| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 499 online users. » 0 Member(s) | 497 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,423
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,230
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,529
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அந்த நாள் ஞாபகம் |
|
Posted by: KULAKADDAN - 08-27-2005, 12:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
<span style='color:red'>இது ஜாம் போத்தல் விளக்கு
மண்ணெண்ணெய் தட்டுப்பாடா இருந்த காலத்து விளக்கு.
ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணைய எப்படி இரவு முழுக்க பாவிக்கிறது எண்டதுக்காக அப்ப கண்டுபிடித்த வழி இது
<img src='http://img397.imageshack.us/img397/6992/lamp109kc.jpg' border='0' alt='user posted image'>
பாவிக்கும் பொருட்கள்
<img src='http://img397.imageshack.us/img397/2636/lamp70bh.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img397.imageshack.us/img397/5379/lamp81vr.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img397.imageshack.us/img397/4416/lamp98pv.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:red'>ஊருக்கு போன போது செய்து எடுத்தேன்.
இப்ப காஸ் குக்கர், மோட்டர் சைக்கிள், செல்லிட பேசி, கையேஸ் என நிறைந்து போயுள்ள ஈழத்தில் 10 -12 வருடங்களுக்கு முன் இருந்த ஒரு வாழ்க்கையின் ஒரு பதிப்பு
இதப்பற்றி வசந்தனின் பதிவு
<b>சிதையா நெஞ்சு கொள்-1 </b>
தங்கமணியின் பதிவில் முத்தையன்கட்டில் குளத்துநீரைப் பாவித்து மின்னுற்பத்தி செய்த ஒருவரைப்பற்றி எழுதியிருந்தார். அச்செய்தியை அதற்குமுன்பே புதினத்தில் பார்த்திருந்தேன். தங்கமணியின் பதிவைப்பார்த்த பின்தான் அதன் முக்கியத்துவைத்தை உணர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் அந்த மனிதன் எனக்குத் தெரிந்தவனாயிருக்க வேண்டும். முகத்தைவிட பெருவிரலில்லாத வலது கைதான் எனக்கு ஆதாரமாய் இருக்கிறது. அந்த நபர் நான் நினைப்பவராக இருக்கும் பட்சத்தில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
முத்தையன்கட்டுக் குளத்தின் சீர் செய்யப்படாத மடைக்கதவுகளுக்குள்ளால் வெளியேறி கழிவுநீராக அநாவசியமாய்ப் போகும் நீரைப்பற்றி யோசித்திருக்கிறேன். இன்னும், இரணைமடுவின் வான்பாயும் நீரையோ, அல்லது சீரமைக்கப்படாத குளக்கட்டைக் கருத்திற்கொண்டு குளத்துநீரைத் திறந்து வெளியேற்றும்போது பெருக்கெடுத்துப்பாய்ந்து அநாவசியமாய்ப்போகும் நீரைப் பார்த்தும் பொருமியிருக்கிறேன்.
தேவைகள் தான் சில கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றன. அந்தவகையில் போர்க்காலத்தில் எங்கள் மக்களால் செய்யப்பட்ட சில புதுமைகளைப்பற்றிக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஜாம் போத்தல் விளக்கு.
இதைப்பற்றி நான் சுந்தரவடிவேலின் பதிவிற் சொன்னபோது, அவர் சாதாரண போத்தல் (Bottle) விளக்கென்று நினைத்துவிட்டார். அது சாதாரண விளக்குகளைவிட வித்தியாசமானது. எண்ணைய்ச் சிக்கனத்துக்காகத் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டது.
1990 இன் ஆனியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் சிங்கள அரசுக்கெதிராகத் தொடங்கியது. போர் தொடங்கியவுடனேயே தமிழர் பகுதிகளில் பொருளாதாரத்தடை போடப்பட்டது. மருந்துப்பொருட்கள் கூடத் தடைசெய்யப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்திலிருந்த மின்நிலையமூடாக ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் என்ற அளவில் சுழற்சிமுறையில் மின்வினியோகம் செய்யப்பட்டது. (எங்கள் ஊருக்கு பகல் பத்துமணிக்கு வரும்). பொறுக்குமா சிங்கள அரசு? சில நாட்களிலேயே அந்தச் சுன்னாக மின்நிலையம் சிங்கள வான்படையாற் குண்டுவீசி அழிக்கப்பட்டது. அத்தோடு குடாநாடு முற்றாக இருளில் மூழ்கியது.
அப்போது, குடாநாடு முற்றாக வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. வன்னியுடன் இணையும் ஒரே பாதையான ஆனையிறவில் இராணுவம் குந்தியிருந்தது. மற்றைய பாதை பூநகரிப் படைமுகாமால் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுத்தம் ஆரம்பித்தவுடன் பொருட்களின் விலைகளனைத்தும் சடுதியாக உயர்ந்தன. அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றைக் காணவே கிடைக்கவில்லை. ஒருவருக்கு 100 கிராம் சீனி வீதம் கடையொன்றில் விற்கப்பட்டபோது, அதை வாங்க 300 பேர் வரிசையில் காத்திருந்த நாட்கள் ஞாபகமிருக்கிறது. அதில் சீனி வாங்குவதற்காகவே பாடசாலை போகாமல் சில சிறுவர்களும் அடக்கம்.
இந்த நேரத்தில் மண்ணெண்ணெய் பயங்கரத் தட்டுப்பாடு. ஒரு லீற்றர் 350 ரூபா விற்றது. (இத்தொகை அப்போது யாழ்ப்பாணத்தில் கணிசமான தொகை). எங்கள் ஊரில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்த மோட்டார் சைக்கிளோ காரோ ஓடி நான் பார்த்ததில்லை. அவ்வளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு. பெற்றோல் வாசனையையே மறந்துவிட்டிருந்தோம். எனக்கு ஞாபகமிருக்கிறது; நிலவு வெளிச்சம் இருக்கும் காலங்களில் எங்கள்வீட்டில் விளக்குக்கேற்றுவதில்லை. எங்கள் அயலிலும் தான். இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதைகள் சொல்லி விளையாடி, பாட்டுக்குப்பாட்டுப் போட்டி வைத்து, அம்மம்மாவிடம் கதைகேட்டுத் தூங்கிப்போக நேரம் சரியாக இருக்கும். (அந்த வயதில் அது இன்பமான பொழுதுகள்).
இப்படியான நேரத்தில் பத்திரிகைகளில் ஒரு விளக்கைப்பற்றிச் செய்தியும் அறிவித்தலும் வந்திருந்தன. தொடர்ச்சியாக சிலநாட்கள் அவ்விளக்கைப் பயன்படுத்தச்சொல்லி அறிவுரைகளும் வந்தன. அதுதான் ‘ஜாம் போத்தல் விளக்கு’. (இதைவிட வேறு பெயர் அந்த விளக்குக்கு இருந்ததாக நான் அறியவில்லை.)
சின்ன ஜாம் போத்தல் ஒன்றை எடுத்து அதற்குள் சிறிதளவு பஞ்சு வைத்து, கடுதாசியைச் சுருட்டிச் செய்த திரியைப் பாவித்து அந்தவிளக்குச் செய்ய வேணும். திரியைக் கவ்வ, நுனியில் சிறிய வளையம் கொண்ட கொழுக்கியொன்றைப்பாவிக்கலாம். அக்கொழுக்கி போத்தலின் விளிம்பில் கொழுவப்பட்டிருக்கும். (இதற்கெல்லாம் சைக்கிளின் வால்வ் கட்டை தான் சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில் பழைய சைக்கிள் ரியூப்புக்களுக்கும் சரியான மரியாதை.) ஏறக்குறைய போத்தலின் அரைவாசிக்கும் சற்று மேலாக திரி முடிவடையும். பஞ்சில் ஊறக்கூடியவாறு மண்ணெண்ணெய் விட வேண்டும். பஞ்சில் ஊறிய எண்ணெய்தான் கடுதாசி வழியாக எரிகிறது. மண்ணெண்ணெய் பஞ்சில் ஊறும் அளவுக்கு மட்டுமே விடப்படவேண்டும்.
இந்த விளக்குத்தான் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பாவிக்கப்பட்டது. இதையே ஹரிக்கேன் விளக்குப்போல மேலே மூடியும் கைபிடியும் வைத்து விதம்விதமாக விளக்குகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தன. யாழ்ப்பாணத்தில் அந்நேரத்தில் அவ்விளக்குப் பாவித்த ஆக்களுக்கு அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் நிச்சயம் தெரிந்திருக்கும்.
என்னைப்பொறுத்தவரை இது எண்ணெய்ச்சிக்கனத்தைச் சரிவரச் செய்தது. எல்லா மக்களுமே இவ்விளக்கின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். பின்னர் கொஞ்ச நாளில் உப்புப்போட்டால் எண்ணெய் இன்னும் சிக்கனப்படுத்தப்படும் என்ற கதையொன்று ஊரில் உலாவியது. (சும்மா கதைவழிதான்) கிட்டத்தட்ட எல்லோருமே பஞ்சின்மேல் உப்புப்போட்டுப்பாவித்தோம். ஆனால் உப்புப்போடுவதால் எண்ணைய்ச் சிக்கனமுண்டு என்பது எவ்வளவுதூரம் உண்மையென்று தெரியாது. அதை நாம் உணரவுமில்லை. அதற்குரிய விளக்கங்கள் ஏதுமிருப்பதாக நான் அறியவுமில்லை. ஆனால் இந்த விளக்கு மூலம் நாம் எண்ணையை மிச்சப்படுத்தலாமென்று நன்கு உணர்ந்துகொண்டோம்.
கிட்டத்தட்ட ஒருவருடம் அந்தவிளக்கு மட்டுமே பாவிக்கப்பட்டு, பின் ஏனைய விளக்குகளோடு கலந்து பாவிக்கப்பட்டு வந்தது. (பின் எண்ணைய்த் தட்டுப்பாடு ஓரளவு குறைந்திருந்தது.) யாழ் இறுதி இடப்பெயர்வு வரை எங்கள் வீட்டில் முதன்முதல் செய்த ஜாம்போத்தல் விளக்கு பாவனையிலிருந்தது. (இதற்கிடையில் 3 இடப்பெயர்வு நடந்தாலும் அவ்விளக்கு எங்களோடு கூடவே பயணித்தது.)
இந்தவிளக்கு மூலம் மாதத்துக்கு வெறும் 250 மில்லி லீற்றர் எண்ணெய் அளவுக்குத்தான் சேமிக்க முடிந்திருக்கும். இன்றைக்கு எல்லோருக்குமே இது வெறும் தூசு என்ற அளவுதான். ஆனால் அன்றைய நிலையில் பெரிய பெறுமதி அதற்கிருந்தது. பகலில் பஞ்சிலுள்ள எண்ணெய் ஆவியாகிப் போய்விடக்கூடாதென்பதற்காய் விளக்கை மூடிவைக்கும் காலம் அது. திரியாகப் பயன்படுத்தப்பட்ட காகிதத்துண்டு மாற்றப்படும்போது, பழைய கடுதாசித்துண்டைக் கசக்கிப் பிழிந்து எண்ணைய் எடுப்போம்.
இந்த ஜாம் போத்தல் விளக்கை யார் வடிவமைத்தார்களோ தெரியாது. எனினும் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருவராலும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.
இதுதான் ஜாம் போத்தல் விளக்கின் கதை. கதையைச் சரியாகச் சொன்னேனா தெரியவில்லை. குறிப்பாக எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரியாக வெளிப்படுத்தினேனா தெரியாது.
இப்பதிவை இப்போது எழுதத் தூண்டிய சிறிரங்கனுக்கு நன்றி.
மேலும் தங்மணியின் தலைப்பையே நானும் பாவித்ததால் அவருக்கும் நன்றி.
நன்றி.
-வசந்தன்-
</span>]http://vasanthanin.blogspot.com/2005/06/1....[size=7]</span>
|
|
|
| வருக என் நண்பனே! |
|
Posted by: Nitharsan - 08-27-2005, 08:11 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
வருக என் தோழனே!
கனடா உனை
விசா கொடுத்து அழைக்கிறது
ஏனெனில்-எம்
இனத்தில் இருந்து இன்னோர்
எழுதப்படாத அடிமை
அவனுக்கு தேவை!?
ஆமாம்.....
எம்மைத் தவிர
வேற்றுவன் எவன்..
செய்வான் 24 மணிநேர சேவை
அதனால் தான்
வருக என் நண்பனே!
வேலைவாய்ப்பு கனடாவில்
வரிசையாய் இருக்கிறது...
பள்ளி சென்று பட்டம்
பெற்றவன் வேலையின்றி
வரிசையில் நிற்கிறான் - ஆனாலும்
உனக்கான தொழில்
உனக்காகவே காத்திருக்கிறது
வெள்ளையனும் கறுப்பினத்தவனும்
கடைசி வரை செய்யாத
வேலையெல்லாம்
செய்வோமென்றான் ஈழத்தமிழன்
அதனால் தான் என்னவோ!? - உனக்கு
அன்பளிப்பாய் விசா... எனவே
வருக என் நண்பனே!
பள்ளியில் நீ படிக்கத் தேவையில்லை
வேலைக்கான அனுமதியும் தேவையில்லை
வேற்று நாட்டவருடன் பழக...
ஆங்கிலம் கூடத் தேவையில்லை
உனக்காக.... - இங்கே
தொழிற்சாலைகள்
தேம்பியழுகின்றன...
உணவகங்கள் உண்மையில்
காத்திருக்கின்றன...
வேலை முகவரும் கண் துஞ்சி
காத்திருக்கிறார் - அதனால்
வருக என் நண்பனே!
கள்ளு குடித்ததுக்காய்
கட்டையால் அடி வாங்கிய நீ
கஞ்சா அடிக்க கற்றுக் கொள்ள வேண்டுமா?
கன்னியுடன் காமுறவேண்டுமா?
களிப்புடன் இரவுகள் கழிய வேண்டுமா?
காரில் கன்னியுடன் சுற்ற வேண்டுமா?
டீஸ்கோவில் மாதருடன் ஆட வேண்டுமா?
கலாச்சாரத்தைத் தூக்கி எறிய வேண்டுமா?
பல்கலாச்சார சூழலில் - உன்
கலாச்சராம் மறக்க வேண்டுமா?
வருக என் நண்பனே!
நீ நினைத்ததெல்லாம் சரியே!
கனடா போய் காசு உழைக்கலாம்
கஸ்டப்படும் குடும்ப நிலை மாற்றலாம்
தேவையேற்படின்...
உறவுகளுக்கும் உதவலாம்
ஆனால்....
நினைப்பவை நடக்குமா?
உன் கஸ்டத்தில் யாராவது
பங்கெடுப்பாரா?
உன் களைப்புக்கு யாராவது
கஞ்சி தருவாரா?
உன் நிலைதனையாவது உணர்வாரா?
இந்த நிலை வேண்டுமெனில்....
வருக என் நண்பனே!
கட்டுநாயக்க தாண்டியதும்
கட்டுக் கட்டாய் பணமல்லவா
பார்க்கிறது எங்கள் உறவுகள்! - நீ
கட்டையில் போனால் கூட - உன்
காப்புறுதிப்பணத்திற்காய் அலையுது
சில மனித கூட்டம்!
கடைசி வரை உன் நிலையறிய
எவனும் தயாராய் இல்லை...
அறிந்தாலும்.... அக்கறை கொள்ளவும்
தயாரில்லை.... - எனவே!
வருக என் நண்பனே!
கனடா வந்த...
களிப்பு மிகு இறுமாப்பில்
கவிதை எழுதுவதாய்
கடைசிவரை எண்ணாதே!
என் கண்ணுக்குத் தெரியாத
என் தேசத்தில் இருக்கும்
என் சக இளைஞனே!
நான் சொன்னவை யாதார்த்தமற்றவை
என நீ கருதினால்....
ஒரு முறையேனும்... - கனடா
வருக என் நண்பனே!
கஞ்சி குடித்தும் களிப்புடன்
கழியும் வாழ்க்கையை.
காரில் சென்று காசு உழைத்து
கட்டில்கள் வெறுமனே அறையிலிருக்க
காரின் ஆசனத்தில்.. தூங்கி
காலையேது மாலையேது
என்று தெரியாமல் உழைக்க...
நீ தயாரெனில்....
வருக என் நண்பனே!
கடவுள் வந்து.....
வரம் கொடுத்தாலும் - எம்
சமூகம் மாறப்போவதிலலை
அதனால் தான் சொன்னேன் - நீ
மாறிவிடு என்று... - நீ
உன் குடும்பத்துக்கு
உறவுகளுக்கு உதவியதற்கு
அக்கறை காட்டியதற்கு
அவர்களில் அனுசரனை என்ன? - நீ
முப்பது வயதாகியும் மணமாகவில்லை - உன்
பணத்தில் தன் பிள்ளை - திரு
மணம் முடித்து விட்டார்கள் - உன்
உறவுகள்...!
இவர்களை உணர...
வருக என் நண்பனே!
சத்தியமாய் யாரின்
உணர்வுகளையும் நான்
உடைக்க விரும்பவில்லை
உண்மையை யதார்த்தத்தை
கவியென்ற கருத்துக்குள்
கருத்துடன் அடக்க நினைக்கிறேன்!
காரணம்..........
வாய் மூடி நிதம்
நிழல் யுத்தம் புரிவோர்..
நிஜங்களை சொல்லவே!
வெறும் வார்த்தை ஜாலத்தில்
லயித்திருந்தால்.. - அதை
செயற்ப்படுத்த....
வருக என் நண்பனே!
www.tamilamutham.net
|
|
|
| செய்மதியுடாக உலகத்தமிழர் வானொலி |
|
Posted by: வியாசன் - 08-27-2005, 07:48 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (4)
|
 |
இதுவரைகாலமும் இணையத்தினூடாக இயங்கி வந்த உலகத்தமிழர் வானொலி இப்போது செய்மதியுhடாக ஒலிக்கின்றது.
படிப்படியாக வளர்ந்து செய்மதியுடாக ஒலிக்கும் உலகத்தமிழர் வானொலிக்கு வாழ்த்துக்கள்
அலைவரிசை சங்கமம் வானொலி இயங்கும் அலைவரிசை
11013 Frequncy
27500 symbolrate
H
|
|
|
| சிட்னி, சிங்கப்பூர், டோக்கியோ மீது தாக்குதல் |
|
Posted by: Mathan - 08-27-2005, 04:15 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
போப்புக்கு அல்கொய்தா மிரட்டல்: சிட்னி, சிங்கப்பூர், டோக்கியோவை தாக்க வாய்ப்பு
கத்தோலிக்கர்களின் புனிதத் தந்தையான போப்பாண்டவர் ஜோசப் பெனடிக்டுக்கு அல்கொய்தா கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
வாடிகன் நிர்வாகத்துக்கு பேக்ஸ் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது. அரபி மொழியில் 3 பக்கம் கொண்ட இந்த மிரட்டல் கடிதம் பார்சிலோனாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுக்கு ஆதரவாக இத்தாலியும் வாடிகனும் செயல்பட்டு வருகின்றன. எனவே விரைவில் உங்களைத் தாக்குவோம் என அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி ஆகிய நகர்களைத் தாக்க அல்கொய்தா திட்டமிட்டு வருவதாக பிரான்ஸ் எச்சரித்துள்ளது.
இதுவரை அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாக்கி வரும் அல்கொய்தா, ஆசிய நகர்களையும் தாக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு நிபுணரும் நீதிபதியுமான ஜீன் லூயிஸ் கூறுகையில்,
டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகர்கள் அல்கொய்தாவின் தாக்குதல் பட்டியலில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நகர்களைத் தாக்குவதன் மூலம், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, உலக அளவில் பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியும் என அல்கொய்தா கருதுகிறது.
குறிப்பாக ஜப்பானைத் தாக்கினால் தெற்காசியா முழுவதும் அதிர்ச்சியைப் பரப்ப முடியும் என அல்கொய்தா கருதுகிறது என்றார்.
thats tamil
|
|
|
| அலமாரி........... |
|
Posted by: SUNDHAL - 08-26-2005, 03:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஆசிரியர் மாணவர்களிடம், இயேசுநாதர் தண்ணீரை மதுவாக மாற்றிய அற்புதம் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். பக்கம் பக்கமாக நீண்ட நேரம் எழுதித் தள்ளியவர்களுக்கு பரிசு கிடைக்கவில்லை. ஆனால் ஒன்றுமே எழுதாமல் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்து விட்டு, கடைசி யில் ஒரேயொரு வரி மட்டும் எழுதிய மாண வன் முதல் பரிசைத் தட்டிச் சென்றhன். அச்சிறுவன் யார் தெரியுமா? பின்னாட்களில் உலகப் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன்தான் அவர். அவருக்கு பரிசு வாங்கித் தந்த அந்த வரி இதுதான்.
"தண்ணீர் தனது எஜமானனைக் கண்டு வெட்கி, நாணி முகம் சிவந்தது".
ஒரு சமயம் அறிஞர் பிளேட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார். ……என் மகனுக்குக் கல்வி கற்றுத்தர எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?†† என்று கேட்டார்.
……ஐந்நு}று வெள்ளிக்காசுகள்†† என்றhர் பிளேட்டோ.
……என் மகனுக்குக் கல்வி கற் றுத்தர ஐந்நு}று வெள்ளிக்காசா இதைவிடக் குறைந்த செலவில் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கிவிடலாமே†† என்று கேட்டாராம் அந்த செல்வந்தர். உடனே பிளேட்டோ, ……நீங்கள் சொல்வது சரிதான். இந்தத் தொகைக்கு ஓர் அடிமையையே வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி ஒரு அடிமையை நீங்கள் விலைக்கு வாங் கிக் கொண்டால் உங்கள் மகனையும் சேர்த்து உங்கள் வீட்டில் இரண்டு அடிமைகள் இருப் பார்கள்†† என்றhர். செல்வந்தர் முகத்தில் ஈயாடவில்லை
சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள லால்பகதூர் சாஸ்திரியும், கோவிந்த வல்லப பந்தும் ஒரு ஜPப்பில் சென்று கொண்டிருந் தனர். பந்த் பருத்த உடம்பை உடையவர். சாஸ்திரி மிகவும் மெலிந்த உடல்வாகு உடையவர். அவர்கள் பயணம் செய்த ஜPப் விபத்துக்குள்ளாகிக் கவிழ்;ந்து விட்டது. பந்த்தும் சாஸ்திரியும் தூக்கி எறியப்பட்டனர். பந்த் கீழே விழ அவர் மேல் சாஸ்திரி விழுந்தார்.
அதனைக் கேள்விப்பட்ட நேரு விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வர்களைப் பார்த்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறி னார். பின்னர் அவர்களிடம் ……இந்த விபத்து தொடர் பாக சாஸ்திரி அவர்களின் சார்பில் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும் என்று கூறினார். எதற்காக? என்றhர் லால்பகதூர் சாஸ்திரி. நீங்கள் முதலில் கீழே விழுந்து, உங்கள் மீது பந்த் விழுந்திருந்தால் உங்கள் உடம்பு என்னகதி ஆகியிருக்கும்? என்று நேரு கூறி வேடிக்கை யாகச் சிரித்தார்.
ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திருச்சி ஜட்கா வண்டிக் காரர்கள் சங்கத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அவர்கள் தங்கள் சங்க ஆண்டுவிழா கூட்டத் திற்கு தலைமை வகிக்கு மாறு அவரை கேட்டுக் கொண்டார்கள். ஆண்டு விழா கூட்டம் துவங்கியது. தலைமையுரையாற்ற என்.எஸ்.கிருஷ்ணன் எழுந்தார். கலைவாணரின் பேச்சு கற்கண்டை போல் இனிமை யுடையது. எல்லோரும் அவரையே பார்த்தார்கள். கலைவாணர் தம் பேச்சை துவக்கினார். ……உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட மக்களிடையில் நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எங் கெல்லாம் சுற்றியிருக்கிறேன்... ஆனால் உங்களைப்போல் பரந்த நோக்கும் பெருங் குணமும் பெற்ற மக்களை நான் பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் இந்த காலத்தில் பொறhமை யும், பூசலுமே நிலவ காண்கிறேhம். ஆனால் நீங்கள் மட்டும் எளிமையாகவும், இனிமையாகவும் பழகுகிறீர்கள். உங்களிடம் எனக்கு நிரம்ப பிடித்தது இதுதான், நீங்கள் வண்டியில் யார் ஏறினாலும் சரி, நீங்கள் சொல்லக்கூடிய முதல் வார்த்தை …முன்னுக்கு வாங்கோ, முன்னுக்கு வாங்கோ† என்பதுதான். இந்த காலத்தில் யார்தான் இப்படி சொல்கிறhர்கள்†† என்று கூறினார். சபை முழுவதும் சிரிப்பொலி வெடித்தது*
Thanks: Dinakaran
|
|
|
|