![]() |
|
வருக என் நண்பனே! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வருக என் நண்பனே! (/showthread.php?tid=3532) |
வருக என் நண்பனே! - Nitharsan - 08-27-2005 வருக என் தோழனே! கனடா உனை விசா கொடுத்து அழைக்கிறது ஏனெனில்-எம் இனத்தில் இருந்து இன்னோர் எழுதப்படாத அடிமை அவனுக்கு தேவை!? ஆமாம்..... எம்மைத் தவிர வேற்றுவன் எவன்.. செய்வான் 24 மணிநேர சேவை அதனால் தான் வருக என் நண்பனே! வேலைவாய்ப்பு கனடாவில் வரிசையாய் இருக்கிறது... பள்ளி சென்று பட்டம் பெற்றவன் வேலையின்றி வரிசையில் நிற்கிறான் - ஆனாலும் உனக்கான தொழில் உனக்காகவே காத்திருக்கிறது வெள்ளையனும் கறுப்பினத்தவனும் கடைசி வரை செய்யாத வேலையெல்லாம் செய்வோமென்றான் ஈழத்தமிழன் அதனால் தான் என்னவோ!? - உனக்கு அன்பளிப்பாய் விசா... எனவே வருக என் நண்பனே! பள்ளியில் நீ படிக்கத் தேவையில்லை வேலைக்கான அனுமதியும் தேவையில்லை வேற்று நாட்டவருடன் பழக... ஆங்கிலம் கூடத் தேவையில்லை உனக்காக.... - இங்கே தொழிற்சாலைகள் தேம்பியழுகின்றன... உணவகங்கள் உண்மையில் காத்திருக்கின்றன... வேலை முகவரும் கண் துஞ்சி காத்திருக்கிறார் - அதனால் வருக என் நண்பனே! கள்ளு குடித்ததுக்காய் கட்டையால் அடி வாங்கிய நீ கஞ்சா அடிக்க கற்றுக் கொள்ள வேண்டுமா? கன்னியுடன் காமுறவேண்டுமா? களிப்புடன் இரவுகள் கழிய வேண்டுமா? காரில் கன்னியுடன் சுற்ற வேண்டுமா? டீஸ்கோவில் மாதருடன் ஆட வேண்டுமா? கலாச்சாரத்தைத் தூக்கி எறிய வேண்டுமா? பல்கலாச்சார சூழலில் - உன் கலாச்சராம் மறக்க வேண்டுமா? வருக என் நண்பனே! நீ நினைத்ததெல்லாம் சரியே! கனடா போய் காசு உழைக்கலாம் கஸ்டப்படும் குடும்ப நிலை மாற்றலாம் தேவையேற்படின்... உறவுகளுக்கும் உதவலாம் ஆனால்.... நினைப்பவை நடக்குமா? உன் கஸ்டத்தில் யாராவது பங்கெடுப்பாரா? உன் களைப்புக்கு யாராவது கஞ்சி தருவாரா? உன் நிலைதனையாவது உணர்வாரா? இந்த நிலை வேண்டுமெனில்.... வருக என் நண்பனே! கட்டுநாயக்க தாண்டியதும் கட்டுக் கட்டாய் பணமல்லவா பார்க்கிறது எங்கள் உறவுகள்! - நீ கட்டையில் போனால் கூட - உன் காப்புறுதிப்பணத்திற்காய் அலையுது சில மனித கூட்டம்! கடைசி வரை உன் நிலையறிய எவனும் தயாராய் இல்லை... அறிந்தாலும்.... அக்கறை கொள்ளவும் தயாரில்லை.... - எனவே! வருக என் நண்பனே! கனடா வந்த... களிப்பு மிகு இறுமாப்பில் கவிதை எழுதுவதாய் கடைசிவரை எண்ணாதே! என் கண்ணுக்குத் தெரியாத என் தேசத்தில் இருக்கும் என் சக இளைஞனே! நான் சொன்னவை யாதார்த்தமற்றவை என நீ கருதினால்.... ஒரு முறையேனும்... - கனடா வருக என் நண்பனே! கஞ்சி குடித்தும் களிப்புடன் கழியும் வாழ்க்கையை. காரில் சென்று காசு உழைத்து கட்டில்கள் வெறுமனே அறையிலிருக்க காரின் ஆசனத்தில்.. தூங்கி காலையேது மாலையேது என்று தெரியாமல் உழைக்க... நீ தயாரெனில்.... வருக என் நண்பனே! கடவுள் வந்து..... வரம் கொடுத்தாலும் - எம் சமூகம் மாறப்போவதிலலை அதனால் தான் சொன்னேன் - நீ மாறிவிடு என்று... - நீ உன் குடும்பத்துக்கு உறவுகளுக்கு உதவியதற்கு அக்கறை காட்டியதற்கு அவர்களில் அனுசரனை என்ன? - நீ முப்பது வயதாகியும் மணமாகவில்லை - உன் பணத்தில் தன் பிள்ளை - திரு மணம் முடித்து விட்டார்கள் - உன் உறவுகள்...! இவர்களை உணர... வருக என் நண்பனே! சத்தியமாய் யாரின் உணர்வுகளையும் நான் உடைக்க விரும்பவில்லை உண்மையை யதார்த்தத்தை கவியென்ற கருத்துக்குள் கருத்துடன் அடக்க நினைக்கிறேன்! காரணம்.......... வாய் மூடி நிதம் நிழல் யுத்தம் புரிவோர்.. நிஜங்களை சொல்லவே! வெறும் வார்த்தை ஜாலத்தில் லயித்திருந்தால்.. - அதை செயற்ப்படுத்த.... வருக என் நண்பனே! www.tamilamutham.net - அருவி - 08-27-2005 அருமை - Thala - 08-27-2005 அருமை.. அருமை - Vishnu - 08-27-2005 அருமை அருமை அருமை.. - Birundan - 08-27-2005 அருமையான கவிதை,உண்மைகள் கவிதை முழுதும் வழிகின்றது, வாழ்த்துக்கள். - KULAKADDAN - 08-27-2005 நல்ல அருமையான கவிதை நிதர்சன். நன்றி. - வெண்ணிலா - 08-27-2005 Quote:கஞ்சி குடித்தும் களிப்புடன் நன்றாக எழுதி இருக்கிறீங்க. தொடர வாழ்த்துக்கள் நிதர்சன் புலத்து நடைமுறையை வடித்திருக்கிறீங்கள்.
- Rasikai - 08-27-2005 கவிதை வெகு அருமை யதார்த்தமாக உள்ளது தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள் நிதர்சன். - Remo - 08-27-2005 அருமை - அனிதா - 08-27-2005 அருமையான கவிதை ..வாழ்த்துக்கள்.. - Jenany - 08-27-2005 உண்மையான கவிதை நிதர்சன் அண்ணா.. தொடர்ந்து எழுதுங்கள்..... - கீதா - 08-27-2005 உங்கள் கவிதைக்கு நன்றி |