| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 335 online users. » 0 Member(s) | 332 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,429
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,236
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,531
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் |
|
Posted by: Danklas - 08-22-2005, 02:51 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (293)
|
 |
22.08.2005..
திருமணத்தம்பதிகளுக்கு டன் புலனாய்வின் வாழ்த்துக்களுடன் இவ் கற்பனை நிகழ்ச்சியை சமர்பிக்கிறேன்...
மாலை 18.00மணி.. (இலங்கை நேரம்)
திருமண மண்டபத்தில் ஹரியின் நெருங்கிய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் ஆஜராகிவிட்டார்கள்.. யாழ்கள உறுப்பினர்களுக்கு ஹரி அழைப்பிதல் அனுப்பி இருந்தார்.. அனைவரும் இத்தனை மணிக்கு வருகிறோம் எண்டு அஜீவனிடம் கூறி இருந்தார்கள்.. ஏன் அஜீவனிடம் தெரிவித்தார்கள் எண்டால் அஜீவன் தான் ஹரியின் திருமணத்தை படம் பிடிக்க இருப்பவர்,புகைப்படம் குளKஸ்... அதனாலே ஹரி வரும் நேரத்தை அஜீவனிடம் தெரிவிக்கும்படி அறிவித்து இருந்தார்.. அஜீவனும், குளKஸும் 17.00மணிக்கே ஆஜராகி பந்தல் மணவறை சோடனை ஹரி, சரிதா ஆகியோரை படம் பிடித்துக்கொண்டு இருக்கிறார்.. ஹரி அஜீவனுக்கு ஒரு அன்புக்கட்டளை இடுகிறார். சரிதாவை வீடியோ எடுக்காட்டிலும் பறவாயில்லை அன்பு யாழ்கள நண்பர்களை,நண்பிகளை வடிவா எடுக்கோனும் எண்டு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்போது மணி 17.45.. மணமக்கள் தங்கள் வீட்டிலிருந்து கலியாணவீட்டு மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள்.. ஆனால் யாழ் கூட்டம் என்னம் ஆஜராக வில்லை..
மணி 17.50...
அஜீவன் கமராவை தூக்கிகொண்டு பந்தலின் முகப்பு செல்கிறார்.. அங்கே தமிழினி வருகிறார் அண்ணருடைய கலியாண வீட்டுக்கு தங்கை வரும் நேரத்தை பாருங்க எண்டு அஜீவன் நக்கலடிக்க தமிழினி சிரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்.. அவரை தொடர்ந்து கவிதன் வருகிறார்... அஜீவனை பார்த்து அஜீவன் அண்ணா அடுத்தது எனக்குத்தான், அதுவும் கனடாவில. அதுக்கும் நீங்கள் தான் விடியோ ஒகேயா?? எண்டு கண்ணடித்து சொல்லிவிட்டு உள்ளே நுழைகிறார்..
மணி 17.58...
பெண்கள் கூட்டம் லக்க லக்க லக்கா சா கல கல கல எண்டு சிரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.. வேற யார்,, சன்முகி, நித்திலா, ரசிகை, பிரியசகி, அனித்தா,ஜெனனி, அனுசா.. வீடியோவை கண்டதுமுகத்தை மறைத்துக்கொண்டு வேகமாக உள்ளே நுழைகிறார்கள்..
18.00மணி
ஹெலி ஒன்று வரும் சத்தம்கேட்கிறது.. அஜீவனின் கமரா இரைச்சல் வந்த திசையை படமாக்குகின்றது, முன்னுக்கு வெட்டைவெளியாக உள்ள மைதானத்தில் அந்த ஹெலிதரை இறங்குகிறது..தரையிரங்கிய ஹெலியில் இருந்து முதலாவதாக இறங்கியது நாய்... உடனே அஜீவனுக்கு விளங்கிவிட்டது குசும்பு கூட்டம் வருகிறது எண்டு மனதுக்கு நினைத்தபடி வீடியோவை சூம் பண்ணுகிறார்... புலனாய்வுக்கு அடுத்ததாய் டன்,, டன்னைதொடர்ந்து பீஏ குருவி, தள்ளாடித்தள்ளாடி ஒரு உருவம் இறங்குகின்றது.. அஜீவனின் கமரா ஊஞ்சல் ஆடின மாதிரி அங்கையும் இங்கையும் ஆடுகின்றது அந்த உருவத்தை கமராவில் பதிப்பதற்க்கு கஸ்டப்பட்டுக்கொண்டு இருந்தார்.. இறங்கியது வேறயாருமில்லை. கோட் சூட் கூலிங்கிளாஸ் பூமா சூ, தலையில சீலை, கழுத்தில அரைகிலே வெள்ளி, ஒரு நோக்கியா செல்போனை காதுக்கை வச்சபடி ஒரு இழுவை நடையுடன் சின்னப்பு,, எடே குத்தியா நில்லடா என்னை விட்டுட்டு ஓடாத.... எண்டு சொன்னபடி ஹெலியை பார்த்து ஜோவ்வ் இறங்குங்கப்பா இடம் வந்துட்டுது என்று ஒரு குரல் குடுக்கிறார்.. திடிரெண்டு தல "ஜயோ சாட்றீ,, முகத்தார் ஹெலில பெலிட் போட மறந்து போனார்"என்று சொல்ல.. அதற்க்கு சாட்றீ அதுக்கு இப்ப என்ன ஹெலிதான் தரை இறங்கிட்டுதே எண்டு ஒரு கோவப்பார்வையுடன் தலயை பார்கிறார்.. ஹெலிக்குள் சண்டைபோட்டுக்கொண்டு இருந்த அவர்களை சின்னப்பு வெளியே அழைக்க தல, சாட்றி, முகத்தான், நாரதர், சின்னக்குட்டி ஆகியோர் ஜம் பண்ணி 2தரம் டைவ் அடிச்சு அஜீவனின் கமராமுன் ஆஜர்.. அஜீவனை பார்த்து கதைத்துவிட்டு உள்ளே நுழைகிறது வந்த கூட்டம்,..ஹரி அவர்களை கண்டுவிட்டு சரிதாவின் காதில் ஏதோ சொல்கிறார்...
நேரம் 18.15..
அடுத்த செற் வருகிறது BMW காரில்.. யாரெண்டு அஜீவனின் கமரா சுழல்கிறது,, மோகன், மதன், யாழினி... நடந்து வந்துகொண்டு இருந்த மோகன் திடிரெண்ட் நின்று காருக்குள் செல்கிறார்.. ஜோவ்வ் இராவனா எண்டு ஒரு குரல் குடுக்க திடுக்கிட்டு எழந்த இராவனன் ஓ கலியாணவீட்டு மண்டபம் வந்திடுச்ச எண்டு வினாவிவிட்டு அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து 4 பேரும் வருகிறார்கள்.. அஜீவனின் கமரா அந்த 4 பேரின் கைகளை குளோசப்பில் படம் பிடிக்க அந்த கைகளில் கத்திகளுக்கு பதிலாக பூச்செண்டுகளும், அன்பளிப்பு பொருட்களும் தென்படுகின்றது... அதில் திடிரெண்டு பிறேக் போட்ட மதன் ஒரு பெரியவரை நிண்டு ஏதோ விசாரிக்கிறார்... அந்த முருகன் கோயிலுக்கு எப்படி போறது எண்டு விசாரித்துவிட்டு அதை குறிப்பு புத்தகத்தில் நோட் பண்ணீவிட்டு உள்ளே நுழைகிறது.. உள்ளே இவர்களைக்கண்ட சின்னப்பு நைசாக கெட்டப்பை மாத்துகிறார். (வேட்டி சால்வை, செருப்பு எண்டு)..
நேரம் 18.30...
அடுத்த செட் வருகிறது.. இந்த முறை வந்தது வயது முதிந்தவர்களோ வயது வந்தவர்களோ அல்ல..
வந்தவர்கள்.. வசி, கையில் பிஸ்ரலுக்கு பதிலாக சூப்புத்தடி,, அவருக்கு பின்னால் வெண்ணிலா, மழலை, தூயா,சுண்டல் வினித்,சின்னத்தம்பி.. ஒருவரின் கையை மற்றயவர்பிடித்தபடி வருகிறார்கள்.. அவர்களுக்கு அஜிவன் மிட்டாய் குடுத்து உள்ளே அழைத்துப்போய் மேடைக்கு அருகில் அமரவைத்துவிட்டு மீண்டும் வெளியே செல்கிறார்..
நேரம் 18.33
3ஆட்டோக்களில் இருந்து சிலர் இறங்கி வருகிறார்கள்...
இளைஞன், சோழியன், கனோன்,, நிதர்சன், அருவி, ஸ்ராலின், கிருபன், பிருந்தன்,ஊமை, நடா.. அவர்களை படமெடுத்துகொண்டிருக்க உள்ளே அஜிவனை அழைக்கிறார்கள்.. தாலிகட்டும் நேரம் நெருங்கிவிட்டது வாருங்கள் என்று.. குள்Kஸும் அஜீவனும் போட்டோவையும் வீடியோவையும் தாலிகட்டும்பொழுது எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அனைவரும் ஹரி&சரிதா தம்பதியினரை அர்ச்சதை போட்டு ஆசிர் வசிக்கின்றனர்.. அப்படியே குறூப் போட்டோ எடுக்கின்றார்கள்.. குறூப் போட்டோவில் அஜீவன் குளKசும் ஆயராகிவிடுகின்றனர்.. போட்டோ எடுத்து முடிஞ்சதும் ஹரியின் உறவினர்கள் மீதியை தொடர்கின்றனர்... திடிரெண்டு சின்னப்பு, முகத்தார்,தல,சத்தம்,.. பந்தி எப்ப என்று ஹரியை கேட்கின்றனர்.. ஹரியும் & சரிதாவும் அவர்களோடு பந்திக்கு போகிறார்... இனிதே திருமண விழா நிறைவு பெறுகின்றது.. அனைவருக்கும் நன்றி கூறி ஹரி&சரிதா தம்பதியினர் வழியனுப்பி வைக்கிறார்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
|
| கருவூலம் கவனிப்பாரற்றுப் போகலாமா..??! |
|
Posted by: kuruvikal - 08-22-2005, 02:32 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (7)
|
 |
ஒருவருடைய வாழ்க்கையில் கருவறை தொடக்கம் கல்லறை வரை என்றும் நினைவு கூரப் படவேண்டியவர்கள் பெற்றோர்கள். தன் உயிரிலும் மேலாக இன்னொரு உயிரை மதித்து, பாலூட்டிச் சீராட்டி வளர்த்தவள் எம் அன்னை. எமது வளர்ச்சியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் எம் தந்தை. இதனால் தான் ஒளவையாரும் மஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் என்று பாடினார். எனவே அன்னையும், பிதாவும் தெய்வத்துக்குச் சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.
ஆனால் இன்றைய சமூகத்தில் பெற்றோருக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் எந்தளவு என்று பார்ப்போ மேயானால், அது இல்லையயன்று தான் சொல்ல வேண்டும். ஒரு பிள்ளையைப் பெற்று வளர்ப்பதில் அளவற்ற துன்பங்களை அனுபவிக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான வுடன் என்ன செய்கிறார்கள்? ஒரு சிலரைத் தவிர, ஏனையோர்கள் பெற்றோரைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.
ஆண்களாயினும் சரி, பெண் களாயினும் சரி வாலிப வயதை அடைந்தவுடன் இனி எங்களுக்கு பெற்றோரது அன்பு, ஆதரவு, உதவிகள் எல்லாம் தேவையில்லை எனத் தப்பாக நினைத்துக் கொள்கிறார்கள். அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து திருமணம் என்ற பந்தத்துள் நுழைந்துவிட்டவுடன், பெண்கள் தமது கண வன்மாரின் சொல்லைத் தாரக மந்திரமாக எடுத்துக் கொள்வதும், மாறாகக் கணவன் - மனைவியின் பேச்சைத் தட்ட முடியாதவனாகி செயற்படுவதனாலும், பெற்றோர்களை இவர்கள் அடியோடு மறந்து விடுகிறார்கள். தாங்கள் இருவருமே இந்தச் சமூ கத்தின் ஜாம்பவான்கள் என தப்புக்கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள். இருந்தும் தம் பெற்றோரை இரு கண்களாக மதிக்கும் பிள்ளை களும் எங்கள் சமூகத்தில் இல்லாமல் இல்லை.
அன்பையும், பாசத்தையும் ஊட்டி ஊட்டி வளர்த் தவர்கள் இன்று அநாதர வானநிலையிலே காலத்தைப் போக்கும் நிலை எமது சமூகத்திலே காணப்படுகிறது. மமுதுமைடு என்பதை இன்றைய இளைஞர்கள் வேண்டாப் பொருளாகவே பார்க்கிறார்கள். மகிழடுடு என்று அநாகரிக வார்த்தையால் நச்சரித்து வருகின்றனர். இந்த நிலை இன்றைய சமூகத்தில் ஆண்பிள்ளைகளிடம் மட்டு மல்ல, பெண்பிள்ளைகளிடமும் காணப்படுகிறது. முதுமையின் தார்ப்பரியங்களை அறியாத இவர்கள் - தங்கள் பெற்றோர்களை மூலையில் கிடக்கவும் வைக்கிறார்கள்.
இத்தகைய காரணங்களால் தானோ, என்னவோ நாட்டில் வயோதிபர் இல்லங்களும் அதிகரித்துவிட்டன. அங்கு வாழும் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
அண்மையில் கைதடிப்பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்துக்கு விசேட செயற்திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்காகச் செல்லும் வாய்ப்புக்கிட்டி யது எனக்கு. அதில் நான் பார்த்து அனுபவித்த சில சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
இன்றைய உலகம் பல துறைகளில் வளர்ந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இதனை நாம் கண்களூடாகப் பார்த்தும், அனுபவித்தும் வருகிறோம். ஆனால் மனிதர்களது மனங்களும் ஏன் இப்படி மாறி விட வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. பத்துமாதம் கருவறையில் சுமந்து பாலூட்டிச் சீராட்டி எம்மை வளர்த்து எடுத்த தாயையும் தந்தையையும், மறந்து விட்டார்களே இந் தக்கல் நெஞ்சம் படைத்தவர்கள். இதனை நினைத்தால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி இருக்கிறது. ஏன் அன்பு பாசம், கருணை, இரக்கம் எல்லாம் இவர்களது பிள்ளைகளுக்கு இல்லையா?
இந்த முதியோர் இல்லத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் காணப்படுகிறார்கள். ஆண், பெண் என இருபாலாரும் இதனுள் அடங்குகின்றனர். சாதி, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பெரும் பாலானோர் தங்கள் பிள்ளை களாலேயே கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், சமூகத் தவர்களால் கொண்டுவந்து சேர்க் கப்பட்டவர்களும் அடங்குகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான சகல வசதி வாய்ப்புகளும் இங்கு வழங்கப்படுகிறது. நேரத்துக்குச் சாப்பாடு, அன்பான பராமரிப்பு, அவரவர் மத வழிபாட்டுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள், பொழுது போக்குக்கு மரச் சோலைகள், பூஞ்சோலைகள் நிறைந்த இடங் கள் என்பன காணப்படுகின்றன. இவை என்னதான் இருந்தும் இவர்களது முகத்தில் ஒரு வித ஏக்க உணர்வு எந்தநேரமும் தென் படுவதை என்னால் உணர முடிந்தது. ஏதோ ஒன்றை நினைத்து ஏங்குபவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். தம் பிள்ளைகளுடன் கூடியிருந்து வாழ்வை அனுபவிப்பதில் கிடைப்பது போன்ற உளரீதியான திருப்தி இவர்களுக்குக் கிடைக்குமா? நிச்சயமாக இல்லை.
தம் உயிரிலும் மேலான இனிய உறவுகளை எண்ணி, வழி மேல் விழி வைத்து நுழைவாயிலைப் பார்த்தபடி இருக்கிறார்கள். யார் தான் இவர்களுக்கு ஆறுதல் கூறுவது. ஒரு மூதாட்டி யினது உளரீதியான ஏக்கம்! எனக்கு இரண்டு மகன்மார். மூத்தவர் கனடாவில் இருக்கிறார். இரண்டாவது மகன் யாழ்ப்பாணத்தில் தான். கல்யாணம் செய்து கொடுத்த கையோட என்னைக் கொண்டு வந்து இங்க விட்டிட்டார். இங்க வாறதும் இல்லை. பார்க்கிறதும் இல்லை. அவர் வந்து இண்டைக்கு ஒன்றரை வருசமாச்சுது. பணம் இருந்தும் என்ன தம்பி! என பெருமூச்சு விட்டு அழுகிறார். பாருங்கள் இந்தப் பெற்றோரது பிள்ளைகளை. யார் இவர்களிடம் போய் நியாயம் கற்பிப்பது.
இதே போல இன்னொரு வயோதிபர் இப்படிக் கூறுகிறார் - எனக்கு ஒரேயயாரு மகன். அவன் விரும்பி மருமகள் ஒன்றைக் கூட்டிக்கொண்டு வந்தான். நானும் வெளிக்கிட்டு இஞ்சை வந்திட்டன் என நகைச்சுவையாக தனது கதையைக் கூறி முடித்தார். இப்படி அங்கு வாழும் முதியவர்கள் ஒவ்வொருவரதும் வாழ்க்கையின் துயரச்சம்பவங்கள் ஏராளம் எராளம்.
இங்கு வசிக்கும் முதியவர் களைப் பிள்ளைகள் சுமைகளாக நினைத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது. இப்படியாகப் பிள்ளைகளால் வெறுத்தொதுக்கப்பட்ட நிலையில்க் கூட பிள்ளைகளின் அன்பு, பாசத்துக்காக ஏங்குபவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். உணவருந்தும் வேளையிலும், பொழுதைக் கழிக்கும் நேரங்களிலும் சில பெற்றோர்கள் பிள்ளைகளை நினைத்து அழுகிறார்கள். சிலர் தனியாக இருந்து சிரிக்கிறார் கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை. மாறாக பிள்ளைகளை ஏன் திட்டித்தீர்க்கவில்லை. அன்பு, பாசம் என்பது பெற்றோருக்கு மட்டும் தானா? பிள்ளைகளிடம் இல்லையா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா.
இங்கு வாழும் முதியவர்களது பிள்ளைகள் எல்லோரும் உயர் தொழில் பார்ப்பவர்களும், உயர்ந்த வருமானம் உடையவர் களுமே. ஏன் இவர்கள் தங்கள் பெற்றோர்களைக் கவனிக்க வில்லை. தன்னிடம் உள்ள பணம் முழுவதையும் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக செலவளித்த இவர்களுக்கு - விமோசனம் என்பது முதியோர் இல்லமா? இவர்களது தேவைகள் எல்லாம் இங்கு நிறை வேற்றப்பட்டாலும் அன்பு, பாசம் போன்ற உளத் தேவை களை வேறு யாராலும் வழங்க முடியுமா?
தன்னிடம் உள்ள உதிரத்தையே பாலாகச் சொரிந்த அன்னைக்கு நாம் உதவாக்கரைகளாகச் செயற்படுவது எந்த வகையில் நியாயம். தன் பிள்ளைகளை சமூகத்தின் நற்பிரஜைகளாக வளர்த்த அன் னைக்கும், தந்தைக்கும் கிடைத்தது வெறும் கானல் நீர் போன்ற வாழ்க்கையே. இதனை இன்றைய இளையவர்களே உங்கள் சிந்தையில் எடுத்துச் சிந்தித்துப்பாருங்கள்.
இவைகள் அனைத்தும் இன்றைய பெற்றோர்களுக்கும் நற் பாடமாக அமைந்து கொள்ளட்டும். நிகழ்காலப் பெற்றோரே உங்கள் எதிர்கால வாழ்க்கையின் நலனைக் கருத்திற் கொண்டு, உங்கள் பிள்ளைகளின் ஆடம்பரமான வாழ்க்கைக்காகச் செலவழிப்பதை விடுத்து, உங்களதும், உங்கள் பிள்ளைகளதும் எதிர்காலம் நோக்கிச் சிந்தித்துப் பாருங்கள். அது மட்டுமன்றி உங்கள் பிள்ளைகளோடு நீங்களும் ஒரு தடவை முதியோர் இல்லம் சென்று வாருங்கள். ஏனெனில் இனியும் எமது சமூகத்தில் முதியோர் இல்லங்கள் பல தோன்றாமல் இருக்க வேண்டும்.
ஈழநாடு - சூரியன்.கொம்
|
|
|
| நடிகர் மாதவனுக்கு ஆண் குழந்தை |
|
Posted by: SUNDHAL - 08-22-2005, 11:35 AM - Forum: சினிமா
- Replies (120)
|
 |
அலைபாயுதே, ரன், கன்னத்தில் முத்தமிட்டால், பிரியசகி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகர் மாதவன். இவருக்கும் சரிதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பே அதாவது -அலைபாயுதே† படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது.
இதையடுத்து சரிதா நிறைமாத கர்ப்பமானார். பிரசவத்துக்காக மும்பையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சமீபத்தில் சென்றhர். நேற்று மதியம் சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று பகல் 12.30 மணி அளவில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. சிசேரியன் மூலம் பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
குழந்தை பிறந்தபோது மருத்துவமனையில் இருந்த மாதவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறந்த அதிர்ஷ்டத்தில் நடிகர் மாதவன் -ஆர்யா† என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறhர்.
|
|
|
| நியூ பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிடிவாரன்ட் |
|
Posted by: SUNDHAL - 08-22-2005, 10:24 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
நியூ படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இப்படத்தின் தணிக்கை தொடர்பாக தணிக்கை அதிகாரி வானதி ஸ்ரீநிவாசன் மீது கோபப்பட்டு மொபைல் போனை எறிந்தார். அந்த போன் அவர் மீது படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று விசாரணைக்கு சூர்யாவை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சூர்யா ஆஜராக வில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
|
|
|
| குட்டிச்சாமியாரும் விளையாட்டுக்களும்..! |
|
Posted by: kuruvikal - 08-22-2005, 08:22 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
சிறிது காலத்திற்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சேலம் குட்டிச் சாமியார் பரணீதரன், சேலம் நகரில் புதிதாக ஆசிரமம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
<img src='http://thatstamil.indiainfo.com/images29/optimized/baraneedharan-400.jpg' border='0' alt='user posted image'>
சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் பட்டாபிராமன். இவரது மகன் தான் பரணீதரன். 14 வயதாகும் பரணீதரன், கர்நாடக மாநிலம் மந்தராலயம் சென்று அங்கு சாமியாராக தீட்சை பெற்றுக் கொண்டார். இதை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை.
சேலம் வந்த பின்னரும் தனது குடும்பத்துடன் தங்காமல் தனியாக தங்கத் தொடங்கினார் பரணீதரன். இதையடுத்து பட்டாபியும், அவரது குடும்பத்தாரும் சேர்ந்து பரணீதரனை தங்களுடன் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி வந்த பரணீதரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சேலம் மட்டுமல்லாது தமிழகத்தையே இது பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது.
இதையடுத்து மதுரை ஆதீனம் தலையிட்டு இந்தப் பிரச்சினையில் சமரசம் ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஜெயேந்திரரைச் சந்தித்தார் குட்டிச் சாமியார். ஜெயேந்திரர், குட்டிச் சாமியாருக்கு ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயரும் சூட்டினார். அவரை சங்கர மடத்தின் புதிய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப் போவதாகக் கூட செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழ்நிலையில், திடீரென தலைமறைவானார் குட்டிச் சாமியார். பல மாதங்களாக அவரைக் காணவில்லை. தற்போது திடீரென குட்டிச் சாமியார் சேலம் வந்துள்ளார். புதிதாக ஒரு ஆசிரமத்தையும் அவர் ஆரம்பித்துள்ளார். விஜயராகவபுரத்தில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.
ஒரு 'கார்ஷெட்'தான் ஆசிரமமாக மாறியுள்ளது. ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமம் என தனது பெயரையே ஆசிரமத்திற்குச் சூட்டியுள்ளார் குட்டிச் சாமியார். ¬முருகன், விநாயகர் ஆகிய கடவுள் படங்களுடன் மறைந்த காஞ்சிப் பெரியவரின் படமு¬ம் ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சந்திரமௌலீஸ்வரர் விக்ரகமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை ¬முதல் இடைவிடாமல் பல்வேறு பூஜைகளை செய்தார் குட்டிச் சாமியார். பின்னர் மாலையில் குட்டிச் சொற்பொழிவும் ஆற்றினார். ஏராளமான பக்தர்கள் இந்த பூஜை மற்றும் சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளின் போது குட்டிச சாமியாரின் தாய், தந்தையும் கலந்து கொண்டனர். பூஜை மற்றும் சொற்பொழிவுக்குப் பிறகு குட்டிச் சாமியார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் தலைமறைவாகவில்லை. பத்திரிக்கையாளர்களைத் தான் சந்திக்கவில்லை, மாறாக பக்தர்களை தினசரி சந்தித்துக் கொண்டு தான் இருந்தேன்.
இது ஆசிரமமோ, மடமோ அல்ல, ஆன்மீக மையம். இங்கு யார் வேண்டுமானாலும் வந்து கடவுளை வணங்கலாம். தினசரி 2 வேளை பூஜை நடைபெறும். தற்போது சதுர்மாஸ்ய விரதம் இருந்து வருகிறேன். தொடர்ந்து இங்கு தங்கி எனது ஆன்மீக பணியைத் தொடருவேன் என்றார் குட்டிச் சாமியார்.
தற்ஸ்தமிழ்.கொம்
|
|
|
| கிட்டு மாமாவின் ஓவியங்கள்..! |
|
Posted by: kuruvikal - 08-22-2005, 08:07 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (8)
|
 |
கிட்டு மாமாவை கண்டிருக்கிறோம்...அறிஞ்சிருக்கிறம்.... அவர் பற்றி தெரிந்த சங்கதி அவர் ஒரு திறமையான போர் வீரன்....இயற்கையின் நேசன் என்பது...! தெரியாத சங்கதி அவர் ஒரு ஓவியன் என்பது....இதோ அவர் வெளிப்படுத்தி இருக்கும் தன் எண்ணங்களைக் காணுங்களேன் ஓவியமாக.... அதுவும் நவீன சித்திரைக் கலைக்குள் (Modern Art) தன் கைவண்ணத்தைக் காட்டி எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்....
<img src='http://www.sankathi.net/images/stories/August2005/kiddu_arts.jpg' border='0' alt='user posted image'>
தகவல் - சங்கதி
http://www.sankathi.net/index.php?option=c...=2226&Itemid=41
|
|
|
| புதிர்ப்பக்கம் |
|
Posted by: vasisutha - 08-22-2005, 12:14 AM - Forum: போட்டிகள்
- Replies (185)
|
 |
பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள்.
அங்கிருந்த கடைக்காரன்,
<span style='color:darkviolet'>''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?''
என்று கேட்டான்.
அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள். இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள்.
ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான். அவளும் அதை எடுத்துச் சென்றாள். அவனுக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று?</span>
:?: :?:
|
|
|
| பல்லை பாதுகாக்க |
|
Posted by: Rasikai - 08-21-2005, 11:31 PM - Forum: மருத்துவம்
- Replies (34)
|
 |
பல்லை பாதுகாக்க
பல்நோய் பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. உணவுப்பொருட்களை மென்று சாப்பிடும் போது குழம்பான உணவு பற்களின் இடுக்குகளிலும் ஈறுகளின் சந்துகளில் சிக்கிக் கொள்கிறது. அப்போது உமிழ்நீர் போன்ற ரசங்கள்
அதன் மீது படும் போது அழுகி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் அது ரத்தத்தில் விஷமாக கலந்து பயோரியா எனும் பல் நோயை உருவாக்கிறது.
உணவை சாப்பிட்டபின் வாயை சுத்தமாக கழுவாவிடின் பற்களில் பூச்சி விழுந்து சொத்தையாகிறது. சாதரணமாக நமது உடலில் ஒரு சதுர மீற்றர் தோலில் வலியை உணர்த்தும் செல் 200 தான் இருக்கும். ஆனால் பல்லில் 15 ஆயிரம் செல் முதல் 30 ஆயிரம் செல்கள் வரை உள்ளன. பல்லும் ஈறும் சேரும் இடத்தில் 75 000 செல்கள் உள்ளன. எனவே தான் பல்வலி அதிக வலியை கொடுக்கிறது. உடலில் மற்ற உறுப்புக்களில் ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ளமுடியும். ஆனால் பல்வலி ஏற்பட்டால் தாங்க முடியாது. இதற்கு காரணம் அந்த வலி மூளையையும், கண்களையும் தாக்குவதனால் தான்.
பல்வலியை தடுக்க வேண்டுமாயின் விட்டமின் ஏ சி டி கல்சியம் நிறைந்த உணவுவகளை சாப்பிட வேண்டும். தினசரி 16 அவுன்ஸ் பாலின் அளவு சேர்க்க வேண்டும். அதிக புளிப்பு அதிக இனிப்பு மிதம்மிஞ்சிய சூடான பாதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. கரி சாம்பல் மணல் போன்றவற்ரால் பல் விளக்ககூடாது.
|
|
|
| பயங்கரவாதத்தை ஒழிக்க பதினாறாவது ஆசீர்வாதப்பர் அறை கூவல் |
|
Posted by: AJeevan - 08-21-2005, 09:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>பயங்கரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களோடு
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
ஜெர்மன் முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்தில்
பதினாறாவது ஆசீர்வாதப்பர் அறை கூவல்</b>
<img src='http://www.virakesari.lk/VIRA/20050822/images/1708vdp1.jpg' border='0' alt='user posted image'>
மேற்கு ஜெர்மனி நகரான சோலோனுக் கருகிலுள்ள மெரீன் பெல்ட் என்னுமிடத்தில் இடம்பெற்ற
20 ஆவது உலக இளைஞர் தின விழாவில் பதினா றாவது ஆசிர்வாதப்பர் பிரார்த்னை நடத்துகி றார்.
இதையடு த்து நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆசிர்வாதப் பர், தமது தாயகமான ஜெர்மனுக்கு
தாம் மேற்கொண்ட நான்கு நாள் விஜயத் தினன நிறைவு செய்து கொண்டார்.
கோலோன், ஜெர்மனி,
பயங்கரவாதம் எங்கும் பரந்து விரிவடைந்து வருகிறது. இதனைத் தடுக்கும் பணியில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பதினாறாவது ஆசீர்வாதப்பர் முஸ்லிம்களுக்கு அறை கூவல் விடுத்து உரையாற்றினார்.
கோலோனில் நிகழ்ந்த முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசீர்வாதப்பர் உரையாற்றினார். ஜெர்மனின் பல பகுதிகளைச் சேர்ந்த முப்பது உயர் மட்ட முஸ்லிம் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
பயங்கரவாதத்தின் குரூர வெறியாட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு முஸ்லிம்களும் உதவ வேண்டும். இளைய தலைமுறையினருக்கு நேரிய வழியில் கல்வி புகட்டுவதற்கான உன்னத பெரும் பொறுப்பு இஸ்லாமிய ஆசிரியர்களுக்குண்டு என்றும் அவர் சொன்னார்.
ஆசீர்வாதப்பர் கடந்த காலத்திய யுத்தங்களையும் அழிவுகளையும் நினைவு கூர்ந்தார்.
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சண்டைகள் இடம் பெற்றுள்ளன. இரு தரப்பினரும் இறைவனின் பெயரை பயன்படுத்தி இருக்கின்றனர். எதிரியைக் கொல்வது இறைவனை பூரிக்க வைக்கும் ஒரு காரியமென கருதப்பட்டுள்ளது. இது ஒரு குரூரச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குரூர வெறியாட்டம் அநேகரின் உயிருக்கு பேராபத்தாக உள்ளது. உலக சமாதானத்தை நோக்கி முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடைமுறைகளுக்கு தடைக்கல்லாக அமைகிறது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இக்குரூர வெறியாட்ட அலையை நீக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40712000/jpg/_40712360_crowdafp203story.jpg' border='0' alt='user posted image'>
இக்கூட்டத்துக்குப் பின்னர் கோலோன் நகர வெளியரங்கில் மாபெரும் பிரார்த்தனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் குறைந்த பட்சம் 700,000 பேர் வரை கலந்து கொண்டனர். பதினாறாவது ஆசீர்வாதப்பர், ஆசியுரை நிகழ்த்தினார்.
அவர் தமதுரையில் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பொறுத்த மட்டில் விமர்சனத்துக்குரிய அம்சங்களும் உள்ளன. இது எமக்கு தெரியும். இறைவனும் எமக்கு உணர்த்தியுள்ளார். இது நல்ல மீன்களையும் தீய மீன்களையும் கொண்டவையாகவுள்ளது என்றார்.
<img src='http://images.wn.com/i/3e/57ebc62fbfa044.jpg' border='0' alt='user posted image'>
ஆசீர்வாதப்பர் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் தமது நான்கு நாள் ஜெர்மன் பயணத்தை நிறைவு செய்து கொண்டார். ஆசீர்வாதப்பராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் மேற்கொண்ட முதல் தாயகப் பயணம் இதுவாகும்.
veerakesari
|
|
|
|