Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 263 online users.
» 0 Member(s) | 261 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,415
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,213
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,524
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  வணக்கம் நான் அண்ணாச்சி
Posted by: Annachi - 09-02-2005, 09:30 PM - Forum: அறிமுகம் - Replies (35)

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம் வணக்கம் நான் அண்ணாச்சி வரவேற்றுக்கொள்ளங்கோ
:wink: :wink: :wink: :wink: :wink:

Print this item

  அமெரிக்காவுக்கு இலங்கை உதவி....!
Posted by: tamilini - 09-02-2005, 06:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (26)

அமெரிக்கா சூறாவளி: 20 ஆயிரம் டொலர் சிறிலங்கா உதவி
அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை 25 ஆயிரம் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளது.


அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா வைத்தியர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான இயற்கையழிவு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் சிறிலங்கா வழங்கும் உதவிக்கும் அதன் அக்கறைக்கும் நன்றி தெரிவிப்பதாக சிறிலங்கா மற்றும் மாலைதீவிற்கான இயற்கை அனர்த்த விவகார பொறுப்பாளர் ஜேம்ஸ் எப். என்ட்விஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காக உதவும் சிறிலங்காவின் செயற்பாடுகள் இருநாட்டிற்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது சிறிலங்காவுக்கு உடனடியாக உதவி வழங்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

தகவல் புதினம்.

[size=12]20, 25 ஆயிரம் டொலர் என்பது நக்கல் தொகையா? - தவறான தகவலோ??

http://www.eelampage.com/?cn=19751

Print this item

  ஜப்பானியர்களின் ஓவர்டைம்
Posted by: SUNDHAL - 09-02-2005, 05:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

உழைப்பு..உழைப்பு. இதுவே ஜப்பானியர்களின் தாரக மந்திரம். இதை நிரூபிப்பது போல் ஜப்பானியர்களின் "ஓவர்டைம்' வருமானம் கடந்த ஆண்டு ஜீலை மாதத்தை விட இந்த ஆண்டு ஜூலையில் சராசரியாக 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 7,650.

ஜப்பானியர்கள் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக 10.2 மணி நேரம் "ஓவர்டைம்' செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக முழு நேர ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து பகுதி நேர ஊழியர்களை அதிக அளவில் நியமித்து வந்த ஜப்பான் நிறுவனங்கள் தமது போக்கை தற்போது மாற்றிக்கொண்டுவிட்டன. இப்போது முழு நேர ஊழியர்களின் சதவீதத்தை 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Print this item

  நல்லூர் திருவிழா
Posted by: Mathan - 09-02-2005, 03:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (19)

நல்லூர் திருவிழா

இன்று யாழ் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. இம்முறை 10ம் நாள் மஞ்ச திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. அதை இங்கே இணைக்கின்றேன். வேறு யாரிடமாவது மற்றய தினங்களுக்குரிய புகைப்படங்களோ அல்லது சாதாரண நாளில் எடுத்த படங்களோ இருந்தால் இணையுங்கள்.

<img src='http://img304.imageshack.us/img304/6721/nallurmanjam9at.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்பு???
Posted by: வினித் - 09-02-2005, 08:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் இலக்கில் விரிவாக்கப்பட்ட சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்பு


வே.பவான்


சிறிலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்பின் செயற்பாட்டின் அடிப்படை நோக்கம் அன்று தொட்டு இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளை இல்லாது ஒழித்தல், தமிழர்களுக்கு தமிழீழம் என்ற எண்ணக்கருவை ஒவ்வொரு தமிழனின் மனதிலிருந்தும் அகற்றல் என்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டது, செயற்பட்டுக் கொண்டு வருகின்றது எனலாம்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட புலனாய்வு கட்டமைப்பானது விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க கூடிய சரியான, நுட்பமான, திறன்பட்ட கட்டமைப்பாக இயங்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்தபோதிலும் முக்கியமான காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்ப காலத்திலேயே பொட்டம்மான் அவர்களின் தலைமையில் புலனாய்வு ரீதியில் சிறந்த விழிப்புணர்வைப் பெற்றிருந்தமையைக் குறிப்பிடலாம். எனவே புலிப்படைகளின் புலனாய்வு வல்லமைக்கு ஈடாக சிறிலங்கா அரசுக்கு தனது புலனாய்வுக் கட்டமைப்பை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதாவது, ஆரம்பத்தில் சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்பானது பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் குற்றவியல் விசாரணை திணைக்களமாக இருந்தது. (CID criminal Jnvest igation Department) இதன் அடிப்படை நோக்கம் குற்றவியல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தலுமாகக் காணப்பட்டது. ஆனால் அவ் அமைப்பு குற்றவியல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு மட்டுமாகவே செயற்பட முடிந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான திறமையை கொண்டிருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து 1985ம் ஆண்டு அரச தேசிய பாதுகாப்பு சபையின் NSC (Nationl Security Council) கீழ் முதல் தேசிய அமைப்பாக NIB (National Intelige nce Bureau) சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கமும் தமிழர் விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்ததை இலக்காகக் கொண்டது. ஆனால் இவ் NIB அமைப்பானது ஓரளவு வித்தியாசமான முறைகளைக் கையாண்டது. அதாவது தகவல் சேகரிப்பு, ஆய்வுத் தலைமைக்கு அனுப்புதல், மறைமுகச் செயற்பாட்டை மேற்கொள்ளுதல் என்ற படிமுறைகளைக் கையாண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்குச் சார்பாக செயற்படுகின்ற அமைப்புக்கள், மற்றும் தனி நபர்கள் பற்றிய விடயங்களும் புலிப்படையின் புலனாய்வு கட்டமைப்பு பற்றிய விடயங்களும் தகவல்களாக NIB ஆல் சேகரிக்கப்பட்டன. இவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு பின் இரகசிய மறைமுகச் செயற்பாட்டின் மூலம் அவ்வமைப்பை அல்லது அந்நபரை அல்லது அச்செயற்பாட்டை அழித்தது. ஆனால் Nஐடீ ஆனது தகவல்களைப் பல கோணங்களில் ஆய்வுக்குட்படுத்தும் திறமையில்லாததனாலும், தலைமைக்கு இடையிலான, சீரான தொடரான செயற்பாடு காணப்பட்டமையினாலும் NIB கட்டமைப்பு வெற்றியளிக்காமல் போனது.

இதையடுத்து அமெரிக்காவின் உளவுத்துறை "சி.ஐ.ஏ", இந்தியாவின் புலனாய்வுத்துறை "றோ", இஸ்ரேலிய இரகசிய சேவை ‘மொசாட்" போன்றதொரு புலனாய்வு கட்டமைப்பை புலிகளுக்கு ஈடாக அமைக்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டது. இதனால் பாரிய செலவில், விரிவானதொரு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி பொலிஸ் நிர்வாகத்தின் கீழும், படைத்துறை தலைமையகத்திற்குக் கீழும் பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் பின்வரும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

கிளர்ச்சி முறியடிப்பு பிரிவு CSU (Counter Subvevsire Unit). பயங்கரவாத புலன் விசாரணைப் பிரிவு TID (Terrorst Investigation Division). விசேட புலனாய்வுப் பிரிவு UNITE SIU (Special Investigation Unit). விசேட பிரிவு SB (Speecial Branch) போதைப் பொருள் தடுப்புப் பணியகம் PNB (Police Narcotics Bureau) ஏமாற்று மோசடி விசாரணைப் பிரிவு FIB (Frauol Investion Bureau) குற்றக் கண்டுபிடிப்பு பணியகம் CDB (Crim ed Investire Bureau)

இவ்அமைப்புக்களில் CDB ஆனது கொழும்பு நகரின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி செயற்பட்டு வந்தது. பின் இவ்வமைப்பு கலைக்கப்பட்டு தற்போது MPIU (Mountlarinia Polic Inteligence Uathering) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. MPIUI நேரடிக் கண்காணிப்பில் வழிநடத்தியவர்களாக இருந்தவர்கள் நிலாப்தீன், ஜெயரட்ணம் ஆகிய இருவரும். ஆனால் தற்போது இருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படைத்துறை தலைமையகத்தின் கீழ் பின்வரும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. இராணுவப்புலனாய்வுப் பிரிவு, கடற்படை புலனாய்வுப் பிரிவு, விமானப்படை புலனாய்வுப் பிரிவு இவ்வாறாக தமிழ்த் தேசியத்தை அழிக்கும் இலக்கில் சிறிலங்கா புலனாய்வுக் கட்டமைப்பு பொலிஸ் நிர்வாகத்தின் கீழும், படைத்துறை தலைமையகத்தின் கீழும் பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. தற்போது உள்ளக புலனாய்வு பணியகம் DII (Derectorete of Internal Intellgence) வெளிநாட்டு புலனாய்வு பணியகம் DFI (Derea torete of Foreign Intelligence) என்றவாறு இரு கட்டமைப்புக்களாக விரிவாக்கப்பட்டது.

இதில் DFI இன் வெளியக புலனாய்வு செயற்பாடுகளை எல்லா நாட்டிலும் உள்ள தூதுவராலயங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. DII இன் தலைமையகம் கொழும்பில் உள்ள கேம்பிறீச் பிளேசில் அமைந்துள்ளது. DFI இன் தலைமையகம் கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியா உயர் ஸ்தானிகாரியாலயத்திற்கு எதிரே பஸ் தரிப்பிடத்துக்குப் பின்புறமாக அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் தமிழர் தாயகத்தில் ஊடுருவியுள்ள அமைப்பாக னுஆஐ காணப்படுகின்றது. இதன் ஆரம்ப இயக்குனர் மேஜர் ஜெனரல் பலகல்ல ஆவார். பின்னர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன் நியமிக்கப்பட்டார். அதன் பின் பிரிகேடியர் கபில ஹெந்தவிதாரண நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது கபில ஹெந்தவிதாரணவும் ஆட்டம் காணத் தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

DMI அமைப்பானது பணத்திற்குச் சோரம் போபவர்களையும், தமிழ்த் தேசிய விரோதிகளையும் தன் நண்பர் குழுக்களாக இணைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போருக்கு எதிராக அவர்களைப் பயன்படுத்தி வருகின்றது. இவ்வாறு DMI இணைந்துள்ள நண்பர் குழுக்கள் புளொட் மோகன் குழு, கருணா குழு, ராசிக்குழு, டக்ளஸ் குழு போன்றது துரோகக் குழுக்களைக் குறிப்பிடலாம். னுஆஐ ஆனது தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பெறுமதி வாய்ந்த தகவல்களைத் திரட்டுவதற்கும், புலிகளுக்கு எதிரான நாச வேலைகளைச் செய்வதற்கும், நீண்ட வீச்சு, வேவு ரோந்து அணியின் LRRP (Long Range Reconnaissance Patrol) தாக்குதல் நடவடிக்கைக்கான இலக்குகளை வகுப்பதற்கும் இத்துரோகக் குழுக்களைப் பயன்படுத்துகின்றது. இவ்வாறாக சிங்களப் புலனாய்வுத்துறை துணைப்படையின் உதவியுடன் விரிவாக்கப்பட்டது.

ஆனால் இன்றைய சூழலில் இராணுவப் போர் ஓய்வில் இருக்க அரசியல் போரும், புலனாய்வுப் போரும் சிங்களப் படைக்கும் புலிப்படைக்கும் இடையே தலைதூக்கியுள்ளது. புலனாய்வுப் போரைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசானது தமிழீழ விடுதலைப்புலிகளைச் சின்னாபின்னமாக்கி தமிழர்கள் தமிழீழம் வென்றெடுப்பதைச் சீர்குலைக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய விரோதக் குழுக்களையும் இணைத்து இராணுவ புலனாய்வு கட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் அக்கட்டமைப்பால் புலிப்படையின் புலனாய்வு வல்லாதிக்கத்திற்கு எதிராக இன்று வரை நின்று பிடிக்கமுடியவில்லை. அதாவது சிறிலங்கா புலனாய்வு கட்டமைப்பானது தன் இராணுவ உளவாளிளையும், துணைப்படை நண்பர்களையும் இழந்து செயலூக்கம் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


இது பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்
http://www.battieezhanatham.com/2005/

Print this item

  யு.எஸ்., ஓபன் டென்னிஸ்
Posted by: Rasikai - 09-01-2005, 09:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

<img src='http://img210.imageshack.us/img210/3131/050121s5ve.jpg' border='0' alt='user posted image'>

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் வரலாற்றில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனை படைத்தார் சானியா மிர்சா.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் நமது நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, 81வது நிலையில் உள்ள இத்தாலியின் மரியா எலினா கேமரினை சந்தித்தார். இதில் சானியா 64 ; 16 ; 6 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று யு.எஸ்.ஓபன் டென்னிஸ் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி தொடரில் அபாரமாக ஆடி வரும் சானியா, மூன்றாம் சுற்றில் 43வது நிலையில் உள்ள பிரான்சின் மரியான் பர்டோலியை சந்திக்கிறார்.

Print this item

  ஆஸ்திரேலியாவில் மீனா பட்ட பாடு!
Posted by: Rasikai - 09-01-2005, 09:14 PM - Forum: சினிமா - Replies (18)

<img src='http://img219.imageshack.us/img219/1305/meenar5000vg.jpg' border='0' alt='user posted image'>

கண்ணழகி மீனா இப்போதெல்லாம் ரொம்பவே ஓய்வாக இருக்கிறார். அதற்காக கவலைப்படாமல் ஜாலியாக ஒவ்வொரு நாடாக சென்று ஊர் சுற்றிப் பார்த்து என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு அவர் காலடி பட்ட நாடுகளை விட போகாத நாடுகளின் எண்ணிக்கை ரொம்பக் குறைவாம்.

திரையுலகை சுற்றி வந்த இந்த தெத்துப் பல் அழகி, சமீபத்தில் அம்மா, அப்பாவுடன், ஹாயாக ஆஸ்திரேலியா சென்று வந்தார். அங்கு அவருக்கு ஒரு பயங்கர அனுபவம் நேர்ந்ததாம்.

அது குறித்துக் கேள்விப்பட்டு மீனாவை சந்தித்தோம். அந்தச் சம்பவம் குறித்துக் கேட்டாலே ஷாக் படத்தில் பயந்தது மாதிரி அவரது முகம் பேயறைந்தது போல மாறிவிடுகிறது. அந்த நிஜ திகில் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் மீனா

''நான் எல்லா நாடுகளுக்கும் போய் விட்டேன். போகாத ஒரே பெரிய நாடு, அதேசமயம் எனக்கு ரொம்பப் பிடித்த நாடு ஆஸ்திரேலியா மட்டும்தான். இதனால் சமீபத்தில் நான், அம்மா மல்லிகா, அப்பா துரைராஜ் ஆகியோர் அங்கு சென்றோம்.

ஆஸ்திரேலியாவின் பல ஊர்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்தோம். மொத்தம் 17 நாள் அங்கு சுற்றுப்பயணம் செய்தோம். அந்த நாட்டின் கிளைமேட், மக்கள், ஊர் என அத்தனையுமே அழகு, அனுபவித்து சுற்றிப் பார்த்தேன்.

ஆனால் என்னால் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமும் அங்கு கிடைத்துவிட்டது... ஏற்கனவே நான் 'பங்கி ஜம்ப்' செய்துள்ளேன். அந்த அளவுக்கு தைரியம் உள்ளவள் நான். இந்த முறை கடலுக்கடியில் சென்று வரும் 'ஸ்கூபா டைவிங்' செய்ய முடிவு செய்தேன்.

எனது ஆர்வத்திற்கு அம்மாவும், அப்பாவும் எப்போதுமே தடை போட மாட்டார்கள். கடலுக்கடியில் சென்று வர அவர்கள் பச்சைக் கொடி காட்டினர். ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளதா என்பது குறித்த சோதனைகளை எல்லாம் செய்தவுடன் நான் கடலுக்கடியில் செல்ல அந்த விளையாட்டு நிர்வாகிகள் அனுமதி அளித்தனர்.

ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் முதலிலேயே பயம் காட்டினார்கள்.

ஆனால் ஏதோ ஒரு தைரியத்தில் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்திக் கொண்டு கடலுக்குள் போய் விட்டேன். துணைக்கு கைடுகள் யாரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

உள்ளே போனபோது மிகவும் அற்புதமாக இருந்தது. பவளப் பாறைகள், அழகழகான மீன்கள் (உங்களை விடவா?) என ஒரே ஜாலியாக இருந்தது. ஆழ்கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென மூச்சுத் திணறத் தொடங்கியது.

திணறல் மிகவும் அதிகரித்து ஒரு கட்டத்தில் அரை மயக்க நிலைக்குப் போய்விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் தத்தளித்துவிட்டேன். உடனே மேலே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்கலாம் என்று தோன்றியது. ஆனால், அதற்கான சக்தி என்னிடம் இல்லை.

மூச்சு வாங்குவது தடைபட்டதால் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டேன். ஒரு வழியாக என் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு மேலை இருந்தவர்களுக்கு சிக்னல் தந்தேன்.

அவர்கள் மிக வேகமாக செயல்பட்டு உடனடியாக என்னை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மூச்சு வாங்க முடியாமல் தவித்த எனக்கு முதலுதவி கொடுத்தனர். அதன் பின்னர் தான் எனக்கு உயிரே வந்தது.

அவ்வளவுதான், நாம் காலி என்றுதான் நினைத்தேன். அதிர்ஷ்டவசமாகத் தான் உயிர் தப்பி இருக்கிறேன்.

இதற்குப் பிறகும் அம்மா, அப்பா என்னை ஆஸ்திரேலியாவில் சுற்ற விடுவார்களா? உடனே மூட்டையைக் கட்டிக்ö காண்டு சென்னை வந்து சேர்ந்தோம்.

நான் ரசித்த ஆஸ்திரேலியா என்னை காவு வாங்கப் பார்த்ததை நினைத்தால் இன்னும் கூட உடம்பு ஜில்லிட்டுப் போகிறது என்று கூறி மூச்சு வாங்க நிறுத்தினார் மீனா.

Print this item

  அனைவருக்கும் வணக்கம் நான் தீபா
Posted by: தீபா - 09-01-2005, 08:49 PM - Forum: அறிமுகம் - Replies (43)

வணக்கம்

Print this item

  கைத்தொலைபேசிகள்
Posted by: shanmuhi - 09-01-2005, 07:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (36)

[size=18]<b>கைத்தொலைபேசிகள்</b>

<img src='http://www.bangladeshinfo.com/it/image/cebit_2004/various_mobilephones.jpg' border='0' alt='user posted image'>


கைக்குள் அடங்கிவிட்ட கைத்தொலைபேசி
வைப்பதற்கு இடமில்லை என்றுதானோ
கைகளுக்குள் கைதாகிப் போய் விட்ட நவீனமான
கைத் தொலைபேசிகள் பலவித வடிவங்களில்

நிமிடத்துக்கு ஒருதரம் நித்தமாய்
நேர காலமின்றி சிணுங்கிக் கொள்கின்ற சிணுங்கள்கள்
அழகிய மெலோடிகளாக தென்றலோடு கலந்து வந்து
பாலமாய் இணைத்து வைக்கின்ற சங்கமங்கள்

இக்கட்டான நிலையிலும் கரம் கொடுக்கின்ற
இங்கிதமான கைத்தொலைபேசிகள்
அங்கிருந்து இங்குமாய், இங்கிருந்து அங்குமாய்
அடிக்கடி வருகின்ற அழைப்புக்கள்

உற்றார் உறவினர் வெளிநாடு என்றும்
முகம் அறியா முகவரி அறியா மனிதர்களிடையே
மணிக்கணக்கில் உரையாடுகின்ற பொழுதுகளுக்குள்
தன்னிலை மறந்து சரணாகதியாகிப்போய்விட்ட நிலை

<b>உறவாய் உதவியாய் வந்த தொலைபேசிகள்
உறவாடி களிக்கும் நிலையிலும் வீட்டில்
உறவுகளோடு அமர்நது உரையாடுவதற்கு
உள்ளமதில் நேரமில்லையாகிப்போன நிஜங்கள்</b>

Print this item

  சந்திரமண்டல மக்களின் வீரப்ப சுவாமி....
Posted by: ப்ரியசகி - 09-01-2005, 06:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (13)

<img src='http://img54.imageshack.us/img54/2682/naamloos6pk.png' border='0' alt='user posted image'>

இந்திய காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட வீரப்பன்...சந்திரமண்டல வாசிகளால் "வீரப்ப சுவாமி"என்னும் பெயரில் காவல் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார்.
அவர் உயிரோடு இருக்கையில் அவர்களுக்கு உணவு மற்றும் பல உதவிகளை செய்த காரணத்தினாலேயே அவரை வீரப்பன் வாழ்ந்த இடமான சந்திரமண்டலத்தின் காவல் தெய்வம் என வழிபடப்பட்டு வருகிறார்.

Print this item