Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 467 online users.
» 0 Member(s) | 464 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,417
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,230
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,528
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  வேலைக்குப் போகும் பெண்கள் ---பிரச்சனைகள்
Posted by: MUGATHTHAR - 08-30-2005, 08:17 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (5)

<b>வேலைக்குப் போகும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்</b>

இன்றைய பொருளாதார நிலையில் பெண்களும் வேலைக்குப் போவது அவசியமானதாகிவிட்டது வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் இது சர்வவாதாரணம் ஆனால் எங்கள் நாட்டில் வேலைக்குப் போகும் பெண்கள் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள் அவை என்ன அவற்றிலிருந்து எப்படி அவர்கள் விடுவிக்கப் படுவது என்பதுகளைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். .

1. போக்குவரத்து பிரச்சனைகள் என்னதான் நாங்கள் வாய்கிழிய பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசினாலும் பெண் ஒருவர் தனிய பிரயாணம் செய்யும் போது எப்பிடியான பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார் என உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை சிலபெண்கள் தங்களின் துணிச்சலால் தப்பித்துக் கொள்கிறார்கள் ஆனால் எல்லாரும் அப்பிடி இல்லையே
2. வீட்டை விட்டு வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் போது தங்குமிடப் பிரச்சனை எல்லோருக்கும் விடுதிகள் கிடைத்துவிடுவதில்லை அப்பிடியான போது வெளி வீடுகளில் தங்க நேரிடுகிறது சாப்பாட்டுப் பிரச்சனை தொடக்கம் எல்லாமே தனித்து செய்யவேண்டிய நிலமை
3. வேலைத்தளங்களில் மேலதிகாரிகளின் கழுகுப் பார்வைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் கொஞ்சம் முறைத்துத் திரிந்தால் பலவிதமான கஷ்டங்கள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கிறது (சில இடங்களில் மாத்திரம் )
4. எடுக்கும் சம்பளம் உரிய முறையில் வீட்டுக்குப் போகாவிடில் அதைப் பற்றி அப்பா . அம்மா . அண்ணன் . தம்பி என கேள்வி கேட்க நிறையப் பேர் ( இது ஒரு ஆண் உழைக்கும் போது கேட்க மாட்டார்கள் )
5. வேலைக்குப் போவதால் கலியாணத்துக்கு வரன் தேடும் போது பெண்ணுக்கு சமனான அல்லது மேலான ஒருவரையே பெற்றோர் தேடுவார்கள் இது சில சமயங்களில் அமைவது கஸ்டம் ( காரணம் ஈகோ பிரச்சனை ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை பின்னுக்கு நல்லாக இருக்காது என பெற்றோர் நினைப்பதால்) கலியாணம் சரிவராத பட்சத்தில் உழைக்கிறம்தானே கலியாணம் தேவையில்லை என்ற நிலைக்கு சில பெண்கள் வருகிறார்கள்
6. இதைவிட கலியாணம் முடிந்து விட்டால் கணவன் பிள்ளை என்ற கடமைகளையும் பார்த்து வேலைக்குப் போவது மிகுந்த சிரமம் கணவன் அனுசரித்து சில உதவிகளைத்தான் செய்ய முடியும் வீட்டு வேலைகளை செய்வதுக்கு பெண்களுக்குத் தான் அந்த பக்குவம் இருக்கிறது இப்ப குழந்தை ஒண்று பிறந்து விட்டால் அந்த குழந்தையின் பராமரிப்பு முழுக்க முழுக்க பெண்ணால்தான் முடியும் ஆபிஸில் இருக்கும் வேலைப்பளு வீட்டில் குழந்தையின் வேலைகள் என பார்க்கும் போது தன்னையறியாமலே ஓரு டென்சன் கோவம் வரும் இவை யாருமில்லாத இடத்து கணவன் மேல்தான் ஏற்படும்

இப்பிடி சில பிரச்சனைகளை நான் கண்டபடியால் எழுதினேன் இதைவிட நீங்கள் ஏதாவது அறிந்திருந்தால் எழுதுங்கள் இவற்றிலிருந்து எப்பிடி விடுபடலாம் என்பதைப் பற்றி ஆராய்வோம்

Print this item

  உறவுகளை முறிக்கிறதா இன்டர்நெட்?
Posted by: Rasikai - 08-30-2005, 03:31 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (79)

<b>உறவுகளை முறிக்கிறதா இன்டர்நெட்? இல்லவே இல்லை </b>

என்கிறது கலி·போர்னியா பல்கலைக்கழக ஆய்வு

இன்டர்நெட்டில் உலவுபவர்களைப் பற்றி இரண்டு விதமான கருத்துகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒன்று. அவர்கள் தனிமையில் வாடுபவர்கள். நெட்டில் துணை தேடுகிறார்கள் என்பது. இன்னொன்று. இன்டர்நெட்டுக்கு அடிமையாகி அவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கை நண்பர்களையும் உறவினர்களையும் உதறுகிறார்கள் என்பது. அரசியல் காரணங்களுக்காக இன்டர்நெட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தக் கருத்துகள் வசதியாகிப் போனது. லாஸ் ஏஞ்சலிஸில் இருக்கும் கலி·போர்னியா பல்கலைக்கழகத்தின் (யூ.சி.எல்.ஏ.) தொடர்புக் கொள்கை மையம் சமீபத்தில் வெளியிட்ட இன்டர்நெட் ஆய்வு அறிக்கை நேரெதிராக ஒரு கதை சொல்கிறது. வலைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களோடும் சகஜமாகப் பழகுகிறார்கல் என்றும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவில் சமூக நடவடிக்கைகளில் கலந்துகொள்கிறார்கள் என்றும் சொல்கிறது இந்த அறிக்கை!

இணையத்தில் நேரத்தை செலவிடுவதால் மனித உறவு ஒன்றும் பாதிக்கப்படுவதில்லை என்று சொல்லும் முதன்முதல் ஆய்வு இதுதான். இந்த வருடம் பிப்ரவரியில் ஸ்டான்·போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை. இன்டர்நெட் பரவலான அளவில் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையில் பிளவை உருவாக்குகிறது என்று ஒரே போடாகப் போட்டது.

அதே போல 1998ல் கார்னெகி மெலன் பல்கலைக்கழகம் தான் நடத்திய ஹோம்நெட் என்ற ஆய்வின் முடிவை வெளியிட்டது. வாரம் சில மணி நேரங்களே இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடம் மனச் சோர்வும் தனிமையுணர்வும் மிக அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு அறிவித்தது.

இந்த மாதிரி சிந்தனையில் கோளாறு இருக்கிறது என்கிறார் யூ.சி.எல்.ஏ. ஆய்வின் இயக்குனர் ஜெ·ப்ரே கோல். "இன்டர்நெட் பயன்பாடு மக்கள் மற்றவர்களுடன் பழகுவதைக் குறைக்கிறது என்பதும் தவறுஇ இவர்கள் தனிமையில் தவிப்பவர்கள். சமூகத்திலிருந்து விலகி இருப்பவர்கள் என்பதும் தவறு" என்கிறார் கோல்.


இந்த இரண்டு ஆய்வுகள் ஒன்றுக்கொன்று பெரிதாக முரண்படவில்லை
என்கிறார் கார்னெகி மெலன் ஆய்வை நடத்திய ராபர்ட் க்ரவுட். இன்டர்நெட்டின் பரிணாம வளர்ச்சி அவ்வளவு வேகமாக நடக்கிறது என்பதைத்தான் அது பிரதிபலிக்கிறது என்கிறார் அவர். க்ரவுட் வலைவாசிகளிடம் 1995ல் தனது ஆய்வைத் தொடங்கினார். அந்த சமயத்தில் இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதில் ஒரு சிறிய சதவீதம்தான் இருந்தது. அதற்குப் பிறகு இணையம் அரட்டைஇ ஷாப்பிங். காதல். விளையாட்டு ஆகியவற்றுக்கு ஒரு உலகம் தழுவிய மீடியமாக வளர்ந்துவிட்டது. "இன்டர்நெட் முன்பு இருந்தது போல் இல்லை. இன்டர்நெட் மாறிவிட்டது. அதோடு சேர்ந்து சமூகச் சூழலும் மாறியிருக்கிறது" என்றார் க்ரவுட்.

அமெரிக்கக் குடும்பங்கள் மீது இன்டர்நெட்டின் தாக்கத்தை அடுத்த பத்தாண்டுகள் வரை ஒவ்வொரு வருடத்திற்கும் கவனிப்பதுதான் யூ.சி.எல்.ஏ.வின் மெகா ஆய்வு. இந்த 50 பக்க அறிக்கைஇ இந்த ஆய்வின் முதல் தவணை. 1940கள்இ 50களில் தொலைக்காட்சி பரவியபோது அந்த ஊடகத்தைப் பற்றி போதுமான அளவு ஆராய்ச்சி நடத்தப்படவில்லை என்று சமூக அறிவியலாளர்கள் ரொம்ப காலமாகவே சொல்லிக்கொண்டிருந்தார்கள் மின்சக்தி. தொலைபேசி அல்லது தொலைக்காட்சி ஆகியவற்றை விட அதிவேகமாகப் பரவி வரும் இன்டர்நெட் ஊடகத்திற்கும் அப்படி ஒரு குறை வந்துவிடக் கூடாது என்பதுதான் யூ.சி.எல்.ஏ. இன்டர்நெட் ஆய்வைத் தொடங்கியதன் நோக்கம் என்றார் ஜெ·ப்ரே கோல்.


இந்த ஆய்வு 2.096 அமெரிக்கக் குடும்பங்களில் நடத்தப்பட்டது. எத்தனை வீடுகளில் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதுஇ ஆன்லைன் அந்தரங்கம் (pசiஎயஉல) பற்றி மக்கள் கருத்து என்னஇ ஆன்லைன் பங்கு வியாபாரத்தில் மக்கள் ஈடுபடும் விதம் - இதையெல்லாம் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன.

பதில் சொன்னவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இன்டர்நெட்டில் உலவும் வசதி இருந்தது தெரிந்தது. அவர்களில் 47 சதவீதத்தினருக்கு வீட்டில் இணைப்பு இருந்தது. இன்டர்நெட் பயனாளிகள் வாரம் சராசரியாக 9.42 மணி நேரம் இணையத்தில் செலவிடுகிறார்கள்.


அதே சமயம் நெட் பயன்பாட்டின் வளர்ச்சி (அமெரிக்காவில்) குறைந்து வருவதாகச் சொல்கிறது இந்த ஆய்வு. இணையத்தைப் பயன்படுத்தாதவர்களில் 59 சதவீதத்தினர் தங்களுக்கு அடுத்த வருடம் கூட இன்டர்நெட் இணைப்பு வாங்க வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த 59 சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்கினர். தங்களுக்கு இணையத்தில் சுத்தமாக ஆர்வம் இல்லை என்றிருக்கிறார்கள்.

இன்டர்நெட் மற்ற ஊடகங்களை அமுக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இணையப் பயனாளிகள். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவு புத்தகங்கள். செய்தித் தாள்களைப் படிக்கிறார்கள்; ரேடியோ கேட்கிறார்கள்; ·போனில் பேசுகிறார்கள் என்கிறது ஆய்வு.

இன்டர்நெட்டின் வளர்ச்சியால் அடி வாங்குகிற ஊடகம் ஒன்று இருக்கிறதென்றால் அது தொலைக்காட்சிதான் போலிருக்கிறது. வலைவாசிகளும் சாதாவாசிகளும் புத்தகம். பேப்பர் படிப்பதில் கிட்டத்தட்ட ஒரே அளவு நேரம்தான் செலவிடுகிறார்கள். ஆனால் வலைவாசிகள் மற்றவர்களை விட ஏறக்குறைய 4.6 மணி நேரம் குறைவாகவே டி.வி. பார்க்கிறார்கள்.

எல்லாம் சரிதான். இன்டர்நெட் பயன்பாட்டால் நிஜ உலக உறவுகள் பாதிக்கப்படவில்லை என்று கோல் சொல்வதைத்தான் பலர் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இணையத்துக்காக நிஜ உலக உறவுகள் முறிவது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

"இன்டர்நெட்டால் மக்கள் தனிமையின் பிடியில் சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் முகமில்லாதவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார் ஸ்டான்·போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பெரும்பங்கு வகித்த அரசியல் அறிவியலாளர் நார்மன் நை. "நெட்டில் உட்கார்ந்திருக்கும்போது மனிதக் குரலே காதில் விழுவதில்லை. நம்மை யாரும் அன்பாகத் தழுவுவதில்லை" என்று வருத்தப்பட்டார் நை.
இன்டர்நெட் தொழில்நுட்பம் மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துகிறது என்று நீண்ட காலமாக சொல்லி வந்த இணையப் பிரியர்கள் மத்தியில் நை நடத்திய ஆய்வு பற்றிக் கடுமையான விமர்சனம் எழுந்தது. யூ.சி.எல்.ஏ. ஆய்வை நை இன்னும் படிக்கவில்லை என்று தெரிகிறது. இன்டர்நெட்டில் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் இன்டர்நெட் ஒரு பெரிய சமூக மையமாகியிருக்கிறது என்கிறார் க்ரவுட். 1998ல் கார்னெகி மெலன் ஆய்வை நடத்திய சமூக உளவியலாளர் இவர்.அவரது ஆய்வு 1995 முதல் 1997 வரை நடத்தப்பட்ட சர்வேக்களின் அடிப்படையிலானது.

"1995ல் உங்கள் நண்பர்களுடன் இன்டர்நெட்டில் பேசவேண்டும் என்றால் அவர்கள் அனேகமாக நெட்டில் இருக்க மாட்டார்கள்" என்றார் க்ரவுட். இன்று ஐ.சி.க்யூ. யாஹ¥ மெசஞ்சர் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகள். நெட்வழி விளையாட்டுகள்இ ஒயர்லஸ் ஈ-மெயில் ஆகியவை இணையத்தில் சமூக உறவாடலைத் தவிர்க்க முடியாதபடி ஒரு சூழலை உருவாக்கியிருக்கின்றன என்கிறார் இவர். க்ரவுட் தன் ஆய்வைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். 1998 முதல் 1999 வரை அவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை விரைவில் எதிர்பார்க்கலாம்

தான் நடத்திய முதல் ஆய்வை விட தனது லேட்டஸ்ட் ஆய்வில் இன்டர்நெட் மக்களிடம் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றார் க்ரவுட். இருந்தாலும் நெட்டில் அதிக நேரம் செலவிட்டால் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறையத்தான் செய்யும் என்றார் அவர்.


"மக்கள் இன்டர்நெட்டில் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்களது தனிமையுணர்வு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு சுகமான உணர்ச்சிகள்தான் ஏற்படுகிறது. முன்பு அப்படி இல்லை" என்றார் க்ரவுட்.

இணையப் பயனாளிகள். இணையம் தங்கள் நிஜ உலக உறவுகளை பாதிக்கவில்லை; தங்கள் கணவன்ஃமனைவி கவனத்தை தங்களிடமிருந்து திசை திருப்பவில்லை; தங்கள் குழந்தை குட்டிகள் நண்பர்களுடன் விளையாடப் போகும் நேரத்தில் கைவைக்கவில்லை என்று உறுதியாக நம்புவதைக் காட்டுகிறது யூ.சி.எல்.ஏ. ஆய்வு. வலைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடன் எவ்வளவு மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்று கணக்குப் போட்டபோது. 27 மணி நேரம் என்று தெரிந்தது. இன்டர்நெட் பக்கம் போகாதவர்கள் 30.0 மணி நேரம் செலவிடுகிறார்கள்.

இது அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார் கோல். ஆய்வில் கிடைத்த மற்ற ஆதாரங்கள். வலைவாசிகள் சமூக நடவடிக்கைகளை ஒதுக்குவதாகக் காட்டவில்லை என்கிறார் அவர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிட்டால் வலைவாசிகள் நண்பர்களுடன் கிட்டத்தட்ட அதே நேரம் செலவிடுகிறார்கள் என்றும் கிளப்கள் மற்றும் பிற அமைப்புகளின் நடவடிக்கைகளில் மற்றவர்களை விட அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் யூ.சி.எல்.ஏ. ஆய்வு சொல்கிறது.

இன்டர்நெட் பயனாளிகளில் 92 சதவீதத்தினர் தாங்கள் இணையத்தில் இறங்கியதற்கு முன்பு இருந்ததை விட அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இன்டர்நெட்டில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ நடவடிக்கைகள். நிகழ்ச்சிகள் இன்டர்நெட்டுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. எனவே "இப்போதெல்லாம் நீங்கள் இன்டர்நெட்டில் இல்லையென்றால் சமூகரீதியாக தனிமைப்பட்டுப் போவது போல் உணர்வீர்கள்" என்கிறார் யூ.சி.எல்.ஏ.வின் 'அறிவியல். தொழில்நுட்பம். சமூகத் திட்ட'த்தின் இயக்குனர் கிரெகரி ஸ்டாக்.

யூ.சி.எல்.ஏ. ஆய்வு அமெரிக்க வலைவாசிகளைப் பற்றியதுதான். இது சொல்லும் தகவல்கள் எல்லாமே நம் எல்லாருக்கும் பொருந்திவிடாது. ஆனால் மனித உறவுகள் நம் எல்லாருக்கும் பொதுவான சமாச்சாரம். இந்த விஷயத்தில் இந்த ஆய்வு கொஞ்சம் நம்பிக்கை தருகிறது

Print this item

  முட்டை சாப்பிட பயமா..?
Posted by: Rasikai - 08-30-2005, 03:11 AM - Forum: மருத்துவம் - Replies (21)

<b>முட்டை சாப்பிட பயமா..? இல்லையே</b>.

இயற்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று முட்டை. இதில் எளிதில் ஜீரணிக்கும் புரோட்டீன்களும் சத்துப் பொருட்களும் ஏராளமான மதிப்புக் மிக்க தாதுப் பொருட்களும் காணப்படுகின்றன. அதே சமயம் சிறிதளவுக்கு வேண்டாத விஷயங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக முட்டையை முழுமையாக வெறுத்து ஒதுக்குவது சரியாக இருக்க முடியாது.

முட்டை என்றதும் அதில் அடங்கி இருக்கும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் தான் உடனடியாக நினைவுக்கு வரும். இந்த இரண்டுமே இருதய ரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்பவை என்பதால் பலர் முட்டையை தொடுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் தெளிய வேண்டுமானால் முதலில் இந்த இரண்டை யும் பற்றி தெளிவாக அறிய வேண்டும்.

கொலஸ்ட்ரால் என்பது ஏதோ நாம் சாப்பிடுகிற பொருட்கள் மூலம் தான் உடம்பில் சேருவதாக கருதுகிறார்கள். அதுபோல அது ஆகாத பொருள் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது. இந்த இரண்டுமே தவறு. ஏனெனில் நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலுக்காக ஏங்கி தவிக்கும். கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் உடம்பு வளர்ச்சி என்பதே இருக்காது. உடம்பில் காணப்படும் 80 சதவீத கொலஸ்ட்ராலை உடம்பே உற்பத்தி செய்து கொள்கிறது. நீங்கள் கொஞ்சமாக சாப்பிட்டாலும் சரி, அதிகமாக சாப்பிட்டாலும் சரி. இது ஆட்டோமேடிக்காக நடந்து கொண்டே இருக்கும். செல்களில் காணப்படும் கொலஸ்ட்ரால்களால் பெரும்பாலும் நன்மை நடக்கிறது. ரத்தத்தில் சேமிக்கப்படும் வெறும் 7 சதவீத கொலஸ்ட்ரால் தான் பிரச்சினையை உண்டு பண்ணும். அதுவும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தால் ஒழிய (அப்படி நடந்தால் ரத்த நாளங்களின் சுவர்கள் கடினமாகி இதயத்துக்கு ஆபத்து ஏற்படும்) பிரச்சினை எதுவும் இல்லை. இது தெரிந்து தானோ என்னவோ. இயற்கையே முட்டையில் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு பொருளை வைத்துள்ளது. அதன் பெயர் lecithin என்பதாகும். இது முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மேற்படி சிக்கலை உண்டு பண்ணி விடாமல் தடுக்கிறது. பொதுவாக முட்டையில் எதைச் சாப்பிட்டால் ஆகாது என்று கருதப்படுகிறதோ. அதே மஞ்சள் கருவில் தான் இந்தப் பொருள் உள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும், உணவில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். அவர்களை கொலஸ்ட்ரால் தேவையாளிகள் ( cholesterol responders ) என்று சொல்லலாம். வழக்கமாக உணவு மூலம் கொலஸ்ட்ரால் அதிக அளவில் கிடைக்கிறது என்றால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை உடம்பு தானாகவே குறைத்துக் கொள்ளும். ஆனால் இத்தகைய நபர்களுக்கு உணவு மூலமாக கிடைக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உள்ளுக்குள் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை குறைக்கும் வித்தையை உடம்பு செய்யாது. கொலஸ்ட்ரால் விஷயத்தில் இவர்கள் பிரச்சினைக்குரிய நபர்கள் என்பதால் சற்று உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியுள்ளது.

முட்டையின் மஞ்சள் கருவில் arachadonic acid உனை என்ற அதி முக்கியமான அமிலம் காணப்படுகிறது. இது மனித உடம்புக்கு மிகவும் தேவையான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். உடம்பின் வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான இந்த அமிலம் மனிதர்களில் 20 சதவீதம் பேருக்கு பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. ஒருபுறம் நன்மை செய்யும் இந்த அமிலம் இன்னொரு புறம் ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. அதாவது பல்வேறு நோய்-நொடிகளை உண்டு பண்ணும் பொருட்களில் இது மூலக்கூறாக அமைந்து உள்ளது. இத்தகைய பிரச்சினை உள்ள நபர்களை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களாக கருதலாம். இந்த சிக்கலை சமாளிக்க arachadonic acid மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் இடையே சம விகித நிலையை கடைப்பிடித்தால் போதும். (ஒமேகா-3 அமிலம் மீன் மற்றும் மீன் எண்ணெயில் அதிகமாக காணப்படுகிறது.) இந்த இரண்டையும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால், நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ன, 10 முட்டை சாப்பிட்டாலும் ஒரு பிரச்சினையும் வராது. தற்போது நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆர்கானிக் முட்டைகள் வந்து விட்டன. இந்த முட்டைகளில் ஒமேகா-3 அமிலமும் வேண்டிய அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, முட்டை என்பது நிச்சயம் ஆரோக்கியமான உணவு தான்.

Print this item

  கப்சா றைஸ்
Posted by: MUGATHTHAR - 08-29-2005, 07:55 PM - Forum: சமையல் - Replies (15)

<b>கப்சா றைஸ்

இதெண்டா புதுப் பேராக் கிடக்கு எண்டு யோசிக்காதைங்கோ அரபு நாடுகளில் இருந்தவர்களுக்கு இந்தப் பேரை தெரியாமல் இருக்காது வெறும் தக்காளி சாதம் மாதிரித்தான் செய்முறையிலும் கொஞ்சம் வித்தியாசம் இது எங்கையும் சுட்டுப் போடேலை 5வருசமா செய்து சாப்பிட்டு வாறதாலை பயமில்லாமல் நீங்களும் இந்த செய்முறையைப் பயன் படுத்துங்கோ . . .

தேவையான பொருட்கள் (4பேருக்கு செய்வதற்கு)

1.[b] பாஸ்மதி றைஸ் 4கப் (றைஸ் குக்கரில் இருக்கும் கப்)
2. நறுக்கிய தக்காளி - 4
3. சிறிதளவு கறுவாபட்டை
4. சிறிதளவு கராம்பு
5. சிறிதளவு ஏலக்காய்
6. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
7. தேவையான அளவு உப்பு</b>

<b>செய்முறை :</b>

றைஸ் குக்கரைப் கரண்டில் போட்டு எண்ணெயை ஊத்தி காய விடவும் (றைஸ் குக்கரின் சுவிச்சை மடித்தபேப்பர்துண்டு; மூலம் ON நிலையில் வைத்திருக்கவும் அல்லது ONநிலையில் இருக்க மாட்டுது) எண்ணெய் காய்ந்ததும் கறுவாப்பட்டை . கராம்பு . ஏலக்காய் என்பவற்றைப் போட்டு சிறிது நேரம் மூடி விடவும் பின்னர் நறுக்கின தக்காளி துண்டுகளை இதனூள் இடவும் தக்காளி வதங்கிய பின் கொதித்த நீரை இட்டு (அரிசி வேகத் தேவைஅளவு) சிறிதளவு மஞ்சள் தூள் . உப்புபையும்; சேர்த்து கலக்கியபின் அரிசியை போடவும் (இப்போது மடித்து வைத்த பேப்பர் துண்டை சுவிச்சிலிருந்து எடுத்து விடலாம்) றைஸ் குக்கர் தன் பாட்டில் அரிசி சோறானதும் OFF ஆகும் இந்த றைஸ்சுடன் ஒரு கறி இருந்தால் காணும் சொல்லி வேலையில்லை.. . . . .

வீட்டிலை எந்தநாளும் வெள்ளைச் சோறை ஆக்கி புருஷன்மாருக்கு போட்டாமல் இப்பிடியும் கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு குடுத்துப் பாருங்கோ பிறகு தெரியும் மனுசன் வீட்டைச் சுத்திக் கொண்டே திரிவர் . .. . . .

Print this item

  அமெரிக்க இராணுவத்தினர்
Posted by: romio - 08-29-2005, 07:37 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவத்தினர் எமது இராணுவத்தினரின் உட்தகவல்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முகாம்கள் குறித்து இராணுவத்தினர் அறிந்து வைத்துள்ள தகவல்கள் அனைத்தையும் கணனியில் பதிவுசெய்து கொண்டு சென்றுவிட்டனர். :roll:

Print this item

  கிழட்டு நரியின் ஊளை...
Posted by: வினித் - 08-29-2005, 07:34 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

தமிழீழத் தேசியத் தலைவருக்கு எதிராக சதி: ஜேர்மனியில் ஆனந்தசங்கரி ஒப்புதல் வாக்குமூலம்!!

ஜேர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து பிரபகாரனை விரைவில் அகற்றப் போவதாகவும், வன்னியை சிங்கள இராணுவம் கைப்பற்ற வரைபடம் கொடுத்து காட்டி கொடுத்ததாகவும் தமிழீழத் தேசியக் கொடியை உருவாக்க பிரபாகரனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் தேசத்துரோக பேச்சுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.


ஆனந்தசங்கரியின் உண்மை முகத்தை எமது படிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவே எமது ஜேர்மன் செய்தியாளர் அனுப்பியுள்ள விவரத்தை முழுவதுமாக தருகிறோம்.

நிகழ்வு விவரம்:

ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் கூட்டம் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் இது நடைபெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கருத்தரங்கில் 40க்கும் குறைவானோரே கலந்து கொண்டனர். இலங்கையின் இன்றைய அரசியல் நிலை என்ற பெயரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைக்கும், தமிழ்மக்களுக்கும் எதிரான கருத்துக்களை ஆனந்தசங்கரி முவைத்தார்.

அவ்வேளைகளில் கூடியிருந்த 40 பேரிலும் பெரும்பானமையானோர் குறுக்கிடுவது அடிக்கடி நிகழ்ந்தது.
தனது உரையை ஆனந்தசங்கரி தொடங்கிய போது உள்நாட்டு, வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களையும், வெக்ரோன் தொலைக்காட்சியையும் மிகவும் தரக்குறைவாக சாடினார்.

இந்த ஊடகங்கள் தன்னை மதிப்பதில்லை என்பதற்காகவே அவர் சாடியதை அவரது உரை எடுத்துக்காட்டியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனை விட தனக்கே அதிக அக்கறை உள்ளது என்று கூறியதுடன், புலிகள் ஜனநாயக வழிக்கு வந்தால் சந்திரிகாவுடன் பேசி ஒரு மாதத்துக்குள் சமாதானத்தைப் பெற்றுத் தருகின்றேன் என்றும் கூறினார்.

இந்தக் கருத்தைக் கேட்ட அரங்கிலிருந்த அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனர்.தொடர்ந்து பேசிய ஆனந்தசங்கரி, புரிந்துனர்வு ஒப்பந்தத்தையும் நோர்வேத் தரப்பின் பிரதிநிதி எரிக் சொல்கைமையும் குறை கூறினார்.

இதுவரை 5,000 ற்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் நடந்ததெனவும், இதில் 2,500 யுத்த மீறல்கள் பாரதூரமற்றதென்றும் 100 யுத்த நிறுத்த மீறல்கள் இராணுவத்தாலும், 2,400 யுத்த நிறுத்த மீறல்கள் விடுதலைப் புலிகளாலும் நடைபெற்றதாகவும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் உனக்கு ரோசமில்லையா, உன் தோல் தடித்து விட்டதா என்று தான் எரிக் சொல்கைமை நோர்வேயில் சந்தித்தபோது கேட்டதாகவும் கூறினார்.

தேசியக் கொடியேற்றம்- யுத்த நிறுத்த மீறலாம்

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தேசியக் கொடி ஏற்றியது ஏன் என்றும் அது பாரிய யுத்த நிறுத்த மீறல் என்றும் தேசியக் கொடியை உருவாக்க புலிகளுக்கு அதிகாரம் தந்தது யார் என்றும் ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பினார்.

இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஆவேசத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டோரில் ஒருவர், 17,000 ற்கும் மேற்பட்ட போராளிகளினது தியாகத்தினால் உருவான தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ, தமிழ்த் தேசிய உருவாக்கத்தையோ விமர்சிக்கும் தகுதியோ அல்லது உரிமையோ உங்களுக்குக் கிடையாது என்றும், அந்த விடயத்தை விடுத்து உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.

தொடர்ந்து ஆனந்தசங்கரி பேசும்போது புலிகளின் தடுப்பு முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் வரி வசூலிப்பதாகவும் இதற்கான அதிகாரத்தை பிரபாகரனுக்கு கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

கிளிநொச்சி மாவட்டம் தன்னால் உருவாக்கப்பட்டதென்றும், அதனை அபிவிருத்தி செய்வதானால் தன்னிடம் அறிவுரை கேட்க வேண்டுமென்றும் முன்னுக்குப் பின் முரணாகவும் ஆனந்தசங்கரி பேசினார்.

ஆழிப்பேரலை அழிவைப் பற்றிப் பேசும்போது மனிதாபிமானமற்ற முறையில் சிங்களவன் பகுதியென்றும் தமிழன் பகுதியென்றும் இயற்கை அழிவில் அரசியல் லாபம் தேட முற்பட்டார்.

எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாதாம்

பொதுக்கட்டமைப்பை முற்றுமுழுதாக எதிர்த்ததுடன் அந்நிய நாடுகளின் பிடியில் தமிழீழத்தை அடகு வைக்கும் கருத்துகளையும் முன்வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா கூறுபடாமல் இருக்கும் வரை தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதுடன், எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாது என்று ஒரு துரோகத்தனமான வார்த்தையை மேசையில் கையால் அடித்துச் சொன்னார்.

அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்து, வட்டுக்கோட்டைத் தீர்மானம் போட்டதும், இளைஞரை உணர்ச்சிவசப்பட வைத்து இரத்தப் பொட்டு வைக்கச் செய்ததும், வாக்களியுங்கள் நாளை தமிழீழம் அமைப்போம் என்று கூறியபோதெல்லாம் இந்தியா ஒத்துழைக்காது என்பது தெரியாமலா இருந்தீர்கள்.

நீங்கள் உங்கள் அரசியல் வங்குரோத்துத்தனத்தால் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினார்.
வன்னியைக் கைப்பற்ற சிங்களவனுக்கு வரைபடம் கொடுத்ததே நான்தான்!

சந்திரிகாவிற்கு யாழ்ப்பாண வரைபடத்தைக் காட்டி புலிகள் ஆனையிறவு முகாமுக்கு அருகில் வெட்டுக்காடு, கௌதாரிமுனை போன்ற பகுதிகளில் நிலைகொண்டுள்ளார்கள் என்றும் தான் எடுத்துக் கூறியதாகக் கூறியபோது ஒருவர் எழுந்து ஐயா ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்திற்கு வன்னியைக் கைப்பற்ற பாதை காட்டிக் கொடுத்தது நீங்கள் தானே என்று கேட்டார்.

நான் நில அளவையாளர் இல்லையென்று ஆனந்தசங்கரி குதர்க்கமாக பதிலளித்தார். மக்களின் தொடரான கேள்விகள் மூலமாகவும், தடுமாற்றத்தின் காரணமாகவும் முதிர்ந்த அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி மூக்குடைபட்ட அரசியல்வாதியாக தலைதொங்கிப் போனார் ஆனந்தசங்கரி.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து விரைவில் பிரபாகரன் அகற்றமாம்!எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஓரிரு மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் வேறொருவர் இருப்பார் என்று கூறியபோது அதற்கான வேலையைச் செய்துவிட்டா வந்தீர்கள் என்று மக்கள் ஆவேசமாகக் கேட்டனர்.

முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஆனந்தசங்கரியைப் பார்த்து ஐயா இதுவரை நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் இந்திய- இலங்கை கூட்டுச்சதியால் தமிழீழ தேசியத்தை, தமிழீழ உருவாக்கத்திற்கான கருத்தியலை புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து உடைத்தெறியும் செயல்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று புரிகின்றது என்றும்,

விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், தமிழீழ உருவாக்கத்திற்கு எதிரான கருத்துடைய உங்களைப் போன்றவர்கள் என்றாவது ஓர் நாள் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

கூட்டத்தின் முடிவில் ஓர் முதிர்ந்த அரசியல்வாதி என்று கருதப்பட்ட ஒருவரின் தமிழீழ உருவாக்கத்திற்கெதிரான வரலாற்றுத் துரோகத்தனத்தின் முகம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது என்று மக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்..

பி.கு: அனந்தசங்கரியின் இப் பேச்சைப்பார்த்து அவரை வாழ்த்தவிரும்பும் தோழர்கள் தங்கள் மனதுக்குள் பேசிக்கொள்ளவும்..(களத்தை நாறடிக்காதீர்கள்)
_________________
«ôÀʧ Í ¾É¢¨¸ ¦ºöÐ ¯í¸û ¸Õò¨¾ ¦º¡øÖ¸ø
þÃŽý «ñ½¡¨Å þÃÅ¢ø ¦¾¡ó¾Ã× ¦ºö §Åñ¼¡õ

Print this item

  ஊடகங்களுக்கான அறிக்கை.
Posted by: ஊமை - 08-29-2005, 04:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியிலுள்ள சுடரொளி பத்திரிகை தலைமை அலுவலகத்தின் மீது 29-08-2005 மாலை 6.15 மணியளவில் நடத்தப்பட்டுள்ள கைக்குண்டுத் தாக்குதல்களை இலங்கையில் தமிழ் ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இவ்வாறான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை பகிரங்கமாக் கோருகின்றது. இத்தாக்குதல் தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை நடத்தி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசாங்கத்தை அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலைமையிலேயே தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்திருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டம் எவ்வகையிலும் பயன்படுத்தப்படாமல், அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதற்கே இது பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். சுடரொளி மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலானது ஊடக சுதந்திரத்துக்கு விடப்பட்டுள்ள ஒரு கடுமையான எச்சரிக்கையாகவே இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகின்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகத்துறை மீதும் அண்மைக்காலத்தில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் உச்ச கட்டமாக இத்தாக்குதலைக் கருதலாம். இந்த நிலையிலாவது இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனில் நிலைமைகள் மோசமடைந்து செல்லலாம் எனக் கருதுகின்றோம். கடந்த காலங்களில் தமிழ் ஊடகத்துறை நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படாததால்தான் நிலைமைகள் இந்தளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதையும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

இலங்கையின் இனநெருக்கடியைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில், ஒரு தமிழ்த் தேசியக் குரலாக சுடரொளி வெளிவருவதையிட்டு சிங்களக் கடுங்கோட்பாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார்கள். மூன்று தினங்களுக்கு முன்னர் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, சுடரொளி விடுதலைப் புலிகளுடைய பத்திரிகை என்று கடுமையான தொனியில் குற்றஞ்சாட்டியிருந்தார். சில ஊடக நிறுவனங்கள் ~பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவையாகவும்|, வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினதாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னணியிலே சுடரொளி மீது இரண்டு சக்திவாய்ந்த கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

அனைத்து அரசியல் சக்திகளும் ஆயுதக் குழுக்களும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கவேண்டிய கடமையைக் கொண்டுள்ளன. மாற்றுக் கருத்துக்களையிட்டு சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பது அவசியம். ஜனநாயகத்தையும், ஆரோக்கியமான ஊடக சுதந்திரத்தையும் இதன் மூலமாகவே பாதுகாக்க முடியும். தமக்கு விரோதமான கருத்துக்களை வெளியிடும் நிறுவனங்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவது ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் கடுமையான அச்சுறுத்தலாகவே நாம் கருதுகின்றோம். இதன் மூலம் மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பூட்டுப்போட குறிப்பிட்ட சில சக்திகள் முற்பட்டிருப்பதைத்தான் இத்தாக்குதலின் மூலமாக நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

வெள்ளவத்தையிலுள்ள சுடரொளி கிளை அலுவலகத்தின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வார காலப்பகுதியிலேயே இத்தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கின்றது. இதனைவிட சுடரொளி ஊடகவியலாளர் ஒருவர் ஜே.வி.பி. உறுப்பினர்களால் கடைமை நேரத்தின்போது கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்.

இத்தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் துரித விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகச் சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும். இதனைச் செய்வதில் காணப்படக் கூடிய அரசாங்கத்தின் இயலாமை இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடர்வதற்கு வழிவகுப்பதாக அமையும் என்றே இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகின்றது. அதேவேளையில் தமிழ் ஊடகத்துறை மீது நடத்தப்படும் இவ்வாறான தாக்குதல்கள் நாளை சிங்கள ஊடகத்துறை மீதும் கட்டவிழ்த்து விடப்படலாம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

- இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.

Print this item

  அமெரிக்காவை தாக்கிய சூறாவளி
Posted by: ஊமை - 08-29-2005, 02:14 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (31)

BBC செய்திகள்

CNN செய்திகள்

Print this item

  ****வணக்கம்****
Posted by: சுபா - 08-29-2005, 01:01 PM - Forum: அறிமுகம் - Replies (59)

அனைவருக்கும் வணக்கம்.

Print this item

  ஒருநாள் ஒரு கனவு
Posted by: SUNDHAL - 08-29-2005, 11:32 AM - Forum: சினிமா - Replies (6)

முயல் குட்டியின் முதுகு மாதிரி மிருதுவானவை ஃபாசிலின் படங்கள். இந்த படமும் அப்படிதான். துறுதுறு ஹீரோவை காதலிக்கிற ஹீரோயின், அவனோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள போடுகிற சண்டை, நிஜ சண்டையாகிவிடுகிறது. காதலிப்பது போல் நடித்து கடைசியில் கை கழுவி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நெருங்குகிறான் ஹீரோ. ஆனால் விலகவிடாமல் அவனை பற்றிக் கொள்கிறது காதல். முடிவு என்ன? ஒரு நாளில் வந்துவிட்டு போகிற இந்த கனவை வருடக்கணக்கில் மனசில் நிற்கிற மாதிரி வார்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஃபாசில்.

செதுக்கி வைத்த சிற்பம் போல் பாத்திர படைப்புகள். அதிலும் ஸ்ரீகாந்த்... அப்படியரு துறுதுறு! சோனியா சொல்வது மாதிரியே Ôஸ்பீடு!Õ அத்தனை அவசரத்திலும் பஞ்சராகி போன சோனியாவின் காருக்கு பஞ்சர் ஒட்டி கூடவே பில்லையும் நீட்டுகிறாரே..கில்லாடி! அடிக்கடி தனக்குத்தானே ரீ ரெக்கார்டிங் கொடுத்துக் கொண்டு (டுர்ர்ர்ர்...ர்) பைக் ஓட்டுவது பலே. இன்டர்வெல்லுக்கு பிறகு அப்படியே ரிவர்ஸ் அடித்துவிடுகிறது இந்த துறுதுறுப்பு. காதல் தந்த வலி காரணமாக இருந்தாலும், மனசை சுண்டியிழுத்த அந்த முன்பாதி ஸ்ரீகாந்த்திற்காக ஏங்குகிறது மனசு.

சோனியா மட்டும் என்னவாம்? தன் படை பரிவாரங்களுடன் ஸ்ரீகாந்த்தை சீண்டி பார்த்து எடுபடாமல் போனதும், நேரிடையாகவே, உன்னால முடிஞ்சா என்னை காதலித்து பார் என்று சவால்விடுகிறாரே....இளமை ஏவுகணை! இதுவரை கவர்ச்சி பதுமையாகவே அறியப்பட்ட சோனியாவா இது? காட்சிக்கு காட்சி பிரமிப்பை தருகிறார்.

மற்ற பாத்திரங்கள் அத்தனையும் Ôசமையல்Õ பாத்திரங்கள்! அதிலும் ஜோக்கடிக்கிறேன் பேர்வழி என்று வாய் கிழிய கத்துகிற சுகுமார், சிசர் மனோகர் குரூப்பிற்கு சிரமம் பார்க்காமல் கத்தரி வைக்கலாம்.

கம்பீர கட்டிடத்தின் கான்கிரீட் தூணாகியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அதிலும் அந்த காற்றில் வரும் கீதமே பாடல், ஊனை உருக்கி உயிருக்குள் தித்திக்கிறது.

யதார்த்தத்தை மீற கூடாது என்று துவக்கத்தில் நினைத்த ஃபாசில் க்ளைமாக்சில் தடுமாறியிருக்கிறார். ஆனாலும், நேற்று வந்த லேசர் வெளிச்சங்களுக்கு மத்தியில், குத்துவிளக்கின் வெளிச்சம் குறைந்ததா என்ன?

Thanks: Tamilcinema.com

Print this item