Yarl Forum
நல்லூர் ஸ்தான் குறும்பட போட்டி முடிவுகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: நல்லூர் ஸ்தான் குறும்பட போட்டி முடிவுகள் (/showthread.php?tid=4560)



நல்லூர் ஸ்தான் குறும்பட போட்டி முடிவுகள் - AJeevan - 04-05-2005


<img src='http://www.yarl.com/forum/files/dsc01185.jpg' border='0' alt='user posted image'>


பரிஸில் உள்ள நல்லூர் ஸ்தான் 03-04-2005 ல் நடாத்திய குறும்பட போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்போட்டியில் ஏழு குறும்படங்கள் கலந்துகொண்டன.

<span style='color:brown'><b>01. நீ நான் எல்லோரும் - நெறியாளர்:: ரூபன்
02. மறுமுகம் - நெறியாளர்:: வினாகாண்டி
03. நதி - நெறியாளர்:: பாஸ்கரன்
04. விடுதலை - நெறியாளர்:: டிசூபன், சதா பிரணவன்
05. எதுமட்டும் - நெறியாளர்:: I.V.ஜனா
06. வடலி - நெறியாளர்:: முத்தமிழ்ச் செல்வன்
07. கேள்விக்குறி ? - நெறியாளர்::ஹரிபிரசாத்</b>

இவற்றில் சிறந்த முதலாமிட விருதினையும், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினையும் <b>"எதுமட்டும்"</b> குறும்படம் பெற்றுக்கொணடது.
இது பிரான்சில் வதியும் இலங்கைத் தமிழ்க் குடும்பத்திற்கும் ஆபிரிக்க தேசமொன்றின் இளைஞனுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பேசுகின்றது.

சிறந்த இரண்டாமிட விருதினையும், சிறந்த நெறியாளர், சிறந்த நடிகர் ஆகியவற்றிற்கான விருதினையும் <b>"நதி"</b> என்னும் குறும்படம் பெற்றுக்கொண்டது. இது பிரான்சில் அகதியாக வந்து சேரும் இளைஞன் ஒருவனின் புகலிடத்தின் வாழ்வியல் நெருக்கடி பற்றி பேசுகின்றது.

சிறந்து மூன்றாமிட விருதினை <b>"விடுதலை"</b> என்னும் குறும்படம் பெற்றுக்கொண்டது.

பெருமளவிலான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்த இக்குறும்பட போட்டி நிகழ்வு புலம்பெயர் கலை-இலக்கிய செயற்பாட்டின் ஓர் அங்கமாய் புலம்பெயர் சினிமா வளர்வதற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

எழுதியவர்: குணா
Monday, 04 April 2005</span>

http://www.appaal-tamil.com/index.php?opti...d=275&Itemid=63