| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 321 online users. » 0 Member(s) | 318 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,415
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,213
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,528
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை |
|
Posted by: Rasikai - 09-01-2005, 11:45 AM - Forum: சினிமா
- Replies (10)
|
 |
<b>அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை</b>
<img src='http://img297.imageshack.us/img297/1452/young0wf3nn.jpg' border='0' alt='user posted image'>
ஒரு புறம் சர்ச்சைகளில் சிக்கினாலும் மறுபுறம் ஹிட் படங்கள் மூலம் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே செல்கிறார் த்ரிஷா. தெலுங்கில் இவர் நடித்த "அத்தடு' நன்றாக ஓடுகிறது. இதனால் தெலுங்கில் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் த்ரிஷா. தமிழில் "ஆறு' படத்தில் நடித்து வரும் த்ரிஷா ரூ. 45 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார். "ஆறு', "ஆதி' படங்கள் க்ளிக் ஆனால் தனது சம்பளத்தை ரூ. 50 லட்சமாக உயர்த்தப் போகிறாராம். இந்த ஊதியத்தை அவர் பெற்றால் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்தைப் பெறுவார் த்ரிஷா.
|
|
|
| கட்டுநாயக்க விமானத்தளம் தகர்ப்பு நடந்தது எப்படி?: |
|
Posted by: adsharan - 09-01-2005, 04:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (22)
|
 |
சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான தளத்தை 2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தது எப்படி என்று தமிழீழ மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் விவரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்ற தமிழ் நூலில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.
கட்டுநாயக்க விமானத் தளம் தகர்ப்பு தொடர்பாக பாலசிங்கம் எழுதியுள்ளதாவது:
அதிகாலை முதல் காலை ஏழு மணிவரை நடைபெற்ற கடும் மோதல்களின் பின்னர், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியிடமிருந்த ஆயுத வெடிப்பொருள்கள் தீர்ந்துபோன நிலையில், சண்டை முடிவுக்கு வந்தது.
சிலர் தாக்குதலில் களப்பலியாக, வேறுசிலர் தமது வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
தாக்குதல் தளபதி கண்ணன் உட்பட மொத்தம் 14 கரும்புலி வீரர்கள் இத்தாக்குதலில் உயிர்நீத்தனர்.
தாக்குதல் அணியின் முக்கிய உறுப்பினரில் ஒருவரான முகிலன் களத்திலிருந்து மீண்டு தலைமையகம் சென்றடைந்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
800 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல் லண்டனில் அச்சாகி அடுத்துவரும் தினங்களில் ஐரோப்பாவில் வெளியிடப்பட உள்ளது.
puthinam
|
|
|
| "கடலை' போடுவதால் மூளை புற்று நோய் வருமா? |
|
Posted by: SUNDHAL - 09-01-2005, 04:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
மொபைல் போன்களில் மணிக்கணக்கில் பேசித் தள்ளுபவர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். ஆண்டுக் கணக்கில் மொபைல் போன்களில் பேசினாலும் மூளை புற்றுநோய் வராது' என லண்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் புற்றுநோய் கட்டி ஏற்படும் எனவும், காதிற்கு அருகில் வைத்து பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினால் மூளை சூடாகிறது எனவும் ஆளாளுக்கு ஆராய்ச்சி செய்து அதிர்ச்சி முடிவுகளை வெளியிட்டனர். இது உலகம் முழுவதும் பரவி, மொபைல் போன் பயன்படுத்துபவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. மொபைல் போன் நிறுவனங்கள் இதை மறுத்து வந்தன.
இதற்கிடையில் மொபைல் போன்களால் ஆபத்தா என லண்டனில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மைய டாக்டர்கள் பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் ஆய்வு செய்து முடிவுகளை "பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் கேன்சர்' என்ற அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர். கட்டுரையில், "மொபைல் போன்களை தொடர்ந்து பயன்படுத்தினால் காதுகளையும் மூளையையும் இணைக்கும் நரம்புகள் பாதிக்கப்படும் என முன்பு கூறப்பட்டது. ஆனால், எங்கள் ஆராய்ச்சியில் அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மொபைல் போன்கள் என்பதே சமீபத்திய அறிமுகம் என்பதால் நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் என்ன ஆகும் என இப்போது கூற முடியாது' என கூறப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 200 கோடி பேர் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு மட்டும் புதிதாக 8 கோடி மொபைல் போன்கள் விற்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
|
|
|
| களம் குறித்த கருத்துக்கள் |
|
Posted by: sathiri - 08-31-2005, 11:25 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (36)
|
 |
மீண்டும் தமிழிங்கிலம்
மீண்டும் யாழில் சில வாரங்களாக தமிங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.பலர் அதிகளவு தமிங்கிலத்தில் எழுத தொடங்கியுள்ளனர் முன்னர் மட்டிறுத்தினர்கள் அடிக்கடி வந்து சுட்டி காட்டுவது வழைமை ஆனால் இப்ப அவர்களும் விட்டுவிட்டார்கள். தேவையில்லாமல் சில கருத்துகளை நீக்கிவிட்டு நீக்கியது சரியெண்டு அடம்பிடிக்கும் மட்டிறுத்தினர்கள் இதனையும் கவனித்தால் நன்றாக இருக்கும். அதுக்காக இந்த கருத்தை நீக்கினாலும் பரவாயில்லை
|
|
|
| யானைகள் வாழ்த்த மருத்துவரின் திருமணம் |
|
Posted by: Rasikai - 08-31-2005, 09:36 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
<b>யானைக்கு விருந்தளித்து திருமண வரவேற்பைக் கொண்டாடும் டாக்டர் பி.பி. கிரிதாஸ், தர்ஷணா.</b>
<img src='http://img330.imageshack.us/img330/3153/28djumbo3xe.jpg' border='0' alt='user posted image'>
யானைகள் வாழ்த்தொலிக்க நடந்த கால்நடை மருத்துவரின் திருமண வரவேற்பு
சாதாரணமாக திருமண வரவேற்பில் என்னென்ன உணவு வகைகள் வைத்திருப்பார்கள்?
திருச்சூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பில், பனைமர தழைகள், வாழைப்பழங்கள், வெல்லம் போன்ற பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அதற்குக் காரணம் இத் திருமண வரவேற்பின் முக்கிய விருந்தாளி "யானை'கள்.
திருச்சூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் பி.பி. கிரிதாஸ், தர்ஷணா திருமண வரவேற்புதான் இவ்வளவு சிறப்புடன் நடந்தது.
"யானை' சிகிச்சை நிபுணரான கிரிதாஸ், தனது திருமணத்தை வித்தியாசமாக செய்ய நினைத்தார். திருமண வரவேற்புக்கு யானைகளை அழைப்பது என்று முடிவு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை திருவம்பாடி கோயிலில் அவருக்கு திருமணம் நடந்தது.
பின்னர் மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் மனித நண்பர்களுடன், யானை நண்பர்களும் கலந்து கொண்டன.
அதோடு இல்லாமல் திருச்சூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் விருந்து அளிக்க விரும்பினார். ஆனால் வெளியாள்கள் உணவுகளை கொடுக்கக் கூடாது என்பதால், அவற்றுக்கு ஒருநாள் உணவுக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொண்டார் டாக்டர் கிரிதாஸ்.
|
|
|
| மன்னிப்புக் கேட்ட தங்கர்பச்சான் |
|
Posted by: AJeevan - 08-31-2005, 09:17 PM - Forum: சினிமா
- Replies (80)
|
 |
<b> நடிகர் சங்கத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்டார் தங்கர்பச்சான்;
நடிகைகள் எதிர்ப்பு</b>
சென்னை ஆகஸ்ட் 30
<span style='color:red'>நடிகைகளை தரக்குறைவாக விமர்சனம் செய்த விவகாரத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்டார். ஆனால் அவரது மன்னிப்பை நடிகைகள் ஏற்க மறுத்துவிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குனர் தங்கர்பச்சான் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் ''பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபசாரிகளுக்கு ஒப்பானவர்கள்'' என்று விமர்சித்திரு-ந்தார். இந்த விவகாரம் நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் புயலையே கிளப்பியது. நடிகைகளை கேவலமாக விமர்சித்த தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக நடிகர் சங்கம் அறிவித்தது.
இதையடுத்து தங்கர்பச்சான், தொலைக்காட்சிகள் வாயிலாக பகிரங்க மன்னிப்புக் கேட்டார். எனினும், அவர் நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தியது. இதனால் நேற்று காலை 11 மணிக்கு தங்கர்பச்சான் நடிகர் சங்கத்துக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டது.
<b>நேரில் வந்த தங்கர்பச்சான்</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar1.jpg' border='0' alt='user posted image'>
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத்குமார், நடிகர்கள் நெப்போலியன், பிரபு, ராதாரவி, ஜெயம் ரவி, சூர்யா, அப்பாஸ், தியாகராஜன், விக்னேஷ், வடிவேல், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், செந்தில், சார்லி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வந்தனர்.
நடிகைகளில் மனோரமா, குஷ்பு, ஸ்ரீப்ரியா, விந்தியா, சங்கவி, தேஜாஸ்ரீ ஆகியோர் வந்திருந்தனர். தங்கர்பச்சானின் வருகைக்காக நடிகர், நடிகைகள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
மதியம் 1 மணியளவில் தங்கர்பச்சான், இயக்குனர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், இயக்குனர்கள் சீமான், சேரன் ஆகியோருடன் நடிகர் சங்கத்துக்கு வந்தார். ஆனால் வெளியே பத்திரிக்கை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் பெருமளவில் கூடியிருந்ததால், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறி காரிலேயே உட்கார்ந்துவிட்டார். சுமார் அரை மணி நேரம் கழித்து நடிகர் சங்கத்திலுள்ள திரையரங்குக்குள் வந்தார்.
உள்ளே வந்தவுடன், நேராக நடிகை மனோரமாவிடம் சென்று அவர் காலில் விழுந்து கும்பிட்டார். ''நான் அப்படி சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா?'' என்று மனோரமாவிடம் அவர் கேட்டதற்கு மனோரமா பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.
உடனே நடிகர் வடிவேல் எழுந்து ''அவர்களைத்தான் தகாத வார்த்தைகளைக் கூறி திட்டியிருக்கிறீர்களே, பின்பு எப்படி அவர்கள் பேசுவார்கள்'' என்று தங்கர்பச்சானிடம் கேட்க, தங்கர்பச்சான் ''நான் அப்படி கூறவே இல்லை. நான் பேசியதை திரித்து வெளியிட்டுவிட்டார்கள்'' என்று கூறினார்.
<b>நடிகைகள் ஆவேசம்</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar3.jpg' border='0' alt='user posted image'>
உடனே தங்கர்பச்சானை நடிகர்\நடிகைகள் சூழ்ந்து கொண்டு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா, விந்தியா ஆகிய மூவரும் தங்கர்பச்சானை நோக்கி ''சம்பந்தப்பட்ட நிருபர் முன் உங்களால் இதை மறுக்க முடியுமா?'' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
உடனே விஜயகாந்தும், சரத்குமாரும் கூச்சலிட்டவர்களை சமாதானப்படுத்தி, அந்த நிருபரை உள்ளே வரச் செய்தனர். அந்த நிருபரும், தங்கர்பச்சான் சொன்னதைத்தான் எழுதினேன் என்று கூறினார். உடனே தங்கர்பச்சான் ''நான் அப்படி சொல்லவேயில்லை'' என்று மறுக்க மீண்டும் கூச்சல் எழுந்தது.
<b>பகிரங்க மன்னிப்பு</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar2.jpg' border='0' alt='user posted image'>
அதைத் தொடர்ந்து அனைத்து பத்திரிக்கையாளர்களும் உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்பு தங்கர்பச்சான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
''நான் வேறெங்கும் பேசவில்லை. என் குடும்பத்தினராகிய உங்களுடன்தான் பேசுகிறேன். என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இப்போதும் சத்தியமாக மறுக்கிறேன். நடிகைகளைப் பற்றி அந்தப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள பொருளில் நான் பேசவில்லை.
<b>மனோரமா கண்ணீர்</b>
இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும், மீண்டும் என் சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கூட்டம் முடிந்து வெளியே வந்த மூத்த நடிகையான மனோரமா கூறும்போது ''விபசாரிகள் என்ற வார்த்தையை கேட்டுக் கொண்டு உயிரோடு இருப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்'' என்று கண் கலங்கி குமுறலோடு கூறினார்.
நேற்றைய கூட்டத்தில் மிகவும் ஆவேசமாகக் காணப்பட்ட நடிகை குஷ்புவிடம் ''இனி தங்கர்பச்சான் இயக்கும் படங்களில் நடிப்பீர்களா?'' என்று கேட்டதற்கு, ''தங்கர்பச்சான் என்பவர் யார்? அவர் எங்களுக்கு யாரும் இல்லை. அவர் எவ்வளவு முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும், அவரை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்'' என்று ஆவேசம் பொங்கக் கூறினார்.
<b>ஸ்டிரைக்கைத் தவிர வேறு வழியில்லை</b>
நேற்றைய கூட்டத்தில் பெரும்பாலான பகுதி கூச்சல், குழப்பங்களுக்கிடையேதான் நடந்தது. ஆவேசத்துடன் காணப்பட்ட நடிகர், நடிகைகளை சமாதானப்படுத்துவதற்கு விஜயகாந்தும், சரத்குமாரும் பெரும் பாடுபட்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த விஜயகாந்த் ''இனி நடிகர்,நடிகைகளை தரக்குறைவாக யாராவது பேசினால் உடனே ஸ்டிரைக் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை'' என்று உறுதிபட தெரிவித்தார்.
இப்படியாக தமிழ் திரையுலகத்தை ஒரு வாரகாலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த தங்கர்பச்சான் விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
- பாலாஜி
</span>( Vikadan)
|
|
|
| 11 வயதில் மது அருந்தும் சிறுமிகள் |
|
Posted by: SUNDHAL - 08-31-2005, 06:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (19)
|
 |
இங்கிலாந்தில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகளிடம் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. 11 வயதிலேயே குடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். வாரத்துக்கு 14 ïனிட் மது அருந்துவதாகவும் அவர்களில் 4-ல் ஒருவர் தெரிவித்தனர்.11 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 9 ஆயிரத்து 715 பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது 23 சதவீதம் பேர் வார நாட்களில் மது அருந்துவதாக ஒப்புக்கொண்டனர்.
|
|
|
| தூறல்......... |
|
Posted by: ப்ரியசகி - 08-31-2005, 06:08 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (144)
|
 |
<img src='http://img113.imageshack.us/img113/4826/oru013zv.jpg' border='0' alt='user posted image'>
கறுப்பு நிற மேகங்களுக்கு தான்
எத்தனை வெள்ளை மனசு
வெறுமையான உள்ளங்களை கூட
மெல்ல தளுவி ஆறுதல் சொல்லிட
பள்ளி முடிந்து சோர்வாய் வந்த என்னை
உற்சாகமாய் வரவேற்றது மழை
குடை இருந்தும் நனைய
குட்டி ஆசை...
உடையில் வீழ்ந்து
உடலில் தழுவிய துளிகள்
உள்ள சோகங்களையும் அள்ளி செல்ல
உருகினேன்...
மனிதர்களால் வந்த ஏமாற்றங்களுக்கு
மேகங்கள் சொல்லும் ஆறுதல் போல...
மெத்தமாய் நனைந்த நான்
மெல்லிய பஞ்சு போல் உணர்ந்தேன்..
சிறு வயசு நினைவுகள் கண்ணில் தோன்ற
எதிர் கால கனவுகல் நெஞ்சில் ஆட
நெஞ்சில் பொத்திய நினைவுகள் மீள
மழை துளிகளுக்குள் சொர்க்கம் தேடினேன்...
கனவுகள் விரட்ட...
எதிர் கால ஏக்கங்கள் வாட்ட...
வாழும் என்னை...
ஒரு மணி துளி ஆவது...
எனை மறக்க வைத்த...
மழை துளிகளுக்கு...
கண்ணீர் துளிகளோடு..
நன்றி கூறினேன்........
<b>தூறும்.............</b>
|
|
|
| பிச்சை எடுத்தாவது.... |
|
Posted by: SUNDHAL - 08-31-2005, 06:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
உத்தரபிரதேச மாநிலத்தில் உள் ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. அங்கு முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள காய்கேரி கிராமத்தில் தரம்வீர் (35) என்ற பிச்சைக்காரர் தலைவர் பதவிக்கு போட்டியிட் டார்.
இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட் டன. அதில் தரம்வீர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அரசிடம் பிச்சை எடுத்தாவது அதிக நிதி பெற்று என் கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன்" என்றார்.
|
|
|
|