![]() |
|
போப்பாண்டவருக்கு அஞ்சலி செலுத்திய பிடல் காஸ்ட்ரோ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: போப்பாண்டவருக்கு அஞ்சலி செலுத்திய பிடல் காஸ்ட்ரோ (/showthread.php?tid=4512) |
போப்பாண்டவருக்கு அஞ்சலி செலுத்திய பிடல் காஸ்ட்ரோ - spyder12uk - 04-09-2005 மறைந்த போப்பாண்டவருக்கு நினைவஞ்சலி செலுத்த கம்யூனிச நாடான க்யூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ தலைநகர் ஹவானாவில் நடந்த ஒரு பிரார்த்தனைக்கூட்டத்துக்கு சென்றது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. 1992 வரை அதிகாரபூர்வமாகவே கடவுள் நம்பிக்கையற்ற நாடாக இருந்து வந்த கம்யூனிச நாடான க்யூபாவிற்கு , சில ஆண்டுகளுக்கு முன்னர் போப்பாண்டவர் ஜோன் போல் விஜயம் செய்து , அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளைப்பற்றி விமர்சனம் செய்தார். மதத்தலைவர் மார்க்சியவாதியுடன் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப்பிறகு க்யூபாவிற்கு பொருளாதார உதவிகள் செய்ய பெரிய நாடுகள் இல்லாதிருப்பது, க்யூபாவே ஒரு க்த்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாக இருப்பது போன்றவை காஸ்ட்ரோ, ரோமன் கத்தோலிக்க திருச்சபையுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக இவ்வாறு நடந்து கொள்ளச்செய்திருக்குமா? இவ்வாறாயின், கம்யூனிஸ்ட் அரசுகளை, கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் விமர்சித்து வந்த , ரோமன் கத்தொலிக்கத் திருச்சபையின் அணுகுமுறையில் மாற்றம் வருமா? இத்தகைய கேள்விகளை மார்க்ஸிய சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை மற்றும் தமிழ் நாடு கத்தொலிக்க டையொசீசன் குருமார்கள் கவுன்சிலின் தலைவர் வணக்குத்திற்குரிய அந்தொணி மாணிக்கம் ஆகியோரின் முன் வைத்தோம் . http://www.bbc.co.uk/tamil/highlights/stor...astropope.shtml |