![]() |
|
தமிழுக்கு வந்த சோதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: தமிழுக்கு வந்த சோதனை (/showthread.php?tid=3624) |
தமிழுக்கு வந்த சோதனை - ஊமை - 08-19-2005 <img src='http://img385.imageshack.us/img385/6249/priyasaki1bp.jpg' border='0' alt='user posted image'> எப்பொழுது இருந்தப்பா தமிழில் ப், ம், க், ன், த் என்றெல்லாம் சொற்களின் முனேயே வரத்தொடங்கியது. பார் பஞ்சாச்சரத்தாரிடம் தமிழ்க் கற்றேன் அந்த மனுசன் இப்படி எல்லாம் தமிழில் எழுதலாம் என்று சொலித்தரவே இல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->தமிழை தமிழாக இருக்கவிடுங்கள். ஆங்கில மோகங்கொண்டு தமிழைக் கொலை செய்யாதீர் :oops: :evil: - Nitharsan - 08-19-2005 ஊமை இது தனிப்பட்ட தாக்குதலாக கள பொறுப்பாளர்களால் கணிக்கப்படுமோ தெரியாது ஆனால். இதில இவரை மட்டுமல்ல பலர் இப்போது இப்படிதான் தமிழ் வ(i)ளர்க்கின்றனர்.... இந்த ப்....ஃ.....ம்... க்.... வில் தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பெருமை தென்னக சினிமாவிற்கே உரியது...ப்ரான்ஸ் () சில் உருவான இந்த ப்...வார்த்தை பின்னர் இப்போது ப்ரியசகி படம் வரைக்கும் நீடிக்கிறது. அதை பார்த்து பல ஈழத்தவர் பார்த்து அப்பிடியே பிரதி செய்து விடுகின்றனர். புகலிடக் குழந்தைகள் மற்றும் புகலிடத்தில் தமிழ் படிப்போரிற்க்கு தென்னக சினிமாவில் வரும் தமிழ் ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்துகின்றது....இது தமிழுக்கு வந்த சோதனை என்பதைவிட தமிழுக்கு புதிதாய் வந்த தலையிடி என்பது தான் சாலசிறந்தது. இந்த தலையிடியை மாற்றுவது கொஞ்சம் கடினமே! அதே போல தட்டச்சு செய்யும் போது சில எழுத்துப்பிழைகள் வரும் அவை திருத்தப்படவேண்டும் ஆனால்... அதை நாம் தமிழில் பிழை அல்லது தவறு என்று எடுத்து கொள்ள முடியாது. எமக்கு தெரியாமலே சில வேளைகளில் நாம் எழுத்து பிழைகளை விடலாம்...அதை சுட்டிக்காட்டும் போது அதை நாம் திருத்தவும் தயாராக இருக்க வேண்டும்.. - hari - 08-19-2005 தங்கையே..! பேசாமல் பச்சமுடன் பரியசகி என்று மாற்றிவிடுங்கள்! - Vasampu - 08-19-2005 ஏன் பிரியமுடன் பிரியசகி என எழுதினால் போச்சு. உண்மையில் மொழிப் பற்று என்பது தானாக உருவாக வேண்டும். மற்றவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக நாமும் அதனை பின்பற்றி பின் நம் தவறை மறைக்க மற்றவர் மீது பழி போடுவதால் என்ன இலாபம். தவறுகள் தட்டச்சு செய்யும்போது ஏற்படுவது வழமைதான். தவறு என்று தெரிந்த பின் அதை திருத்தாமல் விடுவதுதான் மகாதவறு. என்ன செய்வது சில விடயங்கள் தமிழரின் அடையாளங்களாகிவிட்டன!!!!!!!!!!!!!!!!!! :roll: :roll: :roll: :roll: - அருவி - 08-19-2005 சரி இனியாவது கவனிக்கிறாரா என்று பார்ப்போம் :!: - வெண்ணிலா - 08-19-2005 hari Wrote:தங்கையே..! பேசாமல் பச்சமுடன் பரியசகி என்று மாற்றிவிடுங்கள்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 08-19-2005 பாவம் பிரியசகி பிரியசகி இதை சக உறவுகளின் அறிவுரையாக எடுத்து பேரை மாத்துங்க உங்கட மனத்தை புண்படுத்துவதற்காக சொல்லப்படவில்லை சரியா :wink: :wink: - அருவி - 08-19-2005 தமிழ் இலக்கணம் என்று ஒரு பகுதியை ஆரம்பித்து தமிழ் பற்றி கொஞ்சம் அறியலாமே?! :?: :!:
- Thala - 08-19-2005 பிரியம் எண்டிறது வட மொழி. அத தமிழ் எண்டு சொல்லக்கூடது... இதை நான் வன்மையா கண்டிக்கிறன்.. :evil: (நாரதா எங்கயப்பா போட்டீயள். உங்கட வேலயை நான் பாக்கிறன்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Niththila - 08-19-2005 கடவுளே அப்ப எதுதான் சுத்த தமிழ் :?: :?: :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Thala - 08-19-2005 மலயாளியளைக் கேட்டா.. பிரேமம்---காதல், பிரேமிக்குண்ணு---காதலிக்கிறேன். பிரியம்--அன்பு,பாசம்.. இது எல்லாம் மலயாளம் எண்டு சண்டையே பிடிப்பினம். ஆனா அது எல்லாம் தமிழும் இல்லை மலயாளமும் இல்லை. வடமொழி சமஸ்கிருதம்.. பேசாம இங்கிலீஸ் காறன் மாதிரி புதுப்புதுச்சொல்லா பதிவு செய்து தமிழ்தான் எண்டுட வேண்டியதுதான்.... - Niththila - 08-19-2005 எது சரியான தமிழ் எண்டு எப்படி தல அண்ணா கண்டுபிடிக்கிறது - Thala - 08-19-2005 Niththila Wrote:எது சரியான தமிழ் எண்டு எப்படி தல அண்ணா கண்டுபிடிக்கிறது ஆராவது தமிழ்ப் பண்டிதரிட்டை கேக்க வேண்டியதுதான். இப்பெல்லாம் தமிழ் அகராதியிலயே வட சொல்லெல்லாம் போட்டு குழப்பிவிட்டுடீனம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அருவி - 08-19-2005 அண்ணா இங்கு பிரச்சினை தமிழில் எழுதிய முறைதான் - Thala - 08-19-2005 Aruvi Wrote:அண்ணா இங்கு பிரச்சினை தமிழில் எழுதிய முறைதான் அத விடுங்க வடமொழிய எப்பிடி எழுதினா எமக்கென்ன... photo வை foto எண்டும் எழுதுறமாதிரி.. போட்டோ எண்டு தமிழில எழுதிவினம்.. நிழல்ப்படம் எண்டு எத்தினபேர் எழுதப்போகினம் ஆ. - kuruvikal - 08-19-2005 ப்ரியசகி...பெயரை மாற்ற வேண்டியதில்லை... அறியாமல் இருந்ததை அறிந்து கொண்டாலே போதும்...! இப்போ ஆங்கிலம் கூட சுருங்கி குறுகி எப்படியோ ஆகிட்டுது...அண்மையில் ஒரு ஆங்கில தேசமொன்றில் இராணுவப் பயிற்சிக்கு ஆள் சேர்த்து சொந்தப் பிரஜைகளுக்கு ஆங்கில உச்சரிப்புச் சொல்லிக் கொடுத்தார்கள்...அந்தளவுக்கு ஆங்கிலம் கலங்கிப் போட்டுது....அப்படி நோக்கும் போது ப்ரியசகியின் தவறு ஒன்றும் பெரிதல்ல...! எதிர்காலத்தில் நீங்கள் பேசத் தேவையில்லை சிந்திக்க கணணி தன் மொழியில் பேசிக் கொள்ளும் அப்போ மொழிப் பிரச்சனை என்பதே இருக்காது..! மூளைக்குள் ஒரு சின்ன இலத்திரனியல் சுற்றை வைத்து இயக்கிவிட்டால் போதும்...! அதைத்தான் இப்ப கண்டுபிடிக்க வேண்டும்...ஆராய்கிறார்கள்..பிடிச்சிடுவார்கள்...! பாவிக்க நாங்க இருக்கமில்ல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- narathar - 08-19-2005 படத்தில பிரியசகி என்று பாத்ததா தான் நினைவு, முடிந்தளவு தூய தமிழ் சொற்களைப் பாவிப்பது நல்லது, பாவனையில் வரும் போது தானாக நினைவில் நிற்கும். குறிப்பாக தமிழீழ அரசு இதனை அமுல் படுத்தியும் வருகிறது,இதற்கு ஒரு புத்தகமும் வெளியிட்டதாக நினைவு.புதிய விடயங்கள் குறிப்பாக கலைச் சொற்கள்,உதாரணமாக கணனி, வரும் போது சொல் உருவாக்கத்தில் அந்த அந்த துறையினரும் ஈடுபடுவது, நல்ல சொற்களை தமிழுக்கு அறிமுகப் படுத்த உதவும்.இதற்கு பல குழுக்கள் தமிழ் நாட்டிலும்,உலகளாவிய ரீதியிலும் உள்ளன.ஈழத்திலும் இவ்வாறான முயற்சிகள் உள்ளன,கூடியவரை ஒருவரை மற்றவர் மாறி ,மாறித் திருத்துவதன் மூலம் நாங்கள் இங்கே களத்தில் நல்ல தமிழை பயன்படுத்தலாம் என்பது எனது யோசனை. இதில நானும் பிழை விடலாம் ,பிரியசகியும் பிழை விடலாம்.விட்ட பிழய திருந்தி ஏற்பவர் தான் வாழ்க்கையில் முன்னேறுவர், எனேன்றால் அவர்களே சரியானதை உள்வாங்கிக் கொள்கின்றனர். - ஊமை - 08-19-2005 மன்னிக்கவேண்டும்........ நான் யாரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்கவில்லை. அந்த நண்பர் நிச்சயமாக தனது பெயரை மாற்றவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை உண்மை நிலையினைத் தெரிந்து கொண்டால் சரி. நான் ஒன்றை மட்டும் கூறுவேன் தெனிந்திய திரைப்படத்தால் தான் நம் தமிழ்மொழி அழிந்து போய்க்கொண்டிருக்கிறது என்று மட்டும் சொல்வதற்கில்லை. நமது தமிழர்கள் தாங்கள் பிற மொழியில் பேசினால் தான் ஏனையோர் எம்மை படித்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள் என்று மதிப்பார்கள் என நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் ஒரு மொழியறிவு உள்ளவர் ஒரு பூரண அறிவு படைத்தவர் என்று கூற முடியாது. நண்பர் ஒருவர் கூறியமாதிரி பிரியம் என்ற சொல் வடமொழிச் சொல்லாகவே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நான் ஜேர்மனியில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான இணைய அரட்டைப்பக்கத்திற்குச் சென்றேன். அங்கு அவர் தனது சட்டங்கள் , கட்டுப்பாடுகளை எழுதிவிட்டு முடிவில் ப்ரியமுடன் என்று தனது பெயரை எழுதியிருந்தார். உண்மையிலே அவர் ஒரு வயது கூடியவர். அத்தோடு தமிழை நன்கு படித்தவர். அவரே இப்படி தமிழை திசை மாற்றும் போது நாம் சிறிசுகளிடம் குறைப்பட்டு என்ன செய்வது. அந்த இணைய அரட்டையரங்கத்திற்கு பெரும்பாலும் சிறுவர்களும், சிறுமிகளுமே பெருமளவில் செல்வதுண்டு. எனவே இங்கு பிறந்து இப்பொழுது தான் தமிழைக் கற்றுவரும் சிறார்கள் அவற்றைப்பார்த்து அதுவும் தமிழ் என்று அதனையும் அப்படியே கற்றுவிட சந்தர்ப்பங்கள் உள்ளன. இதனை நான் பலமுறை இப்படி படம் மூலம் அந்த இணைய உரிமையாளருக்குச் மின்னஞ்சல் ஊடாக தகவல் தெரிவித்தும் அதில் மாற்றம் ஏதும் இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உண்மையில் வெளிநாடுகளிலே வாழுகின்ற பெரும்பகுதி தமிழர்களிடம் இப்படியான தங்கிலீசு பரவிய வண்ணமே இருக்கிறது. இதில் நகைப்புக்கு உரியது என்னவென்றால் இங்கு சிறிய பிள்ளைகள் வெளிநாட்டு மொழிகளே அதிகம் படிப்பதால் அவர்களின் உச்சரிப்புத் தன்மை வெளிநாட்டுப் பாசைகளுக்கு எற்ற மாதிரி அமைந்துவிட்டது. ஆனால் அவர்களின் பெற்றோர்கள் நிச்சயமாக இலங்கையில் இருந்து தான் வந்திருப்பார்கள் அவர்களும் இப்போது அப்படி கொன்னை தட்டியே தமிழ் பேசுவது எமக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. உண்மையில் இலங்கையிலும் கூட இன்று வன்னி ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் சிறுவர்களும், பெரியவர்களும் தமிழ் பேசுவது போன்று நான் முன் எப்போதும் அங்கு அப்படிப் பார்க்கவேயில்லை. சில சில திசைச் சொற்கள் அவ்வப்போது பாவிக்கப்பட்டாலும் அங்கு தான் தமிழ் கட்டிக் காப்பாற்றப்படுகிறது. உதாரணத்திற்குப் பாருங்கள் ஒரு வெளிநாட்டவன் தனக்குரிய பாசையிலே தான் பேசுகிறான். உதாரணத்திற்கு ஜேர்மன்காரர்களை எடுத்துகொண்டால் அவர்கள் எந்த வெளிநாட்டவர் என்றாலும் அவர்களுடன் தமது பாசையில் தான் பேசுவார்கள். வெளிநாட்டவர்களுக்கு எமது பாசை தெரியுமோ தெரியாதோ என்று கவலைப்படமாட்டார்கள். ஜேர்மன் மொழியிலும் திசைச்சொற்கள் தாராளமாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் மொழியிலே தான் கதைப்பார்கள். ஆனால் தமிழருக்கோ சாபக்கேடு மாதிரி.. தாராளமாக தமிழ் மொழி இருக்கும் போது அதனைப்பேசாது. வெளிநாட்டு மொழியை கொன்னை தட்டி கொன்னை தட்டி தமிழருடன் பேச முற்படுவது எமக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது. இது முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். - Niththila - 08-19-2005 உங்கட கருத்துக்கு நன்றி அண்ணா நானும் இனி இயலுமான வரை தமிழர்களிடம் தமிழ் பேசுறன் - Nitharsan - 08-19-2005 <img src='http://www.nithiththurai.com/name/cover.jpg' border='0' alt='user posted image'> இங்கே தூய தமிழ் பெயர்கள் உள்ளது http://www.nithiththurai.com/name/index1.html எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது. நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின்் பெயர்களாக இருந்தன. பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர்் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது. எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர். அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க. (1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க. (2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை, தூஷpத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது. (3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம். (4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம் என்பது எருமை எனப்பொருள்படும். (5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம். பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத் தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத் தவறிவிடுகின்றனர். தமிழ் வடமொழி கருங்குழலி கிருஸ்ணவேணி காரரசி கிருஸ்ணராணி காரரசன் கிருஸ்ணராசா பொன்னடியான் கனகதாஸ் ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ். ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ் சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ. கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா, ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி. பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச் சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப் பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும். CHRIS SILVERWOOD - (SILVER- வெள்ளி. WOOD- மரம்) இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97. TIGER WOOD - (TIGER - புலி. WOOD - மரம்) அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997. LIANE WINTER - (WINTER - குளிர்காலம்) செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.் DR. LE. DE. FOREST - (FOREST - காடு) FILL எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923 ALEXANDER GRAHAM BELL - (BELL - மணி) தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876. COLT - (COLT - ஆண்குதிரைக்குட்டி) ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837. ADAM SMITH - (SMITH - கொற்றொழிலாளி) பழம் பெரும் பொருளியலறிஞர். GARY BECKER - (BECK - மலையருவி) 1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர். SIR RICHARD STONE - (STONE - கல்) 1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர். FREDERICK NORTH - (NORTH - வடக்கு) இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805. SIR ROBERT BROWNRIG - (BROWN - மண்நிறம்) இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820 STERN SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்) இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997. ROBIN COOK - (ROBIN - ஒருவகைப் பறவை. COOK - சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997. DR. LIAM FOX - (FOX - நரி) இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997. மேலும் சில பெயர்கள் :- ONION, SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDER பொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும் இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும். தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும் எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப் பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம். சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை ஆக்கியுள்ளோம். முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும் அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ், பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம். பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற் பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம். மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" - மக்கட்பெயர் 46இ000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25இ000 பெண்பாற் பெயர்களையும் 21இ000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்ள முன்மொழி, பின்மொழிகளைக்கொண்டு பொருள் பொதிந்தனவும் வழுவற்றனவும் ஒலிநயமுடையனவுமான அனைத்துப் பெயர்களையும் நாம் ஆக்கவில்லை. ஆகவே, அவ்வாறு செய்யவல்லார் முன்மொழி பின்மொழிகளைப் பொருந்தியவாறு இணைத்து மேலும் பல பெயர்களை ஆக்கிக் கொள்வாரென நம்புகின்றோம். தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும். இப்பெயர்கள் மக்கள் வழக்கில் வருகின்ற பொழுதே எமது இவ் வருஞ்செயல் பயன்விளைப்பதாகுமென நம்புகிறோம். 'குற்றம் களைந்து குணம் நாடிக் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதற்கிணங்க இவ் வேட்டின்பால் வழுக்கள் காணப்படுமாயின் அவற்றைப் பொறுத்தருள வேண்டுவதோடு எமக்குச் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறோம். 23 - 06 - 1997 - தமிழ் வளர்ச்சிக் கழகம் - |