Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் முன்னேறச் சில யோசனைகள்
#1
நீங்கள் முன்னேறச் சில யோசனைகள் - Dr. R. பரமேஸ்வரன்



வீர வரலாறு படைத்த சாதனையாளர்கள், வாகை சூடியவர்கள், சான்றோர்கள் ஆகியோரின் வாழ்க்கை முறையை உளவியலாளர்கள் ஆய்ந்து, சிலவகையான பண்பு நலன்கள் அத்தகையோரிடம் பரிமளித்ததைக்க கண்டனர். இத்தகைய ஆற்றல்களைப் பற்றியும், குணவியல்புகளைப் பற்றியும் திருவள்ளுவர் அழகுடன் எடுத்தியம்பியிருக்கிறார். உளவியலில் உள்ள கோட்பாடுகளில் ஒன்று சமூகக்கற்றல் கோட்பாடு. ஒருவன் சமூகத்தில் இடைவினை புரிவதால் அவனுடைய நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது இதன் அடிப்படைக் கருத்தாகும். சிலர் தலைவிதி, கர்மம், நேரம், ஆள்பலம் எனப் புறக்காரணிகளைத் தங்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணங்களாகக் கூறுவர். மாறாகச் சிலர், தங்களுடைய முயற்சி இன்மை, ஊக்கமின்மை, சோம்பேறித் தனம் ஆகியவற்றை நொந்து கொண்டு அவற்றைச் செம்மைப் படுத்திட முனைவர். அத்தகைய மனப்பாங்கு தான் வெற்றிப் பாதை அமைத்துத் தரும்.
நம்மிடம் பொதிந்துள்ள திறமைகளை நான்கு வகையாக்குவர். நமக்குக் தெரிந்தவை. நாம் அறியாமல் பிறர் அறிந்தவை: இவருவரும் அறிந்தவை: இருவரும் அறியாதவை என்பன அவை. முதுகலை வகுப்பு மாணவர் ஒருவரிடம் 'உங்களிடம் உள்ள திறமைகளை வரிசைப்படுத்திக் கூறுங்கள்" என்றேன்? 'திறமைகளா? என்னிடமா?" எனவினவினார். 'ஆம் உங்களிடம் உள்ள திறமைகளைத் தான் கேட்கிறேன்" என்றேன். இப்போதும் பதில் இல்லை. ஏனெனில் அவர் அவரைப் பற்றியே சிந்திக்கவில்லை. நான் கூறினேன். 'நீங்கள் ஒரு பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், தெரியும். தெலுங்கில் பேச மட்டும் தெரியம், அறிவுடையவர், எளிமையானவர், பிறருடன் எளிதில் பழகும் பண்பாளர்" என்று: பக்கத்து மாணவர் எழுந்து 'இவன் அருமையாகப் பாடுவான், கவிதை எழுதுவான் என்று மேலே தொடர்ந்தார். 'உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்" என்பது உண்மை. 'நீயார்? நான்யார்? என்கிற கேள்விக்கு விடை காண முடியாமையால் தான் நாம் பல பிரச்சினைக்கு ஆளாகிறோம்.

அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் மாணவர்களை மதிப்பீடு செய்யும் போது கீழ்க்கண்ட பண்புநலன்கள் உள்ளனவா எனக் கணக்கிடுகின்றன.

தன்னம்பிக்கையும், சுயசார்பும் மிக முக்கியமான குணங்களாகும். தன் கையே தனக்குதவி என்பது போல, பிறரைச் சார்ந்திராமல் சுதந்திரமாகச் செயல்படும் ஆளுமை வேண்டும்.

சூழ்நிலைக்கும், காலத்திற்கும் ஏற்ப நெகிழ்வுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 'தூங்குக தூங்கிச் செயற்பால, தூங்கற்க தூங்காது செய்யும் வினை" என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பகைமாட்சியும், பகைத்திறன் தெரிதலும் பயன்தரத்தக்க குணங்களாகும்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என ஆய்ந்து அவனிடத்தில் அச்செயலை ஒப்படைத்து- அதனைச் செய்து முடிக்கவும், வினை வலியும், தன் வலியும் மாற்றான் வலியும், துனை வலியும் அறிந்திருக்கவும் கூடிய ஆற்றலைப் பெற வேண்டும்.

நேரம் தவறாது, பொறுப்புணர்ந்து கடமையை ஆற்றும் பாங்கு வேண்டும். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செயலைச் செவ்வனே செய்ய முழு மனத்துடன் அதில் ஈடுபட வேண்டும்.

இடுக்கண் பலவரினும், சிந்தனை மயங்காது நுண்மாண் நுழை புலமறிந்து, புதிய முறைகளில் சிந்தித்துத் (Lateral thinking) தீர்வு காணுகின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மெய்யுணர்ந்து, தான் எடுத்த முடிவிலிருந்து மாறாத நெஞ்சத்தைப் பெற்றிருக்க வேண்டும். எண்ணி ஆராய்ந்து முடிவு எடுத்த பின்பு, பின் வாங்காது தனது செயலை நியாயப் படுத்துகின்ற ஆற்றல் வேண்டும்.

குற்றம் நம்மிடம் இருக்குமாயின், அக்குற்றத்தைப் போக்குவதற்கான வழிமுறைகளைப் பெற, அறநெறி கூறும் தக்கவரைப் பயன்படுத்திக் கொள்ளும் குணம் வேண்டும்.

நம்முடைய செயலில் முன்னேறுவதற்கான வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். செயல் பற்றிய நுணக்கங்களையும், விரிவான அறிவையும் பெற முயற்சியும் வேண்டும்.

தோல்விகள் அடுக்கிவரினும், உள்ளம் சோர்ந்து விடாமல், முயற்சியில் குறைவில்லாமல், மனநல மாண்பினைப் பெற்றிட வேண்டும்.

நெறிமுறைகளுக்கு ஏற்ப, அவையறிந்து திறன் அறிந்து கேண்மையைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உரிய மதிப்பையும், பெருமையையும் கொடுத்த, பண்பு பாராட்டும் குணநலன் வேண்டும்.

தலைமைப் பண்புகளைப் பெற்றிருப்பது மிக முக்கியமான ஆற்றலாகும். சொல் வன்மை என்னும் பண்பு பெற்றவனை எளிதில் வென்று விட முடியாது. ஆக்கமும், கேடும் அதனால் வருவதால் நாகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். கேட்டார் பிணிக்கும் வகையில், ஏற்படுத்தும் குரல் வளம் மிக்க பயனாக இருக்கும்.

ஊக்கமும் புத்துணர்வும் உடையவர்களை ஆக்கம் வந்தையும். எனவே, மகிழ்ச்சியோடு என்பதை உணருங்கள். உலகத்தோடு ஒட்ட ஒழுகவும், பெரியாரைத் துணையாகக் கொள்ளவும், ஆற்றுவார் ஆற்றலை இகழாத்தன்மையைப் பெறவும் முயற்சி செய்யுங்கள்.

இக்குணநலன்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வழித்துணைகளாகும். அவற்றைப் பெற்றிடவும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

ஹெல்த் சஞ்சிகை

நன்றி சூரியன்.கொம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
நன்றி :roll:
Reply
#3
vasisutha Wrote:நன்றி :roll:
:mrgreen:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
நன்றி நண்பரே!
Reply
#5
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vasisutha+--><div class='quotetop'>QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->நன்றி :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நான் சொன்ன நன்றிக்கு என்ன நக்கல் சிரிப்புவேண்டியிருக்கு? :oops: :evil:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நன்றிக்கல்ல முழுசலுக்கு
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)