Yarl Forum
யாழ்களத்தில் வள்ளலின் உதவிக்கரம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: யாழ்களத்தில் வள்ளலின் உதவிக்கரம் (/showthread.php?tid=4532)

Pages: 1 2


யாழ்களத்தில் வள்ளலின் உதவிக்கரம் - வள்ளல் - 04-07-2005

அனைவருக்கும் வணக்கம்
நான் கருத்து சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் இலங்கையில் தமிழர்களில் படிப்பதற்கு மனம் இருந்தும் பணவசதி இல்லாமல் இருப்பவர்களில் மாதம் இருவருக்கு பணஉதவி செய்ய ஆசைபடுகிறேன்
நிபந்தனைகள் :
1, இலங்கை தமிழராக இருக்க வேண்டும்
2, 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
3, யாழ்களத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்

இவைகள் பொருந்தினால் உதவிக்கரம் என்ற தலைப்பில் உங்கள் கோரிக்கைகளை வையுங்கள்
உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கபட்டபின் நீங்கள் உதவி டபெற தகுதி உடையவர்கள் என்னும் செய்தி உங்களுக்கு தனிமடல் மூலம் வந்து சேரும் ,அதன் பின் நீங்கள் வங்கி இலக்கம் ,முகவரி போன்றவற்றை அனுப்பலாம்
நிச்சயமாக மாதம் இருவருக்கு உதவி கிடைக்கும்
தொகை வரம்பு 1000 இலங்கை ரூபாயிலிருந்து 7000 இலங்கைரூபாய்கள் வரை
உதவிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளும் திகதி 06-20
உறுப்பினர்கள் மற்றும் விருந்தாளிகள் உங்கள் நண்பர்களுக்கும் தகவலை தெரிவியுங்கள்

குறிப்பு:
இது எந்த நிறுவனமோ குழுவினர் சார்ந்த உதவி அல்ல
இது வள்ளலால் தனிப்பட்் முறையில் செய்யப் படும்உதவி

இந்த முயற்சியிலுள்ள குறைகள் நிறைகளை தயவு செய்து கருத்துக்கள் மூலம் தெரிவியுங்கள் உங்கள் ஆலோசனைகள் வரவேற்க படுகின்றன,


- KULAKADDAN - 04-07-2005

நல்ல விடயம் வள்ளல்.... ஆனால்....
யாழ்கள உறுப்பினர்கள் எனும் போது இலங்கையில் உள்ளவர்கள் களத்தில் குறைவு.....அங்குள்ளவர்கள் அடிக்கடி களத்திற்கு வரும் வசதியும் குறைவு ஆகவே களஉறுப்பினர்கள் மட்டும் எனும் வரையறை எந்தளவுக்கு சாத்தியம் சிந்தியுங்கள் Idea
உங்கள் உதவும் உள்ளத்துக்கு தலைவணங்குகிறேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
களத்திற்கு தங்களது வரவு நல்வரவாகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 04-07-2005

Å¡Õí¸û ÅûǧÄ? ÀȡŢø¨Ä§Â ¦ÀÂâ¨Äò¾¡ý ÅûÇø ±ýÚÀ¡÷ò¾¡ø ¦ºÂÄ¢Öõ ÅûÇø Á¡¾¢Ã¢ þÕ째.. 8)


- வள்ளல் - 04-07-2005

உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கது
உங்கள் கருத்தை நான் ஆதரிக்குறேன் ஆகையால்

களத்தில் உறுப்பினர் ஆகவேண்டும் என்ற விதிமுறையை தளர்துகின்றேன் ,ஆனல் தமிழீளத்தில் அவர்கள் வசிக்கவேண்டும்

உங்கள் கருத்திற்கு நன்றி

உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தகவலை தெரியப்படுத்துங்கள்


- KULAKADDAN - 04-07-2005

தங்களது திட்டம் எப்படியானது என தெரியவில்லை................
தாங்கள் கல்விகற்கும் மாணவருக்கு உதவி செய்ய போவதாக இருந்தால் தெரிவு செய்த மாணவர்கள் இருவருக்கும் அவர்களது கல்வியை நிறைவு செய்யும் வரை கொடுத்தால் நல்லது

உதாணமாக கா .பொ .தா சா/ த சித்தியடைந்து உயர் தரம் கற்க போகும் மாணவனாயின் அவரது உயர் தர கல்வி முடியும் வரை மாதம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து வருவது அவர் கல்வியை விடாது தொடர உதவும்


- தமிழரசன் - 04-07-2005

நல்ல விடயம் வள்ளல்


- வள்ளல் - 04-07-2005

கா .பொ .தா சா/ த சித்தியடைந்து உயர் தரம் கற்க போகும் மாணவனாயின் அவரது உயர் தர கல்வி முடியும் வரை மாதம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து வருவதும் எங்கள் திட்டம்தான்


- KULAKADDAN - 04-07-2005

அவ்வாறு பல்கலை அனுமதிகிடைத்து குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடர கஸ்டப்படுவோராயின் அவர்களது வாழ்விடம் மற்றும் பல்கலைகழக அமைவிடம் என்பவற்றை பொறுத்து தொகையை தீர்மானிக்கலாம்

உதாரணத்துக்கு வன்னியை வாழ்விடமாகவும் கல்வியை யாழ் பல்கலைகழகத்திலும் கற்றால் சுமார் 3000- 4000 போதுமானது.
அதே மாணவன் மோரட்டுவ அல்லது பேராதனை ஆகா இருந்தால் 7000 மேல் தேவைப்படும்.


- வள்ளல் - 04-07-2005

மாதம் இருவர் வீதம் உதவிகள் ஆரம்பிக்க படும் அவர்களுக்கு தொடாந்து உதவிகள் கிடைக்கும் குறிப்பிட்ட காலம்வரை குலக்காட்டான் சொன்னது போல
எத்தனை பேர் வரை உதவிகள் செய்ய முடியும் என்று சில காரணங்களுக்காக இப்போது தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்


- tamilini - 04-07-2005

:roll: :roll:


- வள்ளல் - 04-07-2005

அவ்வாறு பல்கலை அனுமதிகிடைத்து குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடர கஸ்டப்படுவோராயின் அவர்களது வாழ்விடம் மற்றும் பல்கலைகழக அமைவிடம் என்பவற்றை பொறுத்து தொகையை தீர்மானிக்கலாம்

உதாரணத்துக்கு வன்னியை வாழ்விடமாகவும் கல்வியை யாழ் பல்கலைகழகத்திலும் கற்றால் சுமார் 3000- 4000 போதுமானது.
அதே மாணவன் மோரட்டுவ அல்லது பேராதனை ஆகா இருந்தால் 7000 மேல் தேவைப்படும்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உங்கள் பயனுள்ள கருத்திற்கு நன்றி


- KULAKADDAN - 04-07-2005

வள்ளல் Wrote:மாதம் இருவர் வீதம் உதவிகள் ஆரம்பிக்க படும் அவர்களுக்கு தொடாந்து உதவிகள் கிடைக்கும் குறிப்பிட்ட காலம்வரை குலக்காட்டான் சொன்னது போல
எத்தனை பேர் வரை உதவிகள் செய்ய முடியும் என்று சில காரணங்களுக்காக இப்போது தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்

நல்லது.....எத்தனை பேருக்கு உதவ போகிறீர்கள் என்பது தங்களை பொறுத்தது......


- வள்ளல் - 04-07-2005

எனக்கு கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்


- வள்ளல் - 04-07-2005

தொடர்ந்து உங்கள் ஆலோசனைகளை தெரியபடுதுமாறு தாள்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்


- வள்ளல் - 04-07-2005

வாருங்கள் தமிழினி உங்கள் கருத்தையும் முன்வையுங்கள்


- KULAKADDAN - 04-07-2005

தகுதியானவருக்கு கிடைக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திபொள்ளுங்கள்.
மற்றும் படி சிறப்பாக ஏதேனும் கருத்துக்கள் தேவையென்றால் தனிமடலில் அல்லது களத்தில் போதுவாக கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை கருத்தை தெரிவிக்கிறேன்


- விது - 04-07-2005

வணக்கம் திரு வள்ளள் அவர்களே நீங்கள் வன்னியில் இருக்கும் மாணவர்ட்கு உதவ நினைத்தால் எப்படிப்பட்ட விபரங்களை எதிர் பாற்கின்றீர்கள் ஏநெனில் நான் அடுத்தமாதம் வன்னி செல்கிறேன் அங்கிருந்து உங்களுக்கு உதவ முடியும் உங்கள் முயற்சிட்கு எனது மனமார்ந்த நன்நிகள்.


- anpagam - 04-07-2005

8) Idea Arrow Arrow


- eelapirean - 04-07-2005

வணக்கம் வள்ளல் இந்த செய்தியை யாழில் உள்ள பத்திரிக்கையில் போடலாமே.கஸ்டப்பட்டவன் எங்கே கணணியைப் பார்க்க போகிறான்.நலல முயற்சி தான். எனக்கென்னவோ பணக்காரர் தான் உங்களிடம் தொடர்பு கொள்ள போகிறார்கள்.


- Mathan - 04-07-2005

நீங்கள் உண்மையிலேயே உதவி செய்ய விரும்பினால் ஈழத்தில் உள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றையோ, தமிழர் புனர்வாழ்வு கழகத்தையோ அல்லது பாடசாலை ஒன்றையோ நேரடியாக உண்மை பெயரில் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம்.