| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 467 online users. » 0 Member(s) | 464 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,417
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,230
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,528
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| இனிய இல்லறத்துக்கு வித்திடும் கடின உழைப்பு |
|
Posted by: SUNDHAL - 08-29-2005, 10:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பார்கள். அப்படிகடினமாக உழைப்பவர்கள், சதா அலுவலகப் பணியே கதி என்று இருப்பவர்கள் பற்றி அமொpக்க மனஇயல் நிபுணர்கள் என்ன கூறுகிறhர்கள் தொpயுமா? அவர்கள் தான் இல்லற வாழ்வில் இனிதே விளங்குகிறhர்கள் என்கிறhர்கள். அதாவது அப்படி கடின உழைப்பாளியாக விளங்குகிறவர்கள் வீட்டில் வந்த உடன் ஓய்வாக இருக்கிறது என்று படுத்து தூங்கி விடுவான் என்று நினைக்கலாம். அது தவறு. அவர்கள் தான், மன மகிழ்ச்சிக்காகவும் இல்லத்தரசிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆர்வமாக உறவில் ஈடுபடுவார்கள். அதனால் தான் உணர்வுப் பூர்வமாக அவர்கள் அதிக இன்பம் அடைகிறhர்கள் என்று அந்த நிபுணர்கள் கூறுகின்றனர். பாலியல் hPதியாக மன மகிழ்ச்சியுடன் உள்ள 100 தம்பதிகளை அவர்கள் ஆராய்ந்தனர். ஓராண்டாக அவர்களின் அந்தரங்க ரகசியத்தை அறிந்த போது தான் இந்த உண்மையை கண்டறிந்தனர். அதே சமயத்தில் ஏனோ தானோவென்று பணி புhpபவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் அக்கரை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்கிறhர் பேராசிhpயர் nஜhனாதன் ஸ்வார்ட்ஸ்.
அதே சமயத்தில் மகிழ்ச்சிகரமாக உள்ளவர்கள் தான் அதிக நாள் வாழ்கிறhர்கள் என்று அமொpக்க மன இயல் சங்கத்தின் வாராந்திர அறிக்கையில் ஒரு புதுமையான தகவலை வெளியிட்டு இருக்கிறhர்கள். பணியிலும் அவர்கள் திருப்திகரமாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டமும் மொய்க்கும் என்கிறhர்
மன இயல் நிபுணர் எட்வர்டு இலினோய்ஸ்.
|
|
|
| நடிகை ருசிஷாவுடன் ஒரு நாள்! |
|
Posted by: SUNDHAL - 08-29-2005, 05:37 AM - Forum: நகைச்சுவை
- Replies (9)
|
 |
மும்பை தாராவி... அங்கேதான் அந்த இளம் பெண் சுனாமி, மேகக்கூட்டங்களோடு மேக்-அப் உடன் குடியிருக்கிறது.
"வெயிலடிக்குது' படத்தில் அறிமுகம். முதல் படமே 100 காட்சிகள் ஓடி செம ஹிட்! அடுத்து "காதல் பிச்சை', "இதயத்தை நோண்டாதே', "5 ஜி, கீழ்ப்பாக்கம் ரோடு' என சொதசொதவெனக் கையில் நான்கைந்து படங்கள்! ருசிஷா... கவர்ச்சிக் கால்வாய்! கிளாமர் கிளுகிளுப்பை! இளமை இஞ்சி முட்டாய்! மன்மத மாரத்தான் ரேஸ்! இவர் பெயரைச் சொன்னாலே இளைஞர்களுக்குத் தூக்கம் இன்ஸ்டால்மெண்டில் வருகிறது. பசி பக்கத்து வீட்டில் போய் ஒளிந்துகொள்கிறது. நாம் ருசிஷாவை மும்பையிலுள்ள அவரது வீட்டிலேயே போய் சந்தித்தோம்.
""டேய் யூ...வாடா... வா'' என மிகுந்த மரியாதையுடன் தன் 10 செ.மீ. வாயை விரித்து பற்களால் சிரித்து வாசலிலேயே வரவேற்றார் ருசிஷா. ""மவனே உள்ள வந்துருவ... கண்ட கண்ட நாயை எல்லாம் உள்ள விட முடியாது'' என்று சொல்வது போல் குரைத்தது வாசலில் கட்டிப் போடப்பட்டிருந்த நாலடி உயரமுள்ள நாய்!
""நீங்க வளர்க்கிற நாயா, என்ன பேரு?'' எச்சில் தெறிக்கக் கேட்டோம்.
""யூ இடியட். அது டாக் இல்லை. மை சுவீட்டி. அது பேரு கிளி!'' என ஸ்ருதி சற்றும் பிசகாத சுண்டெலிக் குரலில் பேசுகிறார் ருசிஷா!
""என்னது உங்க செல்லப் பிராணி பேரு கிளியா...ச்சோ சுவீட்!'' எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நிஜமாய் கிளி கத்தும் சத்தம் கேட்க, ""அட, உள்ள நாய் குரைக்குற சத்தம் கேட்குதுங்க!'' என்றோம் முன்னெச்சரிக்கையாக!
""நான்சென்ஸ்... அது பூனை. நான் வலர்க்குர பேரட்டைச் செல்லமா "பூனை'ன்னுதான் கூப்பிடுதேன்.''
அப்போது ஒரு பூனை (நிஜமாகவே பூனைதாங்க) கடந்து போனது. நாம் தெளிவாக நிதானமாக யோசித்துக் கேட்டோம். ""அங்க ஒரு சார் கிராஸ் பண்ணிப் போறாங்களே, அவங்க பேரு என்ன?''
""ஹே என்ன மேன் நக்கலா... அது என் குட்டி பிரதர் வலர்க்குர குட்டி புஸி கேட். அதுக்கு அவன் "நாய்'னு பேரு வைச்சிர்க்கான். கொஞ்சம் இர்ங்க நான் கிளிக்கு மீன் கொடுத்துட்டு வந்த்டுதேன்'' என்று தண்ணீர் லாரி மாதிரி அங்கிருந்து உள்ளே செல்கிறார் ருசிஷா!
வீட்டினுள் நுழைகிறோம். சுவரெங்கும் சித்திரங்கள்! எல்லாம் கருப்பு-வெள்ளை ஓவியங்கள். உள்ளிருந்து ஒன்றரை லிட்டர் மிராண்டா பாட்டில் மாதிரி வருகிறார் ருசிஷா! ""இதெல்லாம் நீங்களே வரைஞ்சதா?'' ஆனந்தக் கண்ணீரோடு கேட்டோம்.
""யெஸ். என்கு கலே ஆர்வம் ஜாஸ்தி. கரித்துண்டு கிடச்சா போதும். சுவத்லே கிர்க்க ஆர்ம்பிச்சுடுவேன். அப்படி நான் வரைஞ்சதுதான் இங்க இர்க்கு! எம்.எஃப்.ஹுசைன் அங்கிள் கூட ஒரு நாள் வந்து நான் ரொம்ப்ப அழ்கா சர்க்கிள், லைன், ஸ்கொயர்லாம் போட்றதா பாராட்டினாரு!''
""கிரேட்! எப்ப வந்தாரு?''
""போனமாசம் நான் எயர்லி மார்னிங் 10 மணிக்கு தூங்கிட்டு இருந்தேன். அப்ப என் ட்ரீம்ல வந்தாரு!''
""ஓ... வெரி நைஸ்! நீங்க எங்க தூங்குவீங்க?''
""நான் மட்டுமில்லே. எங்க ப்ரம்ப்ரையில எல்லாருமே பெட் ரூம்லதான் தூங்குவோம். வாங்க என் பெட் ரூமைக் காட்டுறேன்.'' ஒரு பெரிய பாத்ரூமின் வழியே ஒரு குட்டி அறைக்குக் கூட்டிச் செல்கிறார். ""இதான் என் பெட் ரூம். குறட்டை, கொட்டாவியைத் தவிர வேற யாரும் இங்க வரமாட்டாங்க! தன் முட்டை போண்டா கண்களை உருட்டியபடியே கூற, ""என்னங்க இது, வித்தியாசமா வைச்சிருக்கீங்க'' என்றோம். ""ஆமா எங்க பப்பாக்கு வாஸ்த்து மேல ரொம்ப்ப ஹோப்! அதான் இப்டி கட்டிருக்காரு. அடுத்த தடவை வீட்ட ரீ-மாடல் பண்றப்போ மொட்டை மாடிய கிரெüண்ட ப்ளோர்ல கொண்டு வர்ப்போறோம். எங்க வீட்டு சாமி ரூமைக் கூட வாஸ்துப்படி பக்கத்து வீட்டுலதான் வைச்சிருக்கோம். யாருக்கு அவசரமா பக்தி வந்தாலும் பக்கத்து வீட்டுக்குப் போய்தான் சாமி கும்பிடுவோம்.'' சொல்லும்போதே ருசிஷாவின் கண்கள் மணியடிக்கிறது.
""உங்களோட பேவரிட் சாமி யாரு?
""கிருஷ்ணசாமி''
""வெரி நைஸ். உங்க வீட்டு கிச்சன் எங்க இருக்கு. பால்கனியிலயா?''
""யூ நாட்டி! எங்க வீட்டுல யாருக்கும் சமைக்கத் தெரியாது. அதான் இடத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்னு கிச்சனே கட்டலே.''
""ஐயய்யோ! அப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறீங்க?''
""பொதுவா சூட்டிங் ஸ்பாட்ல இர்ந்து பார்சல் பண்ணிக்கொண்டு வந்துர்வேன். ஷூட்டிங் இல்லாட்டி வெளிய இட்லிக் கடை போட்டுர்க்குற ஆயாகிட்ட சொன்னா டோர் டெலிவரி பண்ணிடும். இது போக யாரு பார்ட்டிக்குக் கூப்ட்டாலும், கூப்டாட்டியும் வெக்கமே படமாட்டோம். குடும்பத்தோட போய் கொட்டிக்குவோம். ஏன்னா நாங்க ராஜ ப்ரம்ப்ரை.'' சொல்லும்போதே ருசிஷாவின் டாடி தன் அழகான தொப்பையைத் தடவிக்கொண்டே உள்ளே செல்கிறார்.
""ஓ.கே. உங்க வீட்டுலேயே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச இடம் எது?'' என்றதும் வாசலை நோக்கி ஜீன்ஸ் அணிந்த வாத்து போல் ஓடுகிறார் ருசிஷா.
""இதோ இந்த இடம்தான் நான் செருப்பு கழட்டி போடுற இடம். நான் "வெயிலடிக்குது' படத்துக்காக முதல் நாள் ஷூட்டிங் போறப்ப இந்த இடத்துல தடுக்கி விழுந்தேன். அன்னிக்கு "முடியாது'ன்னு ஒரே வார்த்தை பேசுற மாதிரி ஒரு கஷ்டமான சீன். அதுவும் கேமராவைப் பார்க்காம முதுகைக் காட்டிக்கிட்டு பேசணும். சூப்பரா பண்ணுனேன். அந்த சென்டிமென்ட்ல எப்ப வெளிய கிளம்பினாலும் இங்க விழுந்து முட்டிட்டுத்தான் போவேன். அப்பத்தான் அந்தக் காரியம் நல்லா நடக்கும்.'' கீழே ஒரு பூசணிக்காய் தொப்பென விழுவது போல் விழுந்து முட்டிக் காண்பிக்கிறார்.
""நீங்க வீட்டுல எக்ஸர்சைஸ்லாம் பண்ணுவீங்களா... எப்படி உங்க 90 கிலோ ஸ்லிம்மான உடம்பை மெயின்டெய்ன் பண்ணுறீங்க?'' விழிகள் பிதுங்கக் கேட்டோம்.
""ஓ... அதுவா... டெய்லி மார்னிங் சீக்கிரமா 10 மணிக்கு எந்திருச்சுருவேன். ப்ரஷ் கூட பண்ணாம ஒரு லிட்டர் ஆரஞ்சு ஜீஸ் மட்டும் குடிச்சிட்டு, போர்வையை இழுத்துப் போத்திட்டு, பயங்கரமா எக்ஸர்சைஸ் பண்ற மாதிரி கனவு காண்பேன். அப்புறம் மம்மி திருப்பி வந்து எழுப்புவாங்க. எக்ஸர்சைஸ் பண்ணி டயர்ட் ஆயிருப்பேன்ல. úஸô, நாலு எக், ஒரு கிலோ கிரேப்ஸ், 2 ஆப்பிள், ஒரு பைனாப்பிள் மட்டும் சாப்பிடுவேன். இப்படித்தான் என் உடம்பை ஸ்லிம்மா மெயின்டெய்ன் பண்றேன்.'' மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க சொல்லுகிறார் ருசிஷா.
""மேடம் உங்க ரசிகர்கள்கிட்ட இருந்து எப்படிப்பட்ட லெட்டர் வருது?''
""ஓ... நிறைய லெட்டர் வருது. எங்க குடும்பத்துல யார்க்கும் டமில் படிக்கத் தெரியாது. இங்க்லீஸ் எழுதத் தெரியாததால அந்த லெட்டரையெல்லாம் விலைக்குப் போட்டு சோன்-பப்டி வாங்கி தின்போம்!''
""ஓ.கே.ருசிஷா நீங்க உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?'' ""என் ரசிகனுங்க... நல்லவங்க...என்க்கு மன்றம் வைக்கிறது, போஸ்டர் ஒட்டுறது, கோயில் கட்டுறது மாதிரி சோஷியல் சர்வீஸ் பண்ணுவாங்க. அதைத் தொடர்ந்து பண்ணுங்க...என்னை, என் வீட்டு நாய்க்குட்டிய வாழ வைக்றது நீங்கதான்!'' சொல்லும்போதே அவர் கண்கள் அழ நினைப்பதாக நம் மனசு துடிக்கிது!
பிரேமுக்குள் அடங்காத அந்த "டாடா சுமோ'வைப் புகைப்படங்கள் எடுத்துவிட்டு "டாடா' காட்டினோம். வாசல்வரை வந்து துரத்திவிட்டார். ஒரு ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய கடமையோடு அலுவலகம் திரும்பினோம்.
Thnaks inamani
|
|
|
| ஏன் தெரியுமா? |
|
Posted by: SUNDHAL - 08-29-2005, 05:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
தெரியுமா"திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும் மகளுக்கு, தாய்மார் கள் முறுக்கு, பொருவிளங்கா உருண்டை, அதிரசம் இம்மூன்றையும் செய்து தருவது நம் நாட்டு மரபு. இதன் உட்பொருள் என்ன ?'
திருமணமாகிச் செல்கிற புதுமணப்பெண் புகுந்த வீட்டில் விலாங்குமீன் என்கிற மாமியாரும், திமிங்கலம் என்கிற நாத்தனாரும், சுறாமீன் என்கிற மைத்துனரும், கடலிலுள்ள ஆமை போல மாமனாரும் சூழ்ந்திருக்கக் கண்டு மருட்சியடைவாள். தான் கொடுத்தனுப்பும் பலகாரங்கள் மூலம் மகளுக்கு சூசகமாக அம்மாக்காரி அறிவுரை சொல்கிறாள்:
"மகளே! முதலில் அவர்கள் உன்னைப் பார்த்தவுடன் சற்று "முறுக்' காக இருப்பார்கள். உன்னைப் பற்றி ஏதோ ஜாடைமாடையாகப் பேசிக் கொள்வார்கள். அவை உனக்குப் "பொருள் விளங்கா' அவற்றை நீ பொறுமையோடு சமாளித்து நடந்து கொண்டால் உன் வாழ்வு "அதிரசம்' தான்!' இது தான் முறுக்கு, பொருவிளங்கா, அதிரசத்தின் தாத்பர்யம்!
|
|
|
| இரப்பை புற்று நோய் |
|
Posted by: RaMa - 08-29-2005, 04:29 AM - Forum: மருத்துவம்
- Replies (2)
|
 |
இரப்பை குடல் புற்று நோய்கள் ஆண்களை விட அதிகமான பெண்களுக்கு ஏற்பட்டு வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன.
நாம் உண்ணுகின்ற உணவுகளையெல்லாம் அரைத்து இழைத்து HCL அமிலத்தின் துணையோடு சமிபாடு அடையச் செய்து சிறிது சிறிதாக சிறு குடலுக்குள் அனுப்புவதே இரைப்பையின் தொழிற்பாடு.
இவ்வாறாக மிகப் பயன்பாடுடைய அதி முக்கியமான உடலின் சுறான இரைப்பையை நாமே பழுதடையச் செய்துவிடுவதே இரைப்பை நோய்களுக்கு காரணமாகும்.
<span style='font-size:25pt;line-height:100%'><span style='color:orange'>அதிக உறைப்பான உணவுகளை உண்ணுதல் அளவுக்கதிகமாக மருந்துகளை உட் கொள்தல் குடிப்பழக்கம் புகையிலைப் பழக்கம் என தகாத உணவு முறைகளாலும் அதிகம் கோபப்படுதல் அதிகம் மனக்கவலைப்படுதல் என்பன போன்ற வேண்டாத மனக்குழப்பங்களாலும் இரப்பை சம்பந்தப்பட்ட நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கின்றோம்.
[size=12][size=18]தாகத உணவு முறையாலும் மேற்கூறிய காரணங்களாலும் அல்சர் நோய் ஏற்பட்டு அதையும் பொருட்படுத்தமால் உடலை உதாசீனம் செய்து விடுவதால் இரப்பையில் துளை ஏற்பட்டுவிடுகின்றது</span>.
சில நோயளிகள் அதீத வயிற்று வலி அதிகமான வியர்வை மயக்கம் என நோய் முற்றிய நிலையில் வைத்திய உதவியை நாடுவதுண்டு.
சிலருக்கு இரைப்பையில் ஏற்பட்ட ஒட்டையால் ஆகாரம் வெளியே வந்துவிடுவதும் உண்டு. தக்க சமயத்தில் வைத்திய உதவியை நாடாவிடில் எந்த நோயும் உயிராபத்தையே விளைவிக்கும். </span>
இரப்பை புற்று நோயின் மற்றுமொரு அறிகுற எதை சாப்பிட்டாலும் வாந்தியெடுத்தல் உதாசீனப்படுத்தப்பட்ட அல்சர் கான்சரான மாற வாய்ப்புண்டு. பசியின்மையும் இதற்கான ஒரு நோய் குறியாகும்.
அல்சர் முற்றி கான்சர் ஆனால் ஆகாரம் செல்லும் பாதை அடைபட்டு விடுகின்றது. இந்நிலையில் "எண்டாஸ்கோபி" செய்து அடைப்பை குணப்படுத்த வைத்தியார்களால் இயலாது போனால் கான்சர் கட்டியுடன் இரப்பைளை நீக்கி விட்டு மாற்றுப் பாதைளை வைக்க வைத்தியார்கள் முயல்வர். இது வெற்றியளித்தால் அதன் பின் அதன்பின் நோயளிக்கு மறு வாழ்வு உண்டு.
இனி ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இரைப்பை புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன என பார்ப்போம்.
1<span style='font-size:25pt;line-height:100%'>) நேரத்திற்கு உணவு உண்ணும் வழமைகள் தம்மை தாம் கவனிக்கும் பக்குவம் போன்றவவை இல்லாமை
2) நோய் குறிகளை இனம் காணாது இருத்தல அல்லது புறக்கணித்து தக்க மாற்று சிகிச்சை செய்யாதிருந்தாலும் தொடர்ந்து தம்மை தாம் கவனியாது இருத்தலும்
3) அதீத மனக்கவலை மன உளைச்சலால் பாதிக்கப்படுதல் </span>
இரப்பை புற்று நோய் தானாக வருகின்ற தொன்றல்லா. நாமாக வரவழைக்கும் விருந்தாளி என்பதனை உணர்ந்து உடலை பேணுவோமாயின் நோயிலிருந்து எம்மை மீட்கலாம்.
ஐப்பானிய மருந்துவர்களின் தொடர் ஆய்வுகளின் விளைவாக ஆரம்ப நிலையில் புற்று நோய்கள் முற்றிலுமாக குணப்படுத்தப்பட முடியும் என்று நிருபித்துக் காட்டப்பட்டன
<span style='font-size:19pt;line-height:100%'>இரப்பை புற்று நோய்க்கான அறிகுறிகள் சில
----- 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சமிபாட்டுக் கோளாறோடு வயிற்றின் மேல் பாகத்தில் வலி இருத்தல்
----- உடல் எடை குறைதல்
----- இரத்த வாந்த
----- கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறல்
----- உணவை விழுங்க முடியாமல் இருத்தல் </span>
மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியார்களிடம் உடன் சென்று பரிசோதிப்பது அவசியமாகும்.
வயிற்றில் கட்டி வீக்கம் மஞ்சல் காமாலை என்பன தென்பட்டால் புற்று நோய் இரப்பையில் முற்றி நிலையில் இருப்பதாக அறியாலாம்.
<span style='font-size:25pt;line-height:100%'>புற்று நோயை கண்டறிவதற்கான ஒரே ஒரு தீர்வு! யாப்பானியார்கள் செய்வது போன்ற குறிப்பிட்ட கால இடைவெளியில் இரப்பை குடலை பரிசோதிப்பதாகும். \"மாஸ்டர் செக்கப்\" என அழைக்கப்படும் இப் பரிசோதனையில் இரப்பை புண் சிறுசிறு கட்டிகள் என்பவற்றை கண்டறியலாம். புற்று நோள்க்கான ஆரம்ப குணகுறிகள் கண்டறியப்படின் அதனை தடுக்க முடியும்</span>
(நன்றி: உலகத் தமிழர்)
|
|
|
| வாழ்க காதல் |
|
Posted by: vasisutha - 08-29-2005, 03:38 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (45)
|
 |
<img src='http://www.virtualflorist.com/en/images/items/iluv.gif' border='0' alt='user posted image'>
காதல் காதல்
எங்கு பார்க்கிலும் காதல்
இணையக் காதல்..
அனைத்துக் காதலும்
விரல் நுனியில் ஆரம்பித்து
இதயத்தின் மையத்தில்
முடிவுற்றிருக்கிறது..
பறவைக்கும் காதல்
கவியிற்கும் காதல்
மலருக்கும் காதல்
மொழியிற்கும் காதல்
நிலவுக்கும் காதல்
குழந்தைக்கும் காதல்
ரசிப்பவருக்கும் காதல்
ருசிப்பவருக்கும் காதல்
இன்னும் சொல்ல முடியாமல்
பலப்பல காதல் இங்கு..
வாழ்க காதல்
காதல் உள்ள மட்டும்
காதலர் வாழ்க...
ஆகா இதோ புதிதாய்
ஒரு காதல் வாசம்
சுவாசத்தை எட்டுகிறதே..
அபிராமி...அபிராமி...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| இதைச் சொல்வது?? இந்து N.ராம்!! |
|
Posted by: cannon - 08-28-2005, 08:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இராணுவ வலிமை மூலம் சிங்களவர்களை மண்டியிட வைத்துவிட்டனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்து வரும் தமிழ்நாட்டின் 'இந்து' ஆங்கில நாளேட்டின் பிரதம ஆசிரியர் என். ராம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் 'சன் நியூஸ்' என்ற செய்தி தொலைக்காட்சியில் கதிர்காமர் கொலை தொடர்பாக இந்து ராமிடம் எழுத்தாளர் மாலன் நேர்காணல் செய்தார்.
இந்த நேர்காணலில் இந்து என்.ராம் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு:
- கட்டுநாயக்க விமான தளத்தை தகர்த்த போதே விடுதலைப் புலிகள் தங்களது இராணுவ வலிமையை வெளிப்படுத்திவிட்டனர்.
- தங்களது இராணுவ வலிமை மூலம் சிங்களவர்களை விடுதலைப் புலிகள் மண்டியிட வைத்துள்ளனர். இனியொரு போருக்கு சிங்களவர்களும் தயாராக இல்லை. சிங்கள இராணுவமும் தயாராக இல்லை. சிங்கள இராணுவத்தில் 20 முதல் 30 சதவீதத்தினர் ஓடிப்போய்விட்டனர்.
- அரசியல் களத்தில் சந்திரிகாவும் ரணிலும் இணைந்து நின்றால் அவர்கள் அரசியல் பலம்தான் பெறுவார்கள். விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தின் முன் இந்த அரசியல் வலு பலமற்றதுதான்.
- ஆயுதப் போராட்டம் நடைபெறும் சூழலில் அனைவரும் அரசியல் வழி தீர்வுதான் சரியானது என்று கூறிவருகிறோம். ஆனால் உண்மையில் இராணுவ ரீதியான தீர்வுதான் ஏற்பட்டு வருகிறது. ஏற்படும்.
- சிறிலங்காவில் கொல்லப்பட்ட கதிர்காமர் போன்று குமாரி ஜெயவர்த்தனா, உய்யங்கொட போன்ற அறிவாளிகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றனர். ஆனால் இராணுவ ரீதியான போராட்டத்தில் இத்தகைய அறிவாளர்கள் பங்களிப்பு மிக மிகக் குறைவு.
- அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்காக போராடியவர் லக்ஸ்மன் கதிர்காமர். அவர் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர்
என்று கூறிய என்.ராம் வழமை போல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தேசியத் தலைவரையும் ஒருமையில் விமர்சிக்கவும் தவறவில்லை.
.............செய்தி: புதினத்திலிருந்து...........
|
|
|
| முறிந்த பணை |
|
Posted by: RaMa - 08-28-2005, 07:40 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (3)
|
 |
முறிந்த பணை என்னும் புத்தகத்தைப் பற்றி யாருக்காவது தகவல் தெரியுமா? தெரிந்தால் சொல்லவும்
|
|
|
| இருதமிழர்களை விடுவிக்க |
|
Posted by: Vasan - 08-28-2005, 10:45 AM - Forum: புலம்
- Replies (4)
|
 |
துரோக கும்பலால் கடத்தப்பட்ட இருதமிழர்களை விடுவிக்க டென்மார்க் அரசின் உதவியை கோருவோம் குறிப்பிட்ட அமைப்பு தாங்கள் இந்த இருவரையும் கடத்தியதாக தமது ஆங்கில இணையத்தில் உரிமைகோரியுள்ளனர்.
இந்த அமைப்புகளுக்கு டென்மார்க்கில் இருந்து இணையங்கள் நடாத்தப்படுவது தெரிந்ததே , இன்று டென்மார்க் பத்திரிகை ஒன்றிலும் இந்த இணையங்களை நடாத்துபவர் தான் தான் நடாத்துவதாக பேட்டியும் கொடுத்துள்ளார்.
ஆகவே இவர்களால் கடத்தப்பட்ட மக்களை விடுவித்தும் தரமுடியும். அதர்க்கான அளுத்தங்களை நாம் எழுதி டென்மார்க் நீதிஅமைச்சருக்கு அனுப்புவோம்.
நீதி அமைச்சரின் மின்னஞ்சல்.
jm@jm.dk
ritzau@ritzau.dk
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15737 ( Two men from Batticaloa kidnapped in Colombo)
|
|
|
|