல் நிறுத்தினார். இனி சென்னையில் வாழ்வது முடியாது என்ற நிலையில் ஏற்கனவே சொந்த ஊரான சோழவந்தானில் கட்டியிருந்த வீட்டில்போய் குடியேறினார். முதன்முதலில் நாடகங்களில் நடித்து தனது கலைப்பயணத்தை துவக்கிய டி.ஆர்.மகாலிங்கம், தான் பெரிய திரைப்பட நட்சத்திரமாக விளங்கியவர் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு மறுபடி ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். கவிஞர் கண்ணதாசன் சொந்தமாக Ôஊமையன் கோட்டைÕ என்ற படத்தை எம்.ஜி.ஆர். வைத்து எடுக்கத் துவங்கினார். ஏதோ காரணத்தால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர். விரும்பவில்லை. இது கண்ணதாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ÔÔதிரை உலகில் முன்னணி நடிகரை வைத்துதான்படம் எடுத்து ஓட்ட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. நான் திரை உலகில் மார்க்கெட் இழந்த ஒரு நடிகரை வைத்தே ஒரு வெற்றிப்படத்தை தரமுடியும்ÕÕ எனக் கூறினார். இந்நிலையில் தன் படத்திற்கு பைனான்ஸ் தரப்போகிறவரை கண்ணதாசன் சந்தித்தார். அவர் கண்ணதாசனிடம் ÔÔநீங்கள் எடுக்கப்போகும் படத்திற்கு பழைய நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தை கதாநாயகனாக போட்டு படம் எடுப்பீர்களானால் நான் பைனான்ஸ் தருகிறேன்Õ என்றார். இதைக் கேட்ட கண்ணதாசனுக்கு வியப்பாக இருந்தது. Ôஎப்போதுமே பைனான்ஸியர்கள் தங்கள் உதவுகிற படம் வெற்றிபெற மார்க்கெட்டில் மவுசோடு இருக்கிற நடிகர்&நடிகைகளை சிபாரிசு செய்வார்கள். இவர் மார்க்கெட் இல்லாத நடிகரை சிபாரிசு செய்கிறாரேÕ என எண்ணினார். மேலும் ஒரு மார்க்கெட் இல்லாத நடிகரை வைத்து வெற்றிப் படத்தை எடுத்துக்காட்டுவதாக தானும் சபதம் செய்திருப்பதால் அதற்கு ஏற்ற நடிகர் டி.ஆர்.மகாலிங்கம்தான் என முடிவு செய்து அவரையே புக் செய்து Ôமாலையிட்ட மங்கைÕ என்ற படத்தை கண்ணதாசன் தயாரித்தார். இந்தப் படத்தின் மூலம்தான் கண்ணதாசன் நடிகை மனோரமாவையும் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்துப் படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் பைனான்ஸியர் ஏன் மகாலிங்கத்தை சிபாரிசு செய்தார் என்பது கவிஞருக்குத் தெரியவந்தது. அதாவது முன்பு டி.ஆர்.மகாலிங்கம் சொந்தப்படம் எடுத்தக் காலத்தில் இதே பைனான்ஸியரிடம் வாங்கிய கடனில் ஒரு நாற்பதாயிரம் ரூபாய் பாக்கியாக அப்படியே நின்றுவிட்டதாம். இனி அந்தப் பணத்தை மகாலிங்கத்திடம் இருந்து வசூல் பண்ணவே முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்த நிலையில்தான் கண்ணதாசன் பணத்திற்கு வந்து சேர்ந்தார். இப்போது கண்ணதாசனை Ôமகாலிங்கத்தையே ஒப்பந்தம் செய்யுங்கள்Õ என பைனான்ஸியர் யோசனை வழங்கியதன் மூலம் மகாலிங்கத்திற்கு தரவேண்டிய சம்பளத்தை பழைய கடன் தொகையில் கழித்துக் கொள்ளலாம் அல்லவா. இந்த விபரத்தை கண்ணதாசன் அறியவந்தபோது பைனான்ஸியரின் திறமையைப் புரிந்து திகைத்துப் போனார். Ôமாலையிட்ட மங்கைÕ படம் வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து டி.ஆர்.மகாலிங்கத்திற்கு மேலும் சில படங்களில் நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது என்றாலும், அவர் ஏற்கனவே பட்டிருந்த கடன்களால் மறுபடி கடைசிவரை அவரால் எழ முடியவே இல்லை. கவிஞர் கண்ணதாசனும் மற்றவர்களைப் பார்த்துப் படிக்காமல் அவரும் சொந்தப் படம் தயாரிக்க ஆரம்பித்து அதன் காரணமாக பன இழப்புகளுக்கும் நிம்மதி இழப்புகளுக்கும் ஆளானார். Ôமாலையிட்ட மங்கைÕ படத்தின் வெற்றியை தொடர்ந்து கண்ணதாசன் சொந்தப்படங்களை தொடர்ந்து தயாரிக்க முன்வந்தார். அந்தக் காலகட்டத்தில் திரைப்பட பாடலாசிரியர்களில் கண்ணதாசன் முன்னிலை வகித்து எல்லாப் படங்களுக்கும் பாடல் எழுதிக் கொண்டிருந்தார். அதனால் நேரடியாக சொந்தப் படத் தயாரிப்பை கவனிக்க முடியாமல் அரசியல் மூலம் அறிமுகமான கோவை செழியனை சென்னை அழைத்து வந்து தனது படக்கம்பெனி பொறுப்புகளைத் தந்தார். வானம்பாடி, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் போன்ற படங்களை கண்ணதாசன் தயாரித்தார். Ôகவலை இல்லாத மனிதன்Õ படத்தில் சந்திரபாபுவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி பல துன்பங்களையும் சந்தித்தார். Ôகறுப்புப் பணம்Õ படத்தில் கண்ணதாசனே ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படங்கள் எல்லாம் பெரிய லாபத்தை தராவிட்டாலும் எப்படியோ தப்பித்தன என்ற நிலையில் ஓடின. ஆனால் Ôசிவகங்கைச் சீமைÕ படம்தான் வரலாற்று படம் என்பதால் நிறைய கடன் வாங்கிக் கண்ணதாசன் செலவு செய்தார். அந்தப்படம் தோல்வி அடைந்ததால் பெரும் கடனில் கண்ணதாசன் சிக்கிக் கொண்டார். அதன்பிறகு அவர் பாடல் எழுதி எவ்வளவு சம்பாதித்தாலும் ஏற்கனவே உள்ள கடனுக்கு வட்டி செலுத்தவே தன் சம்பாத்யம் காணமல் கண்ணதாசன் தவித்தார். ஆக நிறைய சம்பாதித்துக் கொண்டே தொடர்ந்து கடனும் வாங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனைப் பற்றி ஒரு விழாவில் வலம்புரிஜான் கூறும்போது, Ôகவிஞர் இந்திய ஜனாதிபதி மாதிரி சம்பாதிக்கிறார். இந்திய அரசு மாதிரி கடன் வாங்குகிறார்ÕÕ என குறிப்பிட்டார். ஆக கண்ணதாசனும் சொந்தப்பட தயாரிப்பால் தன் புகழின் பெருமையை அனுபவிக்க முடியாமல் தவிப்போடுதான் வாழ்ந்தார். தொடரும் vikatan.com சினிமா மாயை (பாகம்3) - vasisutha - 04-15-2005 <b>நடிகர்களாக இருந்து பெரிய தயாரிப்பாளர்களான மூன்று பேர்!</b> <img src='http://www.vikatan.com/cinema/2005/mar/veerappa_31.jpg' border='0' alt='user posted image'> சின்னராசு தமிழ்திரை உலகில் அட்டகாசமான வில்லன் பி.எஸ்.வீரப்பா; இடி முழக்கமான சிரிப்புத்தான் அவருடைய தனி முத்திரை. அவருடைய ஆஜானுபாகுவான தோற்றம் வேறு எந்த வில்லன் நடிகருக்கும் இல்லாதது. அவருடைய தோற்றம் போலவே அவருடைய உடலுறுதியின் பலமும் உண்மையானது. அது பற்றி ஒருமுறை நடிகர் ஆர்.எஸ்.மனோகரே கூறியிருக்கிறார். Ôஇரண்டு பேர் தூக்கவேண்டிய பெரிய நெல் மூட்டையை அநாயாசமாக முதுகில் போட்டுக்கொண்டு பெரிய மாடிப்படிகளில் சுலபமாக ஏறி இறங்கிக் காட்டிய தேகபலம் மிக்கவர் பி.எஸ்.வீரப்பாÕ என அவர் கூறினார். அவ்வளவு முரட்டுப் பலமும் தோற்றமும் இருந்ததினாலேயே அவர் வில்லன் வேடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். எனினும் உண்மையில் நேரில் பி.எஸ்.வீரப்பா மிக சாந்தமான மனிதர். அந்த வீரப்பா 55 வருடங்களுக்கு முன்னேயே மிகப் பெரிய வில்லனாக நடிக்க ஆரம்பித்தவர். குறிப்பாக எம்.ஜி.ஆரின் முந்திய படங்களில் எல்லாம் அவர்தான் வில்லனாக வருவார். கிட்டத்தட்ட 150 படங்களில் முக்கிய வில்லனாக நடித்த வீரப்பாவுக்கு சொந்தப் படங்களைத் தயாரிக்கிற ஆசை ஏற்பட்டது. Ôபிள்ளைக்கனியமுதுÕ என்ற முதற்படத்தை எஸ்.எஸ்.ஆரை வைத்து எடுத்த வீரப்பா, அடுத்து Ôவீரக்கனல்Õ என்ற படத்தை ஜெமினி கணேசனை வைத்துத் தயாரித்தார். அதன்பின் Ôநீலமலைத் திருடன்Õ என்ற படத்தை அகில இந்திய நடிகரான ரஞ்சனை வைத்துத் தயாரித்தார். இப்படிப் படங்களை எடுத்துவந்த வீரப்பாவுக்கு, ÔஆலயமணிÕ என்று சிவாஜி கணேசனை வைத்து எடுத்த படம் மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து சிவாஜியை வைத்து Ôஆண்டவன் கட்டளைÕ என்றும், எம்.ஜி.ஆரை வைத்து Ôஆனந்த ஜோதிÕ என்றும் ஆலயமணி வெற்றியை தொடர்ந்து ÔஆÕ என்று ஆரம்பிக்கும் பெயர்களில் படங்களை எடுத்தாலும் ஆலயமணி வெற்றிக்கு ஈடாக எந்த படமும் அமையவில்லை. இந்நிலையில் பம்பாய் பட தயாரிப்பாளர் ஒருவர் வீரப்பாவை தேடிவந்து, ÔஆலயமணிÕ படத்தை அப்படியே இந்தியில் எடுத்துக்கொள்ள உரிமை தந்தால் ஐந்து லட்ச ரூபாய் தருகிறேன்Õ என கேட்டார். இந்த காலத்தில் ஐந்து கோடி தருகிறேன் எனச் சொல்வதற்கு ஈடானது அந்த காலகட்டத்தில் ஐந்து லட்ச ரூபாய் எனக் குறிப்பிட்டது. படத்தைத் தயாரிக்க அனுமதி தரவே Ôஐந்து லட்சமா?Õ என வீரப்பா திகைத்தார். அவரை சுற்றி இருந்தவர்கள் வீரப்பாவிடம் தனியாக, Ôஅண்ணே... வெறும் லட்டர்தாளில் அனுமதி கொடுக்கவே ஐந்து லட்சம் தருகிறேன் என்று இந்திப்பட முதலாளி சொல்கிறாரே இந்தக் கதை இந்தியில் எத்தனை கோடிகளை சம்பாதித்து தரும் என்பதை கணக்கிடாமலா ஐந்து லட்சம் தர சம்மதிப்பார்? எனவே அவசரப்பட்டு அனுமதி கொடுத்துவிடாதீர்கள்Õ என்றார்கள். வீரப்பாவும் தன்னை சேர்ந்தவர்கள் பேச்சைக்கேட்டு, அந்த இந்திப்பட தயாரிப்பாளரை அனுப்பிவிட்டார். மறுபடி சில மாதங்கள் கழித்து அதே இந்திப்பட தயாரிப்பாளர் வீரப்பாவை தேடி வந்தார். Ôசார் ஆலயமணி படத்துக்கு எனக்கு தனி உரிமை தரவேண்டாம். நான் பணம் போட்டு படத்தை இந்தியில் எடுக்கிறேன். கிடைக்கிற லாபத்தில் நாம் இருவருக்கும் சரிபாதிÕ என்று கூறினார். இந்த வாய்ப்பையாவது வீரப்பா பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உடன் இருந்தவர்கள் மறுபடியும் தவறான யோசனையே வழங்கினார்கள். Ôஅண்ணே.. இந்த இந்திப்பட முதலாளி மறுபடி மறுபடி வந்து கெஞ்சுகிறதை பார்க்கும்போது, இந்த அருமையான கதையை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கிறதுக்குப் பதில் நாமே இந்தியில் எடுக்க வேண்டும்Õ என்றார்கள். அப்படியே வீரப்பாவும் இந்தியில் தானே சொந்தமாக ஆலயமணியை தயாரிக்கப் போவதாகக் கூறிவிட்டு செயலிலும் இறங்கிவிட்டார். Ôஆத்மிÕ என்ற பெயரில் திலீப் குமாரை வைத்து ஆலயமணி படம் இந்தியில் தயாரிக்கப்பட்டது. ஆனால் என்ன பரிதாபம், ஆத்மி படம் வெளிவந்து தோல்வி அடையவே வீரப்பா அதுவரை சம்பாதித்ததை இழந்தது மட்டுமல்லாமல் ஏராளமான கடன்களையும் வாங்கி சரியான சிக்கலில் மாட்டினார். தன்னை வைத்து படம் எடுத்து வீரப்பா நட்டத்தில் மாட்டிக்கொண்டாரே என பரிதாபப்பட்ட திலீப்குமார், தனது சொந்தத் தயாரிப்பில் மிகப் பெரிய வெற்றிப்படமாக ஓடிய Ôகங்கா ஜமுனாÕ படத்தை தமிழில் வீரப்பா எடுத்துக் கொள்ள பணம் எதுவும் வாங்காமல் உரிமை தந்தார். அந்தப் படம்தான் Ôஇரு துருவம்Õ என்ற பெயரில் சிவாஜியை வைத்துத் தயாரிக்கப்பட்டு அந்த படமும் தோல்வியடைந்தது. சோதனைக்கு மேல் சோதனையாக வந்து குலைந்துபோன வீரப்பா, Ôசாட்சிÕ, Ôவெற்றிÕ போன்ற சில படங்களைத் தயாரித்துப் பார்த்தும் ஏற்கனவே உள்ள பெரிய கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் பெரும் துன்பத்திற்கு ஆளானார். படங்களில் மற்றவர்களை நடுங்க வைக்கிற வில்லனாக நடித்தவர், இப்போது கடன்காரர்கள் தேடி வருகிறார்கள் என்றால், உடம்பே வெடவெடவென ஆட நேருக்கு நேர் பதில் சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாம் நடுங்கும் நிலைக்கு ஆளானார். இன்னொரு பிரபல திரைப்பட தயாரிப்பாளராக விளங்கிய சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரும் ஆரம்பத்தில் ஒரு நடிகனாக வாழ்க்கையைத் துவங்கியவர்தான். முதன்முதலில் இவர் மிகுந்த சிரமங்களுடன் Ôதாய்க்குப்பின் தாரம்Õ திரைப்படத்தை எம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்கலானார். படம் பாதிக்குமேல் வளர்ந்த நிலையில் நிதிநிலை மேலும் சிக்கலாகியது. இதற்கு மேலும் கடனுக்கு மேல் கடன் வாங்கிப் படத்தை தயாரித்து, ஒருவேளை படம் சரியாகப் போகாவிட்டால் மீளாத கடனில் மூழ்க நேருமே என எண்ணினார் தேவர். எனவே வாஹினி ஸ்டூடியோ அதிபர் நாகிரெட்டியை சந்தித்து, இதுவரை நான் எடுத்தப் படத்தை வாங்கிக்கொண்டு, இந்தளவுவரை ஆகியிருக்கிற செலவுதொகையை மட்டும் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். நாகிரெட்டி இதுவரை வளர்ந்திருந்த படத்தைப் போட்டுப் பார்த்தவர், Ôபடம் நன்றாகத்தான் வந்திருக்கிறது. பாக்கிப் படத்தையும் பூர்த்தி செய்ய தயங்க வேண்டாம் படம் வெற்றிபெறும்Õ எனக் கூறினாஅர். அவர் தந்த நம்பிக்கையில் தேவர் படத்தை எப்படியோ முடித்து வெளியிட்டார். படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் குறைந்த பட்ஜெட்டில் வெவ்வேறு கதாநாயகர்களை வைத்து ஐந்தாறு படங்களை தயாரித்தார். அந்த காலகட்டங்களில் நடிகர்களை விட மிருகங்களை அதிகமாக நம்பி படங்களைத் தயாரிக்கலானார். அவைகளெல்லாம் போட்ட முதல் தப்பியது என்ற நிலையிலேயே ஓடின. அப்படியரு படம்தான் Ôதெய்வச்செயல்Õ என்ற பெயரில் யானைகளை முக்கிய பாத்திரங்களாக்கி மேஜர் சுந்தராஜனை வைத்து தயார் செய்து படம். இந்தப் படம் வெற்றி பெறாவிட்டாலும் இந்த யானைகள் கதையை இன்னும் சுவையாக எடுக்க வேண்டுமே என்ற எண்ணம் தேவருக்கு இருந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் மறுபடி தேவர் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்புக்கொள்ளாவே, Ôதாய்ச் சொல்லைத் தட்டாதேÕ படத்தை தயாரித்து பெரிய வெற்றி கண்டார். பின்னர் அதன் தொடர்ச்சியாக, தாயைக் காத்த தனயன், தர்மம் தலைகாக்கும்... இப்படி ÔதாÕ, ÔதாÕ என்ற முதல் எழுத்துக்களிலேயே பல படங்களைத் தயாரித்தார். தேவரின் படத் தயாரிப்பு நிலையம் வளர்ந்துவிட்ட நிலையில் Ôதேவர் பிலிம்ஸ்Õ என்ற முத்திரையில் எம்.ஜி.ஆர். நடிக்கிற படங்களையும், Ôதண்டபாணி பிலிம்ஸ்Õ என்ற பெயரில் மற்ற நடிகர்கள் நடிக்கிற படங்களையும் தேவர் தயாரிக்கலானார். இந்த கால வளர்ச்சியில் நாளாக நாளாக தேவருக்கு ஒரு படத்தின் வெற்றிக்கு கதையும், கதை நிகழ்ச்சிகளும், அதன் கோர்வையும் மிக முக்கியம் எனப் புரிய ஆரம்பித்தது. அதன்பித் தேவர், திரைப்பட கதாசிரியர்கள் குழு ஒன்றையே எப்போதும் தன்னுடன் வைத்துக் கொள்ளா ஆரம்பித்தார். அந்த குழுவில், மகேந்திரன், தூயவன், கலைஞானம் போன்றவர்கள் எல்லாம் இருந்தனர். அவர்கள் கூடிகூடி பல கதைகளை உருவாக்கி தேவரிடம் சொல்லவேண்டும் என்ற வழக்கத்தை உண்டாக்கினார். அந்த காலகட்டத்தில்தான் முன்பு எடுத்து தோல்வியடைந்த Ôதெய்வச் செயல்Õ என்ற யானைகளின் கதையை, குடும்பப் பாங்கான சமபல செறிவுடன் ஒரு அருமையான கதையை உருவாக்கி, அதைத்தான் இந்தியில் Ôஹாத்தி மேரா ஸாத்திÕ என ராஜேஸ்கன்னாவை வைத்து தயாரித்தார். அந்தப் படம் வெளியானபோது இந்திப்பட உலகையே பிரமிப்பில் ஆழ்த்துகிற மாதிரி மிக பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியை பார்த்த தேவர், மறுபடியும் அதைத் தமிழில் எடுக்கவேண்டுமென விரும்பி Ôதெய்வச்செயல்Õ படத்தில் எடுத்த சில காட்சிகளை தவிர்த்து தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து Ôநல்லநேரம்Õ என்ற பெயரில் எடுத்து வெற்றி கண்டார். இப்படி தமிழ்ப்படங்கள், இந்திப் படங்கள் என சாதனை புரிந்து வந்த தேவருக்கு ஒரு எதிர்பாராத சோதனை உடல் ரீதியான பாதிப்பை தந்ததாக சொன்னார்கள். ஒருநாள் எதிர்பாராமல் தேவர் மறைந்தார். அவருக்குபின் அவர் புதல்வரும், மருமகனும் தேவர் பிலிம்ஸ், தண்டபாணி பிலிம்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்த நிலையில் பொருளாதார பிரச்னை, கடன் என்று திடீரென அந்தப் பெரிய நிறுவனமே சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது. தமிழ் திரையுலகில் குறிப்பிட்ட காலம்வரை மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் நடிகர் கே.பாலாஜியின் சுஜாதா பிலிம்ஸ். திரைப்படங்களில் சின்ன வேடங்களை ஏற்று படிப்படியாக கதாநாயகனாக உயர்ந்த பாலாஜி முதன்முதலாக Ôஅண்ணாவின் ஆசைÕ என்ற பெயரில் ஜெமினி கணேசனை வைத்து ஒரு படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றி பெறவில்லை. அடுத்து சிவாஜியை வைத்து Ôதங்கைÕ என்ற படத்தை தயாரித்தார். அது வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் சிவாஜியை வைத்து, ஏராளமானப் படங்களை தயாரித்தார். Ôஎன் தம்பிÕ Ôஎங்கிருந்தோ வந்தான்Õ, Ôதீபம்Õ, Ôதியாகம்Õ , Ôநல்லதொரு குடும்பம்Õ என எண்ணற்ற படங்கள். தேவர் பிலிம்ஸ் என்றால் எம்.ஜி.ஆர். தான் என்கிற மாதிரி சுஜாதா பிலிம்ஸ் என்றால் சிவாஜி என ஆனது. சிவாஜி வயோதிகராக நடிக்க ஆரம்பித்த பின்னால்கூட Ôமருமகள்Õ ÔநீதிபதிÕ, Ôபந்தம்Õ என படங்களை எடுத்துத் தள்ளினார். பின்னர் கமல், ரஜினியை வைத்தும் படங்களை தயாரித்தார். பாலாஜி, தான் தயாரிக்கின்ற படங்களுக்கு புதிதாகக் கதையை எழுதச் சொல்லவேண்டும் என நினைப்பதில்லை. வேற்று மொழிப் படங்களில் வெற்றியடைந்த படத்தின் கதையை ரீமேக்காக படமாக்கவே விரும்புவார். அந்த யுக்தியே அவருக்கு வெற்றிமேல் வெற்றியாக தொடர்ந்து கொண்டிருந்தது. பாலாஜியைப் பார்த்து பலரும் பிற மொழிப் படங்களை ரீமேக் செய்ய முனைந்து வெற்றிபெற முடியாமல் போனார்கள். பாலாஜிக்கு மட்டும் ரீமேக் படங்கள் பெரிய வெற்றியை தருவது எப்படி என அவரிடமே ஒரு சமயம் கேட்கப்பட்டது. அந்த ரகசியத்தைப் பாலாஜி பகிரங்கப்படுத்தினார். Ôபிறமொழிப்படம் ஒன்றை ரீமேக் செய்வதானால் அந்தப்படம் எடுக்கப்பட்ட மொழி பேசுகிற மாநிலத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். அதே சமயம் நமது மாநிலத்தில் அந்த படம் பற்றி நமது மக்கள் அவ்வளவாக அறிந்திருக்கக்கூடாது. அதாவது ÔசோலேÕ போன்ற படம் இந்தி மொழி பேசுகிற மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுக்கவே நன்றாக ஓடியவை. யாரும் அந்தப் படத்தை நமது மொழியில் ரீமேக் செய்தால் தோல்வியையே சந்திக்க நேரும்!Õ என பாலாஜி அருமையான ஒரு விளக்கம் தந்தார். ஆனால், அந்த விளக்கத்தை அவரே மறந்துபோல நடந்து கொண்டதால் வெற்றிகரமான அவர் நிறுவனம் மறுபடி எழ முடியாதபடி சோதனைக்கு ஆளானது. Ôகுர்பானிÕ இந்திப்படம் ÔசோலேÕ மாதிரி இந்தியா முழுக்க வெற்றிகரமாக ஓடிய படம். அந்தப் படத்தை போய் ÔவிடுதலைÕ என்ற பெயரில் ரஜினியை வைத்து பாலாஜி மிக பிரமாண்டமாக தமிழில் தயாரித்தார். அதன் பலன் படத்தின் நட்டத்தால் மீளமுடியாத கடனுக்கு ஆட்பட நேர்ந்தது. தொடரும்... vikatan.com சினிமா மாயை (பாகம்4) - vasisutha - 04-15-2005 <b>சாவித்திரியின் பிராப்தம் அப்படி! </b> <img src='http://www.vikatan.com/cinema/2005/apr/savithiri_p.jpg' border='0' alt='user posted image'> <b>சின்னராசு</b> மதுரை வீரன் என்ற மகத்தான வெற்றிப்படத்தை தயாரித்தவர் கிருஷ்ணா பிக்சர்ஸ் அதிபர் லேனா செட்டியார். தமிழ்த் திரைப்பட உலகில் வெகுகாலம் நடிக, நடிகையருக்கு, காட்பாதரா விளங்கியவர் இவரே. குறிப்பாக திரையுலகுக்கு வரப்போகிற, வந்துவிட்ட புதுமுக நடிகைகள் தாங்கள் படவுலகில் கால் ஊன்றும் வரை லேனவின் தயவு வேண்டும் என்றே விரும்பினார்கள். அவர்களுக்கு குடியிருக்க வீடு பிடித்துத் தருவது, தினமும் தன் வேனில் அவர்கள் வீடுகளுக்கு காய்கறிகள் முதல் ஆடு, கோழி கறிகள் வரை கிடைக்கச் செய்வது, தீபாவளி போன்ற நாட்களில் அவர்களுக்குப் பட்டுப்புடவைகள் அனுப்பிவைப்பது என அவருடைய பராமரிப்பு தொடரும். நடிகர்களுக்கும் தாங்கள் பிரபலமான பின்னரும் லேனாவின் தயவு வேண்டியே இருந்தது. ஏதாவது அரசு அலுவலகங்களில் வேலை நடக்க வேண்டியது, போலீஸில் ஏதாவது பிரச்னை இருந்தால் தீர்வு வழி காண்பது போன்ற அனைத்து வேலைகளையும் லேனாவைப் பார்த்து சொல்லிவிட்டால் கனகச்சிதமாக முடித்துத் தந்துவிடுவார். இப்படி தமிழ் திரைப்பட உலகினருக்கு பல வகையில் தேவைப்படுகிற மனிதராக விளங்கிய லேனா நிறைய தமிழ்ப்படங்கள் தயாரித்தார். Ôகிருஷ்ண பக்திÕ, Ôவன சுந்தரிÕ போன்ற படங்களை பி.யு.சின்னப்பாவை வைத்து எடுத்தார். Ôமருமகள்Õ என்ற படத்தை என்.டி.ராமராவ், பத்மினியை வைத்து எடுத்தார். ÔகாவேரிÕ என்ற படத்தை சிவாஜியை வைத்து எடுத்தார். Ôமதுரை வீரன்Õ எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தார். மதுரை வீரனில் கிடைத்த மகத்தான வெற்றி கிருஷ்ணா பிக்ஸர்ஸ§க்கு பண மழையாக கொட்டியது. உடனே அடுத்து எம்.ஜி.ஆரை வைத்து Ôராஜா தேசிங்குÕ எனற படத்தை தயாரிப்பதாக லேனா அறிவித்தார். மதுரை வீரனுக்கும், ராஜா தேசிங்குக்கும் கவிஞர் கண்ணதாசன் தான் திரைக்கதை, வசனம் எழுதினார். ராஜா தேசிங்கு வளர்ந்து கொண்டிருந்த போது லேனாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏதோ பிரச்னை ஏற்பட்டது. அவ்வளவுதான் எம்.ஜி.ஆர். படப்பிடிப்புக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் இருந்துவிடுவார். அவரை நம்பி போடப்பட்ட செட் மற்றும் செலவுகள் வீணாகிவிடும். ஒரு சமயம் ஒரு பெரிய அரங்கை அதிக செலவில் நிர்மாணித்த பிறகு எம்.ஜி.ஆர். கால்ஷீட் உடனே கிடைக்காது என்ற நிலையில், நிறைய செலவழித்துப் போட்டுவிட்ட அரங்கைப் பயன்படுத்துவதற்காக நடிகர் கே.பாலாஜியை வைத்து Ôமாங்கல்ய பாக்கியம்Õ என்ற படத்தை அவசரமாக தயாரித்தார். அந்தப்படம் சமூகப்படம் மாதிரியும் இருக்கும். புராண படம் மாதிரியும் இருக்கும். அதாவது போலீசும் படத்தில் வரும், பிள்ளையாரும் படத்தில் வருவார். படம் அவ்வளவாக ஓடவில்லை. ராஜா தேசிங்கு, எம்.ஜி.ஆர் கோபத்தினால் இரண்டு மூன்று வருட தாமதத்திலேயே வெளிவந்தது. படமும் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. காலதாமதம், படத்தின் வெற்றி இழப்பு சேர்ந்து லேனா செட்டியாரை பெரும் கடனில் மூழ்கடித்தது. அதன் பிறகு ÔலேனாÕ அதிலிருந்து மீளவே இல்லை! நமது வில்லன் நடிகர்களில் நெடுங்காலம் திரையுலகில் நீடித்தவர்களில் ஒருவர் டி.கே.ராமச்சந்திரன். இவர் ஏ.வி.எம்.மின் பழைய Ôநாம் இருவர்Õ படத்தில் அறிமுகமாகி பராசக்தி, திகம்பர சாமியார், பணம்... என தொடர்ந்து எஸ்.எஸ்.ஆர் அடித்த ÔமுதலாளிÕ படத்தில் மெயின் வில்லன் பாத்திரத்தில் பெரும் புகழ் சம்பாதித்தார். முதலாளி படத்தில் இவர் நடிப்பைப் பார்த்துவிட்டு, படக் கம்பெனிகள் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என இவருக்கு அட்வான்ஸ் தந்த பணமே ஆறு லட்ச ரூபாயாக வந்தது. Ôமதுரை வீரன்Õ படத்தில் டி.எஸ்.பாலையாவுடன் இணைந்தும், Ôவஞ்சிக்கோட்டை வாலிபன்Õ படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் இணைந்தும் அட்டகாசமாக நடித்தார். ரஜினி பிற்காலம் நடித்த பைரவி படம்வரை நடிப்பைத் தொடர்ந்தார். ஆனால் இடையில் Ôபெரிய மனிதன்Õ என்ற படத்தை சொந்தமாக தயாரித்ததால், தன் இரண்டு பங்களாக்களையும் விற்று சம்பாத்தியத்தையும் இழந்து கடனில் மூழ்கினார். மறுபடி எழ முடியுமா என்ன? நடிகை சாவித்திரி மாதிரி புகழ் உச்சியில் நீடித்து லட்சம் லட்சமாய் தொடர்ந்து சம்பாதித்த நடிகை யாருமில்லை. சாவித்திருக்கு தமிழ்ப்பட உலகில் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ, அதே மாதிரி தெலுங்குப் பட உலகிலும் இணையில்லாத நடிகையாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என முன்னணி கதாநாயகர்களுடன் தமிழில் நடித்தது போலவே தெலுங்கில், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் இருவருடனும் இவரே நடித்து வந்தார். நாகேஸ்வரராவ் இனி தனக்கு தமிழ்ப் படங்களில் அதிக வாய்ப்பிருக்காது என்ற நிலையில் சென்னையை காலி செய்துவிட்டு ஹைதராபாத் புறப்பட்டபோது, சென்னை அபிபுல்லா ரோட்டில் உள்ள தன் பிரமாண்டமான பங்களாவை சாவித்திரியிடம்தான் விறார். ஆரம்பகால படமான Ôதேவதாஸ்Õ படத்தில் நாகேஸ்வரராவ் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்து அனைவர் மனதில் நீங்கா இடம்பிடித்த சாவித்திரி, Ôபாசமலர்Õ படத்தில் சிவாஜிக்கு ஈடாக நடித்து அனைவரையும் கண்கலங்க செய்தவர். அந்தக் காலகட்டத்தில் திரையுலகில் பிஸியாக இருந்த மற்ற நடிகைகளான பத்மினியும், எம்.என்.ராஜமும் சாவித்திரியோடு நெருங்கிப் பழகி வந்ததால் இந்த மூன்று நடிகைகளும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஒரே மாதிரி புடவை அணிந்து உடன்பிறந்த சகோதரிகள் மாதிரி சென்னையில் உலா வருவார்கள். காலிலே தங்கத்திலேயே சாவித்திரி கொலுசு அணிந்து திளைத்த காலம். சாவித்திரி தன் மூத்த பெண் விஜய சாமுண்டீஸ்வரியை வயிற்றில் சுமந்த நேரம் அது. வீரபாண்டிய கட்டபொம்மன் படப்பிடிப்புக்காக அக்குழுவினர் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம், பகதூர் வெள்ளையத் தேவனாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் திடீரென அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதாவது Ôசிவகங்கை சீமைÕயில் இன்னும் நல்ல வேடம் தருகிறேன் என கண்ணதாசன் அழைத்ததே காரணம். கட்டபொம்மன் படப்பிடிப்புக்கு எஸ்.எஸ்.ஆருக்குப் பதில் உடனே யாரை அழைத்துப் போவது என்ற திண்டாட்டத்தில் சிவாஜி உடனே சாவித்திரியைத்தான் போய் சந்தித்தார். Ôஅம்மா, உடனே மாப்பிள்ளை ஜெமினி கணேசனை என்னுடன் ஜெய்ப்பூருக்கு நீ அனுப்பிவைக்காவிட்டால் நாங்கள் செலவழித்ததெல்லாம் வீணாகிவிடும்Õ என்றார். ஜெமினி கணேசனோ, Ôசாவித்திரிக்கு திடீரென குழந்தை பிறக்கலாம். நான் பக்கத்தில் இல்லாவிட்டால் எப்படி?Õ என்றார். பின்னர் சாவித்திரிதான், Ôஎன்னை பற்றி பயப்படவேண்டாம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிவாஜி அண்ணாவுக்குக் கை கொடுக்காவிட்டால் எப்படி?Õ என கூரி ஜெமினி கணேசனை ஜெய்ப்பூர் படப்பிடிப்புக்கு அனுப்பிவைத்தார். ஜெய்ப்பூர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான் Ôசாவித்திரிக்கு பெண் குழந்தை பிறந்ததுÕ என அங்கே தகவல் வந்தது. உடனே சிவாஜியும், ஜெமினியும் அடுத்த விமானத்தில் சென்னை வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு மறுப்டி ஜெய்ப்பூர் படப்பிடிப்புக்கு சென்றார்கள். சாவித்திரி புகழ், செல்வாக்கு, குழந்தை பாக்கியம் என எல்லா வகையிலும் நிறைவாக வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான் சொந்தப்படம் எடுக்கிற ஆசை வந்தது. படங்கள் எடுக்கலானார். தெலுங்கில் நன்றாக ஓடிய ஒரு படத்தை ரீமேக் செய்ய உரிமை பெற்று Ôபிராப்தம்Õ என்ற அந்த படத்தில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் சிவாஜியை நடிக்க வைத்தார். பிராப்தம் படம்தான் Ôசாவித்திரியின் பிராப்தம் இனி அவ்வளவுதான்Õ என்கிற மாதிரி பெரும் தோல்வியிலும் தாங்க முடியாத நட்டத்திலும் விழச் செய்தது. சாவித்திரியின் எல்லா சொத்துக்களும் கைவிட்டுப் போக கணவரான ஜெமினி கணேசனும் விலகிப்போனார். மிக சிரமப்பட்ட காலத்தில் சாவித்திரியின் மூத்த பெண் விஜய சாமூண்டீஸ்வரி திருமணம் நடக்க ஏற்பாடு நடந்தது. முன்பு விஜய சாமூண்டீஸ்வரி பிறந்ததும் ஜெய்ப்பூரில் இருந்து விமானத்தில் ஓடிவந்த ஜெமினி கணேசன், இப்போது அந்த குழந்தையின் திருமணத்தை கேள்விபட்டு விமானத்திலே ஆப்பிரிக்கா பயணம் போய்விட்டார். சாவித்திரியின் கடைசி நாட்களெல்லாம் மிக மிக சோகம் நிறைந்தவை. சுமார் இரண்டு வருடம் தன்நினைவு இல்லாத கோமா ஸ்டேஜில் சாவித்திரி இருந்தார். ஒரு வகையில் இதுகூட கடவுள் கருணையோ என்னவோ!, சுய நினைவு இருந்தால்தானே அனுபவிக்கிற கஷ்டம் எல்லாம் ஒரேயடியாய் நிம்மதியை கொன்று கொண்டிருக்கும். இப்போதுதான் தூக்கம்மாதிரி நினைவே இல்லாமல் போய்விட்டதே! <img src='http://www.vikatan.com/cinema/2005/apr/gv_p.jpg' border='0' alt='user posted image'> இங்கே இன்னொரு பெரிய படத் தயாரிப்பாளராக விளங்கியவர் ஜீ.வி. ஒரு காலகட்டத்தில் வருமானவரி இலாகாவுக்கு ஒரே செக்காக மூன்று கோடி ரூபாயை அளித்தவர் என பரபரப்பாக பேசப்பட்டவர். நாயகன், அக்னி, நட்சத்திரம், அஞ்சலி, தளபதி என மணிரத்னம் இயக்கத்திலேயே பிரமாண்டமான படங்களை வரிசையாகத் தயாரித்தவர். திரைப்படத் துறையில் பலருக்கு பைனான்ஸ் தந்து ஓகோவென இருந்தவர். பிரிவியூ தியேட்டர், டப்பிங் தியேட்டர் என பல சொந்தமாக வைத்திருந்தவர். படங்களை தொடர்ந்து எடுத்துக்கொண்டே வந்தார். கடைசியாக அவர் நிறுவனம் சார்பாக வெளிவந்தபடம் சொக்கத் தங்கம். கே.பாக்கியராஜ் கதை, வசனம், இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம். படம் வெளிவந்த சமயம் ஒருநாள் திடீரென அதிர்ச்சி தரும் செய்தியாக கந்து வட்டியால் மிகவும் பாதிக்கப்பட்ட ஜீ.வி.தன் அலுவலக அறையில் தூக்கில் தொங்கினார் என்பதே அது. பளபளப்பான திரையுலகின் இன்னொரு பக்கம் பயங்கரமானது. தொடரும்.. vikatan.com சினிமா மாயை (பாகம்5) - vasisutha - 04-15-2005 <b>புதுமைகளைப் புகுத்திய ஸ்ரீதருக்கும் பொல்லாத சோதனை வந்ததெப்படி?</b> <img src='http://www.vikatan.com/cinema/2005/apr/chandrababu_07.jpg' border='0' alt='user posted image'> <b>சின்னராசு</b> சொந்தப்படம் தயாரித்து சோதனைக்கு ஆட்பட்டவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகும். சந்திரபாபு இணையில்லாத நடிகர் மிக சிரமப்பட்டு ஆரம்ப காலங்களில் வாய்ப்புகளைப் பெற்றார். மூன்று பிள்ளைகள், ராஜு என் கண்மணி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற ஆரம்பகால படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். மாமன் மகள், குலேபகாவலி போன்ற படங்களில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரமேற்று புகழ் உச்சிக்கு போனார். Ôநாடோடி மன்னர்Õ படத்தில் கோழி முட்டைகளை உடைத்து உடைத்து வாயில் போடுகிறவர். திடீரென முகம்மாறி வாயைத் திறக்கும்போது உள்ளேயிருந்து கோழிக்குஞ்சு பறந்து வருகிற நகைச்சுவையில் வியப்பில் ஆழ்த்தினார். Ôசபாஷ் மீனாÕ திரைப்படத்தில் சிவாஜியை விட சந்திரபாபுவுக்கே வாய்ப்புகள் அதிகம். இரட்டை வேடத்தில் வருவார். மேல்நாட்டுப் பாணியை கலந்து அருமையாக ஆடுவார். சொந்தக் குரலில் பாடுவார். உயரமான இடங்களில் இருந்து அப்படியே தலைகீழாக விழுவார். சந்திரபாபுவின் காமெடி நடிப்பை மட்டும் இன்னொருவர் பின்பற்றவே முடியாது. கவலை இல்லாத மனிதன், குமாரவேலன் படங்களில் கதாநாயகனாகவே நடித்தார். தான் கட்டிய வீட்டைக் கூடப் புதுமையாக, கார் மாடியில் போய் நிற்கும்படியாகக் கட்டினார். அந்தக்காலங்களில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஐம்பதினாயிரம் ரூபாய் என்ற அளவிலேயே ஒரு படத்தில் பல மாதங்கள் நடிக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஏ.வி.எம். தயாரித்த ÔசகோதரிÕ படம் முடிவடைந்த நிலையில் சந்திரபாபு காமெடி சேர்த்தால்தான் படம் வெற்றிபெறும் என்று முடிவு செய்து அவசரமாக பத்துநாள் படப்பிடிப்பு வைத்து நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் சம்பளம் தந்து இவரை நடிக்க வைத்தது பிரமிப்பாகப் பேசப்பட்டது. அப்படி ÔஓஹோÕ என இருந்த நடிகர் சந்திரபாபு சொந்தப்படமாக Ôதட்டுங்கள் திறக்கப்படும்Õ என்ற படத்தை துவக்கி தானே இயக்கி நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட வெளிப்படங்களை எல்லாம் ஒப்புக்கொள்ளாத நிலையில், தொடர்ந்து படங்களில் சந்திரபாபு காணாமல் போனதோடு, சொந்தப்படமும் வெளிவந்து தோல்வியடைந்தது. அவ்வளவுதான் அந்தக் கடனில் சிக்கிக் கொண்ட சந்திரபாபு நிம்மதியிழந்து. படங்களில் நடிக்கிற வாய்ப்புகள் குறைந்து மிகுந்த சோதனையான சூழ்நிலையிலேயே காலமானார். நடிகர் வி.கே.ராமசாமி ஒரு சிரஞ்சீவி நடிகராக திகழ்ந்தவர். 1947ல் Ôநாம் இருவர்Õ படத்தில் அறிமுகமான இவர் 2000தையும் தாண்டி 55 வருடங்களாக நடித்து வந்தார். நீண்டகாலமாக திருமண செய்யாமலேயே இருந்துவந்த வி.கே.ஆர். சொந்தப்படம் தயாரிப்பில் ஆர்வம் கொண்டார். அருட்செல்வர் ஏ.பி.நாகராஜனோடு இணைந்து Ôமகாலட்சுமி பிலிம்ஸ்Õ என்ற படக் கம்பெனியை துவக்கி முதன் முதலாக Ôமக்களைப் பெற்ற மகராசிÕ என்ற படத்தை சிவாஜியை வைத்துத் தயாரித்தார். படம் வெற்றி பெற்றது. மீண்டும் சிவாஜியை வைத்து Ôவடிவுக்கு வளைகாப்புÕ, எம்.ஆர்.ராதாவை வைத்து Ôநல்ல இடத்து சம்பந்தம்Õ போன்ற படங்களை தயாரித்தார். பின்னர் அந்தப் படக் கம்பெனி செயல்படவில்லை. வெகுகாலம் கழித்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை, வசனத்தில் சிவாஜியை வைத்து Ôசெல்வம்Õ படத்தை வி.கே.ஆர். தயாரித்தார். எதிர்பார்த்த வெற்றி படத்துக்கு கிடைக்கவில்லை. காலம் ஓடியது. Ôருத்ர தாண்டவம்Õ கதையை நகைச்சுவை வீரப்பன் எழுதித்தர அதை நாடகமாக நடித்த வி.கே.ஆர். அந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு சொந்தப்படமாக தயாரித்தார். முடிவு பல லட்சங்கள் கடனாகி சொந்த பங்களாக்களை விற்றார். கடன் இன்னும் தீரவில்லை என்ற நிலையில், படக் கம்பெனிகளுக்கு இவரே வலிய சென்று வாய்ப்புகள் கேட்டார். ரஜினிகாந்த் தனது சொந்தப்படம் ஒன்றின் லாபத்தில் இருந்து நலிந்த கலைஞருக்கு உதவிட வி.கே.ஆருக்கு ஐந்து லட்ச ரூபாய் தந்ததாக கூறினார்கள். ஆனாலும் வி.கே.ஆர். முழுக் கடனும் தீர்க்கப்படாமலே காலமானார். தமிழ் திரைவானில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஸ்ரீப்ரியா ஒருவர். Ôஅவள் ஒரு தொடர்கதைÕ படத்தில் அறிமுகமாகி விரைவாக முன்னணி நட்சத்திரப் பதவி அடைந்து சிவாஜியுடன் தொடர்ந்து நடிக்கலானார். பின்னர் கமலுடன், ரஜினியுடன் நிறைய நடித்தார். இந்த நேரம்தான் சொந்தப்படம் எடுக்கிற ஆசை வந்தது. ÔநீயாÕ என்ற முதல் படம் வெற்றிப்படம். அடுத்து தெலுங்கில் வெற்றி பெற்ற Ôசிவரஞ்சிÕயை தமிழில் நட்சத்திரம் என்ற பெயரில் தயாரித்தார். படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. காரணம் தமிழக முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் படத்தில் இருந்தனர். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட படம் தோல்வி அடைந்தது. அதன் பலன் சம்பாதித்ததை எல்லாம் ஸ்ரீப்ரியா இழந்தார். நெருக்குகிற கடன்காரர்களுக்கு அடுத்தப் படத்தில் நிச்சயம் கணக்கை தீர்த்துவிடுவேன் எனச் சொல்வதற்காக Ôசாந்தி முகூர்த்தம்Õ என்றொரு படத்தை ஸ்ரீப்ரியாவே இயக்கி தயாரித்தார். அதுவும் தோல்வி... இனி மீள முடியுமா? <img src='http://www.vikatan.com/cinema/2005/apr/srdar_07.jpg' border='0' alt='user posted image'> தமிழ்த் திரையுலகில் புதுமைகளுக்கு வழி கோலியவர் என மதிக்கப்பட்டவர் இயக்குனர் ஸ்ரீதர். இவர் முதலில் டி.கே. சண்முகமுகத்தின் Ôரத்தப்பாசம்Õ நாடகத்திற்கு கதை எழுதித் தந்தார். நாடகத்தில் வரவேற்பு பெற்ற இந்த கதை திரைப்படமும் ஆகவே அதன் மூலம் திரையுலகில் காலைப் பதித்தவர் ஸ்ரீதர். அடுத்துப் புரட்சிகரமான கதையம்சம் கொண்ட Ôஎதிர் பாராததுÕ என்ற திரைக்கதையை ஸ்ரீதர் எழுதினார். சரவணா யூனிட் என்ற படக்கம்பெனி அதை சிவாஜி, பத்மினியை வைத்து எடுத்தது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் என்ற இரு நண்பர்களுடன் ஸ்ரீதரும் சேர்ந்து வீனஸ் பிக்சர்ஸ் என படக் கம்பெனியை துவக்கினார்கள். அதன் சார்பாக தயாரிக்கப்பட்ட முதல்படம் ஸ்ரீதரின் Ôஅமரதீபம்Õ, சிவாஜி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் நடத்த படம் வெற்றிபெற்றது. அதே கதையை இந்தியில் தயாரிக்கும்போது சிவாஜியும் தயாரிப்பில் பங்கு பெற்று, தேவ் ஆனந்த், வைஜெந்திமாலா ஆகியோரை வைத்து எடுக்கப்பட்டது. இதனை அடுத்து சிவாஜியை வைத்து இரட்டை வேடங்களில் முதன்முதலாக உத்தமபுத்திரன் படம் ஸ்ரீதர் திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்டு அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது. இதன்பின் ஸ்ரீதர் கதை, வசனத்துடன் இயக்குனராகவும் பொறுப்பேற்று தயாரித்த படம்தான் Ôகல்யாண பரிசுÕ இதில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி நடித்து பெரிய வெற்றியை பெற்றது. இந்தியில் ஸ்ரீதர் இந்தப் படத்தை தயாரித்தபோது ராஜ்கபூரும், தெலுங்கில் நாகேஸ்வரராவும் நடித்தனர். இதனையடுத்து ஒரே செட்டில் புதுமையாக ஒரு படத்தை ஸ்ரீதர் தயாரித்தார். திரையுலகில் புதுமையான அந்தப் படம்தான் பெரிய வெற்றிப் பெற்ற Ôநெஞ்சில் ஓர் ஆலயம்Õ. இந்தப் படத்தில் கன்னட நடிகரான கல்யாண்குமாருடன் நடிகர் முத்துராமனும், நாகேஷ§ம் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த படத்தை Ôசித்ராலயாÕ என்ற சொந்த நிறுவனத்தில் தயாரித்தார். இதையடுத்து வண்ணப்படங்கள் அறிமுகமாக துவங்கிய காலக்கட்டத்தில் முதன்முதலாக சென்னையில் கொண்டுவரப்பட்ட ஜெமினி கலர் லாபரட்டிரியில் தயாரான பெரும் வெற்றிப்படம்தான் ஸ்ரீதரின் Ôகாதலிக்க நேரமில்லைÕ என்ற படமாகும். இந்தப் படத்தில் முத்துராமனின் ஜோடியாக புதுமுகம் காஞ்சனாவும், சில படங்களில் வந்திருந்த ராஜ்ஸ்ரீயுடன் புதுமுகம் ரவிச்சந்திரனையும் ஸ்ரீதர் நடிக்க வைத்திருந்தார். அடுத்து Ôதேன் நிலவுÕ என்ற படம் தமிழ் திரையுலகில் முதன் முதலாக முழுவதுமாக காஷ்மீரிலேயே எடுத்தப்படமாக அமைந்தது. ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா நடித்திருந்தனர். படம் சுமாரான வெற்றியே. இவற்றை அடுத்து வண்ணத்தில் ஸ்ரீதர் தயாரித்ததுதான் Ôவெண்ணிற ஆடைÕ திரைப்படம். இதில்தான் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவை முதன்முதலாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். இடையே 24 மணி நேரத்தில் ஒரு படத்தை தயாரிக்க ஸ்ரீதர் திட்டமிட்டு பின்னர் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இவற்றையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் ஸ்ரீதர் இயக்கத்தில் படங்கள் வந்தன. எம்.ஜி.ஆரை வைத்து Ôஅன்று சிந்திய ரத்தம்Õ என்ற விடுதலைப் போராட்ட வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக ஸ்ரீதர் அறிவித்து சிலநாள் படப்பிடிப்பு வேலைகளையும் நடத்தினார். ஆனால் ஏனோ அந்தப்படம் வளராமல் நின்றுவிட்டது. அதே கதையைத்தான் சில மாற்றங்களுடன் Ôசிவந்தமண்Õ என்ற பெயரில் தயாரிக்கப்போவதாக ஸ்ரீதர் அறிவித்தார். இந்தப் படத்தை ஒரே சமயத்தில் தமிழிலும், இந்தியிலும் ஸ்ரீதர் தயாரிக்கலானார். தமிழில் சிவாஜியிம் இந்தியில் ராஜேந்திர குமாரும் நடித்தனர். தமிழில் முத்துராமன் நடித்த கௌரவ வேடத்தில், இந்தியில் சிவாஜி நடித்தார். பிரம்மாண்டமாக அதிகப் பொருட்செலவில் படம் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக வெளிநாடுகளிலும் சில காட்சிகளை இப்படத்திற்காக ஸ்ரீதர் எடுத்தார். இந்தப் படத்தில் ஒரு நதிக்கரையை ஒட்டி ஒரு சிறு வீடு இருப்பது போன்ற வருகிற காட்சிக்காக ஏராளமான பொருட்செலவில் ஒரு செயற்கை நதியையே வாஹினியில் பெரிய செட்டாக போட ஸ்ரீதர் ஏற்பாடு செய்தார். முதலில் இதற்காக போடப்பட்ட செட் தண்ணீர் கொள்ளளவை தாங்காமல் உடைந்து பெரிய நட்டமாகியது. மறுபடி இன்னொரு செட் போட்டு படத்தை எடுத்தார். இப்படி வரையறையில்லாமல் செலவு செய்து தயாரிக்கப்பட்ட Ôசிவந்தமண்Õ படம் தமிழிலும் இந்தியிலும் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போகவே ஸ்ரீதர் பெரிய பண இழப்புக்கு ஆளானார். அதன்பின் ஸ்ரீதரின் சித்ராலயா நிமிர்ந்து நிற்கவே முடியாமல் போனது. இந்நிலையில் எம்.ஜி.ஆரை வைத்து, உரிமைக்குரல், மீனவ நண்பன் என இரு படங்களை ஸ்ரீதர் தயாரித்தும் ஏற்கனவே உள்ள கடன் பிரச்னையிலிருந்து மீளவே முடியவில்லை. தொடரும்.. vikatan.com சினிமா மாயை (பாகம்6) - vasisutha - 04-15-2005 <b>ஒரு பட வெற்றியில் கட்டப்பட்ட ஸ்டூடியோ!</b> <img src='http://www.vikatan.com/cinema/2005/apr/evmrajan_11.jpg' border='0' alt='user posted image'> <b>சின்னராசு</b> தமிழ்த்திரை உலகில் படங்களில் காதலர்களாக நடிக்க ஆரம்பித்து நாளடைவில் உண்மை வாழ்க்கையிலும் காதலர்களாக மாறி திருமணமும் செய்து கொண்டவர்களில் ஏ.வி.எம்.ராஜன் & புஷ்பலதா ஜோடியினரும் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டையில் இருந்து திரையுலகுக்கு வந்து பிரகாசித்தவர்களான பி.யு.சின்னப்பா, ஜெமினி கணேசனை அடுத்து வந்து பெயரெடுத்தவர் ஏ.வி.எம்.ராஜன். ஏ.வி.எம்.ராஜனிடம் ஒரு சமயம் ஜெமினி கணேசன் பேசிக் கொண்டிருக்கும்போது, Ôநாம் மூவரும் புதுக்கோட்டையில் இருந்து வந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டவோ என்னவோ மூன்று பேருக்குமே முகத்தில் கொஞ்சம் சதை அதிகம்Õ என்றாராம். புஷ்பலதா நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தே திரையுலகுக்கு வரவேற்பு கிடைத்து வந்தார். எம்.ஜி.ஆர். நடத்தி வந்த இன்பக்கனவு, அட்வகேட் அமரன் நாடகங்களில் புஷ்பலதாவுக்கு நல்ல பெயர். Ôநானும் ஒரு பெண்Õ படத்தில் ஏ.வி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் காதலர்களாக வந்து ஒருவரை ஒருவர் ஏமாற்றி, Ôஏமாற சொன்னது நானோÕ என்ற பாடலை ஒருவர் பின் ஒருவர் பாடி அமர்க்களம் செய்தார்கள். ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா ஜோடி படங்களில் நடித்து வந்த காலத்திலேயே சிங்காரவேலன் என்பவர் எழுதி, சேஷாத்திரி குழுவினர் நடத்திய Ôகற்பூரம்Õ நாடகத்தில் பிரதான வேடம் ஏற்று பாராட்டுகளை பெற்றார்கள். அவர்கள் இருவரின் நடிப்பு அந்த நாடகத்தில் பெரும் சிறப்பாக இருந்ததால் அவர்களை அதே வேடங்களில் நடிக்க வைத்து அந்த நாடகத்தை திரைப்படமும் ஆக்கினார்கள். ஏ.வி.எம்.ராஜன் தன் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி உணர்ச்சிமயமான குணச்சித்திர பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வரவேற்பும் பெற்றுவந்தார். Ôமனிதருள் மாணிக்கம்Õ என்ற படத்தில் அப்படியரு வேடத்தில் ஏ.வி.எம்.ராஜன் நடிக்க, நகைச்சுவை கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சிவாஜி இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். தெய்வம், துணைவன் போன்ற படங்களில் எல்லாம் எ.வி.எம்.ராஜனுக்கு நல்ல வேடங்கள். ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா ஜோடி திரையுலகில் ஓரளவு சம்பாதித்த நிலையில் சில படங்களுக்கு பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள். அதுவே ஒரு நாள் அவர்களையும் படம் எடுக்கிற ஆசையில் தள்ளியது. Ôலாரி டிரைவர் ராஜ்கண்ணுÕ போன்ற இரண்டு மூன்று படங்களை தயாரித்து படங்களின் தோல்வியால் பெரும் இழப்புகளுக்கு ஆளானார்கள். இதுவரை காமாட்சி பக்தராக நெற்றி நிறைய திருநீரும், குங்குமமுமாக காட்சி தந்து வந்த ஏ.வி.எம்.ராஜன் தனது திரையுலக தோல்விக்குபின் முழுக்க மதமாற்றமாகி கிறிஸ்துவ போதகராக மாறிவிட்டார். <img src='http://www.vikatan.com/cinema/2005/apr/askoan_11.jpg' border='0' alt='user posted image'> நடிகர் அசோகன் 1950 ஐ அடுத்து வந்த ஜெமினியின் Ôஅவ்வையார்Õ படத்தில் சில காட்சிகளில் ஒரு மன்னராக அறிமுகமாகி நடித்தார். அதன்பின் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த Ôஇல்லற ஜோதிÕ திரைப்படத்தை கவிஞர் கண்ணதாசன் எழுத, சிவாஜி & பத்மினியோடு வில்லனாக அசோகன் நடித்தார். Ôவீரத்திருமகன்Õ படத்தில் ஏற்றிருந்த குணச்சித்திர வேடமும், Ôமணப்பந்தல்Õ படத்தில் கிடைத்த உணர்ச்சி மயமான பாத்திரமும் அசோகன் புகழை உயர்த்தின. இடையில் நிறைய படங்களில் வில்லன், இரண்டாவது கதாநாயகன் என வேடங்களை தாங்கி நடித்து வந்தார். டி.ஆர்.ராமண்ணா தயாரித்த Ôநான்Õ படத்தில் முதலில் ஆர்.எஸ்.மனோகர் பாத்திரம் மட்டுமே வில்லனாக சித்தரிக்கப்பட்டு படம் உருவானது. ஒருநாள் அசோகன் இயக்குனர் ராமண்ணாவை சந்திக்க வந்திருந்தபோது, Ôஅசோகனை ஒரு வித்தியாசமான வில்லனாக இந்தப்படத்தில் காட்டினால் என்னÕ என்று திடீரென உதித்த யோசனையின் காரணமாகவே அவர் Ôமொட்டைத்தலைÕ அசோகனாக மாற்றப்பட்டார். அப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த Ôபத்துக் கட்டளைகள்Õ ஆங்கிலப் படத்தில் கூட வில்லனாக யூல் பிரின்னர் மொட்டைத் தலையனாகவே தோன்றினார். ஆக Ôநான்Õ படத்திற்காக மொட்டைத் தலையாக மாறிவிட்ட அசோகன், அந்தப் படத்தில் வழக்கமான வில்லன்களைப் போல குரூரமான பார்வை, சிரிப்போடு தோன்றாமல், இழுத்து இழுத்துப் பேசிக்கொண்டு எக்காளமான சிரிப்புடன் வித்தியாசமாக அந்தப் பாத்திரத்தை வெளிப்படுத்தி பெரிய வெற்றியும் கண்டார். அதன்பிறகு எல்லாப் படங்களிலுமே அசோகன் கோமாளித்தனமுள்ள கொடூரன் மாதிரியே நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். பின்னாளில் அசோகன் மிக உணர்ச்சிகரமான பாத்திரத்தில் அனைவர் உள்ளத்திலும் இடம்பிடிக்கிற மாதிரி நடித்தார் என்றால், அது சிவாஜியுடன் நடித்த Ôஉயர்ந்த மனிதன்Õ படம்தான். தவிர பி.எஸ்.வீரப்பா சொந்தப்பட கவனத்திலும், பிரச்னையிலும் மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். படங்களில் அந்தக் குறையை போக்க அசோகனே வில்லன் வேடங்களை தாங்கி கொடூரமான கதாபாத்திரங்களை சித்தரித்துவந்தார். இப்படி தன் நடிப்புப் பணி சிக்கல் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அசோகனுக்கும் சொந்தப்பட ஆசை வந்தது. Ôநேற்று இன்று நாளைÕ என்ற பெயரில் எம்.ஜி.ஆரை வைத்து படத்தயாரிப்பில் இறங்கினார். அதுவரை வயது மூத்த குழந்தை மாதிரி நடவடிக்கைகளை கொண்டிருந்த அசோகன், தன் சொந்தப் படத் தயாரிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத பிரச்னைகளால் சோகமே உருவான அசோகனானார். Ôநான் மெட்ராஸ் வரும்போது வெறுங்கையை வீச்க் கொண்டுதான் வந்தேன்! இப்போ மறுபடி வெறுங்கையோடுதான் ஊருக்குத் திரும்பணும்னு இருந்தா அதையும் ஏத்துக்க வேண்டியதுதான்Õ என்ப பேச ஆரம்பித்தார். Ôநேற்று இன்று நாளைÕ படமும் வெளிவந்து எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் இதுவரை சம்பாதித்ததை எல்லாம் அசோகன் இழந்தார். அந்த கவலையே அவரை அதன்பின் அதிக நாட்கள் வாழவிடவில்லை. <img src='http://www.vikatan.com/cinema/2005/apr/mnrajam_11.jpg' border='0' alt='user posted image'> நடிகை எம்.என்.ராஜம் தமிழ்த்திரை உலகில் உள்ள சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் என்பதுடன், தமிழை அழகாக உச்சரிக்கிற நடிகைகளிலும் ஒருவராக திகழ்ந்தார். காரணம் தமிழ்த்திரையுலகில் பெரும்பாலான நடிகைகள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக்கூடிய நிலையில் எம்.என்.ராஜம் தமிழ்நாட்டிலே பிறந்த நடிகையும் ஆவார். 1948ல் Ôநல்ல தம்பிÕ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எம்.என்.ராஜம் மேலும் ஓரிரு படங்களில் சிறுசிறு வேடம் தாங்கிவிட்டு அதன்பின் நாடகங்களிலெ நடிகையாக தொடர்ந்து இருந்துவந்தார். 1954 Ôரத்தக்கண்ணீர்Õ வரும்போது அதில் காந்தா என்ற பாத்திரத்தில் எம்.ஆர்.ராதாவோடு நடித்து அந்த ஒரு படத்தின் மூலமே எல்லோருக்கும் அறிமுகமான ஒரு நடிகையாக உயர்ந்துவிட்டார். அந்தப் படத்தில் மோகனாக வருகிற ராதா, தன் செல்வத்தை எல்லாம் காந்தா என்ற விலைமகளிடம் இழந்து, பெரு நோயும் வந்து, Ôஅடியே காந்தாÕ என வசனம் பேசியபடியே படத்தில் பல இடங்களில் கத்துவார். ரசிகர்களும் பல நாட்கள், ராதா பாணியில், Ôஅடியே காந்தாÕ என குரல் எழுப்பின் வேடிக்கை செய்து வந்ததினால், எம்.என்.ராஜம் வெகுகாலம் காந்தா என்ற பெயரிலேயே ரசிகர்களின் மனதிலே பதிந்திருந்தார். சிறந்த வில்லி வேடங்களில் மட்டுமல்லாது கதாநாயகி வேடங்களிலும் எம்.என்.ராஜம் பரிமளித்தார். ÔமகாதேவிÕ படத்திலும், Ôசிவகங்கை சீமைÕ படத்திலும் உயர்ந்த பண்புள்ள தமிழ்ப் பெண்ணாக உயர்ச்சிமிக்க வசனங்களைப் பேசி ரசிகர்களை வியப்பிலே ஆழ்த்தியவர் எம்.என்.ராஜம். எம்.ஜி.ஆர். சிவாஜியோடு எல்லாம் ஜோடியாக நடித்தவர். பின்னாளில் பாடகர் ராகவனை மணந்து கொண்டார். ஸ்டூடியோவில் படிப்பிடிப்புக்காக கணவருடன் வரும் எம்.என்.ராஜத்தை ஒரு சோதிடர் வழக்கமாக சந்தித்துப் பேசிப் பழகிக் கொண்டிருந்தார். அந்த சோதிடர் கூறிய செய்திகள் சில நாளில் உண்மையிலேயே நடந்துவிட்டதைக் கண்டு எம்.என்.ராஜத்திற்கும் அவரது கணவர் ராகவனுக்கும் அந்த சோதிடர் மீது பெரிய மரியாதை ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் அந்த சோதிடர், Ôநீங்கள் இப்போது சொந்தபடம் தயாரித்தால் பணமாக வந்து குவியும்Õ என்று ஆசை கிளப்பிவிட்டார். Ôஇவர் சொல்வது எல்லாம் நடந்திருக்கிறதேÕ என்ற நம்பிக்கையில் எம்.என்.ராஜமும் கணவர் ராகவனும் படத்தயாரிப்பில் இறங்கிவிட்டார்கள். படம் வெளிவந்து பெரிய தோல்வியை தழுவவே சுமார் இருபது ஆண்டுகளாக எம்.என்.ராஜம் சம்பாதித்ததை எல்லாம் இழந்து பல சோதனைகளுக்கு ஆளானார். அதிலிருந்து தங்களை படம் எடுக்கத் தூண்டிவிட்ட சோதிடரை தேடிக் கொண்டே இருக்கிறார். <img src='http://www.vikatan.com/cinema/2005/apr/gopalakrishnan_11.jpg' border='0' alt='user posted image'> தமிழ்த்திரை உலகில் வாழ்க்கைத் தத்துவங்களை உரைநடை நடையில் எழுதி தனிப்புகழ் நாட்டியவர் இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலாகிருஷ்ணன். மிக அருமையாக கதையும் வசனமும் எழுதக்கூடிய கே.எஸ்.கோபால கிருஷ்ணனை வெகுகாலம் யாரும் புரிந்துகொள்ளவில்லை. சென்னையில் வாழ்ந்து எப்படியாவது திரையுலகில் நுழைய வேண்டும் என்பதற்காக, ஒரு வருவாயை தேடிக்கொள்ள தஞ்சையில் இருந்து சென்னைக்கு வாழை இலையை தருவித்து விற்பனை செய்து கொண்டிருந்தார். பின்னர் கலைவாணரின் நாடகக் குழுவில் தான் ஒருவராக சேர்ந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம்தான் சரவணா யூனிட் என்ற படக்கம்பெனி தாங்கள் தயாரிக்கப் போகும் படத்திற்கு கதை தேடிக் கொண்டு இருந்தார்கள். இயக்குனர் ஸ்ரீதர் தன் முதல்படமான Ôரத்தப்பாசம்Õ வந்த பிறகு Ôஎதிர்பாராததுÕ என்ற பெயரில் எழுதி வைத்திருந்த கதையை சரவணா யூனிட்டில் கொண்டு வந்து தந்தார். அந்த சமயம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் Ôதம்பிÕ என்ற பெயரில் ஒரு கதையை கொண்டு வந்து அங்கே தர வந்திருந்தார். அந்த நேரம் ஸ்ரீதரும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் அறிமுகமாகிக் கொண்டார்கள். ஒருநாள் சரவணா யூனிட் படக்கம்பெனி ஸ்ரீதர் கதையை தேர்வு செய்ததாகச் சொல்லி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதையை திருப்பி தந்துவிட்டது. ஏற்கனவே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மூலம் அவர் கதையை கேட்டிருந்த ஸ்ரீதர், Ôஉங்கள் கதையும் நன்றாகத்தான் இருந்தது. கதை திரும்ப வந்துவிட்டால் மனம் தளராதீர்கள். உங்களுக்கு பாட்டும் எழுத முடியும் என்றீர்களே.. உங்களுக்கு பாட்டு எழுதுகிற வாய்ப்பு கிடைக்க நான் உதவுகிறேன்Õ என்றார். அவ்விதமே இரு பாடல் எழுதுகிற வாய்ப்பையும் ஸ்ரீதர் வாங்கிக் கொடுத்தார். இதன் மூலம் ஸ்ரீதர் நட்பு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குத் தொடர்ந்தது. அடுத்து ஸ்ரீதர் கூட்டம் Ôஅமரதீபம்Õ படத்தைத் தயாரித்தபோது அந்தப் படத்திலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு பாட்டு எழுதும் வாய்ப்பைத் தந்தார். Ôஅமரதீபம்Õ படத்தில் சிவாஜி முதல் காட்சியில் வரும்போதே Ôநாணயம் மனுசனுக்கு அவசியம்Õ என்று பாடுகிற பாட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பாட்டுதான். இப்படி சின்னச் சின்ன வாய்ப்புகளோடு சில வருடங்கள் ஓடின. நடிகர் நம்பிராஜன் (குமரிமுத்து அண்ணன்) கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கதை ஒன்றை இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவிடம் கொண்டுவந்து தந்தார். கதையை வாசித்துப் பார்த்த அவர்களுக்கு பிடித்துவிட்டது. கதாசிரியரை அழைத்து வா என நம்பிராஜனிடம் தகவல் கூறி அனுப்பினார்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வந்து நின்றபோது, அவர் ஊர்க்காரரும் நண்பருமான மல்லியம் ராஜகோபாலும் வந்து, Ôஇந்தக் கதை என்னுடையதுÕ என்றார். கிருஷ்ணன் பஞ்சுவுக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியில் கதையின் சில காட்சிகளை கூறி வசனம் எழுதி வருமாறு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடமும், மல்லியம் ராஜகோபாலிடமும் சொன்னார்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிவந்த வசங்களே கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், அவர்தான் உண்மையான கதாசிரியர் என ஏற்றுக் கொண்டார்கள். அந்தக் கதைதான் திரைப்படமாக மாபெரும் வெற்றி பெற்ற Ôதெய்வப்பிறவிÕ! சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர். எம்.என்.ராஜம் நடித்த படம். Ôபடிக்காத மேதைÕ படத்திற்கு திரைக்கதை, வசனம் அடுத்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதினார். ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்த அந்தப்படமும் மகத்தான வெற்றி. இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் ஸ்ரீதர் கூறும்போது, Ôஎன்னைத்தான் முதலில் இந்தப்படத்திற்கு வசனம் எழுத அழைத்தார்கள். கதையை படித்துப் பார்த்த நான், இந்தப் படத்தில் சிறப்பாக வசனம் எழுத வாய்ப்பில்லை என கூறிவிட்டு வந்துவிட்டேன். இப்போது பாம் வந்தபிறகு பார்த்தபோதுதான், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எவ்வளவு திறமையாக இந்தக் கதையை கையாண்டிருக்கிறார் என வியந்து போனேன்Õ என்றார். படிக்காத மேதையை அடுத்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கைராசி, அன்னை, குமுதம் போன்ற வெற்றிப் படங்களுக்கு எழுதினார். அதன்பிறகுதான் தான் வசனம் எழுதுவதோடு படத்தை இயக்கவும் வேண்டும் என்று, ஏ.எல்.எஸ். புரொடக்ஷனுக்காக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி, இயக்கிய படமே ÔசாரதாÕ; மிகப் பெரிய வெற்றிப்படம். அடுத்து Ôகற்பகம்Õ என்ற பெயரில் தான் தயாரித்த படத்தில் ஜெமினி, சாவித்திரியோடு, புதுமுகமாய் கே.ஆர்.விஜயாவை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார். Ôகற்பகம்Õ படம் பெயருக்கேற்ப செல்வ மழையை பொழிந்தது. அந்தப் படத்தின் மகத்தான வசூலில்தான் Ôகற்பகம்Õ ஸ்டூடியோÕவையே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கட்டினார். தொடர்ந்து கைகொடுத்த தெய்வம், பணமா பாசமா, வாழையடி வாழை, குலமா குணமா என வெற்றிப் படங்களாக எடுத்து தள்ளினார். மிக பிரமாண்டமான படமாக ஆதி பராசக்தி படத்தைத் தயாரித்தார். பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து மீண்டும் பிரமாண்டமாக Ôதசாவதாரம்Õ படத்தைத் தயாரித்தார். சின்ன வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் இருந்தபோது Ôதசாவதாரம்Õ நாடகத்தைப் பார்ததும் அது சம்பந்தமான புராண நூல்களைப் படித்தும் அந்தக் கதையில் பெரிய ஈடுபாடு கொண்டிருந்தார். தன் ஸ்டூடியோவில் ஒரு சேர், ஒரு பேன் பாக்கியில்லாமல் அத்தனையையும் அடமானம் வைத்து படத்தைத் தயாரித்தார். Ôதசாவதாரம்Õ பெரிய அபராதமாக தோல்வியடையவே, அத்தனை சொத்துக்களும் கடனில் மாட்டிக்கொள்ள சிலவற்றையே அவரால் மீட்க முடிந்தது. தொடரும் vikatan.com - tamilini - 04-15-2005 நன்றி வசி.. ஆனால் கொஞ்சம் விட்டு விட்டுப்போடலமே..
- tamilini - 04-15-2005 நன்றி வசி.. ஆனால் கொஞ்சம் விட்டு விட்டுப்போடலமே..
- vasisutha - 04-15-2005 நீங்கள் விட்டு விட்டு படிக்கலாமே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி விட்டுட்டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இனி விகடன் போட்டால்தான் உண்டு :wink:
- Eswar - 04-16-2005 இதெல்லாம் இப்ப முக்கியமா ?....... :roll: :roll: :roll: - vasisutha - 04-16-2005 எங்க வந்து என்ன கேட்கிறீங்க ஆஆ :evil: . இனி ஈஸ்வர் திரை பகுதிக்குள்ள வரக்கூடாது. இது என் உத்தரவு. கோவப்படாதீங்க ஈஸ்வர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 04-16-2005 இதெல்லாம் வாசிக்க கட்டாது .. |