08-31-2005, 09:17 PM
<b> நடிகர் சங்கத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்டார் தங்கர்பச்சான்;
நடிகைகள் எதிர்ப்பு</b>
சென்னை ஆகஸ்ட் 30
<span style='color:red'>நடிகைகளை தரக்குறைவாக விமர்சனம் செய்த விவகாரத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்டார். ஆனால் அவரது மன்னிப்பை நடிகைகள் ஏற்க மறுத்துவிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குனர் தங்கர்பச்சான் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் ''பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபசாரிகளுக்கு ஒப்பானவர்கள்'' என்று விமர்சித்திரு-ந்தார். இந்த விவகாரம் நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் புயலையே கிளப்பியது. நடிகைகளை கேவலமாக விமர்சித்த தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக நடிகர் சங்கம் அறிவித்தது.
இதையடுத்து தங்கர்பச்சான், தொலைக்காட்சிகள் வாயிலாக பகிரங்க மன்னிப்புக் கேட்டார். எனினும், அவர் நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தியது. இதனால் நேற்று காலை 11 மணிக்கு தங்கர்பச்சான் நடிகர் சங்கத்துக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டது.
<b>நேரில் வந்த தங்கர்பச்சான்</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar1.jpg' border='0' alt='user posted image'>
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத்குமார், நடிகர்கள் நெப்போலியன், பிரபு, ராதாரவி, ஜெயம் ரவி, சூர்யா, அப்பாஸ், தியாகராஜன், விக்னேஷ், வடிவேல், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், செந்தில், சார்லி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வந்தனர்.
நடிகைகளில் மனோரமா, குஷ்பு, ஸ்ரீப்ரியா, விந்தியா, சங்கவி, தேஜாஸ்ரீ ஆகியோர் வந்திருந்தனர். தங்கர்பச்சானின் வருகைக்காக நடிகர், நடிகைகள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
மதியம் 1 மணியளவில் தங்கர்பச்சான், இயக்குனர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், இயக்குனர்கள் சீமான், சேரன் ஆகியோருடன் நடிகர் சங்கத்துக்கு வந்தார். ஆனால் வெளியே பத்திரிக்கை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் பெருமளவில் கூடியிருந்ததால், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறி காரிலேயே உட்கார்ந்துவிட்டார். சுமார் அரை மணி நேரம் கழித்து நடிகர் சங்கத்திலுள்ள திரையரங்குக்குள் வந்தார்.
உள்ளே வந்தவுடன், நேராக நடிகை மனோரமாவிடம் சென்று அவர் காலில் விழுந்து கும்பிட்டார். ''நான் அப்படி சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா?'' என்று மனோரமாவிடம் அவர் கேட்டதற்கு மனோரமா பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.
உடனே நடிகர் வடிவேல் எழுந்து ''அவர்களைத்தான் தகாத வார்த்தைகளைக் கூறி திட்டியிருக்கிறீர்களே, பின்பு எப்படி அவர்கள் பேசுவார்கள்'' என்று தங்கர்பச்சானிடம் கேட்க, தங்கர்பச்சான் ''நான் அப்படி கூறவே இல்லை. நான் பேசியதை திரித்து வெளியிட்டுவிட்டார்கள்'' என்று கூறினார்.
<b>நடிகைகள் ஆவேசம்</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar3.jpg' border='0' alt='user posted image'>
உடனே தங்கர்பச்சானை நடிகர்\நடிகைகள் சூழ்ந்து கொண்டு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா, விந்தியா ஆகிய மூவரும் தங்கர்பச்சானை நோக்கி ''சம்பந்தப்பட்ட நிருபர் முன் உங்களால் இதை மறுக்க முடியுமா?'' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
உடனே விஜயகாந்தும், சரத்குமாரும் கூச்சலிட்டவர்களை சமாதானப்படுத்தி, அந்த நிருபரை உள்ளே வரச் செய்தனர். அந்த நிருபரும், தங்கர்பச்சான் சொன்னதைத்தான் எழுதினேன் என்று கூறினார். உடனே தங்கர்பச்சான் ''நான் அப்படி சொல்லவேயில்லை'' என்று மறுக்க மீண்டும் கூச்சல் எழுந்தது.
<b>பகிரங்க மன்னிப்பு</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/aug/30tangar2.jpg' border='0' alt='user posted image'>
அதைத் தொடர்ந்து அனைத்து பத்திரிக்கையாளர்களும் உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்பு தங்கர்பச்சான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
''நான் வேறெங்கும் பேசவில்லை. என் குடும்பத்தினராகிய உங்களுடன்தான் பேசுகிறேன். என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இப்போதும் சத்தியமாக மறுக்கிறேன். நடிகைகளைப் பற்றி அந்தப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள பொருளில் நான் பேசவில்லை.
<b>மனோரமா கண்ணீர்</b>
இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும், மீண்டும் என் சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கூட்டம் முடிந்து வெளியே வந்த மூத்த நடிகையான மனோரமா கூறும்போது ''விபசாரிகள் என்ற வார்த்தையை கேட்டுக் கொண்டு உயிரோடு இருப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்'' என்று கண் கலங்கி குமுறலோடு கூறினார்.
நேற்றைய கூட்டத்தில் மிகவும் ஆவேசமாகக் காணப்பட்ட நடிகை குஷ்புவிடம் ''இனி தங்கர்பச்சான் இயக்கும் படங்களில் நடிப்பீர்களா?'' என்று கேட்டதற்கு, ''தங்கர்பச்சான் என்பவர் யார்? அவர் எங்களுக்கு யாரும் இல்லை. அவர் எவ்வளவு முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும், அவரை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்'' என்று ஆவேசம் பொங்கக் கூறினார்.
<b>ஸ்டிரைக்கைத் தவிர வேறு வழியில்லை</b>
நேற்றைய கூட்டத்தில் பெரும்பாலான பகுதி கூச்சல், குழப்பங்களுக்கிடையேதான் நடந்தது. ஆவேசத்துடன் காணப்பட்ட நடிகர், நடிகைகளை சமாதானப்படுத்துவதற்கு விஜயகாந்தும், சரத்குமாரும் பெரும் பாடுபட்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த விஜயகாந்த் ''இனி நடிகர்,நடிகைகளை தரக்குறைவாக யாராவது பேசினால் உடனே ஸ்டிரைக் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை'' என்று உறுதிபட தெரிவித்தார்.
இப்படியாக தமிழ் திரையுலகத்தை ஒரு வாரகாலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த தங்கர்பச்சான் விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
- பாலாஜி
</span>( Vikadan)

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->