![]() |
|
பகை ஏதுள...? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பகை ஏதுள...? (/showthread.php?tid=4518) |
பகை ஏதுள...? - இளைஞன் - 04-09-2005 <img src='http://www.yarl.com/forum/files/pakaiethula.gif' border='0' alt='user posted image'> அலைகள் புரள் அன்னைக் கடல் நுரைகள் திரள் அழகுன் உடல் மலைபோல் எழ தலைமேல் விழ உலகம் அழ பகை ஏதுள...? கரையைக் கட காலில் விழு கதறிஈ அழு கண்ணீர் விடு ஆழம் மிகு கடலே அறி வீரம் மிகு தமிழர் குடி கோரம் மிகு கொடுமை இது கொண்டாய் பலி கொண்டோம் வலி எதனால் இது எமக்கேன் இது எனநீ ஒரு பதிலைக் கொடு அழுகைக் குரல் அகதிச் சுமை குருதிக் குளம் போரின் முகம் இதுநாள் வரை இதுதான் நிலை இழந்தோம் பல இறந்தோம் பலர் அலையே குறி ஓயார் இவர் படகே றுவர் வலைவீ சுவர் கோலத் தமிழ் கொள்கைக் குரல் வானின் நிழல் காற்றின் குழல் தூறும் மழை புழுதிஈ மணல் நிலவின் ஒளி தாய்மண் மடி இவையே எம் உறவான பின் துயர் சூழுமோ? உயிர் வாடுமோ? நன்றி: அப்பால் தமிழ் - kuruvikal - 04-09-2005 நீண்ட காலத்தின் பின் தங்கள் கவிதை யாழ் களத்தில் தவழ்வது கண்டு மகிழ்ச்சி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-09-2005 கவிதை கண்டதில் மகிழ்ச்சி. நல்லாய் இருக்கு.. கவிதை வரி நடை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> கரையைக் கட காலில் விழு கதறிஈ அழு கண்ணீர் விடு <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதில் கதறி(ஈ) அழு என்று பிரித்து எழுதியதால்...வரும் பொருள்...என்ன..??! <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பட(கே) றுவர் புழுதி(ஈ) மணல் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதில் என்ன அர்த்தம் இருக்கு...???! குறிப்பா புழுதி(ஈ) மணல்...??! விளங்கவில்லை.... நேரம் இருந்தால் தெளிவுபடுத்தவும்...மரவு வழிக்க கவிதைகளில் இதுபோல் பிரிப்புகள் இருக்கும்...அதற்கு அர்த்தமும் இருக்கும்...அதேபோல்..இதற்கும் அர்த்தம் இருக்க வேண்டும்...அதுதான்...! :wink:
- eelapirean - 04-09-2005 இளையன் சுட்டுத்தானே போட்டுள்ளார். கருத்துக் கேட்டால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் ஓட வேண்டியது தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 04-09-2005 நல்லாயிருக்கு இங்கு இட்டமைக்கு நன்றி........... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-eelapirean+-->QUOTE(eelapirean)<!--QuoteEBegin-->இளையன் சுட்டுத்தானே போட்டுள்ளார். கருத்துக் கேட்டால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் ஓட வேண்டியது தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படிச் சொல்ல ஏலாது...சிலருக்கு தமிழை நுட்பமாக கையாளத் தெரிந்திருக்கும்..இப்ப வள்ளுவர் போல...அதுதான் சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முனைகிறோம்...அவ்வளவும் தான்...!
- tamilini - 04-09-2005 அந்த கவிதை நன்றாய் புரிந்து கொள்ள முடியும்.. சிலர்;.. வம்பு செய்வதாய்.. நினைக்கிறன்.. :mrgreen: :wink: - kuruvikal - 04-09-2005 tamilini Wrote:அந்த கவிதை நன்றாய் புரிந்து கொள்ள முடியும்.. சிலர்.. வம்பு செய்வதாய்.. நினைக்கிறன்.. :mrgreen: :wink: உங்களுக்கு விளங்க முடியுதல்லா...அப்ப அதில கேட்ட சந்தேகங்களுக்கு நீங்க விளங்கினதன் படி விபரம் சொல்லுங்க...! வம்பு பண்ண இதென்ன எங்கள் மலர் பற்றிய கவிதையா...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-09-2005 அது இளைஞன் அண்ணா கொடுத்தால் தான் நல்லாய் இருக்கும். :mrgreen: :mrgreen: - kuruvikal - 04-09-2005 tamilini Wrote:அது இளைஞன் அண்ணா கொடுத்தால் தான் நல்லாய் இருக்கும். :mrgreen: :mrgreen: உங்கள...தெரியாதுன்னா தெரியாதுண்டு சொல்லுங்க,,,வம்பு முடியாதேங்க...! :wink: :oops: - tamilini - 04-09-2005 வம்பு முடியல.. வம்பு பண்ணுறாங்க.. என்று சொன்னம்.. உண்மையை.. :evil: :twisted: :twisted: - kuruvikal - 04-09-2005 tamilini Wrote:வம்பு முடியல.. வம்பு பண்ணுறாங்க.. என்று சொன்னம்.. உண்மையை.. :evil: :twisted: :twisted: சரிங்க...உங்க கண்ணுக்கு வம்பாத் தெரியுறது எங்களுக்கு நியாயமாத் தெரியுது,,காரணம்...விளக்கங் கேட்டது நாங்க...நீங்கள் அல்லவே...! உங்கள மண்றாடிக் கேட்கிறம்...கோள் முடியாதேங்க... உண்மையாவே அதுகளுக்கு விளக்கம் வேணும்...! :wink:
- killya - 04-09-2005 :roll: - இளைஞன் - 04-10-2005 படகே றுவர் வலைவீ சுவர் சந்தத்துக்கும், ஏற்ற இறக்கத்துக்கும் ஏற்ப இவை பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வளவுந்தான். அழகூட்டல் என்றும் சொல்லலாம். கதறிஈ அழு புழுதிஈ மணல் இவற்றில் வருகின்ற "ஈ" என்பது கூடுதல் ஒலிச்சேர்க்கைக்காக இணைக்கப்பட்டுள்ளது. கவிதையின் ஓசைநயத்திற்குள் அடங்குவதற்காக இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. "கதறீ அழு", புழுதீ மணல்" என்றும் எழுதியிருக்கலாம். என்றாலும் ஈ என்பதை தனியே எழுதும் போது "கதறி, புழுதி" என்கின்ற சொற்கள் அப்படியே இருக்கும். கவிதைநடைக்கேற்ப ஒலிச்சேர்க்கை இணைத்தது ஒரு காரணமாக இருந்தாலும் கதறிஈ என்னும் போது அது இன்னும் அழுத்தமாக அதன் பொருளை வெளிப்படுத்துகிறது. வாசித்துக் கருத்துக்கூறிய அனைவர்க்கும் நன்றி. - kuruvikal - 04-10-2005 இல்லை இளைஞன்...வலை வீசுவர் என்ற போது... வலைவி (ஈ) சுவர் என்று கதறி (ஈ) அழு... புழுதி ( ஈ ) மணல் என்றும் அர்த்தம் கொள்ளப்படலாம் இல்லையா.... அதுதான் கேட்டோம்... உங்கள் விளக்கங்களுக்கு நன்றி...! :wink:
- kavithan - 04-11-2005 வாழ்த்துக்கள் இளைஞன் நல்ல கவிதை தொடர்ந்து தருங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- இளைஞன் - 04-11-2005 kuruvikal Wrote:இல்லை இளைஞன்...வலை வீசுவர் என்ற போது... வலைவி (ஈ) சுவர் என்று கதறி (ஈ) அழு... புழுதி ( ஈ ) மணல் என்றும் அர்த்தம் கொள்ளப்படலாம் இல்லையா.... அதுதான் கேட்டோம்... உங்கள் விளக்கங்களுக்கு நன்றி...! :wink: என்ன குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை :? நன்றி கவிதன். |