Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 415 online users.
» 0 Member(s) | 413 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,432
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,540
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  மீண்டும் தேன்நிலவு சந்திரிகா ஜே.வி.பி
Posted by: வியாசன் - 08-19-2005, 06:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

;சிறீலங்கா அரசிற்கு சிங்கள இனவாதக் கட்சியான ஜேவிபி மீண்டும் ஆதரவை வழங்க இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை இழந்திருந்த அரசிற்கு ஜேவிபியின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் தலைமையில் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியயோர் இந்த முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது

கதிர்காமர் கொல்லப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்னர் சுதந்திர கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளரான தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஜே.வி.பியினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மகிந்;த ராஜபக்சவிற்கான தமது ஆதரவை ஜே.வி.பி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பினை லக்ஸ்மன் கதிர்காமரே ஏற்பாடு செய்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ஜே.வி.பியினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த முயற்சிகள்; குறித்து அரசுத் தலைவர் சந்திரிகாவி;ற்கு தெரியப் படுத்தப்படாமல் இரகசியம் பேணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது

இதனை தொடர்ந்தே அரசுத் தலைவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமரின் படுகொலையின் பின்னணயில் உள் வீட்டு சதி இடம்பெற்றிருக்கலாம் என்பது குறித்து பலமான சந்தேகம் எழுவதற்கு இந்த நடவடிக்கைகளே காரணம் என்று புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுட்டது சங்கதியிலிருந்து

Print this item

  கதிர்காமரின் கொலையும், சந்திரிகாவின் நிலையும். பகுதி 4
Posted by: malaravan - 08-19-2005, 04:32 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது.

கட்டுரைக்குள் போகமுன்....

எமது தொடரில் குறிப்பிட்டதுபோன்று சந்திரிகா தனது குடும்ப அரசியலுக்காக கதிர்காமரை கொலைசெய்திருக்கலாம் எனக்குறிப்பிட்டிருந்தோம். நினைவிருக்கின்றதா? வாசகர்களே!. எமது ஊகம் சரியானதாக இருக்கும் என நீங்கள் இப்போ நம்புகின்றீர்களா? நாம் முன்சொன்ன ஆய்வின் சில கருத்துக்களை உங்கள் பார்வைக்கு கீழே வைக்கின்றோம் இப்போ. இருப்பினும் நாம் எமது அடுத்த ஆய்வில் இறங்குகின்றோம். தொடர்ந்து படியுங்கள்.

1.சென்ற தேர்தலில் பிரதமமந்திரி பதவிக்காக கதிர்காமரின் பெயர் முன்மொழியப்பட்டது.

2.சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்குப்பெற்று வந்தமை.
ஜஉழடழசசிறீசநனஸ
3.சந்திரிக்காவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்காவின் செல்வாக்கு கட்சிக்குள் இல்லாது பொனமையும், அரசியலில் அவரை கோமாளியாக சக உறுப்பினர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு மாறியமையும்;ஜஃஉழடழசஸ

4.அமெரிக்காவை புறம்தள்ளி இந்தியாவுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கியமையும் சந்திரிகாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியமை

5.பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் அமைச்சர் கதிர்காமருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள்

வணக்கம் வாசகப்பெருமக்களே! சென்ற எமது கட்டுரையில் மேலே கூறப்பட்டவையை குறிப்பிட்டிருந்தோம் சந்திரிகா தனது குடும்ப அரசியலை கதிர்காமரின் கொலைக்குப்பின்னர் அழகாகச்செய்வார் என்று. ஞாபகம் இருக்கின்றதல்லவா?. எமது எண்ணத்தைப்போன்று கதிர்காமரின் கொலைக்குப்பின்னர் தனது சகோதரனின் அரசியல் பிரவேசத்தை மிகவும் விரையாக செயலாற்றியிருக்கின்றார் அல்லவா? எமது ஊகம் பொய்க்கவில்லை பார்த்தீர்கள் அல்லவா?. இக்கொலையை அவர்கள் செய்திருப்பதில் உள்ள உண்மைத்தன்மையை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். இருப்பினும் நாம் சொன்னது போன்று ஜேவிபியும், சிங்கள உறுமயாவும் இக்கொலையை செய்திருப்பதற்கான காரணத்தை இப்போ நோக்குவோம்.

1970களில் ஜேவிபி தனது ஆக்ரோசமான கிளர்ச்சியின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பிரசித்திபெறத்தொடங்கியது. தொழிலாளர் புரட்சியைக் கையில் எடுத்து அப்பாவிச்சிங்கள மக்களை தம்பக்கம் ஈர்த்து தமது எழுச்சியை அரங்கேற்றத்தொடங்கிய நேரம். அப்போ திருமதி சந்திரிகாவின் தாயார் சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசியலில் பிரதமராக இருந்த வேளை அவரின் ஆட்சியையே ஆட்டம் காணவைத்தார்கள். அவ்வேளையில் பிரதமமந்திரியின் கையில் தான் சகல நிறைவேற்று அதிகாரங்களும் இருந்தது. தற்சமயம் சந்திரிகாவின் கையில் அதிகாரம் இருப்பது போன்று தாயாரின் கையில் அதிகாரங்கள் இருந்தவேளை ஜேவிபியை அடக்கி ஒடுக்கவேண்டிய தேவையை சிறீமாவோ அன்று உணர்ந்தார். அன்றைய கணக்கின்படி கிட்டத்தட்ட அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் ஜேவிபி என்கின்ற சந்தேகத்தின் பெயரில் சுட்டும்,வெட்டியும் கொல்லப்பட்டு தன்னுடன் கூடவிருந்த ஒருவனாலேயே ஜேவிபித்தலைவனான றோகண விஜயவீரா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அத்துடன் அவன் சிறையில் இருந்து விடுபடும்மட்டும் ஜேவிபி தனது சோபையை இழந்து கட்சியை நடாத்த யாருமற்று தவிர்த்து மீண்டும் ரோகண விஜய வீராவின் விடுதலைக்குப்பின் மீண்டும் புத்துணர்ச்சிபெற்று 1987 மட்டில் மீண்டும் தனது புரட்சியை ஆரம்பித்தது. அன்றைய ஜனாதிபதியாகிய பிரேமதாசாவின் கடும்போக்கால் கிட்டத்தட்ட ஒருஇலட்சத்தி முப்பதாயிரம் சிங்கள இளைஞர்களைப்பலிகொண்டதோடு அதன் தலைவர் ரோகணவிஜயவீராவும் கைதுசெய்யப்பட்டு 1989 நவம்பர் மாதமட்டில் அன்றைய இரவே சுட்டும் கொள்ளப்பட்டார். அதன் பின் இன்றைய ஜேவிபிதலைவரான சோமவன்ச இலண்டனுக்கு தப்பியோடி அங்கே அடைக்கலம்புகுந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அத்துடன் ரோகண விஜய வீராவின் மனைவியினை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதன்பின்னர் நாம் ஜேவிபியினர் எனச்சொல்லவே அனைவரும் பயந்தனர். காரணம் ஆட்சி செய்தவர்கள் யுஎன்பியினர். மீண்டும் சுதந்திரக்கட்சி ஆட்சியைக்கைப்பற்றியபின் 1994களில் இலங்கைவந்து தமது அரசியல் பிரவேசத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களுடன் அன்றிருந்த ஒருவரே சிங்கள உறுமயவைத்தோற்றுவித்து மூன்று வருடங்களின் பின் அது தானாகவே கலைக்கப்பட்டு இப்போ ஜாதிக கெல உறுமயாவாக தோற்றம் கண்டிருக்கின்றது. அதன் தலைவரான எல்லாவெல மேதானந்த தேரர் படுசுத்தமான ஓர் சிங்கள வெறிபிடித்த இனவெறியர். இவ்விரண்டு கட்சிகளும் தமிழனையும், தமிழனுக்கு ஆதரவாக யார் பேசினாலும் பகிரங்கமாக எதிர்ப்பதுடன் தமது எதிர்ப்புணர்வுகளை இலங்கையில் உள்ள வெளிநாட்டு து}தராலயங்களுக்கும் தெரிவிப்பார்கள். அவர்கள் தெரிவிக்கும் முறையே தனிப்பாணியாக இருக்கும். இவரினதும், ஜேவிபியினதும் கூட்டு நடவடிக்கையாக கதிர்காமரை அவர்கள் போட்டுத்தள்ளியிருக்கலாம். காரணம் கதிர்காமர் ஜேவிபியை தமது ஆளும் கட்சி எது சொன்னாலும் கேட்டுக்கொண்டு தலையாட்டும் ஓர் பொம்மைபோன்று நினைத்திருந்தார். அதன் நம்பிக்கையில் அமெரிக்காவில் இலங்கை அரசாங்கம் பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திட்டு புலிகளுடன் சமாதானப்பேச்சில் ஈடுபடும் வண்ணமும், அதற்கு ஜேவிபி முரண்பாடாக இருக்கின்றதா? எனவும் கேட்டிருந்தார்கள். அப்போ தமது சொல்லுக்கு ஆடும் ஓர் கட்சியாக ஜேவிபியை நினைத்து அனைவரும் ஒற்றுமையாக இயங்குவதாகவும், விடுதலைப்புலிகள் சும்மா விசமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் குறியிருந்தார். ஆனால் அவர் அமெரிக்காவில் அப்படிக்கூறிவிட்டு இலங்கை திரும்பமுன்னர் ஜேவிபி ஆளும் கட்சியிலிருந்து விலகியதுடன், தமது அமைச்சர்களையும் இராஜினாமாச்செய்ய வைத்திருந்தார்கள். இதன் அடிப்படையிலும் கதிர்காமருக்கும் ஜேவிபிக்கும் கருத்து முரண்பாடுகள்இருந்தன. ஆரம்பத்தில்; சிங்கள உறுமயாவாக இருந்த ஜாதிக கெல உறுமயா அடிப்படையில் தமிழின எதிர்ப்பாளர்கள். இவர்களுக்கு அரசியல் நோக்கம் என்பது கிடையாது. ஆனால் தமிழனை எதிர்ப்பதே அவர்கள் நோக்கம். அந்த வகையில் அவர்கள் ஜேவிபியுடன் கைகோர்த்து இக்கொலையை செய்திருக்கலாம் கதிர்காமர் தமிழன் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக. வாசகர்கள் நீங்கள் சிந்திக்கலாம். குறிபார்த்துச்சுடக்கூடிய வல்லமை அவர்களுக்கு இருந்திருக்குமா? என்று. நிச்சயமாக இருக்கின்றது. ஜேவிபியும் விடுதலைப்புலிகள் போன்று ஆயுதப்போராட்டம் செய்யாதவர்களாக இருப்பினும் முன் புலிகளுடனும் (தப்பியோடிய இராணுவம்) அரசுடனும் ஆயுதப்போர் செய்தவர்கள் தான். அவர்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களும் பாதாள உலகக்கோஷ்ரிகளும்தான். அத்துடன் சரளமாக சிங்களம் பேசும் சிங்கள இனத்தவர் என்பதால் கொலையைச்செய்துவிட்டு எடுவித பதட்டமும் இல்லாது காவலரணைத்தாண்டி சென்றிருப்பார்கள். 1970களில் இருந்து ஜேவிபிக்கு இந்தியாவை அறவே பிடிக்காது. காரணம் சிறீமாவே பண்டாரநாயக்கா ஜேவிபியினரை அடக்குவ தற்கு இந்திய இராணுவத்தை பயன்படுத்தியது. அதன் வெளிப்பாடாகவே 1987இல் இருந்து 1990 மார்ச் மாதம் வரை இலங்கையில் இருந்த இந்திய இராணுவத்திற்கெதிராகவும் இந்தியப்பொருட்களை வாங்கக்கூடதென்கின்ற பிரச்சாரத்துடனும் அவர்கள் செய்த கிளர்ச்சியினால் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா அப்பாவி சிங்கள இளைஞர்கள் உட்பட ஒருஇலட்சத்தி முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களை கொன்று இரயர்போட்டும், களனி ஆற்றிலும் வீசியெறிந்த கொடுமை இன்றும் மறக்கமுடியாதவை. அந்த வடுக்கல் மறையமுன்னர் சிறீமாவோ பண்டாரநாயக்கவின் மகள் சந்திரிகாவின் அமச்சரவையில் அங்கம் வகிக்கும் கதிர்காமர் இந்தியாவுடன் கூடிய நேசம் காட்டியமையும் அவர்களுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கலாம். அந்தவகையிலும் அவர்கள் கதிர்காமரை போடவேண்டிய தேவையிருந்திருக்கலாம். அத்துடன் அவரை போடுவதால் தமக்கான நன்மையாக இப்படி நினைத்திருக்கலாம் அது எப்படியான நன்மை.

தொடரும்.....

மலரவன் மலரினி
www.tamilkural.com

Print this item

  வலி தீர்க்கும் மருந்தாகாயோ...?!
Posted by: kuruvikal - 08-19-2005, 02:11 PM - Forum: கவிதை/பாடல் - Replies (45)

<img src='http://img367.imageshack.us/img367/4295/kuruvi8pw.jpg' border='0' alt='user posted image'>

<b>மலராகி மணம் பரப்பியவள்
மலரும் நாட்களுக்குள் மறைந்த போது
மரணம் வாசல் வருவதாய்
மனம் வலித்தது துடித்தது...!

மலரவள் மனதோடு பேசி
மயங்கிக் கிடந்தவன்
மாற்றங்கள் தந்த அவள் பிரிவில்
மாலை சுமந்தான் கண்ணீர்த்துளி கொண்டு...!

மனசுக்குள் மலர்ந்த மலர்க் கொடி
மன்னவன் நினைவுக்குள் ஒரு வசந்தக் கொடி
மலரும் காலத்தால் ஒரு நொடி
மறைந்ததும் வந்தது கொடிய நோய்...!

மலரே எனி
மறைவும் வேண்டாம் ஏமாற்றமும் வேண்டாம்
மறக்காமல் என் மடி
மலர்ந்திரு அன்பு மலராய் என்றும்...!

மரணம் என்ன மாட்சி என்ன
மலரே மன்னவன் எனக்கு எல்லாம் நீயே
மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு
மருந்தாகி வலி நீக்கி ஆயுள் காத்திட...!</b>

Print this item

  மக்களே புலிகள் - தாயகமும் புலமும் இணையுங்கள்
Posted by: kuruvikal - 08-19-2005, 08:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<span style='color:red'><b>பூநகரியில் தற்காப்பு போர்ப்பயிற்சி ஆரம்பம்...! </b>

<img src='http://www.eelampage.com/d/p/2005AUGUST/20050819004.jpg' border='0' alt='user posted image'>

தற்காப்பு போர்ப்பயிற்சி பெறும் பெண்கள்..!

சிறிலங்கா அரசு போரைத் திணித்து வருகின்ற வேளையில் எதிரிகளிடமிருந்து தாயகத்தை காக்கவும் மீட்பதற்குமாக மக்களுக்கான தற்காப்புப் போர்ப்பயிற்சி தமிழீழம் பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக பூநகரியில் பெருமளவிலானா மக்களுக்கு போர்ப்பயிற்சி நேற்று மாலை 4.15 மணியளவில் எழுச்சியுடன் ஆரம்பமானது.

தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி போர்ப்பயிற்சியை ஆரம்பித்து வைத்தார்.

முதன்மைச்சுடரினை முதற்பெண் கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணியின் தாயார் ஏற்றி வைத்தார்.

பூநகரி பிரதேச தேசிய எழுச்சிப் பேரவை தலைவர் சி.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிறைவுரையை நீதி, நிர்வாகத்துறை பொறுப்பாளர் பரா நிகழ்த்தினார்.

<img src='http://www.eelampage.com/d/p/2005AUGUST/20050819005.jpg' border='0' alt='user posted image'>

தற்காப்பு போர்ப்பயிற்சி பெறும் ஆண்கள்..!

[size=9]தகவல் - புதினம் - தேவை கருதி இங்கு இடப்படுகிறது..!</span>

<img src='http://www.sankathi.net/images/stories/August2005/swiss.jpg' border='0' alt='user posted image'>

சுவிஸ் தமிழ் தேசியப் பிரகடனத்தில் கூடிய மக்கள்...!

படம் சங்கதி..!

Print this item

  மாயமாய் வரும் கறுப்பு நாய்
Posted by: விது - 08-19-2005, 07:27 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (13)

Á¡ÂÁ¡ö ÅÕõ ¸ÚôÒ ¿¡ö...
http://www.tamilnet.dk/minnal/dog.html

தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன்

Print this item

  Pookkal
Posted by: விது - 08-19-2005, 07:22 AM - Forum: சினிமா - Replies (2)

pookkal ¾¢¨ÃôÀ¼õ ¯ÎôÀ¢ðÊ¢ø
http://www.ravi.dk/pookkal-srilanka.wmv

Print this item

  nitharsanam.com
Posted by: விது - 08-19-2005, 07:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

nitharsanam.com ±ýÉ ¿¼ó¾Ð §¿üÚ þôÀÊ[img<img src='http://img388.imageshack.us/img388/8706/nethar20lp.th.jpg' border='0' alt='user posted image'>]
þýÚ þôÀÊ[/img<img src='http://img388.imageshack.us/img388/4387/nethar15ft.th.jpg' border='0' alt='user posted image'>]

Print this item

  தீரவிசாரிக்காமல் தண்டிக்கலாமா
Posted by: inthirajith - 08-19-2005, 05:50 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

நண்பர்களே

அண்மையில் என்வாèக்கையில் நடந்த சம்பவம் ஒரு நண்பண் 20 வருட நட்பு அவனை நம்பி என்னோட கொம்ப்யூட்டர் இல் எனக்கு தெரியாத போட்டோ சூட் சிஸ்ரம் புரொக்கிராம் பண்ணவிட்டென் அவனோ என் Mநண்பர்களுடன் தப்பாக பேசி மிகப் பெரிய அவமானத்தை தந்த்துவிட்டான் அதனை புரியதநண்பர்கள் என் பேச்சை கேட்க்கவில்லை அந்த சமயதில் நான் வெளிநாட்டில் இருந்தேன் என் பக்க நியாயம் புரியவைக்க எனக்கு ந் சந்தர்ப்பம் கொடுக்கமுடியாத போது நட்பின் மீது எமாற்றம் தான் வருகிரது நண்பர்களே உமது அபிப்பிராயம் சொல்லுன்கள்

அன்புடன் இந்திரஜித்

Print this item

  தமிழுக்கு வந்த சோதனை
Posted by: ஊமை - 08-19-2005, 02:44 AM - Forum: தமிழும் நயமும் - Replies (83)

<img src='http://img385.imageshack.us/img385/6249/priyasaki1bp.jpg' border='0' alt='user posted image'>

எப்பொழுது இருந்தப்பா தமிழில் ப், ம், க், ன், த் என்றெல்லாம் சொற்களின் முனேயே வரத்தொடங்கியது. பார் பஞ்சாச்சரத்தாரிடம் தமிழ்க் கற்றேன் அந்த மனுசன் இப்படி எல்லாம் தமிழில் எழுதலாம் என்று சொலித்தரவே இல்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தமிழை தமிழாக இருக்கவிடுங்கள். ஆங்கில மோகங்கொண்டு தமிழைக் கொலை செய்யாதீர் :oops: :evil:

Print this item

  இலங்கையின் நாடாளுமன்றம் அவசரகாலச் சட்டத்தை நீடித்துள்ளது
Posted by: AJeevan - 08-18-2005, 09:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கையில் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களின் படுகொலையை அடுத்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலைப் பிரகடனத்தை ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் தீர்மானத்தை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் 124 பேர் இந்த நீட்டிப்பு பிரேரணைக்கு ஆதரவாகவும், 21 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

எதிர்க்கட்சியான் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்களுடனும் சேர்ந்து தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மலையகக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகியனவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள், மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை எதிர்த்து வாக்களித்தனர்.

தடைபட்டுப் போயுள்ள சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்த அவசரகாலச்சட்டம் பாதிப்பாக அமையும் என்றும், ஏற்கனவே அமுலில் உள்ள யுத்த நிறுத்த உடன்பாட்டை அது பலவீனப்படுத்தும் என்றும் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள், அதனாலேயே தமது கட்சி அதனை எதிர்த்து வாக்களித்ததாகக் கூறுகிறார்.

அதேவேளை நாட்டில் பல இடங்களிலும் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த உதவுமுகமாகவே தாம் இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும், ஆனால் இதனைத் தொடர்ந்து நீடிக்க முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான மயோன் முஸ்தபா கூறியுள்ளார்.

Print this item