Yarl Forum
சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்பு??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்பு??? (/showthread.php?tid=3460)



சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்பு??? - வினித் - 09-02-2005

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் இலக்கில் விரிவாக்கப்பட்ட சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்பு


வே.பவான்


சிறிலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்பின் செயற்பாட்டின் அடிப்படை நோக்கம் அன்று தொட்டு இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளை இல்லாது ஒழித்தல், தமிழர்களுக்கு தமிழீழம் என்ற எண்ணக்கருவை ஒவ்வொரு தமிழனின் மனதிலிருந்தும் அகற்றல் என்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டது, செயற்பட்டுக் கொண்டு வருகின்றது எனலாம்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட புலனாய்வு கட்டமைப்பானது விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க கூடிய சரியான, நுட்பமான, திறன்பட்ட கட்டமைப்பாக இயங்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்தபோதிலும் முக்கியமான காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்ப காலத்திலேயே பொட்டம்மான் அவர்களின் தலைமையில் புலனாய்வு ரீதியில் சிறந்த விழிப்புணர்வைப் பெற்றிருந்தமையைக் குறிப்பிடலாம். எனவே புலிப்படைகளின் புலனாய்வு வல்லமைக்கு ஈடாக சிறிலங்கா அரசுக்கு தனது புலனாய்வுக் கட்டமைப்பை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதாவது, ஆரம்பத்தில் சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்பானது பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் குற்றவியல் விசாரணை திணைக்களமாக இருந்தது. (CID criminal Jnvest igation Department) இதன் அடிப்படை நோக்கம் குற்றவியல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தலுமாகக் காணப்பட்டது. ஆனால் அவ் அமைப்பு குற்றவியல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு மட்டுமாகவே செயற்பட முடிந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான திறமையை கொண்டிருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து 1985ம் ஆண்டு அரச தேசிய பாதுகாப்பு சபையின் NSC (Nationl Security Council) கீழ் முதல் தேசிய அமைப்பாக NIB (National Intelige nce Bureau) சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கமும் தமிழர் விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்ததை இலக்காகக் கொண்டது. ஆனால் இவ் NIB அமைப்பானது ஓரளவு வித்தியாசமான முறைகளைக் கையாண்டது. அதாவது தகவல் சேகரிப்பு, ஆய்வுத் தலைமைக்கு அனுப்புதல், மறைமுகச் செயற்பாட்டை மேற்கொள்ளுதல் என்ற படிமுறைகளைக் கையாண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்குச் சார்பாக செயற்படுகின்ற அமைப்புக்கள், மற்றும் தனி நபர்கள் பற்றிய விடயங்களும் புலிப்படையின் புலனாய்வு கட்டமைப்பு பற்றிய விடயங்களும் தகவல்களாக NIB ஆல் சேகரிக்கப்பட்டன. இவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு பின் இரகசிய மறைமுகச் செயற்பாட்டின் மூலம் அவ்வமைப்பை அல்லது அந்நபரை அல்லது அச்செயற்பாட்டை அழித்தது. ஆனால் Nஐடீ ஆனது தகவல்களைப் பல கோணங்களில் ஆய்வுக்குட்படுத்தும் திறமையில்லாததனாலும், தலைமைக்கு இடையிலான, சீரான தொடரான செயற்பாடு காணப்பட்டமையினாலும் NIB கட்டமைப்பு வெற்றியளிக்காமல் போனது.

இதையடுத்து அமெரிக்காவின் உளவுத்துறை "சி.ஐ.ஏ", இந்தியாவின் புலனாய்வுத்துறை "றோ", இஸ்ரேலிய இரகசிய சேவை ‘மொசாட்" போன்றதொரு புலனாய்வு கட்டமைப்பை புலிகளுக்கு ஈடாக அமைக்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டது. இதனால் பாரிய செலவில், விரிவானதொரு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி பொலிஸ் நிர்வாகத்தின் கீழும், படைத்துறை தலைமையகத்திற்குக் கீழும் பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் பின்வரும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

கிளர்ச்சி முறியடிப்பு பிரிவு CSU (Counter Subvevsire Unit). பயங்கரவாத புலன் விசாரணைப் பிரிவு TID (Terrorst Investigation Division). விசேட புலனாய்வுப் பிரிவு UNITE SIU (Special Investigation Unit). விசேட பிரிவு SB (Speecial Branch) போதைப் பொருள் தடுப்புப் பணியகம் PNB (Police Narcotics Bureau) ஏமாற்று மோசடி விசாரணைப் பிரிவு FIB (Frauol Investion Bureau) குற்றக் கண்டுபிடிப்பு பணியகம் CDB (Crim ed Investire Bureau)

இவ்அமைப்புக்களில் CDB ஆனது கொழும்பு நகரின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி செயற்பட்டு வந்தது. பின் இவ்வமைப்பு கலைக்கப்பட்டு தற்போது MPIU (Mountlarinia Polic Inteligence Uathering) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. MPIUI நேரடிக் கண்காணிப்பில் வழிநடத்தியவர்களாக இருந்தவர்கள் நிலாப்தீன், ஜெயரட்ணம் ஆகிய இருவரும். ஆனால் தற்போது இருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படைத்துறை தலைமையகத்தின் கீழ் பின்வரும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. இராணுவப்புலனாய்வுப் பிரிவு, கடற்படை புலனாய்வுப் பிரிவு, விமானப்படை புலனாய்வுப் பிரிவு இவ்வாறாக தமிழ்த் தேசியத்தை அழிக்கும் இலக்கில் சிறிலங்கா புலனாய்வுக் கட்டமைப்பு பொலிஸ் நிர்வாகத்தின் கீழும், படைத்துறை தலைமையகத்தின் கீழும் பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. தற்போது உள்ளக புலனாய்வு பணியகம் DII (Derectorete of Internal Intellgence) வெளிநாட்டு புலனாய்வு பணியகம் DFI (Derea torete of Foreign Intelligence) என்றவாறு இரு கட்டமைப்புக்களாக விரிவாக்கப்பட்டது.

இதில் DFI இன் வெளியக புலனாய்வு செயற்பாடுகளை எல்லா நாட்டிலும் உள்ள தூதுவராலயங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. DII இன் தலைமையகம் கொழும்பில் உள்ள கேம்பிறீச் பிளேசில் அமைந்துள்ளது. DFI இன் தலைமையகம் கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியா உயர் ஸ்தானிகாரியாலயத்திற்கு எதிரே பஸ் தரிப்பிடத்துக்குப் பின்புறமாக அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் தமிழர் தாயகத்தில் ஊடுருவியுள்ள அமைப்பாக னுஆஐ காணப்படுகின்றது. இதன் ஆரம்ப இயக்குனர் மேஜர் ஜெனரல் பலகல்ல ஆவார். பின்னர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன் நியமிக்கப்பட்டார். அதன் பின் பிரிகேடியர் கபில ஹெந்தவிதாரண நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது கபில ஹெந்தவிதாரணவும் ஆட்டம் காணத் தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

DMI அமைப்பானது பணத்திற்குச் சோரம் போபவர்களையும், தமிழ்த் தேசிய விரோதிகளையும் தன் நண்பர் குழுக்களாக இணைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போருக்கு எதிராக அவர்களைப் பயன்படுத்தி வருகின்றது. இவ்வாறு DMI இணைந்துள்ள நண்பர் குழுக்கள் புளொட் மோகன் குழு, கருணா குழு, ராசிக்குழு, டக்ளஸ் குழு போன்றது துரோகக் குழுக்களைக் குறிப்பிடலாம். னுஆஐ ஆனது தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பெறுமதி வாய்ந்த தகவல்களைத் திரட்டுவதற்கும், புலிகளுக்கு எதிரான நாச வேலைகளைச் செய்வதற்கும், நீண்ட வீச்சு, வேவு ரோந்து அணியின் LRRP (Long Range Reconnaissance Patrol) தாக்குதல் நடவடிக்கைக்கான இலக்குகளை வகுப்பதற்கும் இத்துரோகக் குழுக்களைப் பயன்படுத்துகின்றது. இவ்வாறாக சிங்களப் புலனாய்வுத்துறை துணைப்படையின் உதவியுடன் விரிவாக்கப்பட்டது.

ஆனால் இன்றைய சூழலில் இராணுவப் போர் ஓய்வில் இருக்க அரசியல் போரும், புலனாய்வுப் போரும் சிங்களப் படைக்கும் புலிப்படைக்கும் இடையே தலைதூக்கியுள்ளது. புலனாய்வுப் போரைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசானது தமிழீழ விடுதலைப்புலிகளைச் சின்னாபின்னமாக்கி தமிழர்கள் தமிழீழம் வென்றெடுப்பதைச் சீர்குலைக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய விரோதக் குழுக்களையும் இணைத்து இராணுவ புலனாய்வு கட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் அக்கட்டமைப்பால் புலிப்படையின் புலனாய்வு வல்லாதிக்கத்திற்கு எதிராக இன்று வரை நின்று பிடிக்கமுடியவில்லை. அதாவது சிறிலங்கா புலனாய்வு கட்டமைப்பானது தன் இராணுவ உளவாளிளையும், துணைப்படை நண்பர்களையும் இழந்து செயலூக்கம் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


இது பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்
http://www.battieezhanatham.com/2005/