| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 524 online users. » 0 Member(s) | 522 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,291
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,659
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| HACK/SPY செய்வது எப்படி? |
|
Posted by: manmadhan - 04-09-2005, 06:57 PM - Forum: கணினி
- Replies (14)
|
 |
Hacker......எப்படி Hack செய்வது என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லித்தர முடியுமா? Netbus என்ற மென் பொருள் பற்றி யாருக்காவது தெரியுமா? கணனியில் திறந்து இருக்கும் நுளைவாயிலால் எப்படி உள்ளே நுளைவது? (computer port) அதற்கு ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த மென்பொருளின் பெயர் சொல்ல முடியுமா? நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால் இங்கே சொல்லுங்கள் அல்லது தனிமையில் தொடர்பு கொண்டு சொல்லுங்கள்.................
|
|
|
| மணமகனாகிறார் பிரஷாந்த் |
|
Posted by: KULAKADDAN - 04-09-2005, 06:33 PM - Forum: சினிமா
- Replies (115)
|
 |
இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும் என்கிறார் நடிகர் பிரஷாந்த். கோலிவுட்டில் திருமண வயதை தாண்டிய ஒரே பேச்சிலர் நடிகர் பிரஷாந்த் தான். அவருக்கு பின்னால் நடிக்க வந்தவர்கள் கூட குழந்தை, குட்டி என செட்டிலாகி விட்டனர். இவர் மட்டும் தான் இன்னும் கட்டை பிரம்மச்சாரியாக உள்ளார்.
இதற்கிடையே ஏற்காட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பிரஷாந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ அது தடைபட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கிறார்களாம்.
பெண் பார்க்கும் படலம் மிக மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த வருடமே கெட்டி மேளம் கொட்டப் போகிறது பிரஷாந்துக்கு.
இதை அவரே நேற்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூறினார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.
நான் அம்மா செல்லம். இதனால் எனக்கு பெண் பார்க்கும் பொறுப்பை அம்மாவிடமே விட்டுவிட்டேன். அவர் அப்பாவுடன் சேர்ந்து தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடைபெறும்.
மணமகள் சினிமா துறையைச் சேர்ந்தவராக இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.
என்னையும் நடிகை உமாவையும் இணைத்து கதை கட்டி விட்டார்கள். அதில் சிறிதும் உண்மை கிடையாது. அடைக்கலம் படத்தில் உமா எனது தங்கையாக நடித்தார். ஜோடியாக நடிப்பவரைப் பற்றி கிசுகிசு வந்தால் கூட பரவாயில்லை.
அந்தப் படத்தில் என்னுடன் தங்கையாக நடித்தவரை பற்றி கிசுகிசு வந்தது தான் எனக்கு வருத்தம் என்று நிஜமாகவே வருத்தப்பட்ட பிரஷாந்தை நாம் சிறிது தேற்றி விட்டு, என்ன ஆச்சு உங்களுக்கு, சமீப காலமாக படங்கள் எதுவுமே சரியாக கிளிக் ஆகவில்லையே என்று ஒரு கொக்கியைப் போட்டோம்.
வெற்றியும், தோல்வியும் இறைவன் கையில் தான் உள்ளது.(புல்லரிக்கிறதுப்பா) நான் நடித்த படங்களில் என் பங்கை சிறப்பாக செய்துள்ளேன். பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்.
நண்பர்களுக்காக சில படங்களை விட்டுக் கொடுத்தேன். இனி என்னுடைய படங்களின் இயக்குநர் தேர்விலும், கதையிலும் மிக கவனமாக இருப்பேன்(கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?) என்ற பிரஷாந்த், எப்படியும் விரைவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறேனா இல்லையா பாருங்கள் என்று சவால் விட்டார்.
அடப்பாவமே இவருமா?
நன்றி தற்ஸ் தமிழ்
|
|
|
| பிரித்தானிய அரச குடும்பம் |
|
Posted by: Mathan - 04-09-2005, 04:35 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (92)
|
 |
சார்லஸ் கமிலா திருமணம் Windsor's Guildhall இல் நடந்தேறியது. முன் கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த திருமணம் போப் ஜோன் போல் மரணம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_enl_1113051202/img/1.jpg' border='0' alt='user posted image'>
தகவல் & படம் - BBC இணையம்
|
|
|
| பகை ஏதுள...? |
|
Posted by: இளைஞன் - 04-09-2005, 03:46 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/pakaiethula.gif' border='0' alt='user posted image'>
அலைகள் புரள்
அன்னைக் கடல்
நுரைகள் திரள்
அழகுன் உடல்
மலைபோல் எழ
தலைமேல் விழ
உலகம் அழ
பகை ஏதுள...?
கரையைக் கட
காலில் விழு
கதறிஈ அழு
கண்ணீர் விடு
ஆழம் மிகு
கடலே அறி
வீரம் மிகு
தமிழர் குடி
கோரம் மிகு
கொடுமை இது
கொண்டாய் பலி
கொண்டோம் வலி
எதனால் இது
எமக்கேன் இது
எனநீ ஒரு
பதிலைக் கொடு
அழுகைக் குரல்
அகதிச் சுமை
குருதிக் குளம்
போரின் முகம்
இதுநாள் வரை
இதுதான் நிலை
இழந்தோம் பல
இறந்தோம் பலர்
அலையே குறி
ஓயார் இவர்
படகே றுவர்
வலைவீ சுவர்
கோலத் தமிழ்
கொள்கைக் குரல்
வானின் நிழல்
காற்றின் குழல்
தூறும் மழை
புழுதிஈ மணல்
நிலவின் ஒளி
தாய்மண் மடி
இவையே எம்
உறவான பின்
துயர் சூழுமோ?
உயிர் வாடுமோ?
நன்றி: அப்பால் தமிழ்
|
|
|
| ஜெயலலிதாவுக்கு காதல் காரணமாகவே மிரட்டல் |
|
Posted by: Mathan - 04-09-2005, 12:29 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
புலிகளின் பெயரில் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது ஏன்? பட்டதாரி பெண் பரபரப்பு தகவல்
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பட்டதாரிப் பெண், பொலிஸ் விசாரணையில் பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் "இமெயில்" மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், பட்டதாரிப் பெண் கலைவாணி. சென்னை ரெட்ஹில்சைச் சேர்ந்த இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின், "சைபர் கிரைம்" பொலிஸார் கைது செய்தனர்.
நீதிமன்ற காவலில் சென்னை சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். பொலிஸ் விசாரணையில், இவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. விளையாட்டாக இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாகவும் பொலிஸாரிடம் கலைவாணி தெரிவித்திருந்தார்.
இருந்தாலும், இது பற்றி மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்த பொலிஸ் அத்தியட்சர் நடராஜ் உத்தரவிட்டார். துணை அத்தியட்சர் ராஜேந்திரன் மேற்பார்வையில், "சைபர் கிரைம்" உதவி பொலிஸ் அத்தியட்சர் பாலு இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தினார்.
கலைவாணியின் தந்தை ஜெயராமன். தாயார் மற்றும் சகோதரனிடம் விசாரணை நடந்தது. கலைவாணியிடமும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஒரு நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தார்கள்.
விசாரணையின் போது, கலைவாணி மிரட்டல் கடிதம் அனுப்பியது ஏன்? என்பதற்கு புதிய காரணத்தைச் சொல்லி பொலிஸாரையே திகைக்க வைத்தார். அத்துடன், ஒரு கண்ணீர் காதல் கதையையும் சொல்லி கலங்க வைத்தார். இது தொடர்பாக கலைவாணி பொலிஸாரிடம் கொடுத்த வாக்குமூலம் விபரம் வருமாறு:
எங்கள் குடும்பம் தி.மு.க. குடும்பமாக இருந்தாலும், முதலமைச்சர் ஜெயலலிதா மீது எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை. மிரட்டல் கடிதம் அனுப்புவதற்கு எனது காதல் தோல்விதான் காரணமாகும்.
ரெட்ஹில்ஸ் பவானி நகரைச் சேர்ந்த திலீப்குமார் என்ற கதிர்வேல்ராஜனை நான் உயிருக்குயிராக காதலித்தேன். ஆனால், அவர் முதலில் காதலிப்பதாகச் சொல்லி விட்டு பின்னர் ராணி என்ற இன்னொரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தார்.
இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு உலகில் வாழப் பிடிக்கவில்லை. வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன். ஆனால், தூக்கில் தொங்கியோ, தீக்குளித்தோ, தற்கொலை செய்ய பயமாக இருந்தது.
ஒரு பக்கம் திலீப்குமாரை பழி வாங்கும் எண்ணமும் இருந்தது. இன்னொரு பக்கம் உயிர் வாழவும் எனக்குப் பிடிக்கவில்லை.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திலீப்குமாரின் பெயரிலும், விடுதலைப் புலிகள் பெயரிலும் மிரட்டல் கடிதங்களை `இமெயில்' மூலம் அனுப்பி வைத்தேன்.
இதன் மூலம் திலீப்குமாரை பொலிஸார் கைது செய்வார்கள் என்று நினைத்தேன். ஆனால், பொலிஸார் புத்திசாலித்தனமாக விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்து என்னைக் கைது செய்து விட்டனர்.
திலீப்குமாரை இன்னும் உயிருக்குயிராக நான் காதலிக்கிறேன். அவர் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது. இந்த வழக்கில் என்னை தூக்கில் போட்டால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்.
பெரிய பதவியில் இருக்கும் முதலமைச்சருக்கு எனது காதல் விவகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டல் கடிதம் அனுப்பியது தவறுதான். அதற்காக வருந்துகிறேன்.
இவ்வாறு கலைவாணி தனது வாக்குமூலத்தில் கூறினார். விசாரணை முடிந்து கலைவாணி மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கலைவாணி காதலித்த வாலிபர் திலீப்குமாரிடமும் விசாரணை நடந்தது. அவர் கலைவாணி அனுப்பிய 10 இற்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
அந்தக் கடிதங்களில் "காதல் ரசம் சொட்டும்" விதத்தில் தனது உள்ள உணர்வுகளை கலைவாணி அள்ளிக் கொட்டி இருந்தார்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டதாகவும், கலைவாணி மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் பொலிஸார் கூறினார்கள்.
Thinakkural
|
|
|
| சின்னப்பு ஜோக்ஸ் |
|
Posted by: sinnachi - 04-09-2005, 10:33 AM - Forum: நகைச்சுவை
- Replies (431)
|
 |
சின்னப்புவும் கொய்யாப்பழமும்...................
இஞ்சை பிள்ளையள் உந்த மனிசனோடை பட்ட பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக களத்துக்கு கொண்டுவரலாமெண்டு நினைக்கிறன். ஆனால் கண்டபடி சொல்லி கில்லி மனிசனை வெறுப்பேத்தாதையுங்கோ பிறகு மனிசன் இன்ரெநெற்றோ இளவோ என்னத்தையோ நிப்பாட்டிபோடும்.
ஒருநாள் உவர்(சின்னப்பு) என்னை வெளியிலை போட்டுவருவம் எண்டு கூட்டிக்கொண்டுபோனவர். உந்த மனிசன்ரை மூளையைப்பற்றித்தான் எங்களுக்க நல்லாத்தெரியுமே சரி எண்டு நானும் கூடப்போனன். நாங்கள் நடந்துகொண்டு கடையள் இருக்கிற பக்கமாக போனம். .ஓரு இடத்திலை பெரிய பெரிய கொய்யாப்பழம் வித்துக்கொண்டு இருந்தவங்கள் இவருக்கு கொய்யாப்பழம் நல்ல விருப்பம். எனக்கு பிடிக்காது. மனிசன் பழத்தை கண்டஉடனை சாப்பிடப்பொறன் எண்டு போய் ஒரு பழi;தை வாங்கிச்சுது..
வித்த பெடியன் கேட்டான் அப்பு பழத்தை வெட்டித்தரட்டோ எண்டு மனிசனும் ஓம் தம்பி வெட்டித்தா எண்டார்.
பெடியன் திரும்ப கேட்டான் அப்பு நாலு துண்டா வெட்டித்தரட்டோ எட்டுத்துண்டா வெட்டித்தரட்டோ எண்டு
உடனை அப்பு சொன்னார் <b>எட பெடியா எட்டுத்துண்டு சாப்பிடுற அளவுக்கு எனக்கு பசியில்லை நீ நாலுதுண்டா வெட்டித்தா எண்டாரே பாக்கலாம்.</b> தெரியுது தானே அப்புவின்ரை புத்தசாலித்தனத்தை
பிள்ளையள் மனிசன் வரப்போகுது. உவற்றை அதிமேதாவித்தனங்கள் நிறைய இருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு சொல்லுறன் இப்ப போட்டுவாறன்.
|
|
|
| 'அய்யர்ஸ் தி கிரேட்' தமிழில் புதிய முயற்சி! |
|
Posted by: hari - 04-09-2005, 06:25 AM - Forum: சினிமா
- Replies (4)
|
 |
'அய்யர்ஸ் தி கிரேட்' தமிழில் புதிய முயற்சி!
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer1.jpg' border='0' alt='user posted image'>
தமிழில் தயாராகும் முதலாவது முழு அனிமேஷன் படமான 'அய்யர்ஸ் தி கிரேட்' முடிவுறும் தருவாயில் உள்ளது.
சென்னையைச் சேர்ந்த மாயாபிம்பம் மீடியா என்ற நிறுவனம் இந்த தமிழ் அனிமேஷன் படத்தைத் தயாரித்து வருகிறது.
3 டி படமாக இப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தினரே உருவாக்கியுள்ள மாயா என்ற சாப்ட்வேரைக் கொண்டு இந்த அனிமேஷன் படத்தைத் தயாரித்து வருகிறாகள்.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer2.jpg' border='0' alt='user posted image'>
சாப்ட்வேர் நிறுவனம் மாதிரி தான் இருக்கிறது இந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகமும். ந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கி பாபு கூறுகையில்,
முழு நீள தமிழ் அனிமேஷன் படத்தை யாரும் இதுவரை உருவாக்கியதில்லை. எங்களது படைப்புதான் முதலாவதாகும். நிறைய கவனம் எடுத்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதில் நாங்கள் வெற்றி அடைவோம்.
வேறு ஏதோ மொழியில் எடுப்பதை விட நமது மொழியில், நமது மக்களுக்காக, உலக அளவில் பேசப்படக் கூடிய வகையில் அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எனவே ஆங்கிலத்தில் அனிமேஷன் படங்கள் எடுக்கும் திட்டம் இல்லை.
'அய்யர்ஸ் தி கிரேட்' முடிவுறும் தருவாயில் உள்ளது. இதைத் தொடர்ந்து அர்ஜூன் என்ற இன்னொரு அனிமேஷன் படத்தை தமிழில் உருவாக்கவுள்ளோம். அர்ஜூன் என்ற சிறுவனைப் பற்றிய கதை இது.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer3.jpg' border='0' alt='user posted image'>
இதற்கு அடுத்து, கல்கியின் இலக்கியப் படைப்பான பொன்னியன் செல்வன் கதையை அனிமேஷனில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்கிறார் வெங்கி பாபு.
வெங்கி அனிமேஷன் துறையில் 12 ஆண்டு அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்தை வைத்து அய்யர்ஸ் தி கிரேட் அனிமேஷன் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தைத் தயாரிக்கும் குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிறுவனத்தினரே உருவாக்கிய 'மாயா' என்ற சாப்ட்வேரைப் பயன்படுத்தி இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளனராம். இக் குழுவுக்கு ஸ்ரீதேவி ராவ் தலைமை வகிக்கிறார். இவர்தான் மாயாபிம்பம் நிறுவனத்தின் இயக்குனரும் கூட.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer4.jpg' border='0' alt='user posted image'>
சரி, அய்யர்ஸ் தி கிரேட் படத்தின் கதைதான் என்ன? 4 பிராமண சகோதரர்கள் பொக்கிஷத்தைத் தேடி பயணம் கிளம்புகிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கதை விளக்குகிறது.
இந்த பொக்கிஷ வேட்டைக்கு இடையே, நகர மக்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டியும் நடக்கிறது. அதாவது கிராம மக்களால் காரை ஓட்ட முடியுமா என்று நகரத்தினர் சவால் விடுகிறார்கள். அதை கிராம மக்கள் சாதித்துக் காட்டுகிறார்கள். இப்படிப் போகிறதாம் கதை.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/ayyer5.jpg' border='0' alt='user posted image'>
இந்தப் படம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினருக்கும் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.
|
|
|
|