Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 355 online users.
» 0 Member(s) | 352 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,415
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,211
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,524
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  வரவேற்பீர்களா.
Posted by: அகிலன் - 09-04-2005, 09:39 AM - Forum: அறிமுகம் - Replies (28)

வணக்கம். நான் அகிலன் நீண்ட காலமாக யாழ்களத்துக்கு விருந்தாளியாக வருபவன். அங்கத்துவனாக ஆசைப்பட்டு இணைந்துள்ளேன். வரவேற்பீர்களா?

Print this item

  மட்டக்களப்பில் போராளி வீரச்சாவு
Posted by: malaravan - 09-04-2005, 07:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடியிலுள்ள பட்டிருப்பு கோட்ட அரசியல் பணிமனை மீது தேசவிரோதிகள் மேற்கொண்ட தாக்குதலில் போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். இன்று காலை ஞாயிற்றுக்கிழமை 6.25 மணியளவில் சிறீலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் இரண்டு உந்துருளிகளில் வந்த நான்கு தேசவிரோதிகள் முதலில் துப்பாக்கிப் பிரயோகத்தையும் பின்னர் கைக்குண்டையும் வீசிவிட்டு அலுவலகத்தினுள் நுழைந்து அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இருந்த தளபாடங்களை பெற்றோல் ஊற்றி எரியுூட்டினர். அச்சமயம் அரசியல் பணிக்காக அலுவலகத்தில் தங்கியிருந்த அருள்நேசன் என்ற போராளி தேசவிரோதிகளின் துப்பாக்கிச்கூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வேளையில்வீரச்சாவடைந்தார்.தேசவிரோதிகளால் சுடப்பட்ட ஒன்பது துப்பாக்கிக் குண்டுகள் உடலில் துளைத்துள்ளது. இச் சம்பவம் குறித்து பட்டிருப்பு கோட்ட அரசியல் பணிமனை பொறுப்பாளர் கமலக்கண்ணன் தெரிவிக்கையில்: இந்தக் கோட்ட அலுவலகம் மீது இடம்பெற்ற நான்காவது தாக்குதல் இதுவாகும். இதற்கு படையினரும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தேச விரோத ஆயுதக்குழுக்களுமே பொறுப்பு என்றும் இத்தாக்குதல் தொடர்பாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மலரினி மலரவன்
www.tamilkural.com

Print this item

  IP இலக்கம்களை வைத்து
Posted by: Vishnu - 09-03-2005, 09:20 PM - Forum: இணையம் - Replies (17)

IP இலக்கங்களை வைத்து எந்த நாட்டுக்குரிய?? அதில் எந்த நகரத்துக்குரிய IP இலக்கம் என்று கண்டு பிடிக்க முடியுமா?? :roll:

Print this item

  ஆறு தவறு ஆறு!
Posted by: vasanthan - 09-03-2005, 05:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (13)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரோமானியத் தத்துவஞானி சிசரோ மனிதனுடைய தவறுகளாக அல்லது குறைகளாக ஆறு விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

1)மற்றவர்களை இருட்டடிப்புச் செய்தால் தங்களுடைய மதிப்பும் கௌரவமும் உயர்ந்து விடும் என்று எண்ணுவது.

2)மாற்ற முடியாத அல்லது திருத்த முடியாத விடயங்களுக்காக வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது.

3)தன்னால் செய்யமுடியவில்லை என்பதற்காக அந்தக் காரியத்தை எவரும் செய்ய முடியாது என்று சாதிப்பது.

4) அற்ப விடயங்களை ஒதுக்கித் தள்ள மனமில்லாமல் சஞ்சலப்படுவது.

5)படித்து,பயின்று,மனத்தைப் பண்படுத்திக் கொள்ளாமல் காலத்தை விரயாமாக்குவது.

6)தான் நம்புவதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்றும் தான் வாழ்கின்ற படியே மற்றவர்களும் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது.

சுட்டது
தினகரனிலிருந்து(செந்து}ரம்)

Print this item

  மனிதன், சிம்பன்சி மரபணுவில் 96 சதவீத ஒற்றுமை
Posted by: SUNDHAL - 09-03-2005, 03:16 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (8)

மனிதனுக்கும் சிம்பன்சி குரங்குக்கும் இடையே மரபணு அமைப்பில் 96 சதவீத ஒற்றுமை இருப்பதாக, இத்துறை ஆராய்ச்சி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இரு உயிரினங்களுக்கும் இடையே டி.என்.ஏ., மூலக் கூறுகளில் மிகச்சிறிய அளவு வித்தியாசமே காணப்படுகிறது என்றும், இனப்பெருக்கம், மூளை வளர்ச்சி, நோய் தடுப்பு தன்மை, நுகரும் தன்மை ஆகியவற்றில் மட்டுமே வித்தியாசம் உள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

சர்வதேச அறிவியல் சங்கம் ஒன்று சிம்பன்சி மரபணு பற்றி விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை "நேச்சர்' என்ற பத்திரிகையில் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு முன் சுண்டெலி, எலி, மனிதன் என மூன்று உயிர் இனங்களின் மரபணு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான்காவதாக சிம்பன்சி குரங்கின் மரபணு ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனிதன் உருவானான் என்று அறிவியல் உலகம் கூறிவருகிறது. 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த பரிணாம வளர்ச்சியின் துவக்கம் இருந்ததாகவும் அறிவியல் அறிஞர்கள் கூறி வருகின்றனர். பல லட்சம் ஆண்டுகள் சென்ற பிறகும் மனிதன் மற்றும் சிம்பன்சி இடையே மரபணு ஒற்றுமை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவேறு மனிதர்களின் மரபணுவுக்கு இருக்கும் வேற்றுமையை விட 10 மடங்கு அதிகமாகவே மனிதன்சிம்பன்சி மரபணு வேற்றுமை உள்ளதாம். எலி மற்றும் சுண்டெலி மரபணு வேற்றுமையை விட மனிதன்சிம்பன்சி மரபணு வேற்றுமை 10 மடங்கு குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனினும், மனிதன்சிம்பான்சி மரபணுவில் உள்ள சிறிதளவு வேற்றுமை குறித்து தீவிர ஆய்வு நடத்த அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலை.,யை சேர்ந்த சிமோன் பிஷர் கூறுகையில், ""மனிதன்சிம்பன்சி மரபணுவில் உள்ள சிறிதளவு வேற்றுமை குறித்து ஆராய்ச்சி நடத்துவதே எதிர்கால சவாலாக அமையும். மனிதனிடம் உள்ள பலதரப்பட்ட மொழியாற்றல், தோற்றத்தில் உள்ள தனித்தன்மை ஆகியவை குறித்தே எதிர்காலத்தில் விரிவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

மனிதனின் மூளை அமைப்பு அளவில் பெரியதாகவும், அதே நேரத்தில் மிக நுண்ணியதாகவும் அமைந்துள்ளது. கருவில் இருக்கும் போதும், சிசு பருவத்திலும் மூளை வளர்ச்சியடைவதால் மரபணு குறித்த ஆராய்ச்சி மிக கடினமாக உள்ளது. மனிதன் பிற மரபணுக்களை வழி நடத்தி செல்லும் முக்கிய மரபணு. அதாவது மனிதனிடம் உள்ள சிறப்புத் தன்மையை வளர்ச்சியடைய செய்யும் மரபணு சிம்பன்சியை விட மனிதர்களிடம் நன்கு வளர்ச்சியடைகின்றன.

அடுத்ததாக மரபணுவில் உள்ள நோய் தடுப்பு தன்மையில் மனிதனுக்கு உள்ள மூன்று முக்கிய மூலக் கூறுகள் சிம்பன்சி குரங்கிடம் இல்லை. இதற்கு மாறாக நினைவு திறனை பாதித்து மூளை மழுங்க செய்யும்

"அல்சீமர்' நோயை தடுக்கும் மரபணு மனிதனிடம் இல்லை. இந்த மரபணு விலங்குகளிடம் உள்ளது.

மனிதனின் மரபணுவில் உள்ள "வொய்' ஆண் பால் குரோமசோம்கள் தன்னுடைய வளர்ச்சியை நிலைநிறுத்தி 6 லட்சம் ஆண்டுகளில் 27 துடிப்பான மரபணு குடும்பங்களை உருவாக்கியுள்ளன. ஆனால், சிம்பன்சி மரபணுவில் இந்த "ஓய்' குரோமசோம்கள் சில மாறுதல் அடைந்தும், சில குரோமசோம்கள் செயலற்றும் போய்விட்டன.

இதற்கு முன் மனிதனின் மரபணுவில் உள்ள "ஒய்' குரோமசோம்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து செயல்படும். டி.என்.ஏ., மூலக் கூறுகளில் ஏற்படும் சிதைவுகளை இந்த செயல்பாடு தான் சரி செய்ய வேண்டும். இந்த செயல்பாடு "ஒய்' குரோமசோம்களில் இல்லை என ஆய்வுகள் தெரிவித்து வந்தன.

தற்போது வெளியான ஆய்வின் மூலம் இந்த செயல்பாடு மனிதனின் மரபணுவில் உண்டு. சிம்பன்சி மரபணுவில் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஒயிட்ஹெட் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டேவிட் பேஜ் என்பவர் கூறுகையில், ""மனிதன் மற்றும் சிம்பன்சிக்களிடையே இணையை தேடும் விஷயத்தில் உள்ள வேற்றுமையே பல விஷயங்களை தெளிவுபடுத்தும். ஆண் மற்றும் பெண் சிம்பன்சி குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையை தேடுவதில் ஆர்வம் கொண்டவை. பால் உணர்ச்சியை துõண்டும் மரபணுவில் ஏற்படும் நிர்பந்தமே இதற்கு காரணமாக அமைகிறது. இந்த விஷயம் மனிதனின் மரபணுவில் குறைவாக உள்ளது. இதனால் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது,'' என்றார்.

Print this item

  'தனமா? - சீ-தனமா?"
Posted by: tamilini - 09-03-2005, 01:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (16)

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில், நாம் இப்போது காலடி எடுத்து வைக்கின்றோம். இதே செப்டெம்பர் மாத ஆரம்பத்தில்தான் தமிழீழத்தின் சமுதாய கொடுமை ஒன்றிற்கு சாவு மணி அடிக்கின்ற சரித்திரத்தின் ஆரம்பமாகவும், அத்திவாரமாகவும் அமைந்துள்ளது. ஆமாம், செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி - 1995ம் ஆண்டன்றுதான் முதன் முதலாக - ~மணக் கொடைத் தடைச் சட்டம்| என்கின்ற சீதனத் தடைச் சட்டம் தமிழீழத்தில் அமுலாக்கப்பட்டது.

'தமிழீழ விடுதலைக்கான போராட்டம், மண் விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான்! - என்று எம்மில் பலர் இன்னமும் எண்ணியும், எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம் அன்று! பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்கபேதம்" போன்ற பல சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ்மொழி மீட்பு, மண்மீட்பு, நெறிமீட்பு போன்றவற்றிற்கான போராட்டங்களையும் ஒருங்கு சேர விடுதலைப் புலிகள் இயக்கம் நடாத்தி வருவதை நாம் இந்த வேளைகளில் சுட்டிக் காட்ட விழைகின்றோம். ஆனால் சிறிலங்கா அரசுகளின் தமிழின அழிப்பு யுத்தத்தை தம் ஆயுதப் போராட்டம் மூலமாக விடுதலைப் புலிகள் முகம் கொடுத்துப் போராடியது மட்டும்தான் பிறரின் பார்வையில், ஏன் எம்மவரின் கண்களில் கூடத் தெரிகிறது. முன்னைய சிறிலங்கா அரசுகள் தொடுத்த ஆயுதப் போர்களுடன் பொருளாதாரத் தடை, உணவுத்தடை, மருந்துத்தடை போன்ற உடல் உளவியல் ரீதியான போர்களையும் முகம் கொடுத்துப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் எம்மவரிடையே பரவிக் கிடக்கும் சமூக அநீதிகளையும் ஒருங்கு சேர எதிர்த்துப் போராடி வருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம்.

ஈழத்தமிழன் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் திணிக்கப்பட்டதன் காரணம் அவன் யாழ்ப்பாணத் தமிழன் என்பதாலோ, மட்டக்களப்பு தமிழன் என்பதாலோ, அல்லது அவன் மன்னார் வன்னித்தமிழன் என்பதாலோ அல்ல அவன் தமிழன் என்பதால் மட்டுமே! தமிழன் தமிழனாக வாழ்வதாலும், அவன் பேசுவது தமிழ் மொழியாக இருப்பதாலும், அவனுக்கு மதங்களைக் கடந்த தனித்துவமான பண்பாடும், நாகரீகமும் இருப்பதனாலும், அவனுக்கென்று ஒரு பாரம்பரிய புூமி வாழ்விடமாக இருப்பதனாலும் அவனுடைய இனம் ஒரு தேசிய இனமாக இருப்பதனாலும்,

அவனை அந்தத் தமிழனை, அவனது மொழியை, அவனது பண்பாட்டை அவனது நாகரிகத்தை, அவனது பாரம்பரிய மண்ணை அவனது இனத்தை,

ஒழிப்பதற்காக - அழிப்பதற்காக - மாறிமாறி வந்த சிங்கள அரசுகள் தங்கள் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டன. இவை அனைத்தையும் எதிர்த்துப் போராடியது மட்டுமல்லாது, தனது இனத்திலேயே காலகாலமாக புரையோடிப் போயிருக்கும் பல சமூக அநீதிப் புண்களுக்கும் மருத்துவம் செய்ய வேண்டிய தார்மீக கடமையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு உண்டு.! அதில் ஒன்றுதான் இந்த ~மண்கொடைத் தடைச் சட்டம்| என்கின்ற சீதனத் தடைச் சட்டம்! தன்நாடு மட்டுமல்ல, தனது இனமும், மொழியும், பண்பாடும், கலைகளும் உண்மையாக முழுச் சுதந்திரத்தைப் பெற வேண்டும்; என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவன் மேற்கொண்ட, மேற்கொண்டுள்ள செயல்பாடுகளில் ஒன்றுதான் இந்தச் சீதனத் தடைச்சட்டம்!

தமிழ்ப் பெண்ணைப் புூச்சூடிப் - பொட்டு வைத்து -பொன் நகையால் அலங்கரித்து - பட்டு உடுத்தி, பாட்டெழுதி மெட்டமைத்து, போற்றிப் பாடிப்புகழ்ந்து வந்தாலும் ~பெண்அடிமை| என்ற பிற்போக்குவாதச் சிந்தனையின் அடிப்படையில்தான் எமது தமிழ்ப் பெண் இனம் வாழ்ந்து(?) வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக் கொடுமைகளின் வெளிப்பாடு ஒன்றுதான் கட்டாயச் சீதனத்தின் கொடுமை!

சீதனத்தின் நன்மை தீமைகளை நாம் ஆராயப் போவதற்கு முதல் இதற்கு அடிப்படையாக விளங்கும் ஆணாதிக்கம் -பெண்ணடிமைத் தனம், சமூகவியலின் பொருளாதாரம் போன்றவற்றைச் சற்று விளக்கமாகத் தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

~பெண்ணியம்| குறித்து ஆய்வாளரான ~கேட் மில்லட்| என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் ~பால்வகை| என்பது ஆண், பெண்ணை அதிகாரம் செய்யும் பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் ~பால்வகைப்| பிரிவு என்பது! ஆண்தனத்துக்குரிய சமூகக் களமாக ‘இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம் கல்வி போன்றவற்றை முன்பு தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான். பெண்ணுக்கு ~இல்லம்| என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான்.

அதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண், சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப் பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும் போது அது அவளைச் சுய சிந்தனை இல்லாதவளாக, ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்குத் துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு ~குடும்பம்| என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனம், கருத்துருவம் (IDEOLOG), உயிரியல் (BIOLOGICAL), சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (CLASS), பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION), சக்தி (FORCE) மானுடவியல் (ANTHROLOGY), உளவியல் (PHYCHOLOGY) என்ற பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ~கேட் மில்லட்| மேலும் குறிப்பிடுகின்றார்.

மேலைத்தேய ஆய்வு இவ்வாறு இருக்கையில், எமது தமிழ்ச் சமுதாயத்தில் இந்தப் பண்பு குறித்துச் சற்றுத் தர்க்கிப்போம். தமிழ் நு}ல்களில் மிகப்பழமை வாய்ந்ததாக கருதப்படும் தொல்காப்பியத்தின் நு}ற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும் - பெண்ணடிமைத் தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தான் எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய பெண்மணியான ~கேட் மில்லட்டின்| மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக, மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் சான்று காட்டி நிற்கின்றது. உதாரணமாக தொல்காப்பியர் ஆண்மகனின் இயல்பைப் பற்றிக் கூறும் போது,

'பெருமையும், ஊரனும் ஆடூ உ மேன" (தொல்காப்பியம்-பொருள்-களவு 7)

என்று உயர்த்திக் கூறுகின்றார். பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும் போது,

'அச்சமும் நாணமும் மடனம் முந்துறல் நிச்சமும் பெண்பாற் குரிய" -

என்று தொல்காப்பியர் கோடு கீறி வரையறுக்கின்றார். இதன் அடிப்படையில் ஆண்மகன் உரமுடையவனாகவும், பெருமைக்கு உரியவனாகவும் காட்டப்படுகின்றான். பெண்ணோ, அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (The Four sex), இரக்கம் உடையவளாக (The Gentle sex), மெல்லியளாக (the softer sex), உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக - செயல் திறம் அற்றவளாக (The weaker sex) உருவாக்கப்படுகின்றாள்.

மேலும் தொல்காப்பியர் இல்லத் தலைவிக்கு உரிய பண்புகளைக் கூறும் போது,

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்,

மெல்லியர் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்

-(தொல்காப்பியம்-பொருள்- கற்பு-11) என்று வரையறுக்கின்றார். அதாவது இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும,; நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், மென்மையும், பொறுமையும் மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்து சுற்றம் ஓம்புபவளாகவும் இருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். அது மட்டுமல்ல நேயர்களே, கணவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம் - விலைமாதர்களிடம் சென்று வரும்போதும் மiவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தொல்காப்பியர் கூறுகின்றார்.

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ~ஆண்மைய வாதம்|, அன்றைய தொல்காப்பியம்- மற்றும் சங்கக் கால இலக்கியங்களில் இருந்து இன்றைய படைப்பிலக்கியம் வரை காணக் கூடியதாக உள்ளது. கோவலனின் பரத்தன்மையைப் பொறுத்துக் கொண்ட கண்ணகியைப் போற்றுவதை நாம் சிலப்பதிகாரத்தில் கூட காண்கின்றோம்.

பருவம் என்றால் என்ன? - என்பதை ஒரு புதுக்கவிதை அழகாக சொல்கிறது.

'பருவம் என்றால்

ஆணுக்குச் சிறகுகளும்

பெண்ணுக்கு விலங்குகளும்

உருவாகும் காலம்."

இன்று இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளிலும், வெளிவருகின்ற தமிழ் திருமண விளம்பரங்களை நேயர்கள் பார்த்திருப்பீர்கள். சாதி-சமயக் குறிப்புகளோடு, மணமகள் என்ன நிறத்தில் - என்ன அளவில் எப்படி இருக்க வேண்டும் என்றுதான் விளம்பரங்கள் வெளி வருகின்றன. ஆனால் எந்த ஒரு பெண்ணும் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவன் இந்த உயரத்தில், இந்த நிறத்தில் இந்த உருவத்தில் இருப்பவனாக இருக்வேண்டும் என்று எளிதில் விளம்பரம் செய்ய முடியாத நிலைதான் இன்றைய யதார்த்த நிலை!

ஆரியர்கள் வருகைக்கு முன் தாய்வழிச் சம்பிரதாயமே பழங்குடி மக்கள் சமுதாயங்களில் நிலவி வந்திருக்கின்றன என்பதற்கு தகுந்த சான்றுகள் உள்ளன. அன்றைய தாய்வழிச் சம்பிரதாயத்தில் பெண் வீட்டை விட்டுப் போகமாட்டாள். அவள் பிறந்த வீடு அவளுக்கு உரிமையுள்ள வீடு. அவளை மனைவியாக ஏற்றுக் கொள்பவன் அவளது வீடு தேடி வந்து அங்கேயே வாழ்வான். - இந்த வழக்கம் இன்று தமிழ் நாட்டில் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாலும் தமிழீழத்தில் மாறாமல் - அப்படியே இருப்பதை நேயர்கள் அறிவீர்கள்!

இனிச்சற்று ஆழமாக -தாய்வழிச் சம்பிரதாயத்தையும் சீதன வழக்கு முறையையும் பற்றிச் சிந்திப்போம்!

ஈழத்தமிழ் மக்களினதும் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் மக்களினதும் சீதன முறைமையைப் பற்றிச் சுருக்கமாக - அதே வேளை தெளிவாக கூற வேண்டுமானால் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ~சுதந்திர வேட்கை|, ~உடையாத விலங்கு| போன்ற நு}ல்களை மேற்கோள் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனப் பார்வையையும், செயல்பாட்டையும், தமிழ் மக்களின் சீதன முறையின் நிறைகுறைகளையும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் ஒரு தெளிவான பார்வையுடன் விளக்குகின்றார். அவருடைய பல கருத்துக்களுடன் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

திருமணத்தின் போது பெண்களுக்கு சீதனம் வழங்குகின்ற முறையை நாம் ஆராய்ந்து பார்த்தால் அது குறிப்பாக - யாழ்ப்பாணச் சமூகத்தில் மிகவும் ஆழமாக வேரோடிப் போய் நிறுவன மயப்பட்ட வழக்கமாக இருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய சொத்துடமைச் சட்டமாகிய தேச வழமைச் சட்டக் கோவையில், இந்த சீதன முறையும் ஒரு சமூக ஒழுங்கு முறையாகவே கொள்ளப் படுகின்றது. இந்தச் சொத்துடமை சட்டத்தின்படி ஒரு பெண் தனது தாய்வழியாகப் பெறுகி;ற சொத்துக்களை பேணுவது குறித்த விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. தேசவழமைச் சட்டத்துக்கு கிட்டத்தட்ட முந்நு}று ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால் தாய்வழிச் சொத்துடமையின் மூலம் இதற்கும் அப்பாலானது யாழ்ப்பாணத்து சீதன வழமையின் வரலாற்று வேரும் ஆழமானது. பத்து நு}ற்றாண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய தமிழர்களிடமிருந்தே இந்த வழக்கு முறை தோன்றியிருக்கலாம், என்ற கருத்தும் உள்ளது. பின்னாளில் காலனித்துவ வாதிகள் இந்தச் சொத்துடைமைச் சட்டத்தைத் திருத்திய போதும் பெண்களுக்கு சீதனம் வழங்கும் மரபுமுறை அடிப்படையில் மாறவேயில்லை. தமிழ் சமூகத்தில் நிலையுூன்றி - நீடித்து வருகின்ற சீதன முறைமை இன்றும் இன்றும் தமிழ் மக்களின் வாழ்வை நிர்ணயித்து வருகின்ற சக்தியாகவே விளங்குகின்றது. இந்தப் பிரச்சனையின் அடிப்படையில்தான் ஒரு தமிழ்ப் பெண்ணுடைய சமூக அந்தஸ்தும் அவளுடைய சமூகப் பொருளாதர வாழ்வும் நிர்ணயமாகின்றது.

சீதன வழக்கு முறையானது யாழ்ப்பாண சமூகத்தின் சமூக-பொருளாதார வாழ்விற்கு ஓர் அச்சாணியான பிரச்சனை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ~ஒரு குடும்பத்தின் பாரம்பரிய சொத்துடைமைகளே பெண்ணுக்கு சீதனமாக வழங்கப் படுகின்றது.| என்றும், ‘சீதனமுறை அகற்றப்பட்டால் இந்தச் சொத்துரிமையை பெண்கள் இழக்க நேரிடும்| என்றும் சீதனத்திற்கு ஆதரவாக வலுவான கருத்துக்களும் உண்டு. அத்துடன் பொதுவாகவே அது ஒரு கட்டாயச் சேமிப்பாகத் தொடங்கி ஒரு சமூகத்தின் நல்ல பொருளாதாரக் கட்டுமானத்திற்கு உதவுகின்றது|- என்று சீதனத்திற்குச் சார்பான தர்க்கங்களும் உண்டு.

ஆனால் மணமகன்களிடமிருந்தும் அவர்களது - குடும்பங்களிடம் இருந்தும், மட்டுக்கு மீறிய அளவில் மிகுந்த பேராசையுடன் எழுப்பப்பட்ட சீதன வற்புறுத்தல்கள் - பல குடும்பங்களைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய சமூகப் பிரச்சனையயாக சீதனக் கொடுமை உருவாகுவதற்கும் வழிவகுத்தன. ~சீதனக் கொடுமை அழிக்கப் படவேண்டும்| என்று ஏற்கனவே 1992ல் சர்வதேச மகளிர் மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தமாறு தமிழ்ப் பெண்கள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கை தேசியத் தலைவருக்கு சமர்ப்பிக்கப் பட்டபோது முறையான நடவடிக்கை எடுப்பதற்கு அவர் முடிவு செய்தார்.

முதலில் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப் பட்டன. இப்பிரச்சனை குறித்துப் பகிரங்க விவாதங்களும், கூட்டங்களும் கிராமம் கிராமமாக நடந்தன. பாடசாலைகள், - கல்லு}ரிகள், - பல்கலைக்கழகம் மற்றும் பொது இடங்களில் எல்லாம் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியச் சொத்துடமைச் சட்டமான, தேச வழமைச் சட்டம் மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்டன. இந்த மரபுச் சட்டங்களை நன்கு பரிசீலனை செய்த பிறகு பெண்களின் நலன் கருதி மரபுச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன - என்று திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது நு}லில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிலவிய தாய் வழிச் சொத்துடைமை முறை பேச்சுத் திருமணம் - மற்றும் பல சமூக - பண்பாட்டு வழமைகளை ஆழமாகப் பார்த்தபோது, சீதனப் பிரச்சனையானது, பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறையின் ஒரு வெளிப்பாடு என்பது தெளிவாகியது.

ஈற்றில் திருமதி பார்வதி வேலுப்பிள்ளையின் மகனின் பணிப்புரையின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நீதி நிர்வாகப் பிரிவினர் சீதன நடைமுறை சம்பந்தமான புதிய சட்ட விதிகளை இயற்றினார்கள். இந்தப் புதிய சட்டங்கள் - பெண்களின் சொத்துரிமையைப் பேணிக் காத்ததுடன் மணமகனின் உறவினர்களுக்கு ரொக்கப் பணமாக அன்பளிப்புக் கொடுக்கும் முறையையும் தடை செய்தன. மனைவியின் சொத்துமீது கணவனுக்கு மேலாண்மை வழங்கும் தேச வழமையின் விதிகளும் நீக்கப் பட்டது.

ஒரு நாட்டு மண்ணின் விடுதலைக்காக - மொழியின் விடுதலைக்காக -இனத்தின் விடுதலைக்காக - பிற வெளிச் சக்திகளால் மழுங்கடிக்கப் பட்டுள்ள தமிழ்ப்பண்பாட்டின் விடுதலைக்கு - வெளிச் சக்திகளுடன் போராடி வருகின்ற அதே வேளையில் தனது சொந்த இனத்திலேயே புரையோடிப் போயிருக்கும் சமுதாயக் கொடுமைகளையும் களைந்து எறிய முற்படுவது சாதாரண விடயம் அல்ல.! அதனால்தான் அது சரித்திரத்தில் இடம் பெறப் போகி;ன்ற விடயம் என்று இக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே கூறினோம்.

~ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை இராமன் போன்ற கணவன் பகிரங்கத்தில் சந்தேகப்பட்டுச் சோதிக்கலாம்.| என்பது மட்டுமல்ல ~அவளை| இலக்குவன் போன்ற மைத்துனர்களும் கோடு கிழித்துக் கட்டுப்படுத்தலாம்| - என்பது போன்ற ஆரிய சிந்தனைகளையும், அவர்களது வழிமுறைகளையும் தமிழினம் ஏற்றுக் கொண்டு தெலுங்கில் பாடி, சமஸ்கிருதத்தில் வழிபட்டு தன்னைத்தானே இருளில் கட்டிப் போட்டுக் கொண்டான். தமிழ் பண்பாடும், கலைகளும் மீண்டும் புத்துயிர் பெற்று உயர்வதற்கு சரியான தலைமைதான் வழிவகுக்க வேண்டும்! வழிவகுக்க முடியும்!!

கட்டாயச் சீதனக் கொடுமை எமது சமுதாயத்தில் பெண்ணின் மானுட மதிப்பையே அடியோடு அழித்துவிட முயல்கிறது. அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை அடையாளம் கண்டு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அழித்துவிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேரூன்றி உள்ளது. ஏன் கர்ப்பத்தில் வளரும் சிசு, ஆணாக மாறி, வலிமை பெறுவதற்காக - ஆரியர்களால் சொல்லப்படுகின்ற ~மந்திரங்கள்| தோன்றிய அதர்வ வேத காலத்தில் இருந்து, இந்த நு}ற்றாண்டு வரை பெண்ணை ஓர் அடிமைக் கூடமாக்கி அழிப்பதற்கு எமது தமிழினத்தில் புகுந்த ஆரிய சக்திகளும், எம்மினத்து ஆணாதிக்கமும் உதவின. அவற்றிற்கு தெரிந்தோ, தெரியாமலோ பெண்ணினமும் துணை போயிருக்கின்றது என்பதுதான் வேதனையான உண்மை!

ஆனால் தமிழினத்தைப் பொறுத்தவரையில் பெண்ணினத்தின் மேம்பாடு குறித்து உற்சாகமான உணர்வுூட்டும் செய்திகளைக் கேட்டு மகிழ்கின்றோம். அன்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணையும் விஞ்சி விட்டாள் ~தமிழீழ வஞ்சி| இன்று தமிழ் பெண்ணானவள் தனது விடுதலைக்காக மட்டுமல்லாது, தனது தேச விடுதலைக்காகவும் களம் இறங்கியுள்ளதை காலம் காட்டி நிற்கின்றது. தன்னையும் விடுவித்து, தன் இனத்தையும் விடுவிக்கப் போராடுகின்ற தமிழீழப் பெண்களுக்கு எமது வணக்கங்கள்.! பெண் விடுதலை என்பது வெறும் பேச்சில் மட்டுமல்லாது, செயலாகவும் எழுந்து நிற்பதை நாம் இன்று ஈழத்தில் காண்கின்றோம்.!

அன்புக்குரிய நேயர்களே! இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு ~பெண்ணியம் - அணுகு முறைகள்|, 'சுதந்திர வேட்கை", 'காலந்தோறும் பெண்" போன்ற நு}ல்களும் 'வெளிச்சம்" சஞ்சிகையும் பெரிதும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.!

சபேசன் - அவுஸ்ரேலியா
நன்றி தமிழ்நாதம்.

Print this item

  கதிர்காமர் கொலையும் சந்திரிகா நிலையும். பகுதி 7
Posted by: malaravan - 09-03-2005, 12:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகினது…

சென்ற தொடரில் இந்திய அரசின் உளவு அமைப்பான றோ ஏன் கதிர்காமரைக்கொலைசெய்திருக்கக்கூடாது?, அவ்வாறாயின் எப்படி கொலை செய்திருப்பார்கள், எவரைக்கொண்டு அதை செய்திருப்பார்கள் எனப்பார்த்தோம். இம்முறை பொதுஜன ஐக்கியமுன்னணிக்கட்சியே ஏன் அவரைக்கொலை செய்திருக்கக்கூடாதென்று பார்ப்போம்.

சிறீலங்கா அரசியலில் சிங்களம் ஆட்சிசெய்யத்தொடங்கிய காலத்திலிருந்தே உட்கொலைகள் நடந்தவண்ணம் இருக்கின்றது. கட்சிக்குள் ஒருபகுதியினருக்கு வேண்டப்படுபவர் மற்றையவர்களால் கொல்லப்படுவதும், மற்றைய பகுதியினருக்கு வேண்டப்படுபவர் இவர்களால் கொல்லப்படுவதும் காலம்காலமாக நடைபெறும் பொழுதுபோக்காகின்றது சிங்களத்திற்கு. காதிர்காமரையும் அவர்கள் ஏன் கொலை செய்திருக்கக்கூடாதென்று பார்ப்போம் இனி?.

சுந்திரிகாவின் அரசு ஆட்சிசெய்யத்தொடங்கிய காலத்தில் சந்திரிகாவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் சந்திரிகாவின் மாமனான அனுரத்த ரத்வத்தையாவார். ஆனால் இப்போ, அவர் சிறையிலுமி வீட்டிலுமாகவிருக்கின்றார். இதற்கெல்லாம் காரணமாக ரத்வத்தையும், அவரின் விசுவாசிகளும் நினைப்பது கதிர்காமரை. ஏனென்றால் சிறிது காலமாக கதிர்காமரின் செல்வாக்கு பொதுஜன ஐக்கிய முன்னணிக்கட்சிக்குள் வளர்ந்து வந்ததை நாம் யாபேரும் அறிவோம். அதற்கு உதாரணமாக சந்திரிகா மீண்டும் தனது கூட்டுக்கட்சிகளின் ஆதரவில் மீண்டும் தனது பதவியை தக்கவைத்த சமயத்தில் ரணிலின் மூன்று அமைச்சர்களை அப்பதவியில் இருந்து விலத்தியதுடன் அதை தன்னகப்படுத்தியபோது அதுவிடயமாக வெளிநாடுகளில் இருந்து வந்த கேள்விகளுக்கெல்லாம் அமைதியாக, அழகான பதில்களை அவர்களுக்கு சொல்லி தம்மிடம் எதுவிதமான பிழையும் இல்லாதவாறு நடந்து, நடித்துக்கொள்ள கதிர்காமர் பெரிதும் உதவினார். அந்தவகையில் அவரின் செல்வாக்கு கட்சிக்குள் பெரிதும் உயர்ந்தது. அடுத்து சந்திரிகாவின் முன்னைய ஆட்சியில் பாதுகாப்பமைச்சராகவிருந்த அனுரத்த ரத்வத்தை அப்போ சந்திரிகாவிற்கு அடுத்தநிலையில் இலங்கையில் போற்றப்படட ஒருவர். அவர், புலிகளை இன்றோ? அல்லது நாளையோ? பிடித்துவிடுவோம் என்றும், இன்னும் ஐம்பது புலிகளே மிச்சமாக உயிருடன் இருக்கின்றார்கள் என்றும், கண்டிக்கும் யாழ்ப்பாணத்திற்குமான தரைவழிப்பாதையை ஒருமாதத்தில் ஏற்படுத்த போவதாகவும், யாழ்ப்பாண தமிழ் மக்களை இலங்கையின் சுதந்திரவிழாவில் கலந்துகொள்ள தரைவழியை தம் இராணுவம் ஏற்படுத்திக்கொடுக்கும் என்றும் நாளுக்கொரு அறிக்கைகளை பொழுதுக்கொரு வண்ணம் விட்டுக்கொண்டிருப்பார். (அவ்வறிக்கைகள் கோமாளித்தனமானது என்பது வேறுவிடயம்) அந்தவகையில் அவர்கட்சிக்குள் அவர் ஏதாவது ஒருவகையில் பேசப்பட்ட ஒருவராக இருந்தார். அப்போ கதிர்காமரின் பெயர் வெளிநாட்டமைச்சர் என்பதோடு நின்றது. இப்போ போன்று அவர் பெரிதாக சிங்கள மக்களால் பேசப்படவில்லை. சென்ற தேர்தலில் கதிர்காமரை வெளிநாட்டமைச்சராக்க முடிவெடுக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பமைச்சராக பதவி வகித்த அனுரத்த ரத்வத்தையின் பெயரே அங்கு பேசப்பட்டது. ஆனால் மனித உரிமைகள் மீறப்படும் நாட்டில், அதற்கு பங்கம் நடக்கும்வகையில் செயற்பட்ட பாதுகாப்பமைச்சராகவிருந்த அமைச்சரை ஏனைய நாடுகள் ஏற்காது என்கின்ற அடிப்படையில் அது சாத்தியமாகவில்லை. அதன் பின்னரே மீண்டும் கதிர்காமர் அமைச்சரானார். அத்துடன் சிற்றி மிலேனியம் இராணுவ முகாம் ரணில் ஆட்சிக்காலத்தில் உலகின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு அதன் காவலர்கள் மேற்படி சந்திரிகாவின் கட்சியும், அவர்களின் பாதுகாப்பமைச்சராகவிருக்கும் அனுரத்த ரத்வத்தையும் தான் என்பதை நிரூபித்த பின்னர் அனுரத்த ரத்வத்தையின் செல்வாக்கு கட்சிக்குள்ளும், சிங்கள மக்களிற்குள்ளும் சரியத்தொடங்கியதுடன் கதிர்காமரின் பெயர் அப்பதவிக்காக மீண்டும் தெரிவானது. அத்துடன் சிற்றி மிலேனியம் முகாம் பற்றிய திடுக்கிடும் விதமான சம்பவங்கள் வெளிச்சமாகிய பின் பல வினாக்கள் எமக்கு எழுகின்றது. அதுவிடயம் வரும் தொடரில் பார்ப்போம். சிற்றி மிலேனியம் முகாம் பற்றிய தகவல்கள் இரகசியமாக பேணப்பட்டபோதிலும் எவ்வாறு அது வெளிச்சத்திற்கு வந்தது என்பது எமக்கு புரியாத புதிராகவிருந்தாலும், அந்தவிடயம் தெரிந்த தமிழராக கதிர்காமர் இருந்திருப்பார். சிலவேளைகளில் அவ்விடயத்தை கதிர்காமரே மற்றைய கட்சிக்கு சொல்லியிருக்கலாம் என எண்ணியும் அனுரத்த ரத்வத்தையும், அவரின் விசுவாசிகளும் கதிர்காமரை சுட்டிருக்கலாம். அதற்கான ஆயுதம் எப்படி அவர்களுக்கு கிடைத்திருக்கும்?. அடுத்த தொடரில் அவை.

தொடரும்.

மலரினி மலரவன்.
www.tamilkural.com

Print this item

  சிங்கப்பூர் அதிபராக ராமநாதன் பதவி ஏற்பு
Posted by: AJeevan - 09-03-2005, 11:50 AM - Forum: புலம் - Replies (16)


சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபராக எஸ்.ராமநாதன் மீண்டும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
<img src='http://www.dinamalar.com/2005SEP02/photos/impn-15.jpg' border='0' alt='user posted image'>
சிங்கப்பூரில் கடந்த மாதம் 17ம் தேதிநடந்த அதிபர் தேர்தலில் அதிபர் ராமநாதன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் அரண்மனையில் நேற்று நடந்த விழாவில் ராமநாதன் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுõங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கலந்து கொண்டனர்.


திரு.ராமநாதருக்கு வாழ்த்துகள் சொல்வோம்.


Thanks: "பரஞ்சோதி"

Print this item

  மலையக மக்கள் முன்னணியை உடைத்த மகிந்த ராஜபக்ச
Posted by: வினித் - 09-03-2005, 11:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மலையக மக்கள் முன்னணியை உடைத்த மகிந்த ராஜபக்ச!
[சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 17:11 ஈழம்] [ம.சேரமான்]
மலையக மக்கள் முன்னணியை உடைப்பதில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச காட்டிய அக்கறை கைகூடப் போகிறது.


தமிழ்த் தேசியத்துக்கு முழு ஆதரவளித்து நின்ற மலையக மக்கள் முன்னணியை எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தலையொட்டி மகிந்த ராஜபக்ச உடைத்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.அருள்சாமி மற்றும் டி. திகம்பரம் ஆகியோர் தலைமையிலான ஒரு குழுவினர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இது குறித்து தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது,

சிறிலங்கா அரசுத் தலைவர் தலைவர் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி இதுவரை எவ்வித முடிவும் மேற்கொள்ளவில்லை. தனிப்பட்ட நபர்கள் மேற்கொள்ளும் முடிவுகள் கட்சியின் முடிவாகாது. அடுத்த வாரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே யாரை ஆதரிப்பது என்று இறுதி முடிவு செய்யப்படும்.

கட்சி விரோத முடிவுகளை மேற்கொள்வோர் மீது நாடு திரும்பியதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

இருப்பினும் எஸ். அருள்சாமி மற்றும் திகம்பரம் ஆகியோர் கட்சித் தலைமை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாலும் நாங்கள் மகிந்த ராஜபக்சவைத்தான் நாங்கள் ஆதரிப்போம் என்று உறுதியாக அறிவித்துள்ளனர்.

கட்சித் தலைமை தங்கள் மீது மேற்கொள்ளும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையையும் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அருள்சாமி கூறினார்.

இதனால் மலையக மக்கள் முன்னணி உடையக் கூடும் என்று தெரிகிறது

Print this item

  செல்லிடப் பேசி..
Posted by: Thala - 09-03-2005, 08:44 AM - Forum: நகைச்சுவை - Replies (6)

அப்பொப்துதான் யாழ்பாணத்தில் கையடக்கத் தொலைபேசி அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அக்காலத்தில்தான் துரோகி கருணா விடுதலை புலிகளால் வெளியேற்ற பட்டிருந்தார். எனது நண்பன் சில நாட்களுக்கு முன்தான் கையடக்கத் தொலைபேசியை வாங்கியிருந்தான் அன்று முதல் அவன் கையடக்கத் தொலைபேசியையே சில நாட்களாக காதலித்தான். ஒருநாள் பதட்டத்துடன் என்னை நோக்கி ஓடிவந்து டோய் கோபி கருணாவை பஸ்சுக்குள் வைத்து பிடித்து விட்டார்கள் என்றான். நானும் ஆவலுடன் யார்? எப்போது? எங்கே பிடித்தார்கள்?. எதிலிருந்து அறிந்து கொண்டாய் என கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றேன் அவன் இடைமறித்து எனது தொலைபேசியில்தான் சொல்கிறது என்றான் நானும் என்னடா இப்பொது தொலைபேசியிலுமா செய்திகள் சொல்லத் தொடங்கி விட்டார்கள் என்ற கேள்விகளோடு தொலைபேசியை வாங்கி ஓர் எண்ணுக்கு டயல் செய்தேன் அப்போது அது "கருணாகர பஸ்வ நமத்தன்ன'' எனக் கூறியது இதைக் கேட்டு விட்டுத்தான் கருணாவை பஸ்சுக்குள் அமத்தி விட்டார்கள் என நினைத்து என்னிடம் கூறியிருக்கிறான் நண்பன். உண்மையில் இதன் அர்த்தம் தயவு செய்து அழைபை சற்று தாமதித்து மேற்கொள்ளவும் என்பதுதான்.


-<b> தமிழ்ப்பித்தன்</b>

(ஓசியாய் வாசிக்க ஒரு <b>பேப்பர்</b>)

Print this item