Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 542 online users.
» 0 Member(s) | 539 Guest(s)
Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,432
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  தகவல்கள்..!
Posted by: tamilini - 08-18-2005, 07:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

இன்று தமிழீழ மகளீர் படையணி ஆரம்பிக்கப்பட்ட நாள்.
(20 ஆண்டுகளுக்கு முதல்)
1985 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 ம் திகதி திண்டுக்கல்லில் முதலாவது பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. தகவல் NTT தொலைக்காட்சி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  இலங்கைக்கு SMS அனுப்ப இலவசம்
Posted by: tamil03 - 08-18-2005, 01:23 PM - Forum: இணையம் - Replies (65)

<img src='http://www.lankamovie.com/images/smsbanner.gif' border='0' alt='user posted image'>
இலங்கைக்கு SMS அனுப்ப இலவசம்

இலங்கைக்கு SMS அனுப்ப இலவசம்

Print this item

  சின்னப்புவும் நானும் தண்ணியடிச்சா. . . .
Posted by: MUGATHTHAR - 08-18-2005, 12:02 PM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

[size=18]<b>சின்னப்புக்காக. . . . .</b>

பாடசாலை நாட்களில் கிரிகெட் மச் புட்போல் மச்சுகளுக்கு போகும்போது பாடுவதற்காக எங்களால் இயற்றப் பட்ட பாடல்

[b]போகட்டோ. . போகட்டோ. .போய்வரட்டோ. . .
சந்திக்கும் ஒருக்கா போய் வரட்டோ. . .
ஆடி குடிக்கலாம் . . பாடிக் குடிக்கலாம் .
பத்தும் செய்யும் பலதும் செய்யும்
களுத்துறைச் சாராயம் போகட்டோ. . )

மாமியைக் கண்டா இங்கிலீசு பேசச் சொல்லும்
மாமாவைக் கண்டா பைலாவும் ஆடச் சொல்லும்
மனுசியைக் கண்டா குப்பெண்டு இறங்கிடும்
மனுசியைக் கண்டா குப்பெண்டு இறங்கிடும்
பத்தும் செய்யும் பலதும் செய்யும்
களுத்துறைச் சாராயம் (போகட்டோ. .)

சந்தியில் நிண்டு சண்டித்தனம் காட்டச் சொல்லும்
சாறத்தை மேலே தூக்கவும் சொல்லும்
பொலிசு வான் வந்து ஏத்திக் கொண்டு போவுடும்
பொலிசு வான் வந்து ஏத்திக் கொண்டு போவுடும்
பத்தும் செய்யும் பலதும் செய்யும்
களுத்துறைச் சாராயம் (போகட்டோ. .)

அடிக்கிற அடியிலை களவுகள் வெளிக்கிடும்
படுத்த படுக்கேலை வயித்தாலை போயிடும்
கழுத்திலை கோழி ஊர்வலம் போகும்
கழுத்திலை கோழி ஊர்வலம் போகும்
பத்தும் செய்யும் பலதும் செய்யும்
களுத்துறைச் சாராயம்

Print this item

  விண்வெளியில் சாதிக்கவே பிறந்தாயோ பெண்ணே?
Posted by: vasisutha - 08-18-2005, 11:47 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<b>விண்வெளியில் சாதிக்கவே பிறந்தாயோ பெண்ணே?</b>

<img src='http://www.dinamalar.com/2005aug14sundayspecial/SS-%2006J.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:green'>கடந்த 9ம் தேதி, அமெரிக்கா மட்டுமல்ல... உலகே பரபரப்பாக ஒரு \"திரில்'லை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அது... அமெரிக்காவின் \"டிஸ்கவரி' விண்கலம் பத்திரமாகத் தரையிறங்குமா என்பதுதான். விண்கலத்தை பத்திரமாகத் தரையிறக்கி உலக மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றவர், விண்கலத்தை இயக்கிய பெண் கமாண்டர் இலீன் காலின்ஸ்.

கடந்த 2003ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கொலம்பியா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வேளையில், வெடித்துச் சிதறிய காட்சியை இன்னும் நம் கண்கள் மறக்கவில்லை. அதில் பயணம் மேற் கொண்ட இந்திய வீராங் கனை கல்பனா சாவ்லாவையும் யாரும் மறக்க முடியாது. விண்கலம் வெடித்துச் சிதறக் காரணம் என்ன? மீண்டும் விண்கலத்தை ஏவ முடியுமா? ஏவினாலும், பத்திரமாகத் தரையிறங்க முடியுமா? இத் தனை கேள்விகளுக்கும் விடை அளிப்பது போல், அனைவரின் பயத்தையும் உடைத்தெறிந்து சாதனை படைத்தவர் தான் இப்பெண் .


கொலம்பியா வெடித்துச் சிதறுவதற்கு முன், மேற்கொண்ட முதல் பயணத்தில் 1999ம் ஆண்டில் பயணம் செய்தவர் இலீன் காலின்ஸ். அது வெடித்துச் சிதறிய செய்தி கேட்டு அரண்டு போனாலும், உடனே சுதாரித்து, அடுத்த விண்கலத்தை ஏவும் பணியில் மனமுவந்து ஈடுபட் டார். கொலம்பியா பூமியிலிருந்து கிளம்பியபோது அதன் வெளிப்புறத்திலிருந்து ஒரு தகடு கீழே விழுந்தது. அப் போது அதை யாரும் பிரச்னையாகக் கருதவில்லை.


"டிஸ்கவரி' விண்கலம் ஜூலை 26ம் தேதி விண்ணிற்குச் செல்லக் கிளம்பியபோதும், கலத்தின் வெளிப்புறத் திலிருந்து தகடு ஒன்று கழன்று விழுந்தது. ஆனால் இந்த முறை விஞ்ஞானிகள் உஷாராகி விட்டனர். விண்கலத்தை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள ஓடு விழுந் ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலம் சென்றதுமே அதைச் சரி செய்ய முடிவு செய்தனர். விண்கலத்தில் சென்று, பிரச்னைகளைச் சரி செய்து, சரியான வானிலை இல்லாத சூழ்நிலையில், தரையிறங்கும் சிக்கலை கவனமாகக் கையாண்டு, வெற்றிகரமாக பயணத்தை முடித்த பெருமையில் முக்கியத்துவம் பெரும் பங்கை ஆற்றியவர் இலீன் காலின்ஸ்.


<img src='http://www.dinamalar.com/2005aug14sundayspecial/SS-%2006B.jpg' border='0' alt='user posted image'>

இவை எல்லாம் எப்படி சாத்தியமாயிற்று, யார் இவர் என்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா? இனி காலின்சைப் பற்றிய விவரங்களைப் படியுங்கள்.

கடந்த 1956ம் ஆண்டு நியூயார்க் நகரில் எல்மிரா என்ற பகுதியில் நவம்பர் 19ம் தேதி பிறந்தார் இலீன் காலின்ஸ். விமானங்கள் கட்டுமானம், பராமரிப்பு என்று எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கி வரும் பகுதி எல்மிரா. 1890ம் ஆண்டிலிருந்தே இதே தொழிலில் இப்பகுதி ஈடுபட்டு வந்துள்ளதால், காலின்சுக்குச் சிறு வயது முதலே விமானத்தில் பறக்க ஆசை பிறந்தது.

இவருக்கு 9 வயதானபோது, இவரது பெற்றோர் விவாகரத்தில் பிரிந்து விட்டனர். மனம் ஒடிந்தார் காலின்ஸ். போராடி வெற்றி காண்பதில் சிறு வயது முதலே பயிற்சி மேற்கொண்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேல்படிப்பு படிக்க பணம் இல்லை. 16 வயதில் வேலைக்குச் சேர்ந்தார். ஆயிரம் டாலர் சேர்த்தார். 1974ம் ஆண்டு நியூயார்க்கில் எல்மிரா அகடமியில் சேர்ந்து, கணித பாடத்தில் பட்டம் பெற்றார்.

கார்னிங் கம்யூனிட்டி காலேஜில் அறிவியல் கற்றுத் தேர்ந்தார். 1978ம் ஆண்டு சிராகுஸ் பல்கலை.,யில் சேர்ந்து கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற் றார். ஸ்டான்போர்டு பல்கலை.,யில் 1986ம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் பெற்றார். விண்வெளி இயக்கம் மற்றும் நிர்வாகம் குறித்து வெப்ஸ்டர் பல்கலை.,யில் 1989ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். இப்படி படிப்படியாக உயர்ந்தபடியே, "பைலட்' பயிற்சியும் மேற் கொண்டார். அதில் தான் இவர் வித்தியாசம் தனித்துவமாக மாறியது.

<img src='http://www.dinamalar.com/2005aug14sundayspecial/SS-%2006C.jpg' border='0' alt='user posted image'>


<b>படிப்பு:</b> கடந்த 1979ம் ஆண்டு ஓக்லஹாமாவில் பைலட்டுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து விமானப் படை இளநிலை பைலட்டாகத் தேர்ச்சி பெற்றார். 1982ம் ஆண்டு வரை, அதே பயிற்சி மையத்தில் சிறு ரக விமானத்தின் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 1983 முதல் 85 வரை, கலிபோர்னியாவில் உள்ள டிராவிஸ் நிறுவனத்தில் அதிக இருக்கைகள் கொண்ட விமானத்திற்கான கமாண்டராகவும், விமான ஓட்டுநர் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 1986ம் ஆண்டு வரை ஏர் போர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பயிற்சி மேற் கொண்டார். 86 முதல் 89 வரை, கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப் படை அகடமியில் சேர்ந்து பணியாற்றினார். அங்கு கணக்குப் பாடத்திற் கான துணை விரிவுரையாளராகவும், டி41 விமானத்திற்கான விமான ஓட்டுனர் பயிற்சியாளராகவும் பணியற்றினார். கலிபோர்னியாவில், விமானப்படை ஓட்டுனர் பள்ளியில் விண்வெளி வீரர் பயிற்சி மேற் கொண்டார்.

1990ம் ஆண்டு வரை இங்கு பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான "நாசா'விற்கான விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

அதற்குக் காரணம் மொத்தம் 5000 மணி நேரம் , அதுவும் 30 ரகவிமானங்களில் பறந்த அனுபவம் உண்டு. அத்துடன் 419 மணி நேரம் விண்வெளி ஓடத்தில் தங்கி பறக்கும் முன்பயிற்சி பெற்றவர்.

இவர் கணவர் வர்த்தக பைலட் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


<b>பயிற்சியும், சாதனைகளும்:</b> கடந்த 1991ம் ஆண்டு விண்வெளி வீரர் குழுவில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அபார திறனால், மிக வேகமாக வளர்ந் தார். பூமியைச் சுற்றி வரும் விண்கலத்தை வடிவமைப்பதில் பயிற்சி பெற்றார். விண்வெளி வீரர்களைத் தயார் செய் யும் பணியில் ஈடுபட்டார்.

விண்கலத்தை இயக்கும் வல்லுனர் ஆனார். விண்கலத்தை பூமியிலிருந்து கிளப்புவது முதல், பிரச்னைகள் ஏற்பட்டால் திறம்படச் சமாளிப் பது வரை அனைத்தையும் கையாண் டார். "ஸ்பேஸ்கிராப்ட் கம்யூனிகேட்டராக'வும் பணியாற்றினார்.

நாசாவில் வேகமாக வளர்ந்து, விண்வெளி செல்லவும் தயாரானார். 1995ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ஏவப்பட்ட விண்கலத்தில் பைலட்டாகப் பயணித்தார். விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ரஷ்யாவின் "மிர்' நிலையத்திற்குச் சென்று வந்தார். விண்வெளிக்குப் பறந்த முதல் பெண் பைலட் இவர் என்ற பெருமை பெற்றார். அதனை அடுத்து, 1997ம் ஆண்டு மே 15ம்தேதி விண் ணுக்குச் சென்ற விண்கலத்திலும் பயணித்தார். அதன் பிறகு, 1999ம் ஆண்டு கொலம் பியா விண்ணுக்குச் சென்றது. அதில் விண்கலம் மற்றும் அதில் பயணிக்கும் குழுவின் ஒட்டுமொத்த கட்டுப் பாட்டையும் கையிலேந்திச் சென்று, வெற்றிகரமாக கொலம்பியாவைக் கீழிறக்கினார்.

ஒட்டுமொத்த கட்டுப் பாட்டை ஏற்ற முதல் பெண் விண்வெளி வீரர் என்ற சாதனையை இம்முறை நிகழ்த்தினார்.

இப்போது, ஏழு விண்வெளி வீரர்களை ஏந்திச் சென்ற டிஸ்கவரியையும் இயக்கி, குழுவிற்கும் தலைமை ஏற்று சாதனையைத் தொடர்கிறார்.

<b>சொந்த வாழ்க்கை:</b> இவ்வளவு "உயரே' பறக்கும் இவர் படிப்பு முழுதும் "ஸ்காலர்ஷிப்'பில் தான் நடந்தது. இவரது வாழ்க்கை குறித்து இவரே சொல்கிறார்: "சிறு வயதிலேயே விண் வெளி வீரர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். எல்லாருமே ஆண்களாகவே தானே உள்ளனர், ஏன் பெண் களே இல்லை என்று யோசிப்பேன். ஆனால், அதற்காக மனசெல்லாம் வருந்தியதில்லை.

என் அம்மா எங்களை விட்டுப் பிரிந்தது எனக்குப் பேரடியாக விழுந்தது. என் தந்தையும் வேலையை இழந்ததால், சாப்பாட்டுக்கே சிரமப்பட்டோம். திக்கித் திணறி பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள முயன்றேன். ஆனால், அங்கே ஏகப்பட்ட ஆசிரியர்கள் பயிற்சிக்காகக் காத்திருந்தனர். மனம் மாறி, பைலட்டாக பயிற்சி மேற்கொண்டேன். 19வது வயது தான் எனக்குத் திருப்புமுனை. அதன் பிறகு அனைத்துமே திட்டமிட்டபடி நடந்தன. 1974ம் ஆண்டு பெண் ராணுவ பைலட்டுகள் தேவை என்ற விளம்பரத்தை பேப்பரில் படித்தேன். சரியான நேரத்தில் சரியான சந்தர்ப்பம் அமைந்தது.

ஆனால், என் சக பைலட்டுகள் மனைவிகள் என்னிடம் தகராறு செய்தனர். பைலட் உடையில் நான் அவர்களுடன் வேலை செய் வதை அவர்களுடைய மனைவியர் விரும்பாமல், என்னை ராணுவத்திலிருந்து வெளியேற்றத் துடித்தனர். இதனால் எனக்கு நண்பர்கள் இழப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. என்னுடன் உண்மையாகப் பழகியவர்கள் மட்டும் இன்னும் நண்பர்களாகவே பழகியபோது மனதில் உறுதி பிறந்தது. மிக நேர்மையாக, வெளிப்படையாக இருக்க முடிவு செய்தேன். யாருடனும் அனாவசியமாக ஊர் சுற்றுவதில்லை என்பதை மிக நேர்மையாகத் தெளிவுபடுத்தினேன். இறுதியில் என்னைச் சந்தேகித்தவர்களே என்னுடன் நண்பிகளாகப் பழகத் துவங்கினர்.

கலிபோர்னியாவில் சரக்கு விமான ஓட்டுநராக இருந்தபோது 1983ம் ஆண்ட பேட் யங் என்ற பைலட்டைச் சந்தித்தேன். இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இப் போது எனக்கு இரண்டு குழந்தைகள்.

முதன்முதலில் விண்ணுக்குப் பறந்தபோது என் முதல் குழந்தை நான் நிலவுக்குச் செல்கிறேன் என்று நினைத்தாள். அவள் வளர வளர அவளுக்கு எல்லாவற் றையும் புரிய வைத் தேன். இன்னும் கூட சில குழந்தைகள் "விண் வெளியில் கடவுளைப் பார்க்கிறீர்களா?' என்று கேட்கின்றனர். அவர்களுக்கும் எளிமையான முறையில் விவரங்களை எடுத்துச் சொல்கிறேன்.


எப்படி இந்த அசாத்திய திறமை சாத்தியமானது? "பயிற்சி... பயிற்சி... பயிற்சி தான்! நாம் செய்யும் வேலை குறித்து 100 சதவீதம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். நம்பிக்கையுடன் வேலை செய்ய இது மிக மிக அவசியம். விண்வெளி ஆராய்ச்சி, விண்கலத்தில் பயணிப்பது போன்ற வேலைகளில், ஒரே ஒரு துளி சந்தேகம் இருந்தால் கூட, நாம் அந்தப் பணியைத் தொடக் கூடாது. மீறித் தொட்டு விட்டால், அடுத்த நொடி மரணத்தைத் தழுவ வேண்டியது தான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை முற்றிலுமாக உணர்ந்தவராக இருப்பது தான் என் வேலைக்கான சவால். இதற்கு கடுமையான பயிற்சி முக்கியம். சிறு வயது முதலே போராட் டத்தை வெற்றி கொள் ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டேன். விண் வெளி பயணத்தில் வீரர்கள் அணியும் உடையே கவசம் போன்றது. அதில் தான் நாங்கள் இயக் கும் கருவிகளும் அதற் கான உபகரணங்களும் இருக்கும். விண் வெளி ஓடம் புறப்படும் போது ஏற்படும் சத்தம், மற்றும் ஒளி , அதற்குப்பின் புவிஈர்ப்பை விட்டு முற்றிலும் புதிதாக நாங்கள் ஆற்றும் பணிகள் ஆகியவை எல்லாமே சவால் நிறைந்தவை. இப்படி விவரிக்கும் காலின்சின் வாங்கிய பரிசுகளும், சான்றிதழ்களும் ஏராளம்.

<b>விருதுகள்:</b>
<b>"டிபென்ஸ் சுப்பீரியர் சர்வீஸ் மெடல்:'</b> அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் ராணுவத்தில், முக்கியப் பொறுப்பில் திறம்படச் செயலாற்றுவோருக்கான விருது. மூத்த அதிகாரிகளுக்கும், மேலதிகாரிகளுக்கும் வழங்கப்படும் விருது இது.

<b>"டிஸ்டிங்விஷ்டு பிளையிங் கிராஸ்:'</b> அமெரிக்க ஆயுதப் படைக்கு உதவியாக விமானத்திலிருந்து தாக்குதல் நடத்துவோருக்கு வழங்கப்படும் விருது. ஹீரோ போன்று அசாதாரண முறையில் சிறப்பாகச் செயலாற்றிய வகையில் காலின்சுக்கு இந்த விருது வழங்கப் பட்டது.

<b>"டிபென்ஸ் மெரிடோரியல் சர்வீஸ் மெடல்:'</b> அமெரிக்க ராணுவத்தில் மிக உயரிய விருதுகளில் மூன்றாவதாக வழங்கப்படும் விருது இது.

"<b>கமாண்டேஷன் மெடல்:'</b> ராணுவப் பணியில் ஈடுபடும்போது எதிரிகளை நேரடியாகத் தாக்கி வெற்றி கொள்வோருக்காக வழங்கப்படும் இடைநிலை விருது இது.

<b>"ஆர்ம்டு போர்சஸ் எக்ஸ்பெடிஷனரி மெடல்:'</b> அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியால் தோற்றுவிக்கப் பட்ட விருது இது. ராணுவத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் சிலருக்கென ஒதுக்கப்படும் விசேஷப் பணியிலும் சிறப்பாகப் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட விருது.

<b>"லெஜன் ஆப் ஆனர்:' </b>வீரதீரச் செயலுக்காக பிரான்ஸ் நாடு வழங்கிய விருது.



காலின்ஸ் பெயரில் சர்வதேச விமான நிலைய நுழைவாயில்: இத்தனை விருதுகள் வாங்கியவரின் பெயரில் இப்போது ஒரு விமான தளமும் இயங்குகிறது. சிராகுஸ் ஹான்கான் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில், காலின்ஸ் பெயரில் நிறுவப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமைகளைப் பெற்ற காலின்சின் சாகசத்தை விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களே வாய் ஓயாமல் பாராட்டுகின்றனர். நாமும் சேர்ந்து பாராட்டுவோம்! </span>

Dinamalar.com

http://www.dinamalar.com/2005aug14sundayspecial/p6.asp

Print this item

  வாழ்க்கை
Posted by: Jenany - 08-18-2005, 07:38 AM - Forum: கவிதை/பாடல் - Replies (21)

[size=18]வாழ்க்கை

என் பள்ளி நண்பன் போல
முகச்சாயல் உள்ள
சிறுவனை கடக்கும்போது......

குழந்தைகளின்
மழலை விளையாட்டில்
என் பால்ய தோழியை
அடையாளம் காணும்போது....

கோயில் வாசலில் பூ விற்கும்
முதிய யுவதியில் முழுமையாக
என் அன்னையைச்
சந்திக்கும்போது......

மீண்டும் மீண்டும்
வாழ்ந்து மகிழ்கிறேன்
இழந்த உறவுகளோடு
கண்மூடி சில சமயம்
என்னையும் மறந்து!

நன்றி: பிரேம பிரபா

Print this item

  சுனாமியால் மூழ்கிய தீவு
Posted by: kuruvikal - 08-18-2005, 06:22 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (18)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40693000/gif/_40693326_spain_spartel2_map203.gif' border='0' alt='user posted image'>

சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் அத்திலாண்டிக் கடற்பிராந்தியத்துள் மூழ்கிப் போன ஒரு தீவு (Spartel Island) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..! இப்போ அது கடல் மட்டத்தில் இருந்து 60 மீற்றர்கள் ஆழ்த்தில் இருப்பதாக பிரஞ்சுப் புவியியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்..!

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4153008.stm

Print this item

  வாசகர்கள் கவனத்திற்கு
Posted by: malaravan - 08-18-2005, 05:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

எமது தொடரில் குறிப்பிட்டதுபோன்று சந்திரிகா தனது குடும்ப அரசியலுக்காக கதிர்காமரை கொலைசெய்திருக்கலாம் எனக்குறிப்பி டட்டிருந்தோம். நினைவிருக்கின்றதா? வாசகர்களே!. எமது ஊகம் சரியானதாக இருக்கும் என நீங்கள் இப்போ நம்புகின்றீர்களா? நாம் முன்சொன்ன ஆய்வின் சில கருத்துக்களை உங்கள் பார்வைக்கு கீழே வைக்கின்றோம் இப்போ. இருப்பினும் நாம் எமது அடுத்த ஆய்வில் இறங்குகின்றோம். தொடர்ந்து படியுங்கள்.
சென்ற தேர்தலில் பிரதமமந்திரி பதவிக்காக கதிர்காமரின் பெயர் முன்மொழியப்பட்டது.
சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்குப்பெற்று வந்தமை
:twisted: :!: சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்காவின் செல்வாக்கு கட்சிக்குள் இல்லாது போனமையும், அரசியலில் அவரை கோமாளியாக சக உறுப்பினர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு மாறியமையும் :twisted: :!: :?:
அமெரிக்காவை புறம்தள்ளி இந்தியாவுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கியமையும் சந்திரிகாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியமை
பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் அமைச்சர் கதிர்காமருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள்

நன்றி

மலரவன்
www.tamilkural.com

Print this item

  புலிகள் எச்சரிக்கை!
Posted by: hari - 08-18-2005, 03:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (15)

<b>புலிகள் இயக்கப் போராளி கோபி
கடத்தப்பட்டதாக புலிகள் கண்டனம்
விடுவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை! </b>

இணுவில் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகிய கோபி என்பவரை பொலீஸார் கைதுசெய்திருப்பதற்குப் புலிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக் கின்றனர். யாழ்ப்பாணம், கலட்டிப் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் தங்கியிருந்த சமயம் நேற்றுக் காலை திடீரென வந்து வீட்டை முற்றுகையிட்ட பொலீஸாரும் படையினரும் அவரைக் கடத்திச் சென்றிருக்கின்றனர் என்று விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் துறையினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். போராளி கோபியை உடனடியாக விடுக்காவிட்டால் கடும் நட வடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் புலிகள் எச்சரித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல்துறையினர் விடுத் திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
போராளி கோபி கடத்தப்பட்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறையினர் போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய் திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பட்டமான ஒரு போர் நிறுத்தமீறல் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று புதன்கிழமை 17.08.2005 காலை 08.30 மணியளவில் ஒரு கையை ஏற்கனவே இழந்து சுகவீனமுற்றிருந்த எமது இயக்க உறுப்பினராகிய கோபி எனப்படுபவர் விடு முறையில் தனது பெற்றோருடன் யாழ்ப் பாணம், கலட்டியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளையில் ஸ்ரீலங்கா படையின ராலும் பொலீஸாரினாலும் கடத்தப்பட்டுள் ளார். புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா படை யினராலும், பொலீஸாரினாலும் இவரது வீடு சுற்றிவளைக்கப்பட்டு, துப்பாக்கிப் பிரயோ கம் மேற்கொள்ளப்பட்டு இவரது குடும்பத்த வர், அயலவர் முன்னிலையில் கோபி அவ ரது வீட் டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்காப் படைபினராலும், பொலீஸா ரினாலும் மேற்கொள்ளப்பட்ட இக்கடத் தலை யாழ்.மாவட்ட அரசியல்துறையினர் வன்மையாகக் கண்டிப்பதோடு, இது அப் பட்டமான போர்நிறுத்த உடன்படிக்கை மீற லாகவும் உள்ளது என போர்நிறுத்த கண் காணிப்பு குழுவினரிடம் கையளிக்கப்பட்ட தமது கண்டனத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகப் படையினரும், பொலீஸாரும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது உள் நோக்கத்துடன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதைப் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் கவனத் திற்கு ஏற்கனவே யாழ்.மாவட்ட அரசியல் துறையினர் கொண்டு வந்திருந்தனர். வேண்டு மென்றே, திட்டமிட்ட வகையில் போர்நிறுத்த உடன்படிக்கையை வலுவற்றதாக்கும் உள் நோக்குடனேயே ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கோபியைக் கடத்திய சம்பவம் அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப் பினராகிய கோபி அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படாது விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு விடு தலைப் புலிகள் தள்ளப்படுவார்கள் என்பதை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: உதயன்

Print this item

  குண்டாக வருவதற்கு சில உணவு டிப்ஸ்...
Posted by: அனிதா - 08-17-2005, 09:18 PM - Forum: மருத்துவம் - Replies (54)

[size=18]<b>குண்டாக வருவதற்கு சில உணவு டிப்ஸ்...

<img src='http://img307.imageshack.us/img307/9093/756em.jpg' border='0' alt='user posted image'>

[b]ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....

தினசரி நீங்கள் சாப்பிடும் உண வில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம் பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும். கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரி யுள்ளவற்றை சாப்பிடவும்.
சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வ தற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.
நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள்.

குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும். ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது</b>.

Print this item

  கோழி வடை
Posted by: Rasikai - 08-17-2005, 09:10 PM - Forum: சமையல் - Replies (71)

<b>கோழி வடை</b>

<b>தேவையான பொருட்கள்</b>

கோழிக்கறி - 250 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
வெங்காயம் - 2 ( பெரியது)
பச்சைமிளகாய் - 6
முருங்கைக்கீரை - கைப்பிடியளவு
இஞ்சி , பூண்டு அரைத்தது சிறிதளவு
தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய்

<b>செய்முறை</b>

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை 1/2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து வைக்கவும் எலும்பில்லாத கோழியை அவித்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும். முருங்கைக்கீரை, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
கோழிக்கறி, கீரை , பருப்பு இஞ்சி, பூண்டு அரைத்தது, வெங்காயம் , பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் உப்பு சேர்த்து வடைகளாக தட்டி வைக்கவும். அப்புறம் எண்ணை கொதித்ததும் வடையை போட்டு பொன்னிறமாகும் வரையும் பொரித்து எடுக்கவும்.

Print this item