![]() |
|
சிட்னி, சிங்கப்பூர், டோக்கியோ மீது தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சிட்னி, சிங்கப்பூர், டோக்கியோ மீது தாக்குதல் (/showthread.php?tid=3536) |
சிட்னி, சிங்கப்பூர், டோக்கியோ மீது தாக்குதல் - Mathan - 08-27-2005 போப்புக்கு அல்கொய்தா மிரட்டல்: சிட்னி, சிங்கப்பூர், டோக்கியோவை தாக்க வாய்ப்பு கத்தோலிக்கர்களின் புனிதத் தந்தையான போப்பாண்டவர் ஜோசப் பெனடிக்டுக்கு அல்கொய்தா கொலை மிரட்டல் விடுத்துள்ளது. வாடிகன் நிர்வாகத்துக்கு பேக்ஸ் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது. அரபி மொழியில் 3 பக்கம் கொண்ட இந்த மிரட்டல் கடிதம் பார்சிலோனாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக இத்தாலியும் வாடிகனும் செயல்பட்டு வருகின்றன. எனவே விரைவில் உங்களைத் தாக்குவோம் என அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி ஆகிய நகர்களைத் தாக்க அல்கொய்தா திட்டமிட்டு வருவதாக பிரான்ஸ் எச்சரித்துள்ளது. இதுவரை அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாக்கி வரும் அல்கொய்தா, ஆசிய நகர்களையும் தாக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இது குறித்து பிரான்ஸ் நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு நிபுணரும் நீதிபதியுமான ஜீன் லூயிஸ் கூறுகையில், டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகர்கள் அல்கொய்தாவின் தாக்குதல் பட்டியலில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நகர்களைத் தாக்குவதன் மூலம், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, உலக அளவில் பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியும் என அல்கொய்தா கருதுகிறது. குறிப்பாக ஜப்பானைத் தாக்கினால் தெற்காசியா முழுவதும் அதிர்ச்சியைப் பரப்ப முடியும் என அல்கொய்தா கருதுகிறது என்றார். thats tamil |