![]() |
|
மட்டக்களப்பில் போராளி வீரச்சாவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மட்டக்களப்பில் போராளி வீரச்சாவு (/showthread.php?tid=3446) |
மட்டக்களப்பில் போராளி வீரச்சாவு - malaravan - 09-04-2005 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடியிலுள்ள பட்டிருப்பு கோட்ட அரசியல் பணிமனை மீது தேசவிரோதிகள் மேற்கொண்ட தாக்குதலில் போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். இன்று காலை ஞாயிற்றுக்கிழமை 6.25 மணியளவில் சிறீலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் இரண்டு உந்துருளிகளில் வந்த நான்கு தேசவிரோதிகள் முதலில் துப்பாக்கிப் பிரயோகத்தையும் பின்னர் கைக்குண்டையும் வீசிவிட்டு அலுவலகத்தினுள் நுழைந்து அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இருந்த தளபாடங்களை பெற்றோல் ஊற்றி எரியுூட்டினர். அச்சமயம் அரசியல் பணிக்காக அலுவலகத்தில் தங்கியிருந்த அருள்நேசன் என்ற போராளி தேசவிரோதிகளின் துப்பாக்கிச்கூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வேளையில்வீரச்சாவடைந்தார்.தேசவிரோதிகளால் சுடப்பட்ட ஒன்பது துப்பாக்கிக் குண்டுகள் உடலில் துளைத்துள்ளது. இச் சம்பவம் குறித்து பட்டிருப்பு கோட்ட அரசியல் பணிமனை பொறுப்பாளர் கமலக்கண்ணன் தெரிவிக்கையில்: இந்தக் கோட்ட அலுவலகம் மீது இடம்பெற்ற நான்காவது தாக்குதல் இதுவாகும். இதற்கு படையினரும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தேச விரோத ஆயுதக்குழுக்களுமே பொறுப்பு என்றும் இத்தாக்குதல் தொடர்பாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மலரினி மலரவன் www.tamilkural.com - வியாசன் - 09-04-2005 ஒவ்வொருவராக இழக்கப்போகிறோமா? :oops: :oops: :oops: :twisted: :twisted: :evil: :evil: - வினித் - 09-04-2005 viyasan Wrote:ஒவ்வொருவராக இழக்கப்போகிறோமா? :oops: :oops: :oops: :twisted: :twisted: :evil: :evil: þø¨Ä «ôÀÊ þø¨Ä þÐìÌ ¯¼ý À¾¢ø þ§¾. பொலநறுவை நோக்கி வந்த இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம் http://www.pathivu.com/content/news/doc/04...04_09_20058.htm - வினித் - 09-05-2005 நேற்றைய தாக்குதலில் காயமடைந்த இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு [திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 16:32 ஈழம்] [வாழைச்சேனை நிருபர்] மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி சித்தான்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இனந் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஆர்.ஏ.அனுரகுமார இன்று திங்கட்கிழமை நண்பகல் பொலன்னறுவை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். முறக்கட்டான்சேனை இராணுவ முகாமில் பணியாற்றும் குறிப்பிட்ட இராணுவச் சிப்பாய் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடடிருந்த இராணுவ சிப்பாய்களுக்கு வழமை போன்று மாலை நேர தேனீர் மற்றும் சிற்றுன்டி விநியேகாத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவத்தின் போது இவர் பயணம் செய்த ஆட்டோ மீது இனந் தெரியாத நபர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். - வினித் - 09-05-2005 செங்கலடிச் சந்தியில் இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 17:30 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி செங்கலடிச் சந்தியில் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறிலங்கா இராணுவ சிப்பாயொருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொம்மாதுறை இராணுவ முகாமில் கடமையாற்றிய ஆர்.பி.பண்டார என்றழைக்கப்படும் இந்த இராணுவச் சிப்பாய் வழமை போன்று வீதிக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சம்பவத்தையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த ஏனைய இராணுவ சிப்பாய்கள் ஆத்திரமடைந்த நிலையில் பொதுமக்களை தாக்கியதாகக் கூறப்படுகின்றது. - selvanNL - 09-06-2005 06-09-2005 இன்று மீண்டும் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவம் தமிழீழ விடுதலைபுலிகள் மீது தாக்குதல் 3 போராளிகள் வீரச்சாவு... ஜபிசி... :!: |