Yarl Forum
இரப்பை புற்று நோய் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: இரப்பை புற்று நோய் (/showthread.php?tid=3512)

இரப்பை புற்று நோய் - RaMa - 08-29-2005

இரப்பை குடல் புற்று நோய்கள் ஆண்களை விட அதிகமான பெண்களுக்கு ஏற்பட்டு வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன.
நாம் உண்ணுகின்ற உணவுகளையெல்லாம் அரைத்து இழைத்து HCL அமிலத்தின் துணையோடு சமிபாடு அடையச் செய்து சிறிது சிறிதாக சிறு குடலுக்குள் அனுப்புவதே இரைப்பையின் தொழிற்பாடு.
இவ்வாறாக மிகப் பயன்பாடுடைய அதி முக்கியமான உடலின் சுறான இரைப்பையை நாமே பழுதடையச் செய்துவிடுவதே இரைப்பை நோய்களுக்கு காரணமாகும்.

அதிக உறைப்பான உணவுகளை உண்ணுதல் அளவுக்கதிகமாக மருந்துகளை உட் கொள்தல் குடிப்பழக்கம் புகையிலைப் பழக்கம் என தகாத உணவு முறைகளாலும் அதிகம் கோபப்படுதல் அதிகம் மனக்கவலைப்படுதல் என்பன போன்ற வேண்டாத மனக்குழப்பங்களாலும் இரப்பை சம்பந்தப்பட்ட நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கின்றோம்.

[size=12][size=18]தாகத உணவு முறையாலும் மேற்கூறிய காரணங்களாலும் அல்சர் நோய் ஏற்பட்டு அதையும் பொருட்படுத்தமால் உடலை உதாசீனம் செய்து விடுவதால் இரப்பையில் துளை ஏற்பட்டுவிடுகின்றது.

சில நோயளிகள் அதீத வயிற்று வலி அதிகமான வியர்வை மயக்கம் என நோய் முற்றிய நிலையில் வைத்திய உதவியை நாடுவதுண்டு.
சிலருக்கு இரைப்பையில் ஏற்பட்ட ஒட்டையால் ஆகாரம் வெளியே வந்துவிடுவதும் உண்டு. தக்க சமயத்தில் வைத்திய உதவியை நாடாவிடில் எந்த நோயும் உயிராபத்தையே விளைவிக்கும்.
இரப்பை புற்று நோயின் மற்றுமொரு அறிகுற எதை சாப்பிட்டாலும் வாந்தியெடுத்தல் உதாசீனப்படுத்தப்பட்ட அல்சர் கான்சரான மாற வாய்ப்புண்டு. பசியின்மையும் இதற்கான ஒரு நோய் குறியாகும்.
அல்சர் முற்றி கான்சர் ஆனால் ஆகாரம் செல்லும் பாதை அடைபட்டு விடுகின்றது. இந்நிலையில் "எண்டாஸ்கோபி" செய்து அடைப்பை குணப்படுத்த வைத்தியார்களால் இயலாது போனால் கான்சர் கட்டியுடன் இரப்பைளை நீக்கி விட்டு மாற்றுப் பாதைளை வைக்க வைத்தியார்கள் முயல்வர். இது வெற்றியளித்தால் அதன் பின் அதன்பின் நோயளிக்கு மறு வாழ்வு உண்டு.
இனி ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இரைப்பை புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன என பார்ப்போம்.

1) நேரத்திற்கு உணவு உண்ணும் வழமைகள் தம்மை தாம் கவனிக்கும் பக்குவம் போன்றவவை இல்லாமை
2) நோய் குறிகளை இனம் காணாது இருத்தல அல்லது புறக்கணித்து தக்க மாற்று சிகிச்சை செய்யாதிருந்தாலும் தொடர்ந்து தம்மை தாம் கவனியாது இருத்தலும்
3) அதீத மனக்கவலை மன உளைச்சலால் பாதிக்கப்படுதல்

இரப்பை புற்று நோய் தானாக வருகின்ற தொன்றல்லா. நாமாக வரவழைக்கும் விருந்தாளி என்பதனை உணர்ந்து உடலை பேணுவோமாயின் நோயிலிருந்து எம்மை மீட்கலாம்.

ஐப்பானிய மருந்துவர்களின் தொடர் ஆய்வுகளின் விளைவாக ஆரம்ப நிலையில் புற்று நோய்கள் முற்றிலுமாக குணப்படுத்தப்பட முடியும் என்று நிருபித்துக் காட்டப்பட்டன

இரப்பை புற்று நோய்க்கான அறிகுறிகள் சில
----- 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சமிபாட்டுக் கோளாறோடு வயிற்றின் மேல் பாகத்தில் வலி இருத்தல்
----- உடல் எடை குறைதல்
----- இரத்த வாந்த
----- கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறல்
----- உணவை விழுங்க முடியாமல் இருத்தல்
மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியார்களிடம் உடன் சென்று பரிசோதிப்பது அவசியமாகும்.

வயிற்றில் கட்டி வீக்கம் மஞ்சல் காமாலை என்பன தென்பட்டால் புற்று நோய் இரப்பையில் முற்றி நிலையில் இருப்பதாக அறியாலாம்.

புற்று நோயை கண்டறிவதற்கான ஒரே ஒரு தீர்வு! யாப்பானியார்கள் செய்வது போன்ற குறிப்பிட்ட கால இடைவெளியில் இரப்பை குடலை பரிசோதிப்பதாகும். \"மாஸ்டர் செக்கப்\" என அழைக்கப்படும் இப் பரிசோதனையில் இரப்பை புண் சிறுசிறு கட்டிகள் என்பவற்றை கண்டறியலாம். புற்று நோள்க்கான ஆரம்ப குணகுறிகள் கண்டறியப்படின் அதனை தடுக்க முடியும்

(நன்றி: உலகத் தமிழர்)

- Rasikai - 08-29-2005

தகவலுக்கு நன்றி மதனா

- கீதா - 09-06-2005

நன்றி தகவலுக்கு மதனாஅக்கா