Yarl Forum
கவியல்ல இது ஒரு காவியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவியல்ல இது ஒரு காவியம் (/showthread.php?tid=4524)

Pages: 1 2 3 4 5


கவியல்ல இது ஒரு காவியம் - kuruvikal - 04-09-2005

<img src='http://img116.exs.cx/img116/4868/nicebluebird5vg.jpg' border='0' alt='user posted image'>

<b>கவியல்ல இது ஒரு காவியம்
தேடியும் கிடைத்திடா
தேவதையாய் எண்ணியது
தேய்ந்து கட்டெறும்பான
கதை சொல்லும் ஜீவகாவியம்...!

ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு
தோப்பிலே குருவியொன்று
சிங்காரச் சிறகு விரிக்க
சுதந்திர வானம்....!
சுதந்திரமாய்க் குடியிருக்க
சின்னக் கூடு
சுமை தாங்கியாய்
சின்ன மாமரம்...!
சுந்தரக் கானமிசைக்க
தென்றல் போடும்
தக திமி தாளம்..!
இவை சேர
தப்பாமல் தன்பாட்டில்
வாழ்ந்தது மனதோடு
மகிழ்ச்சி பொங்க....!

அன்றொரு வேளை
அந்திசாயும் மாலை நெருங்க
அருமையாய் வசந்தம் பூத்திருக்க
பூமி மகள் அழகு காட்டியிருக்க
கண்ணினைக் காட்சிகள்
காந்தமாய்க் கவர
களம் ஏகியது குருவி....!
கண்கொள்ளாக் காட்சிகள்
விருந்துகள் படைக்க
வாயோடு வந்த கீதம் இசைத்துப்
பறக்குது சிட்டு
குதூகலித்துமே...!

இங்ஙனமாய்
இயற்கையின் நாயகன்
இன்புற்றிருக்க
குறுக்கே வந்த கருவண்டு
கவனம் இழுத்துச் செல்லுது..!
அதன் வழி
செல்லச் சொல்லுது மனம்
பாவம்...விதி வழி அறியாச் சிட்டும்
கூடிப் பறக்குது கருவண்டின் பின்னே...!
காட்சிகள் சிலது கடந்ததும்
வந்தது ஒரு வாசம்
வசந்தத்தின் பரிசாய்
தந்தது ஒரு மலர்...!

பார்வைகள் பரிமாற
மலரின் மாயமறியாது
சிட்டும் மயங்கியது
வந்த பாதை மறந்து
போதையில் வீழ்ந்தது..!
பருவத்து அழகு காட்டி
நயமாய் அழைத்து
வசமாக்கிக் கொண்டது மலர்..!
சிக்காரச் சிட்டும்
சிறைபட்டுப் போனது
தூய மனசும்
பாழ்பட்டுப் போனது....!

காலங்கள் கழிந்தது
மலரின் வேசம் கலையும்
காலமும் வந்தது...
பருவத்துச் சுருதி கூட்டி
பாடாய்ப்படுத்திய மலர்
அரை நொடிப் பொழுதில்
பாரா முகமாய்
அறியா உறவாய்
பத்தினிகள் வேசம் போட்டது...!
பதறிப்போனது சிட்டு
இது என்ன கோலம்...
கலிகாலத்து மங்கைக்கு ஒப்ப
மலரும் மாறிப்போனதோ
இல்ல...
புதிய உலகம் படைக்க
புறப்பட்டுவிட்டதோ மலர்...??!

சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை
"Good Bye.....!"</b>

(யாவும் கற்பனை)


- vasisutha - 04-09-2005

என்ன ஆச்சு குருவி. கவிதையில் சோகம் இழையோடுகிறதே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- KULAKADDAN - 04-09-2005

நல்ல கற்பனை

Quote:பார்வைகள் பரிமாற
மலரின் மாயமறியாது
சிட்டும் மயங்கியது
வந்த பாதை மறந்து
போதையில் வீழ்ந்தது..!
பருவத்து அழகு காட்டி
நயமாய் அழைத்து
வசமாக்கிக் கொண்டது மலர்..!
சிக்காரச் சிட்டும்
சிறைபட்டுப் போனது
தூய மனசும்
பாழ்பட்டுப் போனது....!

மலர் சிட்டுக்கு சொன்னதோ......அப்படி தானே கற்பனை பண்ணி கொண்டா அது மலரின் தப்பா. பருவத்து மலர்கள் அழகு தனே......அது மலரின் தப்பல்லவே.

வாழ்த்துக்கள் தொடருங்க............ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 04-09-2005

அழகை நாடிப்போனதும் குருவியின் தப்பல்லவே...அதை அப்பவே விரட்டி அடிச்சிருக்கலாமே..மலர்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

நன்றி வசி மற்றும் குளக்காட்டான்...!


- Mathan - 04-09-2005

மலர் அழகாத்தான் இருக்கும், அதை ரசிக்கலாம் ஆனால் செடியில் இருந்து பறித்தால் வாடி விடுமல்லவா? அதனால் தான் மலர் ரசிக்கும் போது பேசாமல் இருந்து பறிக்க முற்பட்ட போது பாராமுகம் காட்டியது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 04-09-2005

குருவிக்குத்தானே பறிக்கவே தெரியாதே...! பிறகென்ன...என்ன எல்லாரும் மலர் பக்கமே இருக்கீங்க...குருவி பக்கமும் உள்ள நியாயத்தைப் பாருங்களேன்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 04-09-2005

சரி சரி குருவியை கண்டு வேறு ஒரு மலர் மயங்குவதாக கவி தாருங்கள்.

கவிதைக்கு வாழ்த்துக்கள்


- kavithan - 04-09-2005

என்ன குருவி மலரண்ணி அப்படியா சொன்னா...? ஆள் ரொம்ப மோசம் போலை இருக்கு.. ? அவவை விட்டிட்டு வேறை அண்ணி பாருங்கோவன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்


- Malalai - 04-09-2005

Quote:அவவை விட்டிட்டு வேறை அண்ணி பாருங்கோவன்...
இங்க பாரு இவர் கொடுக்கிற ஜடியாவை.....நல்ல மந்திரி...முதல்ல நான் தந்தையோட பேசனும் இப்படி ஒரு மந்திரியா.....எங்கள் இராஜாங்கத்துக்கு சரிப்பட்டு வராது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 04-09-2005

என்ன குருவி அண்ணா கவி கவலையைத் தருகிறதே...என்ன நடந்தது....அண்ணணும் நொந்து நூலாகிறியளே...சரி சரி அழாதைங்க....


- kuruvikal - 04-09-2005

kavithan Wrote:என்ன குருவி மலரண்ணி அப்படியா சொன்னா...? ஆள் ரொம்ப மோசம் போலை இருக்கு.. ? அவவை விட்டிட்டு வேறை அண்ணி பாருங்கோவன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்

மலர் தான் மங்கை போல என்றா..நீங்க குருவியையும் என்ன உங்க மாதிரி மனிசாள் என்று நினைச்சியளா... காலம் ஒன்று நினைக்க...!வாழ்வில் ஒன்றைத்தான் நினைப்பதும் வாழ்வதும்...அதுதான் குருவி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி கவிதன் வாழ்த்துக்கு... நன்றியில்ல...பரிந்துரைக்கு மந்திரியாரே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 04-09-2005

Malalai Wrote:என்ன குருவி அண்ணா கவி கவலையைத் தருகிறதே...என்ன நடந்தது....அண்ணணும் நொந்து நூலாகிறியளே...சரி சரி அழாதைங்க....

உலகமே கவலைப்படும்...ஆனா மலர்.....!!!!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி தங்கையே அண்ணனின் கிறுக்கல் கண்டு தந்த ஆறுதலுக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Nada - 04-09-2005

சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை



இது எப்படி குருவியாரே மலரின் தவறாகும். (உந்த) குருவி மலரிலை தேன் குடித்ததும் எஸ்கேப்பாகிவிடும். முட்டாள் குருவி(நீங்களல்ல) தானும் கவலைப்பட்டு மலரையும் துன்புறுத்திவிட்டது. மலருக்கு என்னால் முடிந்த ஆறுதல்கள்.


- tamilini - 04-09-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சிங்காரச் சிட்டுக்கு  
புத்தியில் உறைத்தது  
சித்தம் தெளிய  
சீராய்ச் சொன்னது  
நீயாய் தேடாத வரை  
\"Good Bye.....!\"
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா.. என்ன அழகான அருமையான.. முடிவு.. மலரின் வேசம் கலையும் வேளை என்று.. முதலில் ஒரு கவிதை வந்த நினைவு.. மலர் திரும்ப திரும்ப வேசம் போட.. இவங்க ஏமாறிறாங்களா..?? அல்லது.. எல்லாம் உருவாக்கமா..??

மலரே.. உனக்கு சிறிய அறிவுரை.. சிட்டுக்களும் வண்டுகளும் உனக்கு என்றும் உறவல்;ல.. உனது சோடி மலர் தான் உனக்கு உறவு.. சிட்டுக்களும் பட்டுகு;களும் தங்கள் சோடி சிட்டுக்களை தேடிப்பிட்டிக்கட்டும்.. அது வரை கவிகளில் உன்னை மாதவி என்றால் கூட கலங்காதே.. பாவம் அவர்கள் பாசத்தின் வெளிப்பாடு.. உன்னை கேளியும் பண்ணும். எட்டி உதைத்து ஏளனம். செய்யும் ஆணாதிக்க சமு}தாயத்தில்.. ஊறிய சிட்டுக்கள் ஆச்சே இதுகள். வேறு என்ன வரும் வார்த்தைகளில் கூட.. விச அம்பு தான்.. :wink: Idea


- kuruvikal - 04-09-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சிங்காரச் சிட்டுக்கு  
புத்தியில் உறைத்தது  
சித்தம் தெளிய  
சீராய்ச் சொன்னது  
நீயாய் தேடாத வரை  
\"Good Bye.....!\"
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா.. என்ன அழகான அருமையான.. முடிவு.. மலரின் வேசம் கலையும் வேளை என்று.. முதலில் ஒரு கவிதை வந்த நினைவு.. மலர் திரும்ப திரும்ப வேசம் போட.. இவங்க ஏமாறிறாங்களா..?? அல்லது.. எல்லாம் உருவாக்கமா..??

மலரே.. உனக்கு சிறிய அறிவுரை.. சிட்டுக்களும் வண்டுகளும் உனக்கு என்றும் உறவல்;ல.. உனது சோடி மலர் தான் உனக்கு உறவு.. சிட்டுக்களும் பட்டுகு;களும் தங்கள் சோடி சிட்டுக்களை தேடிப்பிட்டிக்கட்டும்.. அது வரை கவிகளில் உன்னை மாதவி என்றால் கூட கலங்காதே.. பாவம் அவர்கள் பாசத்தின் வெளிப்பாடு.. உன்னை கேளியும் பண்ணும். எட்டி உதைத்து ஏளனம். செய்யும் ஆணாதிக்க சமு}தாயத்தில்.. ஊறிய சிட்டுக்கள் ஆச்சே இதுகள். வேறு என்ன வரும் வார்த்தைகளில் கூட.. விச அம்பு தான்.. :wink: Idea<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

மலர்களே...கலர்கலராக் கண்ணாடி போட்டது போல.....இதழ் கொண்டு அதற்குள்ளாக நீங்கள் குருவிகளையும் கலர் கலராக் காணாதேங்க... இதுக்க ஆணாதிக்கமும் இல்ல அருவருப்பும் இல்ல...அது சொல்லி இது சொல்லி அரைகுறைகள் சொல்லி உறவாடி உதைந்து தள்ளாது... உறவின் ஆரம்பத்திலேயே முளையைக் கிள்ளிவிடுங்கள் மலர்களே..உலகில் இக்குருவி போல்...இன்னோர் குருவி வேண்டாம்...மலரிடம் ஏமாந்ததாய்...! இது ஆதிக்கம் அல்ல குருவிகளுக்கான எச்சரிக்கை...!

சிட்டுச் சிட்டு தேடுவதும் விடுவதும்..அதன் சொந்த விருப்பம்...அதைச் சொல்ல மலருக்கென்ன அருகதை.... இதுதான் ஆதிக்கத் தொனி...குருவி சொல்லிச்சா மலரே நீ மலர் தேடென்று...சொன்னது Good Bye மட்டுந்தான்... அதாவது போயிட்டு உன்னிடமே வாறன் எண்டதுதான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 04-09-2005

<!--QuoteBegin-Nada+-->QUOTE(Nada)<!--QuoteEBegin-->சிங்காரச் சிட்டுக்கு  
புத்தியில் உறைத்தது  
சித்தம் தெளிய  
சீராய்ச் சொன்னது  
நீயாய் தேடாத வரை  

 

இது எப்படி குருவியாரே மலரின் தவறாகும்.  (உந்த) குருவி மலரிலை தேன் குடித்ததும் எஸ்கேப்பாகிவிடும்.  முட்டாள் குருவி(நீங்களல்ல)  தானும் கவலைப்பட்டு மலரையும் துன்புறுத்திவிட்டது. மலருக்கு  என்னால் முடிந்த ஆறுதல்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்ப ஏனாம் தேனிருக்கு மலரிடம்...கவர்ந்திழுக்க அழகிருக்கு...சும்மா வேடிக்கைக்கா... மலரும் மலரும் சேர இவைதான் ஏனோ...???! மலரும் மலரும் சேர்ந்து காயும் கனியும் பிறந்ததா...???! சும்மா வாடித்தான் விழுந்திருக்கும்....!

நீங்கள் குருவிகளை முட்டாள் என்றது மலரின் மேல் உள்ள பட்சாபத்தில்.... குருவிகளைத் தேன் குடிக்க கவர்வதும் தங்கள் தேவை முடிப்பதும் மலர்களே ஒழிய...குருவிகள் அல்ல...! தேனில்லாவிடினும் குருவிக்கு உணவிருக்கு...மலர் இல்லாவிடினும் குருவி சோடி இருக்க உலகில் வாய்ப்பிருக்கு... மலருக்கு மட்டும் மகரந்தம் காவ தேவையிருக்குக் குருவி...ஆகவே மலர்தான் யூஸ் பண்ணிட்டு...தள்ளிவிடுகுது... இது புரியாம மலரின் மேல் பட்சாபம் வேறு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 04-09-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அப்ப ஏனாம் தேனிருக்கு மலரிடம்...கவர்ந்திழுக்க அழகிருக்கு...சும்மா வேடிக்கைக்கா... மலரும் மலரும் சேர இவைதான் ஏனோ...???! மலரும் மலரும் சேர்ந்து காயும் கனியும் பிறந்ததா...???! சும்மா வாடித்தான் விழுந்திருக்கும்....!  

நீங்கள் குருவிகளை முட்டாள் என்றது மலரின் மேல் உள்ள பட்சாபத்தில்.... குருவிகளைத் தேன் குடிக்க கவர்வதும் தங்கள் தேவை முடிப்பதும் மலர்களே ஒழிய...குருவிகள் அல்ல...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆக மொத்தத்திலை அழகும் தேனும் மலரிடம் இருப்பது கவர்வதற்காக தான். குருவிளோட வேலை அந்த அழகில் மயங்கி தேனை குடித்து விட்டு மகரந்தங்களை காவி சென்று மலருக்கு உதவ வேண்டியது தான். அந்த மலர் மகரந்த சேர்க்கையில் காய் கனியான இனி அடுத்த மலருக்கு உதவி. என்ன வாழ்க்கை போங்க மனிதர்களுக்கு கூட இப்படி கொடுத்து வைக்கலை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilini - 04-09-2005

அப்ப.. சிட்டுகளும்.. தேவை அழகு. கருதித்தான் மலர்களை நாடுகின்றனவா..?? தேன் தேனும் அழகும் இல்லாட்டால்.. மலரின் வாழ்க்கை அம்போவா..?? :evil: :twisted:


- KULAKADDAN - 04-09-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அப்ப ஏனாம் தேனிருக்கு மலரிடம்...கவர்ந்திழுக்க அழகிருக்கு...சும்மா வேடிக்கைக்கா... மலரும் மலரும் சேர இவைதான் ஏனோ...???! மலரும் மலரும் சேர்ந்து காயும் கனியும் பிறந்ததா...???! சும்மா வாடித்தான் விழுந்திருக்கும்....!  

நீங்கள் குருவிகளை முட்டாள் என்றது மலரின் மேல் உள்ள பட்சாபத்தில்.... குருவிகளைத் தேன் குடிக்க கவர்வதும் தங்கள் தேவை முடிப்பதும் மலர்களே ஒழிய...குருவிகள் அல்ல...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆக மொத்தத்திலை அழகும் தேனும் மலரிடம் இருப்பது கவர்வதற்காக தான். குருவிளோட வேலை அந்த அழகில் மயங்கி தேனை குடித்து விட்டு மகரந்தங்களை காவி சென்று மலருக்கு உதவ வேண்டியது தான். அந்த மலர் மகரந்த சேர்க்கையில் காய் கனியான இனி அடுத்த மலருக்கு உதவி. என்ன வாழ்க்கை போங்க மனிதர்களுக்கு கூட இப்படி கொடுத்து வைக்கலை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
என்ன கவலையா இருக்கா மதன்.

அது கிடக்கட்டும்
மலர் ஒண்டும் குருவிய நம்பி இல்லயே பூச்சியினம் குறிப்பா தேனீ அணில் நீர் காற்று என பலதும் இருக்கே. தேனைக்குடிக்க போன குருவி அழகிலையும் தேனிலையும் மயங்கினா என்ன பண்ண.
மலரின் அழகும் தேனும் அதன் கொடை அதை தப்பாக எண்ணியது யார் தப்பு...........


- tamilini - 04-09-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மலர்களே...கலர்கலராக் கண்ணாடி போட்டது போல.....இதழ் கொண்டு அதற்குள்ளாக நீங்கள் குருவிகளையும் கலர் கலராக் காணாதேங்க... இதுக்க ஆணாதிக்கமும் இல்ல அருவருப்பும் இல்ல...அது சொல்லி இது சொல்லி அரைகுறைகள் சொல்லி உறவாடி உதைந்து தள்ளாது... உறவின் ஆரம்பத்திலேயே முளையைக் கிள்ளிவிடுங்கள் மலர்களே..உலகில் இக்குருவி போல்...இன்னோர் குருவி வேண்டாம்...மலரிடம் ஏமாந்ததாய்...! இது ஆதிக்கம் அல்ல குருவிகளுக்கான எச்சரிக்கை...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாவம் மலர்.. இப்படிப்பட்ட உயிரினங்களுடன் எல்லாம் பழகியிருக்கு.. அதுக்கும் லூசு போல.. :twisted: :mrgreen: