Yarl Forum
கட்டுநாயக்க விமானத்தளம் தகர்ப்பு நடந்தது எப்படி?: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கட்டுநாயக்க விமானத்தளம் தகர்ப்பு நடந்தது எப்படி?: (/showthread.php?tid=3479)

Pages: 1 2

கட்டுநாயக்க விமானத்தளம் தகர்ப்பு நடந்தது எப்படி?: - adsharan - 09-01-2005

சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான தளத்தை 2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தது எப்படி என்று தமிழீழ மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் விவரித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்ற தமிழ் நூலில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமானத் தளம் தகர்ப்பு தொடர்பாக பாலசிங்கம் எழுதியுள்ளதாவது:

அதிகாலை முதல் காலை ஏழு மணிவரை நடைபெற்ற கடும் மோதல்களின் பின்னர், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியிடமிருந்த ஆயுத வெடிப்பொருள்கள் தீர்ந்துபோன நிலையில், சண்டை முடிவுக்கு வந்தது.

சிலர் தாக்குதலில் களப்பலியாக, வேறுசிலர் தமது வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

தாக்குதல் தளபதி கண்ணன் உட்பட மொத்தம் 14 கரும்புலி வீரர்கள் இத்தாக்குதலில் உயிர்நீத்தனர்.

தாக்குதல் அணியின் முக்கிய உறுப்பினரில் ஒருவரான முகிலன் களத்திலிருந்து மீண்டு தலைமையகம் சென்றடைந்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

800 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல் லண்டனில் அச்சாகி அடுத்துவரும் தினங்களில் ஐரோப்பாவில் வெளியிடப்பட உள்ளது.
puthinam

- kuruvikal - 09-01-2005

<b>சிங்கள மேற்குடி மக்களுக்கு புலிகள் யார் எப்பதை இனங்காட்டி தமிழர் தன்மானம் காக்க விலை மதிக்க முடியா தம் இன்னுயிர்கள் தந்த 14 கரும்புலிவீரர்களுக்கும் சிரம் தாழ்த்தி வீரவணக்கம் செலுத்துகின்றோம்..!</b>

- tamilini - 09-01-2005

செய்திக்கு நன்றி

<b>சிங்கள மேற்குடி மக்களுக்கு புலிகள் யார் எப்பதை இனங்காட்டி தமிழர் தன்மானம் காக்க விலை மதிக்க முடியா தம் இன்னுயிர்கள் தந்த 14 கரும்புலிவீரர்களுக்கும் சிரம் தாழ்த்தி வீரவணக்கம் செலுத்துகின்றோம்..! தப்பிச்சென்றவர் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார். </b>

- Mathan - 09-02-2005

இந்த தாக்குதலை அப்போது புலிகள் வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை என்று நினைக்கின்றேன். சரியாக நினைவில்லை, இந்த புத்தகம் மூலம் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார்களா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

- அருவி - 09-02-2005

மதன் என்ன தூக்கமா?

- kuruvikal - 09-02-2005

Mathan Wrote:இந்த தாக்குதலை அப்போது புலிகள் வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை என்று நினைக்கின்றேன். சரியாக நினைவில்லை, இந்த புத்தகம் மூலம் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார்களா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

95க்குப் பின்னர் கொழும்பில் நடந்த குறைந்தது இரண்டு தாக்குதலுக்கு சிறிது தாமதித்து புலிகள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்..! ஒன்று கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல்... இரண்டு கட்டுநாயகா சிவில் மற்றும் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல்...! இது குறித்த ஒளிவீச்சினைக் கூட புலிகள் வெளியிட்டுவிட்டனரே...! Idea

- Mathan - 09-02-2005

உண்மையாகவே சரியாக நினைவில்லை அதுதான் கேட்டேன். தெரிந்ததை சொல்லுங்கள்.

- Thala - 09-02-2005

தாய் வேவுபார்த தாக்குதலை மகன் பங்குபற்றி தாங்கி அளித்ததாய் விடுதலைப்புலிகள். பத்திரிகை யில் கூட ஒரு கட்டுரை வந்திருந்தது கட்டுநாயக்காத் தாக்குதலைப் பற்றி...

- Sriramanan - 09-02-2005

kuruvikal Wrote:
Mathan Wrote:இந்த தாக்குதலை அப்போது புலிகள் வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை என்று நினைக்கின்றேன். சரியாக நினைவில்லை, இந்த புத்தகம் மூலம் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார்களா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

95க்குப் பின்னர் கொழும்பில் நடந்த குறைந்தது இரண்டு தாக்குதலுக்கு சிறிது தாமதித்து புலிகள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்..! ஒன்று கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல்... இரண்டு கட்டுநாயகா சிவில் மற்றும் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல்...! இது குறித்த ஒளிவீச்சினைக் கூட புலிகள் வெளியிட்டுவிட்டனரே...! Idea
கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதலை ஒருநாள் கழிந்து விடுதலைப் புலிகளால் உரிமை கோரப்பட்டு அத்தாக்குதலில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால் கட்டுநாயக்க தாக்குதல் நடைபெற்ற அன்று அன்றைய புலிகளின் குரல் வானொலிச் செய்தியில் (தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது) விடுதலைப் புலிகளின் சிறப்புத் தாக்குதல் அணி விமானதளம் மீதான அழித்தொழிப்பு தாக்குதலை நடாத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் புலிகளின் குரலில் வந்த செய்திகளில் தாக்குதல் நடாத்தியவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட கட்டுநாயக்க தாக்குதல் ஒளிப்பட விபரணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் பிரமுகர்கள் சிலர் நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றும் போது விடுதலைப் புலிகளே தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புத்தகம் மூலமே உத்தியோகபுூர்வமாக எழுத்து வடிவில் உரிமை கோரப்படவிருக்கிறது.

தாயகத்தின் விடிவிற்காய் தென்பகுதியில் தம்மை ஆகுதியாக்கிய அந்த நிழல் வீரர்களின் வரிசையில் கட்டுநாயக்கவில் காவியமானவர்களின் வீரவரலாறு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நு}ல் மூலம் வெளிவருவதையிட்டு மகிழ்ச்சி. ஏனைய சம்பவங்களிலும் தம்மை ஆகுதியாக்கிய வீரர்களின் வரலாறுகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

- Thala - 09-02-2005

சிறீரமணன்...!
நான் நினைக்கிறன் சில புலநாய்வுக் காரணங்களால் தான் புலிகள் அத்தாக்குதலை நடத்தியவர் பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.. தாக்குதலுக்கு உதவியவர்களின் பாதுகாப்பிற்காக. ஆதலால் தான் விபரணத்தில் நடாத்தியவர்களின் பெயர், தாக்குதல் முறை சொல்லப்படவில்லை.. ஆனால் புலிகளின் பத்திரிகைகள் வானொலிகள் (தமிழீழ வானொலி, புலிகளின் குரல்) புலிகள் நடாத்தியதாய்ச் சொன்னது........

- Nitharsan - 09-02-2005

kuruvikal Wrote:
Mathan Wrote:இந்த தாக்குதலை அப்போது புலிகள் வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை என்று நினைக்கின்றேன். சரியாக நினைவில்லை, இந்த புத்தகம் மூலம் தான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார்களா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

95க்குப் பின்னர் கொழும்பில் நடந்த குறைந்தது இரண்டு தாக்குதலுக்கு சிறிது தாமதித்து புலிகள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்..! ஒன்று கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல்... இரண்டு கட்டுநாயகா சிவில் மற்றும் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல்...! இது குறித்த ஒளிவீச்சினைக் கூட புலிகள் வெளியிட்டுவிட்டனரே...! Idea

விடுதலைப்புலிகள் தாங்கள் இத்தாக்குதலை நடாத்தியதாக உறுதிபடக்கூறவில்லை. நீங்கள் கட்டுநாயக்கா தாக்குதல் வீடியோவை பார்த்தீர்கள் என்றால் அதில் கூறப்பட்டது..யார் செய்தார்களோ நாமறியோம்...என்று தான் சொல்லியிருக்கிறர்கள். அதே போல எந்த ஒரு மாவீராரின் பெயரும் கட்டுநாயக்கா தாக்குதலில் வீரச்சாவடைந்ததாக வெளியிடப்படவில்லை....இப்போழுது தான் விரிவான விளக்கத்துடன் முதல் முதலாக வெளிவருகின்றது...

- Thala - 09-02-2005

Nitharsan Wrote:விடுதலைப்புலிகள் தாங்கள் இத்தாக்குதலை நடாத்தியதாக உறுதிபடக்கூறவில்லை. நீங்கள் கட்டுநாயக்கா தாக்குதல் வீடியோவை பார்த்தீர்கள் என்றால் அதில் கூறப்பட்டது..யார் செய்தார்களோ நாமறியோம்...என்று தான் சொல்லியிருக்கிறர்கள். அதே போல எந்த ஒரு மாவீராரின் பெயரும் கட்டுநாயக்கா தாக்குதலில் வீரச்சாவடைந்ததாக வெளியிடப்படவில்லை....இப்போழுது தான் விரிவான விளக்கத்துடன் முதல் முதலாக வெளிவருகின்றது...

இல்லை நிதர்சன் இப்போதும் புலிகள் படங்களும் விபரங்களை வெளியிடுவார்கள்... எண்டு நினக்கவில்லை.. அவர்களின் பெயர் விபரத்தை வெளியிடாமல் இருக்கதான் புலிகள் தெளிவான உரிமை கோரலை வெளியிடவில்லை....

- Sriramanan - 09-02-2005

Thala Wrote:சிறீரமணன்...!
நான் நினைக்கிறன் சில புலநாய்வுக் காரணங்களால் தான் புலிகள் அத்தாக்குதலை நடத்தியவர் பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.. தாக்குதலுக்கு உதவியவர்களின் பாதுகாப்பிற்காக. ஆதலால் தான் விபரணத்தில் நடாத்தியவர்களின் பெயர், தாக்குதல் முறை சொல்லப்படவில்லை.. ஆனால் புலிகளின் பத்திரிகைகள் வானொலிகள் (தமிழீழ வானொலி, புலிகளின் குரல்) புலிகள் நடாத்தியதாய்ச் சொன்னது........

புலிகளின் குரலின் ஒரு செய்தியில் மாத்திரமே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் வந்த செய்திகளில் அப்படி தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளின் பத்திரிகைகள் இனந்தெரியாத ஆயுததாரிகள் என்றே செய்தி வெளியிட்டிருந்தன.

- Sriramanan - 09-02-2005

கட்டுநாயக்க தாக்குதல் வீடியோ விபரணத்தில். விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட சில காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தன. (பேராளிகள் தாக்குதலுக்கு போகும் போதும், அவர்கள் போன பேரூந்தும் அந்த விபரணத்தில் இணைக்கப்பட்டிருந்தது)

விபரணத்தின் தொடக்கத்தில் அந்த காட்சிகள் இடம்பெறுகின்றன. பின்னர் வந்த காட்சிகள் பிற தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்களிலிருந்து பெறப்பட்டிருந்தன.

- Mathan - 09-02-2005

சந்தேகத்தை தெளிவுபடுத்த தகவல் தந்த அனைவருக்கும் நன்றி

- அருவி - 09-02-2005

கரும்புலிகள் பெயரறியாது உறங்குகிறார்கள் என்ற வாசகம் அனைவரும் அறிந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்

- அருவி - 09-02-2005

கட்டுநாயக்கா தாக்குதல் இப்பொழுது தான் உத்தியோகபூர்வமாக இப் புத்தகத்தின் மூலம் உரிமைகோரப்படுகிறது.

- விது - 09-02-2005

கட்டுநாயக்கா தாக்குதல் விவரணம் யாரிடாமாவது இருந்தால் எங்காவது இணைத்து விடுங்களேன் கோடிபுண்ணியமாகும்

- sri - 09-02-2005

இந்த இணையத்தில் சென்று பாருங்கள் நீங்கள் வேண்டியதை பெற்ருக்கொள்ளலாம்
http://www.eelamstore.com/
http://www.eelamstore.com/shop/index.php?c...3250e9485643472

- Vishnu - 09-02-2005

இது போன்ற 3 தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று நினைக்கிறேன்... கட்டநயக்கா.. மத்தியவங்கி... எண்ணைஉற்பத்தி நிலய தகர்ப்பு.. மதன் அண்ணா மாதிரி நானும் உத்தியோகபூர்வமா சொல்லல என்று தான் நானும் நினைச்சேன்.. தகவலுக்கு நன்றி