Yarl Forum
"கட்டிப்பிடி" அருள் சுவாமினி "அம்மா" வைக் குத்த முயற்சி. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: "கட்டிப்பிடி" அருள் சுவாமினி "அம்மா" வைக் குத்த முயற்சி. (/showthread.php?tid=3587)



"கட்டிப்பிடி" அருள் சுவாமினி "அம்மா" வைக் குத்த முயற்சி. - வழுதி - 08-22-2005

<b>"கட்டிப்பிடி" அருள் சுவாமினி "அம்மா" வைக் குத்த முயற்சி.</b>

பக்தர் கூட்டத்தில் இருந்தவரொருவரே குத்த முயற்சித்து சூழ இருந்தவர்களால் நையப் புடைக்கப்பட்டுள்ளார்.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4172328.stm


- வழுதி


- KULAKADDAN - 08-22-2005

ஏன் என்ன பகையாம்


- SUNDHAL - 08-22-2005

பெண் சாமியார் அமிர்தானந்த மயியை கொல்ல கத்தியுடன் பாய்ந்த வன் அந்த ஆசிரமத்தின் ஊழியன் என தொpய வந்துள்ளது. அவரை நோக்கி கத்தியுடன் பாய்ந்தது ஏன் என்று விசாhpத்ததில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

பிரபல பெண் சாமியார் மாதா அமிர்தானந்தாமயி. கொல்லத்தில் உள்ள ஆசிரமத்தில் வைத்து அவரை பவித்திரன் என்ற நபர் கத்தியால் கொல்ல முயன்றது தொpந்ததே. கத்தியுடன் பாய்ந்த அவரை மாதாவின் சீடர்கள் 3 பேர் தடுத்து நிறுத்தியதால் மாதா உயிர் பிழைத்தார். பின்னர் அவரை ஆசிரம ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்தசம்பவத் தின்போது ஆசிரம ஊழியர்கள் ஜpதேஷ், அனில் ஆகியோருக்கு கத்திக்குத்து காயம்ஏற்பட்டது.

சீடர்„ பின்னர் அந்த ஆசாமியிடடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் பவித்திரன் (47) கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பொன்மணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் என்பது தொpயவந்துள்ளது. அமிர்தானந்த மயி மடத்திற்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் சேகாpக்கும் பணிபுhpந்தவன் என்பதும், அடிக்கடி மடத்திற்கு சென்று வந்த சீடன் என்பதும் விசாரணையில் தொpயவந்துள்ளது. பல சமயங்களில் மடத்திலே தங்கி தேவைப்படும் வேலைகள் செய்து வந்திருப்பதும் தொpயவந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு அதாவது கடந்த வெள்ளிக் கிழமை அவன் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக போலீசாhpடம் பவித்ரன் ஒப்புக் கொண்டுள்ளான். அதன் பின்னணியில் இந்த தாக்குதல் நடந்ததா என்ற கோணத்தில்போலீசார் விசாhpத்து வருகின்றனர். ஆனால் பவித்ரன் எதற்காக மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற விபரத்தை போலீசார் வெளியிட வில்லை. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கைது செய்து 24 மணி நேரம் ஆகி விட்ட நிலையி;ல் அவனை இன்று நீதிமன்றத்தின் முன் போலீசார் ஆஜர் படுத்தினர்.

வேண்டுகோள்„ இந்த நிலையில் கொல்லம் ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்த மயியை இன்று காலையில் நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது„-

ஆசிரமத்தில் நேற்று நடந்த அசம்பாவிதத்துக்காக எனது பற்றhளர்கள் யாரும் கோபம் அடைய வேண்டாம். இந்த உலகில் பிறந்த அனைவருமே ஒருநாள் இறக்கக்கூடியவர்கள் தான். இதை மனதில் நிறுத்தித் தான் நான் செயல்படுகிறேன். நான்தொடர்ந்து என் பணிகளைச் செய்வேன். என்னைச் சந்திக்க வரும் பக்தர் களுக்கு தொடர்ந்து நான் தாpசனம் தருவேன். நேற்று நடந்த சம்பவத்திற்காக என் பக்தர்கள் எந்த பிரச்சனையும் ஏற்படுத்த வேண்டாம். அதை மறந்து அந்த மனிதனை மன்னித்து விட்டு விடுங்கள் என பக்தர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

விசாரணை„ இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் உம்மன் சாண்டி இன்று அறிவித்தார்.

அம்மா„ பெண்சாமியார் அமிர்தானந்த மயியை அம்மா என்றே அனைவரும் அழைக்கின்றனர். அனைவரையும் கட்டித்தழுவி ஆசிர்வதிக்கும் சிறப்பு குணம் அம்மாவுக்கு உண்டு. உலகம் முழுவதும் அவருக்கு பக்தர்கள் உள்ளனர். ஆந்திராவில் உள்ள புட்டபருத்தி சாய்பாபா போல சமூக தொண்டுகளையும் அம்மா செய்துவருகிறhர். குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய வீடுகள் கட்டி கொடுத்துள்ளார். சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படகுகள் மற்றும் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார். மொத்தம் 1400 வீடுகள் கட்டிக்கொடுக்க அம்மா திட்டமிட்டுள்ளார். இதுவரை 121 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இது வரை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மாவை தவிர அரசாங்கம் உட்பட வேறுயாரும் வீடுகள் கட்டிக் கொடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மடம் சார்பாக கொல்லத்தில் நடத்தப்பட்ட விழாவில் கேரள சபாநாயகர் தெரம்பில் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு 300 பெண்களுக்கு தையல் எந்திரம்வழங்கினார். 5000 குழந்தைகளுக்கு ஆடைகளும் வழங்கப்பட்டன.

பவித்ரன் பைத்தியம் அல்ல

மாதா அமிர்தானந்த மயியை கொல்வதற்காக கத்தியுடன் பாய்ந்த பவித்ரன் பைத்தியக்காரன் என்றும் வதந்தி பரவியது. ஆனால் இதை ஏற்க முடியாது என்று அந்த ஆசிரமத்தை நிர் வகித்து வரும் சுவாமி தியானஅமிர்தா கூறினார். அம்மாவின் பக்தன் என்றhல் ஏன் கத்தியுடன் வந்தான்? அம்மாவை நோக்கிச்சென்றது ஏன்? அவனை மடக்கியவர்களை கத்தியால் குத்தியது ஏன்? அவனை பிடித்த போது பார்வை யாளர் பகுதியில் இருந்து 2 பேர் ஆவேசமாக எழுந்து அவனை விட்டு விடும்படி கூறியது ஏன்? என்று அவர் சரமாhpயாக கேள்வி எழுப்பினர்.

என்திட்டம் தோற்றது

மாதா அமிர்தானந்த மயியை நோக்கி கத்தியுடன் பாய்ந்த பவித்ரனை சுற்றிவளைத்து பிடித்த போது , …… என் திட்டம் தோல்வி அடைந்து விட்டது†† என்று கத்தி னான். அதனால் அவன் கொலை செய்யும் நோக்கத்துடன் தான் வந்ததாக மடத்தின் சீடர்கள் சந் தேகிக்கிறhர்கள். அவனது வருகை மர்மமாக இருக்கிறது என்றும் கூறினர்.


- MUGATHTHAR - 08-22-2005

Quote:அமிர்தானந்த மயியை அம்மா என்றே அனைவரும் அழைக்கின்றனர். அனைவரையும் கட்டித்தழுவி ஆசிர்வதிக்கும் சிறப்பு குணம்

அட இதைப்பாத்திட்டுத்தான் கமல் வசூல் ராஜாவிலை செய்து காட்டியிருப்பார் கட்டிப்பிடி வைத்தியம் எண்டு அதுவா இது?????


- வினித் - 08-22-2005

MUGATHTHAR Wrote:
Quote:அமிர்தானந்த மயியை அம்மா என்றே அனைவரும் அழைக்கின்றனர். அனைவரையும் கட்டித்தழுவி ஆசிர்வதிக்கும் சிறப்பு குணம்

அட இதைப்பாத்திட்டுத்தான் கமல் வசூல் ராஜாவிலை செய்து காட்டியிருப்பார் கட்டிப்பிடி வைத்தியம் எண்டு அதுவா இது?????

±ýÉ Ó¸ò¾¡÷ Ò¾¢Â ¦¾¡Æ¢ø ¦¾¼í¸ ¬¨º §À¡Ä
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->