Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 304 online users.
» 0 Member(s) | 300 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,428
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,235
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,530
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  புலத்தில் தமிழர் கூத்துக்கள்..!
Posted by: kuruvikal - 08-23-2005, 04:07 AM - Forum: புலம் - Replies (82)

<img src='http://sooriyan.com/images/stories/jokes01/beauty1.jpg' border='0' alt='user posted image'>

ரொறன்ரோ நகரில் இம்மாதம் [b]ஒரு தமிழ் அழகுராணிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான விளம்பரமொன்றினை தமிழ் தொலைக்காட்சியில் பார்த்தபோது இக்கட்டுரை எழுதவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

இந்த அழகு ராணிப்போட்டியினை ரொறன்ரோவை அண்டிய மார்க்கம் நகரில் இயங்குகின்ற ஒரு தமிழ் அழகுபடுத்தும் நிலையம் ஒழுங்கு செய்கின்றது. இவ்வியாபாரா நிலையத்தைப் பொறுத்த வரையில் இந்நிகழ்வு மிகவும் சக்தி வாய்ந்த விளம்பரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எனினும் கலாச்சார கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது இந்நிகழ்வானது ஒரு ஆழ்ந்த தாக்கத்தினை புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளைய சந்தியினரில் ஏற்படுத்தப் போகின்றது என்பது புலனாகும்.

அழகு ராணிப் போட்டி பற்றிய விமர்சனத்தை சில பெண்கள் ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு என தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். வேறு சிலர் பழமைவாதம் என ஒதுக்கி விடுகின்றார்கள். எனினும் உண்மை என்னவெனில் அழகு ராணிப்போட்டிகள் இன்னமும் நடைபெறுவது தான் உண்மையில் ஆண் ஆதிக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு ஆகும். அழகு ராணிப்போட்டியில் பங்கு கொள்ளும் எந்தப் பெண்ணினதும் அடிப்படை எண்ணம் எதிர்ப்பாலாரின் அங்கீகரிப்பினை பெறுவதை நோக்கியே அமைந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இன்னமும் சொல்வதானால் இவ்வகையான போட்டிகள் இளம் பெண்களது சிந்தனையை ஆண் அங்கீகரிப்பு நோக்கி வழர்க்கின்றன என்று கூறலாம். ஏனினும் இவ்வாறான போட்டிகள் அழகை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை என்ற வாதமும் இருக்கத் தான் செய்கிறது.

நவீன அழகு ராணிப் போட்டிகளில் அழகை மட்டும் மதிப்பிடுவதற்கு மாறாக பல சிக்கலான சமுதாயக் கண்ணோட்டத்தோடு கூடிய கேள்விகளிற்கு போட்டியாளர்கள் எவ்வாறு பதிலளிக்கின்றார்கள் என்பதைக் கொண்டே வெற்றி நிட்சயிக்கப்படுகின்றது என்ற வாதம் இப்போட்டியினை ஆதரிப்போரால் எழுப்பப்பட்டுக் கொண்டுஇருக்கின்றது. எனினும் இவ்வாதம் எடுத்த எடுப்பிலேயே தோல்வி காண்கின்றது. எவ்வாறெனின், இச்சிக்கலான கேள்விகளிற்கான பதில்களாக போட்டியாளர்களிடம் வியத்தகு பதில் இருக்குமாயின் அப்பதில்களை அவர்கள் வெளியிடுவதற்கு வேறு ஊடகங்கள் இல்லையா இவ்வுலகில? இப்போட்டிதாரர்களின் பதில் எவையேனும் இத்தனை ஆண்டு காலத்தில் வியத்தகு பதிலாகக் கருதப்பட்டு போட்டிகள் முடிந்த பின்னர் ஊடகத்துறையினராலோ அல்லது வேறு யாராலேனோ பேசப்பட்டுள்ளனவா? இவர்களின் பதில்கள் சமுதாய பிரச்சினைகள் எதற்கேனும் விமோசனம் கொடுத்துள்ளனவா? அதற்கும் மேலாக, அழகு ராணிப் போட்டியினைப் பார்வையிடும் தொகையினரில் எத்தனை நபர்கள் இவ் அழகிகள் கூறும் பதிலைக் கருத்திற் கொள்கிறார்கள? ஆதாரப்படுத்துவதற்கான விடயங்கள் ஏதமில்லாது உப்புச் சப்பில்லாமல் இவர்கள் கூறும் பதிலினை ஒரு சமூகவியல் மாணவி பரீட்சையில் பதிலாக எழுதின் பிழைபோடும் அல்லது அரை மதிப்பெண் கொடுக்கும் உலகம் அழகுராணிப் போட்டியில் மட்டும் இவ்விடைகளைப் பாராட்டுகின்றது என்றால், இவ்வழகிகளை இயல்பிலேயே அறிவாற்றல் குறைந்த மனிதர்களாக இப்போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் கருதுகின்றார்கள் என்றும் கொள்ளலாம் அல்லவா?. மேலும் இத்தகைய பதில்களிற்கும் நீச்சல் உடைக்குமான தொடர்பு என்ன? எனவே இப்போட்டிகள் அறிவுசார்ந்தவை என்ற வாதத்தினை முதலில் ஓரங்கட்டுவோம்.

அழகு என்பது தோலோடு நின்று விடும் ஒன்று என்ற மாயையினை இத்தகைய போட்டிகள் பல இளம் யுவதிகளின் மனங்களில் விதைக்கின்றன. அத்தோடு மட்டுமல்லாது ஒரு பெண் அழகுடையவளா இல்லையா என்பதனை ஆணின் இரசனை தான் முடிவு செய்கின்றது என்ற ஆணாதிக்க சிந்தையும் இளம் பெண்களின் மனதில் விதைக்கப்படுகின்றது. இவ்விதைப்பின் விளைவே பல இளம் பெண்கள் ஆண்களின் அங்கீகாரம் வேண்டி, தமக்கு உடன்பாடு அற்ற பல விடயங்களை இப்புலம் பெயர் நாடுகளில் மேற்கொள்வதற்குக் காரணமாக அமைகின்றது. எத்தனையோ திறமை மிக்க பல இளம் யுவதிகள், குறிப்பாக நம்மவர்கள், இளவயதில் தவறான மேற்படி நம்பிக்கைகளை மனதிற் பதித்து இந்நம்பிக்கைகளின் வாயிலாக தமது எதிர்காலத்தை வீணடித்து பின் அதே ஆண்களால் பட்டங்கள் கொடுக்கப்பட்டு விரக்தியின் விளிம்பில் நிற்பதும் தற்கொலை செய்வது நடந்த வண்ணம் தான் உள்ளது. இவர்களின் நிலையால் இவர்களது பெற்றோர்கள் உற்றார்கள் அடையும் நிலை அது வேறு. இளையோரை மட்டுமா பாதிக்கின்றன இத்தகு அழகு சார் சிந்தனைகள்?

திருமணமான தம்பதிகளைக் கூட இத்தவறான அழகு சார் சிந்தனைகள் எங்கெங்கோ இட்டுச் செல்கின்றன. உதாரணமாக, தனது கணவனை விட தான் அதிகம் அழகு என்ற சிந்தனை மனைவியிடமோ அல்லது தனது அழகிற்குத் தன் மனைவி மிகச் சுமார் என்ற எண்ணம் கணவனிடமோ ஏற்படும் போது தகாத தொடர்புகள் தேடி வருகின்றன. இத்தகைய விபரீதமான அழகு சார் சிந்தனைகளை அழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகளும் அவற்றின் போது எழுகின்ற விசில் சத்தமும் ஊக்குவிக்கின்றன.
தவறான சிந்தனையால் குடும்பம் சிதைகின்றது குழந்தைகளின் எதிர்காலம் கேழ்விக் குறியாகின்றது. புலம் பெயர் நாடுகளில் நம்மவர் மத்தியிலும் கவலைக்கிடமான வகையில் காணப்படும் திருமணத்தின் பின்னான இதர தொடர்புகள், இத்தொடர்புகளால் பிறக்கின்ற காகத்தின் கூட்டுக் குயில்கள், விவாகரத்துக்கள், சிறிய பிரச்சினைகளையும் தீர்க முயலாது இலகுவில் விவாகரத்துப் போன்ற் பாரிய முடிவுகளை எடுக்கும் தன்மை, வருமானத்திற்கு மேலான அழகியற் செலவுகள், இதனால் ஏற்படும் மீழமுடியாத கடன் தொல்லைகள், இப்பாரிய கடன் தொல்லையில் இருந்து மீழ்வதற்கான பணம் சேர்ப்பதற்கான குற்றங்கள் முதலிய பல பிரச்சினைகளிற்கு அழகு ராணிப்போட்டி போன்ற மட்டமான நிகழ்வுகள் காரணமாக அமைகின்றன.

அழகு சார் சிந்தனை தூண்டப்பட்டு ஆனால் சமுதாய பயத்தினால் தாம் அத்தகு நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்கும் சில தாய்மார்கள் தமது பிள்ளைகளை இத்தகு செயல்களில் ஊக்குவிக்கும் கொடுமையும் நம் கண்முன்னால் நிகழ்ந்த வண்ணம் தானுள்ளது.

மேற்படி உடனடிச் சமுதாயப் பிரச்சினைகளிற்கும் மேலால் முழு தமிழ் இனததிற்கும் கூட இத்தகு செயல்கள் பாதகமாக அமைகின்றன. எவ்வாறு எனின், ஒரு மக்கள் கூட்டமானது ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கான தன்மைகளில் ஒன்றாக தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பின்னணி அமைகின்றது. எமது தனித்துவமான கலாச்சாரத்தை இழப்பதன் வாயிலாக புலம் பெயர் சமூகத்தில் பலர் தமிழ் தேசியத்தில் இருந்து விடுபடும் ஆபத்தினைச் சந்திக்கின்றார்கள். தற்போதைக்கு இது உடனடிப் பிரச்சினை போன்று வெளிப்படையாகத் தெரியாவிடினும் அடுத்தடுத்த சந்ததிகளில் நம்மவர் பலரும் தனித்துவ அடையாளம் அற்ற கரிபியன் தீவின் வம்சாவளி இந்தியர் போல் ஆகும் அபாயம் கண்கூடு. இவ்வாறான பல பாதகமான விளைவுகளை அழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகள் கொண்டுள்ள போதிலும் இந்நடைமுறையினை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அழிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

அழகான பெண்களின் கவர்ச்சி ஆண்களை ஈர்ப்பது இயல்பு. எனவே இத்தகு விழாக்களிற்கு அதிக பார்வையாளர்கள் வருவதும் இயல்பு. இவ்வகையில் இத்தகைய நிகழ்வுகளை வியாபார அமைப்புகள் பணம் சேர்க்கின்ற நோக்கில் ஒழுங்கு செய்வதும் இயல்பு. இவ்விடயத்தில் பாதிப்படைவன இளம் பெண்கள் மற்றும் எமது இனத்தின் இருப்பு ஆகிய இரண்டும் மட்டுமே.

ஆழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகள் அனைவரும் கூட்டாக முயன்றால் மட்டுமன்றி வேறெந்த விதத்திலும் அழிக்கப்படக் கூடியன அல்ல. இதன் முதற்கட்டமாக வியாபார நிறுவனங்கள் தாம் எச் சமூகத்திடம் இருந்து செல்வம் சேர்க்கின்றார்களோ அச்சமூகத்தின் மேல் சற்றேனும் அக்கறை கொண்டு இத்தகு பாதகமான நிகழ்வுகளை நடத்தாது இருக்க வேண்டியது அவசியமாகின்றது. மாறிச் செயற்படும் வியாபாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியமாகின்றது. அனைத்திற்கும் மேலால் பெற்றோர்கள் தமது குழந்தைகள் இவ்விதத்தில் உபயோகப்படுத்தப்படுவதை தடுப்பது அவசியமாகின்றது.

இப்புலம் பெயர்ந்த சமூகத்தில் பெற்றோரால் தம்பிள்ளைகள் மீது போதியளவு கண்டிப்பை மேற்கொள்ள முடிவது இல்லை என்ற வாதமும் கேட்கத்தான் செய்கின்றது. ஆனால் இது சற்றும் ஏற்றுக் கொள்ளக் முடியாத வாதம். தெரியாவிடின் தெரிந்து கொள்ளுங்குள்! எவ்வாறு வீடு வாங்க ஈட்டுக்கடன் எடுப்பது? ஏந்தெந்த வழிகளில் வங்குறோத்து அடிப்பது? இந்நாட்டின் கோடைகாலாத்தில் கனிதரும் அப்பிள் மரத்தின் பூக்களைப் பூச்சி அரிக்காதிருக்க என்ன மருந்து அடிப்பது? அம்மருந்தை மலிவாக எக்கடையில் வாங்குவது? வீட்டிற்கு எந்தெந்த காலத்தில் என்னென்ன பராமரப்பு செய்வது? போன்ற புலம் பெயர் சமூகத்து பிரச்சினைகள் அனைத்திற்குமான பதில்களை மொழி மற்றும் பல தடைகளையும் தாண்டி நம்மவரால் புரிந்து கொள்ள முடியுமானால் குழந்தை வழர்ப்புப் பற்றி மட்டும் ஏன் புரிந்து கொள்ளமுடியாது. பணம் தேடும் நேரத்தைக் குறைத்தால் நேரம் தானாகக் கைக்கு வரும். ஏனவே இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முதல் பங்கு பெற்றோரையே சாரும் என்பதில் வேறு கருத்திற்கு இடமேயில்லை.

முடிவாக, ரொறன்ரோவில் இம்மாதக் கடைசியில் இடம்பெற இருக்கும் அழகு ராணிப்போட்டி எம்மக்களால் பூரண தோல்வியடையச் செய்யப்பட்டு எதிர்காலதில் இந்நிகழ்வுகளை ஓழுங்கு செய்யும் எண்ணம் எவரிற்கும் எழாத வகையில் நம்மக்கள் செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

நன்றி

குமரன் - சூரியன்.கொம்

Print this item

  அன்புடன் முதல் வணக்கம்!
Posted by: inizhaytham - 08-23-2005, 01:15 AM - Forum: அறிமுகம் - Replies (34)

யாழ்.கொம் வாசகர்களுக்கு அன்பின் வணக்கம்!

புதிய பக்கம்இ புதிய முகங்கள்இ புதிய கோணத்தில் புதிய பார்வை...

அனைத்தும்இ புதிதாக இணையும் புதியவன் என்னையும் இரு கரம் கொண்டு வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன்...

தொடரும் என் முதல் வணக்கம்...

என்றும் அன்புடன் புதியவன் இவன்...

Print this item

  please help me
Posted by: Maruthankerny - 08-23-2005, 12:12 AM - Forum: அறிமுகம் - Replies (9)

நான் புதிதாக பல விடயங்களை எழுத முயற்சி செய்யும்போதெல்லாம்.......விசேட உறுப்பினர்கள் மட்டுமே இங்கு எழுத முடியும் என்றால்.......விசேட உறுப்பினராக நான் என்ன செய்ய வேண்டும்?????

Print this item

  பாகிஷ்தானில் நடந்த ரயில் விபத்தின் படத்தொகுப்பு.
Posted by: Rasikai - 08-22-2005, 11:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

[img][Image: traintop4lq.jpg][/img]
<img src='http://img386.imageshack.us/img386/4601/ac162fv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img386.imageshack.us/img386/2793/ac156sv.jpg' border='0' alt='user posted image'><img src='http://img386.imageshack.us/img386/8034/ac133ff.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img386.imageshack.us/img386/3273/ac126jj.jpg' border='0' alt='user posted image'><img src='http://img386.imageshack.us/img386/411/ac113bv.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img386.imageshack.us/img386/2879/ac107ks.jpg' border='0' alt='user posted image'><img src='http://img386.imageshack.us/img386/1613/ac92ko.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img386.imageshack.us/img386/4955/ac87ha.jpg' border='0' alt='user posted image'><img src='http://img386.imageshack.us/img386/9107/ac79pv.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img386.imageshack.us/img386/671/ac60nn.jpg' border='0' alt='user posted image'><img src='http://img386.imageshack.us/img386/1882/ac56mf.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img386.imageshack.us/img386/494/ac33oh.jpg' border='0' alt='user posted image'><img src='http://img386.imageshack.us/img386/5822/ac16en.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  வெக்டோன் தொலைக்காட்சி தமிழ் தேசியத்திற்கு விரோதமானதா?.
Posted by: msuresh - 08-22-2005, 10:13 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (1)

ஆனந்த சங்கரி வெக்டோன் தொலைக்காட்சிக்கு விசேட பேட்டி.
http://www.nitharsanam.com/?art=11425

Print this item

  பராக்! பராக்! மகாசனங்களே… எழுந்திருங்கள்
Posted by: adsharan - 08-22-2005, 09:35 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

பராக்! பராக்! மகாசனங்களே… எழுந்திருங்கள்… இதோ வருகிறார்… எங்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா.…இவர் பெற்றுள்ள பெருமைகள் ஒன்று இரண்டல்ல.


இவரது பெற்றோர்கள் இருவரும் பிரதமர்கள்… எனவே பிரதமர்களையே தாய், தந்தையாகக் கொண்ட உலகின் ஒரேயொரு ஆண் மகன் இவரே. அத்தோடு இவரது சகோதரி இந் நாட்டின் தற்போதைய தலைவி…

இத்தகைய பெருமைகள் தாங்கிய 56வயதுடைய பிரமச்சாரிய மகோன்மணி இதோ வருகிறார்… பராக்! பராக்!!

என்ற அறிவித்தல் இல்லாமல் சத்தம் சந்தடியின்றி வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் அநுரா பண்டாரநாயக்கா.



கதிர்காமரை தன்னால் இயன்றளவு வெறுத்து ஒதுக்கிய ஒரு சிங்கள ஆண் மகன் என்று பெருமைப்படக்கூடிய அநுரா பண்டாரநாயக்கா, கதிர்காமரின் அமைச்சுப் பொறுப்பையே ஏற்பது அரசியல் விந்தை.

1977ம் ஆண்டு பாராளுமன்றப் பிரவேசத்தை நிகழ்த்திய அனுரா பண்டாரநாயக்கா இடையே தனது சகோதரியுடனான முறுகலினால் இடையே சில ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தார். அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், வெளிவிவகார ஆலோசகராகவும் பதவி வகித்ததோடல்லாமல் அக் கட்சியின் சார்பாக பாராளுமன்றில் சபாநாயகராகவும் இருந்தவர்.

அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, கதிர்காமரைக் கிள்ளுக்கீரையாக ஒரு பிடிபிடித்து அவர் ஒரு அரசியல்வாதியே இல்லை, சுயநலத்திற்காக சிறீலங்காவின் அரசியலைப் பயன்படுத்துகிறார் எனப் பல தடவைகள் குற்றஞ்சாட்டியதோடு, கதிர்காமரிற்குச் சவாலொன்றையும் விட்டிருந்தார்.

தனது சகோதரி சந்திரிகாவின் சேலைத் தலைப்பில் தொங்கும் ஒரு நபரே கதிர்காமர் என்று தெரிவித்த அநுரா பண்டாரநாயக்கா, மலினமான பாராட்டுதல்களுக்கும், பிரச்சாரத்திற்கும் அலையும் ஒரு நபரே கதிர்காமர் என்றும் குறிப்பிட்டதோடு,

“கதிர்காமர் தேர்தலில் நின்று பத்து வாக்குக்களை வென்று காட்டட்டும், கொழும்பிலோ அல்லது வட பகுதியிலோ போட்டியிட்டு, ஐந்து தமிழர்களின் வாக்குக்களையாவது பெற்றுக்காட்டட்டும். இதனை அடுத்த தேர்தலில் அவர் செய்து காட்டுவரா? இதனை நான் அவருக்குச் சவாலாக விடுக்கிறேன்” என பாராளுமன்றில் கேட்டிருந்தார் அநுரா பண்டாரநாயக்கா.

அது மட்டுமல்ல, சிறீலங்கா வரலாற்றில் இதுவரை கண்டிராத மோசமான வெளிவிவகார அமைச்சராகக் கதிர்காமரை வர்ணித்ததோடு, கதிர்காமரால் வெள்ளவத்தைக்குப் போக முடியுமா இல்லை, அநுராதபுரத்திற்கு அப்பால் போகமுடியுமா? அல்லது தமிழர்களின் வேதனைகளைத் தான் அவரால் அறியமுடியுமா எனவும் கேட்டிருந்தார் அநுரா பண்டாரநாயக்கா.

காலத்தின் கோலமாக, கதிர்காமர் யாராலோ கொல்லப்பட, அவரது பதவியை ஏற்றிருக்கிறார் அநுரா பண்டாரநாயக்கா. அடுத்த அரச தலைவருக்கான வேட்பாளராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த பிரதமாராகும் வாய்ப்பைக் கொண்டுள்ள அநுராவிற்கு இன்னொரு தகுதி வழங்கும் வாய்ப்பாகவும் இது இருக்கலாம்.

ஏனெனில் எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் சந்திரிகா என்கிற பெயர் சிறீலங்கா அரசியலில் இருந்து மெலிதாக நீங்கிவிடும். எனவே அதன் பிறகும் தங்கள் குடும்ப அரசியலின் பிரகாசம் மங்கிவிடக் கூடாதென்ற விருப்பால் அநுராவைத் தூக்கிவிட்டேயாக வேண்டிய கட்டாயம் சந்திரிகாவிற்கு.

ஆனால் இப்படியான அநுராவிற்கு பலம் அவரது பலவீனமே. யாரையும் எந்நேரத்திலும் எதிர்த்துவிட்டுப் போகும் ஒரு தன்மையுடையவர். தரக்குறைவாக விமர்ச்சிக்கும் தன்மையுடையவர். அதனையே அவர் தனது பலமாகக் கருதுபவர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோது, தனது சகோதரியைக்கூட ஒரு கை பார்த்தவர்.

ஒரு உதாரணத்திற்கு, தனதும் சந்திரிகாவினதும் வீடுகள் அருகருகே என்றும் பிரேமதாசா இறந்த போது சந்திரிகா பால்புக்கை பொங்கியும், விருந்தளித்தும் மகிழ்ந்ததாகத் தெரிவித்து தனது குடும்ப விவகாரத்தையே செய்தியாக்கியிருந்தார்.

இவ்வாறான பலவீனங்களைக் கொண்டுள்ள அநுரா, தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக சிங்களத்தின் இருபெரும் கட்சிகளும் ஒரே முடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை விருப்பாகக் கொண்டுள்ளதாகக் கடந்த காலத்தில் தெரிவித்திருந்தார். அநுரா, அரசியற் குடும்ப வாரிசு என்ற காரணத்தினால் இராஜதந்திர கையாளுகை அவருக்குப் புதிதல்ல. எனினும் அதனை அவர் கையாளப் போகும் முறையையே நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஏனெனில் தமிழர்கள் சம்பந்தமாக விவகாரத்தில், கடந்த காலப் பரப்புரையை மேற்கொள்ள முடியாதபடி உண்மைகளை அனைத்துலகும் உணர்ந்துள்ளன. சுனாமி மீளமைப்புக் கட்டமைப்பிற்கான அவற்றின் ஆதரவு இதற்கான இன்றியமையாத உதாரணம். எனவே உண்மைகளைத் தவிர்த்து கடந்த காலத்தைப் போன்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் அநுராவிடம் இந்தப் பொறுப்புப் போய்ச் சேர்ந்துள்ளது.

மறுபுறமாகத் தமிழர் தரப்புத் தொடர்பாக பலவாறான கருத்துக்களை இவர் கடந்த காலத்தில் தெரிவித்து வந்தாலும், கருணாவை உல்லாசத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவே சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார் என்ற செய்தியை ஊடகங்கள் பிரசுரித்திருந்த போது, அது தொடர்பாக ஊடகவியலாளர்களைச் சந்தித்த அநுரா தெரிவித்த கருத்துக்கள் தமிழர் தரப்பிடம் அவர் கொண்டுள்ள “மரியாதை”யை எடுத்துக் காட்டியது.

…நான் கருணா என்ற நபரை எனது வாழ்வில் எப்போதுமே சந்தித்ததில்லை. எனக்கு அவ்வாறான தேவையுமில்லை. யாரையுமே நான் வேறு நாடுகளிற்கு கூட்டிச் செல்லவுமில்லை. இது என் மீதான ஒரு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தச் செய்தியை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு கருதுவாரே என்பதே எனது கேள்வியாகவுள்ளது…

மகாசனங்களே! பராக்... பராக்… இதோ அநுரா வருகிறார்
நன்றி puthinam

Print this item

  சுவிசில் பல பகுதிகள் வெள்ளத்தில்
Posted by: AJeevan - 08-22-2005, 09:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (21)

<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050822_6025728_0.jpg' border='0' alt='user posted image'>
சுவிசில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பல பகுதிகள் வழி , வேகமாக வழிந்து செல்லும் மழைதண்ணி மக்களது சொத்துக்களை அடித்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் - போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இரு தீயணைப்புப் படை வீரர்கள் மரணமாகியுள்ளார்கள்.

<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050822_6027288_0.jpg' border='0' alt='user posted image'>
President Schmid (right) visits a flooded area
சுவிசின் அதிபர் சுமித் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதுவித பாதுகாப்புமின்றி தனியாக வந்து பார்வையிடுகிறார்.
வேதனையில் தவிக்கும் மக்களுக்கு அவரது செயல்பாடுகள் ஆறுதலாக இருப்பதைக் காண முடிகிறது.

சுமார் ஒரு மிலியன் சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது.

<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050822_6025761_0.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050822_6025716_0.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050822_6025720_0.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050822_6025697_0.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2005/sriimg20050822_6025754_0.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  பாரீஸ் வாகன விபத்தில் தமிழ் பெண்ணும் குழந்தையும் பலி
Posted by: வினித் - 08-22-2005, 05:38 PM - Forum: புலம் - Replies (11)

பிரான்ஸ்: பாரீஸ் வாகன விபத்தில் தமிழ் பெண்ணும் குழந்தையும் பலி
[திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2005, 22:24 ஈழம்] [புதினம் நிருபர்]
பாரிசில் நடைபெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கைத் தமிழ் பெண்னொருவர் தனது 3 வயது குழந்தையுடன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.


இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிற்றுண்டிச் சாலையொன்றில் தனது குழந்தையுடன் தேனீர் அருந்திக் கொண்டிருக்கையில் வேகமாக வந்த வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து சிற்றுண்டிச் சாலைக்குள் உட்புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலியானவர் சுஜாதா நடராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்தின் போது இவரது கணவர் சற்றுத் தொலைவில் தனக்கு அறிமுகமான ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தமையினால் அவர் தப்பியுள்ளார்.

இவர்களது ப+தவுடல்கள் உறவினர்களின் கோரிக்கையின் பேரில் இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை பாரிசிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் மேற்கொண்டுள்ளது

www.puthinam.com

Print this item

  இஸ்ரேலின் காசா கைய்யளிப்பு
Posted by: kurukaalapoovan - 08-22-2005, 05:07 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (1)

இஸ்ரேல் 40 வருடங்களிற்கு பிறகு காசா குடியேற்றத்திட்டத்தை கைவிட்டுச் செல்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் கடந்த 50 வருடங்களாக மாறி மாறி வந்த குடியேற்றத்திட்டங்களால் பெருமளவு தமிழர் தாயகப்பிரதேசங்கள் சூறையாடப்பட்டு இன்னும் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன.

IRA அயுதக்கையளிப்பு பற்றி அறிக்கை வந்ததும் அது புலிகளிற்கு ஒரு முன் உதாரணம் என இனவாதிகளும் அதன் அடிவருடிகளும் அங்கலாய்த்தார்கள். ஆனால் காசா குடியேற்றத்திட்டம் கை விடப்படுவது பற்றி தமிழர் தரப்பிலும் இது வரை எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை.

இதன் பின்னணியில் (தவறுதலாகவோ என்னவோ) கொழும்பை மய்யமாக கொண்ட ஆங்கில வார இதழுக்கு தமிழ்ச்செல்வன் வழங்கிய செவ்வி Eelam map is negotiable என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்கள் என்ன?

Print this item

  மணிமேகலை
Posted by: Rasikai - 08-22-2005, 04:49 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (99)

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பற்றிய கதையை சுருக்கமாக இங்கு போடலாம் என நினைக்குறன். மணிமெகலை என்னும் காப்பியத்தை எழுதியவர் கூலவாணிகன் சாத்தனார் ஆவார்.

மணிமேகலை

சோழ வளநாட்டின் புகழ்பூத்த பெரும் பதியான காவரிபூம்பட்டினத்தின் பழம் பெயர் "சம்பாபதி" என்பதாம். இந்தப் பெயர் தாங்கிய ஒரு பெண் தெய்வம், காவரிப்பூம்பட்டினத்தைக் காவல் காத்து, பகையரசர்களிடமிருந்து மட்டுமில்லாது இயற்கையில் எழுகின்ற நோய் நொடிகளிலிருந்தும் இந்தப் பதியிலுள்ள மக்களைக் காத்து வந்ததால் இதற்குச் 'சம்பாபதி' என்னும் பெயர் ஆயிற்று. ......

Arrow தொடரும் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Print this item