| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 306 online users. » 0 Member(s) | 303 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,415
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,213
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,528
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பவதாரிணிக்கு திருமணம். |
|
Posted by: Rasikai - 08-31-2005, 06:06 PM - Forum: சினிமா
- Replies (26)
|
 |
<b>பவதாரிணிக்கு திருமணம்.</b>
<img src='http://img157.imageshack.us/img157/97/pavadharini13500ox.jpg' border='0' alt='user posted image'>
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் திருமணம் செப்டம்பர் 16ம் தேதி கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடைபெறவுள்ளது.
இளையராஜாவுக்கு மொத்தம் 3 குழந்தைகள். மூத்தவர் கார்த்திக் ராஜாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
ஒரே மகளான பவதாரிணிக்கும் தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் சபரிராஜன் தான் மணமகன். பி.ஏ. பட்டதாரியான சபரிராஜன் சென்னையில் விளம்பர ஏஜென்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
<img src='http://img157.imageshack.us/img157/2586/pavadharini1700cd.jpg' border='0' alt='user posted image'>
திருமணம், இளையராஜாவுக்கு மிகவும் ராசியான கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு செப்டம்பர் 18ம் தேதி சென்னை சாந்தோம் ராமநாதன் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அப்பாவின் வழியில் இசையில் ஞானம் பெற்றவரான பவதாரிணி, நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவா நடித்த ராசையா என்ற படத்தில் வரும் மஸ்தானா, மஸ்தானா என்ற பாடல் தான் இவர் பாடிய முதல் பாடல்.
ரேவதி இயக்கிய மித்ரு மை பிரண்ட் என்ற படத்திற்கும் சில கன்னடப் படங்களுக்கும் பவதாரிணி இசையமைத்துள்ளார். தற்போது இவர் அமிர்தம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக பவதாரணி தேசிய அளவில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| விவாகரத்து குறைவு |
|
Posted by: வினித் - 08-31-2005, 02:12 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (76)
|
 |
விவாகரத்து குறைவு
உலகிலேயே மிகவும் அதிகமாக விவாகரத்து செய்து கொள்வோர் எந்த நாட்டினர் என்று கேட்டால் எல்லோரும் மிகச் சரியாக அமெரிக்கா என்று கூறி விடுவார்கள். காரணம்?
அமெரிக்காவில் 100 பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதில் 56 பேர் விவாகரத்துச் செய்து கொள்கிறார்கள். அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் ஸ்வீடன் நாட்டவர்கள். இங்கே 100 தம்பதிகளுக்கு 55 பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். மூன்றாவது இடம் பெலாரஸ் நாட்ட வருக்கு…இங்கே 100 தம்பதியரில் 52 பேர் விவாகரத்து செய்கிறார்கள்.
மிகவும் குறைவாக விவாகரத்து நடக்கும் நாடு இலங்கைதான்.இங்கே 100 ஜோடி களில் 1.5 பேர்தான் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.
|
|
|
| இயந்திர உலகம் |
|
Posted by: Rasikai - 08-31-2005, 12:15 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (20)
|
 |
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, இயந்திரங்கள் மனிதர்களுடைய அன்றாட வாழ்வில் கலந்துகொள்ளும் காலம் நெருங்கிவிட்டது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், ஜப்பானில் Wakamaru வகை ரொபோக்கள் விற்பனைக்கு வருகின்றன.
மிட்சுபிசி நிறுவனத்தின் தயாரிப்பான இவ்வகை இயந்திரங்கள், சுமார் 10 பேருடைய முகங்களை அடையாளம் வைத்திருப்பதோடு, ஏறக்குறைய 10,000 வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் திறனையும் கொண்டிருக்கிறது.
வீட்டில்,இயந்திரமயமாக்கப்பட்ட ஒரு உதவியாளராக வலம் வரப்போகும் Wakamaru , ஒரு மீற்றர் உயரமுடையதாகும்.
<img src='http://img14.imageshack.us/img14/6058/wakamaru0sl.jpg' border='0' alt='user posted image'>
வீட்டில், அன்றாட வேலைகளைச் செய்யும் திறனையும் கொண்டுள்ள
Wakamaru, வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றபின், வீட்டைப் பாதுகாக்கும் காவலாளி போன்றும் இயங்கப்போகிறது.
வீட்டில் இருக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் இதன் தொழிற்பாடுகள் பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கப்போகிறது.
நாட்குறிப்புகள், அன்றாட வேலைகள், விசேட குறிப்புகளை ஞாபகப்டுத்தல் என்று முழுமையான ஒரு உதவியாளராக Wakamaru காணப்படும் என்று மிட்சுபிசி நிறுவனம் தெரிவிக்கிறது.
இதன் ஆரம்ப விலை 14,000 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
|
|
|
| புனித வெள்ளரசு மரம் (?) |
|
Posted by: Mathan - 08-31-2005, 11:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (30)
|
 |
அநுராதபுரியின் புனித வெள்ளரசு மரம் மக்கள் தரிசனத்துக்கு
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132559bodhi203e.jpg' border='0' alt='user posted image'>
<b>புனித வெள்ளரசு மரம்</b>
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரச மரத்தைப் பார்ப்பதற்காகப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கடந்த ஒரு வாரகாலமாக மக்கள் வெள்ளம் அங்கு அலைமோதுகின்றது.
எண்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நாடெங்கிலும் இருந்து பௌத்தர்கள் அநுராதபுரத்திற்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
எங்கு நோக்கினும் வெண்ணிற ஆடையணிந்த பக்தர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132545bodhi203d.jpg' border='0' alt='user posted image'>
<b>வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் </b>
புனித வெள்ளரசுமரம் அமைந்துள்ள புனிதநகரப் பிரதேசத்தில் சுமார் 4, 5 கிலோ மீற்றர் தொலைவிற்கு வளைந்து நெளிந்து நிற்கும் நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்திருக்கின்றார்கள்.
தங்க முலாம் பூசப்பட்ட வேலியின் அடைப்புக்குள் புனிதமாக வைக்கப்பட்டுள்ள வெள்ளரசு மரத்தினைப் பார்ப்பதற்கு அதன் புனிதத்துவம் கருதி எவருக்கும் இலகுவில் அனுமதி வழங்கப்படமாட்டாது.
இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் மாத்திரமே தரிசித்த இந்தப் புனித வெள்ளரசு 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதீசன் என்ற மன்னன் அநுராதபுரத்தை ஆண்ட காலத்தில் இந்தியாவை ஆண்ட அசோகச் சக்கரவர்த்தியின் மகளாகிய சங்கமித்தை என்னும் பிக்குனியினால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132535bodhi203c.jpg' border='0' alt='user posted image'>
<b>காணிக்கை வைத்து வழிபடுகிறார்கள்</b>
விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேடைகளில் ஏறிச்சென்று பக்தர்கள் புனித வெள்ளரசைப் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்க சரிகை வேலைப்பாடு கொண்ட பட்டும், மஞ்சள் அங்கியும் போர்த்தப்பட்ட அரச மரக்கிளையை விசேடமாக நிறுத்தப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் கையிலேந்தியிருக்கும் மலரினால் சுட்டிக்காட்ட, மலர்களையும் காணிக்கையையும் செலுத்தி பக்தர்கள் அதனை வணங்கிச் செல்கின்றார்கள்.
கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பத்து மணித்தியாலங்களுக்கு மேலாக பக்தர்கள் புனித தரிசனத்திற்காகக் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132514bodhi203a.jpg' border='0' alt='user posted image'>
<b>தங்க முலாம் பூசப்பட்ட வேலிகள்</b>
அநுராதபுரம் புனித வெள்ளரசு மரக்கிளையுள்ள பகுதியின் தலைமை பிக்குவாக இருப்பவர் அட்டமஸ்தானாதிபதி ஆச்சார்ய பள்ளேகல சிறிநிவாச நாயக்க தேரர்.
அவர் இந்த ஒருவார கால நிகழ்வு பற்றி கூறுகையில், புனித போதிமரத்தைப் பல வருடங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் தரிசிப்பதற்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; மன்னன் தேவநம்பியதீசன் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் புனித அரசமரக்கிளையானது வெண்ணிறக் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வெண்ணுடை தரித்த மக்கள் திரண்டு நின்று வணங்க, ஊர்வலமாக இங்கு கொண்டு வரப்பட்டது; அதேபோன்றதொரு காட்சியை இப்போது நாங்கள் காணக்கூடியதாக உள்ளது; இந்தப் புனித வெள்ளரசைப் பொதுமக்கள் தரிசித்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் நாட்டில் அமைதியும் கிட்டும் என்று நம்புகிறோம் என கூறினார்.
வாழ்க்கையில் அரிதாகக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள் சிலர் புனித வெள்ளரசைத் தரிசிப்பதற்கு கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை ஒரு பெரும் பேறாக கருதுவதாகவும், நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பம் உண்மையிலேயே நன்மையானது என்றும், இத்தகைய சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறினர்.
BBC தமிழ்
|
|
|
| கண்ணீர் அஞ்சலிகள் |
|
Posted by: Rasikai - 08-31-2005, 10:39 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (12)
|
 |
<b>நகைச்சுவை நடிகர் ஏ. வீரப்பன் மரணம்</b>
தமிழ் படங்களில் பலவற்றில் (பழைய) நடித்தவரும் தற்போது நகைச்சுவை எழுதி கொடுத்து வந்தவருமான நடிகர் ஏ. வீரப்பன் இன்று சென்னையில் மரணமடைந்தார். கடந்த பல காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
|
|
|
| வினோதமாகப் பிறந்த பெண் இரட்டையர்! |
|
Posted by: Rasikai - 08-30-2005, 09:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>வினோதமாகப் பிறந்த பெண் இரட்டையர்!</b>
பெய்ஜிங், ஆக. 26:
சீனாவின் ஜை யியாங் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் செவ்வாய்க்கிழமை பிறந்தன. இரு குழந்தைகளுக்கும் ஒரே பிறப்புறுப்புதான் காணப்படுகிறது. இரண்டும் சேர்ந்து 4,380 கிராம் எடைதான் இருக்கின்றன.
மகப்பேறு மருத்துவமனையிலிருந்து இவ்விரு குழந்தைகளையும் மேல் சிகிச்சைக்காக ஷாங்காய் நகரில் உள்ள ஃபுடான் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு இரு குழந்தைகளையும் தனியாகப் பிரிக்க அறுவைச் சிகிச்சை நடைபெறவிருக்கிறது.
இதில் ஒரு குழந்தைக்குப் பிறந்ததிலிருந்தே இதயக் கோளாறு காணப்படுகிறது. மற்றொரு குழந்தைக்கு நுரையீரல் ரத்தக்குழாயில் கோளாறு காணப்படுகிறது.
|
|
|
|