| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 504 online users. » 0 Member(s) | 502 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,427
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,235
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,529
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| புத்திசாலி சிறுமி |
|
Posted by: RaMa - 08-26-2005, 05:17 AM - Forum: நகைச்சுவை
- Replies (28)
|
 |
அன்று பாடசாலை விடுமுறை விட்டு மறு நாள். ஒரு தாய் மகளின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது அவள் ஒரு கடிதத்தை கண்டு வாசித்தாள். அக் கடிதம் இப்படி எழுதியிருந்தது.
அன்பின் அம்மா. மகள் உங்கள் செல்ல மகள் எழுதுவதுஇ இக் கடிதம் வாசிக்கும் போது நான் வீட்டை விட்டு சென்று விடுவேன். பக்கத்து வீட்டு பையனுடன் நான் எனது புது வாழ்வை தொடங்கப் போகின்றேன்.
நான் 18 வயதை அடைந்து விட்டேன். இனி என் வாழ்வில் நல்லது கெட்டது எல்லாம் தெரியும். நான் வாழ்கையை தொடங்கப் போகும் பையனுக்கு இப்போது வேலை இல்லைஇ ஆனால் நாங்கள் எங்களுடைய சொந்த முயற்சியால் ஒரு தொழில் செய்யப் போகின்றோம். அதாவது கஞ்சா மரம் வீட்டில் வளர்த்து விற்பனை செய்யப் போகின்றோம். அந்தக் காசில் தான் எமக்கு என்று சொந்தமாக ஒரு கை தூப்பாக்கியையும் வாங்கி வாடகைக்கு விடப்போகின்றோம். அதில் வரும் வருமானத்தை மாதுபானம் வாங்கி வீட்டில் வைத்து அதிலும் தொழில் நடத்தப் போகின்றோம். எனது கணவர் இங்கு இருக்கும் பெரியதொரு கொலைக் கும்பலில் முக்கிய ஆள். ஆகவே அவருடைய நண்பர்களுடன் தான் நானும் தங்கப் போகின்றேன். முக்கிய விடயம் நான் இப்போது 2 மாத கர்பணியாக இருக்கின்றேன். அடுத்த மாத அளவில் நான் அதை சுத்தம் செய்யலாம் என இருக்கின்றேன். இவ்வளவை படித்த தாய் மயக்க நிலைக்கு சென்றுவிட்டா. ஆனாலும் அவரின் கண்கள் கடிதத்தின் பிற் குறிப்பு பகுதிக்கு சென்றது.
பிற் குறிப்பு
அம்மா என்ன பயந்து விட்டீர்களா? இது எல்லாம் சும்மா விளையாட்டுக்குத் தான்.; நான் இப்போது பக்கத்து வீட்டு சுமதியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் . ஆனால் ஒன்று சொல்ல விரும்புகின்றேன் இந்த உலகத்தில் எத்தனையோ கூடாதது ஒவ்வொரு நாளும் நடக்கின்றது. அத்துடன் பார்க்கும் போது மேசையில் இருக்கும் எனது ரிப்போர்ட் கார்ட்டில் இருக்கும் மார்கஸ் எவ்வளவோ நல்லம்.
|
|
|
| உதயமாவாயா....? |
|
Posted by: வெண்ணிலா - 08-26-2005, 01:00 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (184)
|
 |
[size=18]<b>உதயமாவாயா....?</b>
<img src='http://vennila.yarl.net/nilaa/uthayamaavaayaa.jpg' border='0' alt='user posted image'>
தொலைநகரில் வசிக்கும் நண்பிக்கு
தொலை நகல் அனுப்பி விட்டு
தொலைபேசியில் உரையாடலாமென
தொலைதொடர்பு நிலையம் வந்த என்னிடம்
தொலைத்தாயா உன் இதயத்தை
தொலைத்த இதயத்தை
தேடி அலைவதாக
நடந்தாய் தினமும்
நான் நடக்கும் சாலையோரம்
தொடர்பை ஏற்படுத்தினாய்
தொலைபேசி சினுங்கல் மூலம்
இணைந்தாய் இதயத்தை தேடி
இணைய முகவரி ஊடாக
இறுமாப்புள்ளவனே
இந்த இம்சை எதற்காக
களைப்பின்றி தேடியலைந்து
கண்டுபிடித்தாய் உன் இதயம்
பத்திரமாய் என் இதயத்துள்
பொத்தி வைத்திருப்பதை
நாடோடி மன்னவனே
சனிக்கிழமை சிட்டாக
சிறகின்றி வானில் பறந்தவனே
ஞாயிற்றுக்கிழமை உன் இனிய
ஞாபகத்துடன் நானிருந்தேன்
திங்கட்கிழமை கதைத்தாய்
தொலைபேசியில் அமெரிக்காவில் இருந்து
இணைந்தாய் செவ்வாய்க்கிழமை
இணைய வழியாக கனடாவில் இருந்து
புதன் கிழமை ஐரோப்பாவில் இருந்து
புன்முறுவலுடன் தகவல் தந்தாய்
வியாழக்கிழமை உவ்விடம் வருவேன்
விடிவெள்ளியாய் காத்திரு அன்பே என
சாத்தியமாகும் என்று
சத்தியமாக நான் நம்பவில்லை
தல கேட்ட தோட்டா பதிலுக்காக
தலைசுற்றலுடன் சிந்தித்திருந்த வேளை
எதிர்பாராவிதமாக திடீரென
எதிர்கொண்டாய் என் முன்னால்
உனைக் கண்ட ஆச்சரியத்தில்
இமைகளை மூட மறந்து நின்ற என்னை
நிலா என்ற உன் அழைப்பால் தான்
நிஜம் என நான் உணர்ந்தேன்
உலகம் சுற்றும் வாலிபனே
சூரியன் மறையும் முன்
சுதந்திர சதுக்கத்தில்
சந்தித்த நீயோ
வானிலா மறையும் முன்பே
வானில் பறக்க திட்டமிட்டாய்
இனி மீண்டும் எப்போது
இந்த வெண்ணிலா முன் உதயமாவாய்?
(உதயமாவான்)
|
|
|
| ஹோட்டேல் ருவாண்டா |
|
Posted by: AJeevan - 08-25-2005, 10:14 PM - Forum: குறும்படங்கள்
- Replies (9)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'><b>ஹோட்டேல் ருவாண்டா</b>
<img src='http://216.65.197.170/theeranadhi/010805/pg6-t.jpg' border='0' alt='user posted image'>
'ஹிரோஷிமா, மான் அமோர்' ஃப்ரெஞ்சுத் திரைப்படத்தில் ஒரு காட்சி : ஹிரோஷிமாவின் அணுவெடிப்புக் காட்சியகத்தில், தான் பார்த்த படங்களையும் பொருள்களையும் விவரிக்கும் ஃப்ரெஞ்சுக்காரியிடம் அவளது ஜப்பானியக் காதலன் சொல்லுகிறான்: \"நீ எதையுமே பார்க்கவில்லை.\" இந்த எளிய வரி சுட்டும் சரித்திரத் தொலைவு எத்தகையது! ஹாலிவுட் வெகுஜனத் திரைப்படமான 'ஹொட்டேல் ருவாண்டா'வைப் பார்க்கையில் இவ்வரி மீண்டும் நினைவுக்கு வருகிறது. மேற்கத்திய உலகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு, இன்றுமே கூடப் பரவலாய் உலகுக்குத் தெரியாத ருவாண்டா இனப்படுகொலை பற்றிய படம் இது.
ருவாண்டாவின் இனப்படுகொலை நடந்தது 1994_இல்; நூறே நாட்கள், 8 இலட்சம் இனப்படுகொலைகள். ஐ.நா.வின் சிறிய அமைதிப்படை, தன்னால் அமைதியை ஆக்கவோ, காக்கவோ இயலாததை மீண்டும் நிறுவுகிறது. இந்தப் பின்னணியில், 1200 டுட்ஸி இன மக்களைக் காப்பாற்றும் மில் காலின்ஸ் விடுதி நிர்வாகியும், ஹ§ட்டு இனத்தைச் சேர்ந்தவருமான பால் ருஸ்ஸிஸபகீனாவின் கதைதான் 'ஹொட்டேல் ருவாண்டா'. இது ஓர் உண்மைக் கதை. ருஸ்ஸிஸபகீனாவே படத்துக்கு ஆலோசகராய்ப் பணியாற்றியிருக்கிறார். இவருக்கு உதவுவதாய்ப் படத்தில் காண்பிக்கப்படும் ஐ.நா. அமைதிப்படை அதிகாரி கர்னல் ஆலிவரின் பாத்திரமும், ஒரு நிஜ ஆளுமையைத் தழுவியதே..
ருவாண்டாவின் ஆதிக் குடிமக்கள் 'ட்வா' எனப்படும் பிக்மிகள். பிறகு 'ஹ§ட்டு' இனத்தினர் இங்கு குடியேறித் தழைக்கிறார்கள். 15_ஆம் நூற்றாண்டுவாக்கில், வடக்கிலிருந்து படையெடுக்கும் 'டுட்ஸி' இனத்தினர், இந்த நிலப்பரப்பை வெல்கிறார்கள். புதிய 'டுட்ஸி' ஆண்டைகள், 'உபுஹாக்கே' நிலப்பிரபுத்துவ ஜாதியத்தை அமுல்படுத்தி, 'ஹ§ட்டு' இனத்தினரின் சமூகப் பொருளாதார உரிமைகளைப் பறித்து, அவர்களைக் கூலிக்கு உழைக்கும் அடிமை ஜாதியாகப் பிரகடனம் செய்கிறார்கள். 19_ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜெர்மனியின் காலனியாகிறது ருவாண்டா. முதலாம் உலகப்போர் காலத்தில் பெல்ஜியத்தின் காலனியாக மாறுகிறது. ஜெர்மனியும் பெல்ஜியமும், உள்நாட்டு டுட்ஸி மன்னர்கள் மூலமே தமது காலனீய ஆட்சியை நடத்துகிறார்கள். 'உபுஹாக்கே' ஜாதி முறைமை ஒழிப்பதற்கு, ஹ§ட்டுகளை ஊக்குவிக்கிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் கல்வியையும் மதத்தையும் பரப்புகிறார்கள்.
இரண்டாவது உலகப்போரின் பின், ருவாண்டாவில் அரசியல் பிரக்ஞை அதிகமாகிறது. அடிமைப்பட்டுக் கிடக்கும் பெரும்பான்மையோரான ஹ§ட்டுகள், தம் சமூக உரிமைகளுக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்கள். டுட்ஸிகளுக்கும் ஹ§ட்டுகளுக்கும் இடையேயான கசப்பு வன்முறையாகிறது. டுட்ஸி மன்னர் நாட்டை விட்டு ஓடுகிறார். ருவாண்டா குடியரசாகிறது. முதல் தேர்தலில் ஹ§ட்டுகள் வெற்றி பெறுகிறார்கள். பெல்ஜியக் காலனிய ஆதிக்கம் 1962_இல் முடிகிறது. ஆனால், இனக்குழுக்களினிடையே மோதல்கள் தொடருகின்றன.
1994_இல் துவங்கும் 'ஹொட்டேல் ருவாண்டா' 'ஹ§ட்டு', 'டுட்ஸி' என்னும் அர்த்தமற்ற இனப்பிரிவு, பெல்ஜியக் காலனீய ஆதிக்கவாதிகளால் இன்னும் கொஞ்சம் விரிசல்பட்டதை இரண்டொரு வரிகளில் விளக்குகிறது. ஒரு ருவாண்டா சரித்திரவியலாளர், மக்கள் தொகையில் 9 சதவிகிதமான டுட்ஸிகளின் வழியே, காலனீய ஆதிக்கத்தை நடத்தி, அந்த டுட்ஸிகளால் மனித உரிமைகளை இழந்து, பல கொடூரங்களை அனுபவித்த 90 சதவிகித ஹ§ட்டுகளிடம் சுதந்திர ருவாண்டாவை ஒப்படைத்த பெல்ஜியத்தின் முரண் பற்றி விளக்குகிறார்.
நூற்றாண்டுகளாய்க் குழம்பிப் போன ஒரு வரலாற்றின் வருங்காலம் என்னவாயிருக்கும்? கேள்வி மௌனமாய் அந்தரத்தில் தொங்குகிறது; திரைப்படம், சிக்கலான உணர்வுப் பின்புலத்தையும் அறக் கேள்விகளையும் பார்வையாளர் மனதில் மெலிதாய்த் தூவி விதைக்கிறது.
ஹ§ட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டா அதிபர் சந்தேகத்துக்கிடமான விபத்தில் 1994_ல் இறக்கிறார். டுட்ஸித் தீவிரவாதிகள் இதற்குக் காரணமாயிருக்கலாம் என்னும் கருத்து நிலவுகிறது. இராணுவ பலமுள்ள ஹ§ட்டுத் தீவிரவாத அமைப்பு, எல்லா 'டுட்ஸிக் கரப்பான்பூச்சிகளையும்' அழிக்க வேண்டுமென்று குரல் எழுப்புகிறது. கலவரம் மூளுகிறது; வீடுகளும் குடிசைகளும் தீப்பற்றி எரிகின்றன; வெட்டரிவாள்கள் சுழலுகின்றன; உடல்கள் சிதைகின்றன; குடும்பங்கள் சிதறுகின்றன; மேற்கத்திய நாடுகள் தமது குடிமக்களை ருவாண்டாவிலிருந்து உடனே வெளியேற்றுகின்றன; செய்தியாளர்களும் சேர்ந்து வெளியேறுகிறார்கள். ஜெர்மனியும் பெல்ஜியமும் ஃப்ரான்ஸ§ம் பிரிட்டனும் பாராமுகம் காட்டுகின்றன. பாஸ்னியா, ஹெய்ட்டி, ஸோமாலியா ஆகியோரின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுச் சூடுபட்ட அமெரிக்க உள்நாட்டுத்துறை, இது இனவொழிப்பா இல்லையா என்று வெற்று விவாதம் நடத்துகிறது; ஐ.நா. கைவிரிக்கிறது.
ருவாண்டா மக்கள் தன்ஸனீயா, காங்கோ முதலிய அண்டை நாடுகளுக்குத் தப்பிச்செல்ல முயலுகிறார்கள். ஒரு டுட்ஸி பெண்ணைக் கலப்புமணம் செய்திருக்கும் பால் ருஸ்ஸிஸபகீனா நிர்வகிக்கும் மில் காலின்ஸ் விடுதியில், 1200 டுட்ஸிகள் தஞ்சம் புகுகிறார்கள். ருஸ்ஸிஸபகீனா மற்றும் கர்னல் ஆலிவர் உதவியால் இவர்கள் ருவாண்டாவை விட்டுத் தப்பிப் போவதுடன் படம் முடிந்து போகிறது. 'சுபம்' என்று எளிதாய்த் திரை போட இயலாத சரித்திரம்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பல காட்சிகள் திரைப்படத்தில் உண்டு. இனவொழிப்பு இன்னும் தொடங்கியிராத காலம். விடுதி விருந்துக்காகக் கடல் நண்டு வாங்குவதற்குப் பலசரக்கு இறக்குமதியாளரிடம் போகிறார் ருஸ்ஸிஸபகீனா. உயிரோடிருக்கும் நண்டுகளை நீரில் போட்டு, மரப்பெட்டிகளில் அடைத்து, விமானத்தில் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள். நண்டுப்பெட்டிகளுக்குப் பதிலாக வேறு சில பெட்டிகள் தவறுதலாக வெளியே கொண்டுவரப்படுகின்றன. பெட்டிகளுள் ஒன்று சரிந்து திறக்கவும், பல வெட்டரிவாள்கள் தரையில் கலகலத்துக் குவிகின்றன; மௌனம். ஒரு வெட்டரிவாளின் கூரான பக்கத்தைத் தடவிக் கொண்டே அமைதியான குரலில் இறக்குமதியாளர் சொல்லுகிறார்: \"சீனாவில் பத்து சென்ட்டுக்கு உற்பத்தி செய்யப்படுபவை இவை. எனக்குக் கொழுத்த லாபம்.\" நண்டு, ஆயுதம் உட்பட எல்லாமும் அவருக்குச் சந்தைச் சரக்குதானே. யார் மூலம், எப்படி லாபம் என்று கேட்காமலேயே நண்டுகளை வாங்கிக் கொண்டு திரும்புகிறார் ருஸ்ஸிஸபகீனா. ஆயுதப் பெட்டிகள் ஃப்ரான்ஸிலிருந்து வந்திருப்பவை என்பதை மட்டும் மனதில் குறித்துக் கொள்ளுகிறார். இந்த உபரித் தகவல், பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவருக்குப் பின்னாளில் உதவுகிறது.
ருஸ்ஸிஸபகீனாவுக்குக் கைகொடுப்பவை அவரது அறவுணர்வும் உளத்திடமும் மட்டுமல்ல; மேலாண்மைத் திறமை, அறிவுக் கூர்மை, சமூகப் புரிதல், மேற்கத்தியத் தொடர்புகள், பண்பட்ட பேச்சு ஆகியனவும்கூட. தன்னிடம் தஞ்சம் புகுந்திருக்கும் ஒவ்வொரு டுட்ஸியையும் காப்பாற்ற எவ்வளவு லஞ்சம் வேண்டுமென்று அவரால் பேரம் பேச முடிகிறது; கொலைகார இராணுவ அதிகாரிக்கு விருந்துபச்சாரம் செய்வதன் மூலம், தன் அகதிகளின் பாதுகாப்பை நீட்டிக்க முடிகிறது; \"செயற்கைக்கோள் மூலம் அமெரிக்கர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள், எல்லாம் முடிந்ததும் உங்களைச் சிறையில் போடுவார்கள், அப்போது உங்களுக்காகப் பரிந்து பேச நான் தேவைப்படுவேன்\" என்று பொய் சொல்லி வன்முறையாளர்களிடமிருந்து தப்ப முடிகிறது (இது பற்றி மனைவியுடன் சேர்ந்து சிரிக்கவும் முடிகிறது); ஐ.நா. கைவிட்டது புரிந்ததும், அகதிகள் தம் வெளிநாட்டு உறவினர்களிடம் புகலிடம் கேட்கும் முயற்சியை ஒருங்கிணைக்க முடிகிறது; பாதையில் குவிந்திருக்கும் பிணங்களின் மேல், தன் வாகனம் ஏறியிறங்குவதை உணர்ந்த தினத்தில், மூடிய கதவுக்குப் பின் குலுங்கி அழுதாலும், ஆழ்மனதில் பயங்கள் நிறைந்திருந்தாலும், நிதானமான வெளித்தோற்றத்துடன் செய்ய வேண்டியதைச் செய்ய முடிகிறது. ஒரு மாபெரும் அழிவுக்கு நடுவே, தன்னிடம் இருப்பவை அனைத்தையும் பணயம் வைத்துப் பிறர் உயிரைக் காப்பதே மேம்பட்ட குறிக்கோளாய்த் தெரிகிறது ருஸ்ஸிஸபகீனாவுக்கு.
குடும்பம், வேலை என்றிருக்கும் ஒரு சராசரி மனிதன் உள்ளார்ந்த அற உணர்வால் அதிமனிதனாகும் கதை இது. ருஸ்ஸிஸபகீனாவைத் திரையில் உயிர்க்க வைக்கிறது டான் சீடிலின் ஆழமான, அடக்கமான, மிகையற்ற நடிப்பு. சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்காக இவர் பரிந்துரைக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
திரைப்படத்தில் குழந்தைகள் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும், வன்முறைச்சூழலில் அவர்களின் இருப்புப் பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன. மேற்கத்தியக் குடிமக்கள் எல்லாரையும் ஏற்றிச் செல்ல பேருந்துகள் காத்திருக்கிறது. அடர்ந்து கொட்டும் மழையினூடே குழந்தைகளின் பாட்டுச் சத்தம் நெருங்குகிறது. அனாதை இல்லக் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள் பாதிரிமாரும் கன்னிகாஸ்திரீகளும். ஆனால் ருவாண்டாவின் குடிமக்களான அக்குழந்தைகளை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல அவர்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகள் மில் காலின்ஸ் விடுதியில் விடப்படுகிறார்கள். கலவரத்தில் அனாதையான குழந்தைகளை மில் காலின்ஸ் விடுதிக்கும், பிற அகதி முகாம்களுக்கும் அழைத்து வருகிற செஞ்சிலுவைச் சங்கச் சேவையாள ஐரோப்பியப் பெண்மணி கேட்கிறார்: \"பால், இவர்கள் எல்லாருக்கும் இடம் தரக்கூடிய நாடென்று உலகில் எங்காவது இருக்கிறதா?\" இது உரத்து உறுத்தும் காட்சிமொழியிலோ, வசனமொழியிலோ சொல்லப்படவில்லை. ஆனால், நீர்க்காமல் கையாளப்படும் விஷயங்கள்; கனமானவை; ருவாண்டாவுக்கு மட்டுமின்றி உலகச் சரித்திரத்துக்குப் பொதுமைப்படும் கேள்விகள் பொதிந்தவை. வெறும் அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்டு உயரும் மானுட அறம் பற்றிய கேள்விகளை உள்ளடக்கியவை.
ருவாண்டா இனப்படுகொலையின் வீச்சை அளவெடுக்கும் 'செய்தி விவரண நாடகம்' அல்ல இப்படம். உப்பும் உறைப்பும் திரிப்பும் பரபரப்புமாய் வன்முறையைப் பரிமாறும் 'பொழுதுபோக்குப்' படமும் அல்ல. வன்முறையின் ஒவ்வோர் அங்குலத்தையும் விரிவாய்ச் சித்தரித்துப் பார்வையாளரை அதிர வைக்கும் உத்தி இயன்றவரை தவிர்க்கப்படுகிறது. கதை சொல்ல அல்வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை இயக்குநர் டெர்ரி ஜார்ஜ். இனவெறியையும் வன்முறையையும் கடந்த ஒரு தனிமனிதனின் கோணத்திலிருந்து இனவெறியையும் அறநெறியையும் பன்னாட்டு அரசியலையும் விவாதித்துச் செல்லும் படைப்பு ஹொட்டேல் ருவாண்டா. ஒரு சரித்திரப் படைப்புக் குரலின் தலையாய அம்சம், அது அச்சரித்திரப் பிரச்சினையை அணுகத் தேர்ந்தெடுக்கும் கோணமே. படைப்பாளியின் இந்தத் தேர்ந்தெடுப்பு பிரக்ஞைபூர்வமானது; அழகியல் பார்வையுடன் சம்பந்தப்பட்டது; அறவொழுக்கப் பார்வையிலிருந்து தப்பிக்க இயலாதது
நன்றி: குமுதம்</span>
|
|
|
| எமது இணைய முகவரியை தங்கள் இணையத்தில் இணைத்துவிட முடியுமா? |
|
Posted by: malaravan - 08-25-2005, 02:22 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- No Replies
|
 |
நான் கனடா தமிழ்க்குரல் இணையத்தள ஆசிரியரில் ஒருவன். மீண்டும் இக்கடிதத்தை தங்களுக்கு அனுப்புகின்றேன். காரணம் எமது இணையத்தளம் இளைஞர்களைக்கொண்டு நடாத்தப்படுகின்றது. அத்துடன் எமது நோக்கம் தமிழர்களை, தமிழீழத்தை நோக்கிய பயணமாகும். அதற்கு கூடுதலான வாசகர் வட்டத்தை சேர்க்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. அதற்காக தங்களிடம் எமது இணையவலையை தங்களின் இணையத்தள இணையத்தில் இணைத்துவிடுமாறு தாழ்மையாக வேண்டுகின்றேன். அத்துடன் நான் தமிழ் இளைஞர் பேரவையிரின் அங்கத்தவனும் கூட. எமது எண்ணம் கூடுதலாக மக்களிடம் நல்வண்ணம் போய்ச்சேருவதற்கு தங்கள் இணையத்தளம்தான் சிறந்தவழி என்கின்றபடியால் மீண்டும் மீண்டும் மின்னஞ்சல் அனுப்புகின்றேன். ஆகவே தயவுசெய்து தங்கள் இணையத்தளத்தில் எமது இணைய முகவரியை இணைத்து விடுங்கள். இக்கடிதம் கிடைத்தால் தயவுசெய்து பதில் தாருங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
நன்றி
வ.முருகதாஸ்
தலைவர்
தமிழ் இளைஞர் பேரவை
ஆசிரியர்: தமிழ்க்குரல்
|
|
|
| அகப்பையில் அவள் அசிங்கமாமோ..??! |
|
Posted by: kuruvikal - 08-25-2005, 11:31 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (38)
|
 |
<img src='http://img370.imageshack.us/img370/3597/handart103on.jpg' border='0' alt='user posted image'>
<b>அன்னையின்றி
அகிலத்தில்
அணுவும் இல்லை
அன்பும் இல்லை
அப்படி இருக்க....
அன்னைக்கு நிகர்த்தவளை
அன்புக்கு உரியவளை
அகப்பையில் தாங்குவது
அருவருப்பாம்
அகிலத்தில் அவள் பிறப்பு
அசிங்கமாம்
அகமிழந்து அறிவிழந்து
ஆணும் பெண்ணும்
அருமை மனிதம் இழந்து
அவதியுறுகிறார்....!
அடங்கா வேட்கைகள்
அர்த்தமற்ற வேதங்கள்
அவர்தம் அகமாள
அலையும் விலங்கினும் கேடாய்
அருமைப் பண்பிழந்து
அருவருக்கும் மனித வீணர்களாய்
அழிவுக்கு வழி தேடுறார்...!
அன்புக்குரியவளை
ஆழக் குழியில் புதைத்திட்டு
அகம் மகிழ விளைகிறார்
அடுத்த சந்ததிக்கு
ஆண் மகவு தேடும்
அடி முட்டாள்களே - நாளை
அவனுக்கோர் துணை தேடி
அடுத்தவன் வீட்டில்
அடியளப்பீரே பெண் கேட்டு
அப்போ.... தோண்டிய குழி திறந்து
அடியும் கொட்டு மேளம்
ஆடும் எலும்புக்கு கட்டி வையும்
அன்புச் செல்வனை...!
ஆண்டாண்டு காலம்
அசிங்கமாம் சமூகச் சாக்கடைக்குள்
அர்த்தமின்றி நீச்சலடிக்கும்
அறிவிலிகளே....
அடைத்த செவி திறந்து
அகல விழி திறந்து
அறியும் ஒரு சேதி...
அருவருக்க என்னடா இருக்கு
அன்னைக்குள்
அவள் தந்த உன் ஜீவனுக்குள்...??!
அதிகமேன்...
அருகிருத்தி அணைக்கும்
அன்புத் துணைக்குள்
அருவருப்பா உனக்கு...?!
அடேய்....
அர்த்தமில்லா
அண்டப்புளுகுகள் எதுக்கடா..??!
ஆணும் பெண்ணும்
அகிலத்தில் சமன்
அதுவே உண்மை...!
அறிந்து கொள் - இல்லை
அகலத் திறந்திருக்கு புதைகுழி
அதற்குள் அடங்கிக் கொள்
அகிலத்தில்
அர்த்தமுள்ள
ஆண் பெண் சமத்துவமாய் வாழட்டும்..!</b>
|
|
|
| பெண் என்று பிறந்து விட்டால்...... |
|
Posted by: kuruvikal - 08-25-2005, 08:02 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (18)
|
 |
<b>பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தாய், பாட்டி</b>
பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற தாயையும் பாட்டியையும் போலீசார் கைது செய்தனர். மண்ணில் புதைக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அந்தக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரமான சம்பவம் மதுரையில் நடந்தது.
ஈஸ்வரி என்ற 25 வயது பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் அதைக் கொல்ல முடிவு செய்தனர் ஈஸ்வரியும் அவரது தாயாரும்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஈஸ்வரி குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வைகை ஆற்றங்கரைக்குச் சென்றார்.. கூடவே அவரது தாயாரும் சென்றார்.
அப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், குழந்தையை உயிருடன் பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு சென்ற பெண்களைப் பார்த்து சந்தேகமடைந்தனர். இருவரையும் அழைத்து விசாரித்தனர்.
குழந்தையை மருத்துவர்கள் தான் பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறியதாக அவர்கள் கதைவிட்டனர். ஆனால் அவர்களைத் திட்டிய போலீசார் குழந்தையை கையில் எடுத்துச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இரு பெண்களும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கினர்.
ஆனாலும் இருவர் மீதும் சந்தேகம் இருந்ததால், அவர்களை பின் தொடர முடிவு செய்தனர்.
ஆனால், இயற்கை உபாதைக்காக இருவரும் ஆற்றுக்குச் செல்வதாகக் கூறவே அவர்களை போலீசார் உடனே பின் தொடரவில்லை.
இரு பெண்களும் தொடர்ந்து ஆற்றுக்குள்ளேயே இருக்கவே, சந்தேகமடைந்த போலீசார் அங்கு விரைந்தனர்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி உயிர் உறைய வைத்தது. இரு பெண்களும் கையாலேயே ஆற்று மணலில் குழி தோண்டு குழந்தையை புதைத்துவிட்டு மூடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து ஓடி வந்த போலீசார் குழந்தையை உடனடியாக மண்ணில் இருந்து மீட்டனர். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தை மயங்கிப் போய் இருந்தது.
உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் ஓடி வந்தனர். மருத்துவர்கள் உடனே குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையை ஆரம்பித்தனர்.
குழந்தையைப் புதைத்த தாய் ஈஸ்வரியையும் அவரது தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஈஸ்வரியின் கணவர் ஒரு கூலித் தொழிலாளி. தனக்கு பையன் தான் வேண்டும் என அவரது கணவர் கூறியுள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் ஈஸ்வரியிடம் அவர் பேசக் கூட இல்லை என்று தெரிகிறது.
இதனால் வெறுத்துப் போய் குழந்தையை புதைத்துக் கொல்ல முடிவு செய்ததாக ஈஸ்வரி விசாரணையின்போது கூறினார் என்றனர்.
குழந்தையை வளர்க்க முடியாதவர்களுக்கு உதவவே தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்படுபவர்கள் அதை அரசிடம் ஒப்படைக்கலாம் என்ற நிலை உள்ளது.
அதைக் கூட செய்யாமல், குழந்தையை கொன்றுவிட முடிவு செய்த ஈஸ்வரியை என்னவென்று சொல்வது? பெண் குழந்தை பிறந்ததால் மனைவியிடம் பேசுவதையே நிறுத்திவிட்ட கணவரை என்ன செய்வது?
thatstamil.com
|
|
|
| தகவல் தருவீர்களா? |
|
Posted by: RaMa - 08-25-2005, 05:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
மீண்டும் கன்னித் தமிழ் வணக்கம்
எனக்கு உங்களிடம் இருந்து தகவல் ஒன்று தேவைப்படுகின்றது. நீங்கள் அறிந்த எதாவது ஒரு இனைய தளத்தில் தமிழ் கட்டுரை வடிவில் எமது தலைவர் திரு வே பிரபாகரன் அவர்களைப் பற்றிய கட்டுரை இருக்கின்றதா? அப்படி இருந்தால் தயவு செய்து அந்த இனைய தளத்தின் விலாசத்தை அறியத் தரவும்.
ஆங்கிலத்தில் இருந்தாலும் பாரவாயில்லை. தமிழ் கூட விரும்பத்தக்கது
நன்றி உங்கள் உதவிக்கு
|
|
|
|