09-01-2005, 09:14 PM
<img src='http://img219.imageshack.us/img219/1305/meenar5000vg.jpg' border='0' alt='user posted image'>
கண்ணழகி மீனா இப்போதெல்லாம் ரொம்பவே ஓய்வாக இருக்கிறார். அதற்காக கவலைப்படாமல் ஜாலியாக ஒவ்வொரு நாடாக சென்று ஊர் சுற்றிப் பார்த்து என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு அவர் காலடி பட்ட நாடுகளை விட போகாத நாடுகளின் எண்ணிக்கை ரொம்பக் குறைவாம்.
திரையுலகை சுற்றி வந்த இந்த தெத்துப் பல் அழகி, சமீபத்தில் அம்மா, அப்பாவுடன், ஹாயாக ஆஸ்திரேலியா சென்று வந்தார். அங்கு அவருக்கு ஒரு பயங்கர அனுபவம் நேர்ந்ததாம்.
அது குறித்துக் கேள்விப்பட்டு மீனாவை சந்தித்தோம். அந்தச் சம்பவம் குறித்துக் கேட்டாலே ஷாக் படத்தில் பயந்தது மாதிரி அவரது முகம் பேயறைந்தது போல மாறிவிடுகிறது. அந்த நிஜ திகில் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் மீனா
''நான் எல்லா நாடுகளுக்கும் போய் விட்டேன். போகாத ஒரே பெரிய நாடு, அதேசமயம் எனக்கு ரொம்பப் பிடித்த நாடு ஆஸ்திரேலியா மட்டும்தான். இதனால் சமீபத்தில் நான், அம்மா மல்லிகா, அப்பா துரைராஜ் ஆகியோர் அங்கு சென்றோம்.
ஆஸ்திரேலியாவின் பல ஊர்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்தோம். மொத்தம் 17 நாள் அங்கு சுற்றுப்பயணம் செய்தோம். அந்த நாட்டின் கிளைமேட், மக்கள், ஊர் என அத்தனையுமே அழகு, அனுபவித்து சுற்றிப் பார்த்தேன்.
ஆனால் என்னால் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமும் அங்கு கிடைத்துவிட்டது... ஏற்கனவே நான் 'பங்கி ஜம்ப்' செய்துள்ளேன். அந்த அளவுக்கு தைரியம் உள்ளவள் நான். இந்த முறை கடலுக்கடியில் சென்று வரும் 'ஸ்கூபா டைவிங்' செய்ய முடிவு செய்தேன்.
எனது ஆர்வத்திற்கு அம்மாவும், அப்பாவும் எப்போதுமே தடை போட மாட்டார்கள். கடலுக்கடியில் சென்று வர அவர்கள் பச்சைக் கொடி காட்டினர். ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளதா என்பது குறித்த சோதனைகளை எல்லாம் செய்தவுடன் நான் கடலுக்கடியில் செல்ல அந்த விளையாட்டு நிர்வாகிகள் அனுமதி அளித்தனர்.
ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் முதலிலேயே பயம் காட்டினார்கள்.
ஆனால் ஏதோ ஒரு தைரியத்தில் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்திக் கொண்டு கடலுக்குள் போய் விட்டேன். துணைக்கு கைடுகள் யாரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
உள்ளே போனபோது மிகவும் அற்புதமாக இருந்தது. பவளப் பாறைகள், அழகழகான மீன்கள் (உங்களை விடவா?) என ஒரே ஜாலியாக இருந்தது. ஆழ்கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென மூச்சுத் திணறத் தொடங்கியது.
திணறல் மிகவும் அதிகரித்து ஒரு கட்டத்தில் அரை மயக்க நிலைக்குப் போய்விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் தத்தளித்துவிட்டேன். உடனே மேலே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்கலாம் என்று தோன்றியது. ஆனால், அதற்கான சக்தி என்னிடம் இல்லை.
மூச்சு வாங்குவது தடைபட்டதால் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டேன். ஒரு வழியாக என் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு மேலை இருந்தவர்களுக்கு சிக்னல் தந்தேன்.
அவர்கள் மிக வேகமாக செயல்பட்டு உடனடியாக என்னை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மூச்சு வாங்க முடியாமல் தவித்த எனக்கு முதலுதவி கொடுத்தனர். அதன் பின்னர் தான் எனக்கு உயிரே வந்தது.
அவ்வளவுதான், நாம் காலி என்றுதான் நினைத்தேன். அதிர்ஷ்டவசமாகத் தான் உயிர் தப்பி இருக்கிறேன்.
இதற்குப் பிறகும் அம்மா, அப்பா என்னை ஆஸ்திரேலியாவில் சுற்ற விடுவார்களா? உடனே மூட்டையைக் கட்டிக்ö காண்டு சென்னை வந்து சேர்ந்தோம்.
நான் ரசித்த ஆஸ்திரேலியா என்னை காவு வாங்கப் பார்த்ததை நினைத்தால் இன்னும் கூட உடம்பு ஜில்லிட்டுப் போகிறது என்று கூறி மூச்சு வாங்க நிறுத்தினார் மீனா.

<b> .. .. !!</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
hock: