![]() |
|
ஒருநாள் ஒரு கனவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஒருநாள் ஒரு கனவு (/showthread.php?tid=3506) |
ஒருநாள் ஒரு கனவு - SUNDHAL - 08-29-2005 முயல் குட்டியின் முதுகு மாதிரி மிருதுவானவை ஃபாசிலின் படங்கள். இந்த படமும் அப்படிதான். துறுதுறு ஹீரோவை காதலிக்கிற ஹீரோயின், அவனோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள போடுகிற சண்டை, நிஜ சண்டையாகிவிடுகிறது. காதலிப்பது போல் நடித்து கடைசியில் கை கழுவி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நெருங்குகிறான் ஹீரோ. ஆனால் விலகவிடாமல் அவனை பற்றிக் கொள்கிறது காதல். முடிவு என்ன? ஒரு நாளில் வந்துவிட்டு போகிற இந்த கனவை வருடக்கணக்கில் மனசில் நிற்கிற மாதிரி வார்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஃபாசில். செதுக்கி வைத்த சிற்பம் போல் பாத்திர படைப்புகள். அதிலும் ஸ்ரீகாந்த்... அப்படியரு துறுதுறு! சோனியா சொல்வது மாதிரியே Ôஸ்பீடு!Õ அத்தனை அவசரத்திலும் பஞ்சராகி போன சோனியாவின் காருக்கு பஞ்சர் ஒட்டி கூடவே பில்லையும் நீட்டுகிறாரே..கில்லாடி! அடிக்கடி தனக்குத்தானே ரீ ரெக்கார்டிங் கொடுத்துக் கொண்டு (டுர்ர்ர்ர்...ர்) பைக் ஓட்டுவது பலே. இன்டர்வெல்லுக்கு பிறகு அப்படியே ரிவர்ஸ் அடித்துவிடுகிறது இந்த துறுதுறுப்பு. காதல் தந்த வலி காரணமாக இருந்தாலும், மனசை சுண்டியிழுத்த அந்த முன்பாதி ஸ்ரீகாந்த்திற்காக ஏங்குகிறது மனசு. சோனியா மட்டும் என்னவாம்? தன் படை பரிவாரங்களுடன் ஸ்ரீகாந்த்தை சீண்டி பார்த்து எடுபடாமல் போனதும், நேரிடையாகவே, உன்னால முடிஞ்சா என்னை காதலித்து பார் என்று சவால்விடுகிறாரே....இளமை ஏவுகணை! இதுவரை கவர்ச்சி பதுமையாகவே அறியப்பட்ட சோனியாவா இது? காட்சிக்கு காட்சி பிரமிப்பை தருகிறார். மற்ற பாத்திரங்கள் அத்தனையும் Ôசமையல்Õ பாத்திரங்கள்! அதிலும் ஜோக்கடிக்கிறேன் பேர்வழி என்று வாய் கிழிய கத்துகிற சுகுமார், சிசர் மனோகர் குரூப்பிற்கு சிரமம் பார்க்காமல் கத்தரி வைக்கலாம். கம்பீர கட்டிடத்தின் கான்கிரீட் தூணாகியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அதிலும் அந்த காற்றில் வரும் கீதமே பாடல், ஊனை உருக்கி உயிருக்குள் தித்திக்கிறது. யதார்த்தத்தை மீற கூடாது என்று துவக்கத்தில் நினைத்த ஃபாசில் க்ளைமாக்சில் தடுமாறியிருக்கிறார். ஆனாலும், நேற்று வந்த லேசர் வெளிச்சங்களுக்கு மத்தியில், குத்துவிளக்கின் வெளிச்சம் குறைந்ததா என்ன? Thanks: Tamilcinema.com - Mathan - 08-29-2005 இந்த படத்தை தான் யாழ் கள நண்பர்களோடு தியேட்டரில் போய் பார்க்கலாம் என்று முயற்சித்தோம் மிஸ்சாயிடுச்சு. பார்த்தவர்கள் படம் எப்படியிருக்கு என்று சொல்லுங்க - SUNDHAL - 08-29-2005 பொதுவாக பாசிலினுடைய படங்கள் பாக்க கூடயனவாக இருக்கும் மதண் அதே போல் இளையராஜவினுடைய இசை கூட மிகவும் இளமையாகவும் இனிமையாகவும் இருக்கின்றது...காலத்தால் அழிக்க முடியாத இசை அமைப்பாளர் தான் என்பதை ராஜா மீன்டும் நிரூபித்து இருக்கின்றார்... - ப்ரியசகி - 08-29-2005 ஐயோ சுண்டல்..இதை நான் போடலாம்..ஸ்கூலால வந்து போடுவம் எண்டு நெச்சு வந்தன்....அதெப்பிடி நான் சுட நெச்சதை நீங்களும் சுட்டுட்டீங்கள்? :roll: ஆனாலும் நல்ல படம் போடத்தான் தெரியுது... - SUNDHAL - 08-29-2005 பாத்திங்களா நல்ல ஒற்றுமை பட் feel பன்னாதீங்க அடுத்த வாட்ட சுட நினைக்கிறத எனக்க சொல்லிடுங்க. ok va - Vishnu - 08-29-2005 சுட்ட தகவளுக்கு நன்றி சுண்டல்.. எல்லரும் சேம்ஆ பீல் பண்ண்டுறிங்க.. எனக்குத்தான் அப்படி ஒண்டும் வராதாம்.. :roll: - ப்ரியசகி - 08-31-2005 SUNDHAL Wrote:பாத்திங்களா நல்ல ஒற்றுமை பட் feel பன்னாதீங்க அடுத்த வாட்ட சுட நினைக்கிறத எனக்க சொல்லிடுங்க. ok va சரிங்க.. :wink: |