Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 499 online users.
» 0 Member(s) | 497 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,423
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,230
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,529
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  யார்கொலையாளி?
Posted by: ANUMANTHAN - 08-28-2005, 10:16 AM - Forum: நகைச்சுவை - Replies (18)

ஒரு தங்குவிடுதியில் ஒருமருத்துவர் ஒருவக்கீல் ஒருநீதிபதி ஆகிய மூவரும் இணைந்து ரகசிய திட்டம்போட்டனர். இத்திட்டத்தை ஒட்டுக்கேட்ட பணியாள் காவல்துறைக்கு தகவல்கொடுத்தான். இதையறிந்து மூவரும் அப்பணியாளை கொலை செய்ய கத்தியால் குத்திவிட்டார்கள்.பணியாளன் இறக்கும் தறுவாயில் காவல்துறை வருகிறது உன்னையார் குத்தியது என கேட்க? பணியாள் அவன்தான் என கைஉயர்த்தியபடி இறந்துவிடுகிறான். கைகாட்டியதிசையை காவலர் பார்க்கும்போது மூவரும் ஒன்றாக நின்றபடி காவலரை பார்க்கிறார்கள்.பணியாள் மீண்டும் கை காட்டமுடியாதநிலை ஆனால் வேறு எவரின் உதவியுமில்லாது காவலர் சரியானகொலையாளியை கைதுசெய்கிறார்! எதன் அடிப்படையில் கைதுசெய்தார்? இதுதான் கேள்வி?

Print this item

  கதிர்காமர் கொலையும், சந்திரிகா நிலையும் பகுதி - 6
Posted by: malaravan - 08-28-2005, 06:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கதிர்காமர் கொலையும், சந்திரிகா நிலையும் பகுதி - 6

கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது….

சென்ற தொடரில் இந்திய அரசின் உளவுத்துறையான றோ ஏன் கதிர்காமரை கொலை செய்திருக்கக்கூடாதென்று பார்த்தோம்அல்லவா?. இம்முறை எப்படி அக்கொலையை றோ செய்திருக்கும் என நோக்குவோம் எம்மினிய வாசகர்களே! இந்திய அரசின் உளவு அமைப்பான றோவினுடைய ஊடுருவல் இலங்கையில் அதிகமாக இடம்பெற்றிருக்கின்றது. அதாவது றோவினது இலங்கை உபஅமைப்பான ஈ.என்.டி.எல்.எப்பினது உறுப்பினர்களின் ஊடுருவலானது விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் கௌசல்யனின் கொலையில் அம்பலமானதை அறிந்திருப்பீர்கள். அதை எம் வாசகர்களுக்காக மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம். கௌசல்யன் கொலை நடைபெற்று சில வாரங்களின் பின் வெலிகந்தையில் கருணா குழுவின் முகாம்மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவர் இந்தியாவைச்சேர்ந்தவர். இவர் கௌசல்யன் கொலையாவதற்கு மூன்றுநாட்கள் முன்தான் இலங்கை வந்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கொலையான பின் இவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கான எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் ஆனந்தசங்கரியால் முன்னெடுக்கப்பட்டவையென்பதும் நீங்கள் அறிந்தவையே. ஆகவே இந்திய உளவுப்பிரிவின் நடவடிக்கைகள் இலங்கையரசியலில் முக்கிய இடம் வகிப்பதை நாம் அவதானிக்கலாம். அத்துடன் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரியின் தொடர்புகளும் இந்திய உளவு அமைப்பான றோவினருடன் ஆழமாகவிருப்பதையும் நீங்கள் அவதானிக்கலாம். அதாவது வெலிகந்தையில் கொல்லப்பட்டவரின் உடல் இந்தியாநோக்கி போவதாகவிருந்தால் அதற்கு உதவியவரின் அரசியல் செல்வாக்கு எப்படி இருந்திருக்கவேண்டும். அத்துடன் ஆயுதங்களுடன் தமிழ்நாட்டில் பிடிபட்ட ஈ.என்.டி.எல்.எப்பின் உறுப்பினர்களை விடுதலைப்புலிகள் என தமிழக காவல்த்துறையினர் கைது செய்திருந்தவேளை இலங்கையில் இருந்த ஓர் அரசியல்வாதி இந்தியா சென்று அவர்களை விடுவித்திருந்தார். அது யார்தெரியுமா? ஆம் உங்கள் ஊகம் சரிதான். ஆனந்தசங்கரியார் தான் இந்தியா சென்று அவர்களை விடுவித்திருந்தார். அந்தளவுக்கு ஆனந்தசங்கரி இலங்கை ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்களுக்கும் சரி, இந்திய ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்களுக்கும் சரி எப்படியோ அவர்களுக்கு வேண்டியவராகவே இருக்கின்றார். இவர்களைப்பயன்படுத்தியே இந்திய அரசின் உளவுப்பிரிவான றோவினது ஊடுருவலானது இலங்கையில் இருக்கின்றது. அமிர்தலிங்கம் கூட்டணித்தலைமையில் இருந்தபோதே றோவும் இலங்கையில் ஆழ ஊடுருவியிருந்தது. அந்தவகையில் இந்தியாவினது இலங்கைத் தமிழ்க்கட்சிகளுடனான தொடர்புகள் அமிர்தலிங்கம் காலத்திலிருந்தே இலங்கையில் அதிகமாக இருக்கின்றதென்பதில் நாம் ஐயமுறத்தேவையில்லை. அதை இப்போதும் பேணிவரும் அரசியல்வாதி எங்கள் தமிழின வரலாற்றுத்துரோகி ஆனந்த சங்கரி. இவையிருக்க, இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியலைப்பொறுத்தவகையில் யாரை எவர் கொன்றாலும் தான் பதவியில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியான போக்கைக்கொண்டிருப்பவர். ஆதலினால் கதிர்காமரைக்கொன்றால் என்ன? டக்லஸைக்கொன்றால் என்ன? அவர்கள் கொலையைவைத்தே அரசியல் நடாத்தும் திறமை அவருக்கிருக்கின்றது. அதனடிப்படையில் சிங்கள அரசு கூலிக்கு வைத்திருக்கும் ஈ.என்.டி.எல்.எப்பின் உறுப்பினர்களை வைத்தே றோ கதிர்காமரைக்கொலைசெய்திருக்கலாம் அல்லவா?. அதற்கு கூடுதலான விளக்கமாக கருணாவின் குழுவினர் ஊடகவியலாளர் சிவராமைகக்கடத்தி அதிகூடிய பாதுகாப்பிற்குட்பட்டிருந்த இடத்தில் கொலைசெய்து வீசியெறிந்திருந்தார்கள். அவரைக்கடத்தும்போது நேரடியாகக்கண்ட சாட்சிகளின் வாக்குமூலத்திலிருந்தே அவரைக்கொன்றது கருணாவின் வலதுகரமான இனியபாரதியென்பது தெரிந்தும் அவனைக்கைது செய்யாமல் விட்டுவிட்டு, பின் ஆயுதத்துடன் அவனையும், ஓர் முஸ்லீமையும் சேர்த்து கைதுசெய்து இவர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்திற்கென்று சிங்கள இடத்திற்கு இவர்களின் சிறையை மாற்றிவிட்டு இன்று அக்கொடியவனான இனியபாரதி அவனது குற்றத்திற்கான தண்டனை பெறாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல், ஏன், எதற்காக கைது செய்யப்பட்டான் என்பது தெரியாமல் இராணுவத்துடன் இராணுவவாகனத்தில் உலாவருகின்றான். இதை சிறீலங்கா இராணுவமும், இலங்கை இராணுவத்தின் உளவுப்பிரிவினரும் மறுக்கமுடியவுமில்லை, மறைக்கமுடியவுமில்லை. அவ்வாறான துரோக கும்பலைவைத்தே இந்திய உளவுப்பிரிவான றோ இலங்கையரசியலில் கதிர்காமரைக்கொலைசெய்து, பழியை புலிகள்மேல் போட்டு, சுகந்தி கதிர்காமருக்கு அனுதாபத்தையும் தெரிவித்து, இலங்கையரசுக்கு கவலையையும் தெரிவித்து, புலிகளை கண்டித்து தனது அரசியல் சாமர்த்தியத்தைக்காட்டியிருக்கலாம் அல்லவா? அவர்கள் கருணாவின் கூலிக்கும்பலை வைத்து கொலைசெய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆயுதத்துடன் கொலைநடந்த இடத்திலிருந்து வெளிச்செல்லும்போது இராணுவத்தினர் கைதுசெய்ய ஏதுவாகலாம் என வாசகர்கள் நீங்கள் நினைப்பது எமக்கு புரிகின்றது. அப்படி நடக்க சாத்தியமில்லை வாசகர்களே! காரணம் அக்கும்பலிடம் இலங்கையில் எங்கும் சென்றுவரத்தக்கதாக இலங்கை அரசின் உளவுப்பிரிவினருக்கான அடையாள அட்டையிருக்கின்றது. இவர்களை சந்தேகத்தின் பேரில் இராணுவம் மறித்திருந்தாலும் கூட தம்மிடமுள்ள சிறீலங்கா உளவுத்துறையின் அடையாள அட்டையை வைத்தே சாதாரணமாக தப்பியிருக்கலாம். இவைகளை கருத்தில் எடுத்தே றோவானது இலங்கை அரசியலில் விளையாடி தமக்கு எதிராக செயற்பட்ட கதிர்காமரை போட்டு, தம்மிடமிருந்து து}ர விலகிய இலங்கையை தம்மிடம் நெருங்கிவர வைத்திருக்கின்றார்கள். அதையே வெளிநாட்டு அமைச்சராக பதவியேற்ற அனுராவின் முதற்பயணமான இந்திய பயணமும் எடுத்துக்காட்டுகின்றது அல்லவா? வாசகர்களே! அடுத்து நாம் பார்க்கப்போவது சந்திரிகாவின் கட்சியை. உள்ளிருந்து கொல்லும் வித்தையை அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான காரணம்
தொடரும்...

மலரவன் மலரினி
www.tamilkural.com

Print this item

  கனடாக்கு SMS அனுப்ப
Posted by: Rasikai - 08-28-2005, 01:16 AM - Forum: இணையம் - Replies (18)

கனடாக்கு SMS அனுப்ப இலவசம்
1] Rogers or Fido" http://www.rogers.com/english/wireless/sendpcs.html

2] Bell Mobile http://www.txt.bellmobility.ca/bmc/en/

3] Telus: http://www.telusmobility.com/sendamessage/...damessage.shtml

Print this item

  கொழும்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர்கள் இருவர் கடத்தல்
Posted by: cannon - 08-27-2005, 11:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

மட்டக்களப்பைச் சேர்ந்த இரு தமிழர்கள் கொழும்பில் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர்.


சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த காத்தமுத்து நல்லதம்பி(வயது 40), கந்தையா சசிகுமார் (வயது 22) ஆகியோரை வானொன்றில் வந்த 4 பேர் கொண்ட ஆயுதக் குழுவினர் கடத்தியுள்ளனர்.

தங்களை சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கடத்தல்காரர்கள் கூறியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நீர்க்கொழும்பில் இச்சம்பவம் நடந்தது.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

.............செய்தி: புதினத்திலிருந்து.........

Print this item

  அனைவருக்கும் வணக்கம்!!!
Posted by: ANUMANTHAN - 08-27-2005, 08:27 PM - Forum: அறிமுகம் - Replies (20)

அனைவருக்கும் வணக்கம்!!!

Print this item

  உங்கள் பாடசாலை கால புகைப்படத்தை பெற
Posted by: KULAKADDAN - 08-27-2005, 07:38 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (19)

கீழ் வரும் இணையபக்கத்தில் சென்று உங்கள் பாடசாலை கால புகைப்படங்களை கண்டு ஆச்சரிய படுங்கள்.

http://www.worldschoolphotographs.com/

Print this item

  ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாக போகும் ஜனநாயகம்
Posted by: AJeevan - 08-27-2005, 06:30 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

<b>ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாக போகும் ஜனநாயகம்</b>

""இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தொட்டாலே மகா பாவம்'' என சிங்கள தேசத்தில் நாளாந்தம் புதுப்புது பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பல சிங்கள மேலாண்மைக் கருத் தியலாளர்கள் புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை வரை படிக்காமலேயே அது கிழித்தெறியப்பட வேண்டுமென காரசாரமாக எழுதிவருகின்றனர்.

புலிகள் கேட்பது போல இந்த வரைபின் அடிப்படையில் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக தமது மாற்று வரைபொன்றைப் பற்றியும் சமாந்தரமாகப் பேசலாம் என சந்திரிகா அரசு கூறிவருகிறது. ஆனால், சிங்கள தேசத்தில் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிக் கிளப்பப்பட்டு வரும் அனைத்துப் பூச்சாண்டிகளும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கும் போது தாமாகவே மறைந்துவிடும் என்பதே உண்மை. எமது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதை விட சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெல் வது, எப்படி வியூகம் வகுப்பது என்பன பற்றிய கவலைகளும் அக்கறைகளுமே மேலோங்கியுள்ளன. இது விடயத்தில் நாம் அனைவரும் தெளிவாயிருக்க வேண்டும். அதைவிடுத்து நேரத்துக்கு நேரம் வெளியாகும் சந்திரிகா அரசின் அறிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பசப்பு வார்த் தைகளையும் கண்டு மயங்கி மீண்டும் இலவு காத்த மடக் கிளிகளாவதை நாம் தவிர்க்க வேண்டும்.

புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபின் அடிப்படையில் தாம் பேசத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது கூறத் தலைப்பட் டுள்ளமையும் ஒரு நயவஞ்சக நாடகமே. ஏன்? ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகளை மட் டுமே நம்பி வெல்லக்கூடிய வாய்ப்பு ஐக்கிய தேசி யக் கட்சிக்கோ சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கோ தற் போது இல்லை. ஹெல உறுமய, ஜே.வி.பி. எப்படி யான நிலைப்பாடு எடுத்தாலும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள தேசத்தின் வாக்கு பிரிவது தவிர்க்க முடியாது. இதற்கு முக்கிய கார ணம் துரிதமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு சந்திரிகா அரசு மீது சிங்கள மக்களி டையே ஏற்படுத்திவரும் வெறுப்பாகும். இதே வேளை சந்திரிகா ஜே.வி.பி அரசின் மீது உள்ள வெறுப்பால் தன்பக்கம் திரும்பக்கூடிய சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி ஜனாதிபதித் தேர்தலை வெல்லமுடியாது என்பது ரணில் விக்கிரமசிங்க வுக்கு தெளிவாகத்தெரிகிறது.

ஆகவே தற்போது இரு பெரும் சிங்களக் கட்சிக ளும் "பிரேமதாசா சூத்திரத்தின்' மீது நாட்டம் கொள் கின்றன. 1988ஆம் ஆண்டிலே அப்போது ஆட்சி யிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜே.வி.பி. யும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாக சிங்கள மக் களிடையே பெரும் அரசியல் கிளர்ச்சியொன்றைக் கிளப்பிக் கொண்டிருந்தன. இலங்கை இந்திய ஒப் பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் சிங்கள தேசத்தை ஐக்கிய தேசியக்கட்சி இந்தியாவிற்கு விற் றுவிட்டது என அவர்கள் பரப்புரை செய்தனர்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண் டங்களுக்கு ஜே.வி.பி. தடைவிதித்தது. அவற்றை மீறி விற்ற ஒரு சில வர்த்தகர்கள் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
இப்படியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாபெரும் வெறுப்பலையொன்று வீசிக்கொண்டி ருந்த நேரத்தில் தான் பிரேமதாசா அதன் ஜனாதி பதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிரிந்த சிங்கள வாக்கின் ஒரு பகுதியோடு பிரிபடாத வடக்குக் கிழக்கு தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் இணைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்குத் தேவை யான மொத்த வாக்கின் 50சதவீதத்துக்கு மேல் பெறலாம் என்பது அப்போது பிரேமதாசா போட்ட கணக்கு. இதையே சிறிலங் காவின் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதற்கான பிரேமதாசா சூத்திரம் என அந்நேரத்தில் சில சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் அழைத்தனர்.

சிங்கள தேசத்தில் எப்படியான எதிர்ப்பலைகள் கிளம்பினாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தென் னிலங்கையில் அடிப்படையில் மாறா வாக்கு வங்கியொன்று இருக்கின்றது. மொத்த வாக்காளர் தொகையில் இது 3035 சதவீதம் எனக் கருதப்ப டுகிறது. இதோடு பிளவுபடாத தமிழர் தாயக மற் றும் முஸ்லிம் வாக்குகளை பெற்றால் ஐக்கிய தேசி யக் கட்சி சிங்கள தேசத்தில் ஏற்படக்கூடிய தனக் கெதிரான எந்த அலையையும் மேவி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லலாம் என பிரேமதாசா சூத்திரம் கூறுகிறது.

1988ஆம் ஆண்டிலே சிங்கள தேசத்தில் வீசிக்கொண்டிருந்த இந்திய வெறுப்பலைக்கு மத்தியில் பிரேமதாசாவும் அவருடைய அரசியல் மதியுரைஞர்களும் இரகசியமாக இந்தியத் தூதரகத்தை அணுகினர். வடக்குக் கிழக்கின் பிரிபடாத தமிழ் வாக்கு மொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாசாவுக்கு விழுவதற்கு அப்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம் ஆவன செய்யவேண்டுமென அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித்திற்கு சில தூதுகள் அனுப்பப்பட்டன. வடக்குக் கிழக்கில் விழப்போகும் வாக்குகள் பிரேமதாசாவுக்கு வெற்றியை நிச்சயம் பெற்றுக்கொடுக்கு மெனவும் இதன் காரணமாக "அவர் இந்தி யாவிற்கு என்றும் நன்றியுடையவராக இருப் பார்' எனவும் அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் ஒருமுறை 1988 ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார். அவர் கூறியது போலவே அந்த ஜனாதி பதித் தேர்தலில் பிரேம தாசாவுக்கு வடக்கு கிழக்கில் அமோகமான வாக்குகள் கிடைத்தன.

இந்தியப் படைகள் பெட்டி பெட்டியாகத் திணித்த இந்த வாக்குகளே அவருடைய வெற்றி யைத் தீர்மானித்தன. இது முடிந்த கையோடு கொழும்பில் நான் தற்செயலாக வரதராஜப்பெருமாளைச் சந்திக்க நேர்ந்த போது அவரும் பிரேம தாசாவைப்பற்றி தீட் சித் சொன்ன அதே வசனத்தைச் சொன்னார். தேர்தலில் வெற்றிபெற உதவியதற்குக் கைமாற்றாக பிரேமதாசா மாகாணசபை திறம்பட இயங்க தனக்கு ஆவன செய்வார் என வரதராஜப் பெருமாள் சொன்னார்.

இதையொட்டித்தான் அந்த நேரத்தில் "நினைத்ததை முடிப்பவர் பிரேமதாசா' என அவருக்கு பெருமாள் புகழாரம் சூட்டினார். தனது நன்றிக் கடனை நிறைவேற்ற வடகிழக்கு மாகாண சபைக்கு பிரேமதாசா வாரி வழங்கிடுவார் என கனவு கண்டார் பெருமாள். அந்த உற்சாகத்தில் தமிழர் தலைநகர் திருமலையில் சிங்கக் கொடியை ஏற்றி அவர் "சாதனை' படைத்தார். ஆனால் நடந்த தென்ன? தனது மாகாண சபைக்கு கொடுக்கப் பட்ட எள்ளளவு அதிகாரங்களைக் கூட பிரேம தாசாவின் ஆட்சி கபளீகரம் செய்து விட்டதென அவர் புலம்பியதும் இனித் தமிழீழம் அமைப் பதைவிட வேறு வழியில்லை என்று பிரகடனம் செய்து இந்தியாவிற்கு ஓடியதும் நாம் யாவரும் அறிந்த வரலாறு. "ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி; கடந்த பின்னே நீ யாரோ, நான் யாரோ?' என்ற கதையை சிங்கள தேசம் அன்று மீண்டு மொருமுறை அரங்கேற்றியது.
அந்தப் பிரேமதாசா சூத்திரத்தை மீண்டும் தூசுதட்டி கையிலெடுக்க வேண் டிய கட்டாயம் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தோன்றியுள்ளது. அது எப்படியென்று பார்ப்போம்.

ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் இலங்கையின் மொத்த வாக்குகளில் 50சதவீதத்துக்கு மேலான தொகையை ஒரு வேட்பாளர் பெறவேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் வெற்றி வாய்ப்பு யாருக்கென்பதை நாம் கணக்கிட்டுப் பார்க்க லாம்.
இந்தத் தேர்தலில் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பி. கூட்டு பெற்ற மொத்த வாக்கு 4,223,970 அதாவது 45.60 சதவீதம். ஐக்கிய தேசி யக் கட்சி 3,504,200 அதாவது 37.83 சதவீதம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா வெல்வதென்றால் மேலும் 12.17சதவீத வாக்குகளைப் பெறவேண்டும். விலை வாசி ஏற்றத்தால் சந்திரிகா அரசு மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் காரணமாக சராசரி 56 சதவீதமான வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தற்போது சாய்ந்துள்ளது எனக் கொண்டாலும் இன்னும் 67 சதவீத வாக்கு களை தேட வேண்டிய கட்டாயம் ரணில் விக்கிரம சிங்கவிற்கு உண்டு. 2004 ஏப்ரல் தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற மொத்த வாக்கு 633,654 அதாவது 6.84 சதவீதம்.

இது பிரிபடாத மொத்த வாக்காக இருக்கிறது. இதைக் கபளீகரம் செய்யாமல் ஜனாதிபதித் தேர் தலில் வெல்வது கடினம் என ஐக்கிய தேசியக்கட்சி கவலை கொள்கிறது. ஆகவே அது புலிகளை வசப் படுத்தும் நோக்கத்தில் பல வேலைகளைச் செய்ய வும் ஆசைவார்த்தை பேசவும் இப்போதே தொடங் கிவிட்டது. ஏதோ ஒருவகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டால் ஜனாதி பதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் வாக்கு தனக்கே கிடைக்குமென சிறிலங்கா சுதந்திரக்கட்சி கணக்குப் பண்ணுகிறது. இவையெல்லாம் இறுதி யில் ஆற்றைக்கடந்த கதையாகத்தான் இருக்கு மென்பதில் யாரும் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

Veerakesari

Print this item

  வயது ஆவதை தடுக்கபுதிய சிகிச்சை
Posted by: SUNDHAL - 08-27-2005, 04:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் 10 ஆராய்ச்சியாளர்கள் முதுமையை தடுக்கவும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கவும் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டனர். 10 உறுப்பினர்களை கொண்ட இந்த ஆய்வுக்குழுவில் 2 பேர் இந்தியர்கள்.

ஒருவர் பெயர் அனிமேஷ் நந்தி. இன்னொருவர் பெயர் பிரேம்குர்மானி.

இந்த குழுவினர் மேற்கண்ட ஆய்வில் முதல் கட்டமாக எலிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். இதில் `குளோதோ' என்ற புதிய புரோட்டீனை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த புரோட்டீன் எலிகளின் செல்களில் ஹார்மோனாகவும் செயல்பட வைத்தனர்.

இந்த ஹார்மோன் ரத்த அணுக்களில் நல்ல முறையில் செயல்பட்டன.

இந்த சோதனையில் புதிய ஹார்மோன் செலுத்தப்பட்ட எலிகள் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தன. வழக்கமாக எலிகள் 2 ஆண்டுகள் வரை உயிர் வாழும். அவற்றின் ஆயுள் மேலும் ஒரு ஆண்டு நீடித்தது.

இதே சோதனை அடிப்படையில் மனிதர்களின் ஆயுளையும் நீடிக்க முடியும் என்று அந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதுமை அடைவதை சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போட முடியும், ஆயுளையும் நீட்டிக்க முடியும்.

ஆரம்பத்தில் மனிதர்களின் எலும்புகள், மூளை இவற்றின் செல்களை நீண்ட நாட்களுக்கு தளர்ச்சி அடையாமல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Print this item

  வணக்கம்
Posted by: Senthamarai - 08-27-2005, 03:08 PM - Forum: அறிமுகம் - Replies (30)

அனைவருக்கும் அன்பில் மலர்ந்த வணக்கம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  சோகம் தாங்க முடியல...
Posted by: SUNDHAL - 08-27-2005, 02:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (22)

26வயதுப் பெண் மனிதக் குரங்கு ஐய்யய் புகைபிடிப்பதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறது. சீனாவில் ஷான்சி மாநிலம் ஷியானில் உள்ள குயின்லின் மிருகக் காட்சி சாலையில் இந்த மனிதக் குரங்கு உள்ளது.

1989-ம் ஆண்டு தன் முதல் காதலன் இறந்ததும் இது சிகரெட் புகைக்கத் தொடங்கியது. 1997-ம் ஆண்டு 2-வது காதலன் இறந்ததும், தன் வாரிசுகளில் ஒன்று இறந்ததும் இன்னொன்று வேறு மிருகக் காட்சி சாலைக்கு மாற்றப்பட்டதும் அது அதிகமாக சிகரெட் பிடிக்கத் தொடங்கியது.

அது புகைப் பிடிப்பதை கைவிடச் செய்வதற்கு மிருகக் காட்சி சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Print this item