![]() |
|
ஏன் தெரியுமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஏன் தெரியுமா? (/showthread.php?tid=3511) |
ஏன் தெரியுமா? - SUNDHAL - 08-29-2005 தெரியுமா"திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும் மகளுக்கு, தாய்மார் கள் முறுக்கு, பொருவிளங்கா உருண்டை, அதிரசம் இம்மூன்றையும் செய்து தருவது நம் நாட்டு மரபு. இதன் உட்பொருள் என்ன ?' திருமணமாகிச் செல்கிற புதுமணப்பெண் புகுந்த வீட்டில் விலாங்குமீன் என்கிற மாமியாரும், திமிங்கலம் என்கிற நாத்தனாரும், சுறாமீன் என்கிற மைத்துனரும், கடலிலுள்ள ஆமை போல மாமனாரும் சூழ்ந்திருக்கக் கண்டு மருட்சியடைவாள். தான் கொடுத்தனுப்பும் பலகாரங்கள் மூலம் மகளுக்கு சூசகமாக அம்மாக்காரி அறிவுரை சொல்கிறாள்: "மகளே! முதலில் அவர்கள் உன்னைப் பார்த்தவுடன் சற்று "முறுக்' காக இருப்பார்கள். உன்னைப் பற்றி ஏதோ ஜாடைமாடையாகப் பேசிக் கொள்வார்கள். அவை உனக்குப் "பொருள் விளங்கா' அவற்றை நீ பொறுமையோடு சமாளித்து நடந்து கொண்டால் உன் வாழ்வு "அதிரசம்' தான்!' இது தான் முறுக்கு, பொருவிளங்கா, அதிரசத்தின் தாத்பர்யம்! - Rasikai - 08-29-2005 அடடா இவ்வளவு விஷயம் இருக்கோ கிராண்பா - SUNDHAL - 08-29-2005 அதான் இருக்குன்னு தெரிதில அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு ஆன்டி? - Mathan - 08-29-2005 இது புகுந்த வீட்டிற்கு போகும் போதே அந்த பெண் மனதை மாமியார் விலாங்குமீன், நாத்தனார் திமிங்கிலம், மைத்துனர் சுறாமீன், மாமனார் ஆமை என்று சொல்லி பயறுத்துவதை (அல்லது ஒரு எதிர்ப்பு உணர்வை உருவாக்குவது போல்) போல் இருக்கு. - SUNDHAL - 08-30-2005 ம்ம்ம்ம்ம்ம அதுவும் சரி தான் அதான் அதிகமான குடும்பங்கள மாமியார் மருமகள் சன்டை..நாத்தனார் சன்டை எல்லாம் வருதோ தெரியல... |