Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 332 online users.
» 0 Member(s) | 329 Guest(s)
Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,429
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,236
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,531
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ஊர்காவல்படை வீரர் காயம்
Posted by: Vaanampaadi - 08-21-2005, 07:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

Homeguard injured in grenade attack in Anuradhapura

[TamilNet, August 21, 2005 15:51 GMT]
A homeguard was injured when unidentified attackers lobbed a grenade on Anuradhapura junction, a suburb about four km off the east port town along Trincomalee-Kandy Road Sunday evening. Police blocked the traffic on the Trincomalee-Kandy Road following the attack at 8:10 p.m., sources said.
Mr. A. H. Chamintha, the homeguard injured in the attack was rushed to Anuradhapura Hospital, sources added.

Tamilnet.com

Print this item

  சைனீஸ் சில்லி சிக்கன்
Posted by: SUNDHAL - 08-21-2005, 04:09 PM - Forum: சமையல் - Replies (17)

தேவைப்படும் பொருட்கள்:

கோழி இறைச்சி - 500 கிராம்

சமையல் எண்ணை - 2 மேஜைக்கரண்டி

சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி

தக்காளி சாஸ் - ஒன்றரை மேஜைக்கரண்டி

சில்லி சாஸ் - ஒன்றரை மேஜைக்கரண்டி

உப்பு - தேவைக்கு

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 1

குடை மிளகாய் - 1

பெரிய வெங்காயம் - 2

மிளகுதுÖள் - 1தேக்கரண்டி

தண்ணீர் - அரை கப்

செய்முறை:

வாணலியை சூடாக்கி எண்ணையை சூடாக்குங்கள். அதில் கோழி இறைச்சி துண்டு களை சேர்த்து தாளியுங்கள். கோழி இறைச்சி நிறம் மாறியதும் முன்று வகை சாஸ்களையும் அதில் சேர்த்து நன்றாகக் கிளறி விடுங்கள். அதில் தேவைக்கு உப்பு சேருங்கள். இஞ்சி, பூண்டு, குடைமிளகாய், பெரிய வெங்காயம் போன்றவை களை சிறுதுண்டுகளாக்கி அதில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிடுங்கள். அதில் மிளகு துÖள் கலந்து மீண்டும் நன்றாகக் கிளறுங்கள். பெரிய வெங்காயம் பிரவுன் நிறமானதும் தண்ணீர் சேர்த்து வாணலியை முடி வைத்து வேக விடுங்கள். லேசான தீயில் தொடர்ந்து வேகவிட்டு தண்ணீரை வற்றச் செய்யுங்கள். பின்பு சூட்டோடு சுவையுங்கள்.

Print this item

  பிரபல நடிகர்களின் சமையல்..
Posted by: SUNDHAL - 08-21-2005, 03:21 PM - Forum: நகைச்சுவை - Replies (77)

ஹலோ நேயர்களே, இன்னிக்கு ஆகஸ்ட் 15, சுதந்திரத் தினச் சிறப்பு நிகழ்ச்சியா... நம்ம ஸ்டூடியோக்குப் பிரபல கதாநாயகர்கள் "கரண்டி'யோட வந்திருக்காங்க. எப்பவும் "பஞ்ச்' டயலாக்கால நம்ம காதை நிறைக்கறவங்க, இன்னிக்கு நம்ம வயித்தை நிறைக்க வரிஞ்சு கட்டிட்டு வந்திருக்காங்க! இந்தச் "சூப்பர் ஸ்டார் சமையல் போட்டிக்கு நடுவரா பிரபல செஃப் ஆப்பக்கரண்டியான்' இருக்கப் போறாரு. மாவுல முக்குன வாழைக்காய் -எண்ணைச் சட்டிக்குள்ளே குதிக்கிற மாதிரி நாமளும் நிகழ்ச்சிக்குள்ள குதிப்போமா!


முதலில் வருகிறார் சிம்பு...

சிம்பு : ஹாய் நேயர்களே! நான்தான் பர்ஸ்ட். எப்பவும் மன்மதன்தான் பெஸ்ட்.

தொகுப்பாளினி : அதெல்லாம் இருக்கட்டும். என்ன செய்யப் போறீங்க?

சிம்பு : "ஸ்வீட்' தரப் போறேன்.

தொகுப்பாளினி : அய்யய்யோ...(அவசரமாக தன் உதட்டை மறைக்கிறார்)

சிம்பு : ஹே...யூ நாட்டி. ஸ்வீட்னா கிஸ் இல்ல. இது வேறு. செய்யுறேன் நீ பாரு. முதல்ல தேவையான பொருட்கள் -"கடலை' மாவு கால் கிலோ, இச்சு வெல்லம்...

தொகுப்பாளினி : ஹைய்யோ, அது அச்சு வெல்லம்!

சிம்பு : நச்சுன்னு சொன்னீங்க..அது அரைக் கிலோ. அப்புறம் வாசனைக்கு க்ங்ய்ண்ம்’ டியோடரண்ட். "பஞ்ச் டயலாக்' தேவைக்கேற்ப! "குட்டி'யா இருந்தப்பவே வெட்டியா இருந்தவன் நான் இல்ல. சிம்பு காட்டுவான் வெரைட்டி. முதல்ல எடுக்க வேண்டியது வறுக்குற சட்டி. கடலை மாவை அதுல கொட்டி கோவம் வர்ற வரைக்கும் "விரலால' வறுக்கணும்.

தொகுப்பாளினி : எப்ப கோவம் வரும்?

சிம்பு : "அவனை' நினை..மவனே...தானா கோவம் வரும்டி!(நறநறவென பற்களைக் கடிக்கிறார்)

தொகுப்பாளினி : அய்யோ அச்சு வெல்லத்தை என்ன பண்ணனும்னு சொல்லவே இல்லையே!

சிம்பு : அதை இன்னொரு சட்டியில போட்டு பத்த வைச்சிட்டு, யானாகுப்தா கூட ஒரு குத்தாட்டம் ஆடிட்டு வந்தோம்னா அது ஆகும் "பாகு'. அதுல கடலை மாவைக்கொட்டி கிண்டி, தட்டுல ஊத்தி, நாலு வெட்டு வெட்டி, டியோடரண்ட் அடிச்சிட்டா ஸ்வீட் ரெடி! இதோட பேரு "ஸ்வீட் தாரா'


அடுத்து வருகிறார் தனுஷ்...

தனுஷ் : கஸ்தூரி அப்பா, லெட்சுமி அம்மா, செல்வா அண்ணன், சோனியா அண்ணி எல்லாத்துக்கும் எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல முதன் முறையா ஐஸ்வர்யா இதுதான் செஞ்சுக் கொடுத்தாங்க! அவ்வளவு ஏன், எங்க மாமா ஒவ்வொரு முறையும் இமயமலை போறதுக்கு முன்னாடி லதா அத்தை இதைத்தான் செஞ்சுக் கொடுப்பாங்களாம்.

தொகுப்பாளினி : வாவ், அது பேரு என்ன..."ஒரு நாள் ஒரு உணவா?'

தனுஷ்: இல்ல... பேரை க்ளைமாக்ஸ்ல சொல்லுறேன். ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க. பாத்திரம்னா சும்மா இல்ல. செல்வா அண்ணன் படத்துல என்னோட கதாபாத்திரம் எப்படி இருக்கும், அவ்ளோ வெயிட்டா இருக்கணும். அதுல ஒரு லிட்டர் பாலை ஊத்துங்க! நான் பாக்கத்தான் சுள்ளான் மாதிரி இருப்பேன்... மவனே... கைவச்சேன்...சுருண்டுருவ!

தொகுப்பாளினி: இதை யார்கிட்ட சொல்லணும்?

தனுஷ்: இப்படிக் கோவமா ஒரு டயலாக் வுட்டா, அடுப்பு தானா பத்திக்கும். பாலை சுண்டக் காய்ச்சி இறக்கிறணும். அப்புறம் சர்க்கரை சேர்த்து, ஸ்பூனால கலக்கி, எல்லாத்துக்கும் ஊத்திக் கொடுக்கலாம். இந்த அயிட்டத்துக்குப் பேரு, ஆரோக்யா!


அடுத்து வருகிறார் விஜய்...

விஜய்: வணக்கங்கமுங்கோ!

தொகுப்பாளினி : நீங்க என்ன பண்ணப் போறீங்க?

விஜய்: நம்ம டேஸ்ட்டே எப்பவும் மசாலாதானுங்க! அதைவிட்டா வேற எதுவும் பிடிக்காதுங்க! அதை நான் விட்டுட்டா எங்க என்னைப் பிடிக்காமப் போயிருமோன்னு கூட ரிஸ்க்கே எடுக்கிறதில்லீங்க!

தொகுப்பாளினி: ஓ...தேவையான பொருள்களைச் சொல்லுங்க...

விஜய்: ரெண்டு வரியில கதை, அஞ்சு குத்துப் பாட்டு, நாலு சுத்து பைட்டு, கால்கிலோ காமெடி, அரைக்கிலோ காதல், ரெண்டு டீஸ்பூன் சோகம், பஞ்ச் டயலாக்ஸ் தேவையே இல்லாம.

தொகுப்பாளினி: ஹலோ அது எங்களுக்கே தெரியும். நீங்க செய்யப்போற பதார்த்துத்துக்குத் தேவையானதை யதார்த்தமா சொல்லுங்க!

விஜய்: இப்படிச் சூடு... முதல் வில்லன் சிக்கனை "அந்நியன்' ஸ்டைல்ல சூடான எண்ணையில பொரிச்சி, வறுத்து, தாளிச்சி எடுக்கணும். ரெண்டாவது வில்லன் மட்டனோட "தல'யில இருந்து மூளையை மட்டும் தனியாக் கழட்டி சாப்ஸ் பண்ணிடணும். மீதி வில்லன் அயிட்டங்களை அவிச்சு வைச்சுடணும். அப்புறம் கிலோக்கணக்கா மொளகா வத்தலை வாணலியில போட்டு, அருவாளால வறுக்கணும். இது எல்லாத்தோடயும், கையில கிடைக்குற மசாலைவையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடிச்சு, பிரிட்ஜ்ல கூலா வைச்சுட்டா "மசாலா ஜுஸ்!' ரெடி!


அடுத்து வருகிறார் அஜீத்


அஜீத்: நான் வந்துட்டேன். உனக்கென்ன...உனக்கென்ன..

தொகுப்பாளினி: எனக்கு ஒண்ணுமில்லீங்க!

அஜீத்: நான் தனி ஆளு இல்ல! ஏய்... நான் நினைச்சுட்டா அதைச் செஞ்சே தீருவேன். எவனாலயும் தடுக்கவே முடியாது.

தொகுப்பாளினி: அட, கேமரா பார்த்தாலே "பஞ்ச்' டயலாக் பேச ஆரம்பிச்சுடுவீங்களே! சமையல் குறிப்பைச் சொல்லுங்க.

அஜீத் : என் மனசுக்குள்ள ஒரு நெருப்பு இருக்கு. என் கண்ணு ரெணடுலயும் சூரியன் உட்கார்ந்திருக்கு.

தொகுப்பாளினி: ஆமா உங்க மூளையில "சுக்ரன்' இருக்கு. நாக்குல "சனி' இருக்கு. அதெல்லாம் விடுங்க. தேவையான பொருட்களைச் சொல்லுங்க!

அஜீத்: வேணும். எனக்கு சூப்பர் ஸ்டார் நாற்காலி வேணும்.

தொகுப்பாளினி: அய்யய்யே...போரடிக்காதீங்க. மேட்டருக்கு வாங்க.

அஜீத்: வரேன். வல்லவனுக்கு புல்லும் ஆயதம்.

தொகுப்பாளினி : யாரு சிம்புவுக்கா?

அஜீத்: எனக்கு குறுக்க பேசுனா பிடிக்காது. புல்...அருகம்புல். எடுத்துக்கணும். காய வைக்கணும். பொடி பண்ணணும். அந்தப் பொடியை நீர்ல கலந்து அடிச்சா. உடற்பயிற்சியே தேவையில்லை...

தொகுப்பாளினி: ஆமா, தொப்பை தானா குறைஞ்சிடும். ஓ.கே. நேயர்களே, நம்ம ஸ்டார்ஸ், சமையல் கலர் கலரா செஞ்சு அசத்திட்டாங்க. யாரு இதுல "சூப்பர் ஸ்டார்'னு இவங்க சமையலை டேஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, நடுவர் செஃப் ஆப்பக்கரண்டியான் முடிவைச் சொல்வாரு. அதுவரைக்கும் ஒரு குட்டி பிரேக்.


விளம்பர இடைவெளிக்குப் பிறகு...


தொகுப்பாளினி: சாரி நேயர்களே... எல்லாத்தையும் ஒரே நேரத்துல டேஸ்ட் பண்ணிப் பார்த்ததால நிலைமை "சீரியஸ்' ஆகி, ஆப்பக்கரண்டியான ஆம்புலன்ஸ்ல அள்ளிப் போட்டு அப்பல்லோவுக்கு கொண்டு போயிட்டுருக்காங்க. அதனால "சூப்பர் ஸ்டார் சமையல்' ரிசல்ட் கேன்சல்!
ThanksBig Grininamani..

Print this item

  சொல்ல வந்தேன்...........
Posted by: ப்ரியசகி - 08-21-2005, 02:46 PM - Forum: கவிதை/பாடல் - Replies (16)

<img src='http://img399.imageshack.us/img399/7544/sonia0qv.jpg' border='0' alt='user posted image'>

சொல்வாயா சொல்வாயா என ஏங்கினேன்
சொல்லவா சொல்லவா எனவும் ஏங்கினேன்
சொல்லச்சொல்லி சொல்லும் மனம்...
சொல்லாதே என தடுக்கும் மறு கணம்...

சொல்ல வந்த சொற்கள் எல்லாம்..
சொல்லாமலே ஓடி விட்டன
சொல்ல வந்த கணங்கள் எல்லாம்..
சொல்லி விட்டு போய் விட்டன
சொல்லி விட்டேன் நூறு முறை கண்ணாடி முன்
சொல்ல முடியவில்லை ஒரு முறை உன் முன்னாடி...

சொற்கள் தேடி..சொற்தொடர்கள் ஆக்கி
சொல்லும் கணம் தேடி..சொல்ல வெண்டியவரைத்தேடி
சொல்வதற்காய் ஓடி வந்தேன்...........
சொல்லத்தொடங்க சொன்னாய் நீ......
சொல்ல வேண்டியதை எல்லாம்...நான்..
சொல்ல முடியாத நிலை...

சொந்தம் என்று நாம் ஆக
சொர்க்கம் சென்று நாம் வாழ
சொந்தங்கள் ஏற்காத நிலைமை
சொர்க்கமும் நம்மை அழைக்காத நிலை

சொன்னாய் ஒரு முறை ஜாடையாய்
சொல்ல நான் துடித்தது போல் நீயும் துடித்ததாய்...........
சொல்லி விட்டார்கள் மனது நோகும் படி
சொல்லித்தான் இனி என்ன.....
சொல்லாமல் விட்டுத்தான் என்ன....

சொல்லி விட்டாய் நீ....
சொர்க்கம் காணும் நினைப்பு வேண்டாம் என்று
சோர்ந்து விட்டேன் நான்
சோராதே என்றாய்.....
சோகம் என் நெஞ்சில் குடியே கொண்டு விட்ட நிலை
சோகமும் வேண்டாம் என்றாய்.....
சோகம் கொள்ளாமல் நீ மட்டும்...எப்படி...
சோடியாய் வந்தாய் உன் நண்பருடன்
சோகமாய் பார்த்தாய் ஒரு புன்னகையுடன்
சோர்வதாய் நான் நடிக்கவில்லை
சொந்த நிலையும் நீ அறியாமல் இல்லை
சொர்க்கம் என் கண் முன்னாடியும் இல்லை
சொல்லி அழைக்கும் தூரத்திலும் இல்லை
சொல்லாமல் நான் அழைக்கப்போவதும் இல்லை
சொல்லி அதுவாய் எனை சேரப்போவதும் இல்லை

சொன்னாலும் சொல்லாவிட்டிலும்...நீ தந்த
சொந்தம்.................அது இவள் வாழ்வில்
சொல்லில் அடங்காத இன்பம்...
சொல்லி முடியாத பந்தம்..........................

Print this item

  ஒருவர் நாட்குறிப்பில் கிறுக்கியது...
Posted by: Thala - 08-21-2005, 12:15 PM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

<b><span style='font-size:25pt;line-height:100%'>என் நாட்குறிப்பில்கிறுக்கியது </span>

<img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/lightson_kajol1.jpg' border='0' alt='user posted image'>

ஒருவாறு என்வாழ்வில்
வெள்ளிவந்தது...

என்னைப்பார்ததுதான்
உன்விழியில் என்ன ஒளி
குழந்தைபோல் ஓடிவந்தாய்
என்னருகில்...

உன்கையை
இறுகப்பிடித்துக்கொண்டேன்
விட்டுவிட்டால்
என்னுயிர் போய்விடலாம்

கைகளுக்கூடே மின்சாரம்

இதயம்
மீண்டும்
இயங்கத்தொடங்கியது

"........ உன்னைப்பார்க்காமல்
ஒரு நொடி கூட
என்னால்இருக்கமுடியவில்லை...
உன்னோடுதான்
என்வாழ்வு அமையவேண்டும்..."

"ஏற்றுக்கொள்வாயா?"

நீ என் கைகளை இறுகபிடித்துக்கொண்டாய்..
உன் கண்களில் இரண்டுதுளி கண்ணீர்

ஏதோ சொல்லவந்தாய்
வார்த்தைகள்
வெளியேவரவில்லை

கனிவாகப்பார்த்தாய்
பின்
என் கைகளை எடுத்து
யாரும் பார்க்காதபோது
முத்தமிட்டாய்..
உன் மனதில்
மகிழ்ச்சி
வெட்க்கம்
ஒராயிரம் உணர்ச்சிகள்
ஒன்றாய்...

அன்று
முடிவுசெய்தோம்
வாரத்தில் நான்கு தடவை
பார்ப்பது என்று

அந்த நான்குநாட்கள் மட்டும்சுவாசிக்கும்
ஒரு புது ஜீவராசியாய் நான்
வலம் வந்தேன்

நூலகம்
கோவில்
இந்த இரண்டிலும் தான் எமது
சந்திப்புத்தொடாந்தது..

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உணர்ச்சி

அன்று மீண்டும்
நாட்டில் வன்முறை வெடித்தது

இந்திய இராணுவம்
ஏற்படுத்திச்சென்ற
கறைகள் ஆறும் முன்பே
மீண்டும் ஒரு போர்

இலங்கை இராணுவத்தின்
அராஜகம் ஆரம்பித்துவிட்டிருந்தது...

உன்னைப்பார்ப்பது
தடைப்பட்டுப்போனது

முதலுதவிப்படையினருடன்
நானும் இணைந்து
காயம்பட்ட சகோதரர்களை
பராமரிக்கும் பணியில்
ஈடுபட்டிருந்தேன்...

ஒருநாள் இரவு
கொஞ்சம் நேரம்கிடைத்தது
ஓடி வந்தேன்
எப்படியும்
பார்த்துவிடுவது என்று

உன் வீடு
புூட்டிக்கிடந்தது....
நீஙகள்
இடம்பெயர்ந்துவிட்டதாக
சொன்னார்கள்
எங்கு சென்றாய் என்று
தெரியவில்லை...
மனம் நொடிந்து பொனது...

எதுவும்
செய்யப்பிடிக்கவில்லை
வீட்டிலே முடங்கிக்கிடந்தேன்...

நாட்கள் செல்லச்செல்ல
போர் வலுப்பெற்றது...
நாங்களும் இடம்பெயர்ந்தோம்

ஒருநாள் அப்பா
என்னையும்
என் தம்பியையும்
இந்தியாவிற்க்கு போக
ஏற்பாடுசெய்துவிட்டுவந்திருந்தார்

அம்மா போய்விடும்படி
கெஞ்சினாள்....

இந்தியா வந்து
என் படிப்பைத்தொடர்ந்தேன்

இலங்கையில்
இருந்த
இரண்டொரு நன்பர்களுக்கும்
உன்விபரம் தெரியவில்லை...

உன் முகவரிக்கு
நான் போட்ட
கடிதங்கள் எதுவும்
பதில்கொண்டுவரவில்லை...

இன்று நீ
எங்கே இருக்கின்றாயென்று
எனக்குத்தெரியாது...

பதின்மூன்றுவருடங்கள்
பறந்தோடிவிட்டன..

மனதில்
உன்முகம் கொஞ்சம்
மங்கலாகிப்போய்விட்டதுண்மை...

எப்போதாவது
தனிமையில் உன்னைநினைப்பேன்..
அப்போது மட்டும்
இதயம் கனத்துப்போய்விடும்...
அப்போழுதுதெல்லாம்
ஆண்டவனைவேண்டிக்கொள்வேன்
நீ மகிழ்ச்சியாக வாழவேண்டும்
என்னை மறந்துவிட்டிருக்கவேண்டும்

[b]முற்றும்</b>

<b>ஆதிபன் சிவா க்கு </b>
நண்றிகள்.
http://aathipansiva.blogspot.com/2004/10/b...9409401367.html

Print this item

  இணைய தளங்களின் உரிமையாளர் யார்?
Posted by: விது - 08-21-2005, 11:32 AM - Forum: இணையம் - Replies (4)

¯¾Å¢ §¾¨Å ¦Åô¨ºð¸Ç¢ý ¯Ã¢¨Á¡Ç÷ þÂü¸ôÀÎõ þ¼õ ¬¸¢ÂÅü¨È À¡÷À¾ü¸¡É þ¨½ôÒì¸¨Ç ¾ÃÓÊÔÁ¡.

தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன்

Print this item

  நட்பு
Posted by: Rasikai - 08-21-2005, 08:17 AM - Forum: கவிதை/பாடல் - Replies (19)

நட்பு..............


நாட்கள் கடத்த நட்பு என்று சொல்வார்கள்....ஏன்
நான் கூட அப்படித்தான்...இப்பொழுது
நட்புக்காக நாட்கள் கடத்துகிறேன்....அதனால்
நீ இல்லாமல் என் நாட்கள் நகர்வதில்லை...
இப்பொழுது புரிகிறதா........இது
நாட்கள் கடத்த வந்த நட்பு இல்லை
நல்ல உள்ளங்களிடையே வந்த நட்பு
:wink:

Print this item

  பாகற்காயை ஒதுக்காதீர்கள்
Posted by: Rasikai - 08-21-2005, 03:41 AM - Forum: மருத்துவம் - Replies (89)

சேசே பாகற்காயா? கசக்குமே என பலரும் சொல்வார்கள். ஆனால் பாகற்காயில் உள்ள மருத்துவகுணங்கள் இவர்களுக்குத்தெரியாது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பாகற்காயை உபயோகிக்கிறார்கள்.

பாகற்காய் இரத்தசுத்திகரிப்புக்கு மிகவும் நல்லது. இரத்தம் சுத்திகரிக்கப்படுவதால், தோலும் பள பள என மிடுக்கு கொடுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டுவரலாம். இது சரிக்கரை அளவை குறைக்க உதவி புரிகிறது நல்ல சத்துணவும் கூட ஆகவே எல்லோரும் உணவில் கண்டிப்பாக பாகற்காயை சேர்க்க வேண்டும்.

காய்கறியாக சமைத்து சாப்பிடுவதுடன், ஜீசாகவும் பயன்படுத்தலாம். சிலர் இதை பேஸ்ட்டாகவும் உபயோகப்படுத்துகிறார்கள். வெளிக்காயங்களுக்கு இதைப் போட்டால் புண் ஆறுவதாகவும் சொல்கிறார்கள்.

Print this item

  அதிர்ச்சி ஆதாரத்தில் உறைந்த லண்டன்
Posted by: vasisutha - 08-21-2005, 01:07 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

உலகத்தில் தலைசிறந்த போலீஸ் படை என்று ஸ்காட்லாந்து யார்டைச் சொல்வார்கள். துப்பறிவதில் மட்டுமில்லை... மனித உரிமைகளை மதிப்பதிலும் அவர்கள் நம்பர் 1. ஆனால், லண்டன் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அந்த தலைசிறந்த போலீஸ் படை அடிக்கடி தலைகுனிய நேரிடுகிறது.

கடந்த ஜூலை 21ம் தேதி லண்டனில் நான்கு இடங்களில் இரண்டாவது தடவையாக மனித வெடிகுண்டுகள் மூலம் தாக்கும் முயற்சி நடந்தது. குண்டுகள் சரியாக வெடிக்காததால் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டவர்கள் தப்பி ஓடினர்.

இப்படி மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒருவரை மறுநாள் காலை ரயிலில் சுட்டுக் கொன்றதாக போலீஸ் அறிவித்தது. உலகமெங்கும் பரபரப்பு ஏற்பட,

அன்று இரவுக்குள் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது. போலீஸ் எதிர்பார்த்த மாதிரி அவர் ஆசியக் கண்டத்துக்காரரோ, முஸ்லிமோ இல்லை. அவரது பெயர் ஜீன் சார்லஸ் டி மெனெசஸ். பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். எலெக்ட்ரீஷியன் வேலை பார்த்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக லண்டனில் தங்கியிருந்தவர் என்று தெரிந்தது.

தீவிரவாதி என்று தவறாகக் கருதி அவர் சுடப்பட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட போலீஸ், 'அவரது நடத்தையும், உடையும் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருந்தது. போலீஸ் அவரை அணுகியபோது அவர் ஒத்துழைக்கவில்லை. போலீஸாரின் ஆணைகளுக்கு அடிபணியவில்லை. அதனாலேயே சுட நேர்ந்தது. மனித வெடிகுண்டு என்று ஒருவரைக் கருதும் போது அவரைச் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த தவறுக்காக போலீஸின் கண்டதும் சுடும் அணுகுமுறை மாறாது' என்றும் அறிவித்தது.

இருநாட்டு உறவுகளையே பாதிக்கும் அளவுக்கு பிரேசில் நாட்டில் பிரிட்டனை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்க, இந்த விவகாரத்தை போலீஸ் மீதான புகார்களை விசாரிக்கும் சுயேச்சையான ஆணையத்தின் விசாரணைக்கு அனுப்பியது இங்கிலாந்து அரசு.

<b>இந்த ஆணையத்துக்கு கிடைத்த ஆதாரங்களை ஐ.டி.வி. என்ற நியூஸ் சேனல் கடந்த புதன்கிழமை அம்பலமாக்கியது. 'செய்த தவறை மறைக்க போலீஸார் பச்சையாக புளுகுவார்கள்... அது ஸ்காட்லாந்து யார்டாக இருந்தாலும் சரி' என்று அந்த ஆதாரங்கள் வெளிச்சம் போட்டிருக்கின்றன.</b>


<i>'இரண்டாவது லண்டன் தாக்குதல்களின் போது ஷெப்பர்டு புஷ் பகுதியில் வெடிக்காமல் இருந்த குண்டை போலீஸார் சோதித்தனர். அங்கு அவர்களுக்கு ஹ¨ஸைன் ஓமன் என்பவனது உடற்பயிற்சிக் கூட அடையாள அட்டை கிடைத்தது. அதிலிருந்த விவரங் களை வைத்து அவன் தெற்கு லண்டனில் இருக்கும் ஸ்கோடியா ரோடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருக்கிறான் என தெரிந்தது. கண்காணிப்பு வீடியோ கேமராக்களில் கிடைத்த உருவத்தை வைத்து அவனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

மறுநாள் காலை அந்த ஏரியா அடுக்கு மாடி ஒன்றிலிருந்து ஜீன் சார்லஸ் வெளியே வருகிறார். ஹ¨ஸைனின் உருவத்தோடு அவர் பொருந்தியிருந்தார்.


அங்கு ரகசிய கண்காணிப்பு மேற்கொண்ட அதிகாரி தகவல் தர, உடனே ஜீனை போலீஸார் பின் தொடர்ந் தனர். ஒரு பஸ்ஸில் ஏறி ஸ்டாக்வெல் சுரங்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார் ஜீன். அவர் பதற்றமாக இருந்தார். தடிமனான மழைக்கோட் அணிந்திருந்ததால் அதற்குள் பெல்ட்பாம் இருக்கும் என்று போலீஸ் சந்தேகப்பட்டது.

பஸ்ஸிலிருந்து இறங்கியதும் வேகமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிய அவர், அங்கு டிக்கெட் கவுன்ட்டர் அருகில் இருந்த தடுப்பைத் தாண்டிக் குதித்து ஓடினார். அவசரமாக ஒரு ரயிலில் ஏறினார். இதற்குள் அங்கு தயாராக வந்திருந்த ஆயுதப்பிரிவு போலீஸார் ரயிலின் கதவு மூடுவதற்குள் அதில் ஏறினர். 'போலீஸ்' என்று சத்தமிட்டபடி அவர்கள் போனபோது எழுந்து அவர்களை நோக்கி வந்தார் ஜீன். அவர் குண்டை வெடிக்க வைத்துவிடுவாரோ என்று அவசரமாக அவரை மடக்கி போலீஸார் சுட்டனர்.'</i>
<b>இதுதான் ஸ்காட்லாந்து யார்டு தரும் விளக்கம். ஆனால், கிடைத்த ஆவணங்கள் எல்லாமே இதை மறுக்கின்றன.</b>


<span style='color:darkseagreen'>அன்று ஜீன் அணிந்திருந்தது சாதாரண மெல்லிய கோட்தான். பதற்றமாக அவர் வரவில்லை. தனது அபார்ட்மென்ட்டில் இருந்து ஜீன் இறங்கியபோது, அதைக் கண்காணித்த போலீஸ் அதிகாரி பாத்ரூம் போயிருந்தார். அவர் திரும்பி வரும்போது ஜீனின் முதுகைத்தான் பார்க்க முடிந்தது. 'இது தேடப்படும் தீவிரவாதியாக இருக்கலாம்' என்று யூகித்த அவரால் ஜீனை கண்காணிப்பு கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் தனது சந்தேகத்தை மேலிடத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

உடனே ஜீனை பின்தொடர ஆள்போட்டு விடுகிறார்கள். இதற்கிடையே ஆயுதப்படைப் பிரிவான CO-19 க்கு தகவல் போகிறது. அவர்கள் 'சிவப்புக் குறியீடு தந்திரம்' என ஒரு ஆக்ஷனைத் தீர்மானித்து விடுகிறார்கள். ஜீன் பஸ்ஸை விட்டு இறங்கி ரயில்வே ஸ்டேஷனுக்கு போகும்போது அங்கு ஆயுதப்படை போலீஸார் கையடக்க துப்பாக்கிகளை மறைத்து வைத்துக் கொண்டு பிளாட்பார்மில் நிற்கிறார்கள்.

ஜீனின் நடையில் பதற்றம் இல்லை. ஸ்டேஷனுக்குள் நுழைந்த அவர், அங்கு ஸ்டாண்டில் இருக்கும் இலவச நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு நிதானமாக நகர்ந்து டிக்கெட் கவுன்ட்டர் அருகில் இருக்கும் தடுப்பை எல்லோரும் போல இடையில் புகுந்து கடக்கிறார். தாண்டவில்லை. அப்புறம் நகரும் படிகளில் நின்று கீழே இறங்குகிறார். பிளாட்பார்மைத் தொடும்போது அவர் பயணிக்க வேண்டிய திசையில் ரயில் கிளம்பத் தயாராக இருப்பது தெரிகிறது. குண்டுவெடிப்புகளுக்கு பிறகு ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாறுமாறாக இருக்கவே, அடுத்த ரயில் எப்போது வரும் என்பதே நிச்சயமில்லாத நிலை... ரயிலை விட்டுவிடக் கூடாது என்று அவர் அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறுகிறார். அவர் செய்த ஒரே தவறு இதுதான்! ஆனால், ஏறியதும் வாசல் ஓரமாக இருந்த காலியிடத்தில் உட்கார்ந்து விடுகிறார்.

இது எல்லாமே கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. அவர் ஏறிய சில நொடிகளில் அவரைப் பின்தொடர்ந்த போலீஸ் காரர்களில் ஒருவர் ஏறுகிறார். அவரது ரகசியப் பெயர் <i>ஹோட்டல்9</i>. அவர் ஜீனைப் பார்த்ததும், 'ஆள் இங்கே இருக்கிறான்' என்று சத்தமாக சொல்லிக்கொண்டே ஜீனை நோக்கி கைகாட்டுகிறார். ஜீன் எதுவும் புரியாமல் எழுந்திருக்கிறார். <i>ஹோட்டல்9, 'போலீஸ்' </i>என்று சொன்னபடியே ஜீனின் கைகளை மடக்கி அவர் உட்கார்ந்திருந்த ஸீட்டில் தள்ளுகிறார். அடுத்த நொடி... நான்கு ஆயுதப் படை போலீஸார் உள்ளே நுழைந்து சுடுகிறார்கள். ஒரு அடி நெருக்கத்தில் வைத்து சுட்டதில் ஏழு குண்டுகள் தலையிலும், ஒன்று தோள்பட்டையிலும் பாய்கிறது (இவ்வளவு நெருக்கத்தில் சுட்டும் மூன்று குண்டுகள் குறிதவறி ரயில் ஸீட்டில் பாய்ந்திருக்கின்றன. யானைக்கும் அடிசறுக்கும்?). 'தான் சாகிறோம்' என்பதைப் புரிந்து கொள்ளக்கூட அவகாசம் இல்லாமல் ஜீன் செத்துப்போகிறார்.

அதன்பிறகு அவரது முகவரி அடையாளங்களைப் பரிசீலித்த போலீஸாருக்கு ஒருமணி நேரத்திலேயே தப்பு நடந்தது தெரிந்துவிட்டது. ஆனால், அவர்கள் உடனே ஜீனின் ஃபிளாட்டுக்கு போய் அங்கிருந்த அவரது உறவினர்களை அழைத்து வந்து ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து விட்டனர். அந்த அறையில் இருந்த போனையும் துண்டித்து விட்டனர். அவர்கள் யாரிடமும் பேசாமால் இருக்கவே இந்த உஷார் ஆக்ஷன். கடைசியில் வக்கீல்கள் வந்தபிறகே அவர்களை விடுவித்தனர். இப்படி கடத்தல் வேலைகளை செய்ததாக இதுவரை ஸ்காட்லாந்து யார்டை யாரும் திட்டியதில்லை.

''இது விசாரிக்காமலே கொடுத்த மரண தண்டனை'' என மனித உரிமை அமைப்புகள் குமுற, ஜீனின் குடும்பத்தி னர், ''துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸார் மீது கொலைவழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்'' என்று போராடுகின்றனர். இதற்கு பிரிட்டனிலும் ஆதரவு பெருகி இருக்கிறது என்பது தான் விசேஷம்!

- அகஸ்டஸ்
vikatan
</span>

Print this item

  கூகிள் உலகம்
Posted by: அசோகன் - 08-20-2005, 06:22 PM - Forum: இணையம் - Replies (1)

கூகிள் நிறுவனத்தின் அருமையான சேவைகளையும் scholar.google.com, maps.google.com), மென்பொருள்களையும் (Picasa, Blogger) நீங்கள் உபயோகித்திருப்பீர்கள். இவற்றில் ஒன்று தான் Google Earth (earth.google.com). செய்மதிகளிலிருந்து எடுத்த உலகின் பல்வேறு பாகங்களினதும் படங்களை ஒன்று சேர்த்துக் காட்டும் மென்பொருள். இலங்கையின் படங்களும் உள்ளன. அதில் எல்லா இடங்களுக்கும் சிங்களப் பெயர்களே குறிக்கப்பட்டுள்ளன!

கூகிளுக்கு நான் கீழே இணைக்கப்பட்டிருக்கும் வேண்டுகோளை அனுப்பி வைத்துள்ளேன்

---------------------------------

I noticed that the place-names of many towns in the Tamil areas are given in the Sinhala language, even though these towns have long-standling English names as well as Tamil names which are used by the majority of the residents of those towns. Even the Sri Lankan government uses the commonly used English names in their maps. See
http://www.gov.lk/map_main.htm

So do other reputable sources, e.g., the UN, and Wikipedia
http://www.un.org/Depts/Cartographic/map/p...le/srilanka.pdf
http://en.wikipedia.org/wiki/Image:Ce-map.png

Here are the changes I would recommend in this regard:

Yaapanaya -> Jaffna
Peduru Tuduwa -> Point Pedro
Tirikunamalaya -> Trincomalee
Galmune -> Kalmunai
Madakalapuwa -> Batticaloa
Vavuniyawa -> Vavuniya
Mannarama -> Mannar

Thank you in advance for your prompt action.

P.S.
Given that the corrected names I suggest above are used pretty much everywhere, I wonder how the infrequent Sinhala placenames found their way onto Google's maps.
It smells suspiciously like a politically motivated insider has deliberately used Sinhala names for Tamil towns.

Print this item