Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 503 online users.
» 0 Member(s) | 501 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,427
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,235
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,529
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  தமிழ் மக்கள் மீதான சந்தேகப்பார்வை
Posted by: வினித் - 08-24-2005, 09:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

தமிழ் மக்கள் மீதான சந்தேகப்பார்வை

தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கைதுகள், விசாரணைகள் யாவும் வெறுமனே தமிழ் மக்களை இம்சைப்படுத்துவதாகவும், அநாவசியமான தொந்தரவுகளுக்கு ஆளாக்குவதாகவும் இருப்பதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர்.

சாதாரணமாக கொழும்பிலுள்ள தமிழ் இளைஞர்கள், யுவதிகள் தங்கள் தேவைகளுக்காக வெளியில்கூட நடமாட முடியாத வகையில் பொலிஸாராலும் இதர பேரினவாதக் குழுக்களாலும் ஆக்கிரமிப்புக்கும், தாக்குதல்களுக்கும் இலக்காவதாகக் கூறப்படுகின்றது.

அது மாத்திரமன்றி, செய்தி சேகரிப்பு பணிகளுக்கு செல்லும் தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதுடன், அவர்கள் தாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்களும் இலங்கையில் தொடர்ந்து வருகின்றன.

மனிதனை மனிதன் வேட்டையாடும் இழிவான கலாசாரம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதனாலேயே இலங்கை சர்வதேச அரங்கில் பல்வேறு தடவைகள் தலைகுனிவைச் சந்திக்க நேர்ந்தது. அதனை எந்த வகையிலும் கருத்தில் கொள்ளாது தொடரும் அநாகரிகங்கள் இந்த நாட்டை மோசமான நிலைமைக்கே இட்டுச் செல்வதாக இருக்கும்.

நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு பொலி­ஸாரிடமும், பாதுகாப்புப் படையினரிடமுமேயுள்ளது. அதனை அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்களேயானால் நாடு பேரழிவை நோக்கி அடியெடுத்து வைப்பதாகவே கொள்ள வேண்டும்.

தற்பொழுது நாட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களும் தமிழ் மக்களை புறந்தள்ளுவதாகவும், சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதாகவுமே அமைந்திருப்பதாக தமிழ் மக்கள் பலரும் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

இன ஒருமைப்பாட்டையும், புரிந்துணர்வையும் வளர்க்க வேண்டிய நிலையில் ஒரு சில பேரினவாத அரசியல் கட்சிகள் இன ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான காரியங்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

சாதாரண மக்களாக இருப்பினும் சரி, ஊடகவியலாளர்களாக இருப்பினும் சரி ஒருவரது கடமையை தடுத்து நிறுத்த முனைவதோ, அன்றேல் தாக்க முற்படுவதோ அடிப்படை உரிமை மீறல் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர முன்வர வேண்டும்.

போகும் போக்கில் கொழும்பிலோ, அல்லது வடக்கு கிழக்கு தவிர்ந்த இதர இடங்களிலோ தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதவாறு "கால் கட்டுப் போடும்' முயற்சிகள் தொடருகின்றனவோ என்ற சந்தேகமே மேலோங்கியுள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் பலர் அமைதியையும், சமாதானத்தையும், இன நல்லுறவையுமே விரும்புபவர்களாகவுள்ளனர். எனினும், ஒருசில பேரினவாதக் கட்சிகள், சரிந்து போகும் தங்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன.

இவற்றுக்கு சில சிங்கள, ஆங்கில ஊடகங்களும் ஊதுகுழல்களாக செயற்பட்டு வருவது கவலை தருவதாகும். இவ்வாறான போக்குகள் நாட்டின் உண்மை நிலையை பெரும்பான்மை மக்கள் சரியாக அறிந்து கொள்ள முடியாது, அவர்களை தவறாக வழி நடத்துவதாக இருக்கும் என்பதே யதார்த்தம்.

இதேவேளை, அண்மைக் காலமாக திடீரென மேலோங்கி வரும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான போக்குகளை மேலும், வளர விடாது பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தினதும். ஜனாதிபதியினதும் கடப்பாடாகும். அன்றேல் நாட்டில் மீண்டும் மோசமான சூழ்நிலை உருவாகவே வழிவகுப்பதாக இருக்கும்.

அத்துடன், இவ்வாறானதோர் சூழலில் நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண எந்தவொரு பிரதான அரசியற் கட்சியாலும் முடியாது போகும் என்ற நிலைமையே மிஞ்சுவதாக இருக்கும். அவ்வாறு இனப்பிரச்சினை இழுத்தடிக்கப்படுமானால் அதன் பின்னணியில் நாடு மோசமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது என்பதே உண்மை நிலையாகும்.

முதலில் அரசாங்கம், இனவாதிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தால் மாத்திரமே எந்தவொரு கட்சியும் இனப்பிரச்சினைக்­கான தீர்வை முன் வைக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான அழுத்தங்களை சர்வதேச நாடுகள் கொடுப்பது இன்றியமையாதது. அதன் வாயிலாகவே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன் நாட்டில் நீடித்த அமைதியையும் நிலை நாட்ட முடியும் என்பதே யதார்த்தம்.

Print this item

  இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா?
Posted by: Rasikai - 08-24-2005, 04:51 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (139)

21 ம் நூற்றாண்டிலே இணையக்காதல் தொலைபேசிக்காதல் என்று பல தரப்பட்ட காதலைக் காணக்கூடியதாக இருக்கிறது.

காதல் என்றால் என்ன என்றதுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருமாரி சொல்கிறார்கள். உதாரணத்துக்கு காதல் என்றால் இரண்டு உள்ளங்களை ஆயுள் வரை இணைக்கும் ஒரு தூய அன்பு கலந்த, உணர்வின் மொழி...! என்று சொல்கிறார்கள் ஏன் ஒரு சிலர் computer வைரஸ் என்று எல்லாம் சொல்கிறார்கள்.

ம்ம் எனது கேள்வி என்ன என்றால் இருவர் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கலாமா? அப்படி காதலிப்பதாயின் அக்காதல் வாழ்வின் எல்லை வரை தொடருமா?. உங்கள் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Print this item

  சினிமா மக்களைக் கெடுக்கவில்லை..மக்களே கெடுகிறார்கள்..!
Posted by: kuruvikal - 08-24-2005, 04:13 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<b>தமிழகத்தை தமிழரே ஆள சட்டம் கொண்டு வர வேண்டும்: சரத்குமார்</b>

திருச்சி:

தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும், தமிழில் படிப்பது அவசியம் என சட்டம் கொண்டு வர வேண்டும் நடிகர் சரத்குமார் கூறினார்.

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் பேசிய சரத்குமார், பின்னர் அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

சரத்குமார் பேசுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜயகாந்த் என்றில்லை, தனுஷ் கூட கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது.

விஜயகாந்த்துக்கு எனது வாழ்த்துக்கள். செப்டம்பர் 14ம் தேதி அவர் நடத்தப் போகும் மாநாட்டுக்குப் பின்னர்தான் அவரது புதிய கட்சி குறித்த விவரங்கள் தெரிய வரும். என்னைப் பொருத்தவரை எனது இறுதி மூச்சு வரை திமுகவில்தான் இருப்பேன், கட்சியை விட்டு விலக மாட்டேன்.

எனக்கு பிரதமர், முதல்வர் போன்ற பதவிகளில் விருப்பம் இல்லை (அட..). ஆனால் சிலருக்கு அந்த ஆசை உள்ளது. நான் கடைசி வரை மக்கள் தொண்டனாகவே இருப்பேன். பதவியில் அமர்ந்துதான் எதையும் செய்ய வேண்டும் என்பதில்லை.

<b>நான் நிஜ வாழ்வில் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. அனைவருக்கும் சொந்த புத்தி உள்ளது. எனவே சினிமாவைப் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கூறுவது தவறான வாதம். சினிமாவில் பல நல்ல விஷயங்களும் உள்ளன.</b>

அரசியலைப் பொருத்தவரை எனது ரோல் மாடல் கருணாநிதிதான். சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தமிழகத்தில் யார் தமிழர் என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. தமிழுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தமிழர்தான் தமிழகத்தை ஆள வேண்டும், தமிழில் படிப்பது அவசியம் என சட்டம் கொண்டு வர வேண்டும்.

நியூ பட விவகாரம் இந்த அளவுக்குப் போனதற்கு, தணிக்கை குழுவில் உள்ள குறைபாடுகளே காரணம். நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சென்னையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காவிட்டால் மும்பைக்குப் போய் சான்றிதழை பெற்று விட முடிகிறது. இந்த நிலை மாறும் வரை நியூ போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

இதேபோல தனியார் தொலைக்காட்சிகளுக்கும் தணிக்கை இருக்க வேண்டும்.

வாங்கிய கடன் தொகையைத் திருப்பித் தர முடியாமல் தயாரிப்பாளர் காஜாமைதீன் தற்கொலைக்கு முயன்றது சுத்த கோழைத்தனம். யாருமே, கடனை வாங்குங்கள் என்று யாரையும் வற்புறுத்துவது இல்லை. நாமாக சென்று கடன் வாங்கி விட்டு பின்னர் அதைத் திருப்பித் தர முடியாமல் தவிப்பதை தவிர்க்க வேண்டும்.

கடன் வாங்கும் முன்பே அதுகுறித்து யோசிக்க வேண்டும். நடிகர் அஜீத் மீதும், பின்னர் இன்னொருவர் மீதும் காஜா மைதீன் புகார் கூறினார். அவர்களது மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருப்பாரா? பிரச்சினை வந்தால் அதை சந்தித்தே ஆக வேண்டும். மாறாக தப்பிக்க நினைப்பது தவறு என்றார் சரத்குமார்.

தற்ஸ்தமிழ்.கொம்

Print this item

  காதலுக்கு கண்ணும் இல்லை- புத்தியும் இல்லை
Posted by: SUNDHAL - 08-24-2005, 03:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (18)

காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள். அதே போல் காதலுக்கு புத்தியும் இல்லாமல் போய் உள்ளது. 3 குழந்தைகள் பெற்று 25 வயதான பெண்ணை 17 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் கடத்தி சென்று உள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்க லம் அருகில் உள்ளது ஊ.மாரமங் கலம். இந்த ஊரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலர் (வயது25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மலருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய வாலிபர் சேட்டு என்ப வருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து கொண்டனர்.

இது பற்றி அறிந்த முருகேசன் தனது மனைவி மலரை கண்டித்து உள்ளார். இருந்தாலும் மலர்- சேட்டு இடையே இருந்த கள்ள தொடர்பு நீடித்தது. இந்த நிலையில் மலரை சேட்டு கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. தனது 3 மாத கைக்குழந்தையுடன் மலர் சென்றதாக தொpகிறது.

இது குறித்து தொளசம்பட்டி போலீசில் முருகேசன் புகார் கொடுத்து உள்ளார். அதில் தனது மனைவி மலரை சேட்டு கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறhர்கள்.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் 8 வயது வித்தியாசத்தில், அதுவும் திருமணமாகி 3 குழந்தைகள் பெற்ற 25 வயது பெண்ணை 17 வயது …வாலிபர்† கடத்தி சென்று இருப்பது காதலுக்கு புத்தியும் இல்லாமல் போய் விட்டது என்பதை தௌpவு படுத்தி இருக்கிறது.

Print this item

  தமிழீழ தேசியக்கொடி
Posted by: வெண்ணிலா - 08-24-2005, 11:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (25)

<img src='http://www.eelamweb.com/flag/images/te_flag.gif' border='0' alt='user posted image'>

தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்திற்கு ஒரு தேசியக் கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக் கொடி சித்தரித்துக்காட்டுகிறது. தேசாபிமானத்தின் சின்னமாகவும் அது திகழ்கிறது. அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக் கொடி அமைகின்றது. தேசிய விடுதலையை இலட்சியமாகக் கொண்டு போராடி வரும் தமிழீழ மக்களுக்கு ஒரு தேசியக் கொடி உண்டு. இரண்டாவது மாவீரர் நாளன்று (27.11.1990) புலிக்கொடி தேசியக் கொடியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
எமது தேசியக்கொடியை சித்தரித்து நிற்கும் புலிச்சின்னம் எப்படி தோற்றம் கொண்டது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அந்தக் குறியீட்டின் அர்த்த பிரமாணங்கள் என்ன? என்பதைப் பிரகடனப்படுத்துகின்றோம்.
1972ஆம் ஆண்டு எமது தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு அத்திவாரமிட்டார். அன்று அவர் ஆரம்பித்த ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு ;தமிழ்ப புதிய புலிகள் எனப் பெயரிட்டார். பின்னர் 1976ம் ஆண்டில்; புதிய தமிழ்ப் புலிகள்; என்ற எமது அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் ; எனத் தலைவரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து தமிழீழ தேசத்தின் தனித்துவத்தையும் தமிழீழ விடுதலை இலட்சித்தையும் சித்தரிக்கும் சின்னமாக புலிச் சின்னம் விளங்குகின்றது.
புலிச் சின்னத்தை தமிழீழத்தின் தேசிய சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்தற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேருன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும், தேசிய எழுச்சியையும் சித்தரித்துக்காட்டும் ஒரு குறியீடு. வீரத்தையும் தன்னம்பிக்கையையும் குறித்துக்காட்டும் சின்னம். அன்று வீரவரலாறு படைத்த சோழ மன்னர்களும் புலிக்கொடியின் கீழ் தமிழனை எழுச்சிகொள்ளச் செய்தனர். இன உணர்வை, தேசியப்பற்றுணர்வை, பிரதி பலிக்கும் ஆழமான, அற்புதமான குறியீட்டாகத் திகழ்கிறது புலிச்சின்னம்.
ஐந்நூறு ஆண்டு காலத்திற்கு மேலாக அந்நியர்களாலும் அயல் நாட்டுச் சிங்களவர்களாலும் அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத்தமிழினத்தை ஆயுதப் போரட்டப்பாதையில் வழிநடத்த எமது தலைவன் அன்று புலியை தேசிய இயக்கச் சின்னமாகத் தேர்ந்தெடுத்தது மிகவும் மதிநுட்பம் வாய்ந்த ஒரு முடிவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வும் ஆகும்.
புலிச்சின்னம் தேசிய சின்னமாக மக்களின் உணர்வுகளின் ஆழமாகப்பதிந்தது. செத்துப்போய்க் கிடந்த தேசிய ஆன்மா புத்துயிர் பெற்றது. இன்று எமது தேசியக் கொடியாகிய புலிக்கொடியின் கீழ் தமிழீழ தேசிய இனம் ஒன்றுபட்டு நிற்கின்றது: எழுச்சிகொண்டு நிற்கின்றது.
எமது தலைவர் பிரபாகரன் தான் உருவாக்கிய இயக்கத்திற்கு புலிகள் என்ற பெயரை தேர்ந்;தெடுத்ததற்கு இன்னும் ஓர் காரணமும் உண்டு.
நீண்டகால அடிமைத்தனத்தில் ஊறிப்போன ஒரு சிறிய இனம் ஒரு பெரிய தேசிய இனத்தின் நவீனமான, பலம்மிக்க ஆயுதப்படைகளை எதிர்த்துப் போராடுவது எப்படி? அரசுக்கு எதிராக ஆயுதப்போரட்டத்தை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்வாதாயின் சிறப்பான, விசேடமான போர்க்குணங்களைக் கொண்ட ஒரு விடுதலைப் படை உருவாக்கப்படவேண்டும். அபாரமான துணிவும், சாவுக்கும் அஞ்சாத வீரமும், விடுதலை வேட்கையும் கொண்ட விரர்களை உருவாக்க வேண்டும். புலிபோல வேகத்துடனும், மூர்க்கத்துடனும் போரடும் தலைசிறந்த விரர்களை உருவாக்கவேண்டும். இந்த நோக்கில்தான் புலிப்படையை கட்டி எழுப்பினார் பிரபாகரன். பிரபாகரனின் புலிப்படை இன்று உலகின் தலைசிறந்த விடுதலை இராணுவமாகப் போற்றப்;படுகிறது.
இன்று எமது தேசியக்கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலிச்சின்னத்தின் உருவப்படம் பிரபாகரனின் கருத்திற்கு அமையவே வரையப்பட்டது. பிரபாகரனின் நண்பரும் மதுரையைச் சேர்ந்த பிரபல ஓவியருமான நடராஜன் என்பவர் 1977ம் ஆண்டு புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்தார். பிரபாகரனின் யோசகைக்கமைய பல தடவைகள் வரைந்து, இறுதியில் எமது தலைவரின் எண்ணப்படம் புலிச்சின்னமாக உருவகம் பெற்றது. இந்த புலிச்சின்னம் இன்று எமது தேசியக்கொடியை அலங்கரிக்;கின்றது. சுதந்திரத் தமிழீழத்தின் தேசியக்கொடியாகவும் ஒருநாள் உயர்த்தப்படவிருக்கும் இக்கொடியில் சித்தரிக்கப்பட்டுள்ள அர்த்தங்களை இனிப் பார்ப்போம்.
எமது தேசியக் கொடியை மூன்று நிறங்கள் அலங்கரிக்கின்றள. மஞ்சள், சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்கள். தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு, அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு தன்னாட்சி(சுயநிர்ணய) உரிமை உண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமையை நிலைநாட்டுவதற்காக தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போரட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கிறது.
தேசிய சுதந்திரம் பெற்று தமிழீழ தனியரசை அமைத்துவிட்டாற்போல் நாம் முழுமையாக விடுதலை பெற்றதாகக் கொள்ளமுடியாது. தமிழீழ சமுதாயத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை ஒழிக்கப்படவோண்டும். வர்க்க, சாதி முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண் அடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்கு சமுதாய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமத்துவமும், சமதர்மமும், சமூக நீதியும் நிலை நாட்டப்பட வேண்டும். இப்படியான புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை வேண்டி எமது அரசியல் இலட்சியத்தை சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
விடுதலைப் பாதை கரடு முரடானது. சாவும், அழிவும், தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இத்தனையையும் தாங்கிக்கொள்ள இரும்பு போன்ற இதயம் வேண்டும். அசைக்கமுடியாத நம்பிக்கை வேண்டும். என்றும் தளராத உறுதி வேண்டும். கறுப்பு நிறம் மக்களின் மன உறிதியைக் குறித்துக் காட்டுகிறது.
தேசியக்கொடியின் மையத்தில் புலிச்சின்னம் அமையப் பெற்றிருக்கின்றது. ஆவேசத்துடன் பாயும் புலியைக் குறிப்பதாக புலியின் தலையும், முன்னங் கால்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. புலிச்சின்னத்தின் அர்த்தம் பற்றி மேலே விளக்கியிருந்தோம். தமிழ்த் தேசாபிமான எழுச்சியை மட்டுமன்றி வலிமையையும், வீராவேசத்தையும் புலிச்சின்னம் குறித்து நிற்கின்றது. பாயும் புலியை ஒத்த எமது விடுதலைப் போரையும் அது சித்தரிக்கிறது. புலித்தலையைச் சுற்றி வட்டமாக ரவைகளும், இரு புறத்திலும் கத்திமுனையுடைய துப்பாக்கிகளும் எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போரட்டத்தைக் குறியீடு செய்கின்றன.
ஒட்டு மொத்தத்தில், எமது தேசியக்கொடி, சுதந்திரத்தையும் சமதர்மத்தையும் வேண்டி நாம் நடத்தும் வீர விடுதலைப் போரை அற்புதமாகச் சித்தரிக்கிறது. தமிழரின் வீர மரபில் வேரூன்றி நின்று பிறப்பிக்கப்போகும் தமிழீழத் தனியரசின் குறியீட்டு வடிவமாகவும் எமது தேசியக்கொடி திகழ்கிறது

Print this item

  தாவர போசனத்தின சாதக பாதகங்கள்
Posted by: KULAKADDAN - 08-24-2005, 10:04 AM - Forum: மருத்துவம் - Replies (20)

http://www.yarl.com/other/article_749.shtml



<img src='http://img390.imageshack.us/img390/7641/untitled2vm.png' border='0' alt='user posted image'>

உணவானது ஒரு குடித்தொகையின் போசணைத்தேவையை பூர்த்திசெய்யக்கூடியதாக இருப்பதோடு அது அக்குடித்தொகையின் சுகநலன்களை நன்நிலையில் பேணுவதாகவும் இருக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்த உடல் நிறை, நீரிழிவு, என்பவை மிகவும் பாதிப்புதரும் அளவில் உயர்ந்து காணப்படுகிறது. அதேவேளை தாவர பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் அது சார் வாழ்க்கைமுறையும் உடல் நிறை அதிகரிப்பு உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு இதய நோய்கள் ஆகியவற்றின் ஆபத்தை குறைக்கும் திறன் வாய்ந்தவையாக நம்பப்படுகிறது.

<b>தாவர போசனத்தின் வகைகள்</b>

எம்மை பொறுத்தவரை சைவம், அசைவம் (மச்சம்) என பெரும்படியாக பிரித்து விடுவோம். எமது எண்ணக்கருவில் தாவர போசனம் என்பது பாலுடன் சேர்ந்த தாவர உணவு உண்போரை குறிக்க பயன்படுகிறது. ஆனால் தற்போதய நவீன பாகுபாடு வேறானது

1. <b>தாவரபோசனம் (veganism)</b>முழுமையாக தாவர உணவை உண்போர், பால் முட்டையும் உள்ளெடுப்பதில்லை

2. <b>பாலுடனான தாவர போசனம் (Lactovegetarianism)</b>இறைச்சி, மீன் , முட்டை உண்பதில்லை
3. <b>பால், முட்டையுடனான தாவரபோசனை ( Lacto ovo vegeterianism)</b>மீன் இறைச்சியை தவிர்ப்போர்.
4. <b>முட்டைய்டனான தாவர போசனம் (Ovo vegeterianism)</b>
மீன் இறைச்சி பால் உள்ளெடுப்பதில்லை

பொதுவாக தாவரபோசணை உள்ளெடுப்போரில் 70% பேர் பால் முட்டையுடனான தாவரபோசணிகளாக உள்ளனர். மிககுறைவாக 10 வீதத்திலும் குறைவானோர் தனி தாவர போசணிகளாவர். இவ்வகையான உணவுபழக்கம் உடல் நலனை பாதிக்க கூடியதாக இருக்கும்.

பொதுவாக தனித்தாவர உணவை மட்டும் உள்ளெடுப்பதால் இரண்டு பிரதான ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவது சாத்தியம் ஆகும். அவையாவன

1. <b>இரும்பு (Iron)</b>தாவர உணவை மட்டும் உண்போருக்கு போதுமான அளவில் இரும்புசத்து கிடைப்பதில்லை. தாவர உணவுல் ஒப்பீட்டளவில் அதிகளவான இரும்பு காணப்பட்டலும் அது உடலால் இலகுவில் அகத்துறுஞ்ச முடியாத சிக்கல் சேர்வைகளாக காணப்படுகிறது. இதனால் இரும்பு பற்றக்குறை ஏற்படுகிறது. இது அதிகளவில் தாவர உணவை மட்டும் அல்லது தாவர உணவை அதிகமாக உண்போரில் காணப்படிகிறது. இப்பிரச்சனை கர்ப்பிணி பெண்களில் மேலும் அதிகமாக இருக்கும். தாயில் ஏற்படும் இரும்பு பற்றாகுறையானது வளரும் கருவினதும் பிறக்கும் குழந்தையினதும் மூளைவளர்ச்சியை பாதிக்கும்.

2. <b>விற்றமின் வழங்கல் (B12)</b>
தாவர போசனையின் இன்னுமொரு பாதகமான அம்சம் விற்றமின் B12 போதுமான அளவில் கிடைக்காமையாகும். விலங்குணவுகளான பால், முட்டை, இறைச்சி, மீன் என்பவை விற்றமின் B12 ஐ அதிகளவில் கொண்டிருப்பதுடன் இது எந்தவொரு தாவர உணவிலும் காணப்படுவதில்லை என்பது அதன் சிறப்பம்சமாகும். தொடர்ச்சியான தாவர போசணமானது குருதியில் விற்றமின் B12 அளவில் வீழ்ச்சியை ஏற்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.
போதுவாக ஈரலில் சேமிப்பாக விற்றமின் B12 காணப்படுகிறது. இச்சேமிப்பனது ஓரளவு நீண்டகாலத்துக்கு போதுமானதாக இருந்தாலும் தொடர்ச்சியாக பால் முட்டை உட்பட எந்த விலங்குணவையும் உள்ளெடுக்கது விடுவது விற்றமின் B12 பற்றக்குறைக்குரிய அறிகுறைகள் , அது சார் நோய்கள் தோன்ற வழிவகுக்கும் . இதன் குறைபாட்டு அறைகுறிகளாக குருதிச்சொகை, இளைப்பு, சோர்வு, என்பவை விழங்குகிறன.இவை விற்றமின் மீள கிடைக்கும் போது இல்லது போககூடியவை.

அதிகரித்த விற்றமின் B12 பற்றக்குறை மைய நரம்புதொகுதியை மீள் முடியாதவாறு பாதிக்குமற்றல் வாய்ந்ததாகையால் தாவர உணவை உள்ளேடுப்போர் விற்றமின் B12 குறைநிரப்பு உணவு உள்ளெடுத்தல் அவசியம்.

அதேநேரம் தாவர போசணையின் பிரதான உணவுகளாக பழங்கள், மரக்கறிகள் விழங்குகிறன.இவை அதிகளவு விற்ற்மின்கள் ஒட்சியேற்ற எதிரிகாளையும் உயிர்தொழிற்பட்டு சேர்வைகளையும் கொண்டிருக்கிறன. இதனால் தாவர உணவை உணபவர்களின் குருதியில் அதிகளவில் விற்றமின் C , B கரோட்டீன் என்பவை பல்வேறு நீடித்த நோய்களான புற்று நோய், இதய குருதிகலனில் ஏற்படும் நோய்களை குறைப்பதில் உதவுகிறன.

A) <b>நார்பொருள் உள்ளெடுத்தல்</b>
நார்பொருள் உள்ளெடுதலானது தாவர போசனை பிரிவினரில் அதிகளவில் காணப்படுகிறது. நீண்ட காலமாக நார் பொருள் உள்ளெடுத்தல் சாதகமானதா பாதகமானதா என்பது விவதத்துகுரியதாக இருக்கிறது. ஆயினும் தறபோது அதன் புற்று நோயைகட்டுப்படுத்தும் சாதகத்தன்மை பெரிதும் மெச்சப்படுகிறது.

<b>தாவர போசணையை திட்டமிடல்</b>

<b>பால், முட்டையுடனான தாவர போசணையானது உடலுக்கு தேவையான அனைத்து உட்டச்சத்துகளையும் வழங்க கூடியதாக இருக்கிறது.</b>

தனித்தாவர உணவு உண்போர் கர்ப்பகாலம், வளரும் பருவம், நோய்வாய்பட்ட நேரங்களில் விற்றமின் B12, இரும்பு சத்துக்கான குறை நிர்ப்பு உணவு உள்ளெடுத்தல் அத்தியாவசியமானது.

இறைச்சி உணவானது மேலே குறிப்பிட்ட நோய்களை குறைத்தலுக்கான காரணியாக கொள்லமுடியாதயினும் உணவு பழக்கத்தை மீள ஒழுங்கு படுத்தல் சீரான் உடற்பயிற்சி, குறைந்த மது, புகையிலை பாவனை என்பன உடல் நலனை பாதுகாப்பதில உதவும்

Print this item

  இயக்குனர் சூர்யாவும் சென்சார் போர்ட்டும்
Posted by: Vishnu - 08-24-2005, 08:50 AM - Forum: சினிமா - Replies (11)

<img src='http://img390.imageshack.us/img390/6118/c131suriya0gv.jpg' border='0' alt='user posted image'>

இது சூர்யா போலீசாரினால் கைது செய்யப்பட்ட காட்சி.. நியூ பட சென்சாரின் போது சென்சார் அதிகாரியை தாக்கினார்... அப்படி ஒரு சில குற்றங்கள் செய்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டும்.. கோர்ட்டுக்கு வராத காரணத்தால் சூர்யா போலீசாரினால் கைது செய்யப்பட்டு.. பின்னார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்..

சூர்யாவும் அவரது படங்கள் பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே தாருங்கள்..???

Print this item

  தமிழில் எழுத உதவி
Posted by: RaMa - 08-24-2005, 06:24 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (12)

hi how can i change board style? i am trying to write in tamil fonts some how is not working for me. anyone please tell me how can i use the tamil font when i writting the message

Print this item

  புது உறுப்பினர்
Posted by: சுதாகர் - 08-24-2005, 01:32 AM - Forum: அறிமுகம் - Replies (34)

vanakkam.. ungal anaivaraiyum sandhippadhil mikka magilchi.

Print this item

  கதிர்காமர் கொலையும், சந்திரிகா நிலையும். பகுதி - 5
Posted by: malaravan - 08-23-2005, 11:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது….

ஜேவிபியினர் கதிர்காமரை போடவேண்டியதன் அவசியம் யாதென சென்ற கட்டுரையில் பார்த்தோம். அவர்கள் கட்டாயமாக செய்திருக்க வேண்டியதன் அவசியத்தை பார்ப்போமாகின் கதிர்காமர் கூடுதலாக இந்தியாவை ஆதரித்ததும், ஜேவிபியினரை இப்போ உதாசீனம் செய்தமையுமே. அத்துடன் ஜேவிபியினர் அமெரிக்க ஆதரவாளர்கள். கதிர்காமர் அமெரிக்க எதிர்ப்பாளர். அவர் அமெரிக்காவை நேரடியாக எதிர்க்காவிடினும் சில காரியங்கள் மூலம் எதிர்த்தவர். உதாரணமாக முல்லைத்தீவில் சிறீலங்கா விமானப்படையின் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று பல அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது ஐக்கியநாடுகள் சபை அதைக்கண்டிக்கும் போது கதிர்காமர் “ஐக்கிய நாடுகள் சபை எமது விடயத்தில் மூக்கை நுழைப்பதை நாம் விரும்பவில்லை. அவர்கள் நுளம்பிற்கு மருந்து விசுறுவதுடன் அவர்கள் வேலை நிற்கட்டும்” என்று சிறுபிள்ளைத்தனமான விளக்கம் கொடுத்திருந்தார். இக்கூற்றே அமெரிக்காவை பொறுத்தமட்டில் இலங்கை விடயத்தில் மூக்கை நுழைக்காதிருக்க போதுமான செயற்பாடானது. அதன் பின்னரே கூடுதல் அழுத்தங்களை இலங்கை அரசு மீது போடத்தொடங்கியது. அவ்விடயம் ஜேவிபியினரை கதிர்காமரின் மேல் கோபம் கொள்ளவைத்திருக்கும். அதனடிப்படையில் கதிர்காமரை மண்டையில் போடவேண்டிய தேவை ஜேவிபியினருக்கு எழுந்திருக்கும். அவரை மண்டையில் போடுவதால் அப்பழியை புலிகள் மேல் சாதாரணமாகவே போடலாம் என்கின்ற வகையில் அதை செய்து பழியை புலிகள் மேல் போட்டிருக்கலாம். ஆகவே கதிர்காமரின் கொலையை ஜேவிபியினரும் செய்திருக்க வாய்ப்பிருக்கின்றதல்லவா வாசகர்களே! இனவெறி கொண்ட ஜேவிபியினரால் தன்னையும் சிங்கள விசுவாசியாக காட்டிய கதிர்மாமரின் உயிரையே குடிக்கக்கூடிய சூழல் எழுந்திருப்பதை பார்த்தீர்கள் அல்லவா?.

நாம் அடுத்துப் பார்க்கப்போவது இந்திய அரசின் "றோ' எனப்படும் உளவுத்துறையைப்பற்றி. இவர்கள் கூடுதல் கவனம் இலங்கையில் தற்சமயம் எடுப்பதற்கான காரணங்கள் பல. அவற்றில் வருபவை சில.
அணுவாயுத உற்பத்தியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஈடுபட்டதன் பின் அவ்விரு நாடுகளையும் தனது கண்காணிப்பில் வைத்திருக்க அமெரிக்கா எண்ணுகின்றது. அதனடிப்படையில் தொடுக்கப்பட்ட முதற்போரே ஆப்கானிஸ்தான் போர். அதற்கான காரணத்தை செப்ரம்பர் 11 என அமெரிக்கா கூறினாலும் அக்காரணம் வலுவானதாக இல்லை. ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கையகப்படுத்தியபின் இலங்கையில் ஒரு முகாம் அமைக்க எண்ணி மன்னார் கரையில் வானொலிக்கோபுரம் அமைக்க முயற்சித்தது. ஆனால் தமிழ்மக்களின் தீவிர எதிர்ப்பால் இதுவரை அது கைகூடாத நிலையிலேயே இருக்கின்றது. இந்தநிலையில் அமெரிக்கா எங்கே இலங்கை அரசியலில் மூக்கை நுழைத்து தாம் எங்கே வாசலுக்கு வெளியில் நிற்கவேண்டி வந்திடுமோ என்கின்ற பயமும், இதையே சாட்டாக வைத்து அமெரிக்கா தம்மை இலங்கையில் இருந்து கண்காணிக்க ஏதுவாகலாம் என்கின்ற பயத்திலும், கதிர்காமரின் இராஜதந்திர நகர்வுகள் அத்துபடியாக இந்தியாவுக்கு தெரிந்தமையால் (எது தேவையோ அதைக்கருதி அப்பக்கம் சாயக்கூடிய தன்மை கதிர்காமருக்கு இருந்தமையைக்கருதி) அவரை போட எண்ணியிருக்கலாம். அத்துடன் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது ஜனாதிபதியாகிய சந்திரிகா இலண்டனிலும், வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக போய் இந்தியாவிலும் இருந்தனர். அப்போ புலிகள் யாழ்நகர் மீட்பில் ஈடுபட்டிருந்தவேளை இன்றோ, நாளையோ யாழ்நகர் புலிகள் வசம் வீழ்ந்து விடும் என்கின்ற நிலையில் உடனடியாக கதிர்காமர் இந்தியாவில் இருந்தவண்ணம் முதன்முதலில் அனைத்து வெளிநாட்டுத்து}துவராலயங்களுடன் இதுவிடயமாக கதைத்தபின்தான் இந்திய அரசுடன் பேச்சில் ஈடுபட்டார். அவ்விடயம் இந்தியாவிற்கும் தெரியும். நாற்பதாயிரம் இராணுவத்தின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருந்தவேளையிலும் தம்முடன் உடனும் தொடர்புகொள்ளாது அனைத்து து}தராலயங்களுடனும் கதைத்த பின்தான் கதிர்காமர் தங்களுடன் கதைத்தார் என்பதை கருத்தில் கொண்டே, இனியும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து கதிர்காமர் தம்மை கைவிட்டுவிடுவார் என்கின்றநோக்கிலும் அப்படி ஏற்படுமிடத்து அமெரிக்கா தம்மை இலங்கையில் இருந்து கண்காணித்து, தம்மை நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சூழலை ஏற்படுத்திவிடும் என்கின்ற நோக்கிலும் போட்டுத்தள்ளியிருக்கலாம் அல்லவா? அப்படியாயின் எப்படி அவரை கொலை செய்திருக்கலாம் அதை அடுத்த தொடரில் பார்ப்போம்.
தொடரும்....

மலரவன் மலரினி
www.tamilkural.com

Print this item